Skip to content
Post Views: 2,205
“எதுக்கு உங்க அம்மம்மா நானாவை திட்டுறாங்க?”…
“அதுவா, நான் பெரிய பெண்ணாகிட்டேனா, என்னையும் நானாவையும் பாத்துக்க, டேடிக்கு மெரேஜ் பண்ணி வைக்க போறாங்களாம்,”,..
Advertisement
“ஓ…” என்றவள்..
“நீ சீக்கிரம் சாப்பிடு, டான்ஸை சாட் பண்ணலாம்”.. என்று அன்றைய வகுப்பு நல்ல படியாகவே முடிய..
Advertisement
Advertisement
இரண்டு வாரம் முடிந்து இருக்க. பிரகதி வைஷுவுக்கு போன் செய்து. “மேம் மூவிக்கு போலாமா மேம்?”..என்றாள்..
“மூவ்விக்கா!”.. என்றவள்.. இன்று கவர்மெண்ட் லீவு என்பதால் அனைத்து வகுப்புகளுக்கு விடுமுறை அளித்திருக்க..
Advertisement
அவளுக்கும் டான்ஸ், டான்ஸ் என்று ஒரே சிந்தனையில் இருக்க.. வெளியில் போயிட்டு வந்தாள் நல்லா இருக்கும் என்று நினைக்க, “சரி போலாம் பிரகதி” என்றாள் வைஷு..
“மேம் லஞ்ச் வெளியே சாப்பிடலாம் நான் ஒன் ஹவர்ல ரெடியாகி வர்ரேன்” என்று கூற.
“சரிடா” என்றவள்..கிளம்ப தயாராக…
எந்த உடை அணிவது சுடியா?, புடவை கட்டி போர் அடித்தது,, என்ன போடலாம் என்று பேக்கை உருட்ட..
இலமஞ்சுள் நிறத்தில் பச்சைபூக்கள் போட்ட, ஸ்சீவ் லெஸ் ப்ராக் இருக்க,,. அதை எடுத்து பார்த்தாள்.. அன்று சென்னையில் இதை வாங்க சொல்லி கட்டாய படுத்தி தன்னை போட வைத்து போட்டோ எடுத்து காட்டிய சௌமியின் ஞாபகம் வர..
போட்டோவில் நான் தானா என்று சந்தேகமே வந்து விட்டது இவளுக்கு .
சரி இதையே உடுத்துவோம்.. என்றவள் குளித்து வந்து உடை மாற்றி, கொஞ்சம் தன்னை அழகு படுத்திக்கொண்டவள். கீழே வர..
பிரகதி வைஷுவை பார்த்து ..
“மேம்..! சூப்பரா இருக்கீங்க மேம்.. ஹீரோயின் மாதிரி வாங்க, நம்ம செல்பி எடுத்துக்கலாம்” என்று சில பல செல்பிகளை” எடுத்தவள்..
“போலாம் பிரகதி எனக்கு பசிக்குது” என்க..
“வாங்க மேம் போலாம்,”.. என்று முதலில் ஒரு ஹோட்டலுக்கு சென்று மதிய உணவை உண்டு விட்டு படத்துக்கு நேரம் உள்ளதால்,, படம் பார்க்கவிருக்கும் மாலில் இருவரும் சுத்திக்கொண்டு,, ஐஸ்கிரீம் வாங்கி சப்பிக்கொண்டே சிரித்தபடியே வர.. பிரகதிக்கு தெரிந்த பெண் பிள்ளைகள் இவர்களை பார்த்து இவர்களோடு இணைந்து கொள்ள..
அதில் ஒரு பெண்ணுக்கு இன்று பிறந்தநாளாக இருந்தது. அனைவரும் ஒன்றாக சேர்ந்து படம் பார்க்கும் போது கேக் வெட்டி கொண்டாட திட்டமிட்டிருந்தனர்..
அதன் படி படம் ஆரம்பித்ததும்,,ஸ்கீரின் முன்னாடி வந்து கேக் வெட்டி கொண்டாட,, வைஷுவுக்கு இதை எல்லாம் பார்க்க புதுசாக இருக்க,, அவர்கள் பண்ணுறதை பார்த்து சிரித்தபடியே நிற்று இருந்தாள்..
யாரோ பக்கத்தில் வருவது போல தெரிய, நிமிர்ந்து பார்த்தாள்,, இந்திரா தேவி கோபமாக நின்று இருந்தார்.. இவள் அவரை பார்த்து புன்னகைக்க. பளார் என்று அறைந்திருந்தார் வைஷுவை..
வைஷு அதிர்ச்சியாகி பார்க்க.. இந்திராதேவி பக்கத்தில் இருந்த சஞ்சனா வைஷுவை பார்த்து கோணலாக சிரிக்க..
பிரகதிக்கு! இந்திரா தேவியை பார்த்து பயம் வர..
“சாரி மேம், சாரி மேம்”.. என்றாள்..”எல்லாரும் வெளியே வாங்க” என்று இந்திரா தேவி செல்ல..
அனைவரும் இந்திராதேவியின் பின் செல்ல..
வைஷுவுக்கு எதற்கு என்னை அடித்தார்.. நான் என்ன பண்ணேன்.. என்று அதிர்ச்சியாகி நிற்க…பிரகதி வைஷுவை இழுத்துக்கொண்டு தீயேட்டர் வெளியே வர..
வைஷுவை சேர்த்து மொத்தம் பத்து பிள்ளைகள்..
“நீதான் எல்லாரையும் கூட்டிட்டு வந்தீயா”.. என்று வைஷுவை பார்த்து, இந்திரா தேவி கேட்க..
“இல்லை” என்றாள் வைஷு..
“ஏய் பொய் சொல்லுறீயா” என்று மீண்டும் வைஷுவை கன்னத்தில் அறைந்திருந்தார்..
இந்திராதேவி.. வைஷுவை அடிக்கவும் கூட இருந்த பெண்கள் பயந்து வாய் மூடி அமைதியாக நிற்க..
“நீங்கயெல்லாம் டான்ஸ் கத்துக்க வந்தீங்களா இல்லை, இவ கூட ஊரு சுத்த வந்தீங்களா ஆவுட்” என்று கத்த, எல்லா பிள்ளைகளும் “சாரி மேம்” என்று ஓடி விட..
பிரகதி மட்டும் வைஷுவின் அருகில் நின்று ஏதோ சொல்லவர.
வைஷு பிரகதியின் கையை அழுத்தி “வேண்டாம் சொல்லாதே” என்று கண் ஜாடை காட்ட.
பிரகதி அமைதியாக வைஷுவின் அருகில் நிற்க..
“உனக்கு என்ன? நீ ஒழுங்க இந்த அகாடமியை விட்டு போகனுமா வேண்டாமா”.. என்றவுடன்.
வைஷுவின் கையை அழுத்தி விட்டு சென்று விட்டாள் பிரகதி..
“நீ ஒரு டான்ஸ் டீச்சர் தானே, இப்படி அரையும், குறையுமா டெரெஸ் போட்டு, சின்ன பிள்ளைகளை கூட சேர்த்து கூத்தடிக்கிற, வெட்கமா இல்லை,, உன்னா மாதிரி அவங்களை பணக்கார பையனை பார்த்து வலச்சு போட ட்ரெயினிங் பண்ணுறீயா, என் மகனை மயக்குனது போதாத. இன்னும் யார மயக்க இப்படி கையில்லாத ட்ரெஸ்ச போட்டு கிட்டு இந்த மாலை சுத்தி வர”. என்று கோபமாக இந்திரா தேவியை பார்க்க..
அவளோ இந்திரா தேவி அடித்தது கூட வலியில்லை, அவர் பேச, பேச மனதில் பாரம் ஏறுவது போல தெரிய,, கண்கலங்க கூடாது நீ தவறு செய்யவில்லை, என்று திடமாக நிற்க. இந்திரா தேவியின் நல்லா செயல்களை பற்றி நிறைய கேள்வி பட்டு இருந்தாள்,, அவர் வாயால் தன்னை இப்படி கூருவதை எண்ணி கலங்கியவள்.. அழுகையை காட்டாமல் கல்போல அமைதியாக நிற்று இருக்க..
அதற்கும் திட்டினார்.”இப்படி திட்டுறேனே கொஞ்சமாச்சும், பயப்படுறீயா, வருத்தபடுறீயா, என்ன வளர்போ, எந்தன பேர்கிட்ட இப்படி திட்டு வாங்கி பழகினாலோ, சொல்லடி என் பையனா எத சொல்லி ஏமாத்தி கைகுள்ள வச்சுயிருக்க,, உன்ன தவிற எந்த பொண்ணையும் கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொல்லிட்டான்”.. என்றவுடன்.. அதிர்ச்சியாகி பார்த்த வைஷு,,
“வீ. பி, சார்ரா”..
“ஆமாம்,, உன்ன தவிற அவன் வேற யாரையும் கல்யாணம் பண்ணமாட்டேன்னு என்கிட்ட சொல்லுறான்,, எந்தன நாளா பழக்கம் உனக்கும் அவனுக்கும் சொல்லுடி,, எவ்வளவு பணம் வாங்கினா என் பையன் கிட்ட,, என் பையன் எத்தனாவது ஆள் உனக்கு”.. என்று இந்திரா தேவி ஆக்ரோசமாக கத்த..
நிறுத்துக்க என்பது போல் கையை அவர் முன் நீட்டியவள்..”போதும்” என்று சொல்லி விட்டு மெல்ல நடக்க..
“ஏய் நில்லுடி பதில் சொல்லிட்டு போ” என்று இந்திரா தேவி கத்த..
அவர் பேசியதை காதில் கேட்காமல் வைஷு அவரை கடந்து போக..
அவள் தன்னை மதிக்காமல் நடந்து போவதை பார்த்த இந்திரா தேவிக்கு, வைஷுவின் மேல் இன்னும் கோபம் வர, சில கேட்க கூடாத வார்த்தையை அவளை பார்த்து சொல்ல..
அவர் அந்த வார்த்தையை தன்னை பார்த்து சொன்னவுடன்..திரும்பி நிமிர்ந்து அவரை பார்த்து “உங்க பையன் கிட்ட போய் கேளுங்க நான் எத்தனை லட்சத்துக்கு ஒர்த்துன்னு” என்று கேட்டு விட்டு.. அவர்களை நிமிர்ந்து பார்க்காமல் வெளியே வர..
இந்திரா தேவி மீண்டும் ஏதோ சொல்ல வர..
“மேடம் போதும், இனிமே அவ வீ. பி சார் பக்கம் கூட திரும்பி பார்க்க மாட்டா”.. என்றாள் சஞ்சனா..
“ரொம்ப நன்றி சஞ்சனா. நீ போன் போட்டு இவள பத்தி சொல்லன்னா, நான் இங்கே வந்து இருக்கமாட்டேன், இவ லச்சணம் எனக்கு தெரிந்து இருக்காது”..
“பரவால மேம்”..
“எப்படியாவது வீ. பிக்கு ஒரு நல்ல பொண்ணா பார்த்து கல்யாணம் பண்ணனும்” என்று இந்திரா தேவி சொல்ல..
நான் எல்லாம் உங்க கண்னுக்கு தெரியாது,, என்று மனதில் புலம்பிய சஞ்சனா..
“வாங்க மேம் போலாம்.. அவ போயிட்டா” என்று இருவரும் கிளம்ப..
வைஷு எப்படியோ மெயின் ரோட்டிற்கு நடந்து வந்து விட்டாள்.. நடனபள்ளிக்கு போக அவளுக்கு கால் வரவில்லை , இனி அங்கே போக மாட்டேன். வேற எங்கே போவது.. வீ. பி சார் கிட்டவாங்குன காச எப்படி திருப்பி கொடுப்பது..
ஏன் எல்லாரும் என்னை திட்டுறாங்க.. நான் எல்லாருக்கும் என்னால முடிஞ்ச உதவி தானே செஞ்சேன்..
இன்னேரம் அவள் உயிர் தோழி ஹேமா ஞாபகம் வர.. வானை பார்த்து நீ எல்லாத்தை பாத்துட்டு தானே இருக்க.. நான் கெட்டவளா?.. ஏன் எனக்கு மட்டும் எல்லாமே கெட்டதாவே நடக்குது.. என்று புலம்பிய படியே ரோட்டில் நடக்க.. ஒரு கார் வேகமாக வர..
செத்தேன் நான் என்று பயந்தவள்.. கண்களை மூட..
அவளை பிடித்து இழுத்திருந்தான் வீ. பி…
யாரோ! என்னை காப்பாற்றி விட்டார்கள், என்று சுயநினைவுக்கு வந்தவள் நிமிர்ந்து தன்னை காப்பாற்றியவனை பார்க்க..
அவள் இவ்வளவு நேரம் புலம்பியதர்க்கு காரண கர்தவாக இருந்தவனை பார்த்தவள், அவனை முறைத்து..
அவனிடமிருந்து விலகி. அவனிடம் என்னை தொடாதே என்று சுட்டி காட்டியவள்.. நடக்க..
“வைஷு” என்றான்..
அவனை திரும்பி பார்த்தவன் “நீங்க இனி என்கிட்ட ஒரு வார்த்தை பேச கூடாது”.
என்றவள் வேகமாக நடக்க..
“பொம்மா, நா பொம்மா” என்று அவள் பின்னே வந்து கூப்பிட. அவள் காதுகளை தன் கையினால் முடியபடி நடக்க, அவள் பின்னோடு ஓடியவன்..
“என்னால உன்னை இப்போ தனியா விட முடியாது வாபொம்மா” என்று அழைக்க..
“யாரு நீங்க, யாரு சார் நீங்க?.. உங்க பணம், உங்க வீடு தேடி வரும், இனி ஒரு நிமிசம் கூட உங்க டான்ஸ் அகாடமிக்கு வர மாட்டேன்”.. என்றவள் வேகமாக நடக்க, இவ சரிபட்டு வரமாட்டா.
நம்ம வேலையை காட்டிட வேண்டியது தான் என்றவன்.
அவள் பின்னாலே செல்ல,, வைஷு சரியாக வீ. பியின் கார் பக்கம் செல்ல.. அவளை பின்னிருந்து தூக்கியவன், அவனின் கார் உள்ளே இழுத்து கொண்டு சென்றிருந்தான்…
error: Content is protected !!