Skip to content
Post Views: 2,140
ஜதி தரும் அமுதம்
அத்தியாயம் – 8
Advertisement
வைஷு யாழினியை ஓய்வு அறைக்கு அழைத்து வந்தவள்..
Advertisement
Advertisement
அவளை சுத்தபடுத்தி குளிக்க வைத்து,.. வேறு உடையை எடுக்க வெளியில் வந்தவள், இந்திரா தேவியை பார்த்து “யாழினிக்கு ட்ரெஸ்” என்று கேட்க..
இந்திரா தேவி அமைதியாக எழுந்து சென்று, ஒரு புதிய உடையை எடுத்து அவளிடம் கொடுக்க.. அதை அவரிடம் இருந்து வாங்கியவள்.. யாழினிக்கு உடை மாற்ற உதவி செய்து வெளியில் அழைத்து வந்தாள்..
Advertisement
வைஷு யாழினி காதில் ஏதோ சொல்ல..
யாழினி தன் அம்மம்மாவின் அருகில் சென்றவள்,, “சாரி அம்மம்மா நான் பயந்துட்டேன்” என்று கூறி பேத்தியை அணைத்துக்கொண்டவர்..
அவளின் தலையை வருடி விட்டவர்..
“இனிமே எதுவுண்ணாலும் என்கிட்ட சொல்லு” என்று தன் பேத்தியிடம் பேசிக்கொண்டு இருக்க..
வைஷுவுக்கு யாழினி சன்று முன் கேட்டது ஞாபகம் வர..
அந்த ரூம்பை விட்டு வெளியே வந்தாள்,, அங்கே வீ. பி, ,நாகில்லி வெங்கடேஸ்வரர், வீ. பியின் அக்கா சௌசன்யா,, என்று அனைவரும் இருக்க..
வைஷு விக்ரமனனின் அருகில் வந்தவள்,, “யாழ் பசிக்குதுண்ணு சொன்னா நேத்து நான் பண்ணி கொடுத்த கழி வேணுமுன்னு கேட்க, நான் செஞ்சு கொடுக்கவா?”…
“ஊம்ம்” பண்ணு என்றான்..
அங்கே உள்ள அனைவரும் இவன் வீ. பி தானா என்று ஆச்சரியமாக இருந்தது. வைஷு கிச்சன் சென்று
சில நிமிடத்தில் கழி செய்து, முட்டை அவித்து யாழினி அறைக்கு எடுத்து வந்திருந்தான்..
இந்திரா தேவி. நீ இன்னும் போகலீயா என்பது போல் ஒரு பார்வை பார்க்க.
அவள் எடுத்து வந்த பிளேட்டை யாழினி இடம் தந்து சாப்பிட சொல்ல..
இந்திரா தேவி வாயை திரந்திருந்தார்..
“ஏய் என்ன கொடுக்குற? என் பேத்திக்கு?”… என்றார் கோபமாக..
ஏய் என்ற வார்த்தையில் பயந்தவள் திரும்பி இந்திரா தேவியை பார்க்க..
என் பேத்திக்கு என்ன குடுக்கனுமுன்னு எனக்கு தெரியும்,, அதிக ப்ரசங்கி தனம்மா வேலை பண்ணாதே”.. என்றவுடன்..
“சாரி மேம்” என்றவர் அவள் கொண்ட வந்ததை யாழினி கையில் கொடுத்து விட்டு வேகமாக வெளியில் சென்று விட…
வீ. பி அவளின் பின்னாலே சென்றிருந்தான்,, கலங்கி கண்களை துடைத்து கொண்டே, அவள் வீட்டின் வாசற்ப்படியை தாண்ட.
“வைஷு” என்றவன், அவளின் கைபிடித்து நிறுத்தி இருக்க..
“விடுங்க சார்” நான் கிளம்புறேன்.. என்றவள், அவள் கையை வீ. பி யிடம் இருந்து உருவ பார்கக..
“நான் வந்து விடுறேன் வா”…என்றான்..
“எனக்கு போக தெரியும் சார், நான் போயிக்கிறேன்”. என்றவளை..
பிடுத்த கையை விடாமல், அவளை அவன் காரில் ஏற்றியிருந்தான்..
“வீ. பி சார் விடுங்க, வந்தவளுக்கு போக தெரியாதா”என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போதே காரை ஸ்டாட் பண்ணி இருந்தான்,,.
“நான் போயிக்கிறேன் வண்டியை நிப்பாட்டுங்க” என்று அவள் சொல்லியதை காதில் வாங்காதவன்,,
வண்டியை ஓட்டிக்கொண்டே இருக்க..
“இனிமே என்னை உங்க வீட்டுக்கு கூப்பிடாதீங்க சார்” என்றவளின் கண்ணீல் கண்ணீரை கண்டவன்..
யாரும் இல்லா இடத்தில் ஓரமாக காரை நிறுத்தி விட்டு.. “சாரி வைஷு அம்மாவுக்கு ஏதோ கோபம், அப்படி பேசிட்டாங்க,, நான் உன் கிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்” என்றவனின் பதிலை காதில் வாங்காதவள்..
“நான் யாழினிக்காக வந்தேன் சார்,, அவ என்கிட்ட புட் கேட்ட, செஞ்சு குடுத்தேன் அவ்வளவு தான், இதுல என்ன இருக்கு” என்று கலங்கியவளின்..
கையை எடுத்து தன் கையோடு வைத்து அழுத்திக்கொண்டவன்..
“சாரி பொம்மா, நா பொம்மளு” என்றான்..
“நீங்க ஏன் சார் சாரி சொல்லுறீங்க,, நான் வந்ததே தப்பு, எல்லாம் என் விதி யாருகிட்ட என்ன பேச்சு வாங்கனுமுன்னு இருக்கோ, இனிமே நீங்க என்னை கூப்பிட்டா, கூட நான் வர மாட்டேன்”..
“சாரி பொம்மா, அம்மா பண்ணுனதுக்கு நான்” என்று ஏதோ சொல்ல வர..
. “நீங்க ஒன்னும் சொல்ல வேண்டாம்” என்றவள் அமைதியா அமர்ந்திருக்க..
அவளை அழைத்து சென்று டான்ஸ் கிளாசில் விட்டவன்,, அவள் முகத்தைதே பார்த்திருந்தான்..
நான் வர்றேன் என்பதாய் தலையாட்டியவள்.. அவமான பட்ட முகத்தோடு,, சிவந்த போன கண்களோடு சென்றவளை.. பார்த்து என்கூடவே இருந்திரு என்று சொல்ல நா வர வில்லை அவனுக்கு,, காரை அவன் வீட்டிற்கு விட்டான்..
வீ. பி யின் வீடு அமைதியாக இருக்க.. யாழினி அறைக்கு சென்றான்,, இந்திரா தேவியின் மடியில் தலைவைத்து யாழினி தூங்கிகொண்டு இருக்க..
மகள் தூங்கியதை பார்த்து விட்டு..
“மா நீங்க பேசுனது சரியா?”..
“என்னபேசுனேன் நான்?. என் பேத்திக்கு என்ன குடுக்கனுமுன்னு எனக்கு தெரியாத, இவ யாரு? செய்து குடுக்க?”..
“அம்மா அவளா வரல,, நம்ம தான் போன் பண்ணி அவள கூப்பிட்டோம், அவ வந்தது யாழினிக்காக”..
“சரி நீ தான் கூப்பிட்டா, வந்தா யாழினிக்கு உதவி செஞ்சா அப்படியே குடுக்குறத வாங்கிட்டு போக வேண்டியது தானே,. எதுக்கு சமையல் ரூம் வரைக்கும் போறா, அவளுக்கு யார் அந்த உரிமையை கொடுத்தது”..
“அம்மா புரிஞ்சு கிட்டு பேசுமா, அவ யாழினி கேட்டானு செஞ்சு குடுத்தா”..
“டேய் உன்ன பத்தி எனக்கு தெரியாத, நீ யாரு எப்படி பட்டவன், நீ ஒரு பொண்ணா நம்ம வீட்டு கிச்சன் வர விடுறேனா, அவளுக்கும், உனக்கும் என்னடா உறவு? நீ நினைக்குறது கனவுல கூட நடக்காது, உன் அம்மா நானு,” … என்றார்.
“மா நீங்க ஓவரா கற்பனை பண்ணிக்கிறீங்க”…
“நானா கற்பனை பண்ணிக்கிறேன், நீ அவளை உன் பொண்டாட்டி மாதிரி போன் போட்டு கூப்பிடறது என்ன,, அவ வந்து, யாழினிக்கு அம்மா மாதிரி, யாழினியை கட்டி புடிச்சி அழுவுறது என்ன?.. இந்த நடிப்புக்கெல்லாம் நான் மயங்க மாட்டேன்,, இந்திராதேவிக்கு மருமகளா வர அவளுக்கு தகுதி இல்ல,, என் வீ. பிக்கு பொண்டாட்டியா வர்ரவ,, என்னை மாதிரி இன்னொரு இந்திரா தேவியா இருக்கனும்,, இவ,அவ இல்ல,, இவ வெறும் டான்ஸ் டீச்சர் புரிஞ்சதா? இனி அவ யாழினிக்கு டான்ஸ் சொல்லி தர கூடாது,, என் பேத்தி நிழல்ல கூட தொட அவளுக்கு உரிமையில்லை”… என்று சொன்னவுடன்..
கோபம் கொண்ட வீ. பி ஏதோ சொல்ல வர.. தம்பியின் கைபிடித்த சௌசன்யா, “யாழினி இருக்க” என்று கண்சாடை காட்ட..
“எல்லாரும் சேர்ந்து நல்லா பண்ணுறீங்க”… என்றவன்.. தன் அறைக்கு வந்தான்.. தன் அம்மா தன்னை கண்டு கொண்டார், இனி வைஷுவை எப்படி சமாதானம் பண்ணி, பேசி,, கல்யாணம் பண்ணுறது, முடியலடா என்று வாய்விட்டு புலம்பியவன் குளித்து முடித்து கிளம்பி யாழினியிடம் சொல்லிக் கொண்டு அவன் ஆபிஸ்சுக்கு சென்று விட்டான்..
யாழினிக்கு மூன்றாம் நாள் நெறுக்கிய உறவுகளை மட்டுமே அழைத்து விசேசம் செய்தனர்..
சொர்ண முகி வைஷுவுக்கு மேலும் நிறைய வேலைகள் குடுத்து டார்சர் பண்ணா,, நீ எந்தன பேர் அனுப்புனாலும் நான் அசர மாட்டேன், என்று ஒரு முடிவோடு அவள் வேலையை பார்த்துக்கொண்டு இருந்தாள்..
வீ. பி வைஷுவுக்கு போனில் பல முறை அழைக்க,, அவள் அழைப்பை ஏற்கவில்லை,, வாட்சப்பில் மெஜேஸ் கூட அனுப்பினான்,, பேசு பொம்மாயின்னு,, மெஜேஸை பார்க்க மட்டும் செய்வாள்,, ஆனால் பதில் அனுப்புவது இல்லை,, அவன் நம்பரை பிளாக் பண்ண அவளுக்கு மனம் வரவில்லை,, யாழினியை பார்க்க வேண்டும் என்று மட்டும் ஆசை கொண்டாள்..
ஒரு மாதம் கழித்து யாழினி நடனபள்ளிக்கு வரபோவதாக தகவல் வர.. சந்தோஷபட்டுக்கொண்டாள் வைஷு…
நாளை யாழினிக்கு இவள் வகுப்பு எடுக்க, போக வேண்டும் என்று இவளுக்கு தகவல் வர.. குஷியாகி போனாவள் யாழினிக்கு பிடித்த கலியை செய்து கொண்டு கிளாஸ் வந்தாள்.. யாருவேனா, சொல்லிக்கோங்க, எனக்கு யாழினிக்கு செய்து கொடுக்கனுமுன்னு ஆசை செய்யுறேன் என்று தனக்கு தானே சொல்லிக்கொண்டு வந்திருந்தாள்..
யாழினியும் சரியான நேரத்துக்கு வந்திருந்தாள்,, இந்திரா தேவியிடம் கெஞ்சி, கொஞ்சி தனக்கு வைஷுதான் நடனம் சொல்லி தர வேண்டும் என்று சம்மதம் வாங்கிவந்திருந்தாள்…
யாழினியோடு சஞ்சனாவும் வந்திருந்தாள்..
யாழினியை கிளாசில் விட்டு “சார்ப்பா 12 மணிக்கு வந்துருவேன்” என்று சொல்லி விட்டு செல்ல..
சஞ்சனா சென்றவுடன்.. “ஆண்ட்டி” என்று ஓடி வந்து அணைத்திருந்தாள் வைஷுவை..
“எப்படி இருக்க யாழ் குட்டி” என்றவள், அவளின் முகத்தை தடவி, தலையை வருடி விட..
அவள் தொட்டு தடவியதும். ஒரு இனம்புரியா ஒரு நேசத்தை அவளிடம் உணர்ந்த யாழினி..
“நல்லா இருக்கேன் ஆண்ட்டி,, அம்மம்மா தான் ஒரு மாசம் கழிச்சு கிளாஸ் போக சொன்னாங்க”..
“உங்க அம்மம்மா சொன்னா சரியாதான் இருக்கும்”.. என்றவள்..
“இந்தா சாப்பிடு” என்று அவள் எடுத்து வந்த கலியை யாழினியிடம் தர..
“ஐ,, தாங்யூ ஆண்ட்டி” என்று உண்டு கொண்டே.
“நீங்க ஏன் ஆண்ட்டி? என் பங்சனுக்கு வரல?”.
“ஆண்ட்டிக்கு கிளாஸ் இருந்துச்சுடா”..
“நானும், டேடியும் எத்தன முறை உங்களுக்கு கால் பண்ணோம், நீங்க போனை எடுக்கவே இல்லை ஆண்ட்டி,, நானா ரொம்பா வருத்தப்பட்டார்,.. எங்க அம்மம்மா வேற, எப்பா பார்த்தாலும் நானா கூட சண்டை, நானா பாவம்”.. என்று வருத்தப்பட்டவளிடம்..
error: Content is protected !!