Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலென்பது கனவு அல்லவா

Kadhal enbadhu kanavu allava -12

அத்தியாயம் -12

 

வீட்டுக்கு சென்ற பின்பும் வருண் சொன்னதையே நினைத்துக் கொண்டிருந்தாள் லதா. .

 



Advertisement

“ஆமால கரெக்ட்டு தான் நாம் ஏன் வேலைக்கு போக கூடாது வருண் சொன்ன மாதிரி ” என்று தோன்றியது லதாவுக்கு. உடனே வருண் சொன்ன அலுவலகத்திற்கு வந்தாள். உள்ளே நுழையும் போதே ரிசப்ஷனிஸ்ட் 

 

“மேடம் உங்களுக்கு என்ன வேணும் யாரை பாக்கனும் ” என்க அதற்கு லதாவோ தயங்கியபடி 

Advertisement

 

Advertisement

“நான் மிஸ்டர் வருண் பார்க்கனும்” என்று கூறினாள் லதா. 

 

உடனே வருண் இருக்கும் கேபினுக்கு அழைத்து சென்றார் ரிசப்ஷனிஸ்ட் 

Advertisement

 

வெள்ளை துணி போர்த்திய மேஜையில் ஒரு கண்ணாடி ப்ளவர் வாஸ் அந்த கண்ணாடி ப்ளவர் வாஷில் சிவப்பு நிற ரோஜாக்கள்.அங்கு சுற்றி முற்றி பார்த்தாள் திரை சீலைகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தது. லைப்ரரியில் இருப்பது போல மிகவும் அமைதியாக இருந்தது அந்த அறை. எவ்வளவு பெரிய மனம் இருக்கம் இருந்தாலும் அந்த அறையில் நுழைந்தால் மனம் லேசாகிவிடும். 

கேபினில் வரும் இல்லை அவன் வரும் வரை எதிரே இருந்த நாட்களில் அமர்ந்து கொண்டிருந்தாள் லதா.

 

‘என்னடா இந்த வருண் இன்னும் காணோம். நம்மள இங்க அழைச்சிட்டு வந்து உட்கார வச்சுட்டாங்க ஆனா அவனை காணுமே’ என்று யோசித்துக் கொண்டே இருந்தாள்.  பக்கத்திலிருந்து நீர் குவளையில் இருக்கும் தண்ணீரை எடுத்து அருந்தினாள்.  அது இன்னும் மனதை லேசாக்கியது. 

 

“மேடம் வருண் வந்துருவாரு நீங்க இங்கேயே வெயிட் பண்ணுங்க” என்று ரிசப்ஷனிஸ்ட் மீண்டும் வந்து கூறிவிட்டு செல்ல இவளோ தலையசைத்து விட்டு அங்கேயே அமர்ந்தாள். 

 

‘என்னடா இன்னும் காணும் ‘ என்று நினைக்கும் போது சற்று என்று கேபின் கதவை திறந்து..

“வெல்கம் லதா…சாரி ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சுட்டேனோ” என்க 

 

“இல்ல இல்ல வருண் , அப்றம் இங்க இந்த ஆபீஸ்ல எனக்கு ஏதாவது வேலை இருக்குமா? அன்னைக்கு கூட நம்ம பேசும் போது சொன்னியே” என்று கேட்க நெற்றியில் கை வைத்தபடி ஆங் யெஸ் யெஸ் சொன்னேன்ல ஓகே…. 

 

‘லுக் லதா இங்க எல்லாமே ஃபினான்சியல் பிசினஸ் தான் சோ ரொம்ப கவனமா வேலை பார்க்கணும் இங்க உனக்கான வேலை என்ன அப்படின்னா அக்கவுண்ட்ஸ் மேனேஜருக்கு அசிஸ்டென்டா இருந்தா போதும்” என்று சொல்லி முடிக்கும்போது இந்த வருண் என்னோட சர்டிபிகேட் என்று நீட்டினாள். 

 

“ஹலோ மேடம் , சர்டிபிகேட் எடுத்து உள்ள வைங்க இதெல்லாம் யார் கேட்டா. நான் இங்க இருக்கிற எந்த எம்லாயிஸையும் சர்டிபிகேட் பார்த்து எல்லாம் சூஸ் பண்ணல அவங்க ஆட்டிடூயூட் பார்த்து தான் நான் செலக்ட் பண்ணுவேன். பிகாஸ் சுத்தமா எதுவுமே தெரியாதவன் கூட சொல்லி கொடுத்தா புரிஞ்சுப்பான் ஆனால் நடவடிக்கை என்பது அவன் நடந்து கொள்வது தான் இதை சொல்லிக் கொடுத்த எல்லாம் வராது. நல்ல எண்ணங்கள் நல்ல சிந்தனைகள் இருக்கிறவன் எப்படி பட்ட கஷ்டமான வேலையும் ஈஸியா செஞ்சிட்டு போய்டுவான் ” என்று அவன் சொன்ன பதிலில் அவள் மயங்கித்தான் போனாள்.

 

கண் கொட்டாது அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

“என்ன லதா நீ என்ன இப்படி பார்த்துட்டு இருக்க”

 

“இல்ல நீ சொல்ற பதில் ரொம்ப டிஃபரண்டா இருக்கு ஆனா உங்களுக்கு சொன்னது 100% உண்மை” என்று புன்னகையித்தாள்.

 

“உண்மைதானே லதா படிப்பு அதிகமா இருந்தோம் ஆட்டிடியூடு இல்லனா ஒன்னுமே பண்ண முடியாது “என்றான் வருண்

 

“கரெக்ட் ஸோ என்னோட சீட் எங்கன்னு சொன்னா நான் போய் உக்காந்துப்பேன்ல “

 

“ம்ம் பரவாயில்லையே ரொம்ப பாஸ்டா தான் இருக்க” என்று சிரித்தான் வருண்.

 

“பின்ன சர்டிபிகேட் எதுவும் பார்க்கல ஸோ ஆட்டிடியூடு பார்த்து தான் வேலை தருவேன் என்று சொல்லிட்டே என்னோட ஆட்டிடியூடு உனக்கு பிடிக்கும் தானே” என்றாள் லதா.

 

“யெஸ் உன்னை படிக்கிற காலத்தில் இருந்தே உன்ன ரொம்ப பிடிக்கும்”என்றதற்கு முகத்தை சுழித்தாள்.

 

“வாட் படிக்கிற காலத்துல பிடிக்குமா” என்று ஆச்சரியமாக கேட்டாள் லதா.

 

“அ.. அதெல்லாம் ஒன்னும் இல்ல தெரியாம சொல்லிட்டேன்” என்று சொல்லி சமாளி தான் வருண். 

 

‘எப்பா நல்ல வேலை எதையும் உளறி போட்டாம இருந்தோம் தப்பிச்சோம் டா சாமி’ என்று நினைத்து விட்டு அவளை அமரும் இருக்கையை காண்பித்தான்.

 

“இதோ இனிமே இதான் உன்னோட சீட்டை இதோ அந்த அக்கௌன்ட் மேனேஜர் இருக்காரு பாரு அவர்கிட்ட மத்த டீடைல்ஸ் எல்லாமே கேட்டுக்கோ” என்று சொல்லி அனுப்பி வைத்தான் வருண். 

 

அவன் காண்பித்த அறையை நோக்கி நடந்தாள் லதா .

 

“வணக்கம் சார். வருண் அனுப்பி விட்டார். என் பேரு லதா “

 

“வாங்க மா. முதல ledger எப்படி எழுதணும் ன்னு சொல்லி தரேன் வாங்க . ” 

 

“ஓகே சார்” என்று இருக்கையில் அமர்ந்தாள் லதா.

 

அவர் சொன்ன டிடைலீஸ் அனைத்தும் அந்த லெட்ஜர் நோட்டில் எழுத துவங்கினாள். வேலை ஒரு புது அனுபவமாக இருந்தது. ஒரு பக்கம் மனதுக்குள் சந்தோஷம், மறுபக்கம் பதட்டம் ஒருபக்கம் . ஆனால் எல்லாவற்றையும் சமாளிப்பது போல் பாவனையில் தன் வேலையை கவனிக்க துவங்கினாள். என்னதான் இருந்தாலும் நமக்குன்னு ஒரு வேளை வேணும் என்று பெண்கள் நினைப்பது சரி தான் . எப்பவும் வீட்ல அடுப்படில கிடக்குறதுக்கு நம்ம என்ன வரமா வாங்கிட்டு வந்துருக்கோம் என்று நினைத்துவிட்டு வேலையை கவனிக்கலானாள்.

 

சட்டென்று போன் வந்தது அவளுக்கு. யார் அழைக்கிறார் என்று எடுத்து பார்க்கும் போது தான் கணவன் கோபி என்று தெரிந்தது.

 

“ஆஹா இவர் கிட்ட நாம சொல்லாம விட்டோமே” என்று நாக்கை கடித்து விட்டு போனை எடுத்தாள்.

 

“ஹலோ ஃபோன் எடுக்க இவளோ நேரமா உனக்கு” என்றான் கோபி.

 

“ஐயோ சாரிங்க நான் எடுக்கிறதுக்குள்ள கட் ஆயிடுச்சு ” என்றாள் லதா.

 

“ஏய் வீட்ல தானே இருக்க போன் எடுக்க அவ்ளோ நேரம் ஆகுதா உனக்கு “என்று கோபி கேட்டதற்கு.

 

“சாரிங்க நான் இப்போ வீட்ல இல்ல ஆபிஸ்ல இருக்கேன் “

 

“என்ன ஆபிஸா “

 

“ம்ம் என்னோட ப்ரண்டு வருண் “என்று ஆரம்பிக்கும் முன் அழைப்பு கட் ஆனது. 

 

‘சூப்பர் விஷயத்தை சொல்றதுக்குள்ள கட் ஆயிடுச்சு . இனி எப்போ நான் விஷயத்தை சொல்லி புரிய வைக்கிறது அவருக்கு ‘ என்று யோசித்தாள். 

 

“நீ ஒரு முட்டாள் டி லதா. முன்னாடியே சொல்லனும் அப்படிங்கிற அறிவு உனக்கு சுத்தமா கிடையாது” என்று தன்னை தானே திட்டினாள்.

 

“என்னம்மா வந்த நாளே போனும் கையுமாக இருக்க . எடுத்து வச்சிட்டு வேலையை பாரு” என்றார் அக்கவுண்ட் மேனஜர்.

 

“சாரி சார்”என்று சொல்லி மீண்டும் தன் வேலையை கவனிக்க துவங்கினாள்.

 

தொடரும் 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!