KAK-12-1
“டேய் என்னடா சத்தம் அதிகமா இருக்கு”என சொல்லிக்கொண்டு வந்தார் ஈஸ்வரி.
“அதெல்லாம் ஒன்னும் இல்லம்மா சும்மாதான்” என்று சமாளித்தவன்
“ ரொம்ப பசிக்குமா ஏதாவது கொஞ்சம் செஞ்சிதாங்களேன்”
“ என்ன பசிக்குதா இன்னுமா அந்த பேச்சி எதுவும் கொண்டு வந்து தராம இருக்கா. ஏய் பேச்சி உள்ள என்னடி பண்ற அங்க. காபியும் ஸ்னாக்ஸ் எடுத்துட்டு வா” என்றார் அதிகாரமாக.
Advertisement
“ இதோ கொண்டு வந்துடேன் அம்மா” என்று கையில் இருந்த பிளேட்டில் உள்ள காப்பியை கொடுத்தாள் பேச்சி.
“ஓ மேடம் நாங்க கூப்பிட்டா தான் கொண்டு வருவீங்களா”
“அப்படி எல்லாம் இல்லம்மா தம்பிக்கு சூடு இருந்ததுன்னா பிடிக்குமா அதான் தம்பி வந்த பிறகுதான் காப்பி போட்டேன் அதான் லேட்டு”
Advertisement
“வேலை இவ்வளவு சீக்கிரமா வராது ஆனா ஏதாவது கேள்வி கேட்டா பதில் மட்டும் அவ்வளவு சீக்கிரமா வரும். காரணம் சொல்லிட்டு இருக்காம போய் வேலையை பார் போ” என்று சொல்லவும் கண் கலங்க தலை குனிந்து அந்த இடத்தை விட்டு சென்றாள் பேச்சி.
Advertisement
இவ்வளவு பேச்சு பேசும் தனது அன்னையை எதுவும் சொல்லாமல் தனக்கு வைத்திருந்த காப்பியை அமைதியாக அருந்திக் கொண்டிருந்தான் கவின்.
இதனை கவனித்துக் கொண்டு அங்கே வந்த இன்பா, “ டேய் அம்மா தேவை இல்லாம இப்படி பேசுறாங்க கொஞ்சமாவது அதற்கு ரியாட் பண்றியா டா” என்றான் கவின் பக்கத்தில் அமர்ந்து மெதுவாக அவனுக்கு மட்டும் கேட்கும் குரலில்
“இப்ப நான் ஏதாவது சொன்னேனா பேச்சியக்காவுக்கு இன்னும் கொஞ்சம் திட்டுவிழும். அதுவே நான் வாயை மூடிட்டு இருந்தா ரெண்டு திட்டோட போயிரும். இப்ப சொல்லு நான் இங்கே பேசணுமா வேண்டாமா”
Advertisement
“இப்ப நான் இதுக்கு என்ன சொல்லணும் நீ ரொம்ப நல்லவன்னா”
“அது உன்னோட விருப்பம் பிரதர். நான் இப்படித்தான் நீ நல்லவனா நினைச்சா நல்லவன் கெட்டவனா நினைச்சாலும் நல்லவன் தான். பிகாஸ் உன்னுடைய எந்த ஒரு கருத்தும் எனக்கு தேவையில்லை. எனக்கு நான் தான் நல்லவன்” என்றான் கெத்தாக கவின்.
“ நீ கிரிமினலஜி (criminology) படிச்சாலும் படிச்ச.நீ சொல்லுறது எதுவும் புரிய மாட்டேங்குது டா”என்றான் சலிப்பாக இன்பா.
“சரி அத விடு தனியா டிடெக்டிவ் ஏஜென்சி ஆரம்பிக்க இடம் பார்க்கேனு சொன்ன என்ன ஆச்சி”
“ம் ரெண்டு இடம் பாத்தேன் ஆனா எனக்கு பிடிக்கல. இன்னைக்கு ஒரு இடம் பாக்க போறேன் பாக்கலாம் இதாவது செட் ஆகுதான்னு”
“அதுலாம் செட் ஆகும் டா பீல் பண்ணாத சரியா”என்று அவன் தோளில் தட்டி கொடுத்தான்.
“என்ன டா ரெண்டு பேரும் குசுகுசுன்னு பேசுறீங்க”என்றார் இருவரும் தங்களுக்குள் பேசுவதை பார்த்து
“அது வந்து மா”என இன்பா இழுக்க, “மா நீங்க காதல் பத்தி என்ன நினைக்கிறீங்கனு இன்பா கேக்குறமா”என்று முடித்தான் கவின் குறும்புடன்
“அதை பத்தி ஏன் கேக்குற ஏதாவது லவ் பண்றியா என்ன”என்றார் சந்தேகமாக
“ ஐயோ அம்மா அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல இவன் சும்மா சொல்றான்”
அப்போதும் அவர் சந்தேகமாக பார்க்க, “மா ப்ளீஸ் என்னை நம்புமா நான் பண்ண மாட்டேன். நான் உன் பையன் மா உனக்கு பிடிக்காத ஏதாவது பண்ணுவானா டேய் சொல்லு டா” என்று கவின் தோளில் அடித்தான் இன்பா.
“மா அவன் லவ் பண்ணல. அவனே ஒரு பயந்தாங்கோலி அவன் எப்படி லவ் பண்ணுவான் நீ சொல்லுமா எதுக்காக உனக்கு லவ்வே பிடிக்கல”
“அதுதான் எனக்கு பிடிக்கல தெரியுதுல அப்படின்னா என்ன பண்ணனும் அது பண்ண கூடாது அதை விட்டுட்டு ஏன் எதுக்கு கேள்வி கேட்க கூடாது” என்றார் கோபமாக ஈஸ்வரி.
“ டேய் அம்மா ரொம்ப கோவமாயிட்டு வாடா இப்படியே எந்திரிச்சு ஓடிருவோம்” என்றான் இன்பா மெதுவாக.
“நீ கொஞ்ச நேரம் சும்மா இருடா’ என்று விட்டு ‘அம்மா ப்ளீஸ் சொல்லுங்க அப்படி ஏன் உனக்களுக்கு லவ்வுன்னா பிடிக்கவே இல்லை”
“ இந்த லவ் ஒருத்தங்கள சுயநலவாதி ஆக்கிடும். அவங்கள சுற்றி இருக்கிறவங்க யாரும் கண்ணுக்கு தெரியாது. அவங்களோட அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, பிரண்ட்ஸ் சொந்தங்கள் யாரும் அவங்க கண்ணுக்கு தெரியாது. இந்த காதல் அவங்களே எல்லா உறவுல இருந்து தனிமைப்படுத்தி கடைசியா சாக கூட வச்சுரும். அதுக்காக தான் என் பசங்களுக்கு அந்த காதல் வேண்டாம்னு நான் நினைக்கேன் இதுல ஏதாவது தப்பு இருக்கா. நீங்க ரெண்டு பேரும் பிறக்கறதுக்கு முன்னாடி இருந்து ஒருத்தக்கொருத்தர் பிரியாம இருக்கீங்க. ஒருவேளை உங்களுக்கு நடுவுல ஒரு லவ் வந்து நீங்க ரெண்டு பேரும் பிரிஞ்சிட்டீங்கன்னா அது என்னால தாங்கவே முடியாது அதுக்கு தான் சொல்றேன் லவ் உங்களுக்கு வேண்டாம்” என்றார் உணர்ச்சிகரமாக
“ அம்மா நீங்க பீல் பண்ணாதீங்கம்மா ஒருவேளை எங்களுக்கு நடுவுல ஒரு லவ் வந்தாலும் அதனால நாங்க ரெண்டு பேரும் பிரியாம இருப்போம் அதனால நீங்க தேவையில்லாதது நினைச்சு பீல் பண்ணாதீங்க சரியா”
“ என்ன நான் இத்தனை சொன்ன பிறகும் உங்களுக்கு லவ் வருமா” என்ற டென்ஷனாக
“ ஒருத்தருக்கு லவ் வர்றத காமென் மா நம்மளால தடுக்க முடியாது அது வந்தா அப்படியே ஃபீல் பண்ண தான் செய்யணுமே தவிர அதை தடுக்கனும் நினைச்சா ஒருநாள் வெடிச்சிடும். சோ அப்படியே வந்தாலும் நீங்க அதிகமா ஃபீல் பண்ணாதீங்க அம்மா பாத்துக்கலாம்” என்றான் கூலாக கவின்.
@@@@@@@@@@@@@
“ சகோ ரொம்ப போர் அடிக்குது நெஸ்ட் கிளாஸ் யாருக்கு”
“எல்லாம் நம்ம மாம்ஸுக்கு தான் டி” என்றாள் வாயெல்லாம் பல்லாய் பிரியங்கா.
“ என்ன நம்ம மாம்ஸா என்னடி சொல்ற” என்றாள் சந்தேகமாக இனியா.
“ம் நல்லா கேளு டி நம்ம காலேஜ் தொடங்கின இந்த ஒரு வருஷமா உன் மாமா பின்னாடி ஜொள்ளு விட்டு திரியுறா டி”
“என்னடி சொல்ற ஒரு வருஷமா வா எனக்கு எப்படி தெரியாம போச்சு”
“ அட தின்னி முட்ட உனக்கு உன் பின்னாடி யாரு சுத்துறாங்க தெரியாது இதுல இவ என்ன பண்றா நீ கண்டுபிடிச்சிடுவியா” என்றாள் நக்கலாக பூஜா.
“உன்ன என்று பூஜாவை அடிக்க போனவள் அப்புறம் பாத்துக்குறேன்உன்னை . இப்ப நீ சொல்லு என்ன மேட்டர் எங்க மாமாவ நீ சைட் அடிக்கிறயா ”
“ அது வந்து சகோ” என்று அவள் வெட்கப்பட
“ சகோ லவ் பண்றேன்னு மட்டும் சொல்லிடாத என் பிஞ்சு இதயம் தாங்காது”
“ ச்சி ச்சி அந்த கருமமெல்லாம் யாரு பண்ணுவா அவர் என்னோட க்ரஷ் டி”
“ஓ அப்போ ஓகே நீ கண்டினியூ பண்ணுடி. ஆமா நம்ம கேண்டின்ல இப்ப என்ன ஸ்பெஷல் போட்டு இருப்பாங்க”
“இப்ப கண்டிப்பா சிக்கன் பப்ஸ் இருக்கும் டி”
“சிக்கன் பப்ஸா கண்டிப்பா அத நான் சாப்டே ஆகனும்டி. எங்க நம்ம இன்ஸ்டன்ட் அண்ணா” என்று தீபக்கை தேடினாள்.
சிறிது தூரம் தள்ளி தனது நண்பர்களுடன் இருந்து அவன் பேசிக் கொண்டிருக்க அதனைப் பார்த்து விட்டு அவர்களை நோக்கி சென்றாள்.
“அண்ணா” அவர்களின் முன்னால் போய் நின்று தீபக்கை அழைத்தாள். இவள் அழைப்பை கவனித்தும் கவனிக்காதது போல் அவன் இருந்து கொள்ள சுற்றி இருந்த அவன் நண்பர்களோ “டேய் உன் தங்கச்சி கூப்பிடுறாங்க உனக்கு கேட்கலையா போடா போய் பேசுடா” என அவளிடம் இவனை தள்ளி விட்டனர்.
“அண்ணா உன் தங்கச்சிக்கு ரொம்ப பசிக்குது. வா நம்ம கேண்டின் போலாம்” என்று அவனை பேசவிடாமல் அவன் கையைப் பிடித்து அழைத்து சென்றாள்.
அவனோ பின்னால் திரும்பி தனது நண்பனை பார்த்து, “டேய் இன்பா ப்ளீஸ் காப்பாத்துடா” என பாவம் போல முகத்தை வைத்து கத்தினான்.
“ என்ஜாய் டா உன் தங்கச்சி கூட போய் ஜாலி பண்ணிட்டு வா” என இங்கே இருந்து அவனைப் பார்த்து கத்தினான்.
அவனின் குரலில் திரும்பிப் பார்த்தாள் இனியா. அவனும் இவளை பார்க்க இருவரில் கண்களும் ஒரு நிமிடம் அப்படியே உறைந்து நின்றது. அவனைப் பார்த்துக் கொண்டே நின்றவள் தீபக் கையை விட இதுதான் சமயம் என்று அவனும் அவளிடம் இருந்து தப்பித்து ஓடினான்.
அவளில் கண்களைப் பார்த்துக் கொண்டே அருகே வந்த இன்பா, “அமிழ் குட்டி உங்களுக்கு என்ன வேணும் சொல்லுங்க மாமா போய் வாங்கிட்டு வந்து தரேன்”
“என்ன” என்று தனது கண்களை கோழி முட்டை போல விரித்து, “ நீ…. நீங்க ஏன் என்ன அப்படி கூப்பிடுறீங்க” என்றாள் திணறலாக
“ என்னடா செல்லம் மாமா உன்ன அப்படி கூப்பிடக் கூடாதா அமிழ் குட்டி” என்று அவள் கண்ணை பார்த்து கேட்க அவளும் அவன் கண்னை பார்த்துக்கொண்டே , “ஓ கூப்பிடலாமே” என்று சம்மதம் சொன்னாள்.
அதில் இதழ் பிரியாமல் சிரித்தவன், “நான் உன் மாமா தானே” என்றதற்கு “ஆமாம்” என்று தலையாட்டினாள். “நம்ம ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தானே” என்றான் இன்னும் ஊடுருவி அவள் கண்களை பார்த்துக் கொண்டு
“ஆமா நம்ம ரெண்டு பேரும் லவ்வர்ஸ் தான்” என்றாள் மயக்கத்தில் இருப்பது போல
“ சரி போடா தங்கம் உனக்கு என்ன வேணுமோ என் பேரு சொல்லி கேண்டீன்ல வாங்கிகோ போ” என்றான் இன்பா.அதற்கு சரி என தலை ஆட்டிவிட்டு தனது தோழிக்களை நோக்கி செல்ல தொடங்கினாள்.
“ சகோ என்னடி மந்திரிச்சி விட்ட மாதிரி வர்ற என்னடி ஆச்சு உனக்கு சகோ… சகோ… ஏய் இனியா” என்று அவள் கையை பிடித்து குலுக்க தொடங்கினாள் பூஜா.
அதில் தெளிந்தவள் “இப்ப என்னடி நடந்துச்சி” என்றாள் இருவரையும் திருதிருவென பார்த்து
“ ஏய் உனக்கு என்னடி ஆச்சு ஏதோ பேய் அடிச்ச மாதிரி முழிக்கிற”
“ ஏய் நம்ம சகோவ பேய் ஒன்னும் அடிக்கல ஒரு பாய் தான் அடிச்சிருக்கான்” என்றாள் பிரியங்கா சத்தமாக
“ என்னடி சொல்ற பாய்யா. ஒருவேளை இவ தினமும் போய் தின்பாலே அந்த பிரியாணி கடை பாய் அவர் கூட ரீசன்டா பஸ் ஆக்சிடெண்ட்ல செத்துட்டாரா அவரையா சொல்ற” என்றாள் புரியாமல் பூஜா
“சரியான அரமெண்டல் டி நீ நான் சொல்றது ஒரு பையன் பேய் இல்ல சரியா. நம்ம சகோவுக்கு இன்பா மேல லவ் வந்துட்டு டி லவ்” என்றாள் அவளுக்கு புரியும் படியாக
“என்ன லவ்வா இந்த விளையாட்டுக்கு நான் வரலடி நீங்களே பாத்துக்கோங்க” என்று சொல்லி ஓடி விட்டாள் பூஜா.
“ ஏ லூசு நீ கொஞ்சம்சும்மா இருடி. பூஜா இங்க வா அவ ஏதோ லூசு மாதிரி உளறிட்டு இருக்கான அத கேட்டு நீயும் போற” என்றாள் கோபமாக இனியா
“எது லூசா உன் மனசாட்சிய தொட்டு செல்லு நீ அவனை லவ் பண்ணவே இல்லையா”
“அது வந்து என அவள் திணற, இங்கபாருடி உனக்கு அவனை புடிச்சி இருக்குதான”
“ஆமாம் டி அவன ஃபர்ஸ்ட் டைம் பாக்கும் போதே எனக்கு பிடிச்சி இருந்துச்சி. ஆனா அது லவ் இல்ல ஓகே நான் தெளிவா இருக்கேன் என்னை நீ குழப்பாத சரியா” என்று என்று சொல்லி இவளும் பூஜாவிடம் சென்றாள்.
“ போடி போ உன் மனசுல காதல் வந்துட்டு நீ எவ்வளவு தூரம் தான் ஓடுற நான் பாக்கத்தானே போறேன் ” என்றாள் பிரியங்கா போகும் அவளை பார்த்து.
