Skip to content
Post Views: 651
“ஹலோ கவின் லைன்ல இருக்கீங்களா”என்றாள் இனியா.
“ஆங் சொல்லுங்க”என்றான் யோசனையாக கவின்
“இவ்ளோ பிரச்சனை நடந்த பிறகும் இவ ஏன் கால் பன்றானு நினைக்கிகளா”
“ஐயோ அப்படிலாம் நினைக்கல சொல்லுங்க என்ன விஷயமா கால் பண்ணீங்க”
Advertisement
“உங்கக்கிட்ட ஒரு முக்கியமான மேட்டர் சொல்லனு உங்கள மீட் பண்ண முடியுமா”
“ஓ இப்ப நான் ஊருல இல்லையே ஒரு கேஸ் விஷயமா குற்றாலம் போயிட்டு இருக்கேன் உங்களுக்கு பரவால்லனா போன்ல சொல்லுங்க. அப்படி போன்ல சொல்ல முடியாத விஷயம்னா நான் நெஸ்ட் வீக் தான் வருவேன் அப்ப சொல்லுங்க”
“இல்ல இது கொஞ்சம் அர்ஜன்ட் மேட்டர் நான் இப்பவே சொல்லுறேன்”
Advertisement
“ம் சொல்லுங்க”
Advertisement
“உங்க வீட்டுக்குள்ள என் சிஸ்டரா உங்கள மேரேஜ் பண்ணிட்டு வந்து இருக்கவள பத்தி நீங்க என்ன நெனைக்கிங்க”
“நான் என்ன நெனைக்க அதான் எல்லாரும் நான் தான் தப்பு பண்ணணு சொல்லி அவளை எனக்கு மேரேஜ் பண்ணி வைச்சிட்டீங்களே இனி என்ன இருக்கு நான் நெனைக்க”என்றான் நொந்துப்போய்
“இல்ல நான் சொல்லுறது உங்களுக்கு புரியல. நான் ஒரு வீடியோ கிளிப் அனுப்புறேன் அத பாத்துட்டு சொல்லுங்க”
Advertisement
“ம் சரி” என்று போனை கட் செய்து விட்டு அவள் அனுப்பி வீடியோவை பார்க்கத் தொடங்கினான்.
அதை பார்த்த உடனே தெரிந்தது தனது வீட்டில் உள்ள ஹாலில் இரவு நேரத்தில் எடுக்கப்பட்டது என்று அதில், “தமிழ் எங்க இருக்கீங்க. ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க. நான் பண்ணது தப்புனு எனக்கு தெரியும். ஆனா என் முகத்தை கூட பாக்காம இருப்பீங்கனு நான் நெனைக்கல. சாரி டூ சே ப்ளீஸ் வீட்டுக்கு வாங்க” என்று கவின் புகைப்படத்தை பார்த்து பேசிக் கொண்டிருந்தவள் தனது செல்போன் ரீங் ஆனதால் அதனை எடுத்து, “சொல்லுடி என்ன இப்ப கால் பண்ணி இருக்க” என்றவள் அங்கே என்ன சொல்லப்பட்டதோ அதற்கு, “ஏய் இது கூட உன்னால மேனேஜ் பண்ண முடியாதா. இப்ப என்னால கண்டிப்பா அங்க வர முடியாது நீ ஏதாவது பேசி அந்த கஸ்டமர பிடிக்க இல்லைன்னு வச்சுக்க உன்ன கொன்னுடுவேன்.ஏன் டி உன்னை நம்பி ஒரு மாசம் தான் என் பார்லர விட்டுட்டு வந்தேன் அது கூட உன்னால மேனேஜ் பண்ண முடியாதா என்னதான் நீ பண்ற. எனக்கு தெரியாது நான் வரும்போது எந்த ப்ராப்ளமும் இருக்கக்கூடாது சரி போன வை அப்புறமா பேசறேன்” என்றவள். “கடவுளே இந்த அம்மாவால என்ன எல்லாம் நான் கஷ்டப்பட வேண்டியதா இருக்கு. தப்பு தப்பு அப்படி சொல்ல கூடாது. இருந்தாலும் என்னோட லவ்வருக்கு என் காதலை சொல்ல முடியல. என்னோட உண்மையான அடையாளத்தை யாருகிட்டயும் சொல்ல முடியல. இன்னும் எத்தனை நாள் இதே மாதிரி நான் நடிக்கணுமோ” என்று தனக்குள்ளே திட்டிக்கொண்டு படி ஏறி மேலே உள்ள தனது ரூமுக்கு சென்றாள். அத்துடன் இந்த வீடியோ முடிவடைந்தது அதனை பார்த்துக் கொண்டிருந்தவனின் கவனத்தை அவன் மொபைல் ரிங் ஆகி கலைத்தது.
அதனை ஆன் செய்து காதில் வைத்துக் கொண்டு, “ம் சொல்லுங்க” என்றான்.
“அந்த வீடியோவை பார்த்தீங்களா ஏதாவது உங்களுக்கு புரியுதா”
“இல்ல கொஞ்சம் குழப்பமா இருக்கு உங்களுக்கு என்ன புரிஞ்சு அதை கொஞ்சம் சொல்லுங்க. அதுக்கு முன்னாடி எங்க வீட்ல எப்படி நீங்க வீடியோ எடுத்தீங்க அதை முதல்ல சொல்லுங்க ”
“அது நான் உங்க அண்ணனுக்கு ஒரு பெயிண்டிங் கிப்டா கொடுத்தேன் அதுல தான் சின்னதா ஒரு கேமரா செட் பண்ணி இருந்தேன் அதிலிருந்து தான் இத பார்த்தேன்” என்றாள் தயக்கமாக
“இது எவ்வளவு பெரிய கிரைம் தெரியுமா அது எப்படி நீங்க எங்க வீட்ல நடக்கிறத கேமரா மூலமா வாட்ச் பண்ணிட்டு இருக்கீங்க உங்க மேல நான் கம்ப்ளைன்ட் கொடுக்கடா” என்றான் கோபமாக.
“ ஹலோ பாஸ் நான் உங்களோட வருங்கால அண்ணி அதை நினைப்புல வச்சிட்டு பேசுங்க என்ன சும்மா கம்ப்ளைன்ட் கொடுக்கட்டா கம்பெனி கொடுக்கட்டாங்கிறீங்க. அது இல்லனா உங்க வீட்ல நடக்கிறது தெரிய வந்திருக்காது நினைப்புல வச்சுக்கோங்க” என்றாள் கோபமாக.
“சரி சரி ரொம்ப கோவப்படாதீங்க. அதுல உங்களுக்கு புரிஞ்சது என்ன அத சொல்லுங்க”
“ம் அப்படி கேளுங்க சொல்றேன். ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் என் சிஸ்டரோட பிஹேவியர் இப்படி இருக்காது. அண்ட் செகண்ட் ஒன் அவளோட வாய்ஸ் அவ வாய்ஸ் இப்படி இருக்காது இது ஏதோ டிஃபரண்டா இருக்கு கொஞ்சம். அவ பேஸ் எனக்கு கொஞ்சம் சேஞ்சஸ் தெரியர மாதிரி இருக்கு. அண்ட் அவ பேசுனத கொஞ்சம் கவனிச்சீங்களா ஏதோ பார்லர் கஸ்டமர் பத்தி பேசுறா. என்னோட சிஸ்டர் ஒரு டீச்சர் அவ ஏன் இப்படி பேச போறா. இப்படி நிறைய குழப்பம் இருக்கு எனக்கு”
“நீங்க சொல்றது எனக்கு புரியுது. ஆனா இதை ஏன் என்கிட்ட சொல்றீங்க இதுல நான் என்ன பண்ணனும் நினைக்கிறீங்க”
“ம் என்ன பண்ணனுமா” என்று பல்லை கடித்தவள், “சரி சார் நான் சொல்றது நல்ல நோட் பண்ணிக்கோங்க. நீங்க ஒரு டிடெக்டிவ் தான நான் ஒரு கேஸ் பத்தி உங்ககிட்ட சொல்றேன் அத கிளியரா விசாரிச்சு எனக்கு பதில் சொல்லுங்க” என்றாள் கடுப்புடன்
“ஓகே சொல்லுங்க” என்றான் கூலாக
“ என்னோடு சிஸ்டருக்கு இப்பதான் மேரேஜ் ஆச்சு. ஆனா மேரேஜ்க்கு அப்புறம் அவ பிஹேவியர் கொஞ்சம் டிஃபரண்டா இருக்கு அத பார்க்கும்போது எனக்கு இது என் சிஸ்டர் தானா சந்தேகம் வருது. சோ டிடெக்டிவ் சார் இப்ப இருக்குது என்னோட உண்மையான சிஸ்டரா இல்ல அவளுக்கு ஏதாவது ஆகிட்டான்னு நீங்க எனக்கு கண்டுபிடிச்சு சொல்லுங்க” என்றாள் போலி பணிவுடன்
அதில் பொத்துக் கொண்டு வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு, “ஓகே மேம் உங்க கேஸ்ல உள்ள உண்மையை கரெக்டா உங்களுக்கு கண்டுபிடித்து சொல்கிறேன்” என்றான் கிண்டலாக.
@@@@@@@@@@
அவன் சொல்லியதை கேட்ட அனைவரும் இனியாவை திரும்பிப் பார்த்து விட்டு கவின் சொல்வதை கவனிக்கத் தொடங்கினர். “ஏற்கனவே இந்த சந்தேகம் எனக்கு இருந்துச்சி அதனால முதல்ல நான் மாறன் அண்ணாக்கிட்ட பேசினேன். அப்பதான் எனக்கு தெரிஞ்சி அண்ணாவும் இவங்களும் ரொம்ப நாளா லவ் பண்ற விஷயம். அதைக் கேட்ட பிறகு எனக்கு 100% கிளியரா இருந்துச்சி. நான் கல்யாணம் பண்ணது ஆனந்த அமிழ்தினி இல்லனு. அப்போது யாருங்குற என்னோட சந்தேகத்துக்கு பதிலா அவளோட நம்பருக்கு வந்த கால் லிஸ்ட் வாங்கி செக் பன்னேன். அப்படி செக் பண்ணும் போது கிடைச்ச நம்பர் தான் பாண்டியன் மாமாவோட வைஃப் நம்பர். ஒரு நாளைக்கு அவங்க பத்து டைம் கால் பண்ணி இருக்காங்கனு தெரிய வந்துச்சி. அதனால அந்த நம்பருக்குள்ள அட்ரஸ்ல போய் செக் பண்ண போனோம் அப்பதான் பாண்டிய மாமாவை பார்த்தோம். அவருக்கு என்னை ஏற்கனவே அவருடைய பொண்னோட ஹஸ்பண்டா என்ன தெரிஞ்சிருக்கு. அவர்தான் எல்லாத்தையும் எனக்கு சொன்னது அதுக்கப்புறம் மாறன் அண்ணன் கிட்ட நான் சொன்னேன். அவர்தான் தாத்தாவிடம் போய் பேச சொன்னாரு அதுக்கப்புறம் எல்லாமே எங்களுக்கு தெரிய வந்துச்சி. அதாவது பிரபாவதி அத்த கல்யாணத்தால தான் தனக்கு நடக்க வேண்டிய கல்யாணம் நின்னது. அதனால தான் தனது வாழ்க்கை இப்படி ஆச்சி என்கிற கடுப்பில் இருந்த உங்க பெரியம்மா பொண்ணு மாயாவதி தான் இதுக்கெல்லாம் மாஸ்டர் மைண்ட் தெரிய வந்துச்சி”
“என்னப்பா சொல்ற அப்படி என்ன பிளான் பண்ணாங்க” என்றாள் சிவகாமி.
“அத நான் சொல்லுறேன் மா.நானும் என் பொண்டாட்டியும் காதலிச்சி தான் மேரேஜ் பண்ணோம். எங்க கல்யாணமான புதுசுல எல்லாரும் மாதிரி நல்ல தான் வாழ்ந்தோம். கல்யாணமான அடுத்த வருசமே எங்களுக்கு எங்க பொண்ணு கவியாழினி பிறந்தா. அவளுக்கு நாலு வயசு இருக்கும் போது தான் என் பொண்டாட்டியோட அக்கா மாயாவதி கோமால இருந்து வெளிய வந்தா. அப்பதான் ஆரம்பிச்சுச்சு எங்களுக்குள்ள சண்டை. மாயாவதிக்கு அவளோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கும் அவளோட அப்பா அம்மா இறந்ததற்கும் காரணம் பிரபாவதி தான் முடிவு பண்ணி அவளை பழி வாங்க முயற்சி பண்ணா ஆனால் அவளால பிரபாவதி எவ்வளவு முயற்சி பண்ணியும் ஒன்னும் பண்ண முடியல. அதனால நல்லா இருந்த என் பொண்டாட்டி மனச மாத்தி அவ மேல வெச்சி இருந்தா பாசத்தை பகடை காய பயன்படுத்தி தன்னோட தேவைகள் எல்லாம் தீர்த்துக்கிட்டா. அவள பொருத்தவரைக்கும் அவளுக்கு கிடைக்காத வாழ்க்கை யாருக்கும் கிடைக்கக்கூடாதுனு நினைச்சி என் பொண்டாட்டிய அவ பேச்ச கேக்க வச்சி எங்க ரெண்டு பேரையும் பேச விடாம பண்ணா. அது கூட பரவாயில்லை என் பொண்ண கூட சரியா அவ கவனிக்கல. வளர வளர என் பொண்ணுக்கு உன்னோட முக ஜாடை வந்துச்சு அதனால என் பொண்ண கண்டாலே அவளுக்கு பிடிக்கல. ஒரு நாள் பிரபாவதி மேல் உள்ள கோவத்துல என் பொண்ணு கொலை பண்ண ட்ரை பண்ணா அதை நான் பார்த்து தடுத்துட்டேன் அதுல இருந்து என் பொண்ண அவ கண்ணுல காட்டாம என் அம்மாக் கிட்ட விட்டு வளர்த்தேன். இப்படியே 22 வருஷம் அவங்க கண்ணு படாம என் பொண்ணு நான் வளர்த்தேன் ஆனா ஒரு நாள் என் பொண்ணு அவளோட அம்மாவை தேடி வந்துட்டா. உடனே அவளோட முகத்தைப் பார்த்த மாயாவதி என்னோட பொண்டாட்டிய அவகிட்ட பாசமா பேச சொல்லி நீங்க எல்லாம் சேர்ந்து அவங்கள ஏமாத்துனதா சொல்லி இவள பழிவாங்க உங்க வீட்டுக்கு அனுப்பிட்டாங்க. என்னோட முட்டாள் பொண்ணு எது உண்மை எது பொய் என்று தெரியாம அவங்க சொன்னதை நம்பி உங்கள பழிவாங்க இந்த வீட்டுக்குள்ள வந்துட்டா” என்ற பாண்டியன் தனது பெண்ணின் அருகில் சென்று அவள் கையை பிடித்து, “அம்மாடி இப்பவாது உன் உண்மையான முகத்தை எல்லாருக்கும் காட்டுமா” என்றார் தவிப்பான குரலில்.
error: Content is protected !!