Skip to content
Post Views: 698
“மாமா ப்ளீஸ் அத அப்புறமா பார்த்துக்கலாம் இப்ப முடிக்க வேண்டிய பிரச்சனை நிறைய இருக்கு. அத முதல்ல முடிச்சிப்போம்”என்ற கவின்
“நான் ஃபுல்லா எல்லாத்தையும் சொல்லிறேன் அதுக்கப்புறம் உங்க எல்லாத்துக்கும் என்ன தோணுதோ அதை அப்ப பேசுங்க” என்றவன் அனைவரையும் பார்த்துவிட்டு தனது மனைவியின் அருகே வந்து, “ரொம்ப நாள் கழிச்சு தன்னோட தாயைத் தேடி வந்த ஒரு மகளுக்கு கிடைத்தது ஒரு பொய்யான பாசம் மட்டும் தான். அவளுக்கு தெரியல உண்மை எது பொய் எதுன்னு. தாயோட அன்பு எல்லாம் உண்மையாக இருக்கும் அவளுக்குள்ள ஒரு நினைப்பு. பாசமா தன்னை தேடி ஓடி வந்த மகள தன்னுடைய பழிவாங்குற உணர்ச்சிக்காக பயன்படுத்திட்டாங்க இவளோட அம்மா. அம்மா சொன்னது எல்லாத்தையும் உண்மை நம்பி உங்கள பழிவாங்க இந்த வீட்டுக்குள்ள அமிழ்தினியா வந்தா கவி சாரி யாழினி. ஆனா எப்படி அமிழ்தினியா மாறுனா எனக்கு தெரியல அத உண்மையான அமிழ்தினி தான் நமக்கு சொல்லணும்” என்று சொல்லி மாறன் பக்கத்தில் நின்றவளை பார்க்க
அவளோ என்னை எப்படியாவது காப்பாத்து என கெஞ்சும் பார்வையோடு மாறனை பார்த்தாள்.
“என்ன மேடம் அப்படி பாக்கறீங்க கேக்குறான் இல்ல பதில் சொல்லுங்க ” என்றான் சிறிதும் தயவு காட்டாத பார்வையுடன்
Advertisement
இவன் நமக்கு உதவ மாட்டான் என்று தெரிந்த அமிழ்தினி தனது தாத்தாவை பாவமாக பார்த்தாள்.
“பதில சொல்ல சொன்னா என்ன ஒவ்வொரு ஆளா பாவமா பாத்துட்டு இருக்க இந்த நடிப்புல இங்க வேண்டாம் ஒழுங்கா உண்மைய சொல்லு” என்றார் கண்டிப்புடன் வள்ளியம்மை பாட்டி.
யாரும் தனக்கு உதவ மாட்டார்கள் என்று தெரிந்தவுடன் ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு உண்மையை சொல்ல தொடங்கினாள்.
Advertisement
“அது எனக்கும் மாறன் மாமாக்கும் ஒரு சின்ன பிரச்சனை. அதனால வீட்டை விட்டு கொஞ்ச நாள் வெளியே இருக்கலாம்னு நான் அந்த ஸ்கூல்ல வேலைக்கு அப்ளிகேஷன் போட்டேன். அப்பதான் ஒரு நாள் மாயாவதி பெரியம்மா, தேவகி பெரியம்மா ரெண்டு பேரும் என்ன வந்து பார்த்தாங்க. அவங்க ரெண்டு பேர் சொல்லி தான் எனக்கு அம்மா அப்பா கல்யாணம் எப்படி நடந்துச்சு தெரிஞ்சுச்சி. அம்மாவோட அப்பா அம்மா இறந்த பிறகு அனாதையா நின்ன அம்மாவை இவங்க குடும்பம் தான் எடுத்து வளர்த்துச்சின்னு சொன்னாங்க. ஆனா அந்த நன்றிய மறந்து அம்மா அவங்களுக்கு துரோகம் பண்ணதாகவும் சொன்னாங்க. அதோட அவங்களோட வாழ்க்கை இப்படி ஆனதுக்கு காரணம் என்னோட அம்மா தான் சொல்லி ரொம்ப அழுதாங்க. எனக்கு அவங்கள பார்க்க ரொம்ப பாவமா இருந்துச்சு அதனால அவங்க கிட்ட என்னோட அம்மா அப்பா சார்பாக என்னை மன்னிச்சிருங்கன்னு சொல்லி மன்னிப்பு கேட்டேன். அதோட உங்களுக்கு இப்ப நான் ஏதாவது உதவி செய்யனுமான்னு கேட்டேன். என்னா இத்தனை வருஷம் கழிச்சு என்னை வந்து பார்த்து இந்த உண்மையை சொல்ல வேண்டிய அவசியம் இல்லையே அப்படின்னு கேட்டேன். அப்பதான் அவங்க சொன்னாங்க அவங்களோட பொண்ணும் இனியா கல்யாணம் பண்ணிக்க போறவரும் ரொம்ப நாளா விரும்பினதாகவும் அவர் இவங்கள ஏமாத்திட்டு இனியாவ கல்யாணம் பண்ண போறதாகவும் சொல்லி அழுதாங்க அதனால நான் கொஞ்ச நாள் வெளியே இருந்தா என்ன மாதிரி வேஷம் போட்டு அவங்களோட பொண்ணு நம்ம வீட்டுக்குள் வந்து இந்த கல்யாணத்தை எப்படியாவது நிறுத்தி அவங்க ரெண்டு பேரும் கல்யாணம் பண்ணிடுவாங்கனு சொல்லி என்கிட்ட ஹெல்ப் கேட்டாங்க. நான் அப்போ இருந்த மனநிலையில எதுவும் யோசிக்காம சரின்னு சொல்லி கிளம்பி போயிட்டேன். அதுக்கு அப்புறம் என்னோட இடத்துல யாழினி இந்த வீட்டுக்குள்ள வந்து இருக்காங்க. அதுக்கப்புறம் நடந்தது தான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே” என்றவள்
Advertisement
“அம்மா சாரிமா உன்ன நான் ரொம்ப தப்பா நினைச்சுட்டேன் அப்பா நீங்களும் என்னை மன்னிச்சிருங்க ” என்று சொல்லி தனது அன்னையின் கையை பிடித்து அழுது மன்னிப்பு கேட்டாள் அமிழ்தினி.
“விடுடா இதான் நடக்கணும்னு இருந்திருக்கு யாரால மாத்த முடியும். நீ அழாத டா இதுல உன்னோட தப்பு எதுவும் இல்ல. நான் சொல்லி இருக்கணும் என்னோட அப்பா அம்மா பத்தி எங்களோட கல்யாண பத்தி எல்லாம் நான் உங்க ரெண்டு பேர்க்கிட்டையும் சொல்லி வளர்த்திருக்கணும் என்னோட தப்பு தான் எல்லாம் உன்னை குறை சொல்ல முடியாது டா அதனால அழாத” என்று மகளின் கண்ணைத் துடைத்து தன்னோடு அணைத்து கொண்டார் பிரபாவதி.
“உன்னோட அம்மா சொன்னது கரெக்ட் தான் நீ அழாதே நாங்க தான் உன்ன எல்லாம் சொல்லி வளர்த்திருக்கணும்” என்று மகளின் தலையை தடவி சொன்னார் பழனி முருகன்.
Advertisement
“அதெல்லாம் சரி எப்படி நீங்க அமிழ்தினிய கண்டுபிடிச்சீங்க அத சொல்லவே இல்லையே” என்றான் இன்பா
“அது மேடம் வேலை பார்த்தது அவங்க அம்மா நடக்குற ஸ்கூல் அது மேடத்துக்கு தெரியல போல அதனால அங்கே போய் வேலைக்கு சேர்ந்து இருக்காங்க” என்றான் மாறன் நக்கலாக
“என்ன பிரபாவதி அத்தை ஸ்கூல் நடத்துறாங்களா இத யாருமே சொல்லவே இல்லையே” என்றான் இன்பா ஆச்சரியமாக
மற்றவர்களும் அதே நினைப்பில் பிரபாவதி ஆச்சரியமாக பார்த்தனர்.
“ஆமா அத்தை இந்த வீட்டுக்கு தெரியாம அவங்க பேர்ல உள்ள ஷேர்ச வைத்து ஒரு ஸ்கூல் நடத்துறாங்க. அந்த ஸ்கூல்ல கஷ்டப்படுற பிள்ளைகளுக்கு எல்லாமே இலவசம் தான்” என்றான் தனது வருங்கால மாமியாரை பார்த்து பெருமையுடன் இளமாறன்
“என்ன எல்லாரும் ஆச்சரியமா பாக்குறீங்க. பிரபாவுக்கு இதெல்லாம் கால் தூசி இன்னும் நிறைய செய்யணும்னு ஆசைப்படுறா ஆனா காசு தான் பிரச்சனை” என்றார் ஈஸ்வரி
“உனக்கு எப்படி ஈஸ்வரி இதெல்லாம் தெரியும். என்னோட வீட்டுக்காரர் கூட இதெல்லாம் தெரியாது உனக்கு எப்படி இதெல்லாம் தெரிய வந்துச்சி” என்றாள் ஆச்சரியமாக பிரபாவதி
“அதுவா உன்னோட ஸ்கூலுக்கு மெயின் பவுண்டரை நான் தான் என்ன புரியலையா இஆர் அதாவது ஈஸ்வரி ரங்கராஜன் அது நான்தான்”
“ஈசு உண்மையாக இது நீதானா” என்று கையை அவள் பிடித்துக் கொண்டு, “நான் உன்னை மறந்தாலும் நீ என்னை மறக்காம எல்லா விஷயத்தையும் என் கூடவே நின்று இருக்க ரொம்ப தேங்க்ஸ் டி” என்றாள் நெகிழ்ச்சியுடன்
“விடுடி நம்ம இதெல்லாம் சின்ன வயசுல பேசுனது தானே நீ எப்படியும் பண்ணுவனு தெரியும் அதான் உன்ன பத்தி விசாரிச்சேன் அதுல தெரிய வந்துச்சு. அப்பதான் நீ அத நடத்த காசு இல்லாம கஷ்டப்பட்டுறனு தெரிஞ்சிச்சி அதான் ஒரு பவுண்டரை நான் உள்ள வந்தேன்” என்றவரை பெருமையுடன் பார்த்த பிரபாவதி, “ உன்ன மாதிரி ஒரு உண்மையான பிரண்ட் கிடைக்க நான் உண்மையிலேயே கொடுத்து வச்சிருக்கணும்” என்றார் நெகிழ்ச்சியுடன்
இதுவரை இருவரின் நடை உடை பாவனை பார்த்து வில்லி என நினைத்துக் கொண்டிருந்த அனைவரும் இருவரையும் ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“ஏய் நீ இப்ப நடக்குற பிரச்சனைய மாத்தாத. இதெல்லாம் நம்ம அப்புறமா பார்த்துக்குவோம். இப்ப விஷயத்துக்கு வாங்க”என்று அனைவரையும் இப்போது நடக்கும் பிரச்சனைக்கு கொண்டு வந்தவரை பார்த்து, “ அம்மா அம்மா ப்ளீஸ் மா ஒரே ஒரு டவுட்டு அது மட்டும் கேட்டுக்குறேன்” என்றான் இன்பா
“ சரி கேட்டு தொலை” என்றார் கடுப்புடன் ஈஸ்வரி
“அது ஒன்னும் இல்ல அவங்க அத்தை ஸ்கூல்ல வேலை பார்த்து இருக்காங்க அப்புறம் எப்படி அத்தைக்கு அது தெரியாம போச்சு”
“அது தம்பி நான் அவ்வளவா அந்த ஸ்கூல்ல விஷயத்தில் தலையிட மாட்டேன். அங்க நடக்கிறது எல்லாம் அந்த ஸ்கூல் ஓட பிரின்ஸ்பல் தான் பாத்துக்குவாங்க. நான் வருஷத்துக்கு இரண்டு தடவை மட்டும்தான் போய் பார்ப்பேன். இந்த வருஷம் இன்னும் நான் அந்த ஸ்கூல்ல போய் என்ன நடக்கும்னு பார்க்கவே இல்லை” என்றார் பிரபாவதி.
“ஓ சரி அத்தை ஆனா மாறன்னா உங்களுக்கு எப்படி இவங்க அங்க இருக்கிறது தெரிஞ்சுச்சு”
“அது கவின் தான் அத்தை ஸ்கூல்ல நடத்துறது தெரிஞ்ச உடனே அங்க நேர்ல போய் பார்த்தான். அப்பதான் மேடம் அங்கு இருக்கிறது தெரிஞ்சுச்சு”
“அத்தை அந்த ஸ்கூல்ல நடத்துறது யார் சொன்னது”
“வேற யார் சொல்லி இருப்பா எல்லாம் அம்மா தான் அவங்க சொல்லித்தான் அத்த அந்த ஸ்கூலுக்கு நடத்துறது தெரிஞ்சிச்சி உடனே நாங்க அங்க போய் விசாரிச்சு பாக்கலாம்னு சொல்லி போனோம். அப்பதான் அங்க இவங்க இருக்கிற தெரிஞ்சுச்சு” என்றான் அமிழ்தினியை காட்டி கவின்
“சரி உன்னோட டவுட் எல்லாம் தீர்ந்துட்டுனா நான் இப்பவும் பேசலாமா” என்றார் ஈஸ்வரி.
“ எல்லா டவுட்டும் கிளியர் ஆயிட்டுமா நீங்க இப்ப உங்க டவுட்டை கேட்டு கிளியர் பண்ணிக்கங்க” என நக்கலாக சொன்னான் இன்பா.
அவனை முறைத்துப் பார்த்துவிட்டு அமிழ்தினி பார்த்து கையை காட்டி, “இவ சொல்றத பார்த்தா யாழினி நீ இன்பா தான கல்யாணம் பண்ணி இருக்கணும் ஆனா ஏன் கவின் மேல ஒரு பழியை போட்டு அவனை கல்யாணம் பண்ண” என்றார் ஈஸ்வரி யாழினியை பார்த்து .
அவர் கேட்ட கேள்விக்கு எந்த பதிலும் சொல்லாமல் எதையோ வெறித்து பார்த்துக் கொண்டு நின்றவளை பார்த்து, “அத நான் சொல்றன் மா அவ ஏன் இன்பாவ கல்யாணம் பண்ணலனா. அவளும் நானும் லவ் பண்ணிக்கிட்டு இருந்தோம். இங்க வர்ற வரைக்கும் அவளுக்கு தெரியாது கல்யாண மாப்பிள்ளை தம்பி நான் தானு.அவ வந்தது இந்த கல்யாணத்தை நிறுத்த தானே தவிர இன்பாவ கல்யாணம் பண்ணிக்க இல்ல. ஆனா அங்க என்ன பார்த்த உடனே எல்லாத்தையும் அப்படியே மாத்தி என்ன அவ கல்யாணம் பண்ணிட்டா” என்றான் கூலாக கவின்
“ஓ எல்லாம் ஓகே தான் ஆனா அந்த குழந்தை அது உண்மையிலேயே உன்னோடதானா” என்றார் சந்தேகமாக ஈஸ்வரி
அதுவரை எங்கேயோ வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தவள் இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்லப் போகிறாய் என்று அவனை பார்த்தாள்.
அவனும் அவள் கண்ணையே பார்த்துக் கொண்டு, “அம்மா என் லவ்வர் வயித்துல வளர குழந்தை என்னோட குழந்தையா இல்லாம வேற யாரோடதா இருக்கும். உன் பையன் என்ன ஆம்பள இல்லன்னு நினைச்சியா. இல்ல யாரோட குழந்தைக்கோ இன்சியல் குடுக்குற அளவுக்கு மகாத்மானு நினைச்சியா. இல்ல தப்பான பொண்ண லவ் பண்ற அளவுக்கு அறிவில்லாதவன் நெனச்சியா. இந்த குழந்தைக்கு அப்பா நான் கவித்தமிழரசன், அம்மா இவ கவியாழினி தான். இந்த குழந்தை எப்படி வந்துச்சுன்னு எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தெரிஞ்சா போதும் சரியா. இதுல இனி இங்க இருக்கிற யாருக்கும் எந்தவித டவுட்டும் வரக்கூடாது ஓகேயா” என்றான் அழுத்தமாக அனைவரையும் பார்த்துக் கொண்டு
அவன் சொல்லி முடிக்கும் வரை அவனை பார்த்துக் கொண்டு இருந்தவள் அப்படியே கண்ணை மூடி சரிய தொடங்கியவளை, “ஏய் அமி” என்று சொல்லி தாங்கிக் கொண்டான் இன்பா.
“கவி” என்று வந்த கவின் அவளைத் தனது மடியில் தாங்கி, “ஏய் கவி…கவிமா இங்க பாருடா என்ன கண்ணா முழிச்சு பாருடா” என்று அவர் கன்னத்தில் பலமாக தட்டினான்.
அதற்குள் தண்ணீர் எடுத்து வந்த இனியா, “கவின் இங்க பாருங்க இந்த தண்ணியா அவ முகத்துல நல்லா போர்ஸா அடிங்க” என்று சொல்லி அவனிடம் கொடுத்தாள்.
அதனை வாங்கி வேகமாக அவள் முகத்தில் அடித்த கவின் கன்னத்தில் அடித்து அவளை எழுப்பினான். ஆனால் அவளிடம் எந்தவித உணர்வும் இல்லாததால், “டேய் கவின் அவள தூக்குடா நான் போய் கார எடுக்கேன் அப்படியே நம்ம ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருவோம்” என்ற இன்பா வேகமாக காரினை எடுக்கச் சென்றான்.
“ சரிடா. இனியா என் கூட கொஞ்சம் வாங்க ” என்று சொல்லி அவளை தூக்கிக்கொண்டு வெளி வாசலுக்கு சென்றான்.
“ சீக்கிரம் வா டா” என்று சொல்லி காரின் கதவினை திறந்து விட்டான் சதீஷ்.
உள்ளே ஏறி அமர்ந்த கவின் டிரைவர் சீட்டிலிருந்து இன்பாவை பார்த்து, “சீக்கிரம் போடா” என்று வேகமாக போக சொன்னான்.”சரிடா” என்ற இன்பா கையில் கார் பறந்தது.
“ஐயோ பெத்தவங்க செஞ்ச பாவம் எல்லாம் பிள்ளைகள தானே பிடிக்கும்னு சொல்லுவாங்க ஐயோ என் பொண்ணு என்ன கஷ்டப்படுறா. கடவுளே என் பொண்ண எப்படியாவது காப்பாத்து” என்று தரையில் அமர்ந்து தலையில் அடித்துக் கொண்டு அழத் தொடங்கினார் பாண்டியன்.
“மாமா அப்படிலாம் சொல்லாதீங்க உங்க பொண்ணு நல்லா வருவா பாருங்க” என்றாள் ஆறுதலாக பிரபாவதி
“அம்மாடி பிரபாவதி என் பொண்டாட்டியால நீ நிறைய கஷ்டத்தை அனுபவிச்சி இருக்கேன்னு எனக்கு தெரியும். அந்தக் கோபத்துல தயவு செஞ்சு என் பொண்ண சபித்துடாதமா. அவ பாவம் அவளுக்கு ஒண்ணுமே தெரியாது எல்லாம் அந்த பாவிங்க தான் பண்ணது. அதுக்கு தண்டனையா அவளுக ரெண்டு பேரு இப்ப ஜெயில்ல இருக்காங்க. அதனால இந்த வீட்ல இருக்கிற எல்லாரும் தயவு செஞ்சு என் பொண்ண மட்டும் எந்த விதத்திலும் சாபம் கொடுத்துறாதீங்க” என்றார் அழுகையுடன்
“மாமா ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க. இனிமேல் அப்படி எல்லாம் பேசாதீங்க. கண்டிப்பா இந்த வீட்ல இருக்க யாரும் யாழினிக்கு எந்த சாபமும் குடுக்க மாட்டாங்க. அதனால இப்படி பேசாதீங்க மாமா”
“ஆமாப்பா பாண்டியா இனிமே அப்படி எல்லாம் பேசாத. யாரும் உன் பொண்ண தப்பா நினைக்கல. நீ கண்ண தொடைச்சிட்டு எழுந்து வா போய் உன் பொண்ணுக்கு என்ன ஆச்சு நம்ம பாத்துட்டு வருவோம்” என்றார் மயில்வாகனார்.
அதில் தெளிந்த பாண்டியன் தனது கண்களை துடைத்துக் கொண்டு,“ஆமாம் மாமா வாங்க எல்லாரும் போய் பாத்துட்டு வருவோம்” என்று சொல்லி அனைவரும் வேகமாக கிளம்பி ஹாஸ்பிடல் சென்றனர்.
error: Content is protected !!