Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 4

இதோ.. இதோ.. என் பல்லவி



Advertisement

 அத்தியாயம் – 4

Advertisement

Advertisement

   விக்ரம்  நடந்து  கொண்டதை  அவளால்  நம்ப  முடிய வில்லை.

கடைசியில்  இவனும்  இப்படி  நடந்து  கொண்டானே, என்று  படுக்கையில்  புரண்டு ,புரண்டு  படுத்தவள்.

Advertisement

நான்  ஏன் விக்ரம் ஜித்தின்  கண்களை  பார்த்து  தலையாட்டினேன், ஐயோ…

என்னை பத்தி என்ன  நினைத்திருப்பார். இனிமே  அவர்  பக்கம்  கூட, திரும்ப  கூடாதுபா.

ஆளை மயக்கும்  கண் அவனோடது. அதிலும் அந்த சிரிப்பு  ஐயோ டா, சரியான ஆள் மயக்கி என்று  அவனை திட்டியவள்.

என்னையவே  ஒரு நிமிசத்துல  கண்ணால மயக்கி  தலையாட்ட வச்சுட்டான்.

அவர்  செய்த  உதவிக்கு  வாச் வாங்கி  குடுத்தாச்சு, பதிலுக்கு, பதில். முடிஞ்சது, முடிஞ்சு போச்சு.

இனிமே  நோ விக்ரம், நோ விக்ரம் என்று மனதில்   சொன்னவள், தூங்கிரு பல்லவி என்று படுத்தாள்.

அவளின் மொபைலில் இருந்து  மெசேஜ்  வந்ததற்கு கான சத்தம் வந்தது, பல்லவி எடுத்து பார்த்தாள்.

விக்ரமிடமிருந்து  ஒரு  வாய்ஸ் மெசேஜ்  போல  வந்திருந்தது.

அதை  ஆன் பண்ணி  கேட்டாள், அதில்  விக்ரம்  இதோ.. இதோ.. என் பல்லவி  என்று பாடலை  ஒரு நிமிடம் பாடி  அனுப்பி  இருந்தான்.

போச்சு ஆரம்பிச்சுட்டாரு போல  என்றவள்,  போனை  சைலன்டில் போட்டு  தூங்கிவிட.

மறுநாள்  காலையில் எழுந்து  வேலைக்கு  ரெடியாகி  செல்லும்  பொழுது  போனை  ஆன்  பண்ணி பார்க்க, அவளின்  தாய் பைரவியிடம்  இருந்து  ஏகப்பட்ட அழைப்பு  இருந்தது.

 உடனே  பைரவிக்கு  போனில் அழைத்தாள்.

” ஏன்டி  போன் போட்டா எடுக்க மாட்டீயா? “.

“மா போனை  சைலண்டில் போட்டு  நைட்டு   தூங்கிடேன்மா, இப்போ  தான் மா ஆன்  பண்ணிணேன்.”

”  சரி, சரி  பிறந்த  நாள் அதுவுமா  என்க்கிட்ட  திட்டு வாங்குற என்றவர், பிறந்த நாள்  வாழ்த்துக்கள் பல்லவி என்றார்.

பிறந்த  நாளா? ஆமாம் இன்னைக்கு அக்டோபர் 13  ல மறந்தே  போயிட்டேன்ம்மா.

“வெளியே  போயி பார் “என்றார்.

 அவள்  வெளியே  வந்து  பார்க்க  பெரிய  பார்சல்  அவள்  வீட்டு வாசலில் இருந்தது.

“இது என்னம்மா”?.

” அது உனக்கு தான்,  நானும்  உன் அக்கா ஜோதியும்  சேர்ந்து உனக்கு  பிறந்த நாளுக்காக வாங்கிய  சேலை. சுடிதார்  ஸ்வீட் எல்லாம் இருக்கு இனிப்பை சாப்பிடு, நான் உனக்க பச்சை  கலர் பட்டு புடவை எடுத்து, ஜாக்கெட்டையும் தச்சு அனுப்பி இருக்கேன். அத இன்னைக்கு கட்டிக்கோ. “

  ” சரிம்மா “.

“அப்புறம் பக்கத்துல உள்ள கோவிலுக்கு  போயிட்டு வா, இந்த அப்பா பேசுறாங்க”..

 ”  பல்லவிமா” என்றார் செல்லத்துரை.

  “அப்பா”.

“எப்படிடா இருக்க”?.

”  நல்லா இருக்கேன் பா, “

  “பார்சல்   சரியா வந்துருச்சா.”?

“உம்..  வந்துருச்சுப்பா “?..

”  பிறந்தா நாள் வாழ்த்துக்கள் டா. “

” தாங்ஸ்ப்பா என்றாள். “

 “மகளை வாழ்க வளமுடன்,  என்றவர் அப்பா விடியோ கால் பண்ணுறேன்டா, அக்கா பேசுனுமாம்.”

 ”  சரிப்பா என்றவள்,  எல்லாரிடமும்  விடியோ  காலில்  பேசி முடித்து விட்டு”, அப்படி சோபாவில் படுத்திருந்தாள்.

வீட்டின்  ஞாபகம் அவளுக்கு அதிகமாக  வந்தது.

சென்ற வருடம்  அவளின் பிறந்த நாளை கொண்டாடியதை, நினைத்து  பார்த்தவளுக்கு, தன் குடும்பதோடு  இருக்க வேண்டும் என்று ஆசை வர.

நான் இங்கே  வந்தே இருக்க கூடாது, இன்னும் ஒரு வருடம், ஆறு மாதம் இருக்கிறது, எப்படி தனியே  இருப்பேன் என்று நினைத்த படியே  படுத்து இருந்தவள்.

 அவளின்  அக்கா,  பிறந்த நாளுக்காக  அவளுக்காக  வாங்கிய   புடவையை   கட்டி, போட்டோ எடுத்து அனுப்பு மாறு சொல்லி இருக்க.

கண்களை துடைத்தவள், வேலைக்கு  செல்வதற்கு நேரமாவதால்  மூஞ்சை கழுவி விட்டு, புடவையை மாற்றி, அங்கே  இருந்த ஒரு சிறிய சிவன்  படத்தின்  முன் வணங்கியவள்.

போனில் அவளை சில போட்டோக்களை  எடுத்து, அவளின் அம்மா பைரவிக்கும், அக்கா ஜோதிக்கும் போட்டோவை அனுப்பி வைத்து விட்டு.

புடவையின்  மேல் ஒரு சர்கின்னை போட்டு கொண்டவள்  வேலைக்கு  செல்ல வெளியில்  வந்தாள், சித்தப்பா வீட்டை பார்க்க, வீடு பூட்டி இருந்தது. சித்தப்பா ஊரில் இல்லை என்று இவளுக்கு தெரியும். சித்தி, ஐஸ்வர்யா, ஜான், எங்கே என்று தெரிய வில்லை, சொல்லவும்  மாட்டார்கள், நமக்கு எதற்கு,

 உறவுகளோடு  இருந்தவளுக்கு ஏதோ இங்கே  வந்ததில் இருந்து தனிமையாக இருப்பது போல் தோன்றியது. தனக்கு  லண்டனில் ,  சித்தப்பா, சித்தி, எனக்கு ஒரு தம்பி, தங்கை  இருக்கிறார்கள்  அவர்களோடு  இருக்கலாம் என்று வந்தவளுக்கு ஏமாற்றமே, அவர்கள் இவளை  ஒரு சக மனிஷியாக கூட பார்க்க வில்லை. ஏதோ தீண்ட தகாதவள் போல் பார்க்க இவளே விலகி விட்டாள்.

தனக்கு நேரில்  பிறந்தநாள் வாழ்த்து சொல்ல  கூட யாருமில்லை என்று புலம்பிய படியே,  ரெயில்வே டேஷன் நோக்கி நடந்து கொண்டு இருக்கும் போது  பல்லவியின் போன் ஒலித்தது.

கையில் பேக் வைத்திருந்ததால் , போனில்  யார் என்று பார்க்காமல், போனை ஆன் பண்ணி

“ஹலோ” என்று காதில் வைக்க.

 ”  பல்லவி” என்றான் விக்ரம் ஜித்.

இவள் மறுபடியும்  “ஹலோ ”  என்க.

”  நான் விக்ரம்  பல்லவி  பின்னாடி  பாரு என்றான்”.

அவளோ  பின்னாடி பார்க்க, அவனின்  கார்  மெல்ல  அவளை நோக்கி  வந்துக் கொண்டு இருந்தது.

” சொல்லுங்க சார்”. என்றாள்.

”  ஒரு 5  நிமிசம் உன்கிட்ட  பேசனும்  பல்லவி  என்கூட வா” என்றான்.

 ” காரில் எல்லாம் வரமுடியாது சார்”    போன்லே  சொல்லுங்க.

”  இதை நேர்ல  தான்  சொல்லனும் வா பல்லவி  ஒரு 5  நிமிசம் தான்”.

  “இல்லை சார்”.

 “அவனின்  பிலீஸ் பல்லவி என்ற கெஞ்சலில்”.

” வர்ரேன்  சார் ” என்றாள்.

மனதில் அவர் என்ன சொன்னாலும், ஸ்டெடியா இருக்கனும், அவர் கண்ணை பார்த்து பேசாதே, ஆள்  மயக்கி, என்று  மனதில் புலம்பிய படியே காரின் அருகே வந்தவள், ” சொல்லுங்க சார்”என்றாள்.

” காரில் ஏறு பல்லவி”.

‘பராவாயில்லை இங்கேயே சொல்லுங்க சார்” என்றாள்.

” காரில் ஏற முடியுமா, முடியாதா”?.  என்றான் குரல்  உயர்த்தி.

அதில் பயந்தவள், ” வேலைக்கு  போகனும்  சார் இங்கேயே சொல்லுங்க ட்ரெயினுக்கு  டைம்மாச்சு”.

”  நான் உன்னை  ஆபீஸ்சில்  டிராப்  பண்ணுறேன் வா” என்றான்.

அவளோ அவன் சொல்லை தட்ட முடியாமல் காரில் ஏற.

”  தாங்யூ  பல்லவி ” என்றவன்.

 கார்   இயக்க சிறிது நேரத்தில் கார் செல்லும் வழியை பார்த்தவள்.

 ” சார்   என் ஆபிஸ் அந்த பக்கம்  இருக்கு,  நீங்க  ஆப்போசிட்  பக்கம் போறீங்க.

“கொஞ்சம் நேரம் அமைதியா வா பல்லவி”.

இவன் வேற ” சார்  நீங்க  5  நிமிசம் தானே  பேசுவேன்னு சொன்னீங்க, இப்போ நான் காரில் ஏறி அரை மணி நேரம் ஆகுது. “

 “கொஞ்சம்  நேரம்  சும்மா வர்ரீயா,  லொட, லொடயின்னு  பேசிட்டே வர, காது வலிக்குது பல்லவி ”  என்றான்.

 “நான்   பேசுறது  உங்களுக்கு காது வலிக்குத”.

“ஆமாம் ” என்றான்.

 அவளோ மூஞ்சை  தூக்கி  வைத்துக்கொண்டு காரில்  அமைதியாக வர.

 அவன் காரை நிருத்திய இடத்தில், ஒரு பெரிய  சிவன் கோவில்  இருந்தது.

 காரில்  இருந்தே பார்த்தவள்.

 “சிவன்  கோவில”  என்றாள்.

” ஆமாம் என்று தலையாட்டியவன்  காரின் கதவை திறந்து விட்டு  வெளியே வா, உனக்கு பிடிச்ச சிவன், சிவன் கோவில்  உன்னுடைய  பிறந்த நாளுக்கு, என்னுடைய  சிறிய  பரிசு,” என்றான்.

”  உங்களுக்கு எப்படி தெரியும்”.

” போலிஸ்  ஸ்டேஷனில்  உன்  ஐ, டி  கார்டை  பார்த்தேன். “

 ”  தாங்யூ சார் என்றவள், நீங்க  கோவில்  வர்ரீங்களா? “.

 ”  நான் வரல பல்லவி  நீயே போயிட்டு வா, எனக்கு  ஒரு கால்  பண்ணனும், நீ போ உன் சிவாவை பார்த்துட்டு வா என்று சிரிக்க. “

” சார்  வாங்க” என்றாள்.

 ” நீ  போம்மா  எனக்கு நம்பிக்கை இல்ல, உன்  விருப்பத்தை,  நான் நோ சொல்ல மாட்டேன் போ, என்று அவளின் கன்னம் தட்டி சொல்ல. “

 ” சரி” என்றவள் ,  சந்தோஷமாக கோவிலின் உள்ளே  சென்று  சிவனை  ஆசை தீர பார்த்து விட்டு, திருநீர் பிரசாதம் வாங்கி வந்தாள்.

விக்ரம் ஜித் காரின்  உள்ளே இருந்த படியே போன் பேசிக்கொண்டே  இருந்தவன். இவள்  வந்ததை  பார்த்து, காரின் கதவை  உள்ளிருந்தபடியே  திறந்துவிட.

காரின்  உள்ளே  ஏறி அமர்ந்தவள், விக்ரமனை பார்க்க, ” 2  மினிட்ஸ்  என்று  போன்   பேசிக்கொண்டே இருந்தவனிடம்.

திருநீரை  நீட்டினாள்.

அவனோ வேண்டாம்  என்று தலையாட்ட.

” ஏன் வேண்டாம் என்று கேட்க. “

  சைகையில்  வேண்டாம்  பல்லவி  என்றான்.

 பல்லவி  அவனை    பார்த்து முறைத்து, அவனின்  நெத்தில்  திருநீரை  வைத்து விட்டு, கண்ணீல்  திருநீர்  விழாமல்  இருக்க, அவன்  நெத்தில் ஊதி விட்டாள்.

போன் பேசிக்கொண்டே  இவள்  செய்வதை  ரசித்தவன்.

 சரி ஓகே நாளைக்கு கால் பண்ணுறேன் என்று போனை வைத்தான்.

”  என்ன பல்லவி மேடம்  ஹாப்பிய”  என்றான்.

” உம்… ஹாப்பி சார், அது என்ன?  என்னை  மேடமுன்னு  கூப்பிடுறீங்க”.

”  யாரோ  சொன்னாங்க  எனக்கு  மேடம்  வருவாங்கன்னு  அது தான், நீங்க  தானா என் மேடம்”  என்றான்.

”  சார் ”  என்றாள் சத்தமாக.

”  என்ன பல்லவி? “.

”  இந்த  மாதிரியெல்லாம் பேசாதீங்க  சார்”.

”  வேற  எப்படி  பேசனும்  சொல்லு, உனக்கு பிடிச்ச  மாதிரி  பேசுறேன்.”

”  சார்  நான் நேரடியா  உங்க கிட்ட கேட்குறேன், “.

” சொல்லு. “

” நீங்க, நீங்க  என்னை  விரும்புறீங்களா, ஐ மீன் லவ் பண்ணுறீங்களா?. “

” இப்போ வாச்சும்  கேட்டீயே “. என்றவன். அவளின் கைகளை  பிடித்துக்கொண்டு ஐ லவ் யூ பல்லவி  நாம  இரண்டு பேரும்  கல்யாணம் பண்ணிக்கலாமா?”.

”  ஐயோ! சார்,…சார் இப்படி எல்லாம்  பேசாதீங்க, நான் உங்களை அப்படி நினைக்கல”.

 “வேற  எப்படி நினைக்குற”.

” அத சொல்ல தெரியல  சார். ஆன  இந்த லவ் எல்லாம் வேண்டாம் சார், நாம  பிரெண்டாவே  இருப்போம். “

” சரி  பல்லவி, நீ பிரெண்டாவே  இரு, நான் உன்னை லவ் பண்றேன் , நாம கல்யாணம் பண்ணிக்கலாம். “

”  சார் ஏன்? சார் இப்படி பேசுறீங்க. “

“இங்கே  பாரு பல்லவி  உனக்கு  என்னை  பிடிக்குமா, பிடிக்காத”?.

” பிடிக்கும் “.

” அப்பறம் என்ன?  பிடிச்சுருக்குல  மத்தது எல்லாம் தானா  நடக்கும். “

”  எங்க வீட்டுல  இந்த  லவ்யெல்லாம் ஏத்துக்க  மாட்டாங்க. “

” யாரு வீட்டுல  தான்  லவ்வ சொன்னா ஏத்துப்பாங்க, நாம  தான் அவங்களுக்கு  சொல்லி  புரிய  வைக்கனும். “

” சார்  நீங்க  நினைக்குற  மாதிரியெல்லாம்  இல்ல, எங்க வீடு,  எங்க அம்மா  கிட்ட  நான் வாக்கு குடுத்து இருக்கேன், அவங்க  சொல்லுற  பையன  தான், நான் கல்யாணம் பண்ணுவேன்னு, சோ  வேண்டாம்  சார், இந்த  லவ்  எல்லாம், உங்கள எனக்கு பிடிக்கும்  நாம  கடைசி  வரைக்கும்  பிரெண்டாவே  இருக்கலாம். “

” ஒ  நீ உங்க  அம்மா கிட்ட வாக்கு குடுத்து இருக்க, அவங்க  சொல்லுற பையன  கல்யாணம் பண்ணுறதா  அப்படி தானே”.

” ஆமாம் சார்”.

 ”  சோ  சிம்பில்” என்றான்.

”  என்ன சிம்பில்”   என்றாள்.

”  நானே  உங்க அம்மா  சொல்லுற  பையன்னா  இருந்த, உனக்கு  ஓகே  தானே. “

”  அது  எப்படி  சார் நடக்கும் “.

”  எல்லாம் நடக்கும் பல்லவி சும்மா பயப்படாத,  நான் என்னவோ, ஏதோன்னு  பயந்துட்டேன், உனக்கு ஊரில் பெரிய மீசை வச்ச,முறை பையன்  இருப்பான்,  அவனிடம்  சண்டை  போட்டு ஜெயிச்சு தான், உன் கழுத்தில் தாலி  கட்டனுமுன்னு, உங்க  அம்மா  தானே,  நான்  சம்மதம்  வாங்குறேன், வேற ஏதாவது  பிரச்சனை இருக்கா”? என்றான்.

”  உங்களுக்கு   நான் சொன்னா புரியாது என்று கண்கலங்கியவளை”.

”  என்ன  பல்லவி?   எதுக்கு இப்படி கண்கலங்குற, உன் அம்மா, உன்னை  தப்பா நினைப்பாங்கன்னா. “

” ஆமாம் “என்று தலையாட்டியவளை.

”  அப்போ  நான் வேண்டாம  உனக்கு” என்றான், அதற்கு  மௌனமாகவே  இருக்க.

 “பேசு பல்லவி”  என்றான்.

அவள் பேசாமல்  அமைதியாக காரில் அமர்ந்து இருக்க.

”  சரி  இன்னைக்கு ரொம்ப பேசிட்டோம், நீ வீட்டுக்கு போய் நல்லா  யோசி என்றவன்  கார் எடுக்க.

  அமைதியாக  அமர்ந்திருந்தவளை, பார்த்து ரசித்தவன். ”  லஞ்ச் சாப்பிடலாமா பல்லவி “என்றான்.

 ” இல்ல சார் என்னையா ஆபிஸ்சில் விடுங்க, ஆப்  டே லீவ் ஆகிருச்சு,

 இப்போ வாச்சும் போகனும் கொஞ்சம் வேலையிருக்கு ” என்றவளை.

 ”   ப்பெர்த்தடே  அதுவுமா  யாரவது வேலைக்கு போவங்கள  பல்லவி,   ப்புல் டே லீவ் போடு , நான்  டின்னர் முடிச்சிட்டு உன்ன கொண்டு போய் வீட்டுல  விடுனேன்.”

  ”  என்னது டின்னரா?  என்றவள். “சார் லஞ்ச் வேனா சாப்பிடலாம் ,  டின்னர் எல்லாம்  வேண்டாம்,”  என்க.

 “முதல்ல லஞ்ச சாப்பிடுவோம் அப்புறம் டின்னர் பத்தி யோசிக்கலாம்” என்றவன்.

 அவளை ஒரு  இந்திய உணவு இருக்கும் இடத்துக்கு அழைத்து சென்றான்.

 அவளோ இவ்வளவு நேரம்  புடவையின்  மேல் ஜர்க்கினை போட்டு இருந்தவள். ஜர்க்கின்னை கழட்டி காரில் வைத்தவள், அவளின் தலை முடியையும், சேரியையும் சரி  செய்து விட்டு காரில் இருந்து வெளியில் வர.

” பல்லவியை  வா”  என்றவன். இப்போது  தான் புடவையில்  இருக்கிறாள், என்று பார்த்தவன்.

 ஏய் என்று கண்களை  விரித்தான், அவளை புடவையில்  பார்த்து.

பல்லவி அவனை பார்த்து முறைக்க.

”  சரி, சரி  நான் ஒன்னும் சொல்லல்ல, போதுமா, ”  என்றவன்.

 “வா”  என்று   ஹோட்டலின்  உள்ளே அழைத்து செல்ல.

மனதில்  அவன் தன்னை புடவையில்  பார்த்து கண்களை விரித்ததை ரசித்தவள். வெளியில் ஒன்றும் தெரியாது போல் வந்தாள்.

 அந்த ஹோட்டல்  விக்ரம் ஜித்தின்  நண்பன் கரனின் ஹோட்டல்.

இவனை பார்த்த  அவனின்  நண்பன் கரன், “வாடா ஜித் இப்போ தான்  என் ஓட்டலுக்கு வர  வழி தெரிஞ்சதா” என்றான்.

 பின்னாடி வந்த பல்லவியை  சேரில் இருந்ததை  பார்த்து,” டேய் கல்யாணம் ஆகிருச்ச  சொல்லவே இல்ல.”

”  இப்போ தான் ஆச்சு” என்றான்.

 என்ன! என்பது போல் பல்லவி பார்க்க.

”  சும்மா என்று கண்களாலே அவளை அமைதி படுத்தியவன், வா “என்று அவளை அமர சொல்ல.

”  அவளோ ஏன் போய் சொன்னீங்க”  என்றாள்.

” ஏய்  நான் எங்க பொய் சொன்னேன், எப்போனாலும்  இது நடக்கும் தானே, அது தான் சொன்னேன், சீக்கிரம் இந்தியா போய், உங்க அம்மாவா சமாதானம்  பண்ணி, நம்ம மேரேஜ் பண்ணிக்கலாம். “

”  விளையாடதீங்க  விக்ரம்” என்றாள்.

”  நான் எங்க விளையாடினேன் பல்லவி, கல்யாணத்துக்கு  அப்பறம், நம்ம  சேர்ந்து  விளையாடலாம்”.

 ”  எனக்கு லஞ்சே  வேண்டாம் ”  என்று எழுந்தவளை.

”  ஏய் பெர்த்தடே பேபி, இப்படி  கோப  படலாமா, உட்கார்ந்து சாப்பிடு  நான் பேசலை ”  என்றான்.

இருவரும்  அமைதியாக  சாப்பிட்டு  வெளிய வர, கரன்    “என்னடா   மாப்பிள்ளை  எப்போ  விருந்து வைக்க போற “?.

”  போன்  பண்ணுறேன்  வந்து சேரு” என்றான்.

” சரிடா  தங்கச்சியை பார்த்து கூட்டிட்டு போ, பாய்மா”  என்று  பல்லவியிடம் சொல்ல.

” பல்லவி   கரனிடம்  சாப்பாடு ரொம்ப நல்லா இருந்தது நா, பாய்” என்று  சொல்லி  இருவரும் சென்றனர்.

”  எங்கே போலாம் பல்லவி, உன் வீட்டுல  விடவா, இல்ல ஆபீஸ் போறீயா”.

” ஆபீஸ் போக முடியாது சார் லீவ் சொல்லிட்டேன், “என்றாள்.

 “அப்போ என் கூட வர்ரீயா, லண்டனை சுத்தி பாக்கலாம்,”  என்றான்.

அவளோ வீட்டுக்கு சென்றலும், தனியாக தான்  இருப்போம், ஆனாலும் இவர் கூட என்று யோசித்தவளை.

” அட வாம்மா ரொம்ப யோசிக்குற,”   என்றவன், அவளை காரில்  ஏற  சொல்லி வண்டியை  கிளப்பினான்.

 ”  விக்ரமிடம், ”  நான் உங்க  கூட வருவேன், ஆன ஒரு கண்டிஷன்”.

”  என்ன”?.

 ”  நீங்க  என்ன  பிரண்டா மட்டும் தான்னு நெனச்சு  என்க்கிட்ட பிகேவ்  பண்ணனும், சரியா என்றாள். “

” ஓகே  டார்லிங் “.  என்றான்.

”  இவனை  வச்சுகிட்டு ” என்றவளை.

” சத்தமா  பேசு  பல்லவி” என்றான்.

” நான்  ஒன்னும் பேசலை வண்டியை  பார்த்து ஓட்டுங்க  என்று, அமைதியாக  அவனோடு  காரில் வந்து கொண்டு இருந்தாள்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!