Skip to content
Post Views: 886
அலைவரிசை- 7
“ஏய் இனியா எரும மாடு எந்திரிடி டைம் என்ன தெரியுமா இப்பவே லேட் ஆகுது இப்ப நீ எந்திரிக்கல அவ்வளவுதான். உன்னை விட்டுட்டு நான் ஆபீஸ்க்கு கிளம்பி போயிட்டே இருப்பேன் இன்னைக்கு வேற முக்கியமான மீட்டிங் இருக்கு அதனால சீக்கிரம் வர சொன்னாங்க இப்ப நீ எந்திரிக்க போறியா இல்லையா” என கோபமாக அவளை எழுப்பி கொண்டு இருந்தாள் பூஜா.
Advertisement
“ பூஜா செல்லம் ப்ளீஸ்டா ஒரு பத்து நிமிஷம் மட்டும் தூக்குறேன் அதுக்குள்ள நீ போய் குடிச்சிட்டு வந்துரு” என கண்ணை திறக்காமல் அவளிடம் செல்லம் கொஞ்சினாள் இனியா
“ ஏய் எருமை கண்ண தொறந்து பாரு நான் எப்பவோ ரெடி ஆயிட்டேன் நீ தான் இன்னும் கிளம்பாம இருக்க. டைம் இப்பவே 8 ஆகிட்டு” என்றாள் பல்லை கடித்துக் கொண்டு பூஜா
Advertisement
Advertisement
“ என்ன” என்ன பதறி எழுந்தவள் “ துரோகி கொஞ்சம் முன்னே எழுப்பி இருக்கலாம் இல்ல போச்சி இந்த சீம்பா வேற இன்னைக்கு ரொம்ப பேசுவானே கடவுளே. ஏன் இந்த சின்ன வயசுல எனக்கு எப்படி எல்லாம் கஷ்டத்தை கொடுக்குற” என்று இரு கைகளை மேலே தூக்கி பாவமாக சொன்னாள் இனியா
“ ஏன் சொல்ல மாட்டே உன்னை ஆறு மணியில இருந்து நான் நாயா கத்தி எழுப்பிக்கிட்டு இருக்கேன் ஆனா மேடம் எரும மேல மழை பெஞ்ச மாதிரி அசையாமல் தூங்குறீங்க” என்றாள் நக்கலுடன் பூஜா.
Advertisement
“ போடி உன்னால தான் என் டைம் எல்லாம் வேஸ்ட்டா போச்சு போடி”
“ யாரு என்னாலையா! உன்னை யாருடி நைட் ஃபுல்லா அந்த லேப்டாப் உள்ளத பார்க்க சொன்னது. உன்ன மாதிரி ஒரு கேடிய நான் பார்த்ததில்லை டி. அது எப்படி உன் எக்ஸ் வீட்டுல நடக்குறத கேமரா செட் பண்ணி பார்க்க வெட்கமா இல்லையா ஒரு நாள் இல்ல ஒரு நாள் இன்பாவுக்கு தெரியதான் போகுது பாரு”
“ அட போடி அது எங்க கண்டுபிடிக்கும் இத்தனைக்கும் அது கையில் தான் அந்த கேமரா செட் பண்ண பெயிண்டிங் கொடுத்தேன். அது என்னன்னா நீ கொடுத்த கிப்ட் எப்பவும் நான் வீட்டுக்குள்ள நுழைந்த உடனே தெரியணும் சொல்லி ஹால்ல மாட்டி வச்சிருக்கு. ஆனா அவன் பண்ணுன ஒரே நல்லது அது ஹால்ல மாட்டுனது தான். அதனாலதான் நிறைய விஷயம் தெரிய வந்திருக்கு” என்றாள் தீவிரமான முகத்துடன்
“ அது சரி” என்றவள் “ ஏய் டைம் ஆகுது பாரு சீக்கிரம் கிளம்பி வா” என்று அவளை அவசரப்படுத்தினாள் பூஜா.
“ எல்லாம் உன்னால தாண்டி” என அவளை திட்டி விட்டு அவசரமாக குளிப்பதற்குக்காக உடையை எடுத்துக்கொண்டு பாத்ரூம் கதவு திறக்க
அப்போது, “ ஏய் இனியா உங்க மாமா வந்திருக்காங்கடி” என ஆர்ப்பாட்டமாக உள்ளே நுழைந்தாள் பிரியா.
“ பூஜா இந்த பிறவி பைத்தியம் காலையிலேயே அவ சைட்ட நெனச்சிட்டு என்ன புலம்புது” என அசால்டாக சொல்லி உள்ளே நுழைந்தவளை கையைப் பிடித்து இழுத்து, “ ஏய் உண்மையா உங்க மாறன் மாமா வெளிய வெயிட் பண்ணுறார் போய் பாரு” என்றாள் பிரியா
“ ஏய் லூசு மாமா அடுத்த வாரம் தான் வரேன்னு சொல்லுச்சு நீ ஏதாவது கனவு கண்டியா போடி காலையிலேயே வந்து கடுப்பேத்தாத ” என்றாள் பிரியா
“ ஓ நான் லூசா நீ போய் உன் போன்ல இருந்து அவருக்கு கால் பண்ணி பாரு”என்றாள் ரோசமாக
“ சரிடி பண்ணுறேன் அவர் மட்டும் வராம இருக்கட்டும் உனக்கு இருக்குடி” என அவளை திட்டிக்கொண்டு தன் மொபைலை எடுத்து ஆன் செய்ய அதில் மாறனிடம் இருந்து வந்த மிஸ்டுகால் மற்றும் மெசேஜ் வந்து இருந்தது.
அந்த மெசேஜை ஓபன் செய்து பார்த்தால் அதில் “வெளிய வா இனியா” என்று எழுதியிருந்தது.
“ ஏய் யாருடி என் மொபைலை சைலன்ட்ல போட்டது” என்றாள் கோபமாக
“ம் கொஞ்சம் திரும்பி பாரு அவ தான் போட்டா” என்றாள் பூஜா.
இவ யார சொல்ற என திரும்பி அங்கே இருந்த கண்ணாடியில் அவள் முகத்தை பார்த்து அசட்டு சிரிப்புடன், “ ஓ நாமதான் தான இப்ப இவளுக்களுக்கு என்ன சொல்ல” என்று வராத போனை காதில் வைத்துக் கொண்டு, “மாமா இதோ வரேன்” என்று சொல்லி வெளியே வந்து “ அப்பா தப்பிச்சிட்டோம்” என்று சொல்லி வரவேற்பு அறையில் உள்ள தனது தாய் மாமனை பார்க்க சென்றாள்.
அந்த வரவேற்பரையில் உள்ள சீட்டியில் அமராமல் கோபமாக அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்த மாறன் இவளை பார்த்தும் முறைக்க, “ ஐயோ மாமா ரொம்ப கோவமா இருக்கு போலயே சரி எப்படியும் சமாளிச்சு தான் ஆகணும் பாத்துடுவோம் நம்ம மாமா தானே” என்று சொல்லி அவன் அருகில் சென்று,
“ மாமா எப்படி இருக்க, தாத்தா பாட்டி எப்படி இருக்காங்க. எப்ப வந்த ஏன் எனக்கு சொல்லல. எனக்கு என்ன வாங்கிட்டு வந்த மாமா” என்றதில் இன்னும் கோபமாக அவளை முறைத்துக் கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து அருகிலுள்ள ஃபார்க் நோக்கி சென்றான் இளமாறன்.
அவனின் பின்னே, “ மாமா நான் கேட்டுட்டே இருக்கேன் நீ எங்க போற” என கத்திக்கொண்டு வந்தவள் அவன் பார்க்கில் நுழைவதை பார்த்ததும் அமைதியாக பின் தொடர்ந்தாள்.
பூக்களால் சூழ்ந்து இருந்த அந்த பார்க்கின் உள்ளே நுழைந்து சுற்றிலும் பார்வையை ஒட்டினான். அது காலை வேலை என்பதால் அவ்வளவாக ஆட்கள் நடமாட்டம் இல்லை அங்கே இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்து பக்கத்தில் அமரமாறு இனியாவிடம் கையை காட்டினான் இளமாறன்.
“ஓ இவர் நம்மகிட்ட வாயை திறந்து பேச மாட்டாரு சைகை தான் காட்டுவாரா”என பொறுமி கொண்டு அவன் அருகில் அமர்த்தாள்.
சிறிது நேரம் இருவரும் அமைதியாக சுற்றி உள்ள சூழலை பார்த்துக் கொண்டிருந்தனர். நொடிக்கு நூறு முறை பேசும் தனது அக்கா மகள் எதுவும் பேசாமல் அமைதியாக இருப்பது கண்டு இனியும் மௌனம் வேண்டாம் என்று மாறனை முதலில் பேசத் தொடங்கினான்.
“ நீ என்ன பண்ணிட்டு இருக்க இனியா யார கஷ்டப்படுத்த இங்க வந்து இருக்க” என்றான் அமைதியாக
“ நான் என்ன மாமா பண்றேன் என்னோட வேலைய தானே பார்த்துட்டு இருக்கேன்”
“ அப்படியா நீ ஒன்னும் பண்ணலையா” என அழுத்தமாக அவளை பார்த்துக்கொண்டு கேட்க
அவனின் அந்தப் பார்வையில் உள்ள அழுத்தத்தை தாங்க முடியாமல் இதுவரை இருந்து விளையாட்டுத்தனம் எல்லாம் போக, “மாமா” என அமர்ந்த நிலையில் அவனை கட்டிக்கொண்டு அழத் தொடங்கினாள்.
தன்னைக் கட்டிக் கொண்டு அழும் அவளை எந்தவித சமாதானமும் செய்யாமல் சிறிது நேரம் அமைதியாக அவளை அணைத்துக் கொண்டு அமர்ந்து இருந்தான். அவனுக்கு தெரியும் இந்த ஐந்து மாதமாக அதிகப்படியான மன அழுத்தத்தில் இருப்பாள் என. என்னதான் எல்லோரிடமும் விளையாட்டாக பேசி பழகி இருந்தாலும் அவளின் சோகத்தை இறக்கி வைக்கும் ஒரே இடம் அவன் தான் என்று அவனுக்கா தெரியாது. இதோ இப்போதும் அடக்கி வைத்திருந்த ஐந்து மாத அழுத்தத்தை மொத்தமாக அவன் தோளில் சாய்ந்து இறக்கி வைப்பது போல அழுது கொண்டு இருந்தவளே பார்த்து ஐந்து வயதில் அவளின் வீட்டு பக்கத்தில் உள்ள சிறுவர்கள் எல்லாம் இவள் கண்ணீரை பார்த்து சிரித்ததை கண்டு அந்த வயதிலேயே வைராக்கியமாக “மாமா இவங்க என்னோட கண்ணீரை பார்த்து சிரிக்கிறாங்க மாமா இனி இவங்க முன்னாடி நான் அழவே மாட்டேன்” என்று சொல்லி தனிமையில் தன்னிடம் மட்டும் அழுத குட்டி இனியாவாக தெரிந்தாள். அதிலிருந்து என்ன கஷ்டம் வந்தாலும் யாருக்கும் காட்டாமல் சிரித்து விளையாடி கொண்டு இருப்பவள் இவனிடம் மட்டும் தனது கண்ணீரை காட்டுவாள். இப்போது வரை அதை கடைபிடிக்கும் தனது மருமகளின் தலையே தாயாக மாறி மெல்ல வருடி அவளுக்கு ஆறுதல் சொன்னான்.
அதில் தனது கண்ணீரை கொஞ்சம் அடக்கி, “ நான் தப்பு தானா மாமா என்னால தாத்தா, அப்பா நம்ம குடும்பம் எல்லாரும் ரொம்ப கஷ்டப்படறாங்கள நான் ரொம்ப தப்பு மாமா ஏன் மாமா என்னை விட்டுட்டு போன நீ இருந்திருந்தா இப்படி ஆகி இருக்காது தானே என் மாமா என்ன விட்டுட்டு போன”என அவனை கட்டிக் கொண்டு பேசினாள்.
அவள் கேட்டதற்கு எந்த பதிலும் சொல்லாமல் தன்னோடு இன்னும் இறுக்கமாக அணைத்துக் கொண்டு இத்தனை நாட்கள் யாரிடமும் சொல்லாத அவளது சோகத்தையும், தவிப்பையும், அழுத்தத்தை எல்லாம் அவன் தோள்களில் வாங்கிக் கொண்டான்.
சிறிது நேரம் அவளை அழ விட்டு அமைதியாக இருந்தவன் அவள் இன்று முழுவதும் தன்னை விடமாட்டாள் என்று புரிந்து தன்னை விட்டு மெல்லமாக அவளை பிரித்து, “ இனிமா இங்க பாரு போதும் அழுததெல்லாம் கண்ணை துடை,போய் டிரஸ் மாத்திட்டு வா நாம ஊருக்கு போலாம்” என்றவன் கூற்றில் இதுவரை அழுது கொண்டு இருந்தவள் விழுக்கென்று நிமிர்ந்து பரிதவிக்கும் விழிகளுடன் தனது மாமனை பார்த்தாள்.
அவளின் விழிகளை பார்த்து கலங்க துடிக்கும் தனது மனதினை பிடித்து நிறுத்தி, “ என்ன பார்வை இனியா இது இந்த பிரச்சனை நடந்ததுல இருந்து நீ ஊருக்கு போகலன்னு எனக்கு தெரியும் இப்படியே ஒதுங்கி இருந்தா ஒன்னும் நடக்காது கிளம்பி வா . நாம ஒன்னும் சேர்ந்து எல்லாத்தையும் சரி பண்ணலாம்” என்றான் அவள் கையை பிடித்துக் கொண்டு கண்டிப்பாக
அதில் பாவமாக அவனைப் பார்த்துக் கொண்டு, “ப்ளீஸ் மாமா நான் வரல என்னால தாத்தா முகத்துல முழிக்க முடியாது மாமா. அதோட அம்மா அப்பா அவங்களை என்னால பேஸ் பண்ணவே முடியாது மாமா” என்றாள் கலங்கிய கண்களுடன்
“ இனிமா என்னடா இது என்னுடைய இனி குட்டிக்கு இப்படி எல்லாம் எமோஷனலாக தெரியாதே. இங்க பாருடா என்ன பாரு ஒன்னும் இல்ல இப்ப என்ன உன்னால பெரிய மாமாவுக்கு அவமானம் ஆகி போச்சி அவ்வளவுதானே. ஒன்னும் இல்லடா மாமா எப்பவுமே சிங்கம் தான். ஆனா அது எங்கே இருக்கு என்பதை பொறுத்துதான் அதோட மதிப்புடா. சிங்கம் காட்டுல இருக்கும்போது அது பக்கத்துல கூட போக பயப்படுவோம். ஆனா அதுவே ஜூ(zoo) உள்ள இருந்தா அத பக்கத்துல போய் பிடிச்சு பார்த்து வம்பு பண்ண தானே தோணும். அதே மாதிரி தான் இதுவும். இப்ப எல்லாம் இந்த சமூகத்துல பெரிய மனுஷனா இருக்கணும்னா அவங்க நல்லவங்களா இருக்காங்களான்னு தேவையே கிடையாது. அவங்க பேர்ல சொத்து இருக்கணும், பெரிய வீடு இருக்கணும், கார் இருக்கணும், அது இருந்தா மட்டும் போதும். இப்ப எல்லாம் சாமி கூட நிறைய காசு கொடுத்து உள்ள போய் பார்க்கிற சாமிக்கு தான் சக்தி அதிகம் நம்புற உலகம்டா இது. இங்கே பணத்துக்கு இருக்கிற பவர் வேற எதுக்கும் இல்ல. உங்கிட்ட பணம் நிறைய இருக்கா அப்ப நீ சொல்றதெல்லாம் உண்மைதான் உன்கிட்ட பணம் இல்லையா நீ சொல்றதெல்லாம் பொய் தான். இங்க நாம சொல்றதை காது கொடுத்து கேட்கவே பணம்தான் தேவை என்கிறப்போ அத வச்சி இருக்குற நம்ம ஏண்டா அது மறைக்கணும். இங்க மாமாக்கு நடந்ததுக்கு நம்ம பதிலுக்கு என்ன செய்யப் போறோம். நீ கெளம்பி வா. இங்க பேசினவங்க நம்ம ஊருக்கு வந்து அதே வாயால உன் தாத்தாவை புகழ்றத கேட்க வேணாமா உனக்கு. இல்ல வரமாட்டேனா ஒன்னும் பிரச்சனை இல்ல அவங்கள அப்படியே உன் வாழ்க்கையில் இருந்து ஓரம் கட்டிட்டு, நாங்க பார்த்து வச்சிருக்க பையன கல்யாணம் பண்ணிட்டு சந்தோஷமா வாழு” என்றவனை அதிர்ச்சியுடன் பார்த்தாள்.
“ என்ன பாக்குற ஒன்னு கிளம்பி வா சரி பண்ணலாம். இல்ல முடியாதுன்னா இன்பாவ மறந்துட்டு நாங்க பாக்குற பையன்னு கல்யாணம் பண்ணு” என்றான் கடுமையாக இளமாறன்.
“ என்ன மாமா சொல்ற நான் இன்பாவ மறந்துட்டு இன்னொருத்தனை ச்சி சொல்லகூட கூசுது இப்ப என்ன நான் ஊருக்கு வரணும் அவ்வளவுதானே இதோ போய் ஒரு அரை மணி நேரத்துல கிளம்பி வரேன் அதை விட்டுட்டு ஆகாத போகாத கதை எல்லாம் பேசாதே கொஞ்சம் அழுதா போதுமே உடனே வந்துருவாங்க கருத்து சொல்ல” என பொறுமி கொண்டு சென்றாள் இனியா.
போகும் அவளைப் பார்த்துக் கொண்டு, “ஒன்ன தெளிய வெச்சாச்சு நெக்ஸ்ட் அவன் தான்” என்றான் இளமாறன்.
இங்கே தனது கேபினில் இருந்து அடிக்கடி தனது வாட்சில் மணி பார்த்துக் கொண்டு கண்ணாடிக்கு வெளியே எட்டி பார்த்து, “ டைம் வேற ஆகுது இந்த மெண்டல் வராம என்னதான் பண்ணுதோ” என புலம்பிக்கொண்டு இருந்தவன் அருகில் ரிங்கான தனது மொபைலில் எடுத்துப் பார்த்து, “ ஹலோ அண்ணா எப்படி இருக்கீங்க, எப்போ ஊருக்கு வரீங்கனா” என்றவன் அடுத்து மறுமுனையில் இருந்தவர் சொன்ன வார்த்தையில், “சரினா நான் இதோ வரேன்” என்று சொல்லி அவசரமாக ஆபீசை விட்டு வெளியே வந்து எதிரே உள்ள காபி ஷாப் நோக்கி சென்றான் இன்பா.
அந்த காபி ஷாப் உள்ளே நுழைந்து தான் பார்க்க வந்தவரை தேட, “ இன்பா இங்க பாரு இதோ இங்க இருக்கேன் வா” என எழுந்து நின்று கையை காட்டி தனது அருகில் அழைத்தான் இளமாறன்.
அவனைப் பார்த்ததும் சந்தோஷமாக போய் “அண்ணா” என்று சொல்லி அவனை இறுக்கமாக அணைத்து கொண்டான்.
“ ரொம்ப மிஸ் பண்ணுனேன் அண்ணா உங்கள” என்றான் கண் கலங்க
அதில் நெகிழ்ந்தவன் அவன் தோளில் தட்டி, “என்னடா சின்ன குழந்தை மாதிரி பண்ற” என்று தன்னிலிருந்து விலக செய்து எதிரில் உள்ள சீட்டில் அமர சொன்னான் இருவருக்கும் காபி ஆர்டர் செய்துவிட்டு, “ சரி சொல்லு நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து என்ன பண்ணி வச்சிருக்கீங்க” என்றான் கண்டிப்புடன்
“ சாரினா ஃபர்ஸ்ட் ஆஃப் ஆல் அம்மா அப்படி எல்லாம் பேசுவாங்க நான் எதிர்பார்க்கல. வேற என்ன சொல்ல என்னால பிரச்சனை சரியா ஹேண்டில் பண்ண முடியல. முடியலன்னு சொல்றத விட தெரியலன்னு சொல்லணும்” என்றான் நடந்த மொத்தமும் தன்னால்தான் என்பது போல குற்ற உணர்ச்சியுடன்
“ம் என்ன சொல்ல உன்னால கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் ஹேண்டில் பண்ண தெரிஞ்ச அளவுக்கு உறவுகளை ஹேண்டில் பண்ண தெரியல. சரி அத விடு இப்ப இதை எப்படி சரி பண்ண போற”
“ தெரியல அண்ணா நான் என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியல. இனியா ஒரு பக்கம் பேசாம கொல்றா அம்மா ஒரு பக்கம் பேசியே கொல்றாங்க இதுல அமிழ்தினி வேற வயித்துல புள்ளையோட எப்பவும் சோகமா இருக்கா அவள பாத்துக்க வேண்டியவன் எந்த கவலையும் இல்லாம ஊர் சுத்துறான் அவனோட எல்லா கடமையும் நான் செய்யவேண்டியதா இருக்கு அவனால எப்பவும் எனக்கு பிரச்சனை மட்டும் தான். இப்படி சுத்தி இருக்கிற யாரும் என்ன புரிஞ்சுக்காம இருந்தா என்னால எப்படின்னா ப்ராப்ளத்தை சால்வ் பண்ண முடியும்” என்றான் நொந்து போனவனாக
“ஓ நீ புரிஞ்சுகிட்டியா உன்னை சுத்தி இருக்கிறவங்கள” என்கவும் அவனை நிமிர்ந்து பார்த்தவனை, “என்னடா புரியலையா நீ புரிஞ்சுகிட்டியா இனியா ஏன் உன்னோட பேசாம இருக்கான்னு, உன் அம்மா ஏன் திட்றாங்கன்னு, உன் தம்பி ஏன் வீட்டுக்கு வராம சுத்துறான்னு”என்று கேட்க
குழப்பத்துடன் தெரியலை என தலையை இடவலமாக ஆட்டினான். அதில் புன்னகைத்தவன், “இன்பா நீ ஃபர்ஸ்ட் உன் தம்பிகிட்ட பேசு என்ன நடந்ததுன்னு கேளு. நீ சொல்லு உன் தம்பி இப்படி ஒரு தப்ப பண்ணியிருப்பான் உனக்கு தோணுதா அப்படியே பண்ணி இருந்தாலும் அவனோட பொறுப்புல இருந்து விலகி ஓடுவான் தோணுதா”
அதில் யோசனையுடன், “இல்லனா சின்ன வயசுல இருந்து அவன் மேல ஒரு குறை யாரும் சொல்ல கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பான். அவன் எடுத்து செய்ற எந்த ஒரு வேலையும் ஒரு குறை சொல்ல முடியாது. இன்னும் தெளிவா சொல்லணும்னா நான் தான் தப்பு தப்பா பண்ணி அடி வாங்குவேன். ஃபர்ஸ்ட் இப்படி ஒரு தப்பு அவன் பண்ணுனான்னு சொன்னத என்னால நம்ப முடியல ஆனா சொன்னது அமிழ்தினி என்கிறதாலதான் நான் நம்புனேன்”
“ அதேதான் அமிழ்தினி உனக்கு யாரு. எத்தனை வருஷமா அவள தெரியும் உனக்கு. அவள நம்புற உன் கூடவே வளர்ந்தவனை உன்னால நம்ப முடியல அப்படித்தானே”
“ இல்லனா அது வந்து” என இழுத்தவன் அடுத்து பேச தெரியாது தவிப்புடன் பார்த்தான்.
“ இங்கு பாரு இன்பா நீ உன் தம்பி தான் சப்போர்ட் பண்ணி இருக்கணும். எல்லாரும் தப்பா பேசும்போது நம்ம அண்ணன் நமக்கு துணையா நிப்பான் அவன் நம்பியிருப்பான். ஆனா நீ அத அந்த நம்பிக்கையை உடைச்சிட இன்னும் தெளிவாக சொல்லனும்னா நீ உன் தம்பியை இழந்துட்ட இனியா மேல நீ வச்சிருக்க காதல் உன் தம்பி மேல நீ வச்சிருக்க பாசத்தை மறைச்சிட்டு இங்க கற்பு விஷயத்துல பொண்ணுங்க பொய் சொல்ல மாட்டாங்கன்னு சொல்லி சொல்லியே ஆம்பளைக்கும் கற்புனு ஒண்ணு இருக்கு எங்குறத மறந்துட்டாங்க. நீ ஒரு முறையாவது உன் தம்பிகிட்ட பேசுனியா என்ன நடந்ததுன்னு கேட்டியா”
குற்றியுணர்ச்சியுடன் தலை குனிந்து இல்லை என்பது போல் தலைய அசைத்தான்.
“ம்” என பெருமூச்சு விட்டு “ ரைட் நீ முதல்ல அவன் கிட்ட பேசு அப்புறம் பாரு உன் பிரச்சனைக்கு ஒரு வழி கிடைக்கும்” என்றவன் “ சொல்ல மறந்துட்டேன் நான் இனியாவ கூட்டிட்டு எங்க ஊருக்கு போறேன்” அதில் அதிர்ச்சியுடன் தலைதூக்கி அவனை பார்த்து, “ஆனா அண்ணா இனியா வேலை” என்றான் திணறலுடன்
“அது ஒன்னும் பிரச்சனை இல்ல ஃஒர்க் ப்ரம் ஹோம் வாங்கிக்கலாம்” என்றான் கூலாக
“ஓ சரினா” என்றவனை மேலும் பேச விடாமல் வெய்ட்டர் வைத்து சென்ற காப்பியை எடுத்து பருகி அவனையும் பருக சொன்னான்.
“ஆங் அப்புறம் நெஸ்ட் வீக் எங்க ஊருல திருவிழா இருக்கு அதுக்கு உன்னோட ஃபேமிலுள்ள எல்லாரையும் கூட்டிட்டு வா அங்க வச்சு மத்தது பேசிக்கலாம்” என்று அவனை பேசி விடாமல் எழுந்து நின்று, “சரிடா பாய் நெஸ்ட் வீக் பாக்கலாம்” என்று சொல்லி சென்றான் இளமாறன்.
அவன் சொன்னது எல்லாம் கேட்டு தீபக், “அப்புறம் என்னடா அதான் அண்ணா ஒரு வழி காட்டிட்டு தானே போயிருக்கிறார். நீ எல்லார்க்கிட்டயும் பேசி ஊருக்கு கூட்டிட்டு போக வேண்டியது தானே”
“ டேய் புரியாம பேசாதடா என் அம்மா எப்படி அந்த வீட்டுக்கு கூட்டிட்டு போக முடியும்”
“ ஏன்டா என்ன பிரச்சனை அம்மா ஏன் வரமாட்டாங்க”
“ம் அம்மாவோட பிரண்ட் ஹம் எலிமி. அங்க தானே இருக்காங்க அதோடு என்னால கவின் கிட்டயும் பேச முடியல டா” என்றான் குற்றவுணர்ச்சியுடன்
“ அவன் உன் தம்பி தான அவன் கிட்ட என்னடா ஈகோ போய் மன்னிப்பு கேளு. ஆமா இப்ப அவன் எங்க இருக்கான்”
“ தெரியல டா அவன் எங்க இருக்கான் என்ன பண்றான் ஒன்னும் தெரியல டா” என்றான் கவலையுடன்
“ சரி விடுடா ஆமா உங்க அம்மாவோட ப்ரண்ட் ஹம் எனிமி யாருடா அது”
“ அதுதாண்டா அமிழ்தினி அம்மா என்னோட சின்ன மாமியார் தி கிரேட் பிரபாவதி அம்மையார் தான்” என்றான் கடுப்புடன் இன்பதமிழரசன்.
error: Content is protected !!