Skip to content
Post Views: 788
அலைவரிசை 9
துளி சத்தம் கூட இல்லாத அந்த அறையில் முகத்தில் எந்தவித உணர்வு இல்லாமல் மருந்தின் விளைவால் அமைதியாக உறங்கிக் கொண்டிருக்கும் அவளின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தான் கவின்.இன்னும் அவனால் நம்பமுடியவில்லை இந்த குழந்தை முகத்திற்கு பின்னால் உள்ள அந்த முகத்தை.அதில் உள்ள கெட்ட எண்ணங்களை.
Advertisement
கண்களோ அவளை பார்த்து கொண்டிருக்க காதுகளில் இப்போதும் அவளின் அந்த வார்த்தைகள் கேட்டு கொண்டே இருந்தது.
“மிஸ் யூ லாட் தமிழ். எங்க கூடவே இருங்க ப்ளீஸ் விட்டுட்டு போகாதீங்க. லவ் யூ சோ மச் தமிழ்”என்ற அவளின் வார்த்தைகள் அவனை அசைக்கத் தான் செய்தது. இருந்தும் மனதை இறுக்கமாக பிடித்து கொண்டான்.
அவளையே பார்த்து கொண்டுயிருந்தவன் ஒரு பெருமூச்சியுடன், “யார் டி நீ, ஏன் எனக்காக இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்த. நான் உன்ன பாத்தது கூட இல்ல. பட் இருந்தாலும் என் லைப்ப மாத்துற அதிகாரம் உனக்கு யார் கொடுத்தது. உன்ன எனக்கு புடிச்சி இருக்கு தான் ஆனா உன்னால அவ்வளவு சீக்கிரமா என் காதலை வாங்க முடியாது டி. நீ இது வர பண்ணுன எல்லாம் போதும் இனி நான் நினைக்கிறது மட்டும் தான் நடக்கும். இப்ப தான் ரியல் கேம் ஸ்டார்ட் ஆக போகுது மிசஸ் கவி” என்றவன்
Advertisement
Advertisement
அவளின் புடவையை சிறிது நகர்த்தி விட்டு அவள் மணி வயிற்றில் இருக்கும் தனது திசுவிற்கு முத்தம் வைத்து, “இன்னும் கொஞ்ச நாள் தான் டா நீங்க அப்பாகிட்ட வந்துருவீங்க. நீங்க வந்த பிறகு அப்பா உங்களை பாதுகாப்பாக பார்த்துக்கிறேன்டா. அதுவரைக்கும் அம்மாக்கு எந்த தொல்லையும் கொடுக்காமல் உள்ள இருங்க. சரி செல்லம் நீங்க தூங்குங்க. நீங்க வெளியே வர்றதுக்குள்ள அப்பா எல்லாத்தையும் சரி பண்ணி விடுறேன் ” என்றவனுக்கு தனது உடலை அசைத்து சரி என சொல்லினான் அவனின் புதல்வன். அதில் சிலிர்த்தவன் மறுபடியும் ஒரு முத்தம் வைத்துவிட்டு அவளின் சேலையை சரி செய்து விட்டு வெளியே வந்தான். அங்கே பதட்டமான முகத்துடன் இருந்த அன்னை அருகில் சென்று அமர்ந்தான்.
தன் பக்கத்தில் அமர்ந்தவனை பார்த்து கண் கலங்க, “கவின் ரொம்ப பயந்துட்டேன் டா. நல்லவேளை நீ வந்த இல்லனா நான் என்ன பண்ணியிருப்பேன் கூட தெரியலடா. ஏதாவது ஒண்ணுக்கடக்க ஒன்னு ஆயிருந்தா என்னை நானே மன்னித்து இருக்க மாட்டேன் டா” என்றார் நடுங்கும் விரல்களுடன் ஈஸ்வரி.
Advertisement
பயத்தில் நடுங்கும் அவரின் கைகளை இறுக்கமாக பிடித்துக் கொண்டு, “அம்மா இங்கே பாருங்க ஒன்றும் இல்லை. அவ நல்லா தான் இருக்கா. இதுக்கு காரணம் நீங்க இல்ல ப்ரீயா ஆகுங்க”என்றான்
“ இல்லப்பா நான் பேசுனதுல அவளுக்கு ஏதாவது ஆகி இருந்தா இல்ல வயிதுல இருக்க குழந்தைக்கு ஏதாவது இருந்தா” என்றார் பயத்துடன்
“ அம்மா ஒன்னும் ஆகல அவங்க ரெண்டு பேரும் நல்லா தான் இருக்காங்க. நீங்க இப்படியே யோசிச்சுகிட்டு உங்களுக்கு ஏதாவது ஆகிற போகுது கொஞ்சம் நார்மலா இருங்க. நான் உங்களுக்கு குடிக்க தண்ணி ஏதாவது வாங்கிட்டு வரேன் இங்கேயே இருங்க” என்று சொல்லி அந்த ஹாஸ்பிடல் கேண்டினுக்கு சென்றான்.
அதுவரை அமைதியாக அங்கே நின்று கொண்டிருந்த அவன் நண்பன் சதீஷ் அவனை பின் தொடர்ந்து சென்றான்.
“ டேய் என்னடா நம்ம ஒன்னு நெனச்சிட்டு வந்தா இங்க ஒன்னு நடக்குது”
“ம் அதான் நானும் நெனச்சேன் சரிவிடு பாத்துக்கலாம்”என்று இருவரும் அந்த கேண்டின் உள்ளே நுழைந்து காலியாக இருந்த இடத்தை அமர்ந்தனர்.
“ சரி மச்சான் ஃபர்ஸ்ட் இப்ப என்ன பண்ண போற”
“ இளமாறன் அண்ணனுக்கு போன் பண்ணி இவளோட சொந்தத்தை எல்லாம் இங்க வர சொல்லணும். அது கூட நாம சொல்ல வேண்டாம் என்னோட உடன்பிறப்பு ஒருத்தன் இருக்கானே அவன் அப்பவே சொல்லி இருப்பான். சோ அவங்க வந்துட்டு இருப்பாங்க.அவங்க வந்த பிறகுதான் நம்ம அடுத்த கேம் ஸ்டார்ட் பண்ணனும். அதுக்கு முன்னாடி அண்ணி கிட்ட கொஞ்சம் பேச வேண்டியது இருக்கு அவங்க கிட்ட பேசிட்டு தான் நெஸ்ட் நம்ம ஸ்டெப் எடுத்து வைக்கணும்” என்றான் யோசனையுடன் கவின்.
“ சரிடா இதெல்லாம் அவங்க வந்த பிறகு பாத்துக்கலாம். இப்போ முதல்ல காபி வாங்கிட்டு போய் அம்மாக்கிட்ட கொடுக்கணும். இந்த பிரச்சினையால பாவம் அம்மா தான் ரொம்ப கஷ்டப்படுறாங்க டா” என்றான் வருத்தமுடன்
அதற்கு எதுவும் சொல்லாமல் அவனின் முகத்தையே ஆழமாக பார்த்துக் கொண்டிருந்தான் சதிஷ் .
“ ஏன் டா இப்படி பாக்குற”
“ இல்ல அம்மா மட்டும்தான் கஷ்டப்படுறாங்க வேற யாரும் கஷ்டப்படலையா” என்றான் அவன் முகத்தை ஆழமாக பார்த்துக் கொண்டு
“ என்னடா போட்டு வாங்கிறாயா? நீ என்ன சொல்ல நினைக்குறேயோ அத நேரா சொல்லுடா அத விட்டுட்டு சுத்தி வளைக்காத என்ன” என்றான் கடுப்புடன் கவின்
“ சரிடா டென்ஷன் ஆகாத நான் நேராவே கேட்டுறேன் உங்க அம்மா தவிர இதுல வேற யாரும் கஷ்டப்படவில்லையா. சரிடா முறைக்காத இந்த பிரச்சனையால உன் ஒய்ப்பும் தானே கஷ்டப்படுறாங்க அதைத்தான் நான் கேட்கிறேன் அவங்கள பார்த்தா உனக்கு பாவமா தெரியலையா. அவங்க மேல உனக்கு பீலிங்ஸ் இல்லையாடா”
“ பீலிங்ஸ்.. ஃபீலிங்ஸ் தானே நிறைய இருக்கு இப்ப கூட அவ வயித்துல என் குழந்தை இல்லன்னா அவளை கொல்றதுக்கு கூட என்கிட்ட ஃபீலிங்ஸ் இருக்குடா. என்னடா அப்படி பாக்குற நான் உண்மையா தான் சொல்றேன். இவங்களுக்கும் அவங்களுக்கும் ஏதோ பிரச்சனை சரி ஓகே. அதை பத்தி நான் பேச விரும்பல. ஆனா எந்த தப்பும் செய்யாத என்னையும் என் குடும்பத்தையும் ஏன் இதுக்கு நடுவுல கொண்டு வந்தாங்க. இவ என்னை உண்மையா லவ் பண்றா.எனக்காக எந்த பெண்ணும் செய்ய துணியாத ஒரு விஷயத்தை பண்ணி இருக்கா ஓகே டா. ஆனா எனக்கு அவளை பத்தி ஒண்ணுமே தெரியாது. இன்ஃபெக்ட் அவளை நான் பார்த்தது கூட கிடையாது அப்படி இருக்கும் போது என்ன அவ எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்திடா. உண்மையை லவ் பண்ற எந்த பொண்ணும் தன்னோட காதலன இவ்ளோ அசிங்கப்படுத்த முடியாதுடா எவ்வளவு பெரிய பாவத்தை என் மேல அவ போட்டா. அதெல்லாம் எப்படி என்னால மறக்க முடியும். இப்ப கூட பாரு அவ பண்ண எல்லாத்துக்கும் என்கிட்ட ஆதாரம் இருக்கு. ஆனால் அதை வைத்து என்ன செய்ய முடியும். அவள ஒரு பர்சன்டேஜ் கூட என்னால தண்டிக்க முடியாது. அப்புறம் அவ வயிதுல இருக்குதே என்னோட குழந்தை அதுக்கு எவ்வளவு பெரிய அசிங்கத்தை தேடி தந்துட்டா. ஒருவேளை இது என்னோட குழந்தை இல்லன்னு பிரச்சனை பண்ணி இவள நான் கல்யாணம் பண்ணாம இருந்தா என்னோட பேபி நிலைமை என்ன டா கொஞ்சம் யோசிச்சு பாரு. அப்பா பேரு தெரியாம இந்த சமூகத்தில் அவனால வாழ முடியுமாடா. அப்படி என்னடா பழி வெறி இவளுக்கு. அவளோட முகம்….அந்த முகம் கூட உண்மையா பொய்யா எனக்கு தெரியலைடா. என்னோட வாழனும்னா நிறைய படிகளை தாண்டி தான் வரணும். பாக்கலாம் அவளால எல்லா படியும் தாண்ட முடியுதான்னு அதுக்கு அப்புறம் நான் சொல்றேன் டா அவமேல ஃபீலிங்ஸ் இருக்கா இல்லையா” என்று சொன்னான்.
“ சரிடா மச்சி பீல் பண்ணாத இது வரைக்கும் எத்தனையோ பார்த்துடோம் இதையும் சேர்த்து பார்த்துடுவோம்”
“ சரிடா வா நாம ரூம்க்கு போவோம் அம்மா நம்மள தேடிட்டு இருப்பாங்க” என்று சொல்லி தன் தாய்க்கு காபி ஒன்றை வாங்கிக் கொண்டு அவளை வைத்திருந்த ப்ளோருக்கு சென்றான் கவின்.
அங்கே தாயின் கையில் பிடித்து பக்கத்தில் அமர்ந்து இருந்தவனை பார்த்ததும் இவனுக்கு பிபி கூடியது. உடனே வேகமாக அவரை நெருங்கி, “ அம்மா இங்க பாருங்க இந்த காப்பிய முதல்ல குடிங்க அப்ப தான் நீங்க கொஞ்சம் நார்மல் ஆக முடியும்” என்று அவரின் அருகே அமர்ந்திருந்தவனை சிறிதும் கண்டு கொள்ளாமல் தனது தாயிடம் மட்டும் பேசினான்.
இவனைப் பார்த்ததும் மலர்ந்த முகத்துடன், “கவின் எப்படா வந்த நீ வந்திருக்கிறத பத்தி யாருமே என்கிட்ட சொல்லவே இல்ல. பேச்சியக்கா சொல்லித்தான் அமிழ்தினிக்கு இப்படி ஆனது எனக்கு தெரியும்டா. அம்மா கூட சொல்லவே இல்ல அத தான் அம்மாகிட்ட கேட்டு இருந்தேன்” என்று எழுந்து அவன் கையை பிடித்து அணைக்க சென்றவனை கை வைத்து தடுத்து நிறுத்தி அவன் பிடித்து இருந்த தனது கைகளை விலக்கி விட்டான் கவின்.
அதில் அதிர்ந்து போய் அவனின் முகத்தை பார்க்க, “என்னடா பாக்குற நீ ஆரம்பித்துவிட்டது தான் எப்போ உனக்கு என் மேல நம்பிக்கை இல்லைனு என் முகத்துக்கு நேரா சொல்லிட்டியோ. அப்பவே நமக்குள்ள இருந்த எல்லா உறவும் முடிஞ்சு போச்சு”.
“ டேய் சாரி டா அப்ப நான் என்ன மைண்ட் செட்டில இருந்தேன்னு எனக்கே தெரியல எல்லாரும் ஒன்னா தப்பு சொல்லவும் நானும் அப்படியே தப்புன்னு நினைச்சுட்டேன் டா சாரி டா”என்றான் கெஞ்சலுடன்
“ சாரி உன்னோட இந்த சாரியால நான் பட்ட அவமானத்தை எல்லாம் திருப்பித் தர முடியுமா. டேய் ஊராயிரம் சொல்லட்டும் ஏன் நம்மளை சுத்தி இருக்கிறவங்க கூட சொல்லட்டும். ஆனா என்ன உனக்கு தெரியாதா. உன் கூடவே தானடா இருந்தேன் எல்லா பேரும் இந்த மண்ணுல கால் வைத்த பிறகுதான் துணையாய் இருப்பாங்க. ஆனா நான் உனக்கு இந்த உலகத்துக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்து துணையாக இருந்தவன்டா. யார் என்ன சொன்னாலும் நீ தானடா எனக்கு துணையாக இருக்கனும். நான் தப்பே பண்ணி இருந்தாலும் நீ எனக்கு துணை நிற்க வேண்டாமா” என்றான் ஆத்திரமாக.
அவன் கோபத்திற்கும் காரணம் இருந்தது இருவரும் ஒரே வயிற்றில் ஒன்றாகவே இருந்து ஒன்றாகவே சில மணித்துளிகள் வேறுபாட்டில் இந்த உலகிற்கு வந்த இரட்டையர்கள். இருவரின் முக அமைப்பு, சிந்தனை, செயல், பேச்சு வழக்கம் எல்லாம் வேறு வேறு தான்.அவன் (இன்பா) பேசுவதற்கு இனிமையானவன் எந்த முடிவையும் ஆழ்ந்து ஆராயாமல் நொடியில் எடுக்கக்கூடியவன். ஆனால் இவனிடம் (கவின்) எப்போதும் ஒரு திமிர் இருக்கும். அதனால் இவனிடம் பேசுவது கடினம். எந்த ஒரு முடிவையும் ஆழ்ந்து யோசித்து எடுக்கக் கூடியவன். மொத்தத்தில் சொன்னால் அவன் அன்பானவன். இவன் அழுத்தமானவன்.
“ சொல்லுடா ஏன் அமைதியா இருக்க சொல்லு என்ன உனக்கு தெரியாது அப்படி இருக்கும்போது யாரென்ன சொன்னாலும் என்னை நம்பனும்ல நீ. எப்படிடா உன்னால மனசாட்சி இல்லாம என்ன பத்தி அப்படியே நினைக்க முடிஞ்சிச்சி சொல்லுடா” என்றான் கோபமாக கவின்.
“ டேய் ப்ளீஸ் டா சாரிடா ஏதோ புத்தி இல்லாம நான் அப்படி பண்ணிட்டேன்டா நான் உன்னை நம்புறேன்டா இப்போ”
“ டூ லேட் பிரதர் உன்னோட தம்பியை நீ தொலைச்சிட்ட தேடு நல்லா தேடு எப்பவாது உனக்கு கிடைக்கானா பார்ப்போம்” என்றவன் தனது தாயின் முகத்தைப் பார்த்தான்.
error: Content is protected !!