Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காற்றின் அலைவரிசை கேட்கிறதா

KAK 9 2

அவரோ தனது இரு மகன்களில் யாருக்காக பேச என்று தெரியாமல் இருவரின் முகத்தையும் பரிதவிப்புடன் பார்த்துக் கொண்டு இருந்தார். அவரின் முகத்தை பார்த்தே இப்போதைய அவரின் கவலையே தெரிந்த கொண்டவன்.

 “ அம்மா எல்லா பிரச்சனையும் சரி ஆகிடும் நீங்க பீல் பண்ணாதீங்க இப்ப இந்த காப்பிய குடிச்சிட்டு  இருங்க. டாக்டர் வந்தாங்களா. ஏதாவது சொன்னாங்களா ”



Advertisement

“ ஆமாப்பா வந்தாங்க ஆனா ஒன்னும் சொல்லல. அவ கண்ணு முழிச்ச பிறகு வந்து ஒரு தடவை பார்த்துட்டு சொல்லுறேன்னு சொன்னாங்க”

“ ஓகே மா நீங்க இங்கேயே இருங்க நான் கொஞ்சம் வெளியே போயிட்டு வரேன்” என்று தனது அண்ணனை சிறிது கூட கண்டுகொள்ளாமல் தனது நண்பனை கூட்டிக்கொண்டு வெளியே சென்றான்.

Advertisement

Advertisement

 போகும் அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவன் தனது தாயிடம் திரும்பி, “ அம்மா நீயாவது கொஞ்சம் அவன் கிட்ட சொல்லலாம் தானே” என்றான் சோர்வாக

“ என்னடா சொல்ல சொல்ற. உனக்கு எப்படி அவன் மேல கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லாம போச்சி. அவன பத்தி எனக்கு தெரியாது எல்லாம் கூட உனக்கு தெரியும் தானே அப்படி இருக்கும்போது அவன் இப்படி ஒரு தப்ப பண்ணிட்டு அதுக்கு பொறுப்பேற்காமல் இருப்பானா. கொஞ்சம் கூட யோசிச்சி பேச மாட்டியா டா எத்தனை தடவை நான் உனக்கு சொல்லி இருக்கேன் வார்த்தையை விடாதனு. அப்படி என்னடா உனக்கு காதல். எங்க மேல உள்ள பாசமெல்லாம் மறையுற அளவுக்கா இருக்கு உன் காதல்” என்றார் வெறுப்பாக ஈஸ்வரி.

Advertisement

 அவருக்கு எந்த பதிலும் சொல்ல முடியாமல் குற்றயுணர்ச்சியுடன் கண் கலங்கி  தலை குனிந்து நின்றான் இன்பா.   தன் முன் தலை குனிந்து நிற்கும் தனது மகனை பார்த்துவிட்டு பெருமூச்சுடன் மீண்டும் அந்த இருக்கையில் அமர்ந்து காப்பினை குடிக்க தொடங்கினார் ஈஸ்வரி.

 அதே நேரம் வெளியே சென்றவனோ கண்கலங்கி நிற்க சதீஷ் அவனின் தோளில் கை வைக்க திரும்பி அவன் அணைத்துக் கொண்டான் கவின்.

“ விடுடா மச்சான் பீல் பண்ணாத பாத்துக்கலாம் என்ன இருந்தாலும் நம்ம இன்பா தானடா பெரிய மனசு பண்ணி மன்னிச்சிருடா. அவன பாக்க கஷ்டமா இருக்கு. அவன பத்தி உனக்கு தெரியாதாடா” என்று சமாதானம் செய்தான் சதீஷ்.

“ சரிடா அத பிறகு பார்க்கலாம். இப்ப நம்ம நெஸ்ட் செய்ய வேண்டிய வேலைய பாப்போம் வா” என்று அவனைக் கூட்டிக் கொண்டு எங்கேயோ சென்றான் கவின்.

@@@@@@@@@

“ ஐயோ இந்த கொடுமைய கேட்க யாருமே இல்லையா. என் பொண்ணு என்ன அனாதையா. கல்யாணம் முடிஞ்ச நாளிலிருந்து அவளை மறு வீட்டுக்கு தான் கூப்பிடவே இல்லை இன்னைக்கு உடம்பு சரியில்லன்னு ஹாஸ்பிடல் சேர்த்து இருக்காங்க. அதைக்கூட பெத்தவ எனக்கு யாருமே சொல்லல என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க நீங்க எல்லாம். என்னையும் என் பொண்ணையும் பார்த்தா உங்க எல்லாத்துக்கும் எப்படி தெரியுது” என நடுவீட்டிலிருந்து கத்திக்கொண்டு இருந்தாள் பிரபாவதி.

“ ஏய் என்ன உன் பிரச்சனை எதுக்கு இப்போ நடு வீட்டுல நின்னு கத்திட்டு இருக்க” என்று வந்தார் அவளின் கணவர் செந்தில் முருகன்.

“ வாயா உன்ன தான் தேடிட்டு இருந்தேன். நீ ஒழுங்கா இருந்தா நானும் என் பொண்ணும் ஏன் இப்படி இருக்க போறோம்”

“ ஏய் என்ன விஷயம் நேரா சொல்லு அத விட்டுட்டு தேவையில்லாத பேசிட்டு இருக்காத. அப்படித்தான் பேசுவனா இன்னைக்கு என்கிட்ட நல்லா அரை வாங்கிட்டு போக போற பாரு”

“ஓ அடிக்க வேற செய்வியா. எங்க அடி பாப்போம் என் மேல கை வச்ச அடுத்த செகண்ட் நீ உள்ளே இருப்பயா”

“ என்ன என்னை தூக்கி உள்ள போடுவியா அப்படி  என்ன உன்னை பண்னேன்னு என்னை தூக்கி உள்ள வைப்பேன்னு சொல்ற டி. உனக்கெல்லாம் கொடுக்க வேண்டியத அப்பவே கொடுத்திருந்தா இப்படி என் எதுக்க நீ பேசுவியா” என்றார் ஆத்திரமாக

 “ஓ அப்படி போகுதா சங்கதி ஏற்கனவே ஒருத்தியை ஹாஸ்பிடலுக்கு கொண்டு போய் வச்சாச்சி. அடுத்து என்ன அனுப்ப பிளான் பண்றீங்களா எல்லாரும் சேர்ந்து”

“ என்னடி உளறுற  யார கொண்டு போய் இப்ப ஹாஸ்பிடல்ல வெச்சி இருக்கு”

“ம் பெத்து பொண்ணு ஹாஸ்பிடல் வச்சிருக்கறது கூட உனக்கு தெரியல நீ எல்லாம் ஒரு அப்பா வெளியே போய் சொல்லிராத”

“ என்னடி சொல்ற மெண்டல் மாதிரியே ஏதாவது கனவு கண்டுட்டு பேசுறியா உனக்கு யார் சொன்னா அமிழ்தினிய ஹாஸ்பிடல் வச்சிருக்கணு”

“ எனக்கு எப்படி தெரியும் நானே ஒரு அனாதை என்கிட்ட யாராவது  சொல்லுவாங்களா. இந்த அனாதை வயித்துல பிறந்ததால அவளும் எப்படி இருக்களோ. இப்பதான் உங்க அப்பாவும் அம்மாவும் பேசிட்டு இருந்தத கேட்டேன் அப்போதான் எனக்கே தெரியும். அவள பெத்தவதானா நான் எனக்கு சொல்ல வேண்டாமா. சரி அத விடு என்னதான் கெட்டவன்னு சொல்லி இந்த வீட்டுல இருந்து தள்ளி வைச்சிட்டிங்க. ஆனா நீ இந்த வீட்ல உள்ள எல்லார் கூடவும் பேச தானே செய்வ உனக்கு கூடவா சொல்லனும் யாருக்கும் தோணல” என்றாள் ஆதங்கமாக பிரபாவதி.

“ தேவையில்லாமல் பேசாத பிரபா இரு நான் அப்பாகிட்ட போய் கேட்டு வரேன்” என்று அவரின் தந்தை அறைக்கு போக திரும்பியவரை நிறுத்தி, “ நான் இப்படி நடு வீட்டில் இருந்து நாய் மாறி கத்துறது உங்க வீட்ல உள்ள ஆட்களுக்கு கேட்காதுன்னு நினைக்கிறீங்களா? அப்படி கேட்டுமே நம்மளுக்கு யாரும் பதில் சொல்லனா.  நீங்க போய் கேட்டா மட்டும் என்ன சொல்வாங்கனு நினைக்கிறீங்க”

“ போதும் நிறுத்துடி இது வாயா வேற என்னதா என்ன பேச்சு பேசுற. நடு வீட்ல நின்னு நாய் மாதிரி கத்திக்கிட்டு இருந்தா யார் தான் பதில் சொல்லுவாங்க . நாங்க ரெண்டு பேரும் பேசினத நீ கேட்ட தானே அப்ப நீ என்ன பண்ணி இருக்கணும் எங்க கிட்ட வந்து என்ன நடந்துச்சுன்னு கேட்டிருக்கனுமா வேண்டாமா அதை விட்டுட்டு உன் இஷ்டத்துக்கு கத்துக்கிட்டு இருந்தா உனக்கு பதில் சொல்வாங்களா” என்றார் கோபமாக வள்ளியம்மை.

“ இப்ப என்ன நடந்து போச்சினு  இந்த கத்து கத்துற  உன் பொண்ணு மாசமா இருந்தா மயக்கம் வராதா என்ன லேசா தல சுத்துதுன்னு ஹாஸ்பிடல் சேர்த்து இருக்காங்க அதுக்கு போய் இந்த கத்து கத்துற. என்னவோ உன் கிட்ட சொல்லல சொல்லலைன்னு சொல்றியே இவ்வளவு நேரம் நீ எங்க போயிருந்த  வீட்ல இருந்தியா. இப்பதான் வீட்டுக்குள்ளேயே வர அப்போ இனிதான உங்க கிட்ட நாங்க சொல்ல முடியும். அப்புறம் நீயும் இப்பதான் வீட்டுக்குள்ள வர”என்றார் மகனிடம்.

“எங்களுக்கே இப்பதான் போன் வந்துச்சு அதை பத்தி பேசிகிட்டு இருக்கிறதுக்குள்ள நீங்க வந்துட்டீங்க. என்னவோ உங்கிட்ட மறைக்குற மாதிரி ரொம்ப தான் குதிக்கிறா உன் பொண்டாட்டி பார்த்து வச்சுக்கடா  அவள” என தனது மகனையும் சேர்த்து திட்டினார் வள்ளியம்மை.

“ என்னம்மா என்னாச்சு பாப்பாக்கு” என்று பெற்றவராய்  செந்தில்முருகன் பதற

“ ஒன்னும் இல்லடா காலைல சாப்பிட்டது ஏதோ ஒத்துக்காம அதனால வாந்தி எடுத்து மயக்கம் போட்டுட்டான்னு சொன்னாங்க. சரி போய் கிளம்பி வா நம்ம போய் என்னன்னு பாத்துட்டு அவள அப்படியே இங்க கூட்டிட்டு வரலாம். பெத்தவ பெத்தவன்னு சொல்ற உன் பொண்டாட்டி இதுவரைக்கும் உன் மகளை எத்தனை தடவை போய் பார்த்தான்னு சொல்லு” என்றார் கடுப்புடன்

 அவர் அப்படி சொன்னது முகத்தை திருப்பி கொண்டு தனது அறைக்கு வேகமாக சென்றாள்  பிரபாவதி.

 போகும் அவளைப் பார்த்துவிட்டு, “ அம்மா பெருசா பிரச்சனை இல்லையே” என்று கேட்டான் செந்தில் முருகன்.

“ பெருசா ஒன்னும் பிரச்சனை இல்லடா அதனாலதான் நாங்க பதறாம இருக்கோம். சரி போய் சீக்கிரம் கிளம்பி வா எல்லாரும் போய் பாத்துட்டு அவளை கூட்டிட்டு வருவோம்” என்று சொல்லி அவனின் அறைக்கு அனுப்பி விட்டார்.

“ முருகா எப்ப தான் இந்த பிரச்சினை எல்லாம் சரி பண்ணி என்னோட பேத்திகளை நல்லா வாழ வைக்க போற” என்று கடவுளிடம் முறையிட்டு விட்டு அவரும் கிளம்ப சென்றார்.

 இவை அனைத்தையும் அமைதியாக பார்த்துக் கொண்டு இருந்த மயில்வாகனார் தனது அருகில் அமர்ந்திருந்தவனை பார்த்து, “ மாறா நீ வர வேண்டாம். நாங்க போய் இவள என்னன்னு பார்த்து கூட்டிட்டு வாறோம். நீ கொடைக்கானல் போய் அவளை பத்திரமா இங்க கூட்டிட்டு வா அப்ப தான் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும்”

“ சரி தாத்தா எல்லாம் நம்ம நினைக்கிற மாதிரி கரெக்டா நடக்குமா” என்றான் சந்தேகமாக.

“ நடக்கணும் என் அப்பன் முருகன் எல்லாத்தையும் பாத்துக்குவான். நீ கவலைப்படாத நம்ம இதுவரைக்கும் யாருக்கும் எந்த தீங்கும் செய்யல அப்படி இருக்கும் போது நமக்கு நடக்கிறது நல்லதா தான் நடக்கும். என்ன கொஞ்சம் லேட்டா நடக்கும். ஆனா நடக்கிறது நமக்கு நன்மையா தான் முடியும் பாரு” என்றார் முருகன் மீது உள்ள நம்பிக்கையில் மயில்வாகனார்.

“ சரி தாத்தா உங்களுக்காக எல்லாம் நல்லபடியா நடக்கணும்னு நான் கடவுளை வேண்டுகிறேன்” என்றான் இளமாறன் .

“ஆங் அப்புறம் கேக்க மறந்துட்டேன். அவங்களுக்கு சொல்லியாச்சா கரெக்டா  வந்துருவாங்களா”

“ அதெல்லாம் பக்காவா பிளான் பண்ணியாச்சி தாத்தா. கவின் ஃபிரண்டு சதிஷ் தான் அங்க போய் எல்லாரையும் கூட்டிட்டு வர போறான். இந்த திருவிழாவோட எல்லாம் நமக்கு சாதகமா தான் நடக்கும்  தாத்தா” என்றான் நம்பிக்கையுடன் இளமாறன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!