Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorizedமகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 8(2)

அத்தியாயம்-8(2)

மேக்கப் முடிந்தவுடன் “ஹ்ம் அழகா தான் இருக்க, சரி ஒழுங்கா ஆடுவியா” என்ற வனிதாவிடம்

“என்ன டி இப்படி கேக்குற, நான் தான் முறையா பரதநாட்டியம் கத்துக்கிட்டேனே” என்றாள் நேத்ரா.



Advertisement

“கத்துகிட்ட… இருந்தாலும்…. சரி ஆல் தி பெஸ்ட், நான் போயி பைக்கை எடுக்குறேன், நீ… என்று சுற்றிலும் தேடியவள், ஆஹ் இந்தா இந்த ஷாலை தலை மேல போட்டுக்கோ அப்புறம் பைக்ல போகும்போது மேக்கப் கலைஞ்சிரும்” என்ற வனிதா பைக்கை எடுக்கச் சென்றாள்.  

Advertisement

வரும்போது காலை ஆறு மணி என்பதால் சாலை ஓரத்தில் வாகனங்கள் எதுவும் நிறுத்தப்படாமல் இருக்க பைக்கை அங்கே நிறுத்தியவர்கள், இப்போது மணி ஒன்பதைத் தொட்டிருந்த வேளை, வனிதாவின் பைக்கைச் சுற்றிலும் நிறைய வாகனங்கள் நிறுத்தப்பட்டு இருந்தது.

Advertisement

வெளியே வந்து பார்த்த வனிதாவுக்கு தலை சுற்றியது. “இப்போ எப்படி பைக்கை எடுக்குறது, டைம் வேற ஆச்சு, டென் ஓ கிளாக் பங்ஷன் வேற ஆரம்பிச்சிருமே, நம்மளோட சின்ன பைக்கில நமக்கு சென்டர் ஸ்டாண்ட் போட்டு பழகுறதுக்கே நமக்கு ரெண்டு வருஷம் ஆச்சு, சரி ட்ரை பண்ணுவோம்” என்றவள்.  

Advertisement

அவள் சிறிய ஸ்கூட்டி பெப் இடையில் நிற்க அருகே பெரிய பெரிய இருசக்கர வாகனங்கள் அவளது பைக்கை ஒட்டிக் கொண்டு நின்றிருந்தது.

எப்படியோ உள்ளே புகுந்தவள் அவள் ஸ்கூட்டியின் சைடு ஸ்டாண்டை விலக்கி நிமிர்த்தியதும் அருகில் இருந்த வாகனங்கள் மள மளவென்று ஒன்றன் மேல் ஒன்றாக விழுந்து அவள் ஸ்கூட்டியையும் கீழே தள்ளியிருந்தது.

திரு திருவென்று விழித்துக் கொண்டு நின்றிருந்தவள் அருகே நான்கைந்து ஆடவர்கள் வந்து உதவி செய்ய, அவள் ஸ்கூட்டியை எழுந்து நிற்க வைத்தனர்.

“தேங்க்ஸ் அண்ணா” என்றவள், ஸ்கூட்டியை ஆன் செய்ய அது ஆவேனா என்றது, மீண்டும் மீண்டும் முயற்சி செய்தவள் அது முடியாது போக,

வண்டியை அங்கு உதவி செய்ய வந்த ஒரு நபரிடம் கொடுத்து ஸ்டார்ட் செய்ய சொன்னாள். அப்போதும் அது மக்கர் செய்ய, யாரிடமாவது லிப்ட் கேக்கலாம் என்றுதான் நளனின் வாகனத்தை நிறுத்தியது.   

கருப்பு நிற பென்ஸை லாவகமாக சாலையின் ஒரு திருப்பத்தில் திருப்பிய நளன் அங்கிருந்த சிறு கூட்டத்தைக் கண்டு வாகனத்தின் வேகத்தைக் குறைத்தான்.

காரிலிருந்து இறங்காமல் காரின் வேகத்தைக் குறைத்த நளனிடம் ஒரு பெண் வேகமாக ஓடி வந்தாள்.

காரில் விண்டோக்கள் அனைத்தும் கச்சிதமாக அடைக்கப்பட்டிருக்க, அந்த பெண் விண்டோவின் அருகே வந்து அவனிடம் ஏதோ கூறவும் எதுவும் கேட்காததால், விண்டோவை கீழே இறக்கினான்.   

“சார் சார் ப்ளீஸ் சார் ஒரு சின்ன ஹெல்ப் சார்” என்றாள்.

“என்னாச்சு, எதுவும்… ஆக்சிடென்ட்?” என்று பவ்வியமாகக் கேட்டவனிடம்,

“ச்ச ச்ச… என்றவள் பின்பு முகத்தை சுருக்கி ம்ம்ம்… ஆமா சார் ஒரு சின்ன ஆக்சிடென்ட், ஆனா மனுஷங்களுக்கு ஒன்னும் இல்ல, என்னோட பைக்கு தான்” என்றவள் தலையை சொரிய,

ஸ்டேரிங்கில் கை வைத்திருந்தவன் தோள்களைக் குலுக்கி “சோ, என்ன ஹெல்ப், உங்களை எங்காவது ட்ரோப் பண்ணனுமா?” என்றான்.

தான் கேட்க வந்ததை அவனே கேட்டவுடன் “ஆமா சார் ஆனா என்னை இல்லை, என்னோட பிரெண்டை, ப்ளீஸ் சார்” என்றாள்.

“ஓகே நானும் அவசரமா போகணும், டைம் இருக்குமா தெரியலை, என்றவன் அவன் மணிக்கட்டைத் திருப்பிப் பார்த்து, ம்ம்ம் நீங்க எங்க போகணும்” என்றான்.

“சார் இங்க தான் சார்” என்று அவள் காலேஜ் பெயரைக் கூறினாள்.

புருவம் சுருக்கி சிந்தனை முடிச்சிட்டவன் “ஓஒ தென் பைன், வர சொல்லுங்க” என்றவன் அவன் விண்டோவைக் கிளோஸ் செய்தான்.

தேங்க்ஸ் சார் என்றவள் வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே வேகமாக வந்தாள் நேத்ராவிடம், அவளிடம் நடந்ததைக் கூறியவள்,

“நேத்ரா நீ அந்த சார் கூட போ, பைக்கை இங்கயே நிறுத்தீட்டு என்னால உன்கூட வர முடியாது, அப்புறம் பைக்கு தொலைஞ்சு போகும்” என்றாள் வனிதா.

வனிதாவைக் கொலை வெறியுடன் பார்த்த நேத்ரா “என்ன டி விளையாடுறியா, நான் மட்டும் எப்படி… அதுவும் யாருன்னே தெரியாதவங்க கூட…இதுக்கு தான் நான் அப்பவே சொன்னேன், நாம ஆட்டோலேயே போயிக்கலாம்னு நீ கேட்டியா? நீ டபுள்ஸ் பழகுறதுக்கு நானா கெடச்சேன் உனக்கு?” என்று பொரிந்தாள்.

‘என்ன இவ இவளை நாம டபுள்ஸ் பழகுறதுக்கு தான் கூட்டீட்டு வந்தோம்ன்னு கரெக்ட்டா கண்டுபுடிச்சுட்டா, சரி நாம பீல் பண்ணுனா இன்னும் எகுறுவா’ என்று கணக்குப் போட்ட வனிதா,

“ஹே என்ன நீ ரொம்ப தான் பிகு பண்ணிக்கிற, நீ சரிப்பட்டு வரமாட்ட, பைக்கை தள்ளிக்கிட்டே நாம நடந்தே போகலாம் வா” என்று ஒரு எட்டு முன்னே வைத்தாள்.

வனிதா நடந்து செல்வோம் என்றதும் “ஏதே நடந்தா, இப்படியேவா?” என்று தன்னைக் குனிந்து பார்த்தவள்,

 ‘நீ மட்டும் நடந்து போன காலேஜ் போயி சேருறதுக்குள்ள, பேய் படங்கள்ல வர்ற பேய் மாதிரி ஆயிடுவ மேக் அப் கரைஞ்சு” என்றது மனசாட்சி.

 “சரி நீ இவ்வளவு சொல்றதுனால நான் போறேன்” என்றாள் நேத்ரா.    

“உன்னை விட அவரு நல்லவரா தான் தெரியுறாரு, அதுவும் ஹாண்ட்சம்மா வேற இருக்காரு, அவரை நீ எதுவும் பண்ணாம இருந்தா சரி” என்றவள்,

“இப்படியே தொண தொணன்னு பேசாம நீ கிளம்பு நேத்ரா, அப்புறம் அவரு கிளம்பீர போறாரு, பங்ஷனுக்கு வேற நேரமாகுது” என்று கத்தினாள் வனிதா.

“சரி கத்தாத, போறேன்” என்ற நேத்ரா ஷாலை எடுத்து தலையோடு முகம் தெரியாமல் முக்காடிட்டாள்.

நேத்ராவின் கையை பிடித்து அழைத்துச் சென்ற வனிதா நேத்ராவைப் பார்த்து சிரித்துவிட்டு, “உன்னை பாத்தா எப்படி இருக்கு தெரியுமா” எனவும்,

“எப்படி இருக்கு” என்றவளுக்கு,

“லொட்ஜ்ல நைட் போலீஸ் அர்ரெஸ்ட் பண்ணி அவங்க ஜீப்ல கூட்டிட்டு போவாங்களே, அந்ந்ந்ந்த பொண்ணுங்க மாதிரி இருக்கு” என்ற வனிதாவின் கையை கிள்ளினாள் நேத்ரா. 

ஆ… என்று சிரித்தவள், நேத்ராவை அழைத்துக் கொண்டு நளன் காரின் அருகே வந்தவள் ஆள்காட்டி விரலை மடக்கி காரின் விண்டோவை லேசாகத் தட்டினாள்.

தன் மொபைலை பார்த்துக்கொண்டிருந்தவன் “ஒஹ் சாரி….” என்றுவிட்டு மொபைலை டேஷ் போர்டில் போட்டுவிட்டு வேகமாக கதைவைத் திறந்தான்.

“சார் இவதான்… காலேஜ் முன்னாடி இறக்கி விட்டா போதும், தேங்க்ஸ் சார்” என்றாள் வனிதா.

“ஓகே ப்ளீஸ் கெட் இன்” என்றவன் காரை ஸ்டார்ட் செய்தான்.

நளன் கரை ஸ்டார்ட் செய்து சற்று நகற்றியதும்,

 “ஹாப்பா… இந்த ஷாலை மொதல்ல எடுத்திருவோம் இந்த வனிதா வேற ஏதேதோ சொல்லீட்டு போயிட்டா, அப்புறம் அதுவே உண்மை மாதிரி ஆயிடும்” என்று தலையில் போத்தியிருந்த ஷாலை நீக்கியவளின் முகத்தை அப்போது தான் பார்த்தான் நளன்.

பார்த்தவன் சத்தமாகவே “வாவ்! யு லுக் சோ பியூடிபுள்” என்றான் நேத்ராவிடம். 

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,

Please Subscribe & Support

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!