Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 25
அத்தியாயம்-25
நளன் அறையினுள் சென்று கதவடைத்ததும், நளன் பேசிய பேச்சில் சிலையென உறைந்து நின்றவள், அவன் அடைத்த கதவின் சத்தத்தில் உயிர் வந்தவளாக ” அம்மு… நீங்க உங்களோட காதலை எனக்கு புரிய வைக்காம இல்லை, உங்க மேல எனக்கு நம்பிக்கை இல்லாம இல்லை, ப்ளீஸ் அம்மு ப்ளீஸ், வெளிய வாங்க நீங்க இல்லாம என்னால இருக்க முடியாது… ப்ளீஸ்… ப்ளீஸ்…” என்று கைகளால் கதவை தட்டியவள், கதவின் மேல் மயங்கிச் சரிந்தாள்.
உள்ளே சென்ற நளன், கதவில் சாய்ந்து நின்று கதறி அழுதவன் அவன் உடைகளை எடுத்துக் கொண்டு அவர்களது புகைப் படத்தை வெறித்தான்.
Advertisement
“நீ போயி எடுத்திட்டு வா, நான் இங்க வெயிட் பண்றேன்” என்ற நந்தன் அப்பார்ட்மெண்ட் பார்க்கிங்கில் வண்டியை நிறுத்திவிட்டு நின்றிருந்தவனின் கண்ணில் நளனின் கார் அவன் பார்க்கிங்கில் நிற்பதைக் கண்டவன்,
Advertisement
“மச்சான் வீட்ல தான் இருக்காங்களா…” என்றவன் வேகமாக நேத்ராவை பின் தொடர்ந்தான்.
Advertisement
நந்தன் வீட்டை அடைந்த நேரம் தான் நேத்ராவும் உள்ளே நுழைந்திருந்தாள். கணவன் மனைவிக்கு இடையில் வராமல் ஒதுங்கி வாசலில் நின்றவன், நடப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
நேத்ரா மயங்கி விழவும் அவளைத் தூக்கி சோஃபாவில் படுக்க வைத்தவன் கிச்சனில் இருந்து தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான்.
அப்போதும் அவள் விழிக்காமல் இருக்கவும் அவள் கன்னம் தட்டியவன் முன், அறையினுள் சென்று கதவடைத்த நளன் கையில் ஒரு ட்ராவல் சூட்கேஸுடன் திரும்பி வந்தான்.
நளனைப் பார்த்த நந்தன் எழுந்து நின்று “மச்சான் நேத்ரா பாவம், அம்மா தான்…” என்றவனைக் கைநீட்டித் தடுத்தவன்,
“டேக் கேர் ஆப் ஹெர், இந்தாங்க சாவி உங்க தங்கச்சியோட திங்ஸ் எல்லாம் இங்க இனிமே இருக்கக் கூடாது, என்றவன் சற்று நிறுத்தி, அவளும் தான்” என்றவன் சூட்கேஸுடன் வெளியேறினான்.
நளன் சென்றதும் சிறிது நேரம் என்ன செய்வது என்று தெரியாமல் அமர்ந்திருந்தான் நந்தன்.
நேத்ரா கண் விழித்து “அம்மு…” என்று அழைத்தவள் வேகமாக சோஃபாவிலிருந்து கீழே இறங்கி, அவர்களது படுக்கையறை மட்டுமல்லாது அணைத்து அறைகளிலும் சென்று நளனைத் தேடினாள்.
அவன் அந்த வீட்டில் எங்கும் இல்லாது போக, மீண்டும் அவர்களது படுக்கையறை சென்றவள் அவர்களது புகைப்படத்தின் அருகில் சென்று அம்மு… அம்மு…. என்று கதறினாள்.
நந்தன் அறையினுள் வரவும் “அண்ணா அவர் எங்கண்ணா… சொல்லுண்ணா” என்று நந்தனின் சட்டையை பிடித்து அழுது கதறியவளை,
“உன்னோட லைப் அ நீயே கெடுத்துகிட்ட நேத்ரா, மச்சானோட இடத்துல நான் இருந்திருந்தாலும் கண்டிப்பா இதை தான் செஞ்சிருப்பேன், இனிமே காலம் தான் இதுக்கு பதில் சொல்லணும் வா வீட்டுக்கு போகலாம்” என்றான் நந்தன் உணர்ச்சி துடைத்த முகத்துடன்.
நந்தனின் கூற்றில் கற்சிலையானவள் பேசா மடந்தையாய் அவனுடன் வீடு சென்றாள். விட்டிற்குச் சென்ற நேத்ரா யாரிடமும் எதுவும் பேசவில்லை, அவலறையில் சென்று கட்டிலில் வீழ்ந்து குமுறி அழுதாள்.
நந்தன் நடந்த விஷயங்களை விளக்கவும் ஈஸ்வரமூர்த்தி “நந்தா என்னப்பா இது, வா நாம சம்மந்தி கிட்ட போயி பேசி பாப்போம்” என்றவர் சட்டையை மாட்டவும்,
“அப்பா மணி இப்போவே பத்துக்கு மேல ஆச்சு, காலையில போயி பேசிப் பாப்போம், இப்போ வேண்டாம்” என்றவன் ரேணுகாவை முறைத்துவிட்டு எழுந்து சென்றான்.
மறுநாள் கார்த்திகேயன் வீட்டிற்குச் சென்ற ஈஸ்வரமூர்த்தியும், நந்தகுமாரும் நடந்த விஷயங்களை விளக்கவும்,
கலக்கமுற்று நந்தினியின் முகம் பார்த்தவர் “அப்படியா எங்களுக்கு எதுவுமே தெரியாதே, இங்க வீட்டுக்கும் நளன் வரலை, இருங்க போன் போட்டு பாப்போம்” என்றவர் நளனுக்கு அழைப்பு விடுக்க அது சுவிட்ச் ஆப் என்று வந்ததில் குழப்பமானார்.
பெருமூச் சொன்றை வெளியேற்றியவர் “சம்மந்தி நீங்க வீட்டுக்கு போங்க, இப்போதைக்கு நாம யாரு என்ன சொன்னாலும் நளன் கேக்க மாட்டான், இந்த விஷயத்தை பத்தி நாம யாரு பேசினாலும் அவன் விரும்பவும் மாட்டான்.
ஆனா நேத்ரா பண்ணுன தப்பை நம்மளாலயே ஏத்துக்க முடியதப்போ நளனால கண்டிப்பா உடனே ஏத்துக்க முடியாது,
ரெண்டு பேரும் கொஞ்ச நாள் பிரிஞ்சு இருக்குறது தான் நல்லது. நான் வினோத் கிட்ட பேசிக்கிறேன், நந்தன் உங்களுக்கும் வினோத்த தெரியும்ல நீங்களும் கூட பேசுங்க, எப்படியும் அவன் வினோத் கூட தான் இருப்பான்” என்றவர் ஈஸ்வரமூர்த்தியையும், நந்தகுமாரையும் அனுப்பி வைத்தார்.
கார்த்திகேயன் கூறியபடியே நளன் கை முழுவதும் கட்டு போடப்பட்டிருக்க, மது போத்தல்கள் சூழ வினோத்துடன் அவனது அறையில் அமர்ந்திருந்தான்.
“டேய் வினோ உனக்கே தெரியுமல, நான் நேத்ராவ எவ்வளவு விரும்புனேன்னு, அவள் என்னைய புரிஞ்சுக்கவே இல்லடா, என் மேல அவளுக்கு நம்பிக்கையே இல்லை, அப்படி என்னைய நம்பியிருந்தா ஏன் என் கிட்ட மறைக்கணும்” என்று மீண்டும் மீண்டும் புலம்பிக் கொண்டு பாட்டிலை காலி செய்தவன் மதுவின் தாக்கத்தால் உறங்கிப்போனான்.
அவன் உறங்கியதும் வினோத்தின் போன் ஒலியெழுப்ப அதை எடுத்தவன் நளனின் தந்தை கார்த்திகேயன் பேரைக் கண்டதும் போனை அட்டண்ட் செய்தான்.
“அங்கிள், சொல்லுங்க அங்கிள்” எனவும்
“வினோத், நளன் அங்க உன் கூட இருக்கானா?” என்ற கார்த்திகேயனுக்கு,
“அங்கிள், இங்க தான் அங்கிள் இருக்கான், ரொம்ப டிஸ்ட்ரபா இருக்கான், கையில வேற காயம்” என்றான்.
“என்ன கையில காயமா? சரி நாங்க அங்க வரட்டுமா?” என்றவரிடம்
“ஐயோ அங்கிள் வேண்டாம், இவ்வளவு நேரம் புலம்பீட்டு இப்போ தான் தூங்குறான்” என்றான் வினோத்.
சற்று அமைதியானவர் “தண்ணியடிக்கிறானா?” என்றார்.
உள்ளே சென்ற குரலுடன் “ம்ம் ஆமா அங்கிள், நீங்க கவலை படாதீங்க நான் பாத்துக்கிறேன், அப்புறம் அங்கிள்… ஒரு முக்கியமான விஷயம், எங்க ரெண்டு பேருக்கும் ஆன் சைட் ஆபர் வந்திருக்கு, உங்க கிட்ட நளன் சொன்னானா தெரியலை, நேத்து தான் எங்களுக்கே தெரியும். அதுக்குள்ள இவ்வளவு பிரச்சனை,
சோ ரெண்டு பேரும் நெக்ஸ்ட் வீக் கனடா போறதா இருக்கோம், கொஞ்ச நாள் இதெல்லாம் விட்டுட்டு போனா அவனுக்கும் நல்லா இருக்கும்” என்றான் வினோத்.
வினோத் கூறியத்தைப் பொறுமையுடன் கேட்டவர் “ம்ம் உண்மை தான் ப்ப, நந்தனும் அவங்க அப்பாவும் வந்தாங்க நடந்தத சொன்னாங்க, உன்கிட்டயும் பேச சொன்னேன், பேசுனா பேசு” என்றவர் அவர்கள் கிளம்பும்போது ஏர்போர்ட் வருவதாகக் கூறி அழைப்பைத் துண்டித்தார்.
வினோத்தின் பார்வை நளனின் மேல் படிய நளனோ ஹனி… ஹனி…. என்று போதையிலும் புலம்பிக் கொண்டிருந்தான்.
இங்கு நேத்ராவோ அவள் அறையிலேயே அழுது கரைந்து கொண்டிருந்தாள். வேலைக்கும் செல்வதில்லை. யாரிடமும் பேசுவதில்லை, ரேணுகாவிடம் கேட்ட கேள்விக்கு பதில் அவ்வளவே, நந்தனிடம் மட்டும் நளனைப் பற்றி விசாரிப்பாள்.
நந்தனும் வினோத்துடன் பேசிக் கொண்டிருந்தாலும் நளனைப் பற்றி எதுவும் நேத்ராவிடம் கூறமாட்டான். வனிதாவும் விஷயம் கேள்விப்பட்டு நேத்ராவிடம் பேசுவதே இல்லை.
ஆறு மாதங்கள் கடந்திருந்த வேளை, இன்னும் நேத்ரா அவள் அறையினுள் அடைந்து கிடக்கவும், நந்தன் வனிதாவை சந்தித்துப் பேசினான்.
நேத்ராவின் நிலையை விளக்கியவன், அவளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டுவர வனிதாவிடம் உதவி கேட்டான்.
வனிதாவும் தானாக வந்து நேத்ராவிடம் பேசியவள் கொஞ்சம் கொஞ்சமாக அவளை மாற்றி வேலைக்கு மீண்டும் அனுப்பினாள்.
நளனோ பகல் வேளைகளில் வேலைக்கு செல்பவன் இரவில் வீடு திரும்பியதும் நேத்ராவின் நினைவில் உறக்கம் வராமல் புலம்பியவன், மது போத்தல்களின் துணை நாடுவான்.
