Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

காதலே சாரலாய்

சாரல்-1

சாரல் – 1

இரவு மணி 8.45, மயிலாடுதுறை அருகிலுள்ள நல்லூரில் உள்ள ஒரு வீட்டிலிருந்து, ஹாலில் அடுக்கியிருந்த பைகளை பார்த்துக்கொண்டே “அப்பாடி பாக்-ல  எல்லாம் எடுத்து வச்சிட்டியா, கார்-ல வச்சிடலாமா?… மணி ஆகுது” என்று அறையில் கிளம்பிக் கொண்டிருக்கும் தன்னுடைய மகளிடம் ஹாலில் நின்று கைக்கடிகாரத்தை பார்த்தபடி கேள்வியெழுப்பினார் சந்திரசேகர்.

“பானு, அவந்தி ரெண்டு பேரும் வீட்டை பூட்டிட்டு சீக்கரம் வாங்க. நான் கார் ஸ்டார்ட் பண்றேன்…” என்று அங்கு இருந்த பைகளை எடுத்துக்கொண்டு மகளின் பதிலை எதிர்பாக்காமல் வெளியே சென்றார்.

இதை காதில் வாங்கியவரே அறையிலிருந்து வெளியே வந்த மகள், அடுப்பங்கரைக்கு சென்று இருக்கும் தாயிடம் சென்று ” ம்மா… அப்பா கார்க்கு போய்ட்டாங்க, வாங்க போலாம். இப்போ தான் ஏதாது உருட்டுவீங்க நீங்க” என்று அன்னையின் கைப்பிடித்து இழுக்க, ” இருடி.. பாத்ரூம் போயிட்டு வந்துக்குறேன்” என்று ஓடினார்.



Advertisement

ஒருவழியாக 10  நிமிடத்திற்கு பிறகு வீட்டைப்பூட்டி வெளியில் சென்றனர்.

” பானு யாரும் வரங்களாப் பாரு நான் காரை வெளியே எடுக்குறேன்” என்று ஷெட்-இல் இருந்து காரை கிளப்பினார். அது அவருடைய பழக்கங்களில் ஒன்று, வெளியே கிளம்பும் போது எதிரில், எப்போதும் அவரின் மனைவி வரவேண்டும்.

வெளியே வந்த காரில் அவரின் மனைவி ஏறியவுடன், பின்னிருக்கையில் இருந்த மகளிடம் ” போலாமாடா எதும் மறக்கலையே?…” என்று கேட்டார்.

Advertisement

மகள் ” யா ப்பா.. கிளம்பலாம்”

Advertisement

 கார் வேகமெடுக்கவும், “இப்போ ஏன் வேகமா போறீங்க?.. இன்னும் நாழி இருக்கு, நானும் போகும்போது ஏதும் வாயத்தொறக்க கூடாதுனு அமைதியா வந்தேன்.”.

“ஏன் ஒரு 10 நிமிஷம் முன்னாடி போனா ஆகாதா?.., ஊருக்கு முன்னவே போயிட்டு அங்க நிக்கணும். அங்கபோய் பாத்தா இவ போற பஸ் கூட  வந்திருக்காது. நான் புடவைய கூட ஒழுங்கா கட்டல” என்று பானு கடுப்படித்தார்.

அவந்தி ” ஹா ஹா … ப்பா ஆஆ .. மாட்டுனீங்க நீங்க, இன்னைக்கு வீட்டுக்கு திரும்புற வரைக்கும், இதே டயலொக் தான்.அவங்க நாடகத்துல கடைசி சீன் பாக்க முடியாத கடுப்புல இருக்காங்க..”

Advertisement

“ஓ … அதான் கடுகு மாறி என்னை தாளிக்குறாளா… எவ்வளோ பாத்துட்டோம் இது சும்மா, பாத்துக்கலாம் விடு”  என்று மகளிடம் கூறினார்.

“உங்கள் மனத்தைரியத்தைக் கண்டு நான் வியக்கிறேன் ” என்று நகைப்புடன் கூறினாள்”.

பானு “இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல உங்க ரெண்டுபேருக்கும், பேச்சை பாரு”. காலேஜ் போயிட்டு ஒழுங்கா சொல்லிக் குடுக்குற வழியை பாரு.

“என்னோட பொண்ணு டி, என்னை மாறியே…” பெருமிதத்தோடு கூறினார்.

ஆம்! சேகரும் நல்லூரில் உள்ளத் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து ஒய்வுப் பெற்றவர்.

“ஆமா! ரொம்ப பெருமை தான்… வாத்தியார் புள்ள மக்குனு இல்லாம போயிடுச்சில, அதனால இருக்கவேண்டியது தான்” என்று நக்கலடித்தார்.

அவந்தி “ம்மாஆஆ…வர வர ரொம்ப வாயாகிட்டு உங்களுக்கு… நேரத்துக்கு கிளம்பாம, அப்போதான் நாடகத்துல கடைசி சீன் போதுன்னு நின்னுட்டு, அதுக்கு அப்பறம் எங்க புடவைக்கட்ட நேரம் இருக்கும். எப்படியும் வீட்டுக்கு போயிட்டு, போன்ல இப்போ பாக்காம விட்ட நாடகத்தையும் பார்த்துடுவீங்க, அப்பறம் என்ன உங்களுக்கு கோவம் வேற?… உங்களால ‘சிம் கார்டு’ கம்பெனிக்காரன் நல்லா வாழுறான்.”

“நாலு நாள் இல்ல நாலு மாசம் கழிச்சு பாத்தாலும் ஒரே கதை போகும்..இதெல்லாம் சொன்ன எங்க நம்புறீங்க நீங்க.. இதுல இப்போ எங்களை ரொம்ப டேமேஜ் செய்யிறீங்க…”

“அப்படியா இனிமே என்கிட்டே நாடகத்துல என்ன கதைப்போதுன்னு கேளு, வச்சிக்குறேன் உன்ன அப்போ…”

“ஹிஹி.. மம்மி அப்பிடிலாம் சொல்லக்கூடாது…அது சும்மா, பொழுதுபோக்க வேணும்ல..”

“அப்போ எங்களுக்கும் அப்படிதான்..”

இப்படி காரில் பேசிக்கொண்டே மயிலாடுதுறையில் சொகுசுப்பேருந்து புறப்படும் இடத்திற்கு வந்தடைந்தனர். பானு மணியை பார்க்க அது 9.55 என்று காட்டியது.

நான் சொல்லல, “ஒரு ஈ, காக்க கூட காணும் பாரு. இன்னும் எப்படியும் பஸ் வர அரைமணி நேரம் ஆகும்”.

இதே பஸ்ல தான் ஒரு வருசமா புக் பண்ணி போய்ட்டு இருக்க, “எந்த நேரத்துக்கு வரும்னு உனக்கு தெரியாது”.

“ம்மாஆ.. ஒரு சில நேரம் வேற டிரைவர் மாத்தி வருவாங்க எப்படின்னு நமக்கு தெரியதுல..”

“ஒஹோஒ.. நீ அப்படி சொல்லவர.. அப்போ பஸ் புக் பண்ணும் போதே இப்போல்லாம் டிரைவர் பேரோட ஒரு நம்பர் வருதே..அது என்ன அப்போ…”

“ம்மா… போதும்..நீங்க அறிவாளி தான்னு நான் ஒத்துக்குறேன்..ரொம்ப நீளமா போது”.. என்று ராகமிழுதாள்.

“ஏண்டி எப்பவும் இப்படி முன்னவே வர்றது தான” என்று சொல்லி சேகர் வாயை விட,

“இத, இத இதைத்தான் நானும் சொல்றேன், இப்படி எங்க போனாலும் ஊருக்கு முன்ன போயி அங்க நிக்க வேண்டியது. இனிமே கிளம்பு லேட் ஆகிட்டுனு வீட்ல சொல்லுங்க உங்களுக்கு அப்பறம் இருக்கு ” என்று சாடினார்.

இது சேகரின் பழக்கத்தில் முக்கியமான ஒன்று, ” நேரம் தவறாமை” குறித்த நேரத்துக்கு முன்னவே இருக்கணும் என்று ரொம்ப எதிர்பார்ப்பவர் எல்லா இடங்களிலும், அதே போல் தான் அவரின் மகளும்.

இதற்காக கணவன், மனைவிக்கும் அடிக்கடி வெளியில் செல்லும் போதெல்லாம் இவ்வாறான வாக்குவாதம் வெளுக்கும்.

“டாட்… செம பார்ம்ல இருக்காங்க மாம், நீங்க கொஞ்சம் ஜாக்கிரதை…”என்று அவந்தி எச்சரிக்கை செய்ய,

ரெண்டு பேரையும் முறைத்து வைத்தார் பானு.

அவந்தி ” இது தெரிஞ்ச கதைத் தானே ம்மா… நீங்க என்னமோ புதுசா நடக்குற மாறி சொல்லுறீங்க, இப்போதான் புது பொண்ணு போல முறைக்கிறீங்க..”

அடுத்து அவர் பேசும் முன் அவந்தி, பேச்சை மாற்றும் விதமாக “ம்மா நாம இறங்கி நிக்கலாம். இன்னும் 10 நிமிசத்துல பஸ் வந்திரும், எனக்கு மெசேஜ் வந்திருக்கு இப்போ, வாங்க இறங்கி நிக்கலாம், நேரமாச்சு என்று தன் முதுகுப்பையை மாட்டிய படி காரிலிருந்து இறங்கினாள்.

“நீங்க காரை ஓரமா நிறுத்திடுங்க ப்பா..” அவந்திகா.

பின்பு பானு தன் பேச்சை விடுத்து, மகளுடன் இறங்கி நின்றார்.

“திரும்ப எப்போ உனக்கு லீவு வரும்?…” என்று வீட்டில் இன்று காலையிலிருந்து கேட்டதையே அவர் ஆரம்பிக்க,

“ம்மா… ஆஆஹ் , நெஸ்ட் என்ன விஷேஷம் வருதுன்னு சொல்லுங்க, அதுக்கு தான் லீவு விடுவாங்க. இது என்ன உங்க காலேஜ் ஆஹ் நினைச்ச நேரத்துக்கு எனக்கு லீவு குடுக்க” என்று கேட்க,

“உங்கிட்ட கேட்டேன் பாத்தியா என்ன சொல்லணும்..”

“ஹா ஹா.. யார்கிட்ட” என்று நக்கலடித்தாள்.

சற்று நேரம் கழித்து பேருந்து வரவும், பானு முதலில் ஓட்டுனரை பார்த்துவிட்டு மகளை முறைக்க, ரெகுலர் டிரைவர் அண்ணாவா ம்மா…இப்போதான் பாக்குறேன் என்று அசடுவழிந்து, பின்பு  தாயிடம் ” கார்ல  போகும்போது அப்பாவை திட்டிட்டே போகாதீங்க..” இருவரிடமும் விடைபெற்றுக்கொண்டே, “வீட்டுக்கு போயிட்டு எனக்கு கால் பண்ணுங்க, வேகமா போக வேணாம். உடம்ப பாத்துக்கோங்க.. பை” என்று சொல்லிவிட்டு… பேருந்து  ஓட்டுனரிடம், “ஹாய் அண்ணா..” என்று கூறியபடியே தன் இருக்கை எண்ணை தேடி சென்றாள்.

தன்னுடைய இருக்கையில் அமர்ந்து ஜன்னல் வழியாக தாய், தந்தைக்கு கை அசைத்து வீட்டிற்க்கு கிளம்ப சொன்னாள். அடுத்த 5 நிமிடம் சென்று அந்த பேருந்து கோவையை நோக்கி புறப்பட்டது.

அவந்திகா படிப்பதற்காக வெளியூர் செல்ல ஆரம்பித்தது முதல், இப்பொழுது கல்லூரிக்கு வேலைக்கு செல்வது வரை, அவள் விடுமுறைக்கு வீட்டிற்கு வந்து திரும்பப் போகும்போது அவரின் பெற்றோர் இப்படி பேருந்து ஏற்றி விட்டுத் தான் செல்வர். வரும் பொது முக்கால்வாசி நேரம் அவளே பஸ்சில் வந்து ஊரில் இறங்கிவிடுவாள்.

இவள் தனக்கு பிடித்த இன்னிசை(மெலடி) பாடலை ஹெட்செட் மாட்டிக்  கேட்டுக்கொண்டே ஜன்னலை கொஞ்சமாக திறந்து தனக்கு பின்னால் போகும் மரங்களையும், வீடுகளையும் ரசித்துக்கொண்டே வெளியே வேடிக்கை பார்த்தாள்.

சரியாக 40 நிமிடம் சென்று தந்தைக்கு அழைத்து “வீட்டுக்கு போயாச்சா ப்பா..” என்று கேட்க

இங்கு போனை அட்டென்ட் செய்த பானு, ” ஏண்டி முந்திரிக்கொட்டை.. வீட்டுக்கு போயிட்டு உனக்கு கூப்புடமாட்டோமா,.. அதுக்குள்ள என்ன அவசரம்?… உங்க அப்பாவே பரவால்ல, நீ அவருக்கு மேல இருக்க…” என்று சொன்னார்.

” பானுக்கு வாய்க்கொழுப்பு ரொம்ப ஆகிட்டு.. எனக்கும் ஒரு நேரம் வரும் அப்போ உங்களுக்கு இருக்கு… இன்னும் போகலையா?” என்று மறுபடியும் கேட்க

இப்போதான் தெருமுனைக்கு திரும்புறோம் என்று பதிலளித்தார்.

“சரிம்மா … போயிட்டு தூங்குங்க, லேட் ஆகிட்டு. நான் காலைல அங்க  வீட்டுக்கு போயிட்டு சொல்றேன். குட் நைட்” என்று விடை பெற்றாள்.

“ஒகே.. பாத்து.. பத்திரம்” சொல்லி போனை வைத்தார் அவளின் அம்மா.

திருச்சி பேருந்து நிலையம் அருகில் வந்ததும், ஒரு 10  நிமிஷம் பஸ் நிக்கும்,. “இறங்குறவங்க போயிட்டு சீக்கரம் வாங்க” என்று நடத்துனர், பயணிகளிடம் அறிவுறித்தினார்.

அங்கு தான் அவளுக்கு பக்கத்துக்கு இருக்கைக்கு ஒரு பெண்மணி வந்து அமர்ந்தார்.

அவரை பார்த்து மெல்லிதாக சிரித்துவிட்டு அவள்  வேடிக்கை பார்க்க தொடங்கிவிட்டாள்.

அவர் தன்னுடைய இடத்தில் வசதியாக அமர்ந்துவிட்டு இவளிடம் பேச்சு கொடுத்தார். “என்னமா பண்ற, என்ன ஊர்” என்று கேட்க,

நான் கோயம்புத்தூர்ல என்று எதோ சொல்ல வர அதற்குள் அவரே “ஓஹ் காலேஜ் ஸ்டுடென்ட்டாஹ், எந்த இயர்?” என்று மறுபடியும் தன் பேச்சை தொடர..

இவள் அவரையே பார்க்க..

“நான் இப்படி தான் ஒருத்தவங்கள பாத்ததும் சரியாச் சொல்லிடுவேன்” என்று தன் புலமையை பேச..

“போச்சுடா.. நமக்குனு வந்து வாய்க்குறாங்க பாரு”என்று அவள் முணுமுக்க

“என்ன மா சொன்ன சரியாய் காதுல விழலை”

“ஹாங்.. ஒன்னும்  இல்ல, சரிய்ய்யா!… சொல்லிட்டீங்க!…”

“ஹா ஹா.. எப்படி கண்டுபுடிச்சேன் பாத்தியா..இப்படித்தான் என் பொண்ணும் என்கிட்ட அடிக்கடி கேப்பா, எப்படிம்மா சரியா கண்டுபிடிக்குறனு…”

“ஹி ஹி.. ஓஹ்ஹூ.. சூப்பர் போங்க ..” சரி ஆண்ட்டி நான் தூங்கபோறேன், நாளைக்கு காலேஜ் போனும்ல  என்று அவரிடம் இருந்து தப்பித்தாள்.

கண்களை மூடியபடி “அடியேய் தர்ஸ்..தர்பூசணி…ஒழுங்கா வேற சீட் போட்ருப்பேன். ஏழாம் நம்பர் தான் போடணும், தல..தளபதின்னு  எதையோ சொல்லி இப்போ பாரு, என்னையொரு ‘ஸெல்ப் டப்பா’ கிட்ட மாட்டிவிட்ருக்க, உனக்கு இருக்குடி நாளைக்கு” என்று பொருமினாள்.

————

அவள் கோவைச் செல்லும் அவளின் குடும்பத்தை பற்றி பார்ப்போம்.

சந்திரசேகர் – பானுமதி தம்பதியருக்கு இரண்டு மகள்கள். மூத்தவள் அகலிகா அடுத்து அவந்திகா நம் நாயகி.

அகலிகா திருமணமாகி கணவர் ராஜேஷுடன் லண்டனில் வசிக்கிறாள். ஒன்றரை வயதில் ஒரு பெண், குட்டியின் பெயர் ஆதினி.

அகலிகா, ராஜேஷ் இருவரும் ஐ.டி துறையில் பணிபுரிகின்றனர்.

சந்திரசேகர் ஒய்வுப் பெற்ற பிறகு அவருக்கு சொந்தமான இரண்டு ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். பானுமதி அவ்வீட்டின் இல்லத்தரசி.

அவரின் அப்பா நல்லூர் கோவிலில் தர்மகர்த்தாவாக இருந்தவர். அவர் பெயர் ராஜகோபால், மனைவி-கனகவல்லி. இப்பொழுது இருவரும் இவ்வுலகில் இல்லை.

அவ்வூரில் “புது வீடு” என்று சொன்னால் அது இவர்கள் வீடு தான். 90 -ன்  தொடக்கத்தில், சந்திரசேகர் அவரின் சம்பாத்தியத்தில் முதன் முதலாக அங்கு மச்சு (மாடி) வீடு காட்டினார். அதற்கடுத்து அங்கு  எவ்வளவு பெரிய, புது வீடுகள் இருந்தாலும் இன்றளவும் அவ்வீட்டை தான் புது வீடு என்று அடையாளம் சொல்லுவார்கள், அவ்வூர் வாசிகள். அதில் அவருக்கு பெருமை உண்டு.

அவர்கள் வசிக்கும் தெருவில் இருக்கும் மற்ற வீட்டினர்கள் எல்லாம் இவர்களின் சொந்தங்களே. அதாவது அவரின் தந்தையின் அண்ணா கிருஷ்ணசாமிக்கு இரண்டு பெண்கள், ஐந்து ஆண்கள் என மொத்தம் ஏழு மக்கள்.

ஆனால் ராஜகோபாலிற்கு இரண்டு மகன்கள் தான். அப்போதே அவர் மனைவிடம் இவர்களே நமக்கு போதும் என்றுவிட்டார். மனைவி கூட எங்க ஒரு பெண் குழந்தை என்று கேட்க, அடுத்தும் ஆணாக இருந்தால் என்று சொல்லி முடித்துவிட்டார். இதில் அவரின் அண்ணாவிற்கு ரொம்ப வருத்தம்.

சந்திரசேகரின் அப்பா காலத்திலேயே சொத்தை பிரித்து  கணக்கு தீர்க்கப்பட்டது. அப்படி அவரின் மக்களும் அந்த தெருவில் தான் குடியிருக்கின்றனர். அவர்களின் பிரதான தொழிலே விவசாயம் தான். இதில் தப்பி படித்தவர்கள் சந்திரசேகர் மாற்றும் அவரின் தம்பி ராஜசேகர் தான்.

ராஜசேகர் திருச்சியில் தமிழ்நாடு போக்குவரத்துத் துறையில் பணிபுரிகிறார். அவரின் மனைவி சரஸ்வதி. இவர்களுக்கு ஒரு மகன், இரண்டு மகள்கள் என கூட்டல் மூன்று. மூத்தவன் கபில், பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மெக்கானிக்கல் துறையில் படிக்கிறான்.

அடுத்து நிரஞ்சனா, முதல் வருடம் பி.எஸ்சி வேதியியல் பயில்கிறாள். கடைக்குட்டி ஆதர்ஷனா, பத்தாம் வகுப்பில் இருக்கிறாள்.

ராஜசேகருக்கும் நல்லூரில் ஒரு வீடு உண்டு. ஏதாவது திருவிழா, விசேஷ நாட்களில் குடும்பம் எல்லாம் ஊரில் தான். ஆகமொத்தம் ஏதாது ஒரு விவேசம்  என்றால்  அந்த தெருவில் “எங்கள் வீட்டில் எல்லாம் நெல்லும் கார்த்திகை” தான்.

இதுவே இவளின் குடும்ப சுருக்கம்.

——-

விடியற்காலை சரியாக 5.40 க்கு அந்த சொகுப்பேருந்து ஆடிஆசைந்து காந்திபுரம் பேருந்து நிலையம் வந்து நின்றது.

பேருந்து வந்து நின்றது கூட தெரியாமல் தூங்கும் அந்த ஆண்ட்டியை தட்டி எழுப்பி விட்டு, தன்னை கொஞ்சம் ஒழுங்குப் படுத்திக்கொண்டு இறங்குவதற்க்காக எழப்போக,அந்த ஆண்ட்டி மறுபடியும் சொகுசாக கண்ணசர, “ஆண்டவா.. இன்னைக்கு விடியலே ரொம்ப பிரமாதமா இருக்கு… இன்னும் என்ன ஆகப்போகுதோ தெரிலயே..” என்று முணுமுணுத்துக்கொண்டே, திரும்ப ஒருமுறை அவரை எழுப்பி இவள் தன் இடத்திலிருந்து வெளியேறினாள்.

அந்த பேருந்திலிருந்து இறங்கும் முன் ” டிரைவர் அண்ணா… வர வர ரொம்ப லேட் பண்றீங்க.. போன முறைலாம் 4.45 -லறிந்து 5 மணிக்குள்ள ஓட்டிட்டு வந்திருவிங்க இப்போ ரொம்ப லேட் “.

ஓட்டுநர் ” லேட்டாகிட்டு மா… அடுத்த தடவை சரி பண்ணிடலாம்”

“சரிண்ணா பாக்கலாம்”

“இப்போ உன் காலேஜ் போற பஸ் வருமா மா..” ஓட்டுநர்.

அவள் , ” அரைமணி நேரத்துக்கு ஒரு தடவைத்தான் ண்ணா..இன்னைக்கு ஆட்டோல போனாதான், கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணிட்டு போக சரியா இருக்கும். ஒகே பை ண்ணா..”

“சரி மா..”

இவள் ஆட்டோவில் தான் தங்கியிருக்கும் வீட்டிற்கு செல்லவே மணி ஏழரை ஆனது. அழைப்பு மணியை அழுத்தி விட்டு நிற்க, அவள் நண்பி வந்து கதவை திறந்ததும் இவள் அப்படியே ஷாக் அடித்தது போன்று நின்றுவிட்டாள்….

சாரல் வருடும்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!