Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 27
அத்தியாயம்-27
சக்கரவர்த்தி என்ற பொன்னிறத்திலான பெயர் பலகையைத் தாங்கிய, கண்ணாடியால் ஆன கதவைத் திறந்தவள், “குட் மோர்னிங் சார்” என்றாள்.
அவளின் குட் மானிங்கை ஏற்றுக் கொண்டவர், “வாம்மா, நான் தான் வரச் சொன்னேன், ஒரு முக்கியமான விஷயம், ஆக்ட்சுவலா நான் இந்த விஷயத்தை மீட்டிங் அரேஞ்சு பண்ணி தான் சொல்லியிருக்கணும், இப்போ உனக்கு தான் முதல்ல சொல்றேன், ஈவினிங் மீட்டிங் அரேஞ் பண்ணிக்கலாம் என்றவர்
Advertisement
இனிமே இந்த கம்பெனியை எடுத்து நடத்தப் போறது என்னோட பையன் வினோத்” என்றவர் தன் வலப்புறம் கைகாட்ட,
Advertisement
அங்கே ஆறடிக்கு சற்று குறைவு என்று சொல்லும் அளவு உயரத்திலும், நான் தினந்தோறும் உடற்பயிற்சி செய்வேன் என்று பறைசாற்றும் இறுகிய தசைகளும், கன்னத்து எலும்பும், வனிதாவைக் துளைத்தெடுக்கும் பார்வையும் கொண்டு,
Advertisement
கருப்பு நிற உடை அவன் உடலோடு ஒட்டியிருக்க, சினிமா மாடல் போல் காட்சியளித்தவனை வாயில் ஈ போகுமளவு பார்த்துக் கொண்டிருந்தவள் நம் வனிதாவே தான்.
Advertisement
“ஹாய் மிஸ் வனிதா” என்றவன் அவன் வலக்கையயை உயர்த்தி கைகுலுக்க முயற்சிக்கவும் விரிந்திருந்த கண்களை சிமிட்டி நடப்புக்கு வந்தவள், அவன் கைகளை லேசாக பற்றி விடுவித்தாள்.
அவர் முன்னே இருந்த பைலைப் புரட்டிக் கொண்டிருந்தவர் நிறுத்தி “அம்மா வனிதா நம்ம மேனேஜிங் டிரெக்டர் சுந்தர் இப்போ வேற கம்பெனிக்கு மாறீட்டாரு, சோ அவரோட இடத்த இப்போ வினோத் தான் பில் பண்ண போறான், நீ சுந்தருக்குக் கீழ தானே வொர்க் பண்ண, அதுனால இனிமே நீ வினோத் கூட தான் வொர்க் பண்ண போற, இதுல உனக்கு ஒன்னும் பிரச்சனை இல்லையே ” என்றார் சக்கரவர்த்தி.
“ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ ஐலா ஐலா ஐ என்ற பாடல் வரிகள் வனிதாவின் பின்னே ஒலிக்க, பிரச்சனையா! ஐயோ சார் உங்களுக்கு கோடி புண்ணியம், அந்த கிழம் பண்ற இம்சை தாங்காம நானே எப்படா புடுங்கீட்டு போவோம்னு இருந்தேன்,
இப்போ இப்படி ஒரு, பிராண்ட் நியூ மாடல கொண்டுவந்து நடிக்கிறியான்னு கேட்டா, எந்த கேனச்சி வேணான்னு சொல்லுவா?” என்று மனதினுள் பேசியவள் வெளியில் ஈ… ஈ… ஈ… என்று இளித்து வைத்தாள் “வித் பிளசர் சார்” என்னும் சொல்லோடு.
“ஓகே வினோத், வனிதா கிட்ட உனக்கு டவுட் எல்லாத்தையும் நீ க்ளியர் பண்ணிக்கலாம், ரொம்ப பெர்பெக்ட் ஆன பொண்ணு, நான் கிளம்புறேன்” என்ற சக்கரவர்த்தி அறையை விட்டு அகலவும்,
பழுப்பு நிற காலர் வைத்த குர்தா அணிந்து கூந்தலை உயரத்தூக்கி போனி டைல் இட்டிருந்தவளை, பார்வையால் துளைத்தவன்,
“ஆஹ வனிதா ரைட்?” என்று அவளது பெயரை மீண்டும் உறுதி செய்தவன், அவள் “எஸ் சார்” எனவும்,
“ஓகே, எனக்கு முக்கியமான சில டீடெயில்ஸ் எல்லாம் ரெடி பண்ணித் தரணும் முடியுமா” எனவும்,
“எஸ் சார்” என்று அவள் வைத்திருந்த நோட் பேடில் குறித்துக் கொள்ள ஆரம்பித்தாள்,
“இப்போ என்ன என்ன ப்ரொஜெக்ட்லாம் ஆன் கோயிங்ல இருக்கு, ப்ராஜெக்ட் லீடர்ஸ் அண்ட் கோ ஒர்க்கர்ஸ்”,
“எஸ் சார்”
“அப்புறம் ஒரு இம்போர்ட்டண்ட் ஆன விஷயம், ஒரு நியூ ப்ரொஜெக்ட்டுக்கு இன்னிக்கு தான் இன்டெர்வியூ முடிஞ்சது”
“எஸ் சார்”
“காட்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ப்ராஜெக்ட், ஹெட் மிஸ்டர் நளன், சோ இன்டெர்வியூல செலக்ட் ஆன கேண்டிடேட்ஸ்கு எல்லாம் இப்போவே ஆபர் லெட்டர் அனுப்பனும்”
“எஸ் சார்” என்றவள் குனிந்த தலை நிமிராமல் வினோத் கூறிய குறிப்புகளை நோட் பேடில் எழுதிக் கொண்டிருந்தாள்.
“இதெல்லாம் இப்போ ஒரு ஒன் ஹவர்ல எனக்கு ரெடி பண்ணித் தரேன்னு, முடியுமா?” எனவும்,
“எஸ் சார்” என்றவள் வினோத் மேலும் ஏதாவது கூறினால் குறிப்பெடுக்க ஆயத்தமாக பேனா முனையை நோட்பாடில் பிடித்தபடி குனிந்து நின்றிருந்தாள்.
“அப்புறம் இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை சைட் அடிசீங்கள்ல?” என்று முகத்தை சீரியஸாக வைத்துக் கொண்டு வினவியவனிடம்,
“எஸ் சார்” என்றவள் பின்பு தான் என்ன கூறினோம் என்பதை உணர்ந்து நாக்கை வெளியே துருத்தி கடித்தவள்,
“நோ சார்” என்றாள் வேகமாக தலையை இடம் வலம் திருப்பி,
அவள் பதிலை ஒரு பொருட்டாய் மதியாதவன் “ஓகே தென் லீவ்” என்று வினோத் கடினமான முகத்துடன் கூறியவுடன், எழுந்து அறையை விட்டு வெளியே சென்றவள்,
“என்ன இது இவ்வளவு அப்பட்டமாவா சைட் அடிக்கிறோம், ச்ச கண்டுபிடிச்சிட்டாரே, இவரு கிட்ட கொஞ்சம் உஷாரா இருக்கணும்” என்றவள் நேராக நேத்ராவிடம் சென்றாள்.
வனிதா வெளியில் சென்றவுடன் “ச்ச நம்ம பொண்ணுங்க ரொம்ப மோசம், ஆமா சார் சைட் அடிச்சேன்னு சொன்னா கொறஞ்சா போயிடுவாங்க” என்று சலித்துக் கொண்டவன்,
“நல்ல வேலை நம்ம சைட் அடிச்சத அந்த பொண்ணு கவனிக்கலை” என்றவன் வனிதா சென்றதும் அவன் வேலை அவனை இழுத்துக் கொள்ள வேறு சிந்தனையின்றி அதில் மூழ்கினான்.
அங்கு கேன்டீனில் அமர்ந்திருந்த நேத்ராவிடம் சென்ற வனிதா, “ஹே நேத்ரா நீ சொன்னது உண்மை தான் டி, நெஜமாவே அங்க சக்கரவர்த்தி சார் பையன் வினோத்தாம் அவரு தான் அங்க இருந்தாரு, இனிமே அவரு தான் இந்த கம்பெனியை எடுத்து நடத்த போறாராம், நியூ ப்ராஜெக்ட் நளன் அண்ணாவோடது தானம்” என்றாள் ஆச்சரியம் மிகவுர.
“வினோத் அண்ணாவையும், நளனையும் பாத்தேன்னு நான் அப்பவே சொன்னேன்ல நீ தான் நம்பலை” என்ற நேத்ராவிடம்,
“ஹே சாரி நேத்ரா, அப்புறம் உங்க வினோத் அண்ணா எனக்கு நெறைய வேலை குடுத்திருக்காங்க, நான் உடனே போகணும், அதுனால நீ வீட்டுக்கு போ நான் நைட் உன் கூட பேசுறேன்” என்றவள் அவள் பரிவாரங்களுடன் ஓடிச் சென்றாள்.
வனிதா சென்றவுடன் சற்று நேரம் அங்கே அமர்ந்த நேத்ரா, “இப்போ என்ன பண்ணலாம்”, என்று யோசித்தவள் அவளுக்குப் பிடித்தமான ஒரு இடத்திற்குச் செல்ல முடிவெடுத்தாள்.
அங்கிருந்து ஆட்டோ பிடித்தவள் நேராக அந்த இடத்திற்குச் சென்றாள், தன் கைப்பையில் எப்போதும் பாதுகாப்பாக வைத்திருக்கும் சாவியை எடுத்து மெதுவாக கதவைத் திறந்தவள், உள்ளே நுழைந்ததும் உயரக் கட்டியிருந்த கூந்தலை அவிழ்த்து அவள் முதுகில் படரவிட்டாள்.
பூனை நடையிட்டு பால்கனியை அடைந்தவள் மெதுவாக எட்டிப் பார்த்தாள், அங்கே நிறைய பறவைகள் தங்கள் தாகத்தையும் பசியையும் தீர்த்துக் கொண்டிருந்தன.
ஆம் நளன் நேத்ராவை நந்தனிடம் விட்டுச் சென்ற அன்று அவர்கள் வசித்த அப்பார்ட்மெண்ட்டின் ஒரு சாவியை நந்தனிடம் கொடுத்துவிட்டுச் சென்றிருந்தான், நேத்ராவின் பொருட்களை காலி செய்வதற்கு,
ஆனால் நேத்ராவோ, அவளது பொருட்கள் எதையுமே அங்கிருந்து எடுக்க விடவில்லை, அவளுக்கு இங்கே எப்போதெல்லாம் வரவேண்டும் என்று தோன்றுமோ அப்போதெல்லாம் வந்து போவாள்.
அந்த பறவைகளுக்கு உணவு தண்ணீர் வைப்பதும் நேத்ரா தான். நளனுடன் வாழ்ந்த நினைவுகளைத் தாங்கிய அந்த அப்பார்ட்மெண்ட்டின் வெறுமை அவள் மனதினைப் பிரதிபலித்தது.
சில வினாடிகள் மறைந்திருந்து பார்த்தவள் பின்பு மெதுவாக பால்கனியில் காலெடுத்து வைத்தாள்.
“ஹே போர்டிஸ் எல்லாரும் எப்படி இருக்கீங்க? ஹே சன் சைன்… ஹாய் டிக்கி…” என்று அனைத்து பறவைகளுக்கும் பெயர் வைத்து அழைத்தாள்.
என்ன ஒரு ஆச்சரியம் மனிதர்கள் அருகில் வந்தால் சட்டென்று உடனே பறந்து சென்றுவிடும் அந்த அழகான சின்னஞ்சிறு பறவைகள், நேத்ரா அருகில் சென்றாலும் அவளைக் கண்டுகொள்ளாமல் அதன் வேலையைச் செய்து கொண்டிருந்தது.
பறவைகளுக்கு உணவு மற்றும் தண்ணீருக்கென்று வைக்கப்பட்டிருந்த குடுவைகளைப் பார்த்தவள் அதில் தீர்ந்து போயிருந்த குடுவையைக் மீண்டும் நிரப்புவதற்காக திரும்பினாள்.
திரும்பியவள் நளனின் மார்பில் மோதி அவனது கைகளில் மாலையானாள்.
“மன்னவன் இல்லாத மாளிகையில்
பெண்ணவளுக்கு என்ன வேலை?
காதலில் களிப்புற்று கண்டபடி கிடந்த
தருணங்களை நினைத்துக் கலக்கம்
கொள்ளவா?
இல்லை…
இம்மையில் செய்த அறியாப் பிழையை
மறுமையில் செய்ய விழையேன்
என்று உறுதிமொழி எடுக்கவா?
இல்லை…
காதலென்னும் கடவுச் சொல் கொண்ட
நம் கனவு இல்லத்தின்
ஒவ்வொரு மூலையிலும்
நாம் கொண்ட கூடலையும்,
ஊடலையும் நினைத்து
உள்ளம் உடைந்து அழவா?”
