Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 28
அத்தியாயம்-28
கண்களில் கண்ணீர் பெறுக, அழுகையில் மூக்கு விடைக்க உதட்டைக் கடித்தவள், அவள் காஃபியை சிங்கிள் ஊற்றிவிட்டு, கப்பைக் கிச்சனில் வைத்துவிட்டு நளன் உடைத்த பீங்கான் துண்டுகளை துடைக்க மாப் எடுத்துக் கொண்டு வந்து சுத்தம் செய்தாள்.
நேத்ரா செய்யும் வேலையை அதீத கோபத்துடன் பார்த்துக் கொண்டிருந்தானே தவிர வேறு எதுவும் கூறவில்லை நளன்.
Advertisement
சுத்தம் செய்தவள் அவள் கைப்பையை எடுத்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.
Advertisement
நேராக அவள் வீடு வந்தவள் அவலறையினுள் புகுந்து கொண்டு கட்டிலில் குப்புற விழுந்தவள் தேம்பித் தேம்பி அழலானாள்.
Advertisement
நேத்ரா வீட்டினுள் வரவும் கவனித்து விட்ட ரேணுகா “தங்கம் என்னடா ஆச்சு…” என்று வந்தவருக்கு எந்த பதிலும் கூறாமல் அழுதவளைத் தேற்றும் வழி தெரியாது அறையினுள் இருந்து வெளியேறினார் ரேணுகா.
Advertisement
சற்று நேரத்தில் வீட்டிற்க்கு வந்த நந்தன், நேத்ராவின் அறைக்குச் சென்றான். நேத்ராவின் தோளில் நந்தன் கைவைத்தவுடன் அண்ணா… என்று தோள் சாய்ந்து கதறியவளை,
“நேத்ரா ஏன் இப்படி அழற? என்ன ஆச்சு? என்ன இன்டர்வியூல மச்சான் உன்னை ஏத்தாவது சொன்னாங்களா?” என்றவனை,
உனக்கு எப்படித் தெரியும் என்பது போல் பார்த்து வைத்தவள், “உனக்கு எப்படிண்ணா தெரியும்?” என்றாள் ஆச்சரியத்துடன்.
“அது… என்று தடுமாறியவன் எப்படியோ தெரியும், அதை விடு இங்க பாரு நேத்ரா… மச்சான் வந்த உடனே உன்னை ஏத்துக்கணும்னு நெனைக்கக் கூடாது, அவரு ரொம்ப காயப்பட்டிருக்காரு, கொஞ்சம் கொஞ்சமா தான் அந்தக் காயம் ஆறும்,
அதுக்கு அவருக்கு எவ்வளவு டைம் வேணுன்னாலும் நீ கொடுத்து தான் ஆகணும், இப்படி அழுதுகிட்டு இருந்தா எல்லாம் சரியா போச்சா? ஹா… மொதல்ல அழுகையை நிறுத்தீட்டு அவரு மனசை மாத்துறதுக்கு எதாவது ஐடியா பண்ணு” என்றவனை,
“என்னண்ணா சொல்ற, ஐடியா… எப்படி?” என்றவளை
“அதையும் நானே எப்படி சொல்ல முடியும், மச்சான் கூடத் தானே இனிமே வேலை செய்யப் போற, கூடவே இருந்து அவங்க மனச கொஞ்சம் கொஞ்சமா மாத்து” என்றவன்,
“ஆனா ஒன்னு மட்டும் சொல்றேன், அம்மா கிட்ட மட்டும் திரும்பவும் ஐடியா கேக்காத” என்றவன் நேத்ராவின் அறையை விட்டு வெளியேறி விட்டான்.
நந்தன் சென்றதும் மனதினுள் தீர்க்கமான முடிவெடுத்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டு குளியல் அறைக்குள் புகுந்தாள்.
நளன் கனடா கிளம்பிச் சென்றதிலிருந்து வினோத்துடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறான் நந்தன். நளன் இந்தியா வருவது முதற்கொண்டு அனைத்தும் அவன் அறிந்த விஷயமே, ஆனால் இது நாள் வரை நேத்ராவிடம் ஒரு வார்த்தை வெளியிட்டதில்லை நந்தன்.
நேத்ரா செயலில் நந்தனுக்கு உடன்பாடு இல்லாத போது, நளனின் பிரிவை உணரவைக்கவே முயன்றான் நந்தன்.
நேத்ராவைக் கேன்டீனில் விட்டுச் சென்று வினோத் கொடுத்த வேலையை முடிக்கச் சென்ற வனிதா, அவன் கேட்ட விபரங்கள் அடங்கிய பைல்களையும், காட்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ப்ராஜெக்ட் இன்டெர்வியூவில் செலக்ட் ஆன கேண்டிடேட்ஸ்கு ஆபர் லெட்டருக்கான ட்ராப்ட்டையும் எடுத்துக் கொண்டு வினோத்தின் அறைக் கதவைத் திறந்து “எக்ஸ் கியூஸ் மீ சார்…” என்றாள்.
அவனது கணினியில் மூழ்கி இருந்தவன் கண்களை மட்டும் உயர்த்தி வனிதாவைக் கண்டுவிட்டு, அவனது இருக்கையின் பின்னே சாய்ந்து கால்களைக் குறுக்கிட்டு அமர்ந்து “எஸ்…” என்றவன் அமைதி காத்தான்.
அவனது உடல் மொழியில் ஒரு நொடி தன்னைத் தொலைத்தவள், பின் அவன் முன் சென்று பைலை நீட்டினாள். “சார் நீங்க கேட்ட டீடைல்ஸ் எல்லாம் இதுல இருக்கு, அப்புறம் ஆபர் லெட்டருக்கான ட்ராப்ட்…” என்றவள் லேப்டாப்பை அவன் புறம் நகர்த்த,
“தேங்க்ஸ்…” என்றுவிட்டு பைலை வாங்கி டேபிளில் வைத்தவன், கண்களை அவளது மடிக்கணினியில் பதிய விட்டான்.
கண்களின் கருமணிகள் மட்டும் அங்குமிங்கும் அசைய, அழுத்தமான உதடுகள் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் இருக்குமாறு அமர்ந்திருந்தவனைக் கண் கொட்டாமல் பார்த்தவளைக் கண்டு மடிக்கணினியில் பார்வையை பதித்தவாறு தொண்டையைச் செறுமியவன்,
“ஓகே குட், செலெக் ஆன கேண்டிடேட்ஸ் லிஸ்ட் இந்த பைல்ல இருக்கு, என்று பைலை அவள் புறம் நீட்டியவன், நீங்களே அவங்களுக்கு ஆபர் லெட்டர் அனுப்பீருங்க எச்.ஆர் மூலமா, தென் அவங்களுக்கு ஜோய்னிங் டேட்… டுமாரோ, தட்ஸ் இட்” என்றவன் முடித்துக் கொள்ள,
அவன் கொடுத்த செலெக்டேட் கேண்டிடேட்ஸ் லிஸ்ட்டை வேகமாக வாங்கிப் பார்த்தவள், அதில் முதலாவதாக இடம் பெற்றிருந்த நேத்ராவின் பெயரைக் கண்டு மகிழ்ச்சியுற்றாள்.
அவளது மகிழ்ச்சியைக் கண்டவன், “வாட் மிஸ் வனிதா, உங்களுக்கு தெரிஞ்சவங்க யாராவது செலக்ட் ஆயிருக்காங்களா? இவ்வளவு ஹாப்பியா இருக்கீங்க?” என்றான் கேள்வியாக,
“ஆமா சார், நேத்ரா… அவள் என்னோட பெஸ்ட் பிரெண்ட்” என்றாள்.
“வாட் அவங்க உங்க பிரெண்டா” என்று அதிர்ச்சியுற்றவனை,
“ம்ம் எஸ் சார், நாங்க ஸ்கூல் படிக்கும் போது இருந்தே பிரண்ட்ஸ்” என்றாள்.
“அப்போ நளன்? நளனை தெரியுமா உங்களுக்கு?” என்றவனிடம்
“நளன் அண்ணாவை தெரியுமாவா? நேத்ராவும் அண்ணாவும் சந்திக்கிறதுக்கு முதல் காரணமே நானும் என்னோட பைக்கும் தான் சார்” என்றவளை,
“என்ன? பைக்கா?” என்றவரிடம், அன்று நடந்தது அனைத்தையும் கூறியவள்,
“நேத்ரா அம்மா கொஞ்சம் அப்படிதான் சார், நான் அப்போவே சொன்னேன் என்னோட பேச்சைக் கேக்கவே இல்ல அவள், இப்போ டெய்லி அழுகுறா அண்ணாவை நினைச்சு, இனிமேலாவது ரெண்டு பேரும் ஒன்னு சேரணும்” என்று பேசிக்கொண்டே போனவள் ஒரு பெருமூச்சுடன் நிறுத்தவும்,
“ம்ம் எஸ் நளனும் ரொம்ப கஷ்டப்படுறான், சிஸ்டர் இல்லாம” என்றவன்,
பின் ஏதோ ஞாபகம் வந்தவனாக “ஆமா நீங்க சிஸ்டர் பிரெண்டுன்னு சொல்றீங்க, நான் உங்கள ஒரு தடவை கூட சிஸ்டர் கூட பாத்தது இல்லையே? ஈவன் அவங்க நிச்சயதார்த்தம், கல்யாணம் இப்படி எதிலையும் “என்றான் அவன் டேபிளில் இருந்து ஒரு அடி முன்னே வந்து,
வலக்கை விரல்களை வினோத்தின் நெற்றியில் குவித்தது அவனைப் பின்னே தள்ளியவள், “ஐயோ ஆமா சார், எனக்கும் ஒரே ஆச்சரியம்! நேத்ரா எப்பவும் வினோத் அண்ணா வினோத் அண்ணான்னு சொல்லுவா, ஆனா நீங்க இவ்வளவு ஹாண்ட்சம்மா இருப்பீங்கன்னு அவ ஒரு தடவை கூட சொன்னதே இல்லை” என்றவள் அவனைத் பின்னே தள்ளிவிட்டு, அவள் சீட்டின் சாய்ந்து கைதட்டி சிரிக்கவும்,
அவள் தள்ளியதில் லேசாக பின்னே நகர்ந்தவன், அமர்ந்த வாக்கிலேயே கைகளை மார்பின் குறுக்கே கட்டியவாறு “சரி இப்போ தெரிஞ்சிருச்சில்ல, என்ன பண்ண போறீங்க?” என்றான்.
வினோத் கேட்டவுடன் “அய்யயோ உளரீட்டோம் போலவே…. வயக்குடுத்து மாட்டிக்கிட்டியே வனிதா! என்று நினைத்தவள் சாரி சார் நான் தெரியாம கைய வச்சு… உங்களை” என்றவள் வினோத் எதுவும் பேசாமல் வனிதாவைக் கூர்ந்து நோக்கவும் இருக்கையிலிருந்து எழுந்தாள்,
நேத்ராவின் செயலில் வெளியில் வரத்துடித்த சிரிப்பை அடக்கியவன் “ஹியர் இஸ் யுவர் லேப்டாப், மெயில் சென்ட் பண்ணீட்டு நீங்க வீட்டுக்கு கிளம்பலாம்” என்றவன் அவள் கொடுத்த பைலில் மூழ்கிப்போக,
தப்பித்தோம் பிழைத்தோம் என்று வினோத்தின் அறையில் இருந்து வெளியில் வந்தாள் வனிதா. “ஐயோ இவரை பாத்தா மட்டும் மனசுல இருக்குறத அப்படியே சொல்லீடுறியே வனிதா” என்று புலம்பிக்கொண்டே…
வனிதா வெளியில் செல்வதைக் கண்ட வினோத் புன்னகையை உதட்டில் தவழவிட்டுக் கொண்டான், அவளின் செய்கையில்…
