Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

மகரந்தம் தாங்கும் மலரவள்

Kamali Maduraiveeran’s மகரந்தம் தாங்கும் மலரவள் 7(2)

அத்தியாயம்-7(2)

உள்ளே நான்கைந்து பேர் அழைக்கப்பட அடுத்த ஆளாக “நேத்ரா ஈஸ்வரமூர்த்தி” என்ற பெயர் அழைக்கப்பட்டது.

நிதானமாக எழுந்தவள் ஆழ மூச்செடுத்து விட்டு, கிரே நிற பெயர் பலகையில் கருப்பு நிற வண்ண எழுத்துக்கள் மின்ன வினோத் சக்கரவர்த்தி என்ற பெயர் பலகையைத் தாங்கிய அறைக் கதவை திறந்தாள்.



Advertisement

அந்த கனமான கதவை தள்ளியவள் எதிரே கண்டது, அமர்ந்திருந்த இருவரை அதில் ஒருவன் வினோத், மற்றொருவன் நளன்.

Advertisement

இந்தியா கிளம்புவதற்கு முன்பே நளனுக்கு உதவுவதற்காக வினோத்தின் கம்பெனி மூலம் கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் சென்னையில் வரபோவதற்கான ஆரம்ப கட்ட வேலையான ப்ரொஜெக்ட்டிற்கு ஆள் எடுக்கும் வேலையை ஆரம்பித்திருந்தனர் இருவரும்.

Advertisement

அதாவது வினோத்தின் கம்பெனி மூலம் இந்த ப்ரொஜெக்ட்டுக்கு ஆள் எடுக்க விளம்பரம் கொடுத்திருந்தனர்.

Advertisement

அதற்க்கு தான் நம் நேத்ரா அப்ளை செய்தது, இந்த விஷயம் வனிதாவுக்கும் தெரியாது. 

எதிரில் இருந்த கம்ப்யூட்டரில் ஏதோ வேகமாக டைப் செய்து கொண்டிருந்த நளனைக் கண்டு ஒருநொடி ஸ்தம்பித்து நின்றாள். 

கதவைத் திறந்தவுடன் நேத்ராவைக் கண்டு கொண்ட வினோத் அவன் இருக்கையிலிருந்து எழுந்து நின்றான்.

“இந்தியா வந்து ரெண்டு நாள் தான் ஆகுது அதுக்குள்ளேயேவா, ஆண்டவா இது என்ன சோதனை, இவனோட ரியாக்ஷன் எப்படி இருக்கும்னே தெரியலையே” என்று நேத்ராவையும் நளனையும் பார்த்தவன் அமைதியாக நேத்ராவை வெறித்தான்.

வினோத்தைக் கண்டவுடன் “அண்ணா…” என்று முணுமுணுத்த வார்த்தைகள் வாய்க்குள்ளேயே அடங்கி விட, திருதிருவென விழித்துக்கொண்டு நின்றாள் நேத்ரா.

வினோத் எழுந்தவுடன் அவன் கம்ப்யூட்டரில் டைப் செய்து கொண்டிருந்த நளன் “என்னடா வினோ ஏன் எழுந்துட்ட, பிரேக் எடுக்கணும்மா?” என்றான் அவன் கணினியில் பார்வை பதித்து.

வினோத்திடம் பதில் இல்லாமல் போகவே, நிமிர்ந்து “டேய் என்ன டா…? பிரேக் எடுக்கணும்மா?” என்றவன்,

வினோத்தின் பார்வை சென்ற திசையைத் தானும் நோக்கினான்.

அங்கே நின்றிருந்த நேத்ராவைக் கண்டவனின் கண்கள் கூர்மை பெற, தாடைகள் இறுக, பற்களை நறநறவென்று கடித்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு,

டைப் செய்து கொண்டிருந்த விரல்களை நிறுத்தி, இருக்கையில் நிமிர்ந்து அமர்ந்தவன் “எஸ் கம் இன்” என்றான்.

நளன் என்ன செய்வான் என்று பயந்துகொண்டிருந்த வினோத் அவனது “எஸ் கம் இன்” என்ற வார்த்தையில் மீண்டும் அவன் சேரில் ஸ்லோ மோஷனில் அமர்ந்தான்.

நளனைக் கண்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் கதவருகில் நின்றிருந்த நேத்ரா, திரு திருவென விழித்துக் கொண்டிருக்க, நளனின் “எஸ் கம் இன்” என்ற வார்த்தை அவள் காதுகளில் விழாமல் போனது.  

மீண்டும் அடிக்குரலில் “ஆர் யூ ஹியர் போர் அன் இன்டெர்வியூ?” என்றான் சிம்மக்குரலில்.

இப்போது ஆம் என்று தலையை மேலும் கீழும் ஆட்டியவளை,

“தென் கம் இன்” என்றான் துளைக்கும் பார்வை கொண்டு.

நேத்ரா அவன் முன்னே வந்ததும் கையை நீட்டியவன் அவளிடம் பைலை பெற்றுக் கொண்டவன் “சீட்…” என்றான்.

நடப்பதை புரியாமல் பார்த்துக் கொண்டிருந்தது ஒரு ஜீவன் அது நம் வினோத்.

நேத்ரா அமர்ந்ததும் பைலைத் திருப்பி பார்த்தவன் “லாஸ்ட் வீக் வேலை பாத்திட்டு இருந்த கம்பெனில இருந்து ஏன் நின்னுட்டீங்க?” என்றான் பைலை பார்த்துக் கொண்டே.

“அது…அது… எனக்கு விருப்பம் இல்லை…, அதாவது பிடிக்கலை” என்றாள் உண்மையை மறைத்து.

“அப்போ இங்கேயும் வேலைக்கு சேந்துட்டு பிடிக்கலைன்னா பாதியில நின்றுவீங்களா?” என்றான் குதர்க்கமாக.

“வேகமாக நோ நோ என்றவள் இல்ல அப்படிலாம் பண்ண மாட்டேன் சார்” என்றாள் அமைதியாக,

பைலை மூடி வைத்துவிட்டு கணினியில் பார்வையைச் செலுத்தியவன், ப்ராஜெக்ட் சம்மந்தமாக சில கேள்விகளை நேத்ராவிடம் கேட்டான் அவன் கணினியை பார்த்துக்கொண்டே,

“கார்ஜியஸ் கிளாத் ஹவுஸ் ப்ரொஜெக்ட்ல வேலை செய்யணும்னா பங்ச்சவாலிட்டி ரொம்ப முக்கியம், அண்ட்… என் கூட அதிக நேரம் இருக்க வேண்டி வரும்” என்றவன் நிறுத்தி அவள் முகம் பார்த்து,

“அதுவும் தனியா” என்றவனை நிமிர்ந்து பார்த்து முறைத்தவளிடம், 

“ஐ மீன்… ப்ராஜெக்ட் சம்மந்தமா சைட்டுக்கு போக வேண்டி வரும், தென் உங்களுக்கே தெரியும் இது பாரின் கம்பெனி சோ எல்லாமே எனக்கு பக்காவா இருக்கணும்”

“இதெல்லாம் உங்களால முடியுமா” என்றவனிடம்,

“அப்போ நம்ம ஊரு கம்பெனில பர்பெக்ஷன் தேவையில்லையா? என்று கேட்கத் துடித்த நாவை அடக்கியவள், எஸ் சார் என்னால முடியும்…” என்றாள் நேத்ரா.

“நீங்க இப்போ சரின்னு சொல்லீட்டு அப்புறம் நீங்களே நினைச்சாலும் உங்களால என்கிட்டே இருந்து… சாரி இந்த ப்ரொஜெக்ட்ல இருந்து விலக முடியாது, நல்லா யோசிச்சுக்கோங்க” என்றான் அழுத்தமான பார்வையுடன்,

“இல்லை சார் நான் கண்டிப்பா பண்றேன்” என்றவளை

“தென், வாட்ஸ் யுவர் நேம்?” என்றான்.

எதே என்பது போல் பார்த்து வைத்த வினோத் “டேய் உனக்கே இது ஓவரா இல்ல” என்றான் மனதிற்குள்.

பின் நேத்ரா கொடுத்த பைலை எடுத்து பார்த்த நளன் “நேத்ரா… மிஸ் ஆர் மிஸ்ஸஸ்?” என்றான்.

நேத்ரா அமைதியாக இருக்கவும் அவள் முன் இருமுறை சொடுக்கிட்டவன் பின் அவன் சுழல் நாற்காலியில் நன்றாக பின்னே சாய்ந்து, கால்களை குறுக்கிட்டு அமர்ந்து கொண்டவன்,

“ஐ ஆம் ஆஸ்கிங் யூ… மிஸ் ஆர் மிஸ்ஸஸ்?” என்றான் மீண்டும் துளைக்கும் பார்வையுடன்.

வார்த்தை வெளி வராமல் “மிஸ்ஸஸ்…” என்றவளை

“ஆஹ் கேக்கலை…” என்றவன் அவன் வலக்கையைக் காதுக்கு கொடுக்க,

 “மிஸ்ஸஸ்” என்றாள் மீண்டும் சற்று அழுத்தமாக,

“மிஸ்ஸஸ் வாட்…”என்று அவன் மேஜையில் கைவைத்து சற்று முன்னே வந்து அடிக்குரலில் கர்ஜித்தவனிடம்,  

கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருக்க, இந்த அறையிலிருந்து வெளியேறிச் சென்றால் போதும் என்ற தொனியில் இருந்தவள்,

எழுந்து நின்று அவன் முகத்தை நேராக பார்த்து “மிஸ்ஸஸ் நேத்ரா… மிஸ்ஸஸ் நேத்ரா நளன்” என்று சத்தமாகக் கத்தியவள், அந்த இடத்தை விட்டு வெளியேற நினைத்து, பின்னால் நகர்ந்தாள்.

மீண்டும் சொடுக்கிட்டவன் “ஹலோ மிஸ்ஸஸ் நேத்ரா நளன், யுவர் பைல்” என்றவன் பைலை அவளிடம் கொடுத்துவிட்டு,

“சீ யூ சூன், வி வில் கால் யூ பாக்” என்றான் நளன்.

நேத்ரா அவள் பைலை வாங்கிக் கொண்டு வெளியே சென்றவுடன், நளன் அவன் கால்கள் இரண்டையும் டேபிள் மேல் தூக்கி வைத்தவன், கைகளை மடக்கி அவன் தலைக்கு பின்னே கொடுத்து ஆழ மூச்செடுத்து கண்களை மூடினான், சிரிப்புடன்.

“டேய் என்னடா நடக்குது இங்க, நீ என்ன பண்ண போறியோன்னு நான் பயந்துகிட்டு இருந்தா, நீ இவ்வளவு கூலா பேசீட்டு இருக்க, சிரிக்க வேற செய்யுற” என்றான் வினோத் நளனின் முகத்தைப் பார்த்து.

“தெரியலை வினோ, என்னோட ஹனிய பாக்குறதுக்கு முன்னாடி வரைக்கும் கோபமா தான் இருந்தேன், ஏன் அவள் கூட பேசும் போது கூட கோபமா தான் இருந்தேன்,

ஆனா அவள் என்கூட இருந்த இந்த நிமிடங்கள் என்னையும் அறியாம எனக்கு சந்தோஷத்தை கொடுக்குது, அவளை என் கூடவே இருக்க வைக்கனுன்னு தோணுது” என்று கண்களை மூடி விரிந்த புன்னகையுடன் ஆழ்ந்து அனுபவித்துப் பேசியவன். 

சரி இதுக்கு மேல என்னால இங்க இருந்து இன்டெர்வியூ கண்டெக்ட் பண்ண முடியாது, நான் கிளம்புறேன், நீயே கவனிச்சுக்கோ” என்றவன் அறையை விட்டு வெளியேறியிருந்தான்.

 

“உன் கன்னக்குழியில் வீழ்ந்து

 

மூழ்க நினைத்த நான்…

 

உன் கரம் கோர்த்து

 

முடிவில்லா தூரம்

 

நடக்க நினைத்த நான்…

 

உன் அண்மையில்

 

எனக்குள் இருக்கும் மென்மையை

 

உணரும் நான்…

 

இப்போது நீ என் முன்னே வருகையில்

 

என்ன உணர்கிறேன் நான்…?”

 

Kamali Maduraiveeran நாவல்களை ஆடியோ வடிவில் கேட்க விரும்புவோருக்காக,

https://www.youtube.com/channel/UCrluBa9P6MrjZOAjoVkoJhQ

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!