Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Kanavellam nee thanae episode-9

கனவெல்லாம் நீ தானே

எபிசொட்-9

சமீரா நினைத்து கொண்டிருந்தாள் , திடீர் என்று எப்படி விக்ரம் கு கல்யாணம் நடந்தது . அவன் மிக பெரிய செல்வந்தன் , அவனுக்கு இருக்கும் செல்வாக்குக்கு அவனுடைய திருமணம் ஒரு திருவிழா போல் இருக்க வேண்டும் ஆனால், யாருக்கும் தெரியாமல் எப்படி திருமணம் நடந்தது . என்று அவள் அவளையே போட்டு கேள்வி கேட்டு கொண்டிருந்தாள் ஆனால் அவளுக்கு ஒரு பதிலும் கிடைக்கவில்லை அவளால் அவனிடமும் கேட்க முடியாது . அவனிடம் கேட்டால் அவன் அவளை எரித்து விடுவான் , ஆனால் என்ன செய்ய அவளது காதல் அவனை விட்டு கொடுக்க அவள் மனம் இடம் கொடுக்க வில்லை . என்ன நடந்தது என்று கண்டுபுடிக்க வேண்டும் என்று தீர்மானித்து கொண்டாள். அதற்கு முதல் அவனது மனைவி யார் என்று கண்டுபுடிக்க வேண்டும் அவளை சந்தித்து என்ன நடந்தது என்று கேட்க வேண்டும் என்று முடிவு எடுத்தாள் ஆனால் அவனுக்கு தெரிந்தால் அவளை எரித்துவிடுவான் என்ன செய்ய என்று யோசித்தாள். அப்போது விக்ரம் சமீராவை அழைத்தான் . அவளிடம் தனக்கு என்ன மீட்டிங் இருக்கு என்று சொல்ல வேண்டும் . தனக்கு கல்யாணம் ஆயிட்டு இனி ஆஃபிஸில் அதிக நேரம் இருக்க முடியாது அவனது மனைவி தனியாக இருப்பாள் என்று அவளை வெறுபேற்ற சொன்னான் . சொல்லிவிட்டு அவள் முகத்தை பார்த்தான் அவள் முகம் சுருங்கி பொய் இருந்தது என்னவோ அவள் தலையில் இடி விழுந்தது போல் . அவன் அவளை பார்த்து மனதுக்குள் சிரித்தான் . அவனுக்கு மிகப்பெரிய திருப்தி , இனி இவளுடைய தொல்லை இருக்காது , தனக்கு கல்யாணம் ஆனதால் அவள் இனி தன்னிடம் அவளை கவருமாறு நடந்து கொள்ள மாட்டாள் என்று மகிழ்ச்சி அடைந்தான் . அவன் அவளை வெளியே போக சொல்லிவிட்டு அவன் வேலையை தொடர்ந்தான் . அவனுக்கு இப்போது வரை நம்ப முடிய வில்லை தனக்கு கல்யாணம் எலாம் நாடாகும் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை . அவன் மிகவும் சந்தோசமாக இருந்தான் . அப்போது சமீரா உள்லே வந்தாள். அவனிடம் , ” விக்ரம் சார் , இணைக்கு உங்களுக்கு எந்த மீட்டிங்கும் இல்லை நீங்க வேண்டும் என்றால் நீங்க வீட்டுக்கு கிளம்பலாம் ” என்றாள். அவன் அவளிடம் நான் வீட்டுக்கு பொய் என் மனைவியை பார்க்க போகிறேன் புதுசா வேற கல்யாணம் ஆயிருக்கு என் மனைவி என்னை எதிர் பார்ப்பாள் என்றான் . அவளுக்கு ஆத்திரமாக வந்தது இருந்தும் அவனிடம் ஒன்றும் சொல்ல வில்லை தான் கிளம்புவதாக கூறி சென்றாள். அவனுக்கு ஆச்சர்யம் , தான் எப்படி இப்படி அவளிடம் பேச முடிந்தது இதற்கு முன்னாடி தான் வாழ்வில் ஒரு சுவாரசியம் கலாட்டா கிண்டல் என்று ஒன்றுமே இல்லை ,ஆனால் இன்றோ அவன் எல்லாம் செய்கிறான் . அவனுக்கு அந்த தருணம் மிகவும் பிடித்தது . அவன் அந்த தருணத்தை ரசித்தான் . அவள் தன் வாழ்வில் வந்து ஒரு நாள் தான் ஆகிறது அதுக்குள்ளயே தன்னை இப்படி மாற்றி விட்டாள் என்று அனன்யாவை நினைத்தான் . ஆனால் அவனுக்கு பயமும் இருந்தது உண்மை தெரிந்தால் என்ன வாகும் என்று . அவன் அவனது ஆஃபிஸில் அவனுக்கு அடுத்து இருக்கும் வேலை ஆட்களை எல்லாம் அழைத்து தனக்கு கல்யாணம் ஆகிவிட்டது தான் ஆபீஸ் கு அப்போ அப்போ தான் வருவேன் என்ன என்ன வேலையோ அனைத்தையும் தனக்கு முன்னாடியே சொல்ல வேண்டும் தான் அவசியம் என்றால் கண்டிப்பாக வருவேன் இல்லை என்றால் நீங்களே பார்த்து கொள்ளுங்கள் , கொஞ்ச நாளைக்கு என்றான் . அவர்களும் சரி என்றார்கள் சிரித்து கொண்டு . அவர்கள் அவனுக்கு வாழ்த்துக்கள் சொன்னார்கள் , ஆனால் சமீரா மட்டும் அவனை முறைத்தாள் . அவன் சிரித்தான் . அவன் ஆபீசை விட்டு கிளம்பினான் .

அனன்யா மேல் விக்ரமிற்கு இருப்பது என்ன ? காதலா இல்லை நட்பா இல்லை அவளது உடல் நிலைக்காக பரிதாபமா ?
அனன்யா உண்மை தெரிந்தால் அவனை ஏற்பால ?
சமீரா அனன்யாவை பார்த்தால் என்ன வாகும் ?
விக்ரம் சமீராவை வெறுபேற்ற சொன்னதாக அவனை அவனே ஏமாற்றுகிறானா ?



Advertisement

இனி வரும் தொடர்களில் …………………….
தொடரும் …………

உங்களுக்கு இந்த கதை பிடித்திருந்தால் லைக் பண்ணுங்க கமெண்ட் பண்ணுங்க,
நன்றி …..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!