Skip to content
Post Views: 732
1
சொன்னத கேட்டதுமே அம்மம்மா சொக்குது என்மனமே…
எண்ணிக்க நீ கணக்க வாங்கியத திருப்பி நீ கொடுக்க…
Advertisement
நீ ஒண்ணா தந்தத பத்தா திருப்பி நிச்சயம் நான் தருவேன்…
வேலன் குடில் என்ற பெயரிட்ட அந்த பெரிய வீட்டில் நிச்சயதார்த்த ஏற்பாடுகள் மிகவும் கலகலப்பாகவும் மகிழ்வாகவும் நடந்து கொண்டிருந்தது.
Advertisement
வீட்டின் பெரியவர் மூத்தவர் வேலன், அவரது மனைவி சரோஜா, இவர்களுக்கு ஒற்றை மகனாக கருணாகரன், அவரின் மனைவி தேவகி.,
Advertisement
இவர்களின் மகன் நித்திலனுக்கு தான் திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தது.
மற்றவர் அவரவர் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாலும், வேலன் யோசனையோடு அமர்ந்திருப்பதை பார்த்த சரோஜா தான்.,
“ஏன் இவ்வளவு யோசனை, எதுவும் குறை இருக்குனு நினைக்கிறீங்களா”, என்றார் கேள்வியாக,
Advertisement
அருகில் இருந்த கருணாகரனும், ‘என்ன ஆச்சு’ என்று யோசனையோடு தன் தந்தையை ஏறிட்டார்.
வேலனும், “அதெல்லாம் ஒன்னும் இல்ல, இந்த பொண்ணு கல்யாணத்துக்கு சம்மதிக்க மாட்டேன் ன்னு சொல்லுறாளே, இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணதுக்கு அப்புறம்., நித்திலனுக்கு ஏற்பாடு பண்ணி இருந்தா அது சந்தோஷமா இருந்திருக்கும்., இப்ப யோசனையா இருக்கு, கல்யாணத்துக்கு வர்றவங்க, சொந்தம் ன்னு எல்லாரும் கேப்பாங்க இல்ல., ஏன் பேத்திக்கு பண்ணல அப்படி ன்னு, அந்த யோசனை தான்”, என்று சொன்னார்.
சரோஜா பாட்டியும், “இது தானா, இத உங்க பேத்தி கிட்ட கேட்க வேண்டியது தானே”, என்று கேலியாக சொன்னார்.
அவரும் “மேல் படிப்பு படிக்கணும் னா, இந்த படிச்சிட்டு தான் இருக்கா, இன்னும் ஒரு மாதம் தான், அப்புறம் ஒரு வருஷம் டிரைனிங் அதோட படிப்பு முடியும்., சரி இப்பவே மாப்ள பார்க்கலாம் பேசி வைக்கலாம் என்றாலும்., பார்க்க விடமாட்டா, நானும் இப்போ இதே யோசனைல தான் இருக்கேன்., அவளுக்கு முடிச்சிட்டு தான் நித்திலனுக்கு முடிக்க நினைச்சேன்., ஆனா ஜோசியர் தான் இவனுக்கு இப்போ கல்யாண நேரம் கூடி வந்திருச்சு பேசுங்கன்னு சொல்லிட்டாரு., அதனால தான் உடனே பேச வேண்டியதா போச்சு”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
கருணாகரன் தான் “என்னப்பா பொண்ணு வீடு எதுவும் உங்களுக்கு மனசுக்கு குறையா இருக்கா”, என்று கேட்டார்.
“அப்படி எல்லாம் இல்லடா, பொண்ணு பாத்துட்டு வந்தது எல்லாமே மனசு திருப்தி தான்.,
“இந்த பேத்தி பொண்ணு நினைச்சா தான்”, என்று யோசனையோடு சொன்னார்.
“இப்ப கிளம்பி வருவா, நீங்களே பிடிச்சு வைச்சு கேளுங்க”, என்று கருணாகரன் மனைவி தேவகி சொல்லிவிட்டு சென்றார்.
தன் படிப்பை இன்னும் ஒரு மாதங்களுக்குள் முடிக்கவிருக்கும் அந்த வீட்டின் இளவரசி இறங்கி வர தாத்தாவோ, பாட்டியிடம் “நீ பேச ஆரம்பி, அதற்கு அப்புறம் நான் கேட்கிறேன்”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.
மருத்துவத்துறையில் மேற்படிப்பை படித்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு திருமணம் செய்துவிட்டு தான் அவளது அண்ணனுக்கு மணம்முடிக்க வேண்டும் என்று பெரியவர்கள் விரும்பினர், அவளோ திருமணம் என்ற பேச்சை எடுத்தாலே வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.
படிப்பு இன்னும் ஓரிரு மாதத்தில் முடிந்து விட்டாலும், அதன் பிறகு ஏதாவது ஒரு ஊர் பக்கம் இருக்கும் அரசு மருத்துவமனையில் ட்ரைனிங் செல்ல வேண்டும். அதன் பிறகு தான் படிப்பு முடிந்ததாக எடுத்துக் கொள்ளப்படும்.
எனவே இன்னும் இரண்டு மாத படிப்பு மட்டும் தான் என்று வீட்டில் சொல்லிக் கொண்டிருந்தனர்.
அவளும் வந்து அமரவும் பாட்டி தான், “சாப்பிடலையா மா”, என்று கேட்டார்.
“சாப்பிடனும் பாட்டி” என்று சொல்லியபடி தன் கட்டியிருந்த புடவையை சரி செய்து கொண்டிருந்தாள்.
“பாட்டி” என்று பேச்சை ஆரம்பித்தவள், “இன்னைக்கு அந்த சாரி கடைக்கு போலாம்னு சொல்லி இருந்தீங்க இல்ல., ஈவினிங் கிளம்பி ரெடியா இருங்க., நான் வரேன், வந்தவுடனே போவோம்”, என்று சொல்லியவளை பார்த்து.,
“ஊர்ல உள்ள பிள்ளைகள் எல்லாம் விதவிதமா டிரஸ் போடுது., புது மாடல் மாடலா டிரஸ் வருது, இவ ஒருத்தி சேலை தான் கட்டுவேன் ன்னு சுத்துறா, தறில நெய்த சேலை னா தேடி வாங்குறா, இப்படி சேலை தான் வேணும், இந்த மாதிரி சாப்டா வேணும் அப்படின்னு சொல்லி பார்த்து பார்த்து தேடிட்டு அலையுதா”, என்று சலிப்போடு சொல்லவும்.,
“மாடன் டிரஸ் போடலாம் பாட்டி, ஆனால் எனக்கு பிடிக்கனும் இல்ல., இப்போ பிரண்ட்ஸோட டூர் போகும் போது ஜீன் போடலாம் குர்த்தி போடலாம்., ஹாஸ்பிடல் போகும் போது ஈவினிங் டூட்டி அந்த மாதிரி ஷிப்ட் இருந்தா., சுடிதார் போட தான் செய்றேன்., எனக்கு சாரி புடிச்சிருக்கு, அதனால சாரி கட்டுறேன்., நீங்க எதுக்கு இதெல்லாம் சொல்றீங்க., உங்களை மாடர்ன் டிரஸ் போட சொல்லி நான் ஏதாவது சொல்றனா, இல்ல தானே”, என்று சொன்னாள்.
தாத்தாவோ சிரித்துக்கொண்டே “நீ சும்மா இரு” என்று பாட்டியை பார்த்து சொல்ல.,
அவரோ “ஊர்ல உள்ள பிள்ளை எல்லாம் எப்படி இருக்கு, 20 வயசு, 21 வயசுல எவனையாவது லவ் பண்ணிட்டு வந்து நிக்குது., இங்க பாருங்க 25 வயசு ஆக போறது, கல்யாணம் பேச்சு எடுத்தாலே வேண்டாங்க., ஏம்மா எப்ப தான் கல்யாணம் பண்ணிக்க போற”,என்று பாட்டி கேட்கவும்.,
அவளும் சிரித்துக் கொண்டே “கல்யாணம் தானே பாட்டி பண்ணிட்டா போச்சு, முதல்ல அண்ணனுக்கு பண்ணி வைங்க, அண்ணி வரட்டும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்க., எனக்கு எப்ப கல்யாணம் வேணும்னு தோணுதோ அப்ப நான் சொல்றேன்”, என்று சொன்னாள்.
‘இந்த காலத்து பிள்ளைகள நினைச்சா தான் பயமா இருக்கு., இவ சொல்ற மாதிரி எல்லாம் எப்படி தோணும், எப்ப பார்த்து எப்படி முடிக்க’, என்று வாய்க்குள் முணுமுணுத்தார்.
இவளோ, “ஏம் பாட்டி ஏதாவது முனுமுனுத்திங்க” என்று கேட்டுக் கொண்டே எழுந்தவள், “இருங்க நான் சாப்பாடு இங்க எடுத்துட்டு வரேன்”, என்று சொல்லி டைனிங் டேபிளுக்கு சென்றவள்,
தனக்கான உணவை எடுத்துக் கொண்டு பாட்டிக்கு எதிரே இருந்த சோபாவில் வந்து அமர்ந்தவள்., தாத்தாவை நிமிர்ந்து பார்த்தாள், இன்னைக்கு ஒரு நாளைக்கு ஹால்ல உக்காந்து சாப்பிடுறன்னு பெர்மிஷன் எல்லாம் கேட்க மாட்டேன் தாத்தா., எங்க உக்காந்து சாப்பிட்டா என்ன., சாப்பிட கூட பிரீடம் இல்லையா”, என்று தாத்தாவின் பார்வைக்கு பதில் சொல்லிவிட்டு.,
பாட்டியிடம் “இப்ப கேளுங்க, நான் சொல்றேன்”, என்று சாப்பிட தொடங்கினாள்.,
அம்மா தான், “எப்ப கல்யாணத்துக்கு சம்மதிப்ப, உனக்கு எப்படி மாப்பிள்ளை வேணும்னு சொல்லு., அப்படி நாங்களாவது பாப்போம் இல்ல”, என்று சொன்னார்.
“நீங்க பாக்குற மாப்பிள்ளையா இருந்தாலும் சரி, நான் பார்த்து எனக்கு உடனே பிடிக்கிற மாப்பிள்ளையா இருந்தாலும் சரி., ஆனா எனக்கு தோணனும்., அப்பதான் நான் கல்யாணம் பண்ணிப்பேன்”,என்றாள் சிரித்துக்கொண்டே.,
“அப்படி என்னடி தோணனும்”, என்று அந்த பக்கமாக வந்த அவள் அம்மா கேட்டார்.
“தோணுமா, அவரை பார்த்த உடனே தோணும்., இவர் தான் எனக்கு அப்படின்னு தோணும்”,என்றாள்.
“அப்புறம்” என்று பாட்டி கேட்கவும்,
“அவருக்காக எவ்வளவு நாள் என்றாலும், நான் காத்திருந்து கல்யாணம் பண்ணிக்குவேன்”, என்று சொல்லவும்.,
“ஏண்டி என்னதான் சொல்ல வர்ற”, என்று அவள் அம்மா கேட்டார்.
“ஒருத்தவங்கள பார்க்கும் போதே புடிக்கணும்., ஒரு வேளை பார்த்த உடனே பிடிக்கலை னா, திரும்ப ஒரு ரெண்டு மூணு தடவ அவங்கள பார்க்கும் போது இவங்க கூட இருந்தா நல்லா இருக்கும் ன்னு தோணனும்., அந்த மாதிரி ஒரு தோணல் யாரை பார்த்து வருதோ அவங்கள கல்யாணம் பண்ணா லைப் பெஸ்ட்டா இருக்கும்”, என்றாள்.
“சரி உனக்கு ஒருவேளை யாரையும் பார்த்து அப்படி தோணலை னா, என்ன செய்ய”, என்று கேட்டார்.
“அப்படி தோணலை னா கஷ்டம் தான், கல்யாணம் ன்ற கான்செப்ட் பற்றி நான் இப்போதைக்கு யோசிக்கவே யோசிக்க வேண்டிய விஷயம் தான்”, என்று சொன்னாள்.
அவளையே பார்த்துக் கொண்டிருந்த அவளது அம்மா, “அத்த அது என்ன ன்னு நீங்களே கேளுங்க”, என்று சொல்லிவிட்டு சென்றார்.
பாட்டி மீண்டும் பிடித்துக் கொண்டார்., “அது எப்படி தோணும், தெரியாம தான் கேட்கேன் அது எப்படி தோணும்., எனக்கு உங்க தாத்தாவை கொண்டு வந்து காமிக்கும் போது, நான் உங்க தாத்தா முகத்தை சரியா கூட பாக்கல, ஏன் உங்க அப்பா அம்மாவை பார்க்கும் போது ஆகட்டும், இப்போ உங்க அண்ணனுக்கு பார்த்திருக்க பொண்ணு ஆகட்டும், அந்த மாதிரி சொல்லலையே”, என்று சொன்னார்.
“பாட்டி ஒரு சிலருக்கு பார்த்த உடனே புடிச்சிருமா இருக்கும்., நீங்க சொல்லுற மாதிரி வீட்ல பாத்த பொண்ணோ, இல்ல வீட்ல பார்த்த பையனோ., இவங்க நமக்கு ஓகே அப்படின்னு தோணும் சரியா., ஆனா கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறம்., நல்லா கவனிங்க கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்கு அப்புறமா, ஐயோ இருந்திருந்து இவங்களையா கல்யாணம் பண்ணுனோம் அப்படிங்கற ஒரு ஃபீல் வரக்கூடாது., அந்த பீல் எனக்கு எந்த சூழ்நிலையும் வந்து விடக்கூடாது., அவங்க கிட்ட இருக்குற சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிக்கணும்., அதே மாதிரி தான் அவங்களும்., ஒருவேளை என்னை புடிக்கலன்னு அவங்க சொன்னாங்கன்னா., ஒன்னு நான் காத்திருப்பேன்., இல்ல னா தூர விலகிப் போயிடுவேன்,
எனக்கு பிடித்த மாதிரி ஒருத்தர் பார்த்தா, இவங்க தான் புடிச்சிருக்கு அப்படின்னு நான் கண்டிப்பா சொல்லுவேன்., நான் பார்க்குற வரைக்கும் வெயிட் பண்ணுங்க”, என்றாள் சிரித்தபடி,
தாத்தா தான், “என்ன அந்த பட்டாம்பூச்சி பறக்குற கதையா”, என்று கேட்டார்.
“ஆமா தாத்தா, இன்னிக்கு அந்த டயலாக் சொல்லாம விட்டுட்டேன் பாத்தீங்களா., அவர பார்த்த உடனே ஹார்ட் டப்பு டப்பு டப்பு டப்புன்னு துடிக்கணும்., வயித்துக்குள்ள அப்படியே குட்டி குட்டியா பட்டாம்பூச்சி பறக்கணும்., கண்ணு எமைக்காம அவங்கள பாக்கணும்., அப்ப கை கால் எல்லாம் ஒரு சின்ன நடுக்கம் வரணும்., அப்படி இருந்தா மட்டும் தான் எனக்கு அவங்கள பிடிக்குது ன்னு அர்த்தம், அது நல்லா இருக்கும்”.,என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,
பாட்டி தான், “என்னது பார்த்தவுடன் நடுக்கம் வரணுமா., அப்படின்னா உனக்கு வில்லன் மாதிரி ஒருத்தனை பிடித்து கட்டி வைக்கணும்”, என்று சொன்னார்.
“பாட்டி அந்த நடுக்கம் இல்ல பாட்டி, இதெல்லாம் உங்களுக்கு தெரியாது பாட்டி., உங்களுக்கு ஹார்மோன் எல்லாம் வேலை செய்றத விட்ருச்சு ., அதனால இதெல்லாம் யோசிக்காதீங்க”, என்று சொல்லவும்.,
தாத்தா சிரித்துக்கொண்டே பாட்டியை பார்க்க.,
பாட்டியோ “நல்ல தாத்தா, நல்ல பேத்தி, நல்ல குடும்பம் போங்க., அவ சொல்றதுக்கு எல்லாரும் தலையாட்டிட்டு இருங்க., அவ என்னைக்கு கல்யாணத்துக்கு சரி சொல்லி., நீங்க என்னைக்கு அவளுக்கு கல்யாணம் பண்ணி வைக்க”, என்று சொன்னார் வருத்தமாக,
“கவலையே படாதீங்க பாட்டி, எனக்குன்னு ஒருத்தன் பொறக்காமலா இருப்பான், எங்கேயாவது பிறந்து இருப்பான்., என்ன நான் இந்த டயலாக் சொன்ன உடனே சினிமாவா இருந்தா ஹீரோ என்ட்ரி கொடுத்திருப்பான்., இப்ப ஹீரோ என்ட்ரி கொடுக்க வாய்ப்பு இல்லை இல்லையா., அதனால வெயிட் பண்ணுங்க., என் ஹீரோ எங்க இருந்தாலும் என்னை தேடி வருவான்,. இல்லாட்டி நான் தேடி போவேன் போதுமா., போங்க”, என்று சொல்லி விட்டு சாப்பிட்டு முடித்த தட்டை எடுத்துக்கொண்டு எழுந்தவள்,
பாட்டியை பார்த்து “கூடிய சீக்கிரம் சொல்றேன் பாட்டி, வெயிட் பண்ணுங்க”, என்று சொல்லவும்.,
“ஏண்டி எங்கேயாவது பாத்திட்டியா”, என்று பாட்டி கேட்டார்.
“ஒருத்தரையும் பார்க்கல, பார்க்கிற மாதிரி யாரும் இல்லை”, என்று சொல்ல.,
“அடிப்பாவி கூட எத்தனை பையலுவ டாக்டருக்கு படிக்காம், உனக்கு சீனியர் இருப்பான், முடிச்சவன் நீ ட்ரைனிங் போற ஹாஸ்பிடலில் கூட இருக்கலாம்”., என்றார்.
“ஐயே டாக்டரா”, என்று சொன்னவள், “அப்படியே டாக்டரா இருந்தா கூட பார்த்த உடனே நான் சொன்ன பீல் எல்லாம் வரணும்., வந்தா தான் பாட்டி நான் சொல்லுவேன்”, என்று சொன்னாள்.
“நீயே போய் சொல்ல போறியாடி”.,என்றார்.
“புடிச்சிருந்துச்சுன்னா, நானே போய் சொல்லிடுவேன்., எனக்கு என்ன பயம்”, என்று சொல்லவும்.,
error: Content is protected !!