Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கனவும், நினைவும் உனையே

Kanavum Nanavum Uniayae 3 2

மறுநாள் மதியம் முக்கியமான ப்ராக்டிகல் இருப்பதால், உடனே கிளம்ப வேண்டும் என்று ஏற்கனவே அனைவருக்கும் தெரியும் என்பதால் அவள் அம்மா தான்., “சாப்பிட்டுட்டு போ, யாராவது காரில் கொண்டு வந்து விட சொல்றேன்”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது.,

     “நான் பார்த்துக்கிறேன் ம்மா, நீங்க இங்க உள்ளத பாருங்க”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே

    அங்கு மூத்த பேரனிடம் பாட்டி, “சித்தார்த்தா உன் பிரண்ட் கிளம்பனும்னு சொல்றான் பாரு., அவன சாப்பிட்டு போக சொல்லு”, என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

     “நானுமே கிளம்புறேன் பாட்டி, போயிட்டு தேனியில் ஒரு வேலை இருக்கு முடிச்சுட்டு அப்படியே காலைல என் இடத்துக்கு போயிடுவேன்”, என்று சொன்னான்.



Advertisement

    “ஏண்டா கண்டிப்பா இப்பயே போயாகனுமா., இருந்துட்டு போக வேண்டியது தானே”, என்று சொன்னார்.

      “அதுதான் சாப்பிட்டு கொஞ்ச நேரம் கழிச்சு தானே போக போறேன், இப்பவே வா போக போறேன்”, என்று சொல்லவும்.,

    “உன் பிரண்டு சொன்னானே”, என்று சொல்ல,

Advertisement

      “அவனும் என் கூட தான் வருவான், கவலப்படாதீங்க”, என்று சொல்லும் போதே,

Advertisement

இவளும் கீழே இறங்கி இருக்க, அவனும் தன் நண்பனோடு கீழே இறங்கி இருந்தான்.

   அதன் பிறகு வந்தவர்கள் வாழ்த்தி கொண்டிருக்க., இவளோ கீழே அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

    தாத்தா பாட்டியும் இவளோடு வந்து அமர்ந்த நேரத்தில்., பெண்ணின் தாத்தா பாட்டியும் இந்த தாத்தா பாட்டி அருகிலே வந்து அமர்ந்து திருமண செய்திகளை பற்றி பேசிக் கொண்டிருந்தனர்.

Advertisement

இவளும் அவர்கள் பேசுவதையே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.

   பெண்ணின் பாட்டி தான், “உனக்கு பரீட்சை எல்லாம் எப்ப முடியுது”, என்று கேட்டார்.,

    “ஏன் பாட்டி”, என்று கேட்டாள்.

       “இல்லம்மா இப்ப பரிட்சையோடு இருக்க போய் தானே வந்த இப்ப உடனே போகணும்னு நிற்குற நீ என்றார்.

     “கல்யாணம்னா அது எக்ஸாம் முடிஞ்சிடும் பாட்டி., நீங்க சொல்ற டேட்டுக்குள்ள முடிஞ்சுரும்” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்.

       “சாப்பிடேன்மா” என்று அவளை சாப்பிட சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

      அவள் தான், “சாப்பிடணும் பாட்டி, எல்லாரும் வரட்டும் சேர்ந்து சாப்பிடலாம்”, என்று சொல்ல,

“அங்கே எத்தனை மணிக்கு இருக்கனும்மா, கொண்டு வந்து விட சொல்லவா”, என்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே

    “நான் ஒன்பது மணிக்கு ஏர்போர்ட்ல இருந்தா போதும் பாட்டி, இப்ப மணி ஏழரை தானே ஆகுது., இங்க இருந்து 15 மினிட்ஸ் தான ட்ராவல் போயிருவேன்”,என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

     சித்தார்த்தனின் நண்பன் தான், “பாட்டி யாரும் ஓரிப் பண்ணிக்காதீங்க, நான் இப்ப கிளம்பும் போது அவங்கள ஏர்போர்ட்ல விட்டுட்டு போறேன்”, என்று சொன்னான்.

     “நல்லதா போச்சுப்பா”, என்று சொல்லிக் கொண்டிருக்க.,

    இவளின் பாட்டி தாத்தாவும் அவங்க அவர்கள் எங்கே செல்கிறார்கள் என்பதே கேட்டுக்கொண்டு,

“உங்களுக்கு அலைச்சல் இல்ல தம்பி”, என்று கேட்டனர்.

    “இதில் என்ன இருக்கு, அவங்க சொன்ன மாதிரி 15 நிமிஷம் ஆகுமா., நாங்க தேனீக்கு தானே போறோம், ஒன்னும் பிரச்சனை இல்ல”, என்று சொல்லி அவளை ஏர்போர்ட்டில் விட்டு செல்வதாக  சொன்னான்.

     இவள் திரும்பிப் பார்க்கும் போது அவன் தான் யோசனையோடு பார்த்திருந்தான்.,

   பின்பு அவன் தன் நண்பனின் கையில் தட்ட, இவள் பார்த்தும் பார்க்காதது போல பார்த்துக் கொண்டிருக்கும் போதே.,

அவன் நண்பன் தான், “இல்ல உங்களுக்கு ஓகே தானே வரதுக்கு”, என்று அவளிடம் கேட்டான்.

   இவளும் தலையை அசைத்து, “உங்களுக்கு டிஸ்டர்பன்ஸ் இல்லனா, எனக்கு பிரச்சனை இல்லை”, என்று சொன்னாள்.

     “அதெல்லாம் ஒரு பிரச்சனையும் இல்ல சிஸ்டர், வாங்க” என்று சொல்லவும்,

   இவளும் சம்மதித்தாள், பிறகு குடும்பத்தினர் சேர்ந்து உணவு உண்ண செல்ல, இவளும் அவர்களோடு சேர்ந்து அன்றைய இரவு உணவை முடித்துக் கொண்டு பின்பு கிளம்புவதாக வீட்டினரிடம் விடைபெற்றவள்,

   “காலையில் பத்திரமாக கிளம்பி வாருங்கள்”, என்று சொல்லிவிட்டு கிளம்பவும்.,

     பாட்டி தான், “இப்ப நைட்டு யாரு கூப்பிட வருவா”, என்று கேட்டார்.

    தன் தோழியின் பெயரைச் சொல்லி, “கூப்பிட வந்துருவா பயப்படாதீங்க, நான் வீட்டுக்கு போயிட்டு உங்களுக்கு கால் பண்றேன்”, என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினாள்.

    ஏனோ வீட்டினருக்கு தான், அவள் அங்கு யாரிடமும் அதிகமாக ஒட்டிக் கொள்ளவில்லை என்றே தோன்றியது, தாத்தா தான் பெருமூச்சு விட்டபடி பாட்டியை பார்த்தார்.

     பாட்டிதான், “என்ன இப்போ தான் சுருக்கு ன்னு  இருக்கா உங்களுக்கு, பேத்தி பொண்ணு ட்ட  எவ்வளவு சொன்னேன்., நீங்க என்ன சொன்னீங்க சரி சரி னீங்க, இப்போ அண்ணன் நிச்சயதார்த்தத்திற்கே இப்படி பட்டும் படாமல் நிக்கா., இவளுக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வச்சதுக்கு அப்புறம்., அவனுக்கு கல்யாணத்தை பண்ணி இருந்தா இவ எல்லாத்தையும் இழுத்து போட்டு செஞ்சிருப்பா., இப்ப பாருங்க எல்லார்கிட்ட இருந்தும் தள்ளி நிக்கிறா”,  என்று சொல்லவும்.,

      “சரியாயிடும் எல்லாத்தையும் போட்டு குழப்ப வேண்டாம்”, என்று சொல்லிக்கொண்டு அமைதியாக பார்த்திருந்தனர்.,

     அன்றைய  நிச்சயதார்த்த விழா சிறப்பாக முடிந்து கிளம்பு தொடங்கவும்.,

    இவளும் சரியாக ஏர்போர்ட் அருகில் அவர்கள் விட வரவும் நேரம் ஒரே நேரமாக இருந்தது,

        என்ட்ரன்ஸ் ல் இறங்கவும், “உங்களுக்கு ஓகே தானே, உள்ளே வந்து விடணுமா”, என்று அவன் நண்பன் கேட்டான்.

    “வேண்டாம் அண்ணா, எனக்கு இதுவே பெருசு, தேங்க்யூ” என்று சொல்லிவிட்டு தன் கைப்பையையும், ஃபோனையும் எடுத்துக்கொண்டு ஏர்போர்ட்டில் இறங்கியவள்,

    மீண்டும் அவனிடம் “அண்ணா தேங்க்ஸ்” என்று சொன்னவள், அவன் மனைவியிடம் “தேங்க்ஸ் சிஸ்டர்”, என்று சொல்லி கையை ஆட்டி விட்டு நகல போகும் முன்,

    திரும்பி இவனை ஒரு பார்வை பார்த்தவள், “அங்கிள் கல்யாணத்துக்காவது உங்க வீட்டு ஆன்டியுடன் வந்துருங்க”, என்று சொல்லிவிட்டே சென்றாள்.

     இவனோ அவளை முறைத்தபடி பார்க்க, இவளும் சிரித்தபடி அங்கிருந்து நகர்ந்தாள்,

     இவனோ “அவளுக்கு கொழுப்பு ஏறி  திரியுறா”, என்று தன் நண்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தான்.

    சிரித்தபடியே வண்டியை கிளப்பியவன், தன் நண்பனிடம், “டேய் உன்ன பாத்து அங்கிள் சொல்லுதுன்னா, என்ன அர்த்தம்”, என்று சொல்லவும்.,

      இவன் தான், “ஒரு  அர்த்தம் இல்ல, என்ன பார்த்தா அப்படியா இருக்கு”, என்று நண்பனிடம் கவலைப்பட்டுக் கொண்டிருந்தான்.

    அதெல்லாம், ” டேய் ஒன்னும் இல்ல, சும்மா கிண்டலுக்கு சொல்லி இருக்கும் அந்த பொண்ணு,  நீ கண்டுக்காத”, என்று சொல்லிவிட்டு அமைதியானான்.

      “ஆன்டிய கூட்டிட்டு வரனுமாம்”,என்றான் சித்தார்த்தன்  நண்பன்,

     இவனோ, “இப்ப தானடா தங்கச்சிக்கு முடிஞ்சிருக்கு, அது மட்டும் இல்லாம எங்க வீட்ல எங்க சித்தியோட டாமினேஷன் ஜாஸ்தி, அதனாலதான் யாரும் வாயைத் திறக்க மாட்டாங்க., தங்கச்சிக்கு மேரேஜ் ஆனதுக்கு அப்புறம் தான் பார்க்கவே ஆரம்பிக்கணும்னு சொல்லிக்கிட்டு இருந்தாங்க., மே பீ இனிமேல் பாக்க ஆரம்பிப்பாங்க., முதல்ல கல்யாணம் முடியட்டும்., கல்யாணம் முடிஞ்சதுக்கு அப்புறம் தான் மத்தத பத்தி யோசிக்கணும்., எனக்கும் பெருசா ஒன்னும்  இன்ட்ரஸ்ட் எல்லாம் இல்ல டா, என்ன பார்த்தாலும், எங்க சித்தி என்ன 1008 குறை சொல்லும்., வர அலைன்ஸ் ஃபுல்லா அவங்களே பேசி பேசி தட்டி விடுவாங்க., தெரிஞ்ச விஷயம் தானடா., வரட்டும் வரட்டும் முடிக்கும் போது பார்ப்போம்”, என்று சொன்னான்.

நண்பனோ தோளில் தட்டி கொடுத்து., அவன் வீட்டு சூழ்நிலை தெரிந்தவனாக “விடுடா உனக்குன்னு ஒருத்தி பொறக்காமலா இருப்பா”, என்று சொன்னான்.

     “ம்ஹூம் பிறந்து இருப்பாங்க”, என்று சொல்லிவிட்டு,  “நீ வேற கடுப்ப கிளப்பாதடா”, என்று சிரித்தான்.

பின்னிருந்து நண்பனின் மனைவி தான், “ஏன்னா உங்க சித்தி சொல்றதெல்லாம் நடந்துருமா என்ன?, எத்தன வரன தட்டிவிட்டாலும், உங்களுக்கு நடக்கணும், உங்களுக்கு சேரனும் ன்னு இருக்குது உங்களுக்கு சேரும்”, என்று சொல்லும் போதே.,

   “அது என்னமோ உண்மைதான் மா, ஆனா எங்க சித்தி பயங்கர கிரிமினல் மைண்ட்., என்னென்ன பண்ணுவாங்க ன்னு எனக்கு தான் தெரியும், என் ஸ்கூல் லைப்ல இருந்து நான் பாத்துட்டு இருக்கேன்., அதனால தான் எனக்கு வீட்டுக்கு போனா கூட தங்குறதுக்கு எல்லாம் புடிக்கிறதே இல்ல., ஏன்டா வீட்டுக்கு போறேன்னு இருக்கும்., இன்னிக்கும் தேனில அப்படி ஒன்னும் பெரிய முக்கியமான வேலை எல்லாம் கிடையாது., இருந்தாலும் நீங்க எப்படியும் அங்க தான் தங்க போறீங்க., எனக்கு அந்த சின்ன வேலை முடிச்சிட்டு அதுக்கப்புறம் கிளம்பிக்கலாம் ன்னு மைண்ட் செட் தான் வேற ஒன்னும் இல்ல”, என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே.,

     நண்பன்  மீண்டும் அவன் தோளில் தட்டி, “விடுறா பாத்துக்கலாம்”, என்று சொல்லி இருவரும் பேசிக்கொண்டே சென்றனர்.

சென்னையில் வந்து இறங்கியவளுக்கு மனம் ஏனோ காற்றில் பறப்பது போல ஒரு உணர்வு இருந்தது.

ஏற்கனவே கிளம்பும் போது ஏர்போர்ட்டில் வைத்து செல்பி எடுத்திருந்தவள்,  மீண்டும் இறங்கும் போதும் ஒரு செல்பி எடுத்தாள்., மதுரை செல்லும் முன், மதுரை சென்ற பிறகு, என்று இரண்டு போட்டோக்களையும் ஒட்டி வைத்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

    தன் முகத்தில் ஏதேனும் வித்தியாசம் தெரிகிறதா என்று பார்த்துக் கொண்டே தன் தோழியின் வருகைக்காக காத்திருந்தவளுக்கு சிரிப்புதான் வந்தது.

   இது என்ன மனம் இப்படி கிடந்து எதிர்பார்ப்போடு தவிக்கிறது என்று நினைத்துக் கொண்டவள், இதுக்கு மேல இதை பத்தி யோசிக்க கூடாது.,

   ‘எக்ஸாம்க்கு படிக்கணும்’ என்று சொல்லிக் கொண்டே தன் தோழி வரவும் காரில் ஏறி தன்னிடம் சென்று சேர்ந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!