TNK-14
“ஏய் என்ன பாக்கீங்க மரியாதையா உண்மைய சொல்லுங்க ரெண்டு பேரும் அன்னைக்கு நைட்டு எங்க போயிருந்தீங்க” என்றான் சுபாஷ் தனது முன்னே நின்ற பாரதி மற்றும் கீதாவை பார்த்து
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து என்ன சொல்ல என்று தெரியாது முழிக்க
“ஏய் என்ன முழிக்கிறீங்க மரியாதையா சொல்லுங்க. எங்க போனீங்க” என்றான் அழுத்தமாக
பாரதி கீதாவை திரும்பி பார்த்து விட்டு, “அது.. வந்து டா ட்ரெஸ் கிழிச்சி..”என்று ஆரம்பிக்க
Advertisement
“போதும் நிறுத்து அவர் சொன்னது பொய்னு எனக்கு தெரியும். அதோட நீங்க ரெண்டு பேரும் எப்பவும் பிரிய மாட்டிங்க. அதனால மரியாதையா உண்மைய சொல்லுங்க”
“இல்ல டா நான் சொல்லுறது தான் உண்மை”என்று ஆரம்பிக்கும் போது, “அவ சொல்லுறது எல்லாம் பொய் தான். நான் சொல்லுறேன் உன் அக்கா மேல எந்த தப்பும் இல்ல”என்று கீதா சொல்ல வர அவள் கையை பிடித்த பாரதி
“கொஞ்சம் உன் வாயை மூடுறியா. டேய் என்னடா இப்ப உனக்கு வேணும். ஆமா டா நான் தான் திரு மாமாவ தேடி போனேன். ஆமா டா நான் அவர லவ் பண்றேன் போதுமா. இன்னும் என்ன உனக்கு வேணும். அதான் எல்லாம் சொல்லிட்டேன் இல்ல போக வேண்டிய தான”என்றாள் தன்னை முறைத்து நின்ற தம்பியை பார்த்து அதட்டலாக
Advertisement
“உன்ன பத்தி எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும் நீ அப்படி பண்ணி இருக்க மாட்டனு எனக்கு 100% நம்பிக்கை இருக்கு. நீ திரு மாமாவ உன்னோட 18 வயசுலயிருந்து லவ் பண்றனு எனக்கு தெரியும். அதே மாதிரி இப்ப நீ மாமா கூட பேசறது இல்லனு எனக்கு தெரியும். ஏன் இப்ப கூட நீ உன்னோட பிரெண்ட காப்பாத்த பொய் சொல்றனு எனக்கு நல்லாவே தெரியும். ஆனா ஒன்னு மட்டும் மறந்துறாத நீ பண்ற ஒவ்வொருத் தப்புக்கும் அம்மாவோட வளர்ப்ப தான் தப்பா பேசுவாங்க. அதனால எதுவா இருந்தாலும் பார்த்து நல்லா யோசிச்சு பண்ணு” என்று அவளிடம் சொல்லிவிட்டு சென்றான் சுபாஷ்.
Advertisement
“ஏண்டி இப்படி பண்ற. நான் உண்மைய சொல்லி இருப்பேன் தான ஏன் தடுத்த என்னால உன் தம்பி உன்னை தப்பா நினைக்கான் பாத்தியா. அதோட உன்ன தூக்கிட்டு போன அந்த ரெண்டு பேரும் உன்னை ஏதாவது பண்ணி இருந்தா சத்தியமா என்னால நிம்மதியா வாழ்ந்து இருக்கவே முடியாது. என்னோட மனசாட்சியே என்னை கொன்று இருக்கும். இந்த ஊர்ல உள்ள எல்லாரும் அத்தைய தான் தப்பா பேசுனாங்க. அவங்க எப்படி அழுதாங்க தெரியுமா. நேத்து மட்டும் திரு அண்ணா சரியான நேரத்துல வரலனா என்ன ஆயிருக்கும்னு என்னால நினைச்சு கூட பாக்க முடியல. எல்லாம் என்னால தான் என்னோட சந்தோசம் மட்டும் முக்கியம்னு உன்ன கூட்டிட்டு போய் உனக்கு எவ்வளவு பெரிய பிரச்சினை உண்டு பண்ணிட்டேன். எல்லாம் தப்பையும் நான் பண்ணிட்டு இந்த ஊர் உன்ன தப்பா பேசும் போது எதுவும் சொல்ல முடியாம நின்னத நெனைச்சா எனக்கு அசிங்கமா இருக்கு டி. அட்லீஸ்ட் உன் தம்பி கிட்டையாவது உண்மையை சொல்லி இருப்பேன் ஏன்டி என்ன சொல்ல விடாம தடுத்த நான் எல்லாம் ஒரு பிரண்டா. உன்னோட தோழி சொல்லிக்க எனக்கு வெட்கமா இருக்கு. என்னை மன்னிச்சிடு டி ப்ளீஸ் டி” என்று பாரதி முன்பு தனது இரு கைகளையும் கூப்பி அழ
அவளின் இருக் கையை பிடித்து கீழே இறக்கி விட்டு, “ஏய் ச்சீ என்னடி பண்ற. அதுதான் ஒன்னும் நடக்காம என்னோட மாமா வந்து என்னை காப்பாத்திட்டாரே நீ ஏன் அதை நினைச்சு பீல் பண்ற. ஆக்சுவலி நீ எனக்கு நல்லது தான் பண்ணி இருக்க. இப்படி ஒரு பிரச்சனை வரலைன்னா நான் என் மாமா கிட்ட பேசி இருக்கவே மாட்டேன். ஆனா இப்ப பாரு எங்க ரெண்டு பேருக்கும் இன்னும் 30 நாள்ல கல்யாணம் ஆக போகுது. என்னோட எத்தனை வருஷ கனவு தெரியுமா. ஒரு காலத்துல இதெல்லாம் நடக்கவே நடக்காதுன்னு முடிவுக்கு வந்துட்டேன். ஆனா இப்ப பாரு உன்னால எல்லாம் என் கையில வந்து சேர போகுது” என்றவள் அவளை கட்டிக்கொண்டு, “அட மெண்டல் உன் பிரண்டுக்கு இன்னும் 30 நாள்ல கல்யாணம் ஆக போகுது. அதுக்கு எப்படி எல்லாம் தயாராகனும்னு நினைக்காம எதுக்கு தேவையில்லாதது நினைச்சி கவலைப்படுற. சந்தோசமா சிரிடி. இப்படி அழுது வடிச்சிட்டு இருக்க பொண்ணு என்னோட ராஜ் மாமாக்கு தேவையில்ல போ. நான் என் மாமாக்கு வேற பொண்ணு பார்க்க போறேன் பாரு” என்று அவளை தள்ளிவிட்டு வம்பு இழுக்க
“ போடி ஏதோ கொஞ்சம் பீலிங்கா பேசினா உடனே என்ன அழுங்குனி சொல்லிவிடுவியா. நான் அழவே மாட்டேன் சரியா. இதுல உன் மாமாவுக்கு வேற பொண்ணு வேற பாப்பியா அடி பிச்சிருவேன்” என்று தனது கண்களை துடைத்துக் கொண்டு பாரதியை கீதா பொய்யாக மிரட்ட
Advertisement
“இப்பதான் முகம் பார்க்க நல்லா இருக்கு. என் பிரண்டு எப்பவும் சிரிச்சுக்கிட்டே இருக்கணும் சரியா. உனக்கு செண்டிமெண்ட் சீன் செட் ஆகல. நீ எப்பவும் காமெடி பீஸ் தாண்டி. சரி வா கல்யாண பர்ச்சஸ் பண்ணுவோம்” என்று அவளை இழுத்துக் கொண்டு சென்றாள் பாரதி.
@@@@@@@@@@@@
“லட்சுமி க்கா ப்ளீஸ் கா. உங்கள தான் நான் மல போல நம்பி இருக்கேன். எப்படியாவது ஒரு ரெண்டு லட்ச ரூபாய் லோன் எடுத்து தாங்கக்கா. உங்களுக்கு புண்ணியமா போகும். என் பொண்ணுக்கு கல்யாணம் ஏற்பாடு பண்ணி இருக்கேன். இன்னும் முப்பது நாள் தான் இருக்கு எங்க கேட்டாலும் என்னோட அக்காவும் அண்ணனும் சேர்ந்து எனக்கு காசு தர விட மாட்டாங்க. அதனால ப்ளீஸ் கா எப்படி லோன் எடுத்து 2 லட்ச ரூபாய் மட்டும் தாங்க அக்கா. நான் கரெக்டா அந்த டைம் கட்டிருவேன்” என்று லட்சுமியிடம் கெஞ்சினாள் இந்திரா.
“என்ன இந்திரா விளையாடுறியா 2 லட்ச ரூபாய் எவ்வளவு பெரிய அமௌன்ட். அது எப்படி உடனே உனக்கு தருவாங்க. ரெண்டு லட்ச ரூபாய் நிறைய லோன் எடுத்து கட்டியிருந்தா தான் தருவாங்க. நீ இப்பதான புதுசா ஆரம்பிச்சிருக்க உனக்கு எல்லாம் அவ்வளவு அமௌன்ட் தர மாட்டாங்க இந்திரா சொன்னா புரிஞ்சுக்கோ”
“இல்லக்கா ப்ளீஸ் அக்கா நீங்க மனசு வச்சா கண்டிப்பா முடியும். நீங்க அந்த மேனேஜர் கிட்ட பேசுங்க கண்டிப்பா எனக்கு அந்த அமௌன்ட் தருவாங்க”
“என்ன இந்திரா நீ இதெல்லாம் பெரிய அமௌன்ட் அப்படிலாம் யாருக்கும் தர மாட்டாங்க. சொன்னா புரிஞ்சுக்கம்மா”
“அக்கா ப்ளீஸ் அக்கா இப்போ உங்களை விட்டா எனக்கு வேற யாரையும் தெரியாது. அமௌன்ட் பெருசுதான் ஆனா நீங்க நினைச்சா முடியும் கா. இன்னும் 30 நாள்ல என் பொண்ணுக்கு கல்யாணம் இருக்கு. அவளுக்கு வேண்டிய நகை எல்லாம் அவங்க அப்பா சேர்த்து வச்சிட்டு போயிட்டாரு. ஆனா சீர் சனத்தி கொடுக்க கல்யாணத்தை நடத்த எல்லாத்துக்கும் பணம் வேணுமே க்கா அதுக்கு தான் கேக்கேன். என் பொண்ணுக்கு அவங்க லெவலுக்கு இல்லனாலும் என்னால முடிஞ்ச அளவுக்கு கொஞ்சமாவது கொடுக்கணும் தோணுது அக்கா. அவங்க அப்பா இருந்திருந்தா அவ கல்யாணத்தை ஜாம் ஜாம்னு நடத்தி வைத்திருப்பாரு. என் புள்ள மனசுல்ல எள்ளவு கூட நம்ம அப்பா இருந்த இப்படி எல்லாம் பண்ணி இருப்பாருனு ஒரு எண்ணம் வராம பாத்துக்க நான் முயற்சி செய்கிறேன் அக்கா. எப்படியாவது கொஞ்சம் எனக்காக மனசு வைங்க அக்கா” என்று அவள் காலை பிடித்து கெஞ்சினாள் இந்திரா.
“ஐயோ இந்திரா என்ன பண்ற கால விடு” என்று அவளை தூக்கி நிறுத்திய லட்சுமி, “இங்க பாரு இந்திரா உனக்காக நான் முயற்சி பண்ணி பார்க்கேன். ஆனா இவ்வளவு பெரிய அமௌன்ட் ஒரே லோன் ஆபீஸ்ல நம்மளால வாங்க முடியாது. எனக்கு ரெண்டு மூணு ஆபீஸ் தெரியும். அங்கே எல்லாம் ஒவ்வொரு இதா நம்ம பண்ணுவோம் சரியா. ஆனா ஒன்னு நீ எத்தனை லோன் எடுக்கிறாயோ அதனை லோனுலையும் எனக்கு பாதி தரணும் அப்படினா மட்டும்தான் நான் உனக்கு லோன் எடுத்து தருவேன். இதுக்கு ஓகேனா மட்டும் நாளைக்கு உன்னோட ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி, பேங்க் புக், பாங்க் கார்டு எல்லாத்தையும் எடுத்துட்டு என் வீட்டுக்கு வா”
“அக்கா எல்லா லோன்னுலையும் பாதி தந்தா நான் கேட்ட அமௌன்ட் எனக்கு வருமா. ப்ளீஸ் அக்கா எனக்கு உதவி பண்ண யாருமே இல்லை எப்படியாவது எனக்கு இந்த உதவி மட்டும் பண்ணிதாங்க அக்கா” என்று கைகூப்பி அவளிடம் கெஞ்ச
“இங்க பாரு இந்திரா. இந்த உலகத்துல யாரும் யாருக்கும் ஃப்ரீயா உதவி பண்ண மாட்டாங்க. உனக்கு எப்படி காசு தேவைப்படுதோ அதே மாதிரி தான் எனக்கும் காசு தேவைப்படுது. நீ என்கிட்ட வந்து கெஞ்சி கேக்குற நான் யார் கிட்ட போய் கெஞ்ச சொல்லு. என் புருஷனை பத்தி உங்க எல்லாத்துக்குமே தெரியும். என்னோட ரெண்டு பிள்ளைகளை விட்டுட்டு அவரு ஓடிப் போய் அஞ்சு வருஷம் ஆகுது. எப்படி நான் இந்த பிள்ளைகளை வளர்த்து படிக்க வைக்கனு தெரியுமா. இப்ப கூட நீ கேக்குற அமௌன்ட் என்னால எடுத்து தர முடியும். ஒருவேளை நீ லோன் கட்டாம விட்டேனா லோன் காரன் வந்து என்னதான் கேள்வி கேட்பான். உங்கள நம்பி தானம்மா நாங்க அவங்களுக்கு லோன் கொடுத்தோம் இப்படி கட்டாம இருக்காங்களேன்னு என்ன வந்து தான் அவன் கேட்பான். நான் அவன்கிட்ட என்ன பதில் சொல்ல முடியும். இதுவே நீ எடுக்கிற லோன்ல பாதி என்கிட்ட இருந்துச்சுன்னா நான் அதை வச்சு கட்டிருவேன்” என்க
“இல்லக்கா நான் கரெக்டா டைமுக்கு கட்டிருவேன்” என்றாள் வேகமாக இந்திரா.
“எப்படி கட்டுவ இந்திரா. உன் பிள்ளைகளுக்கு கோவில் கொடைக்கு டிரஸ் எடுக்க காசு இல்லன்னு என்கிட்ட 2000 ரூபா நீ வாங்கின. உன்னால எப்படி ரெண்டு லட்ச ரூபாய் லோன் கட்ட முடியும். நான் எந்த நம்பிக்கையில உனக்கு லோன் எடுத்து தர முடியும் சொல்லு” என்றாள் கரராக
அதற்கு பதில் சொல்ல முடியாமல் இந்திரா திணற எப்படி முடியும் என்று சொல்வாள் அவள். இதோ இன்னும் ஒரு மாதத்தில் திருமணம் ஆகும் மகளுக்கு அடுத்து வரும் பொங்கல், ஆடி, தீபாவளி சீர் செய்ய வேண்டும். அதோடு அவள் குழந்தை உண்டானாள். அதற்கு செய்ய வேண்டும். இதில் மகன் கல்லூரி படிப்பு செலவு வேற உள்ளது. அனைத்து நினைவில் வந்து அவளை திணற செய்தது.
“பாத்தல உன்னால பதில் சொல்ல முடியல. இதிலேயே தெரியலையா உன்னோட நிலைமை என்னன்னு. இங்க பாரு இந்திரா நீ இவ்வளவு கேட்கிறதுனால நான் ஒரே ஒரு வழி தான் சொல்லுவேன். நீ எத்தனை லோன் எடுக்கிறாயோ அத்தனையிலையும் எனக்கு பாதி தந்து தான் ஆகணும் அப்படின்னா மட்டும்தான் உனக்கு நான் லோன் எடுத்து தருவேன் இதுக்கு ஓகேனா நாளைக்கு எல்லாம் புரூப்பையும் எடுத்துட்டு வீட்டுக்கு வா உனக்கு லோன் வாங்கி தர வேண்டியது என் பொறுப்பு” என்றாள் இறுதி முடிவாக லட்சுமி.
வேறு வழி இல்லாததால் அவள் சொன்னதற்கு சம்மதித்த இந்திரா, “சரி அக்கா நாளைக்கு காலைல எல்லாத்தையும் எடுத்துட்டு வீட்டுக்கு வாரேன்” என்று சொல்லி தளர்வான நடையில் தனது வீட்டை நோக்கி சென்றாள்.
அவள் போவதை பார்த்து நின்ற லட்சுமி யாருக்கோ போன் செய்து, “டேய் தம்பி ஆடு ஒன்னு சிக்கி இருக்கு டா. நீ நம்ம சார் கிட்ட சொல்லிரு. எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அமௌன்ட் அடிச்சிட்டு எஸ்கேப் ஆய்டுவோம் சரியா”
“சூப்பர் அக்கா. எப்படி ஆடு சிக்குச்சி”
“அதுவா ஆட்டுக்கு இன்னும் 30 நாள்ல அவ பொண்ணோட கல்யாணம் இருக்கும் போல. நானும் பேசுற விதத்துல பேசி மொத்தமா நம்ம கைக்கு வர மாதிரி பண்ணிட்டேன். ஆனா ஒன்னுடா ஆடு நம்ம கைக்கு முழுசா கிடைக்க இன்னும் ஒரு வருஷம் ஆகும்னு நெனச்சேன். ஆனா பாரேன் கடவுள் ஒரு மாசத்திலேயே முழுசா கைக்கு தந்துட்டாரு. இனி அறுத்து காய போட்டு சாப்பிட வேண்டியதுதான்” என்றாள் அரக்க சிரிப்புடன் லட்சுமி.
“ நல்ல வேலை பார்த்த அக்கா. நம்ம மேனேஜர் வேற மாற போறாரு. இனி வர்றவன் நமக்கு சாதகமா பண்ணுவானான்னு தெரியல அதன் என்னடா பண்ணனு யோசிச்சிட்டு இருந்தேன். நீ கரெக்டா ஒரு ஆட்ட பிடிச்சிட்டக்கா. அது சரியா ஆட்டோட பேக்ரவுண்ட் எப்படி யாராவது பிரச்சனை பண்ணுவாங்களா”
“அதெல்லாம் வெட்டி போட்டா கூட கேட்க யாரும் வர மாட்டாங்க டா. எல்லா சொந்தங்களும் இருக்குதான் ஆனாலும் இவ இப்ப செத்தா கூட சிரிக்க தான் செய்வாங்க எல்லோரும் அந்த அளவுக்கு இவள வெறுத்து போய் இருக்காங்க. அதனால நாம என்ன பண்ணாலும் கேட்க எவனும் வரமாட்டான்” என்று அவள் சொல்ல
“அப்ப ஆட்ட பிரியாணி போட்ட வேண்டியது தான் பாக்கினு சொல்லுக்கா” என்று அவன் சிரிக்க
“அதே தான் டா தம்பி”என்று இவளும் சேர்த்து சிரித்தாள்.
இவர்கள் இருவரையும் பார்த்து விதி சிரித்தது.
இத்தனை சொல்லும் இவளுக்கு இந்திராவின் மகள் பாரதி திருமணம் செய்து கொண்டு போகும் வீட்டைப் பற்றியும், அவளை மணக்க போகும் மணவாளனை பற்றியும் தெரியாமல் போனது தான் விதியின் விளையாட்டோ….?
அல்லது இவர்கள் அடித்தது போதும் என்று கடவுள் முற்றுப்புள்ளி வைக்க நினைத்தானோ… என்னவோ…???
