Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kandaenadi Un Kaathalai

Kandaenadi un Kaathalai – 13

KUK – 12

   கிராம சூழலில் இருந்து  நகர வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர். வீட்டிற்கு வந்ததுமே தன் அன்னை, தந்தையிடம் விக்கி, அனிக்கா செய்த காரியத்தை சொல்லிவிட்டான் நவீன்.

“இவங்களை இங்கவே விட்டுட்டு வரலாம்னு உன்கிட்டே திருவிழா போகுறதுக்கு முன்னாடியே சொன்னேன். நீதான் நம்மள நம்பி அனுப்பி இருக்காங்க… தனியா விட முடியாதுனு சொன்ன” மனைவியிடம் கடிந்து கொண்டார் வரதன்.

“இந்த அளவுக்கு போவாங்கனு எனக்கு தெரியாதுங்க. நவீன் இந்த விக்ஷயம் அங்க யாருக்கும் தெரியாதுதானே?” பதட்டத்துடன் கேட்டார் சுஜா.



Advertisement

“எனக்கு, சூர்யாவுக்கு மட்டும் தெரியும். உங்ககிட்ட கூட சொல்லி இருக்க மட்டேன்… ஆனால், இதுங்க ரெண்டும் எந்த மாதிரி டேஞ்சரான கிரியேட்சர்னு உங்களுக்கு தெரியனும் அதான் சொன்னேன். உடனே இதுங்கல லண்டனுக்கு பேக் பண்ணி அனுப்புங்க” முழு எரிச்சலுடன் சொல்லிவிட்டு சென்றான்.

சுஜா ஏதோ சொல்ல வரும் முன் “போதும் சுஜா இரக்கம், பாசம் இதுக்குல்லா தகுதி இல்லாதவங்க அந்த பிள்ளைங்க. சூர்யா அந்த ரூமுக்கு போகலனா மலர் நிலைமையை நினைச்சு பாரு. இதுக்கு மேலே அந்த ரெண்டு பேருக்கு சப்போர்ட் பண்ணி என்கிட்ட பேசாத” உறுதியாக சொன்னார்.

அன்று மாலையே இருவருக்குமான டிக்கெட்டை அவர்கள் முன்பு வைத்தார். “எனக்கு  போக இக்ஷடம் இல்லை அங்கிள். நான் இன்னும் கொஞ்ச நாள் இங்கு இருந்துவிட்டு தான் செல்வேன்” போக முடியாது என்பதில் தெளிவாக இருந்தான் விக்கி.

Advertisement

ஆனால், அனிக்கா போவதற்கு தையாராகவே இருந்தாள். அவளுக்கு இந்த சூழலில் இருந்து சென்றால் சற்று நிம்மதியாக இருக்கும் மேலும் சூர்யா கிடைக்க மாட்டான் என்று தெரிந்தும் இன்னொருத்தி புருக்ஷனை அடைய நினைக்கும் அளவுக்கு அவள் மட்டமானவள் கிடையாது.

Advertisement

பணத்திம் மீது ஆசை உண்டுதான் ஆனால், அதற்காக கீழ்தரமான காரியங்கள் செய்ய அவள் தயாராக இல்லை. மலர் மீது அவளுக்கு கோபம், பொறாமை எல்லாம் இப்பொழுதும் இருக்கிறது…. ஏற்கனவே அவளை பழி வாங்க போய் அவள் தான் மூக்குடைந்து போய் நின்றாள். அவர்கள் எப்படியும் வாழ்ந்து தொலையட்டும் இனி இங்க இருக்க முடியாது என்ற முடிவுக்கு வந்துவிட்டஆள்.

“நான் கிளம்புறேன் அங்கிள். இவன் வேண்டுமானால் இங்கு இருந்து இன்னும் மிச்சம் இருக்கிற அவமானத்தை வாங்கிவிட்டு வரட்டும்” விக்கியை பார்த்து சொன்னவள் சற்று தயங்கி,

“மலருக்கு எதிராக செஞ்ச விக்ஷயத்தை நீங்க அம்மாகிட்ட சொல்லவேண்டாம் ப்ளீஸ் அங்கிள்” என்று கேட்டாள்.

Advertisement

“ஏன், நீ செஞ்சது தப்புனு உணர்ந்திட்டியோ?!” ஆச்சிரியமாக கேட்டார் வரதன்.

“எனக்கு சூர்யா கிடைக்கனும் ஸோ, விக்கியோட திட்டதுக்கு ஒத்துக்கிட்டேன். அதுவும் மலர் ரூமுக்கு அவன் போனதும் உடனே நான் கதவை திறந்துவிடுவேன் என்று சொல்லிதான் அவன் திட்டத்திற்கு ஒப்புகொண்டேன். என்னை பொருத்தவரை மலர் என் வழியை விட்டு விலகவேண்டுமே தவிர அவள் சீரழிந்து போகனும் என்று நான் நினைத்தது இல்லை. மோர்ஓவர் மலர் மேலே இருக்கிற பொறாமை எனக்கு எப்பொழுதும் குறையாது” என்றவள் தொடர்ந்து,

“மேலும் இந்த விக்ஷயம் அம்மாவுக்கு தெரிந்தா கண்டிப்பா என்னை கொன்னு போட்டுருவாங்க. இதுக்கு மேலையையும் அவங்களை கக்ஷ்ட படுத்த நான் விரும்பல. எனக்கென்று ஒரு பணக்காரன் கிடைக்காமலா போவான்?” இயல்பாக சொன்னாள்.

வரதனுக்கு இந்த பெண்ணை எந்த கேட்டகரியில் சேர்க்க என்றே தெரியவில்லை. அவரும் தன் மனைவியிடம் இவர்களை பற்றி கடிந்து பேசினாலும் மனதுக்குள் கவலையாகவே இருந்தது. என்ன இருந்தாலும் சின்ன பிள்ளைங்க, ரொம்ப கடிந்து கொள்ளவும் அவர் மனம் ஒப்பவில்லை.

சரியான வளர்ப்பு இருந்தால் கண்டிப்பாக நவீன், சூர்யா, மலர் போன்று இவர்களும் நல்ல பிள்ளைகாளாக இருந்து இருப்பர். அனிக்காவின் அம்மா ஏதோ கண்டிப்போடு இருக்க போய் சற்று நெறி தவறாது இருக்கிறாள் என்று நினைத்தார்.

“இங்கு பார் விக்கி உன்கிட்ட போறியானு பெர்மிஸன் கேட்கல. நீ கண்டிப்பா போகனும் இல்லைனா உன் அப்பாகிட்ட இங்கு நடந்ததை சொல்லிவிடுவேன்.” எச்சரிக்கையோடு சொன்னார்.

‘அப்பா’ என்ற சொல் அவனிடம் வேலை செய்தது. இவன் செய்தது தெரிந்தால் பெல்ட்டால் அடித்து விளாசிவிடுவார், மேலும் சொத்தில் ஒரு பங்கும் தர மாட்டார். மலரை அவனுக்கு ரொம்ப பிடிக்கும் அதனால் அவள் இனி தனக்கு இல்லை என்பதை விக்கியால் ஜூரணிக்க முடியவில்லை.

“அப்பாகிட்ட எதுவும் சொல்ல வேண்டாம். நானும் இவகூட லண்டன் கிளம்புறேன்” இறுகிய குரலில் சொன்னான்.

தன் மனைவியிடம் அவர்கள் கிளம்புவதாகவும், லண்டனில் உள்ள அவர்களின் பெற்றோருக்கு இன்ஃபார்ம் பண்ண சொன்னார்.

“அவ்வளவு சீக்கிரம் ஒத்துக்கிட்டாங்களா!!!…. ஆச்சரியமா இருக்கு” நம்ப முடியாமல் கேட்டான் நவீன்.

அங்கு நடந்தவற்றை நவீனிடம் சொன்னவர் “எப்படியோ நல்லா இருந்தா சரி…. நமக்கு தொந்தரவு இல்லாத வரைக்கும் நல்லது”

“நீங்க சொன்னதை நான் நேர்ல என் காதால் கேட்டாலும் நம்பமாட்டேன். அதுங்க இரண்டும் சரியான ஃப்ராடுங்க டாடி”

“ம்ச்ச் நவீன்…. அவங்க நல்லவங்களோ இல்ல கெட்டவங்களோ திரும்பி ஊருக்கு போறேன் சொல்லிட்டாங்க. இனி அதை பற்றி பேச வேண்டாம்.” என்றவர் அத்தோடு அந்த பேச்சுக்கு ஒரு முற்றி புள்ளி வைத்தார்.

ஊரில் இருந்து திரும்பி வந்து ஒரு வாரம் முடிந்துவிட்டது. வாய் வார்த்தையால் சொல்லவில்லை என்றாலும் அரசல் புரசலாக இருவரது கல்யாண விக்ஷயமும் தொழில் வட்டத்தில் தெரிய ஆரம்பித்தது.

மலருக்கு இறுதி செமஸ்டர் நேரம் அது…. ப்ளஸ் டூ முடித்ததும் அவளுக்கு பிடித்த பேக்ஷன் டெக்னாலஜியே சங்கர் அவளை சேர்த்து விட்டார்.

இருவரும் ஒரே அறையில்தான் இருந்தனர். அவர்கள் விரும்பும் பொழுது வாழ்க்கையை தொடங்கட்டும் என்று கங்காவும், சங்கரும் விட்டுவிட்டனர்.

ஆனால், இருவரும ஒரே அறையில் இருந்தாக வேண்டும் என்பது கங்காவின் உத்தரவு. மலருக்கு அவனுடன் ஒன்றாக இருப்பதில் தயக்கம் இருந்தாலும்…. எப்படியும் ஒரு நாள் வாழ்ந்தாக வேண்டியது இப்படி பயந்து தயங்கினால் முடியாது என்று நினைத்தவள் பின் அவனுடன் ஓரே அறையில் இருக்க ஒத்துக்கொண்டாள்.

மதுரை வந்து சேர்ந்ததும் சூர்யாவின் நேரம் கம்பேனி அதை சார்ந்த அலுவலக வேலை என்றே கழிந்தது. ஒருவாரத்தில் ஒரளவுக்கு எல்லாவற்றையும் ஸ்டடி பண்ணி விட்டான்.

காலையில் செல்பவன் இரவு அவள் தூங்கிய பின் வந்து நிற்பான். அது மலருக்கும் கொஞ்சம் வசதியாகவே இருந்தது. இருவருக்குமே திடீரென்று கணவன், மனைவி என்ற உறவுக்குள் போவதில் தயக்கம் இருந்தது.

அன்று காலையில் காலேஜ் போக கிளம்பி நின்றவள் “அத்தை நான் போயிட்டு வரேன்… இன்னைக்கு ட்ரெஸ் ஸ்ட்டிச்சிங் ப்ரக்ட்டிக்கல் இருக்கு ஸோ வர லேட் ஆகும்” என்றவள் தன் ஸ்கூட்டி சாவியை எடுத்துவிட்டு வெளியேறினாள்.

“மலர் இரு…” கிட்ச்சனில் இருந்து வெளி வந்தவர் அவளை மேலிருந்து கீழ் வரை பார்த்தார்.

மலர், கங்காவிடம் பேசிட்டு இருக்கும்பொழுதே சூர்யா தன் அறையில் இருந்து வந்தான். தன் அம்மாவின் பார்வையில் சற்று நிதானித்தவன் படியில் தேங்கி நின்றான்.

அறக்கு கலர் மற்றும் பட்டு, ஸ்டோன் வொர்க் செய்த சுடிதார் அணிந்து இருந்தாள். மேட்சிங்கான சின்ன தோடு,  மெருன் கலர் ஸ்டீல் வளையல் ஒரு கையில், இடது கையில் சின்ன ஸ்ட்ரப் வைத்த வாட்ச்.

கழுத்தில் சூர்யா கெட்டிய தாலி, அதோடு ஒரு மெல்லிய செயின் அணிந்து இருந்தாள். “என்ன அத்தை??…” சிறு கீற்று புன்னகையுடன் கேட்டாள்.

சற்று தயங்கியவர் மெதுவாக “அது…. உனக்கும் சூர்யாவுக்கும் திடீர்ன்னு கல்யாணம் நடந்து விட்டது. அவனாவது வேலைக்கு போகிறவன் அதனால் அவனிடம் கல்யாணத்தி பற்றி கேட்டால் கூச்சம் எதுவும் இல்லாது சொல்லிருவான்…” சிறிது இடைவெளி விட்டார்.

சூர்யாவுக்கு தன் அன்னை என்ன சொல்ல வருகிறார் என்பது புரிந்தது. அதற்கு மலரின் பதில் என்னவாக இருக்கும் என்பதை கேட்க ஆர்வமாக நின்றான்.

கங்கா தொடர்ந்து “நீ இன்னும் காலேஜே முடிக்கல. அதுவும் உன் கிளாஸ் பிள்ளைங்க இதை பற்றி கேட்டா உன்னால ஈசியா எடுத்துக்கிட்டு பதில் சொல்ல முடியாது. அதனால……” இப்பொழுது மலருக்கும் புரிந்தது தன் அத்தை என்ன சொல்ல வருகிறார் என்பது….

அவரின் கையை தன் கைக்குள் வைத்தவள் “அத்தை எனக்கு கூச்சம் இல்லனு சொல்ல முடியாது… இருக்கும்தான் அதுக்காக என்னோட கல்யாணத்தை நான் மறைக்க விரும்பல. மலர்விழிசூர்யா என்பது என்னோட ஒரு அடையாளம் அத்தை இதை எப்படி என்னால மறைக்க முடியும்” ரொம்ப தெளிவாக சொன்னாள் மலர்.

அவளது பதிலில் உச்சி குளிர்ந்தவர் நெற்றியில் முத்தம் கொடுத்து “எனக்கு இதை சொல்ல விருப்பமில்லை மலர். ஆனால், உன்னோட சந்தோக்ஷம் எனக்கும், மாமாவுக்கும் ரொம்ப முக்கியம். சொந்தங்க யாருக்கும் சொல்லாம நடந்த கல்யாணம் நீ சொல்ல தயங்கிவியோனு நினைச்சு கேட்டேன். இப்போ நீ சொன்ன பதிலில் மனசு ரொம்ப திருப்தியாயிற்று. நீ காலேஜ் கிளம்பு” அவளை வழி அனுப்பி வைத்தார்.

சூர்யா எப்படி உணர்ந்தான் என்றே சொல்ல முடியாது. தன் கண் முன்னால் வளர்ந்த சின்ன பெண்… தன்னை பார்த்தாலே பயந்து நடுங்குபவள்… இப்பொழுது இவ்வளவு தெளிவாக பேசுகிறாளே என்று ஆச்சரியாக இருந்தது அவனுக்கு.

படியில் இருந்து இரங்கி வந்தவன் “அம்மா இனி மலரை நானே கொண்டு விடுகிறேன்” மலரை பார்த்தபடி சொன்னான்.

“சாப்ட்டு போடா” கங்கா சாப்பாடு எடுத்து வைக்கவும் “அவளை கொண்டு விட்டுட்டு வந்து சாப்ட்றேன்” மலர் கையில் இருந்து சாவியை வாங்கி கீ கேங்கரில் மாட்டியவன் கார் சாவியை எடுத்து கொண்டு வெளியே சென்றான்.

இருவருமே அமைதியாகவே இருந்தனர். “பேச்சு எல்லாம் பலமா இருக்கு…” பார்வை பாதையிலே இருந்தது.

“நாங்க ரெண்டு பேர் பேசினத ஒட்டு கேட்டு இருக்கிங்க”

“நீங்க ஒன்னும் ரகசியம் பேசல… ரொம்ப மாறிட்ட மலர் நீ” திரும்பி அவளை பார்த்தான்.

“என்ன மாறிட்டேன்??”   

“இல்லை என்னை பார்த்தாலே பயப்படுவ, பக்கத்திலே வர மாட்ட. சின்ன வயசுல அப்படியே கண்ணை நல்லா உருட்டுவ, என்ன. இப்போ அது எதுவுமே இல்லையே… தையிரியமா, தெளிவா பேசுற” பாராட்டாகவே சொன்னான்.

“நான் இங்க வரதுக்கு முன்னாடி அம்மா, அப்பா கூட ஒரு சின்ன கிராமத்தில் இருந்தேன் அத்தான். எனக்கு அந்த அளவுக்கு எதுவும் ஞயாபகம் இல்லை அத்தான்…. ஆனால், அம்மா கொஞ்சம் பயந்த சுபாவம் அப்பா மேலே பாசம் இருந்தாலும் அதை ரொம்ப வெளிப்படுத்துன மாதிரி எனக்கு நினைவு இல்லை, கூச்சம் அதிகமாகவே இருக்கும். எங்க அம்மாவின் சுபாவம் தான் எனக்கும் இருந்தது. அதில் இருந்து வெளி வர எனக்கு இத்தனை நாள் டைம் எடுத்தது. காலேஜ் போய் பழக ஆரம்பித்ததும் அதில் இருந்து நானே கொஞ்சமே வெளியே வர முயன்றேன்” அதே குழந்தை புன்னகை முகத்தில் தவழ்ந்து இருந்தது.

“அப்போ ஊருல விக்கி கிட்ட மட்டும் எதுக்கு ஒரு மாதிரி பயந்து போய் நடந்துகிட்ட” முகத்தை இறுக்கமாக வைத்து இருந்தான்.

விக்கி பற்றின பேச்சு அவளுக்கு பிடிக்கவில்லை “அவனை பார்க்கும் பொழுது பயமா இருந்துச்சு அதான் பயந்தேன்… இதை பற்றி இனி கேட்டிங்கனா நான் பஸ்லே காலேஜுக்கு போயிருவேன்” என்றாள்.

‘இது என்ன மாதிரி பதில்’ அவன் குழம்பி போய் இருந்தான். காலேஜ் வந்துவிட அவளுடன் சேர்ந்து இவனும் இரங்கினான்.

‘என்ன’ என்பது போல் பார்த்தவளிடம் “இல்லை ஃப்ர்ஸ்ட் டைம் உன் காலேஜூக்கு வரேன்… சும்மா அட்மோஸ்பியர் எப்படி இருக்கனு பார்க்கிறேன்” என்றான்.

அவனின் பதிலில் சிரிப்பு வர அதை மறைக்காது முகத்தில் காட்டினாள் “அத்தான் போதும்…. நீங்களும், உங்க ரீசனும். போய் சாப்ட்டு கம்பெனிக்கு போங்க” குறும்பாக சொன்னாள்.

“மலர்” தூரத்தில் ஒலித்த குரல் கேட்டு இருவரும் திரும்பி பார்த்தனர்.

மூச்சு வாங்க அவள் அருகில் வந்து நின்றவன் “என்ன மலர்?? இரண்டு நாள் லீவுனு சொல்லிட்டு ஒருவாரம் லீவு போட்ட” சூர்யா இருப்பதை கவனிக்காது கண்களில் ஆர்வத்துடன் கேட்டான் குமார். அவள் வகுப்பு தோழன்.

சூர்யா மலரை கூர்ந்து பார்க்க அவன் பார்வையை கண்டு கீழே குனிந்தாள்.

மலரும்……….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!