Skip to content
Post Views: 1,728
கருவின் குரல்
அத்தியாயம் 21.1
ஜானகியும் அனிஷும் அவர்களது ஜூபிடரில் வீட்டிற்கு கிளம்பினர். அம்மா இவ்வாறு தன்னை அழைக்க தேவாவின் உதவியை நாடியது ,அவளுக்கு கோபமே இருந்தும் தனக்காகத்தானே என மனதை தேற்றிக் கொண்டாள்.
எப்போதும் ஏதாவது தொனதொனவென பேசிக் கொண்டு இருக்கும் மகள் இன்று அமைதியாக வருவது தன் மீதான அவளின் கோபத்தின் அளவை அவளுக்கு உணர்த்தியது.
அதுபோக மைபேசனுக்கு ஆறுமாதம் அவளை அனுப்புவது குறித்த தன்னுடைய முடிவை அவள் எப்படி எடுத்துக் கொள்வாளோ என ஜானகி பயந்தபடியே வந்தாள். இருவரும் அமைதியாக வீடு வந்தனர்.
Advertisement
மம்மி நான் டென் மினிட்ஸ்லே, ப்ரெஷ் ஆகிட்டு வரே அதுக்குள்ள எனக்கு சாப்பிட எதாவது ரெடி பண்ணு என கூறிவிட்டு தன் அறையை நோக்கி சென்றாள்.
அந்த இரவிலும் மகளுக்காக, கிச்சடி, பணியாரம்,தேங்காய் சட்னி,தயிர் சேமியா என விதவிதமாக செய்து,டைனிங் டேபிளில் அடுக்கினாள்.
ரொம்பநாள் கழித்து தன் உணவை ருசித்து உண்ட மகளை பார்த்து, மெதுவாக ஜானகி ஆரம்பித்தாள்,”அனிஷ் உனக்கு ஆறுமாசம் அங்க போறதுல எந்த கஷ்டமும் இல்லையே, அதுதா நீ எனக்கு பதிலா நா வருவேனு சொல்லிட்டு வந்துருக்கியே அப்பறோம் என்ன போய்தானே ஆகனும் மம்மி.
Advertisement
ஒரு ஆறுமாசம் தானே சமாளி,அப்பறோம் அம்மா உனக்கு பொடிக் வச்சு தரேன்.
Advertisement
மம்மி நீ சொன்ன மாதிரி நான் ஆறுமாசம் அங்கே போறேன்.ஆனா ஆறுமாசம் முடிஞ்சதுக்கு அப்பறோம் நீ நான் சொல்றது கேட்கனும்.
அப்படி என்ன சொல்ல போறே ? ,அனிஷ் என்றாள்.மம்மி பேஷன் டிசைனிங்கிற்கு டெல்லிலதான் நல்ல வாய்ப்பு இருக்கு,நீ என்னோட டெல்லி வரனும்.
கொஞ்சநாள் அங்க இருந்துட்டு இங்க திரும்பிரலாம் என்றாள்.
Advertisement
அப்ப உன் கல்யாணம்?- ஜானகி.
போ மம்மி எப்போ பாரு கல்யாணம்,மாப்பிள்ளைனு பேசிட்டு,எனக்கு தூக்கம் வருது நான் தூங்க போறேன்.
காலையிலே சீக்கிரம் எழுப்பி விடு மம்மி மைபேசனுக்கு டிசைன் செய்ய போகனு, ஏனா மைபேசன் இனி என் கையிலதா இருக்கு என நக்கலாக கூறி விட்டு தூங்க சென்றாள்.
ஜானகிக்கு மகளின் திருமணத்தை குறித்த பயம் இரவெல்லாம் தூக்கமே இல்லை.
அடுத்த நாள் காலை, லாவண்டர் கலரில் குர்தி அணிந்து ,போனி டெய்ல் போட்டு, கண்ணிற்கு லேசாக மைதீட்டிக் கொண்டாள் அனிஷ்.
மம்மி டைம் ஆச்சு டிபன் ரெடியா என கத்திக் கொண்டே கிச்சனுள் சென்றாள்.
ஜானகி ஆவி பறக்க இடியாப்பத்தை எடுத்தவாறே, இதோ ரெடி ஆயிடுச்சு அனிஷ் ஒரு அஞ்சு நிமிஷம் நீ இதை சாப்டறதுக்குள்ளே அம்மா லன்ச் பேக் செஞ்சிருவே,
சரி மம்மி என்ற வாறே ஒரு தட்டை எடுத்து இடியாப்பத்தையும்,வெள்ளை குருமாவையும் ஊற்றிக் கொண்டு, கிச்சன் ஸ்லாப் மீது ஏறி அமர்ந்து கொண்டாள்.
அனிஷ் இது டைனிங் டேபிள் இல்லை கிச்சன் அங்கே போய் சாப்பிடு என அதட்டினாள் ஜானகி.
அவளின் தோள் மீது இரு கைகளையும் ஊன்றிய வாறு, “மைடியர் ஜானு இது எனக்கே எனக்குனு எங்க மம்மி கட்டுனே வீடு நா எங்க வேணாலும் உட்கார்ந்து சாப்பிடுவே” என்று கண்டித்து கூறினாள்.
மகளின் தலையில் செல்லமாக தட்டினாள் ஜானகி,இன்னும் அந்த குறும்பு குறையவே இல்லை என நினைத்துக் கொண்டாள்.
மம்மி இனிமே நான் உன் ஜூபிடர்ல தான் போவேன் என கூறி வண்டியை ஸ்டார்ட் செய்ய அது மின்னல் வேகத்தில் மைபேசன் முன்பு சென்று நின்றது.
லிப்ட் க்ளோஸ் ஆகும் முன் தனது காலை வைத்து தடுத்து,உள்ளே சென்று அப்பாடா என நின்றாள்.
அடுத்த நொடி இதுக்கு மூச்சு வாங்க படி ஏறியே போய்ருக்கலாம் அனிஷ் என தன்னைத்தானே திட்டிக் கொண்டாள்.
காரணம் உள்ளே அர்ஜூன் நின்றிருந்தான். அவனை பார்த்த உடனே இவள் முகத்தில் தெரிந்த அதிருப்தியை குறித்துக் கொண்டான்.
அவன் கை எப்படி உள்ளது என ஒருமுறை எட்டிப்பார்த்துக் கொண்டாள் அனிஷ்.
லிப்டை விட்டு வெளியேறி தேவா இருந்த ரூம்மினுள் நுழைந்தனர் இருவரும்.
தேவா முகம் கொள்ளாப் புன்னகையுடன் வா அனிஷ் வெல்கம் டூ மை பேசன் என்றான்.
அந்த மைபேசன் தான் அவள் இங்கே வர தடையாக இருப்பது ஆனால் எதையும் காட்டக் கொள்ளாமல் சிரித்தவாறே சேரில் அமர்ந்தாள்.
அனிஷ் இது அர்ஜூன், மைபேசனோட நிறுவனரா வேனா நான் இருக்கலாம் ஆனா இங்க இருக்குற ஒரு துண்டுச்சீட்டு கூட அர்ஜூன் சொன்னதா நகரும்,அந்த அளவுக்கு இந்த மைபேசனோட எல்லா நிர்வாகமும் அர்ஜூன் தான் பார்த்துக்குவான்.
ரொம்ப நல்ல பையன் என அக்மார்க் முத்திரை குத்திய தந்தையை ஒரு கடுப்புடன் பார்த்தாள்.
தேவாவை பார்த்து,சரி நா என்ன வொர்க் பார்க்கணும்னு சொல்லுங்க என்றாள்.
அர்ஜூன்,அனிஷ்க்கு என்ன வொர்க்னு சொல்லு என்றான் தேவா.
சார் பெங்களூர்லே இருந்து வந்த வெட்டிங் காண்ட்ராக்டுக்கு டிசைன் பண்ணி கொடுக்கறது இனி இவங்க பொறுப்பு என்றான்.
மேடம் வாங்க உங்க கேபின் காட்றே என வெளியே கூட்டி வந்தான்.இது உங்க கேபின் உள்ளே உட் காருங்க என அவள் அருகில் ஒரு சேரை போட்டு உட்கார்ந்தான்.
ஒரு சில மெயில்கள், பைல் என எல்லாவற்றையும் காட்டிவிட்டு உங்களுக்கு ஏதாவது சந்தேகம்னா எனக்கு கால் பண்ணுங்க என அவன் ஃபோன் நெம்பரை ஒரு வெள்ளை தாளில் எழுதிக் கொடுத்துவிட்டு சென்றான்.
அவன் எப்போது செல்வான் என அடுத்தடுத்த கேபினிள் இருந்த பவித்ராவும் கணேஷும் ஆவலாக இருந்தனர்.
அவன் சென்ற அடுத்த நொடி இவளிடம் வந்து ஹாய் நான் பவி ,இவன் கணேஷ் என்கிட்டதா லவ்வரா வேலை செஞ்சிட்டு இருக்கான்.
இன்னும் இரண்டு மாசத்தில எங்க கல்யாணம் என அவர்களை அவர்களே அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
அவர்களை பார்த்த அனிஷ் காதலுக்கு கண் இல்லை என்பது உண்மைதான் போல,அம்மாவாசையும் பெளர்ணமியும் பக்கத்தில் இருப்பது போல உள்ளதே என நினைத்துக் கொண்டாள்.
க்ளோஸ்அப் விளம்பரத்திற்கு வரும் மாடலை போல பல்லைக் காட்டி, சிரித்த வாறே நா அனிஷ்கா தேவி என்றாள்.
இனி நாம நாலு பேரும் ப்ரெண்ட்ஸ் என்றனர்.
நாம மூனு பேருதானே எப்படி நாலு?என கேட்டாள்.
கணேஷ் அதோ என் மச்சான் இருக்கானே என கேபினுள் இருந்த அர்ஜூனை காட்டினான்.
அவன் உங்க ப்ரெண்டா என்றாள்.ஆமா எங்க லவ் மேட்டரை ரெண்டு வீட்டிலையும் சொல்லி ஓகே வாங்கி கொடுத்ததே அர்ஜூன் அண்ணா தா என்றாள் பவித்ரா.
ஓ இவன் காதலுக்கு மரியாதை கூட பண்ணுவா போலவே என நினைத்துக் கொண்டாள்.
என்ன அனிஷ் இனி நீ எங்க ப்ரெண்ட்ஸ் கேங்ல சேந்துக்குவே தானே என்றாள்.
நீயும், கணேஷும் என்னோட ப்ரெண்ட்ஸ் அதுல எந்த சந்தேகமும் வேண்டா,ஆனா அந்த அர்ஜூனை எனக்கு பிடிக்கல என்றாள்.
அனிஷ் என் மாச்சானை பார்த்த உடனே எல்லாம் புடிக்காது பார்க்க பார்க்க உடனே புடிச்சுரும் என்று சினிமா டையலாக் பேசினான்.
தேவாவிற்கு வினய் போன் செய்து உடனே வீட்டிற்கு வருமாறு அழைத்தான்.
அவன் அழைத்த தோரணையே ஏதோ பிரச்சினை என கூறியது.
கிளம்பும் முன் அர்ஜூனிடம் மட்டும் விவரம் சொல்லி கிளம்பினான்.
வீட்டிற்கு சென்றால், ராஜேஸ்வரியும்,மைதிலியும் ஆளுக்கொரு பக்கம் தலையில் அடித்துக் கொண்டு அழுதனர்.
சுப்ரமணியம் குறுக்கும் நெடுக்குமாக நடந்து கொண்டிருந்தார்.வினய் வேறு யாருடனோ ஃபோனில் பேசிக் கொண்டிருந்தான்.
தேவாவிற்கு தகவல் போகும் முன் மைதிலின் தாய்க்கும் தந்தைக்கும் தகவல் அனுப்பிவிட்டான் வினய்.
அவர்களும் இங்கே வந்து கத்தி கூப்பாடு போட்டுக் கொண்டிருந்தனர்.
ராஜேஸ்வரி,”மாப்பளை நம்ம அதுல்யா நம்மல எல்லா ஏமாத்திட்டு அந்த வீணாப்போன சுனில் பையன் கூட ஓடிப் போய்டா” என கதறினாள்.
சுப்பிரமணியம் லெட்டரை தேவாவிடம் நீட்டினான்.அதை வாங்கி படித்தான்.
அதில் எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்.நான் சுனிலை காதலிப்பதாக பலமுறை தங்களிடம் தெரியப்படுத்தினேன்.
ஆனால் நீங்கள் யாரும் என் காதலை மதிக்கவில்லை.என் காதலின் மதிப்பு தெரியாத உங்களுடன் இனியும் இருக்க எந்த விருப்பமும் இல்லை.
என்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ளும் முழு உரிமையும் எனக்கு உள்ளது.இனி என்னைத் தேடியோ, சொந்தம் கொண்டாடியோ யாரும் வர வேண்டாம்.
இனி என்னுடைய வாழ்வு முழுவதும் சுனிலுக்காக மட்டுமே என எழுதி இருந்தாள்.
சுனில் அதுல்யாவின் பள்ளித் தோழன். இவர்களை போலவே வசதியில் எந்த குறையும் இல்லை, ஆனால் அவனின் ஒழுக்கத்தில் நிறைய குறை உள்ளது.
மது, மாது என என்னோரமும் போதையில் இருப்பவன்.அப்படி என்னதான் அவனிடம் இவளுக்கு பிடித்துப் போனது என தெரியவில்லை.
மகளை அரவணைக்க வேண்டிய இடத்தில் அரவணைப்பும்,கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டிப்பும் இல்லாமல் , க்ளப் பார்ட்டி என மைதிலி செல்ல, ஒரு பக்கம் ஜானகி மறு பக்கம் மைதிலி என தேவா குழம்பிக் கொண்டிருக்க,அதுல்யா கொஞ்சம் கொஞ்சமாக சுனில் வசம் ஆனாள்.
அவனை காதலிப்பதாக பலமுறை வீட்டில் சொல்லி விட்டாள். மைதிலிக்கு கூட அவனை நினைத்து பயமாகத்தான் இருந்தது.
ஒழுங்காக வெட்டப்படாத தலையும்,சுருங்கிய ஜீன்ஸூம் அவன் பக்கத்தில் வரும்போதே வரும் பர்வூயும் வாசமும் மைதிலிக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.
வினயிடம் சொல்ல, அவன் தன் நண்பர் உதவியுடன் சுனிலை பற்றிய மொத்த வரலாற்றையும் தோண்டி எடுத்து விட்டான்.
விஷயம் தேவாவின் காதுகளுக்கு சென்றது. அவனும் மகளை அழைத்து ஒரு வருடம், இருவருடம் நானே திருமணம் செய்து வைக்கிறேன் என காலம் தாழ்த்தி வந்தான்.
இது இரண்டுங்கெட்டான் வயது,இன்னொரு வருடம் சென்றாள் அதுல்யா தெளிவான முடிவு எடுப்பாள் என எண்ணினான்.
நீ நினைப்பது தவறு என அவனை முட்டாளாக்கி விட்டு, தனது காதலனுடன் சென்று விட்டாள் அதுல்யா .
விஷயம் காட்டுத்தீயாக பொள்ளாச்சி முழுக்க பரவியது.சக்கரவர்த்தியின் பேத்தி காதலனுடன் சென்று விட்டாள் என,வினய், “அப்பா அவன் நல்லவன் இல்லை அக்காவை எதாவது செய்ரதுக்கு முன்னாடி நாம அவளை கூட்டிட்டு வரலாம் “என்று துரிதப்படுத்தினான்.
தேவா அர்ஜூனிற்கு கால் செய்து விஷயத்தை சொன்னான்.
அதுல்யா,சுனிலின் போன் நெம்பர், போட்டோ ஆகியவற்றை அனுப்ப அரை மணி நேரத்தில் அவர்கள் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து விட்டான் அர்ஜூன்.
அவர்கள் இருப்பது ஆந்திராவில் ஒரு காட்டுக்குள் இருக்கும் ஒரு சொகுசு பங்களா.
அங்கு கிளம்ப தயாரானார்கள் வினயும்,தேவாவும் சக்கரவர்த்தி வந்து விட்டார்.அவரின் முகத்தை கூட தேவா நிமிர்ந்து பார்க்க வில்லை.
நானும் வருகிறேன் என கிளம்பி விட்டார்.
அவர்களுக்கு முன் அர்ஜூன் கிளம்பி விட்டதாக தேவாவிற்கு மெசேஜ் அனுப்பி இருந்தான்.
–கருவின் குரல் ஒலிக்கும்…
error: Content is protected !!