ஆந்திராவின் எல்லையோர மலைப்பகுதி. மனித நடமாட்டமே இல்லாத அடர்ந்த காட்டுக்குள்,
கருங்கல் சுவர்களால் கட்டப்பட்ட ஒரு சொகுசு பங்களா.
பகல் நேரத்தில்கூட அங்கு ஒரு அச்சம் தொங்கிக் கொண்டே இருந்தது. பெரிய மரங்கள் சூரிய ஒளியையே உள்ளே வர விடாமல்
பங்களாவைச் சுற்றி வட்டமிட்டு நின்றன.
உள்ளே, கண்ணாடி ஜன்னல்களும், மரத்தால் செய்யப்பட்ட பழமையான கதவுகளும், அதிக விலை மது பாட்டில்கள் அடுக்கப்பட்ட ஒரு நீளமான ரேக்கும்
அந்த இடத்தை இன்னும் கனமானதாக மாற்றின.
Advertisement
இரவு எட்டு மணி சோபாவில் சரிந்து அமர்ந்திருந்தாள் அதுல்யா. கையில் கண்ணாடி கப்.
அதில் மது நிரம்பியிருந்தது.அவளுக்கே நன்றாக தெரிந்தது, இது அவளின் இயல்புக்கு அசிங்கமான ஒரு பழக்கம்.
“இன்னும் கொஞ்சம் குடி அதுல்யா… இங்க யாரும் நம்ம கேள்வி கேக்க மாட்டாங்க”என்று சுனில் சிரித்தபடியே சொன்னான்.
அவள் தயங்கினாள்.
ஒரு நிமிடம் அம்மாவின் முகம், அப்பாவின் கண்டிப்பு, தாத்தாவின் அமைதி எல்லாம் மனசுக்குள் மின்னலாய் வந்தது.
Advertisement
அடுத்த நொடியில்
அவர்கள் தன் காதலை மதிக்கவில்லை என்ற எண்ணம் தோன்ற , கண்ணாடி கப்பை உதடுகளுக்கு எடுத்துச் சென்றாள்.
Advertisement
சிறிது நேரத்தில், போதை தலைக் கேறியது அவளின் பக்கத்தில் ஒரு பெண் வந்து அமர்ந்தாள். பார்ப்பதற்கு நடுத்தற வயது,நல்ல வெள்ளை நிறம், உதட்டுச் சாயம்,நெற்றி வகிட்டில் குங்குமம் நீண்டிருந்தது.
அவள் அதுல்யாவை பார்த்து சத்தமாக
சிரித்தாள்,அவளது
பார்வைகள் எல்லை மீறியவையாக இருந்தது.
அவளது மொபைலை எடுத்து,வீடியோ காலில் யாரிடமோ பேசினாள்.
Advertisement
இன்னமும் சின்ன குட்டிதான் விலை அறுபது கூட தரலாம்
என்று அவளை வீடியோ காலில் காண்பித்தாள்.
அதுல்யாவுக்கு அது பிடிக்கவில்லை.
“வேண்டாம்… என்னை காட்டாதீங்க”என்று மெல்ல சொன்னாள்.
ஆனால் மது போதை, அவளின் குரலை விழுங்கி விட்டன.
சுனில் அவள் அருகில் வந்து “பயப்படாத…
இவங்க எல்லாம் என் ஆளுங்க” என்று சொன்னபோது
அவளுக்கு ஒரு நொடி
பாதுகாப்பு இல்லை என்ற உண்மை புரிந்தது.
இந்த பங்களா அழகான சொகுசு இல்லம் அல்ல.
அது அவளின் தவறான முடிவுகளின் மௌன சாட்சியாய் மாறிக் கொண்டிருந்தது.
வெளியே காட்டுக்குள்
ஓநாய் அலறல் கேட்டது.
உள்ளே அதுல்யாவின் மனசு அதை விட சத்தமாக அலறியது.
“நான் இங்க இருக்கக் கூடாது…” என்று நினைத்துக் கொண்டே
கையில் இருந்த கண்ணாடி கப்பை
மெதுவாக கீழே வைத்து ஓட முட்பட்டாள்.
ஆனால் அவள் அருந்திய மது அவளது காலை பின்னியது. சுருண்டு சுனிலின் காலில் விழுந்தாள்.
அவன் அவளின் முடியை கொத்தாக பிடித்து தூக்கிய படி, இன்னும் கொஞ்சம் நேரந்தான் டியர், நீ அதுக்கு அப்பறம் இதோ இந்த லேடி கூட கடல் கடந்து போக போறே, இவ தர காசுலே நான் சொகுசு வாழ்க்கை வாழ போறேன் என்று அவன் கண்களில் போதையுடன் கூடிய வெறியுடன் பேசினான்.
அதுல்யாவிற்கு தற்போது தன்னிலை நன்றாகவே உரைத்தது. என்ன சொல்றே என அதிர்ச்சியாக கேட்க ,
ஆமா டியர் நான் உன்னை இவளுக்கு அறுபது லட்சத்திற்கு வித்துட்டே என்றான்.
வேண்டா சுனில் என் வீட்டுல உள்ளவங்களுக்கு மட்டும் இது தெரிஞ்சது உன்னை சும்மா விடமாட்டாங்க என வாய் குழறி கூறினாள்.
முயன்று எழுந்து ஓட முற்பட்டவளை விடாமல் துரத்தினான் சுனில்.
திடீரென கரண்ட் கட் ஆனது இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய அதுல்யா அவனை உதைத்து தள்ளி, அந்த பங்களாவை விட்டு வெளியே ஓட ஆரம்பித்தாள்.
காட்டுக்குள் இருள் இன்னும் கனமாக இறங்கிக் கொண்டிருந்தது.
நிலவின் வெளிச்சம் கூட உள்ளே வர தயங்கி நிற்பது போல இருந்தது. காற்றில் ஈரத்தோடு சேர்ந்து ஒரு அச்சம் பரவியது.
அதுல்யாவின் உள்ளே
மட்டும் பயம் அதிகமாகிக் கொண்டிருந்தது.
அந்த நேரம் தொலைவில்
ஒரு காரின் ஹெட்லைட்
காட்டுக்குள் மின்னியது…
அவள் ஒரு மரத்தின் பின்னே ஒளிந்து கொண்டாள்.ஒரு வலிமையான கரம் அவளது பின்னங் கழுத்தை பிடித்து நெரித்தது.
வலியில் கதறிக் கொண்டே திரும்ப சுனில் பல்லை வெறுகிக் கொண்டு அவளது கழுத்தை நெரித்தான்.
அதுல்யா மரத்தில் சாய்ந்தபடி நின்றாள்.
தலை சற்று சுழன்றது.
கண்கள் இரண்டும் செருகியது.
“சுனில்… என்னை விட்டுரு, எதுவும் செய்யாதே ”என்று கெஞ்சினாள்.
அவளின் குரல் அவளுக்கே கேட்காத அளவுக்கு மெலிந்திருந்தது.
“அப்ப நா சொல்றதே ஒழுங்க கேளு டி…
உன்னை அவகிட்ட வித்துட்டே…அவ கூட கிளம்பி போனே அட்லீஸ்ட் உயிரோடவாது இருப்பே ”
என்று சுனில் சொன்ன வார்த்தையில் அவன் காதலின் ஆழத்தை புரிந்து கொண்டாள் அதுல்யா .
அவனின் பொய் காதலின் உண்மையை உணர்ந்த நொடி அவளின் முதுகெலும்பில் ஒரு நடுக்கம் ஓடியது.
அதே நேரம் காட்டுக்குள்
ஒரு ஜீப் சத்தமில்லாமல் வந்து நின்றது.
ஹெட்லைட் ஆஃப்.
மொபைல் டார்ச் மட்டும் ஒளிர்ந்தது.கண்களை தேய்தவாறு அதுல்யா பார்க்க, ஒய்யாரமாக நடந்து வந்தான்
அர்ஜூன்.
முகத்தில் எந்தவித பதட்டமும் இல்லை.
ஆனால் கண்களில் உறுதி.
அதுல்யா ஒரு மரத்தில் சாய்ந்து நிற்க, கண்களில் பயம்.
உதடுகள் நடுங்க அவனை பார்த்தாள்.
சுனில் அவளது கழுத்தை இறுக்கிக் கொண்டிருந்ததை பார்த்த நொடியில்
அர்ஜூனின் முகம் இறுக்கமடைந்தது.
சுனில் திரும்பிப் பார்த்து ,“டே நீ யாரு?”
என்று கத்தினான்.
“அவளை தொடுறதுக்கு
உனக்கு எந்த உரிமையும் கிடையாது”முதலே அவ மேலே இருந்து கையை எடு என்றான் அர்ஜூன்.
சுனில் சிரித்துக் கொண்டே,” இவள் என் லவ்வர் டா… என் இஷ்டம்” என்று சொன்னான்.
“இல்லை!,நான் உன் இஷ்டம் கிடையாது!” என்று அதுல்யா கத்தினாள்.
“ஏன்டீ… இங்க என்ன தேடி வந்தது நீ தானே…
இப்ப இவன் முன்னாடி நல்லவளா நடிக்கிறியா?” என்று அவன் குரல் மாறி, அவளை அடிக்க சுனிலின் கை உயர்ந்தது.
அதற்கு முன் அர்ஜூன். ஒரே பிடியில் சுனிலின் கையை முறுக்கி கீழே தள்ளினான்.
“ஒரு பொண்ணு ‘இல்லைனு ’ சொன்னா
அதுக்கு மேல ஒரே ஒரு வார்த்தையும் பேசக் கூடாது ”என்று அவன் சொன்னது காடு முழுவதும் எதிரொளித்தது.
அதே நேரம் காரில் இருந்து தேவா, வினய், சக்கரவர்த்தி மூவரும் இறங்கினர்.
அதுல்யா அவர்களை பார்த்தபடி மெல்ல மயங்கி கீழே சரிந்தாள்.
அவள் விழுவதற்கு முன்
அர்ஜூன் அவளை தாங்கி பிடித்தான்.
சக்கரவர்த்தியின் ஆட்கள் அந்த காட்டை சுற்றி வளைத்தனர். சுனிலை ரத்தம் சொட்ட அடித்து துவைத்தனர்.
அவனின் உயிரை மட்டுமே விட்டு வைத்தனர்.
சக்கரவர்த்தியின் ஆள் பலத்தை அன்றுதான் தேவாவே உணர்ந்து கொண்டான்.
ஒரு நிமிடம் கூட தாமதிக்காமல் அந்த இடத்தை விட்டு அகன்றனர்.
அர்ஜூனும், வினயும் மாற்றி மாற்றி கார் ஓட்ட, பின் இருக்கையில் தேவா மடியில் அதுல்யா படுத்துக் கொண்டாள்.
கார் முழுவதும் அதுல்யா அருந்திய மதுவின் வாடை.
சக்கரவர்த்தி எங்கோ வெளியே வேடிக்கை பார்த்தபடி வந்தார்.
தேவாவும் சக்கரவர்த்தியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்வதைக்கூட தவிர்த்தனர்.
வீட்டுக்கு திரும்பியதும்
அதுல்யா யாருடனும் பேசவே இல்லை.
அழவும் இல்லை.
சிரிக்கவும் இல்லை.
அவளின் அறைக்கு சென்று கதவை மூடிக் கொண்டாள். ஆனால்
அவளின் மனசு
அதை விட இறுக்கமாக மூடப்பட்டிருந்தது.
மைதிலி அவளின் ரூம்மிற்கு சென்று
மகளின் அருகில் உட்கார்ந்தாள்.
“அம்மா… உன்னை சரியா பாத்துக்கல …
மன்னிச்சுடு” என்று சொன்னதும்
அதுல்யா முதன்முறையாக உடைந்தாள்.
“அம்மா… நான் கெட்டவள் இல்ல…
நான் ஏமாந்துட்டே…” என்று அவள் சொன்ன அந்த வரி
மைதிலியின் கண்களில் நீரை வரவழைத்தது.
தேவா
வெளியே நின்று கொண்டிருந்தான்.
மகளை பார்க்க துணிவு இல்லை.
இப்போது அவனுக்கு நன்றாக ஒரு விஷயம் உரைத்தது அன்று அவன் ஜானகியை விட்டுவிட்டு வந்த வினை இன்று அவன் மகள் ரூபத்தில் அவனுக்கே திரும்பி வந்தது.
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை உணர்ந்து கொண்டான்.
எப்படி வயிற்றுப் பிள்ளையோடு நிர்க்கதியாக ஜானகியை அந்த இரவு விட்டு வந்தான் அதை அனைத்தையும் விதி அவனுக்கு வட்டியும் முதலுமாக தந்தது.
அர்ஜூன் மெதுவாக தேவாவிடம் சொன்னான்: “சார்…
காயம் உடம்புல இருந்தா மருந்து போடலாம்… ஆனா
மனசுல இருந்தா
நேரம் தான் மருந்து.”
கவல படாதீங்க எல்லா சரி ஆயிடும் இது அதுல்யா,சுனிலுக்கு செஞ்ச சேட்ஸ்,அவங்க ஒன்னா எடுத்துக்கிட்ட போட்டோஸ் இதை எல்லாத்தையும் அழிச்சுருங்க என்று தேவாவிடம் கொடுத்து விட்டு கிளம்பினான்.
சக்கரவர்த்திக்கு அர்ஜூன் மீது சந்தேகம் எழ ஆரம்பித்தது.அவன் நடை ,உடை எல்லாம் மேல்தட்டு வர்க்கம் போல உள்ளதே என,சத்தமில்லாமல் தன் ஆட்களிடம் அவனை பற்றி விசாரிக்க சொன்னார்.