Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்மணியே காதல் என்பது நீ தானே

KKEN 13

KKEN-13

   வெற்றியை பார்த்து விட்டு வீட்டிற்கு வருவதற்குள் அவள் மனம் சுனாமி பேரலையாய் பொங்கியது. ஆனால் அதை எதையும் பெற்றவர்களிடம் காட்டாக கூடாது என்பதில் முடிவாக இருந்தால். வீட்டிற்கு வந்ததுமே அன்னையின் மடியில் தலை சாய்த்து ஊஞ்சலில் ஆடும் மகளை காணவில்லை. அதற்கு பதிலாக பாறை போல இறுகி போய்  இருந்த முகத்துடன் வேறு ஒரு வித்யா வந்து நின்றாள். நடந்த  விஷயங்களை பற்றி காயத்ரிக்கு தெரியாது அதனால் அவளுக்கும் குழப்பம்தான்.

“என்ன டா தங்கம். ஆபிஸ்ல ஏதாவது பிரச்சனையா? முகமெல்லாம் ஏன் ஒரு மாதிரி இருக்கு?”



Advertisement

“வெற்றி விஷயத்துல என்ன மாம் பண்ணீங்க?”

“உங்கப்பாகிட்ட விஷயத்தை சொன்னேன். யோசிச்சு முடிவெடுக்கலாம்னு  முடிவெடுத்தோம். வேற என்ன?”

“உண்மையிலேயே உங்களுக்கு ஒன்னும் தெரியாதா? இல்லை என்ன ஏமாத்தறீங்களா?”

Advertisement

“உன்ன ஏமாத்தி எனக்கு என்ன ரிசல்ட் வர போகுது? நம்ம வீட்டுல என்னிக்குமே.   ஹைட் அண்ட் சீக் விளையாட்டு கிடையாது. மறந்து போச்சா?”

Advertisement

“சாரி மாம். அதெல்லாம் முன்னாடி. இப்ப உங்க புருஷன் அப்டி இல்ல”

“உங்க அப்பா எப்பதுலேர்ந்து எனக்கு  புருஷனா  மட்டும் மாறினாரு ?”

“உங்க புருஷன சொன்னா உங்களுக்கு கோபம் வருதில்ல? அதே மாதிரிதான். என்னோட புருஷன பத்தி சொன்னா எனக்கும் கோபம் வரும்”

Advertisement

“உன்னோட புருஷனா? என்ன சொல்லறியோ,  கொஞ்சம் தெளிவா பேசு”

“அப்பா வெற்றியோட  அப்பாவை கூப்பிட்டு புகார் வாசிச்சுருக்கார். அவங்க அப்பா அவனை பெல்டால் அடிச்சு எழுந்துக்க முடியாம கிடக்கிறான். வாட் இஸ்  திஸ் மாம்?”

“சாரி வித்யா! இந்த விஷயத்தை பத்தி எனக்குமே எதுவும் தெரியாது..

“அப்பா என்ன செஞ்சுருக்கணும்? முதல்ல என்ன கூப்பிட்டு பேசி இருக்கனும். ஏன் பண்ணல?”

“எனக்கும் பதில் தெரியல. எப்படி இருந்தாலும் அப்பாகிட்ட நாம சேர்ந்தே பேசலாம். சீக்கிரமா ப்ரெஷ் ஆகிட்டு வா. சாப்பிடலாம்”

“இல்லம்மா! அவன பார்த்துட்டு வந்ததுலேர்ந்து மனசே சரி இல்ல. இப்ப நான் மனச தேத்திகிட்டு சாப்பிட உக்காந்தாலும் தொண்டை  குழில இறங்காது.

 நமக்குள்ள சரிப்பட்டு வராது. நீங்க  பணக்கார வீட்டு பையனா பார்த்து கல்யாணம் பண்ணிக்கங்கன்னு சொன்னான். நீங்க எல்லாருமே அதைத்தான் சொல்லறீங்க. ஆனா என்னோட மனசு மட்டும் அவன் தான் என்ன நல்லா  பார்த்துக்குவான்னு சொல்லுது. இது சரியா? தப்பா?தெரியல. என்னால அவனைத் தாண்டி வேறு எதுவும் யோசிக்கக்கூட  முடியல “

“நானும் இது எல்லாம் கடந்து வந்தவதான் . எனக்கும் உன்னோட நிலைமை புரியுது. அப்பா கிட்ட பேசலாம். எதுக்கும் கவலை படாத.”

“தாங்ஸ் மா! அன்னையின் மடியில் படுத்தவளுக்கு எப்போதும் வருவது போல இன்று உறக்கம்  வரவில்லை யோசிக்க யோசிக்க. அடி பட்டிருந்த அவனின் உடலும், தந்தையிடம்  என்னபேச வேண்டும் எப்படி பேச வேண்டும் என்ற யோசனைகள்  வந்து கொண்டே இருந்தது.

அதே போலத்தான் காயத்ரிக்கு. தன்  கணவன் ஏன் இப்படி செய்ய வேண்டும்? சாதாரண கம்பனியில் சாதாரண வேலை பார்த்து, சிறிய கடை வைத்து படி படியாக முன்னேறிய விஜயன் இப்போது இல்லை. உழைத்து முன்னேறி விட்ட, மாடிப்படியை தாண்டி கோபுரத்தில் நிற்கும் விஜயனை காயத்ரி எப்படி எதிர் கொள்ள போகிறார்?

நைட் டின்னர் முடிந்ததும். வந்து அமர்ந்த தந்தையிடம் பேசுவதற்காக மகள் வந்து நின்றாள். தந்தையிடம் இருந்து எந்த விளக்கமும் கேட்க அவள் தயாராக இல்லை.. மாறாக அவள் என்ன பேச  வேண்டும் என்பதில் உறுதியாகவே இருந்தாள் .

“டாட்!  உங்க கிட்ட நான் கொஞ்சம் பேசணும்”

“வெற்றி விஷயம்தானே?”

“எஸ் டாட்! இன்னிக்கு அவன் வீட்டுக்கு போய்  பார்த்துட்டு வந்தேன். அவன் அப்பா அவனை  பெல்டால் அடிச்சு விளாசி இருக்காரு. உடம்பு முழுக்க காயம். எழுந்து உக்கார கூட முடியல. ரெண்டு நாள் பீவர். இன்னிக்குதான் கொஞ்சம் பரவால்ல”

“அடடே! வெற்றி அப்பா மானஸ்தன் தான் இல்ல? “காயத்ரியின் முகத்தை பார்த்து கே ட்டவரின் குரலில் ஒரு எள்ளலும் நக்கலும் கலந்தே இருந்தது. அவரின் பேச்சு மனைவிக்கு பிடிக்கவில்லை. மகள்?கேட்கவே வேண்டாம்.

“டாட் .! நீங்க கொஞ்சமாவது நியாயம் யோசிக்கறவருங்கறதுனால தான் நான் உங்க கிட்ட பேசிகிட்டு இருக்கேன்.  தயவு செஞ்சு உங்க மேல எனக்கு இருக்கற மரியாதைய கெடுத்துகாதீங்க”

“சொல்லு” கை  கட்டி அவள் பேசுவதற்காக  காத்திருந்தார்.

மகளின் கண்களை நேராக பார்த்துக் கொண்டிருந்தவரை மகளும் நேராகவே பார்த்துப் பேசினாள். யாரோ வீட்டு பெண்ணாக காயத்ரி இந்த செயலை செய்த போது பெருமையாக உணர்ந்தார். அப்போது அவர் காதலன். இப்போது மகள் அதையே செய்யும்போது ஒத்துக் கொள்ள முடியவில்லை. தந்தை என்னும் பொறுப்பா? பதவியா? கடமையா?

“நீங்க  நினைக்கற மாதிரி , நீங்க மிரட்டினாலோ  இல்ல அவங்க வீட்டுல மிரட்டினாலோ எல்லாமே  மாறிடாது.  இப்ப எல்லாம் பசங்க ஸ்கூல்ல  படிக்கும்போதே கமிட் ஆகிடறாங்க. பட் நான் யாரையுமே முகம் கூட சரியா பார்த்ததில்ல. ஏன்னா எனக்கு அதுல எந்த விருப்பமும் இல்ல. இவன் மேல இருக்கறது வெறும் பிஸிக்கல் அட்ராக்ஷன்னு நீங்க நினைச்சா அது தப்பு. அவன் ரொம்ப கேரிங். அக்கா தங்கச்சி, அவங்க குழந்தை, அப்பா எல்லாரை பதியும் யோசிப்பான். ஏன் என்ன பத்தி, அம்மா பத்தி, உங்கள பத்தி கூட யோசிப்பான்.  ஒரு பொண்டாட்டியா வேற என வேணும்? “

“நான் பாக்கற மாப்பிள்ளை தங்க தாம்பளத்துல  வச்சு தங்குவான்”

“இவன் உள்ளங்கையில் வச்சு தங்குவான். நீங்க பாக்கற மாப்பிள்ளை  வீட்டுல தங்க தாம்பாலத்தில் வேணுன்னா நான் சாப்பிடலாம். ஆனா புருஷன் என்னோட முகம் பார்த்து பேசுவனான்னு கூட தெரியாது. இவன் என்ன கண்ணுக்குள்ள வச்சு பார்த்துக்குவான். வர்றவனுக்கு பி ஏ  கூட,  சினிமா நடிகைகளோட  இல்லிகள் ரிலேஷன் சிப் கூட இருக்க வாய்ப்பிருக்கு.  இவன் என்ன தவிர வேற யாரையும்  தப்பா பாக்க கூட மாட்டான்.”

“நீ விதண்டாவாதம் பண்ணற “

“இல்லப்பா! உங்களுக்கு புரிய வைக்க முயற்சி பண்ணறேன். என்ன? உங்க ஆசை படி அழகான பணக்கார மாப்பிளையை பார்த்து கல்யாணம் பண்ணிக்கணுமா? கல்யாணம் பண்ணிக்கிட்டா? என்னோட ஒடம்புல உயிர் இருக்கும். கண்டிப்பா வாழ்க்கைல உயிர்ப்பு இருக்காது.சிரிப்பும் இருக்காது”

“மிரட்டறியா “

“எங்களால , உங்கள மாதிரி பெத்தவங்களை  விட்டுட்டு எல்லாம் போக முடியாது.  எனக்கு நீங்க  ரெண்டு பேரும்  வேணும். எனக்கு கல்யாணம் ஆகும். அம்மா காபி கேப்பேன். குடுக்கறதுக்கு அம்மா வேணும். தலையில எண்ணெய் தேய்கமா இருக்கியே?அம்மா தலைல கொட்டணும். பிஸினஸ்ல புதுசா நடக்கற குழந்தைக்கு கை புடிச்சுக்க அப்பா நீங்க வேணும். எங்களுக்கு  குழந்தை பிறக்கும். பிரசவம் பாக்க, குழந்தைக்கு தண்ணி விட, உர   மருந்து கொடுக்க எல்லாத்துக்கும் அம்மாவும் நீங்களும் வேணும்பா. பணக்கார வீட்டுல எல்லாத்துக்கும் ஆளுங்க இருப்பாங்க. ஆனா ஆசை இருக்காது. எனக்கு வேண்டாம்பா. வெற்றியை உங்களுக்கு புடிக்கலன்னா விட்டுடுங்க. நான் இப்டியே இருந்துக்கறேன்”

எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக சொல்லி விட்டு செல்லும் மகளின் மனதை மாற்ற முடியாது என்பதை அவர் புரிந்து கொண்டார்.

மறுநாள் காலையிலேயே தன்னுடைய சம்மதத்தை சொல்லி விட்டார்.

“நீங்க  அரை மனசோட ஒத்துக்க வேணாம் டாட்”

“இரு இன்னும் நான் முடிக்கலை. . ஒரு கண்டிஷன் இருக்கு”

“எஸ் டாட் !எனக்கு தெரியும். நீங்க  ஒரு பக்கா  பிசினஸ் மேன். டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் இல்லாம எதையும் ஒத்துக்க மாட்டிங்க “

வித்யா விளையாட்டு போலவே சொன்னாலும் இவருக்கு சுருக்கென்று இருந்தது. அதை அவளிடம் காட்டிக் கொள்ளவில்லை.

“கல்யாணம் இப்ப இல்ல. கொஞ்ச நாள் ஆகட்டும். அதுக்கு அப்புறம்”

“கொஞ்ச நாளா மாசமா? வருசமா அப்பா? எதுவா இருந்தாலும் எனக்கு ஓகே . ஆனா எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு. அதுக்குள்ள யாராவது  அழகா சிக்ஸ் பேக்ஸ் வச்சுருக்கற  அமுல் பேபி பிசினஸ்  மேன  பார்த்து எனக்கு தலைல கட்ட பாக்காதீங்க “

“ம்! வெரி ஸ்மார்ட். நீயும் பிசினஸ் பேமிலி தாம்மா. ப்ரூவ் பண்ணிட்ட”

 சிரித்துக் கொண்டே தந்தையின் தோள் சாய்ந்தாள்.

இரு தினங்கள் கழித்து வெற்றியே வர ஆரம்பித்தான். எத்தனை நாட்கள் வீட்டிலேயே இருக்க முடியும்? மலரும் அவள் வீட்டிற்குச் சென்றிருந்தாள் . வெற்றியின் தந்தைக்கு மகனை பெல்ட்டால் அடித்தாலும் மனம் கேட்கவில்லை. அதிலும்  இரவெல்லாம் அக்கா,அக்கா என்று வலியில் முனங்கிக்  கொண்டிருந்த மகனை பார்பதற்க்கே தந்தைக்கு கஷ்டமாகத் தான் இருந்ததது. காலையிலேயே மாமனார் மலரை அனுப்பச்  சொன்னதும் நல்லவன் அனுப்பி விட்டான். இருந்தாலும் இரு தினங்கள் அவள் இங்கே இருந்ததே பெரிய விஷயம்.. வித்யாவின் நினைவு வேறு படுத்தியது. அக்காவும் இல்லை. அந்த வீட்டில் இருக்க பிடிக்காதவன் சவாரிக்கு கிளம்பி விட்டான்.

அவள் முகத்தை பார்க்க சற்று வெட்கமாக இருந்தது. அன்று அவள் கட்டி பிடித்து கொடுத்த முத்தங்கள், மீண்டும் மீண்டும் வேண்டுமென மனம் ஏங்கியது. அவளை விட்டு இனி தன்னால் இருக்க முடியாது என்பது அவனுக்கு தெளிவானது. மீண்டும்  பழைய சிரிப்புடன் வெற்றியை பார்த்த வித்யாவை பற்றிச் சொல்லவே வேண்டாம்.

 காலம் அவர்கள் இருவரையும் சந்தோசமாக இருக்க விட்டு விடுமா?

 அடுத்த இரு தினங்களில்  அவளிடமிருந்து காலையிலேயே அழைப்பு வந்தது. அவசரமாக கிளம்பி ஓடினார்கள். அவள் தோழி காதல் தோல்வியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாள் . பார்க்க ஓடினார்கள். நிறைய போலீஸ் நின்றிருந்தார்கள். காலேஜ் ஹாஸ்டல். ஊரில் இருக்கும் அவள் பெற்றோர் இன்னும் வந்திருக்கவில்லை. இன்னும் சற்று நேரத்தில் வந்து விடுவார்கள். யாரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. நெருங்கிய தோழிகளிடம், காலேஜ் வார்டன், செக்யூரிட்டி என்று அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தார்கள். அவ்வகையில் வித்யாவிடமும் விசாரித்தார்கள். நிறைய பேர் சொன்ன தகவல் அவளுக்கு எந்த காதலனும் இல்லை என்றே. பெரிய கண்களும், குண்டு கன்னங்களுமாய் அழகா இருப்பாள். அவளின் வெள்ளை சருமமும், ரோஜா பூ இதழ்களும் எந்த மேக்கப் சாதனைகளுக்கும் தேவையே இல்லை என்று சொல்லும். இப்போதோ அதற்கு நேர் மாறாக  நாக்கு வெளியில் தொங்கி விழி பிதுங்கி பார்ப்பதற்கே கோரமாக இருந்தாள் .

 வித்யா அன்று  விடுப்பு எடுத்துக் கொண்டாள் .

அந்த பெண்ணின் சொந்தங்கள்  வரும் விஷயம் பெரிதாகவில்லை. அவர்கள் வந்ததன் பிறகு, நிலைமை அப்படியே தலை கீழாக மாறியது. தங்கள் பெண்ணிற்கு எந்த காதலும் இல்லை, மகளை இந்த கல்லூரியில் இருப்பவர்கள் தான் ஏதோ செய்து விட்டார்கள் என்று ஆர்ப்பாட்டம் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். கல்லூரியில் இருந்த பெண்களும் அமர்ந்து தர்ணா செய்ய ஆரம்பித்து விட்டார்கள். ஏனெனில் கடந்த ஒரே மாதத்தில் இது மூன்றாவது தற்கொலை.  ஒவ்வொரு பெண்ணிற்கும் ஒவ்வொரு காரணம் .  முதல் இரு பெண்களின் தற்கொலைகளை எளிதாக மூடி மறைத்தவர்களுக்கு இந்த மூன்றாவதை மறைக்க முடியவில்லை. பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படத் தானே வேண்டும். மறைக்க முடியவில்லை. லோக்கல் இன்ஸ்பெக்டரால் சமாளிக்க முடியவில்லை

கமிஷனரிடம் இருந்து அவசரமாக அழைப்பு வரவும் வேகமாகச் சென்று பார்த்தாள் .

விறைப்பாக சல்யூட் வைத்தவளுக்கு கேஸை பற்றிய விவரங்களை சொல்லி விரைந்து முடிக்க வேண்டும் என்றும் கட்டளை இட்டார்.

மது அங்கே  வந்த போது  கூட்டம் குவிய ஆரம்பித்தது. சிறிய போராட்டமாக ஆரம்பித்தது மதியத்திற்குள் மிக பெரிய விஷயமாக மாறியது. மதுவுமே அவர்களை அடக்க முடியாமல் சிரமப்பட்டாள்.

போஸ்ட் மார்ட்டம் செய்து வந்த உடலை பெற்றோர வாங்க மறுத்து விட்டனர். மதுவுக்கு அவர்களின் நிலைமை புரிந்தது. இருந்தாலும் அவர்களுக்குசாதகமாக பேச முடியாது. இது நிச்சயம் சாதாரண விஷயம் இல்லை. இருப்பினும் கல்லூரி நிர்வாகமும் போலீசும் சேர்ந்து பேசி அவர்களை சமாதானப்படுத்தினர்.

பெற்றவள்  மயக்க நிலைக்கு வந்திருந்தார். பெண்ணின் உடல் வந்ததும் , அயோ அம்மா என்று அவர்கள் அடித்துக் கொண்டு அழுதது, பரிதாபம்தான். பார்த்து கொண்டிருந்த  காவலர்களுக்குமே கஷ்டமாகத் தான் இருந்தது.  அப்போது வெடித்த கலவரத்தை இவர்களால் அடக்க முடியவில்லை. தண்ணீர் அடித்து தான் கூட்டத்தை விலக்கினார்கள்.

இறுதியில் அனைவரும் தினரிக் கொண்டிருந்த போது  பெண்ணின் அன்னை எடுத்த முடிவுதான் அனைவரையும் அமைதிப் படுத்தியது.

“நீங்க  எல்லாரும் எம்  பெண்ணுக்காக இப்டி வந்து நிக்கறதே  எங்களுக்கு போதும். யாரு என்ன பண்ணாலும் போன உசுரு வர போகறதில்ல. யாரு என்  பொண்ணோட சாவுக்குக்  காரணமோ அவங்கள புடிச்சு தண்டனை வாங்கி குடுங்க. மதுவிடம் கை எடுத்து கும்பிட்டு கொண்டே பேசியவர் அப்படியே மயக்கமடைந்தார் மீண்டும் . மனைவியை தொடர்ந்து கணவனும் ஒப்புதல் அளிக்கவே அவர்களின் சொந்த ஊருக்கு அந்த பெண்ணின் சடலம் கொண்டு செல்ல பட்டது.

வீட்டிற்கு வந்த மதுவுக்கு நிச்சயமாக அது தற்கொலை இல்லை என்பது தெரியும். போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் வேறு சொல்லியது. இவள் மனம் வேறு சொல்லியது.  ஏதோ தப்பு. என்ன? அன்று  இரவு அந்த சிறு பெண்ணின் முகமே வந்து வந்து சென்றது. இது இந்த பெண்ணின் வழக்கோடு  முடிய கூடிய விஷயம் இல்லை. மற்ற பெண்களின் வழக்கையும் சேர்ந்த விஷயம்.

 தோழியின் இறப்புக்குச் சென்று விட்டு வந்த  வித்யா ஆட்டோவில் வரும் போது வழி நெடுகிலும் அழுது கொண்டே தான் வந்து கொண்டிருந்தாள் . அவளை சமாதான படுத்த வேண்டும் என்பதையும் தாண்டி வெற்றியின் மனதில் வேறு ஒரு சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது. மதுவின் மனதில் ஓடியதே தான் இவன் மனதிலும் ஓடிக் கொண்டிருந்தது.

வித்யா மூக்கு உரியும் சத்தத்தில் சிந்தனையை மாற்றிக் கொண்டான்.

“மேடம் அழாதீங்க மேடம். வெளில யாரவது பார்த்தா என்ன தப்பா  நினைச்சுப்பாங்க. எத்தனையோ கெஞ்சி பார்த்தான். ம்ம் .அவள் அழுகை நிற்கவே இல்லை.  அவளுக்கு என்ன தேவை? புரிந்து கொண்டான். வண்டியை ஓரம்கட்டி விட்டு அவள் அருகே அமர்ந்து அவள் முகத்தை தோளில் சாய்த்துக் கொண்டான். கைகளை அழுத்தி பிடித்துக் கொண்டான். மனம் ஓரளவு  சமாதானம் அடைந்தது.

டேய் வெற்றி தோளில்  சாஞ்சுருக்கறவ தலைல கல்ல தூக்கி போடப்போறா. தயாரா இரு……

தொடரும்………

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!