Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்மணியே காதல் என்பது நீ தானே

KKEN 17

KKEN-17

“மேடம் எப்படி இருக்காங்க?” வெற்றியின் கேள்விக்கு பதில் அளித்தாள்  காயத்ரி.

“அப்டியேத்தான் இருக்கா. யாருகிட்டயும் பேசறது கூட  இல்ல. சாட்டர் பாக்ஸ் ஸ்விட்ச் ஆப் பண்ணுன்னு சொல்லிகிட்டே இருப்பேன்.  நான் உங்கள பத்தி அவகிட்ட முதன் முதல்ல பேசினப்ப ரொம்ப யோசிக்காத. போய்  உன் பொண்ணுக்கு பொடிமாஸ் செஞ்சு வைன்னு சொன்னா . இப்ப? அம்மா! பசிக்குதுன்னு கூட சொல்ல மாட்டேங்கறா ” சொல்லிய காயத்ரி குலுங்கி குலுங்கி அழுதார்.

ஜன்னல் வழியே வெறித்துக் கொண்டிருந்த தந்தைக்கும் கண்ணீர் வழிந்து கொண்டுதான் இருந்தது.



Advertisement

” நீங்க  கவலை படாதீங்க மேடம். சீக்கிரமா எல்லாமே சரி ஆகிடும்.அனைவரிடமும் சிறிது மௌனம்.

 அவனே தொடர்ந்தான். “பாப்பாவுக்கு என்ன பேரு  வச்சிருக்கீங்க?”

“பேரு எல்லாம் யோசிச்சு வைக்கல . உத்திர நட்சத்திரத்துல பொறந்தாளாம். அதனால உத்ரான்னு தான் கூப்பிடறோம்”

Advertisement

“என்னதான் இருந்தாலும் அவ மேடத்தோட குழந்தை இல்லையா? நீங்க  அவளை ஒதுக்கறது சரி இல்ல மேடம்”

Advertisement

“இது என்ன அவ ஆசையா காதலிச்சு கல்யாணம் செஞ்சு பெத்துக்கிட்ட குழந்தையா? அவன் வலுக்கட்டாயமா கொடுத்தது. எங்களுக்கு இதுக்கும் என்ன சம்பந்தம்? என் பொண்ணு பெத்த குழந்தை. அதனால் அனாதை ஆஸ்ரமத்துல விட முடியல. அதுக்குன்னு எங்க யாராலையும்  இதை ஏத்துக்க முடியல வெற்றி. நாங்க  மட்டும் இல்ல. அவளும் அப்டித்தான் இருக்கா . குழந்தை பசில அழும்போது கூட பால் குடுக்க மாட்டா . கொஞ்ச நேரம் அமைதியா இருந்துட்டு குலுங்கி குலுங்கி அழ ஆரம்பிச்சுருவா”

விஜயன் மனைவிக்கு அடித்து சொல்லிக் கொண்டிருந்தார்.

“எங்க போய்  எதை மாத்தறதுன்னே தெரியல வெற்றி. எதுக்கு இன்னும் உயிரோட இருக்கோம்னு நிறைய தோணும். நாம் செத்தாலும் பெத்த புள்ளைய அது பெத்த புள்ளைய சாகடிக்க மனசு வரல”

Advertisement

“ரொம்ப யோசிக்க வேணாம் சார். நீங்க இங்கையே குடி வந்துருங்க. மேடத்தை நான் பார்த்துக்கறேன்.அன்னிக்கே நான் பிடிவாதமா அவங்க கூடவே இருந்திருக்கணும். தப்பு பண்ணிட்டேன். இனிமே என்னோட மனைவியை, மகளை நான் விட்டுட மாட்டேன்.  நீங்க  யாரு ஏத்துக்கிட்டாலும் இல்லனாலும் இவ என்னோட பொண்ணுதான். பட்டு கன்னத்தில் வலிக்காத படிக்கு ஒரு முத்தம் கொடுத்தான். உதியும்  அவன் போலவே அவனுக்கு முத்தம் கொடுத்தாள் .

“அந்த வீடு? ஏன் அங்கே இருந்து காலி பண்ணறீங்க?”

“அது ரொம்ப கஷ்டப்பட்டு கட்டின வீடு வெற்றி. எங்களோட சந்தோஷத்துக்காக கட்டின இடம். எப்ப என் மகளுக்கு இந்த மாதிரி ஆச்சோ அப்பவே நான் காலி பண்ணி இருக்கணும்.

அவர் முழுங்கிய வார்த்தைகள் அவனுக்குத்தெரியும். அவர் வேறு இடம் மாறாததற்குக் காரணம் காயத்ரி. அவரின் உடல் நிலைக்காகவே அப்போது அவர் இடம் மாற்றவில்லை.

“வேற இடம் மாத்தி  பார்த்தா அவளுக்கு மனசு கொஞ்சமாவது மாறுதான்னு பாக்கத்தான். இந்த மாதிரி பெரிய பிளாட்ல இருந்தா நாலு மனுஷங்களை பாக்கும்போதாவது ஏதாவது பேசறாளான்னு முயற்சி பண்ணி பாக்கலான்னுதான் “

அவர்களின் மன நிலை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. அமைதியாக நின்றான்.

“நாங்க  கிளம்பறோம்பா”

“பாக்கலாம்  வெற்றி”

வெளியில் நின்று செருப்பை போட்டுக் கொண்டார்கள்.

“நான் வித்யாகிட்ட முதன் முதல்ல உன்ன பத்தி கேட்ட போது வெற்றி என்ன உன்னோட உசுரான்னு கேட்டேன். அதுக்கு அவ இல்லம்மா அதுக்கும் மேல. அவன் என்னோட நம்பிக்கை. தைரியம்னு சொன்னா . நானும் அதை  நம்பறேன் பா” காயத்ரியின் வார்த்தைகளும் கண்ணீரும் மனதிற்கு ரொம்ப கஷ்டமாகத்தான் இருந்தது. இதை அவன் எப்படி சரிபடுத்துவான்?

“எப்பவுமே அவங்களுக்கு என் மேல ரொம்ப நம்பிக்கை. நாந்தான் படிப்பு, வேலை,பணம் எல்லாத்தையும் பார்த்து பார்த்து அவங்கள நோகடிச்சுருக்கேன். அவங்க அசையவே இல்லை. எங்கப்பாவை, எங்க அம்மா பெரிய ஆளாக்கின  மாதிரி நானும் உங்கள பெரியாளாக்குவேன்னு சொல்லி கிட்டே இருப்பாங்க”

ஆமோதிப்பாக தலை ஆட்டியவர்கள் கிளம்பி விட்டார்கள்.

காரில் பயணித்து கொண்டிருந்தவர்களுக்கு மனம் முழுவதும் யோசனையாகவே தான் இருந்தது.

விஜயனுக்கு நடந்தவை எல்லாம் கண் முன் வந்தது. மகளிடம் வெற்றியை பற்றி பேசியதற்குப் பிறகு மீண்டும் அவரால் அதை பற்றி யோசிக்க கூட முடையவில்லை. அதிபனின் ஆட்கள் அவ்வ போது  வந்து மிரட்டிக் கொண்டிருந்தார்கள். சில சமயம் வீட்டிற்கே கூட வந்தார்கள். கணவனுக்கு மட்டும் தெரிந்த விஷயம் மனைவிக்கும் தெரிந்தது. இதற்கு நடுவில் ஒரு நாள் வித்யா தோழிகளுடன் மாலிற்குச் சென்றிருந்தாள் . அங்கே பன் சிட்டிக்குச் சென்று விளையாடி விட்டு கையில் கோன் ஐஸுடன்  சுற்றிக் கொண்டிருந்தார்கள்.

வழக்கம் போலத்தான். சில ரவுடிகள் இவர்களிடம் பாலியல் சீண்டல் செய்தார்கள். ஆண்களுக்கும் பெண்களுக்கும் சிறு விவாதம் ஆரம்பித்து பின்னர் நகர்ந்து கொண்டார்கள். ஆனால் அவர்கள் இவர்களை விடுவதாக இல்லை. மீண்டும் வேறு இடத்தில வந்து மீண்டும் இடித்தார்கள். இதையே அவர்கள் திரும்ப திரும்ப செய்யவும் பெண்கள் வேகமாக அங்கே இருந்து வெளியில் வர வேண்டும் என்று ஓடி வந்தார்கள். அப்படி திரும்பி பார்த்துக் கொண்டே இவள் வரும்போது அங்கே வந்த ஆண்  மகன் மீது மோதி இடித்தாள் . வேறு யாரு? அதிபன் தான். அந்த மாலுக்கே அதிபன். அவனை அங்குப்  பார்த்ததும் இவளுக்கு சற்று தைரியம் வந்தது. எதையும் இவள் சொல்லவில்லை. அவனே புரிந்துக் கொண்டான். அழகாய் அவளின் இடையில் கை  வைத்து தன்னோடு அணைத்துக் கொண்டான். அந்த நிலையில் அவளுக்கு பயம் மட்டுமே இருந்தது. வேறு எதுவும் தெரியவில்லை. இவள் மேல் கை வைத்தவனுக்கு தனது வலது கையால் முகத்தில் ஒரு குத்து விட்டான். மூக்கில் இருந்து ரத்தம் வந்தது.

மற்றவர்களையும் மற்ற விஷயங்களையும் அவனின் பாடி கார்ட்ஸ் பார்த்துக் கொண்டார்கள்.

“ரொம்ப தாங்ஸ் சார்!” மற்ற பெண்களுடன் சேர்ந்து இவளும் நன்றி கூறி ஓடி விட்டாள் . என்ன உதவி செய்ததற்க்கு பதிலாக கன்னத்தில் ஒரு முத்தம் கொடுத்திருக்கலாமோ! பாவம் அதிபன் பார்த்துக் கொண்டிருக்க தரை தளத்தில்  வந்து கொண்டிருந்த வெற்றிக்குத்தான் அவளின் அணைப்பும் முத்தமும் கிடைத்தது. என்னதான் அதிபன் காப்பாற்றி விட்டான் என்றாலும் இவளுக்கு வெற்றியை பார்த்ததும்தான் உயிரே வந்தது. ஒட்டி வந்து அவனை கட்டிக் கொண்டாள் .

“என்னாச்சு தங்கம்?” தலை கோதி  நெற்றியில் முத்தமிட்டான். தோழிகள் நடந்த விவரத்தைச் சொன்னார்கள்.

“அதுதான் உங்க பாஸ் வந்து காப்பாத்திட்டாங்களே? அப்புறம் என்ன? வா! போலாம்” தைரியம் சொல்லி கை பிடித்து அழைத்துச் சென்றான். அப்போது அவள் அவனுக்கு முத்தம் கொடுத்தாள் . அவள் எப்போதுமே அப்படித்தான் . அவனுக்கு முத்தம் கொடுக்க தயங்க மாட்டாள். நினைத்ததும் சட்டென கொடுத்து விடுவாள். அவனும் சிறு புன்னகையுடன் அதை ஏற்றுக் கொண்டான்.  இதை எல்லாம் முதல் தளத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த அதிபனுக்கு நன்றாகவேத் தெரிந்தது.

அங்கேயே அவனுக்கென்று தனி அலுவலகமும் உண்டு. அதில் தனி அறையும் உண்டு. தன்  அறைக்கு  வந்தவனுக்கு வேறு ஒரு புதிய ஆடையை கொடுத்தான் அவன் அசிஸ்டென்ட். “வேண்டாமே! இது நல்லாத்தானே இருக்கு”

“பாஸ் ! சட்டைல அந்த பொண்ணோட பொட்டு… “

“எங்க?”

“இதோ! ” தோளில் சுட்டிக் காட்டினான்.

“தலையை திருப்பி அவள் சாய்ந்து இருந்த இடத்தில் ஒட்டிக் கொண்டிருந்த ஸ்டிக்கரை பார்த்தான்.எடுக்கப் போனான். மனம் வரவில்லை. அவன் தோளில்  அவளின் மனம். அவள் போட்டிருந்த வாசனை திரவியத்தின் மணம் . அப்பா! வாசம்  பிடித்தான். வாசனையையா? அல்லது அவளையேவா? அனுபவித்தான். சுகம் அனுபவித்தான். “உங்கள விரும்பறேன்” அவள் வாயாலேயே சொல்ல வேண்டும். சொல்ல வைக்க வேண்டும். எளிய வழிதான். இந்த அதிபனால் முடியாதது ஒன்று உண்டா? சொல்ல வைத்தான். தன்  வழியில்.

அதிபன். ஒற்றை பிள்ளை. அவனை யாராலும் அதிகாரம் செய்ய முடியாது. அன்னையாலும்  அவனை திட்ட முடியாது. அடிக்க முடியாது. நல்லது  சொல்ல முடியாது. அவன் தந்தைக்கு மகன். கேட்பார் இல்லாமல் கண்டிப்பு இல்லாமல் வளர்ந்தவன். அரசியல் குடும்பத்தைச் சார்ந்தவன். அவன் சரியாக பேசுவானோ இல்லையோ? அவன் சொல்வது எல்லாமே சரிதான். அப்படிப்பட்டவனுக்கு திமிரும், அதிகாரமும், ஆணவமும் இல்லாமல் இருக்குமா? அதிலும் ஆணழகன் வேறு. பார்க்கும் பெண்களை வெகு எளிதாக அடைந்து விட முடியும். அப்படி பட்டவன் கை அணைப்பில் இருந்தும் எப்படி அந்த வித்யாவால் வேறு ஒருவனை அணைத்துக் கொள்ள முடியும்? அத்தனை அருகில் இத்தனை பெரிய பணக்காரன். ஆணழகன் தான் அவளை அணைத்து நிற்க  அவளோ வேறு ஒருவனை கட்டிப் பிடித்துக் கொண்டு? அதிலும் அத்தனை பேர் முன்? வித்யா தனக்கு மட்டும் தான். தன்னை தவிர வேறு யாருமே அவளைத் தொடக் கூடாது. முதலில் வித்யாவை அடைய வேண்டும். பிறகு அவனை பார்த்துக் கொள்ளலாம். இனி அவனால் பொறுக்க முடியாது. அவள் வேண்டும். முடிவு செய்து விட்டான். வந்தான். அவள் முகவரிக்கே வந்தான்.

மாலிற்கு சென்று வந்தவள் மிகவும் அசதியாக இருக்கவும் நன்றாக உறங்கி கொண்டிருந்தாள்.

விஜயனும் தலை வலி என்று வீட்டிற்கு வந்து விட்டார்.

நடு நாயக(னா)மாய் வந்து ஊஞ்சலில் அமர்ந்து கொண்டான்.

விஜயனுக்கு அவன் யார் என்பது தெரியும்.  இருந்தும் எதுவும் பேசவில்லை. கணவன்,மனைவி இருவருக்கும் தொண்டை தண்ணீர் வற்றி போனது.

“அப்புறம் என்ன விஜயன்? பிசினஸ் எல்லாம் நல்லா  போகுதா?” குசலம் விசாரித்தான்.

“ம் ! என்ன விஷயமா..”

“இந்த பொட்டு  யாரோடதுன்னு தெரியுதா?’

“இது… ஆமா !உங்க பொண்ணோடதுதான் . இன்னிக்கு மாலுக்கு வந்திருந்தா . யாரோ ரவுடி பசங்க தொந்தரவு செஞ்சுருக்காங்க போல. நான்தான் காப்பாத்தினேன். அப்ப தான் இந்த சம்பவம்.. நகத்தை கடித்து வெட்கப்பட்டான் . எனக்கு உங்க பொண்ணு மேல லவ் வந்துருச்சு.

அதான் உங்க கிட்ட பொண்ணு கேட்டு வந்துருக்கேன்.

இவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொன்றனர்.விஜயன் என்ன சொல்லி இருப்பார் ?

பெண்ணை பெற்றவர் என்ன சொன்னால் என்ன? விஜயனின் மறுப்பை காதில் ஏற்றுக் கொண்டான். கவலை இல்லாமல் தூங்கி கொண்டிருந்த மகளை தோளில் ஏற்றிக் கொண்டான்.  கணவனும் மனைவியும் அவன் காலில் விழுந்து கெஞ்சி  கதறி அழுதனர்.

“சார். ப்ளீஸ் சார் ! உங்கள கூட பொறந்த தம்பியா நினச்சு கேக்கறேன். அவளை விட்டுடுங்க. உலகம் தெரியாத பொண்ணு சார் அவ” காலில்  விழுந்து கதறிய காயத்ரியிடம் உங்களுக்கு நான் தம்பி அவளுக்கு முறை இருக்குல்ல?

“இங்க பாருங்க. போலீசு அது இதுன்னு ஏதாவது எங்கையாவது, இன்ப்ளுயன்ஸ் பண்ணலான்னு பார்த்தீங்க என்ன நடக்குன்னே தெரியாது.?இவ  நான் லவ் பண்ணற பொண்ணு. கொஞ்ச நாள் அனுபவிச்சிட்டு விட்டுடறேன். என்ன வேற எதுவும் அசிங்கமா பண்ண வச்சுடாதீங்க”

அந்த கொஞ்ச நாள் எத்தனை நாள்? ஒரு மாதம். அவன் கெஸ்ட் ஹவுஸ் சிறையில் வைத்திருந்தான். அன்பாக பார்த்துக் கொண்டான். காதல்  கணவனாய் இருந்தான். அதிபனின்  காய் அணைப்பில் இருந்தவள் வெற்றியிடம் சென்றது தவறு. அவனைத்தான் காதலிக்க வேண்டும். கட்டிப் பிடிக்க வேண்டும். அவன் எதிர் பார்த்த நேரத்தில்  முத்தம் கொடுக்க வேணும். எதிர் பாராத நேரத்தில் இங்கிலிஷ்  முத்தம் கொடுக்க வேண்டும். இன்னும் ஏதேதோ சொல்ல வேண்டும். செய்ய வேண்டும். அவன் சொல்வதற்கு அனைத்திற்கும் அவள் கட்டுப் பட வேண்டும். இவள் வேறு ஏதாவது முயற்சி செய்தால் இவள் கண் முன்னேயே அவள் பெற்றோர் நாய்களால் கடித்து கொடூரமாக கொல்லப் படுவார்கள். அதையும் மீறி இவள் ஏதாவது முயற்சி செய்ய முடியும்?

இந்த சம்பவம் நடக்கும்போது வெற்றி எங்கே?

வெற்றியின் வீட்டில் அன்று மிகப் பெரிய சண்டை தான். அவன் அக்காவுக்காக பேசப் போக அவன் தங்கை வித்யாவை மட்டமாக மிக மட்டமாக பேசி விட்டாள். இனி வீண் செலவு செய்யாக் கூடாது என்று சொன்னால்?

“என்ன வெற்றி இது வரைக்கும் அக்கா தங்கச்சிய யாராவது ஏதாவது ஒரு வார்த்தை சொன்னாலே பாய்ஞ்சுடுவ ? இப்ப என்ன நீயே இப்டி பேசற? நீயா பேசறியா இல்ல அவ சொல்லி கொடுத்து பேசறியா?”

“அவங்களை பத்தி எதுவும் பேசாத. அவங்கள மாதிரி ஒரு தங்கத்தை இந்த உலகத்துல பாக்க முடியாது”

“ஏன் சொல்ல மாட்ட? கல்யாணத்துக்கு முன்னேயே கட்டி புடிச்சுக்கிட்டு நின்னவதானே? அதோட நின்னுக்கோ இல்ல வேற ?”

அவள் அடுத்த வார்த்தை பேசுமுன் பளீரென அவள் கன்னத்தில் அறை  விழுந்தது. அவங்கள என்ன உன்ன மாதிரி பொறுக்கின்னு நினைச்சியா?

அடுத்த நொடி அவன் கன்னத்தில் பளீரென அறை  விழுந்தது தந்தையின் கையால்.

“எப்ப இந்த அளவுக்கு வந்துருச்சோ இதுக்கு மேல எதுவும் சரி பட்டு வராது.  யாரோ ஒருத்திக்காக கூட பொறந்தவள அடிக்கற அளவுக்கு வந்துட்டியோ இனிமே உனக்கும் இந்த வீட்டுக்கோ  எந்த ஓட்டோ உறவோ இல்ல. நீயும் உங்க அக்காவும் இனிமே எங்க மூஞ்சில முழிக்கக் கூடாது”

“அது எப்படி தான் பெற்ற ஒற்றை மகளுக்காக இரு பிள்ளைகளை வேண்டாம் என்று அவரால் ஒதுக்க முடியும்? வெற்றியால் இதை ஒத்துக் கொள்ள முடியவில்லை.வயதும் வேகமும் அவனை அதற்கு மேல் யோசிக்க விடவில்லை. இளமை முறுக்கேறியது. அன்றைய இரவு தோழனின் வீட்டில் படுத்துக் கொண்டவன் மறு தினம் காலையிலேயே கிளம்பி அத்தை வீட்டிற்க்கு சென்றான்.  இரவில் தன்னவளிடம் பேச ஆசையாக இருந்தது. இருந்தாலும் அவளிடம் தன்னை மீறி அழுது விடுவோமோ என்ற பயத்தில் அவன் அவளுக்கு அழைக்காமல் இருந்தான். ஆனால் அவளும் ஏன் தனக்கு அழைக்கவில்லை. அடுத்த இரு தினங்களில் அவனே அழைத்தான். அவன் தந்தை தான் எடுத்தார்.

“அவளுக்கு ஒடம்பு சரி இல்ல. தொந்தரவு பண்ணாதீங்க” அவள் வீடு வந்து சேரும் வரை வெற்றியின் அழைப்புகளை தவிர்த்தார். அவர் ஒதுக்குவது அவனுக்குப் புரிந்தது. அவர் மகளுக்கு வேறு திருமணம் ஏதும் செய்து வைக்க போகிறாரா? எந்த காரணத்திற்காகவும் அவள் தன்னிடம் பேசாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இவரே அவளை வேறு வெளி நாட்டிற்கு அனுப்பி இருப்பாரா? தந்தை திருமணத்திற்கு ஒத்துக் கொண்டதாக சொன்னாளே? அவர் இவளை ஏமாற்றி இருப்பாரா?அல்லது அவளுக்கு வேறு ஏதாவது ஆபத்தா ? மனம் ஏதோ சரி இல்லை என்று சொல்லியது. அவனால் பொறுக்க முடியவில்லை. பத்து  நாட்கள் பொறுத்தவன் அதற்கு மேல் பொறுக்க முடியாமல்  அவனே அவளை பார்க்க வந்தான்.

வரவேற்றது காயத்ரி.

“அடடே வா வெற்றி. அவ எங்க?”

“அவங்க என் கூட வரலையே ” பேச்சுக் குரல் கேட்கவும் வெளியில் ஓடி வந்தார் விஜயன். அவருக்கு வெற்றியை பற்றி தெரியுமே தவிர அவனை பார்த்ததில்லை.

“வணக்கங்க! நான் வெற்றி. அவங்கள தினம் ஆட்டோல வேலைக்கு கூட்டிட்டு போவேன்.  வித்யா அம்மா பத்து நாளா வேலைக்கு போகல. போனும் அணைச்சு வச்சுருக்கு. அதான் என்னாச்சுன்னு …..”

தொடரும்…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!