Skip to content
Post Views: 3,085
KKEN-18
மகள் விரும்பியன். மனைவி நம்பியவன். அவனிடம் இன்னும் எத்தனை நாளைக்குத்தான் மறைத்து வைக்க முடியும்? பாவம் அவனாவது வேறு ஏதாவது பெண்ணை திருமணம் செய்து கொள்ளட்டும்.
“உள்ள வாங்க வெற்றி. காயத்ரி தம்பிக்கு டீ போட்டு கொண்டு வாம்மா “
“சரிங்க! ஆனா வித்யாவை இன்னும் காணோமே?”
Advertisement
“அவ இப்பதான் போன் பண்ணா. இதோ வந்துகிட்டே இருக்கா “
“அப்டியா சரி”
ஆவி பறக்க டீ வந்ததும் மெதுவாக எடுத்து குடித்தான். மேடம் எங்க? தன்னவளை காணவில்லையே?மனம் பரபரத்தது.
Advertisement
“காயத்ரி! நான் தம்பிக்கு வீட்டை சுத்தி காட்டறேன். நீ போய் தூங்கு. வேலை செஞ்சு ரொம்ப களைப்பா இருக்க”
Advertisement
“வித்யா வரட்டுமே”
“ரொம்ப ட்ராபிக்கா இருக்காம் . அவ வர்றதுக்கு இன்னும் நேரம் ஆகுமாம். அவ வந்தததும் நான் உன்ன எழுப்பறேன்”
“சரி அமைதியாக படுத்துக் கொண்டாள் . மனைவிக்கு போர்த்தி விட்டு கதவை சாத்தாமல் வந்தார்.
Advertisement
வெற்றிக்கு ஏதோ சரி இல்லை என்று தெரிந்தது.
வித்யாவின் அறைக்கு அழைத்துச் சென்றார்.
“மேடம்!” இவனை பார்க்கவிலை. எங்கோ வெறித்துக் கொண்டிருந்தாள்.
மான் குட்டி போல துள்ளி வரும் தன்னவளா இவள்?
விஜயன் நடந்த விவரங்களைக் கூறினார். எதையுமே வெற்றியால் நம்ப முடியவில்லை. அதிலும் ஒரே நேரத்தில் அன்னை, மகள் இருவருக்குமே மூளையில் பிரச்சனை. வேறு வேறு மாதிரி. தலையை பிடித்துக் கொண்டு தரையிலேயே அமர்ந்து கொண்டான்.
காயத்ரி அதற்குள் வந்து விட்டார்.
“என்னங்க ! வித்யா இன்னும் வரலையே ? ஒரு தடவை போன் பண்ணி பாக்கட்டுமா ?”
இப்போது என்ன சொல்லப் போகிறார்? திகிலுடன் அவரைப் பார்த்திருந்தான்.
” இதோ இருக்காளே! அவ வந்த பொது நீதானே கதவு திறந்த? மறந்துட்டியா? அவளுக்கு ரொம்ப அசதியா இருக்காம் . அதான் தூங்க போறாளாம் . உன்கிட்ட சொல்லிட்டுதானே மாடிக்கு வந்தா? வா! அவளுக்கு ரொம்ப பசிக்குமில்ல. ஏதாவது டிபன் செஞ்சு வை . ரெடி ஆனதுக்கு அப்புறம் எழுப்பிக்கலாம்”
இவனுக்கு மண்டை வெடித்து விடும் போல இருந்தது.
“நீங்க எப்படி சார் எல்லாத்தையும் சமாளிக்கறீங்க?”
“நான் என்ன பண்ணறது. இதோ இவளுக்காக அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஏதாவது காரணம் யோசிக்கணும். அதத் தவிர என்னால வேற எதையுமே செய்ய முடியல. என்ன சம்பாதிச்சு என்ன? இப்டி மகளை உசுரோட பலி குடுத்துட்டேனே?”
“நான் யாருக்கும் எந்த பாவமும் பண்ணலியே வெற்றி. உங்களை கூட உங்க அப்பா கண்டிச்சு வைக்கணுன்னுதான் சொன்னேனே தவிர அவரு உங்கள அடிப்பாருன்னு தெரியாது. இந்த பொண்ண எப்படி எல்லாம் வளர்த்தோம் தெரியுமா? ஸ்கூல் படிக்கும்போது அவளோட பேக்
கூட தூக்க விட மாட்டா காயத்ரி. எத்தனை வெய்ட்டா இருந்தாலும் இவளேதான் தூக்கிட்டு வருவா. சில சமயம் ராத்திரி எல்லாம் தோள் பட்டை வலிக்கும். அதோடவே தையல் வேலையும் செய்வா காயத்ரி . எத்தனை வித விதமா புது ட்ரெஸ் போட்டு தலை அலங்காரம் பண்ணி., அவ சுலபத்துல எதையும் கேக்க மாட்டா . கேட்டா பிடிவாதம்தான். பிடிவாதம் பிடிச்சுதான் வண்டி வாங்கினா. ஆனா அவளுக்கு ஏதாவது அடிபட்டுடுன்னு பயந்து கிட்டே அவளை நான் வண்டி கூட ஓட்ட விட்டதே இல்லை” கண்ணுக்குள்ள வச்சு , அப்டி வளர்த்த ஏன் கண்மணியை அன்னிக்கு என் கண் முன்னாடி தூக்கிட்டு போனான்.
முகத்தில், தலையில் அடித்துக் கொண்டு கதறினார். மகள் வந்த கோலத்தை எப்படி ஒரு தந்தையால் தாங்கிக் கொள்ள முடியும்? வித்யா வந்தாள். பெற்றவர்கள் என்ன கேட்க முடியும்? அமைதியாக வந்தாள். தன்னறைக்கு வந்தவள், யாரையுமே அருகில் வர அனுமதிக்க வில்லை. எல்லா பொருட்களையும் தூக்கி எறிந்தாள். அழுதாள், கதறினாள். பெற்றவர்கள் தடுக்கவில்லை. அவளின் மனப் பாரம் அழுதாளல் சற்று குறையுமே என்று எண்ணினார்கள். ஓடிச் சென்று குளித்தாள் . உடம்பை சுரண்டி சுரண்டி குளித்தாள் . வெகு நேரம் ஷவரின் அடியில் அமர்ந்திருந்தவளுக்கு காயத்ரி தான் சென்று உடல் துடைத்து வேறு ஆடை மாட்டினாள் .அவளின் நாகக் கீறல் அவளின் உடல் எங்கும் இருந்தது. மகளிடம் அதற்கு பிறகு வேறு எந்த அசைவும் இல்லை. கண்ணீருடன் மகளின் தலையை தடவி தூங்க வைத்தார்.
சிறிது நேரம் கழித்து ரெஸ்ட் ரூம் சென்று வந்தவர் மகளிடம் எதையோ பார்த்தார். அது என்னவென்று யாருக்கும் தெரியாது.
ஏதோ எனக்கு வேண்டாம் என்று ஏற்றுக் கொள்ள மறுத்த மூளை மகளுக்கு நடந்த கொடுமைகளை வேண்டாம் என்று ஒதுக்கி விட்டது.
அப்போதில் இருந்து இப்படித்தான். ஒரு புறம் சித்த பிரம்மை பிடித்த மகள். மறு புறம் ஐந்து நிமிடத்திற்கு ஒரு முறை மகளைத் தேடும் மனைவி. இவர்களுக்காகவே இன்னும் பைத்தியம் பிடிக்காத விஜயன்.
எப்படி இவர்களுக்கு ஆறுதல் கூற முடியும்? சட்டென்று ஏதோ யோசனை வந்தவனாக வெற்றி விஜயனிடம் கேட்டான்.
“இந்த வீடு?”
“என்னோட பொண்ணுக்கு கிஃப்டா இந்த வீட்டை எனக்கே கொடுத்துட்டேன் பாவி. என்ன பணம் பதவி எல்லாம் இருந்தும் என்ன? நான் பெத்த பொண்ண என்னால காப்பாத்த முடியலையே ? மீண்டும் மீண்டும் முகத்தில் அடித்துக் கொண்டு அழுதார்.
அதற்குள் காயத்ரி மீண்டும் வந்து,
“என்னங்க! வித்யா காலைல வேலைக்கு போனா. இன்னும் வரலையே? அடடே வெற்றி. அவ வரல? எங்க அவளை காணும்”
மீண்டும் அதேவா ? அவனுக்கு குழப்பமாக இருந்தது .
விஜயனும் அதே பதிலைச் சொல்லி அவளை மீண்டும் படுக்க வைத்தார். வெளியில் இருந்து பார்ப்பவர்களுக்கு காயத்ரி சாதாரணமாக இருப்பது போலவேத் தோன்றும். காலையில் எழுந்து கொள்வாள். வழக்கம்போல குளித்து சாமி கும்பிட்டு காபி போட்டு எல்லாம் செய்வாள். நடு நடுவே வாயிலுக்குச் சென்று இன்னும் வித்யா வரவில்லையே என்று தேடிக் கொண்டிருப்பாள். எப்படியும் ஒரு நாளைக்கு குறைந்தது நூறு முறையாவது கேட்டு விடுவாள். அவள் நடக்கும் நடைக்கு அவளுக்கு நிச்சயம் ஓய்வு தேவை. இரவில் மாத்திரை கொடுத்து தூங்க வைத்து விடுத்தார். “ரொம்ப முடியலைன்னா மட்டும் கொடுங்க” மருத்துவர் பகலுக்கும் சேர்த்தே மாத்திரை கொடுத்தார். அதில் மற்ற சத்து மாத்திரைகளை கொடுப்பவர் தூக்க மாத்திரையை மட்டும் கொடுப்பதில்லை. பகலில் அதை செய்ய விஜயனுக்கு இஷ்டமில்லை. மகளை பார்த்துக் கொள்ள ஒரு நர்ஸ் வந்து கொண்டிருந்தாள். இரவில் வித்யாவுக்கும் உறங்குவதற்கு மருந்து கொடுத்து விடுவார்கள். இவர்கள் இருவரையும் பார்த்து பார்த்து இவர்தான் உறக்கமில்லாமல் தவித்தார். குடும்பதோடு தற்கொலை செய்து கொள்ளலாம் போல இருந்தது. காதல் மனைவியையும், உயிரான மகளையும் எப்படி கொல்ல முடியும். அழுவார்.நினைத்து நினைத்து அழுவார்.
அவரின் நிலை யாருக்கும் வரக் கூடாது.
“அடுத்து என்ன?” வெற்றிக்கு எதுவும் புரியவில்லை. மனதை சமாதான படுத்திக்க கொண்டான்.
“வெற்றி! இதை நான் உங்க கிட்ட கேக்க கூடாது. ஆனா எனக்கே பைத்தியம் புடிச்சுடும் போல இருக்கு. அதனாலதான்…”
“என்ன விஷயம் சொல்லுங்க சார்”
“ரெண்டு மூணு நாளைக்கு எனக்கு துணைக்கு இருக்க முடியுமா? “
“இருக்கேன் சார்”
அன்று முழுவதும் வெற்றி அங்கு தான் இருந்தான். நாள் முழுவதும் ஏதேதோ காரணங்களைச் சொல்லி மனைவியை சமாதானப்படுத்தும் கணவனை பார்க்க பார்க்க அவனுக்கு பாவமாக இருந்தது. முதலில் அவருக்கு ஒய்வு தேவை. வெற்றிக்கு புரிந்தது.
“ஐயா ! முதல்ல நீங்க கொஞ்ச நேரம் படுங்க. முதல்ல உங்களுக்குத்தான் ரெஸ்ட் தேவை. பிடிவாதமாக அவரை படுக்க வைத்தான்.
அடுத்த சில தினங்கள் இப்படியே கழிந்தது. காயத்ரிக்கு பிடித்த பாடல்கள் பழைய காலத்து படங்கள் போன்றவற்றை போட்டு சிறிது சிறிதாக நேரம் கடத்தினார்கள்.
“பார்த்தேன் சிரித்தேன் பக்கம் வர துடித்தேன்” பழைய அபிமன்யு படைப்பு பாடல். அந்த வரிகள் வரும்போது இந்த வயதிலும் வெட்கப் படும் மனைவியைக் கண்டு ஆனந்தத்திற்கு பதில் கண்ணீர் மட்டும் வந்தது. இருந்தாலும் அவளை தொலைகே காட்சி பார்க்க வைப்பது ஓரளவு நல்ல பலனைத் தந்தது. வெற்றியின் உதவியால் விஜயனால் சற்று தன்னை ஆசுவாச படுத்திக்க கொள்ள முடிந்தது. ஒரு நாள் அந்த நர்ஸ் யாரிடமோ வித்யாவை பற்றி தவறாக பேசிக் கொண்டிருந்ததை வெற்றி கேட்டு விட்டான்.
“அவங்க யாரு சார்! என்னோட மேடத்தை பத்தி தப்பா பேச? இதே விஷயம் அவங்க வீட்டுல நடந்தா. வேணாம் சார். என்னோட மேடத்துக்கு யாரும் வேணாம். நானே பார்த்துக்கறேன். என்ன மிஞ்சி போனா மூத்திரம் அள்ளணும். பீ அள்ளனும். நான் வாரி கொட்டறேன். ஏன் புள்ள மாதிரி நினச்சு நான் செய்யறேன் சார். அவங்க என் உசுரு சார். அவங்கள யாரும் தப்பா பேசிட கூடாது சார். கண்ணீரை துடைத்துக் கொண்டு கூறும் வெற்றியை மகள் ஏன் தேர்ந்தெடுத்தாள் என்பது தந்தைக்கு புரிந்தது.
அதிபன் வித்யாவை ஒரு மாதம் தன்னுடன் வைத்துக் கொள்ள விரும்பினான். ஆனால் “இன்வெஸ்டர்ஸ் மீட்டிங். நீதான் போக வேணும்” பிடிவாதமாக இருந்தார் தந்தை.
“இது என்ன உன்னோட வேலையா? இருக்குடா ஒனக்கு” மனதில் விஜயனை திட்டிக் கொண்டே வேறு வழியில்லாமல் தில்லிக்கு கிளம்பினான். சென்றவனின் பிணம்தான் சென்னைக்கு வந்தது . யாரோ முக மூடி அணிந்திருந்த மர்ம நபர்களால் சுட்டுக் கொள்ள பட்டான் .
தொழில் முறை எதிரிகள் காரணமா? என்ற கோணத்தில் போலீஸ் விசாரித்து வருகின்றனர்.
அனைத்து டீலிங்கையும் வழக்கம்போல வெற்றிகரமாக முடித்தவன் , மறு நாள் பிளைட் பிடிக்க வந்தான். அவன் காரில் இருந்து இறங்கும் அந்த ஒரே நொடி அவன் நெற்றி பொட்டில் ஒரே ஒரு புல்லட். யார் செய்திருப்பார்கள்? நிச்சயம் நன்கு பயற்சி பெற்றவராகத்தான் இருக்க முடியும். ஏன்விருது பெற்றவராகக் கூட இருக்கலாம். அத்தனை பாடி கார்ட்ஸ் இருந்தும் எந்த பயனும் இல்லை. வினை விதைத்தவன் வினை அறுத்தே தான் ஆக வேண்டும். இது அதோடு நிற்கவில்லை. அமைச்சர் அருணாச்சலம் மகனின் அஸ்தியை கையில் எடுத்து கொண்டு காரில் வந்து கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ட்ரெய்லர் மீது மோதி விபத்தானது. ட்ரைவர் தான் சரியாக கணக்கிட்டு வண்டியை திருப்பவில்லை என்றார்கள்.
விஜயன் வீட்டிலும் செய்தியை பார்த்தார்கள். இதோ மதுவும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறாள். இரு தினங்களுக்கு முன்புதான் அதிபனின் விஷயம் வந்தது. இப்போது அவன் தந்தை.
தன் மீது எந்த தவறும் இல்லை என்று நிரூபித்து வேலையில் சேரவே இத்தனை நாட்கள் ஆகி விட்டன. தான் நாளை வேலையில் சேர வேணும் என்னும் போது அதிபனின் அஸ்தி கூட கிடைக்காமல் இருக்க வழி செய்தது யாராக இருக்கும்? அந்த ட்ரைவர் யார் என்பது அவளுக்கு நன்றாகவேத் தெரியும். அந்த மூன்று பெண்கள் கொலை வழக்கில் முதலில் இறந்து போன பெண்களின் தந்தை. ஒன்று அவர் மகள். இன்னொருத்தி அவர் அண்ணனின் மகள். இருவரையுமே தோளில் தூக்கி சுமந்து கஷ்டப்பட்டு படிக்க வைத்து ஆளாக்கி விட வேண்டும் என்ற வெறியில் இருந்தவர்.
வெளியில் விஷயம் தெரியவில்லை என்றாலும் மகள்களின் தோழிகள் மூலம், அங்கே இங்கே என்று விசாரித்து ஓரளவு விஷயத்தை தெரிந்து கொண்டார். இரண்டு உசுரை அசால்ட்டா எடுத்திட்டு கல்லூரி மூலம் நஷ்ட ஈடு கொடுத்து போட்டோவுக்கு போஸ் கொடுத்தார் அமைச்சர். அவரின் உதவியாளர் மூலம் கெஞ்சி கூத்தாடி அங்கேயே டிரைவராக வேலையில் சேர்ந்து கொண்டார். பழி தீர்க்க நேரம் பார்த்தவருக்கு சரியான சமயம் கிடைத்தது. தன் உயிரையும் பற்றி கவலை படாமல் அந்த நொடியில் அவர் எடுத்ததுதான் முடிவு.
ஆனால் அதிபனின் கொலைக்கு யார் காரணம்? அவளின் யூகம் சரியா? காலிங் பெல் சத்தம் கேட்டது.
கதவு திறந்தவளுக்கு ஆச்சர்யத்தில் கண்கள் விரிந்தன.
தொடரும்……
error: Content is protected !!