புது முதலாளி பற்றிச் சொன்னான். தான் அவர்களிடம் வேலைக்குச்ச் சேர்நதது, தொழில் கற்றுக் கொண்டது எல்லாமே சொன்னான். அவன் சொல்ல உள்ள இவளுக்கு மனதிற்கு நிறைவாய் இருந்தது.
” கல்யாணம்? கேக்க மாட்டியா? “
தெரிந்து கொள்ள விரும்பாத விடைக்கு காத்திருந்தாள். ஆகிடுச்சு என்று சொல்லி விட்டால்?
அவன் வேறு ஒரு திருமணம் செய்து சந்தோசமாக வாழ வேண்டும் என்பதற்காகத் தான் அவனை அவள் வீட்டை விட்டு வெளியில் அனுப்பியதே. ஆனால் அதுவே அவன் வேறு ஒருத்திக்கு சொந்தம் ஆகி இருப்பான் என்று நினைக்க தைரியம் வரவில்லை .
“இல்ல! இன்னும் பண்ணிக்கல” வயிற்றில் பாலை வார்த்தான் .
“கொஞ்ச வருசத்துக்கு முன்ன ஒருத்தி என்ன கண்ணுல சுருட்டி, நீல கலர் புடவை முந்தில சொருகிட்டா . அதுலேர்ந்து வெளில வர முடியல”
அவன் தன்னைத்தான் சொல்கிறான். இது என்ன காதல் மொழி? அவளையும் அறியாமல் நொடியில் கன்னங்கள் சிவந்து உதட்டில் புன்னகை வந்தது.
எப்போதுமே அவளுக்கு அவன் புகழ வேண்டும். கொஞ்ச வேண்டும், காதல் மொழி பேச வேண்டும். அவளின் ஏக்கங்கள் தெரியாதவனா அவன்? அப்போதெல்லாம் செய்யாததை இப்போது செய்து எதை மீட்கப் போகிறான்?
வந்த புன்னகையை நொடியில் அழித்துக் கொண்டவளை பார்த்ததும் அவனுக்கு ,
பழைய நினைவுகளில் சிறிது நேரம் அமைதியாக இருந்தான். அருகில் இருந்த குழந்தை .லேசாக திரும்பி படுத்துக் கொண்டது. மெதுவாக அதற்கு தட்டிக் கொடுத்துவிட்டு மீண்டும் தன் வீட்டிற்க்கே வந்து விட்டான். மீண்டும் வித்யாவை மீட்டுக் கொண்டு வர முடியுமா யோசனையுடனே தூங்கி விட்டான்.
கடை திறக்க இன்னும் வேலைகள் கொஞ்சம் மிச்சம் இருந்தது. இன்விடேஷன் அடிக்க இவனுக்கே போக வேண்டும் போல இருந்தது.
“கடை திறக்க பத்திரிக்கை அடிக்கணும். அதுக்கு வார்த்தைகள் எனக்கு பாக்க வராது. அதான் உன்ன அழைச்சுக்கிட்டு போகலான்னு வந்துருக்கேன்” குரல் அதிகார மாக வந்தது. இனி அவளிடம். எதற்கும் பர்மிசன் கேட்டு கொண்டு நிற்க முடியாது.
ஆனால் அவளோ அவன் நீ வா போ என்று அழைப்பதை கவனித்துக் கொண்டிருந்தாள்.
நான் வரலைனா?”
“மூஞ்சியை திருப்பிக் கொண்டு போய் விட்டான். அடுத்த இரு அடிகளை எடுத்து வைத்தவனை அவள் குரல் தடுத்தது.
“எப்ப போகணும்?
“நீ எப்ப ப்ரீ?”
மாலையில் கிளம்பினார்கள். குழந்தையும் வர வேண்டும். தூக்கி கொண்டு வந்தான். இதுவே பழைய வித்யாவாக இருந்திருந்தால் உனக்கு உன் பொண்ணுதான் முக்கியமா? குழாயடி சண்டை போட்டிருப்பாள். இவளோ,’ நீ யாரோ ! இந்த பிள்ளை யாரோ’ என்றிருந்தாள். மகளோ வார்த்தை வராமலேயே ஆயிரம் மொழி பேசினாள் . அது அத்தனையும் அவன் புரிந்து கொண்டு பதில் சொன்னது வித்யாவிற்கு அதிசயமாக இருந்தது. அவன் பிள்ளைக்கு யாரை பற்றியும் கவலை இல்லை. அவளுக்கு தந்தை இருந்தால் போதும் .
இது வழக்கமாக அவர்கள் வரும் இடம்தான். வெற்றியின் தோரணை, உடல் மொழி அனைத்துமே மாறி இருந்தது. ஒரக் கண்ணால் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தாள்.
வேறு யாரோ வெட்டிங் இன்விடேஷன் , ரிசெப்ஷன் கார்டு அடிக்க , இரண்டு மூன்று ஜோடிகள் வந்திருந்தார்கள். இவளுக்கு அவர்களை பார்த்து மனதில் ஓரம் ஒரு ஏக்கம். எத்தனை எத்தனை ஆசைகள் , ஏக்கங்கள். கண்ணில் எட்டி பார்த்த கண்ணீரை லேசாக கர்ச்சீப்பால் ஒற்றி எடுத்தாள்.
அடுத்து ஈவென்ட் மேனேஜ் மென்ட் கம்பனிக்கு இவளை அழைத்துச் சென்றான்.
“ஹாய் பூரி!”
“வாடா! வா வா! புதுசா கடை திறக்கற போல?சொல்லவே இல்ல?காங்கிராட்ஸ் டா! “
“தேங்க்ஸ் பூரணி. உனக்குத்தான் பெரிய இடத்துலேர்ந்தே இன்பர்மேஷன் வந்திருக்குமே?
கோர்த்திருந்த கைகள் சேர்ந்தே தான் இருந்தன.
“யாருடா இந்த டால்?”
கண்ணில் வித்யாவை ஜாடை காட்டினாள்.
என்ன சொல்ல வேண்டும்? அவளே சொன்னாள் .
“பிரண்ட் “
“ஓ ! பிரண்டா. நல்ல வேளை எங்க நீ என்ன ஏமாத்திட்டியோன்னு பயந்துட்டேன்”
பூரணிக்கு எல்லாமே தெரியும். தெரியாதது போல காட்டிக் கொண்டாள் .
பிறகு தொழில் பற்றியே சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்.
“நீயும் என் மேல சாஞ்சு தூங்கு தியா. எப்படியும் ட்ராபிக்ல நாம் போய் சேர நேரமாகும்”
வீடு வந்து சேர்ந்ததும் இருவரையும் எழுப்பி அழைத்துக் கொண்டு வந்தான். தூங்கிக் இரவில் தூங்கி கொண்டிருந்த உதி பா! பா !உளறிக் கொண்டே திரும்பி இவள் மீது காலை போட்டுக் கொண்டாள்.
அவள் தேவை இவளுக்கும் புரிந்தது.
இன்று பூரணியிடம் உரிமையாக அவன் பேசியதில் தனக்கு என்ன வருத்தம்? தன்னால் ஏன் உரிமையாக மனைவி என்று கூற முடியவில்லை? ஏங்கி ஏங்கி அழுதாள் . வழக்கம்போல இரவில் வந்தான். ஏதோ டிபன் செய்து கொடுத்தான். சென்று விட்டான்.
அவள் அழுது இருப்பது அவனுக்கு தெரியும். எதுவாக இருந்தாலும் அவள் தான் பேச வேண்டும். காத்துக் கொண்டிருக்கிறான்.
இதோ நாளை கடை திறக்கப் போகிறார்கள். இரவில் உணவு கொடுக்க வந்தவனிடம் ஒரு நகை பெட்டியைக் கொடுத்தாள் .
அதில் ஒரு ஷார்ட் செயின் இருந்தது. வீ என்ற டாலர்.
“எதுக்கு தியா இதெல்லாம்?”
அமைதி. முகம் பார்க்கும் கண்ணாடி நீட்டினாள். புரிந்து கொண்டான்.
அவள் கட்டளை படி அப்போதே போட்டுக் கொண்டான். அழகனுக்கு அழகாய் இருந்தது. இது அவள் ஆயிரம் கற்பனைகளுடன் வாங்கியது. முதலிரவில் அவனுக்கு அவள் போட்டு விட வேண்டும். அவர்களின் அந்த நேரத்தில் அந்த செயின் அவன் கழுத்தில் பட்டு இவளை வருட வேண்டும்.
இன்று அவன் சந்தோசமாக இருக்க வேண்டிய நாள். தன்னுடைய உணர்வுகளை கட்டுப் படுத்திக் கொள்ள வேண்டும்.
“நீ எத்தன மணிக்கு வரப்போற தியா ?”
மௌனம்.
“நீ தானே என்னோட வெற்றி? நீ இல்லாம எப்படி?”
மௌனம்.
“ஒருத்தன் ஒரு பங்க்சன் பண்ணறான்னா அம்மா, அப்பா, பொண்டாட்டி புள்ளைங்க எல்லாரும் இருப்பாங்க. எனக்குத்தான் அந்த குடுப்பினை இல்லையே? விடு!”
“தனக்காக இப்படி நடு இரவில் வந்தவனை நோகடித்து விட்டோமே?”
ஓடிச் சென்று அவனை பின்னோடு கட்டிக் கொண்டாள் . அவளின் மனப் போராட்டம் அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. இருவரும் ஏதும் பேசவில்லை. அமைதியாக அப்படியே நின்றிருந்தார்கள்.
சில நிமிடம் கழித்து அவள் புறம் திரும்பி கொண்டான்.
“நீ வாடி! என்னோட பொண்டாடி புள்ளைன்னு பெரியவர் கிட்ட அறிமுகப்படுத்தனும் போல இருக்கு”
“நா வேண்டாண்டா”
அவள் கைகளை பிரித்து விட்டு சென்று விட்டான்.
மறுநாள் காலையிலேயே கொடி மலர் வந்து விட்டாள் . கோவிலுக்கு சென்று அர்ச்சனை செய்தாள். . வீட்டில் பாயசம் செய்தாள் .
அப்பா வராதது மனதிற்கு சங்கடமாகத்தான் இருந்தது. இவன் போனில் சொன்னான்.
இருந்தும் அவருக்கு வர இஷ்டமில்லை.
அவர் வருகிறேன் என்று சொல்லி இருந்தால் காரில் அழைத்து வந்திருப்பான். இந்த சமயத்தில் அவன் ஏனோ யாரும் இல்லாத அனாதை போல உணர்ந்தான்.
‘விடு வெற்றி நம்ம அப்பா தானே. வருவாரு. தானே வருவாரு”
நெற்றியில் விபூதி இட்டு விட்டாள் . போய் உன்னோட மாமியார் மாமனார் கிட்ட ஆசிர்வாதம் வாங்கிட்டு வா”
அதற்குள் அவர்களே வந்து விட்டார்கள்.
“வாழ்த்துக்கள் வெற்றி ! நீங்க இன்னும் பெரிய நிலைமைக்கு வரணும் காயத்ரியும் நெற்றியில் அர்ச்சனை செய்து விட்டு வந்த விபூதியை இட்டு விட்டார். எல்லாத்துக்கும் கடவுள் துணை இருப்பாரு வெற்றி”
கீழே கடைக்குச் சென்றான். ஏற்கனவே அங்கு வேலை நடந்து கொண்டிருந்தது. மலரும் பிடிவாதமாக வர முடியாது என்று விட்டாள் .
“இன்னும் ஒனக்கு வாழ்க்கைல நிறைய நல்லது நடக்கணும். அங்க நான் வந்து நின்னா சரியா இருக்குமா? யாருமே இல்லாமல் அங்கு வெற்றி தனியாக நிற்கக் கூடாதே என்று விஜயனும் காயத்ரியும் வந்தார்கள்.
வித்யாவுக்கும் ஆசையாக இருந்தது. ஆனால் தன்னை கட்டுப்படுத்திக் கொண்டாள் .
“என்ன மேடம் ! எப்படி இருக்கீங்க?”
“மேடம்! நீங்க எப்படி வெற்றி போன்ல?”
“வாடி கீழ”
மதுவின் குரலை மீற முடியாமல் கீழே வந்தாள் .
அடர் சிகப்பு நிறத்தில் மைசூர் சில்க் கட்டி இருந்தாள் .
“அர்ஜுன் சார் எப்படி மயங்கினாருங்கறது இப்பதானே புரியுது?”
“ஓ! மேடத்துக்கு இவ்ளோ பேச தெரியுமா?”
“ஆ! இன்னும் நல்ல பேசும். கையில தூக்கி வளத்த தம்பி கடை தொறந்தா வர மாட்டேன். நல்லது கெட்டது எல்லாம் பேசும்”
“நீ வேற வாராதடா”
“ஏண்டி! அவனுக்கு உன்ன விட்ட யாரு இருக்கா?நீயும் வரலைன்னா அவன் என்னடி பண்ணுவான்?”
“நல்லா கேளுங்க மேடம்”
“அது சரி!உன்னோட பொண்டாட்டி எங்க?”
“இதுக்கு மேல சைக்கோ”
“மலர் வா! போலாம். அவளை கூட்டிட்டு வரலாம்”
“லிப்டுக்காக காத்துக் கொண்டிருந்தார்கள். மேடம் நீங்க அழகா இருக்கீங்க? எத்தனை மாசம்?
“இல்ல என்ன பண்ணுவீங்களாம்? முட்டிக்கு முட்டி தட்டிடுவீங்களோ?’
“மாட்டோமா?”
“நான்தான் அர்ஜுன் சார் கிட்ட சொல்லிடுவேனே?”
“வீட்டை காட்டறீங்களா?”
பெல் அடித்து விட்டு காத்திருந்தார்கள்.
“ரவி உன்ன நல்ல பார்த்துகறாரா? அங்க எதுவும் பிரச்சனை இல்லையே?”
“இல்ல மேடம்! சார் தங்கம் “
“வித்யா! இவங்க மதுமதி மேடம். உன்ன பாக்கனுன்னு சொன்னங்க” மதுவின் ஒற்றை பார்வையில் கீழே சென்று விட்டாள் மலர்.
“உன்கிட்ட கொஞ்சம் பேசணும்.உக்கார சொல்ல மாட்டியா?”
“வாங்க! உக்காருங்க”
“அப்புறம்? என்ன வெற்றி கடை திறக்கும்போது வர மாட்டேன்னு சொன்னியாம். அவன் தானே உன்னோட புருஷன்”
“இல்ல!”
“ஓ! யாரு அந்த அதிபனா உன்னோட புருஷன்?’
வித்யா அதிர்ச்சியானாள் .
“கங்கிராசுலேஷன்ஸ்! எனக்கும் அவன் தான் புருஷன் . என்ன? அவன் கை வைச்சதுல ஒனக்கு முன்னாடியே நான் முந்திகிட்டேன்”
என்ன இந்த விஷயத்தை இவ்ளோ ஈஸியா பேசறேன்னு நினைக்கிறியா? அவன் எத்தனையோ பொண்ணுங்க மேல கை வைச்சுருக்கான். அத்தனை பேருக்கும் அவன் புருஷனாகிட முடியுமா? “
காதல்னா என்ன வித்யா? காதலியோட கண்ணீரை துடைக்கறதா ? இல்ல கண்ணீர் வர வச்சவனை ஒன்னும் இல்லாதவனா ஆகறதா? வெற்றி உனக்காக ரொம்ப பண்ணி இருக்கான். புரிஞ்சுக்க. ப்ளீஸ் அவனை நோகடிக்காத”. கிளம்பி விட்டாள் .
இதோ அவனுக்கு பிடித்த அடர் நீல சேலையில் வந்து விட்டாள் அவன் தியா. . அவன் ஆசை பட்ட படியே மனைவி மகளுடன் கடை திறந்து விட்டான்.
அவன் கொடுத்த பரிசுகள் மூலம் அந்த அடுக்ககக்தில் இருந்த பலரும் வந்திருந்தார்கள். நல்ல பிராண்டிங், விளம்பரம் எல்லாமே வேலை செய்தது. மெதுமெதுவாக வாழ்க்கையில் முன்னேற ஆரம்பித்தான் வெற்றி.
===============================================
இங்கே ரவியின் வீட்டில் மலர் அத்தனை சந்தோசமாக இருந்தாள். அவள் உலகத்தில் நிறைய பேர் இருந்தார்கள் . இங்கே வந்திருந்த சில மாதங்களில் உடல் தேறி அழகாக இருந்தாள் . நல்ல உணவு, இருக்க நல்ல இடம், போட்டிருந்த நல்ல ஆடைகள் அனைத்தையும் விட நல்ல கவனிப்பு. ரவி மற்ற வேலை ஆட்களை பார்த்துக் கொள்வது போல இவளையும் நன்றாகவே பார்த்து கொண்டான். முதலில் எல்லாம் அது ஒரு நன்றி உணவு என்றே நினைத்திருந்தவனுக்கு பிறகு வந்த மாதங்களில் இதன் காரணம் என்பது தெளிவாகியது. எத்தனையோ பெண்களை கடந்து வந்தவன்தான். என்ன அவர்களை கடக்கும் போது அவர்கள் எல்லாம் நின்று இவனை கவனிப்பார்கள். இவளோ அவன் நின்று பார்க்கும்போதும் பிள்ளையின் முகத்தையே பார்த்திருப்பாள் . ஒரு போதும் அவளாக இவனை பார்த்தது இல்லை. அவளைப் பொறுத்த வரையில் இந்த உலகத்திலேயே இருக்கும் ஒரே ஜீவன் மீனுக்குட்டி மட்டும்தான். அப்படித்தானே ரவி நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் அது அப்படி இல்லை என்று காட்டிக் கொண்டிருந்தாள்.
தோட்டத்தில் நின்று பாடிக் கொண்டிருந்தாள்.
“பூ பூவா பறந்து போகும் பட்டு பூச்சி அக்கா நீங்க பள பளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா ?”
கேட்டுக் கொண்டிருந்தவனுக்கு அதன் அர்த்தமே புரியவில்லை. ப்ராபிட் அண்ட் லாஸ் ஸ்டேட்மெண்டு பார்த்துக் கொண்டிருந்தவனுக்கு முதலில் அந்த சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
“நீ இப்ப பாடினியே அது என்ன ரைம்ஸ்?”
“அது ரைம்ஸ் இல்ல சார். பழைய காலத்து சினிமா பாட்டு. வாலி ஐயா எழுதினது”
“அது என்ன சொன்ன? கொக்கா மொக்கா ? வாட் வாட் இஸ் தட் வர்ட்?”
“அவன் சொல்வதில் லேசாக சிரித்து விட்டு அது சொக்கா சார். சொக்கண்ணா ட்ரெஸ்”
“என்ன மீனு இது? உங்கப்பாவுக்கு சொக்கா கூட என்னன்னு தெரியல?” ம