Skip to content
Post Views: 4,984
இன்னொரு நாள் காலையில் இவன் காபி குடித்து கொண்டிருக்கும்போது , குழந்தைக்கு பறவைகளை காட்டிக் கொண்டிருந்தாள்.
“அசோ மீனு பாப்பா அண்ட ங் காக்கா நம்மள பார்த்துடுச்சே! மூணு தடவை தலைல கொட்டிக்கோ லேசாக குழந்தையின் தலையில் கொட்டினாள் . குழந்தை இவளுக்கும் கொட்டியது.
அவள் இடுப்பில் இருந்து இறங்கி வந்து அப்பாவுக்கும் கொட்டினாள் .
“இது என்ன புது பழக்கம் மீனு?”
Advertisement
“ம்மா ! ம்மா !”
“இது என்ன புதுசா குழந்தைக்கு அடிக்கற பழக்கம் வந்துருக்கு? “
“அதுவா அண்டங் காக்கா பார்த்தா (கு) கொட்டிக்கணுமில்ல?”
Advertisement
“அப்டின்னா?
Advertisement
“அதோ இருக்கே “
ஓ ! ஓகே !”
வேறு ஒரு நாள் இங்க பாரு மூக்கு கொத்தி. அதோ பாரு தேன் சிட்டு . ஏதேதோ காட்டிக் கொண்டிருந்தாள். அவள் அப்படித்தான். எதை பற்றியும் கவலை பட மாட்டாள். அணில் வந்து அவள் கையில் இருந்து பொ ட்டுக் கடலை வாங்கி தின்னும். கிளியும் இவள் கொடுப்பதை பயமில்லாமல் தின்று விட்டு செல்லும்.
Advertisement
“மீனுக்கு அவ்ளோ புடிக்குன்னா நாம் பர்ட்ஸ் வளக்கலாம்”
“அதெல்லாம் தப்புங்க சார். அதது சுதந்திரமா இருக்கணும். நம்மள புடிச்சு கூண்டுக்குள்ள வச்சா எப்படி இருக்கும்? எனக்கு அந்த கஷ்டம் தெரியும் சார். பாவம் அதுங்களாவது சந்தோசமா இருக்கட்டும்”
வியப்பாக பார்த்தான் அவளை.
வேறு ஒருநாள் குழந்தையின் அறைக்குச் சென்று பார்த்தான். அவள் குழந்தைக்கு குளிப்பாட்டிக் கொண்டிருந்தாள்.
லேசாக கதவை தட்டி விட்டு லேசாக கதவை திறந்து பார்த்தான்.
தலை தூக்கி பார்த்தவள், குழந்தையிடம் அப்பா வந்துடாங்களா? தலை கோதிக் கேட்டாள் . இருந்த சில பற்களை காட்டி சிரித்தாள் மீனு.
“ஐயா! அங்க பிள்ளைக்கு தூவாலை வச்சுருக்கேன். அதால புடிச்சு பிள்ளையை அங்கிட்டு தூக்கிட்டு போங்களேன்”
“அதெல்லாம் என்னால முடியாது” அவள் தண்ணீர் படாமல் இருக்க புடவையை லேசாக தூக்கி விட்டிருந்தாள். அதில் அவளின் வாழை தண்டு கால்கள் பளிச்சென்று தெரிந்தது. அதில் ரவி சற்று பேஜாராகிவிட்டான்.
“சரி! சரி! நானே வரேன்”
குழந்தையை மெதுவாக தோளில் போட்டுக் கொண்டு வழுக்கி விடாமல் ரொம்ப கவனமாக மெதுவாய் அடி எடுத்து வந்தாள் . இப்போது அவனே குழந்தையை வாங்கி கொண்டான். அதில் அங்கே இங்கே என்று கை பட்டு விட்டது. அதை பற்றி எல்லாம் அவள் கவலை படவில்லை. இல்லை இல்லை அதெல்லாம் அவளுக்குத் தெரியவே இல்லை. அவன் குழந்தையை வாங்கி கொண்டதும் மெதுவாக குழந்தையிடம் பேசிக் கொண்டே உடல் துடைத்து, பவுடர் போட்டு அழகாய் மை இட்டு திருஷ்டி கழித்தாள் .
“ஐயா! நீங்க பிள்ளையோட இருக்கீங்களா. பிள்ளைக்கு சாப்பாடு கொண்டு வரேன்”
“இப்ப எதுக்கு சாப்பாடு”
“பின்ன!பிள்ளை குளிசுருக்கில்ல . பசிக்காது?” சொல்லி விட்டு போய் விட்டாள் . இவனுக்கு குழந்தையுடன் தனியே இருந்து எல்லாம் பழக்கம் இல்லை. சீக்கிரம் வா! மனதிற்குள் அவளை அழைத்துக் கொண்டிருந்தான்.
பெரிய கிண்ணத்தில் பருப்பு சாதம் போட்டு சிறிது ரசம் போட்டுக் கொண்டு வந்திருந்தாள் . உருளைக் கிழங்கு அதோடு கலந்தே கொண்டு வந்தாள் .
“அவள் வந்ததும் , அவள் மீது தாவிக் கொண்டாள் மீனு.
“என்ன? பாப்பாவுக்கு தொப்பை பசிக்குதா ? எங்கமாவுக்கு தொப்பை பசிக்குதா? அடி என் செல்லமே! ” கொஞ்சி கொஞ்சி அவள் ஊட்டியதால் விரைவாகவே உண்டு முடித்து விட்டாள் மீனு.
“குழந்தை கொஞ்சம் ஒடம்பு தேறி இருக்கா. நீ நல்லாத்தான் பார்த்துக்கற. தேங்க்ஸ்”
“அசோ! என்ன இப்டி சொல்லிடீங்க. குழந்தைக்கு இப்டி கண்ணு வச்சுடீங்களே சார்”
“நாய் கண்ணு நரிக் கண்ணு ஊரு கண்ணு உலக கண்ணு உங்க அப்பா கண்ணு எல்லாம் போகட்டும். ஊட்டிய கப்பை இந்த பக்கமும் அந்த பக்கமும் சுற்றி திருஷ்டி கழித்து குழந்தைக்கு கழுத்து, வாய் எல்லாம் சுத்தம் செய்து விட்டாள் .
அவள் செய்கை அவனுக்கு கிண்டலாக இருந்தது.
“நான் அவளுக்கு அப்பா மட்டும் இல்ல. உனக்கு முதலாளி கூட. எங்கிட்ட எப்படி பேசணுன்னு தெரிஞ்சுக்க”
“இல்ல சார். நீங்க சம்பளம் குடுக்கறவரா இருக்கலாம். ஆனா மீனு தான் எனக்கு உண்மையான முதலாளி. அவ நல்லா இருக்கணும். அதுக்கு நான்தான் பொறுப்பு. நான் சொன்னது தப்புன்னா மன்னிச்சுடுங்க. ஆனா குழந்தைக்கு இனிமே கண்ணு வைக்காதீங்க”
எத்தனை அழுத்தம் வார்த்தைகளில்? குழந்தையை சொன்னால், பெற்றவளுக்கு இப்படித்தான் கோபம் வருமோ? எங்கம்மாவும் இப்படித்தான் வளர்த்துருப்பாங்களா?
ஒரு நாள் மாலையில் அலுவலகத்தில் இருந்து வந்தவனுக்கு பயங்கரமான தலை வலி .
“உமா கா ஒரு காபி “சொல்லிக் கொண்டே வந்தான்.
“சார் அக்கா அவங்க பொண்ணு வந்துருக்குன்னு பாக்க போய் இருக்காங்க. உங்க கிட்ட சொல்லி இருந்தாங்களே?”
“என்ன இந்த வீட்டுல எனக்கு ஒரு காபி கிடைக்குமா கிடைக்காதா ?” கத்தினான்.
“இதோ நான் கொண்டு வரேன். சுருதி இரங்கி போய் இருந்தது.
அந்த தலை வலிக்கு அந்த சூடான காபி அத்தனை இதமாக இருந்தது.
“தேங்க்ஸ் கொடி “
அனைவரும் இவளை மலர் என்று அழைக்க இவன் கொடி என்று அழைத்த விதம் ஒரு மாதிரியாக இருந்தது.
அப்பா ஒடி வந்தாள் மீனு.
“அப்பாவுக்கு உடம்புக்கு ஊ . தொந்தரவு பண்ணாதீங்க வாங்க”. குழந்தையை தூக்கிச் சென்று விட்டாள் .
இரவுக்கும் டிபன் இவளே செய்து கொடுத்தாள் . அவனுக்கு நிறைய வேலைகள் இருந்தன. இவள்தான் தான் சென்று சென்று அழைத்துக் கொண்டிருந்தாள்.
“மீனு சாப்பிட்டாச்சா?”
“சாப்பிட்டு தூங்கிட்டு சார்”
“நீ சாப்டியா? மத்தவங்க எல்லாரும் சாப்பிட்டாங்களா?”
சாம்பார் ஊற்றிக் கொண்டிருந்த கை நின்று மீண்டும் வேலை செய்தது.
“என்னாச்சு?தன் வயிற்றுக்கு இல்லாமல் பாத்திரங்களை கவிழ்த்து தேய்த்து தண்ணீரை குடித்த இரவுகள் நினைவுக்கு வந்து விட்டது. அதை பார்த்தவன் வேறு எதுவும் பேசவில்லை. ஆனால் கை கழுவி விட்டு வந்து காரணம் கேட்டான்.
“இல்ல சார். இது வரைக்கும் என்ன பார்த்து யாருமே சாப்டியான்னு கேட்டதே இல்ல .வெற்றி மட்டும்தான் என்ன பத்தி யோசிப்பான்”
“ஏன் உங்கம்மா?”
“அவங்கதான் நான் சின்ன புள்ளையா இருக்கும்போதே செத்துட்டாங்களே ?”
“இன்னிக்கு முழுக்க குழந்தையோட நான் இல்ல, இன்னிக்கு இவளோடவே படுத்துகிறேன்.
“சரிங்க சார்”
அவன் சென்று கட்டிக் கொண்டதில் கை கணம் தாங்காமல் சிணுங்கினாள் மீனு.
ஓ !ஓ ! ஓ ! லேசாக பாடி முதுகில் தட்டிக் கொடுத்தாள் .
மீண்டும் உறங்கி போனாள் மீனு. அவள் தந்தையும் உறங்கி வவிட்டான்.
ஆனால் இரவில் சரியாக தூங்காமல் ஒரு மாதிரி அரைகுறை தூக்கத்தில் தவித்தான்.
எழுந்து பார்த்தவளுக்கு பாவமாக இருந்தது. லேசாக தலை கோதினாள். நன்றாக உறங்கினான்.
வேறு ஒரு நாள் அலுவலகம் முடிந்து வரும் போது மலரையும் மீனுவையும் காணவில்லை. அவர்கள் அறையில் தான் இருந்தார்கள்.
ஏதோ தண்ணீர் கொட்டி விட்டது போலும். இவள் தான் துடைத்துக் கொண்டிருந்தாள்.
“சொர்க்கம் என்பது நமக்கு சுத்தமுள்ள வீடுதான். சுத்தம் என்பதை மறந்தால் நாடும் குப்பை மேடுதான் ” இவனுக்குத்தான் அவளை பார்த்தால் பைத்தியம் போல இருந்தது. மீனு குலுங்கி குலுங்கி சிரித்துக் கொண்டிருந்தாள். மகளின் சிரிப்பு அவனுக்கு அத்தனை இனிமையாக இருந்தது. சில்லறையை கொட்டியது போன்ற அவளின் சிரிப்பு நிச்சயம் மனதில் பூ பூக்க வைத்தது. கைய கழுவிக் கொண்டு மகளை தூக்கி இடுப்பில் வைத்து ,
“என்ன உங்களுக்கு அத்தனை சிரிப்பு? யாரு இப்டி சிரிக்கிறது? மீனு குட்டியா? பட்டு குட்டியா?”
“மீனு அவளின் தோளில் முகம் புதைத்தாள். “இங்க பாரு அம்மா பாரு! யாரு மீனு சொன்னா ?என் செல்லமே! “
வெட்கத்தில் முகம் காட்டவில்லை மீனு. அவர்களை பார்க்க பார்க்க திகட்டவில்லை ரவிக்கு. மகளின் இந்த சிரிப்புக்கு காரணம் இவள் தான். மனதார மனதில் பாராட்டினான். மீனு மட்டும்தான் அழகா?கள்ளம் கபடம் இல்லாத இவளும்தான் அழகு. எந்த நகையும் இல்லாமல் எப்படி இத்தனை அழகாக இருக்கிறாள்? அதற்கு பிறகு வந்த நாட்களில் ரவி அவளை நன்றாகவே ரசிக்க ஆரம்பித்தான். இங்கு வந்த புதிதில் சற்று உடல் தேறி இருந்ததது போல இருந்தது. இரண்டு வயதில் குழந்தைகளின் வாலு தனம் அதிகமாகி இருக்கும் என்பதை மீனு காட்டிக் கொண்டிருந்தாள். ஒரு நாளைக்கு நூறு முறையாவது மலரை மாடி ஏறி இறங்கி ஓட விடுவாள். அவளும் ஓடுவாள். அவள் படி இறங்குவதற்குள் வேகமாக இறங்கி வந்து அவளை தூக்கி விட வேண்டும். இல்லை என்றால் விழுந்து விடுவாள். பொம்மையை தூக்கி போடுவாள் இவள் சென்று எடுக்க வேண்டும். இப்படியே தேறி இருந்த உடம்பும் இளைத்து போய் இருந்தது. ஒரு நாள் ஏதோ குனிந்து வேலை செய்து கொண்டு இருந்தாள் . சேலை கட்டி இருந்தவள் இடுப்பு அவன் கண்ணில் பட்டுவிட்டது. உடம்பு இளைக்க ஜிம்மிற்கு போகும் பல பெண்களை அவன் அறிவான். உடல் நலத்திற்கு ஜிம்மிற்கு போவது நல்லதுதான். அது அவனுக்கும் தெரியும். அவன் தான் வீட்டிலேயே செய்வாரே?. அதற்காக கண்டதும் உண்டு விட்டு அதற்காக உடல் பயிற்சி என்ற பெயரில் அரட்டை அடித்துக் கொண்டு நேரம் வீணடிக்கும். கும்பலை கண்டால் தான் பிடிக்காது .
தொடரும்…..
error: Content is protected !!