Skip to content
Post Views: 3,326
Kken-22
ஒரு நாள் இவர்களின் சொந்தமாம். தந்தையின் பெரியப்பா என்று ஒருவர் வந்து அவரின் பேரனின் திருமணத்திற்கு அழைத்து விட்டுப் போனார்.
“கட்டாயம் கல்யாணத்திற்கு போக வேணும். மலரின் கட்டளை”
ஏன் உனக்கென இத்தனை ஆர்வம்?”
Advertisement
“ஆமா ! எனனோட மீனு குட்டிக்கு அழகா பட்டு பாவாடை போட்டு தலைல குடுமி போட்டு அதுல பூ வச்சு அலங்காரமா கூட்டிட்டு போக வேணாமா?
ஹேய் ப்ளீஸ்! எனக்கு இந்த ரிலேட்டிவ் கும்பலே அலர்ஜி. எப்ப அவங்க எல்லாரும் எங்க அம்மாவும் அப்பாவும் வேண்டான்னு ஒதுக்கி வச்சாங்களோ அதுக்கு மேலே போய் அவங்க கிட்ட உறவு கொண்டாட எனக்கு எந்த இண்ட்ரஸ்டும் இல்ல.
அதுலயும் அந்த பொம்பள? வார்த்தைகளை முழுங்கி கொண்டான்.
Advertisement
“என்னாச்சு சார். எதுவா இருந்தாலும் சொல்லுங்க.மனசுல இருக்கற பாரம் குறையும்”
Advertisement
“இப்படித்தான் கல்யாணம்னு வந்து எங்கப்பா யாரையோ ஒருத்திய நல்ல பொண்ணுன்னு நம்பி எங்க அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வச்சாங்க. கடைசில அவ?அண்ணனுக்கு பதில் என்ன…சொல்லவே அசிங்கமா இருக்கு. அந்த நேரத்துல உன்ன நினச்சு பெத்த பொண்ணுதான் இவன்னு சொன்னா . ஒரு பொம்பள வயத்துல குழந்தையை வச்சுக்கிட்டு பேசுற பேச்சா இது? இந்த புள்ளை என்னோடதா இல்ல அண்ணன் புள்ளையா தெரியாம பைத்தியம் புடிச்ச மாதிரி இருக்கு. அண்ணண் செத்த ஒடனே வேற கல்யாணம் பண்ணிக்க போறேன்னு இந்த குழந்தையை அனாதையா விட்டுட்டு போய்ட்டா. இவங்க எல்லாம் சொந்தமா?அதுக்கு கல்யாணம் கருமாதின்னு நான் போய் நிக்கணுமா?”
அவளுக்கு அவன் சொல்வது சரியாகவே பட்டது.
“சாரி சார்! உங்களுக்குள்ள இத்தனை சங்கடம் இருக்குன்னு நான் நினச்சு பாக்கல. ஆனா ஒன்னு சார். இந்த புள்ளைக்கு நீங்கதான் அப்பா. பெத்தவங்க எப்படி இருந்தா என்ன சார்? அந்த புள்ள என்ன பண்ணிச்சு? அதுக்குன்னு அம்மா அப்பா யாரும் இல்லைன்னா சரி. அதான் சித்தப்பா நீங்க இருக்கீங்களே? இனிமே நீங்கதான் அதுக்கு அம்மா,அப்பா எல்லாம். நீங்க அதை நினைச்சுத்தான் இன்னும் கல்யாணம் கட்டிக்காம இருக்கீங்கன்னா உங்க அண்ணி சொன்ன மாதிரி நீங்களும் தப்பானவரு ஆகிடுவீங்க. ஒரு நல்ல பொண்ணா இந்த புள்ளைக்கு அம்மாவா இருக்கற மாதிரி ஒரு பொண்ண கல்யாணம் பண்ணிக்குங்க”
Advertisement
“அடுத்தவ எப்படி இருப்பாளோ?எனக்கு இந்த ஊரு,இந்த பொண்ணுங்க கண்டாலே புடிக்கல. வெறுப்பாஇருக்கு. எல்லாருக்கும் பணம் தான் தேவை. ஆம்பிள அழகா இருந்தா பின்னாடியே போறாங்க. அதுவே ஒன்னும் இல்லாதவனா இருந்தா யாரும் மதிக்க கூட மாட்டங்க”
“சார்! நம்மள சுத்தி இருக்கற எல்லாருமே தப்பானவங்க இல்ல. எங்க அப்பா ரொம்ப மோசமானவர். என்ன குடி போதைல வித்துட்டாரு. எங்க வீட்டுக்காரர் இறந்த ஒடனே எங்க மாமியார் வேற ஒருத்தனுக்கு என்ன வித்துடனுன்னு பார்த்தாங்க. அப்ப தப்பிச்சு வந்தபோதுதான் உங்கள பார்த்தேன்.
என்னோட புருஷன், அவங்க அம்மா, தங்கச்சி எல்லாருமே ஒரு மாதிரி கெட்டவங்கதான். என்ன பார்த்து யாரும் சாப்பிட்டியான்னு கேட்டதும் இல்ல. எனக்கு பசிக்குன்னு யோசிச்சதும் இல்ல. ஆனா கடவுளை பார்த்து மது மேடமையும் உங்களையும் எனக்கு காட்டினாங்க. நானும் உங்கள மாதிரிதான் இந்த உலகமே தப்புன்னு நினச்சுகிட்டு இருந்தேன். உங்கள மாதிரி ஆளுங்கள பார்த்ததுக்கு அப்புறம்தான் நான் நெனச்சது தப்புன்னு புரிஞ்சுது. நீங்க சொல்லற மாதிரி எல்லா பொண்ணுங்களும் மோசம் இல்ல சார். நான் எங்கப்பா வார்த்தைக்கு பயந்து அந்த குடிகாரனை கட்டிக்கிட்டு கஷ்டப்பட்ட மாதிரி நிறைய பொண்ணுங்க புருசனுக்கு உண்மையா இருந்துகிட்டு, குடிகாரனோட சகிச்சுக்கிட்டு வாழ்ந்துகிட்டுதான் சார் இருக்காங்க. என்னோட தம்பி பொண்டாட்டி பெரிய பணக்காரி. ஆனா அவன் ஆட்டோ ஓட்டினபோது அவனை காதலிச்சா. ரெண்டு பேருக்கும் ஏணி வச்சா கூட எட்டாது . ஆனா வெற்றி தான் என்னோட தைரியம், நம்பிக்கைன்னு அவங்க அம்மாகிட்ட சொன்னா சார் அவ. சில பொண்ணுங்க, ஆம்பிளைங்க தப்பானவங்களா இருக்கலாம். ஆனா எல்லாருமே அப்டி இல்ல சார். கடவுள் மேல பாரத்தை போடுங்க. உங்களை புரிஞ்சிக்க மீனு பாப்பாவுக்கு அம்மாவா ஒருத்திய கடவுள் காட்டுவார். மனச போட்டு குழப்பிக்காதீங்க. யோசிச்சு முடிவெடுங்க”
தன்னை விட சின்ன பெண் இப்போது ரொம்ப பெரியவளாகத் தெரிந்தாள் . இவன் தன்னை பற்றிய எந்த விவரத்தையும் யாரிடமும் பகிர்ந்து கொண்டே இல்லை. எத்தனை பெரிய விஷயத்தை எத்தனை சாதாரணமாகச் சொல்லி விட்டாள் ? பெரியவர்கள் செய்த தப்புக்கு எப்படி குழந்தையை தண்டிக்க முடியும்?தந்தையும் என்ன? வேண்டுமென்றே சூர்யாவுக்கு அந்த பெண்ணை பார்த்தாரா? அவனும் அவள் அழகில் மயங்கித்தானே திருமணம் செய்து கொண்டான்? இதோ இவள். இத்தனை நாளாக அருகிலேயே இருக்கிறேன். என்னை திரும்பிக் கூட பார்த்ததில்லையே?
இவள் சொல்வதும் சரிதான். நம்மை சுற்றி இருப்பவர்கள் அனைவருமே தப்பானவர்கள் என்று நினைக்கக் கூடாது. அதற்காக திருமணத்திற்கு செல்வதற்கு எல்லாம் இஷ்டமில்லை. ஆனால் வீட்டிலேயே பெரியவர். அவர் வந்து அழைத்திருக்கிறார் என்றால் தன் தந்தை மீது எத்தனை பாசம் இருந்திருக்கும். சரி! அவருக்காக அவர் வயதிற்கு மதிப்பளித்து செல்லலாம் என்று நினைத்தான்.
திருமணதிற்கு செல்ல குழந்தைக்கு சில நகைகளும் பட்டு பாவாடையும் வாங்க கடைகளுக்குச் செல்ல வேண்டி இருந்தது.
“நான் வர்றதுக்கு கொஞ்சம் லேட்டாகும். நீ கடைக்கு நேரா போய்டு. நான் வந்து சேர்ந்துக்கறேன்”
“வா! கா! என்ன திடீர்னு?”
விஷயம் கூறினாள்.
“சரி! வா க்கா “ வீட்டுல வெய்ட் பண்ணு . சார் வரட்டும்.
“இந்தா கா! இதுல இருக்கறது முழுக்க உனக்குத்தான். வேற துணி மாத்திக்கோ.
அலமாரி சாவி கொடுத்தான்.
“என்னடா வெற்றி! இது இவ்ளோ புடவை?”
“உனக்குத்தான் ரொம்ப புடிக்குமே அதான் வாங்கி வச்சுருக்கேன்”
“அது சரி! ரவிக்கை இல்லாம எப்படி டா போட ?”
“பாரு! ஸ்டைலாக அலமாரியில் கை கட்டி நின்று கொண்டான்.
“இது லதாக்கா தைத்தது தானே?
“எப்படி கா கண்டு புடிச்ச?”
“தையலை பார்த்தா கண்டுபுடிக்க மாட்டோமா?”
பச்சை வர்ண சில்க் காட்டன் அவளை கம்பீரமாக காட்டியது.
“இந்தாக்கா ! “குட்டி ஜிமிக்கியும் மெல்லிய சங்கிலியும் கொடுத்தான்.
“இது என்னடா?”
“உனக்குத்தான் வாங்கினேன்”
அதை பார்த்ததும் அவளுக்கு பாப்பா நினைவு வந்தது.
“பாப்பாவை மறந்துட்டியே வெற்றி”
“அத மறக்க முடியுமாக்கா ? இது அவளுக்குன்னு வாங்கினதுதான்”
“என்னடா இது குழந்தைக்கு வாங்கினதை எனக்கு கொடுத்துட்டியே?”
“அதனால என்ன? அவளுக்கு இன்னும் கொஞ்சம் காசு போட்டு கொஞ்சம் பெரிசா வாங்கறேன்”
“மறந்துராத. நானும் கூட வரணும்”
“வித்யா எப்படி டா இருக்கா ? உங்களுக்குள்ள எப்படி போகுது?”
“ஏதோ போகுதுக்கா. இந்த புடவை கூட பாதி அவ வாங்கினது தான். உன்ன நினைச்சுத்தான் வாங்குவா. என்ன மனசுல வச்சுக்கிட்டு அந்த குழந்தையை மடில வச்சுக்கிட்டு அவனை முழுக்க முழுக்க மூளைல வச்சு கிட்டு என்கிட்ட ஒட்டவும் முடியாம தள்ளி போகவும் முடியாம தவிக்கிரா. அன்னிக்கு நான் பூரணி கிட்ட பேசும்போது பார்த்தேன்.அவ கண்ணுல அத்தனை ஏக்கம். அவனை பத்தின எல்ல நினைப்பையும் தூர எறிஞ்சுட்டு அவதான் வரணும். நானென்ன பண்ண முடியும்?
“எதோ நாம ஈசியா சொல்லிடறோம் வெற்றி. ஆனா அந்த நிலமைல இருந்து பாக்கறவங்களுக்குத்தான் அதோட கஷ்டம் தெரியும்”
பேசி கொண்டே இருவரும் கீழே வந்து ரவிக்காக காத்துக் கொண்டிருந்தனர்.
ஒரு அழகிய ஆண் மகனுடன் இவள் நிற்பது, அது என்ன பொறாமையா? யார் அவன்? கூர்மையாக பார்த்தான்.
இவளோ சந்தன கலர் புடவை மாங்காய் டிசைன் சிகப்பு பார்டர் புடவை கட்டி இருந்தாள் .
“அப்பா!” மீனு குதித்தாள் . காரை ஓரமாக நிறுத்தி விட்டு வந்தான்.
“வணக்கம் சார்! நான்தான் வெற்றி. இவங்களோட தம்பி”
“ஓ! ஹாய் . புதுசா இங்க சூப்பர் மார்க்கெட் ஓபன் பண்ணது நீங்க தானே?
“யா! பேட் சூப்பர் மார்க்கெட் இல்ல. ஹைப்பர் மார்க்கெட்”
“வாவ் ! காங்கிராட்ஸ்”
“தாங்க் யூ ! இருவரும் கை குலுக்கி கொண்டார்கள்.
“வெற்றி! இங்க ஜிவெல்ஸ் எங்க வாங்கலாம்?”
“இதோ மேடம் தான் இருக்காங்களே அவங்களுக்கு இந்த இடம் நல்ல அத்துப்படி. உங்களுக்கு என்ன வேணுமோ அக்காவே கூட்டிட்டு போவா”
“ஓ ! சூப்பர். அப்ப வேற ஒரு சமயம் பாக்கலாம் வெற்றி”
“சியூர்”
காரில் ஏறி கொண்டவளை பார்த்தவனுக்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.
“நீ ரொம்ப அழகா இருக்க கொடி”
எதற்காக இப்படி பேச வேண்டும்? இவள் பதில் எதுவும் சொல்லவில்லை . குழந்தைக்கு மட்டுமே நகை பார்த்தாள் தனக்கு என்று யோசிக்க கூட தெரியாத பெண் இவ்வுலகில் இருக்க முடியுமா?
அன்றைய இரவிலும் குழந்தையுடனே அவன் இருந்தான்.
ஒரு நாள் வெற்றிக்கு மதியம் பசிக்கிறது என்று உணவு ஆர்டர் செய்தான். அவனுக்கு டெலிவரி செய்தது அவன் தங்கை.
“புவி?”
“சார்!இந்தாங்க உங்க டெலிவரி. ஒரு பேப்பரில் அவள் என்னை எழுதி கொடுத்துவிட்டு போனாள் .
இரவில் அழைத்தான்.
அவள் கணவனுக்கு தொண்டையில் புற்று நோய் . வேலைக்கு செல்ல முடியாது. இவள்தான் வேலைக்குச் செல்கிறாள். தந்தையாலும் பெரியதாக வண்டி ஓட்ட முடிவதில்லை.
“மறு நாளே அவர்கள் வீட்டிற்குச் சென்றான்.
“என்ன மறந்துட்டியா மாமா?” குழந்தையை அள்ளி அனைத்துக் கொண்டான். அவர்களின் பாசம் இப்போதுதான் புவிக்கு புரிந்தது. அவர்களை பிரித்து எத்தனை பெரிய தவறு செய்து விட்டோம்? உணர்ந்து கொண்டாள்.
“நீ ஊதாரித்தனம் பண்ணாதன்னு எத்தனையோ சொல்லியும் நான் கேக்கல. உன்னையும் அந்த பெண்ணையும் கரைச்சி கொட்டினேன். உன்னோட ஆட்டம் போதும்னு ஆண்டவன் ஓங்கி அடிச்ச போது வலி தாங்க முடியல வெற்றி. ரொம்ப கஷ்டப்பட்டுட்டோம்.
வீரமாக நான் ஆம்பிள என்ற திமிரில் சுற்றும் அவன் தந்தை இப்போது ஒடுங்கி பொய் அமர்ந்திருந்தார்.
“என்னப்பா இது? நான் போன் பண்ண பொது எதுக்குப்பா சொல்லல?”
“நான் உனக்குன்னு என்னடா செஞ்சுருக்கேன். யாரோ உதவி பண்ணி நீயே சொந்தமா ஒரு தொழில் தொடங்க போறேன்னு சொல்லும்போது எப்பிடிடா எங்களோட கஷ்டத்தை சொல்ல முடியும்?
“நானும் மலரும் எப்பவுமே உங்களுக்கு வேறுதானே ? அதான் உங்க கஷ்டத்தை எங்கிட்ட சொல்லல. இருக்கட்டும்பா. நீக்க எங்களை வேறா நினைச்சாலும் நாங்க உங்கள அப்டி நினைக்கல. மாப்பிளைக்கு சிகிச்சைக்கு பாக்கலாம்”
“ரொம்ப செலவாகுமேப்பா?
“நான் பார்த்துக்கறேன் பா”
குழந்தைக்கு வெகு உடை மாற்றி காரில் ஏற்றி கொண்டான்.
“நான் கூட்டிட்டு போலாமா புவி?”
“என்னடா கேள்வி இது. எப்பவுமே அவ உன்னோட பாப்பா தாண்டா. உண்மையான அன்ப புரிஞ்சுக்காம நான் உன்ன நோகடிச்சது தப்புதாண்டா. தப்புதான். முகத்தில் அடித்துக் கொண்டு அழுதாள். தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் கூறினான். கண்ணை துடைத்துக் கொண்டு பாப்பாவை காரில் ஒரு ரவுண்டு அழைத்துப் போனான்.
“நீங்க யாரும் எதுவும் பேச கூடாது. நான் அங்க வீட்டை ரெடி பண்ணறேன். அங்க வந்துடுங்க”
“வேண்டாம் வெற்றி. மறுபடியும் கைல காசு பார்த்தா நான் ஒழுங்கா இருக்க மாட்டேன். இவருக்கு மருத்துவம் மட்டும் பாரு. நானே வேல செஞ்சி பார்த்துக்கறனே. புள்ளைக்கு வருசத்துக்கு பீஸுக்கு மட்டும் வந்து நிப்பேன். துணியால் வாயை மூடி அழுதாள்”
“அப்டியே போட்டேன்னா தெரியுமா?கையை ஓங்கி மிரட்டினான்.
அன்று அவன் அடித்தது தவறாக தெரிந்தது இன்று யாருக்கும் எதுவும் தோன்றவில்லை.
மாப்பிள்ளையின் மருத்துவ செலவு அனைத்தையும் வித்யாதான் பார்த்துக் கொண்டாள் .
“எப்படிப்பட்ட பெண் இவள்? “
வெற்றியின் தந்தை அவளிடம் கை எடுத்து கும்பிட்டார். இவள் பதில் எதுவும் சொல்லவில்லை. சங்கடமாக உணர்ந்தாள்.
ஆரம்ப நிலையில் இருந்ததால் அறுவை சிகிச்சை நல்ல படியாகவே முடிந்தது. அடிக்கடி செக்கப் செய்ய வேண்டும். செய்து கொள்ளலாம்.சில மாதங்கள் கழித்து அவரையும் தனக்கு உடன் உதவிக்கு வைத்துக் கொள்ளலாம் என்று நினைத்தான் வெற்றி.
========================
மலர் சில சமயம் வந்து விட்டு சென்றாள் . புவி,தந்தை யாரிடமும் அவள் வேற்றுமை பாராட்டவில்லை. உயர்ந்த துணி போட்டு நகை போட்டு அழகியாக நிற்கும் இந்த பெண்ணை தான் என்ன செய்து விட்டோம் என்று தந்தை வருந்தினார்.
error: Content is protected !!