Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

கண்மணியே காதல் என்பது நீ தானே

KKEN 22 2

மனதில் பல பாரங்கள் அழுத்தினாலும் அவள் எதையும் வெளி காட்டவில்லை. என்னை ஏம்ப்பா இப்டி பண்ணீங்க? கேள்விகளை கேட்கும் சந்தர்ப்பம் இது அல்ல.

அன்று ரவியுடன் அவளும் திருமணத்திற்குச் சென்றாள். குழந்தையை பார்த்துக் கொள்ள.

நம்மள சுத்தி எல்லாருமே தப்பானவங்க இருக்க மாட்டாங்க. அவள் சொன்னதை அவனும் புரிந்து கொண்டான். நல்லவர்களும் இருப்பார்கள் கெட்டவர்களும் இருப்பார்கள். சமயத்திற்கு ஏற்றது போல பழகிக் கொள்ள வேணும் என்பாள் அன்னை . உணர்ந்து கொண்டான். அங்கே திருமணத்தில் இவளுக்கு கொடுத்த பூவை வேண்டாம் என்று மறுத்து விட்டாள் . அவளுக்கு பூ என்றால் மிகவும் பிடிக்கும். மனதில் ஏதோ பெரிய பாரம்  அழுத்தியது போல இருந்தது. வீட்டிற்கு வந்ததும் தன்  அறைக்கு வந்து ஒரு மூச்சு அழுது தீர்த்தாள்.

வெற்றிக்கு அழைத்தாள் .



Advertisement

“வெற்றி! எனக்கு பூ வச்சுக்கணும் போல இருக்குடா”

இதற்கு அவன் என்ன பதில் சொல்ல வேண்டும்?

“வாங்கிட்டு வரேன் கா!”

Advertisement

“வெற்றி வேற யாருக்கும் தெரிய வேணாம் வெற்றி” கண்ணீரை துடைத்துக் கொண்டாள் .

Advertisement

போனை வைத்து விட்டாள் .

 போனை வைத்து விட்டு திரும்பினால் ரவி நின்றிருந்தான். கையில் வைத்திருந்த பூவை அவள் தலையில் வைத்து விட்டான். அவள் எதிர் பார்க்காத நேரம்.

இவளுக்கு வாயில் வார்த்தைகள் வரவில்லை.

Advertisement

“ஏன் இப்டி பண்ணீங்க?”

“என்ன என்னோட பொண்டாட்டி இனிமே எதுக்காகவும் அழக் கூடாதுன்னு.

“நான் எந்த விதத்துல தப்பா  நடந்து உங்க மனச கெடுத்தேன்?”

“மனசு கவர்ந்தாஅதுக்கு பேரு மனஸ கெடுக்கறதுன்னு அர்த்தம் இல்ல. இங்க பாரு! இது இன்னிக்கு எடுத்த முடிவு இல்ல. ரொம்ப நாள் முன்னாடியே யோசிச்சது  இல்லாட்டி என்னோட மனசுல இருக்கற விஷயங்களை உன்கிட்ட சொல்லுவேனா ?”

“நீங்க பண்ணது தப்பு. என்னால ஏத்துக்க முடியாது “

“ஓகே! இருக்கட்டும் ஒனக்கு எப்ப என்ன ஏதுக்கனுன்னு தோணுதோ அப்ப சொல்லு. நாம கல்யாணம் பண்ணிக்கலாம் . பட்  இனிமே நீ பூ வச்சுக்கறது போட்டு வச்சுக்கறது எல்லாமே ஒன்னு ஒனக்காக இருக்கணும். இல்ல எனக்காக இருக்கனும்.

அவன் ஒரு முடிவதோடு தான் இருக்கிறான்.  என்ன செய்ய போகிறாள்?

அவள் தன்  மனைவி என்று வேலை செய்பவர்களிடம் சொன்னான். உரிமையுடன் கட்டிலில் கட்டிக் கொண்டு படுத்தான். கழுத்தில் முகம் புதைத்தான். குழந்தைக்கு முத்தம் கொடுத்தான். கூடவே சேர்த்து அன்னைக்கும் கொடுத்தான். அவளால் மறுக்க முடியவில்லை. அவள் மறுப்பை அவன் ஏற்கவில்லை. குழந்தையை  விட்டு பிரிய முடியவில்லை. தவித்தாள். அருகில் நின்று உணவு பரிமாறச் சொன்னான். படுத்தி எடுத்தான்.  நல்லவன் போல அல்லாமல் இவன் தொல்லை அன்பு தொல்லையாக இருந்தது. முதலில் எல்லாம் இது தப்பு என்று யோசித்தவள் மெதுவே தன் பக்கம் ஈர்த்து கொண்டிருந்தான் ரவி. நம் வெற்றியும் அங்கே அதைத்தான் செய்து கொண்டிருக்கிறான்.

வித்யாவும் வெற்றியும் குழந்தையுடன் வெளியில் சென்றார்கள். வெற்றியின் பிடிவாதம் தான். வழக்கம்போலவே அவனை ரசித்துக் கொண்டு இல்லை சைட் அடித்துக் கொண்டு வந்தாள் .

“ஸ்டியரிங் வீலில் கை  வைத்து தாளம்  தட்டிக் கொண்டிருந்தான். சிக்னலுக்காக காத்துக் கொண்டிருந்தவன் அவள் கையை பிடித்து தன கைக்குள் வைத்து கொண்டான் .

ஒரே ஒரு தடவை கரி சட்டி சொல்லுடி”

“இல்லை ” தலை ஆட்டினாள். இப்போது அவள் இருக்கும் மன  நிலையில் கரி சட்டி சொன்னால் அவன் கன்னத்தை கடித்து விடுவாள். வேண்டாம்.

அவனும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை. இங்கு  ரவியோ மனைவியுடன் வெளியில் வந்திருந்தான்.

முகத்தை திருப்பி மீனுவுடன் ஏதேதோ பேசிக் கொண்டிருந்தாள். மீனு தூங்கி விட்டது.

“அதான்  புள்ள தூங்கிருச்சு இல்ல? புருஷனை  சைட் அடிக்க வேண்டியது தானே?”

“என்ன இவங்க இப்டி அசிங்கமா பேசறாங்க?”

“அசிங்கமெல்லாம் இல்லடி. புருஷன்தாண்டி”

மனசுல கூட பேச முடியாது போல் இருக்கே”

“முடியாது முடியாது” அவன் தான்.

இவளும் கவனித்து கொண்டுதான் இருக்கிறாள். அவன் போகும் இடமெல்லாம் பெண்கள் அவனையே வெறித்து பார்ப்பதை. முன்பெல்லாம் அதை பற்றி தெரியும். ஆனால் கவலை பட்டதில்லை.  இப்போதும்  தெரிகிறது. கூடவே உரிமையுடன் கவலையும் வந்து விடுகிறது.

இரவில் வந்து அவன் தூங்கும்போது மீசையில் கிள்ளி கொஞ்சினாள்.

“இன்னும் கொஞ்சம் கொஞ்சுடி. அம்மா இல்லாத புள்ள”

இதற்கு மேல் அவள் ஏன் அவள் தன்னை காட்டிக் கொள்ள போகிறாள்?

இன்று வெற்றியின் பிறந்த நாள் .

ஆசையுடன் எனக்கு ஒரு சட்டை வாங்கி தாடி….

பிடிவாதமாக முடியாது என்று விட்டாள். அவனுக்கு உரிமை உள்ளவர்கள் மட்டுமே அவனுக்கு வாங்கி தர வேண்டும். புவி வாங்கி கொடுத்தாள். அவன் தந்தை , ரவி, மலர், இவள் பெற்றோர்  அனைவருமே பரிசுகள் கொடுத்தார்கள் இவள் எதுவுமே கொடுக்கவில்லை. இதோ கெஞ்சிக் கொண்டிருக்கிறான். அவள் மனம் கறையவில்லை.

கோபம் வந்து விட்டது. “சரி விடு. நான் எவ்ளோ வந்து வந்து உங்கிட்ட கெஞ்சறேனோ நீ அவ்ளோக்கு என்ன படுத்தனுன்னு வச்சுருக்க”

பேசிக் கொண்டிருக்கும்போது உதி அம்மா என்று அலறினாள். அனைவரும் வந்து பார்த்தபோது காயத்ரி கொண்டு வந்து வைத்த சாம்பாரை கையில் கொட்டிக் கொண்டிருந்தாள். உடனே அவளை தூக்கி ஷவரில் நிற்க வைத்து மருத்துவரிடம் ஓடினார்கள். கெட்டதிலும்  ஒரு நல்லதாக அங்கேயே ஒரு குழந்தை மருத்துவரும் இருந்தார். நேரம் தாமதிக்காமல் சென்றதில் குழந்தைக்கு பெரியதாக காயம் எதுவும் இல்லை.  இருந்தாலும் ஊசி போட்டதில் இவன் கையிலேயே உறங்கி இருந்தாள் உதி. வீட்டிற்கு வந்தவன் அசதியில் அப்படியே உறங்கிப் போனான்.

“வெற்றி! “அமர்ந்து கொண்டே உறங்கியவனை மெதுவாக எழுப்பினாள் அவனை பார்க்கவே இவளுக்கு பாவமாக இருந்தது. இவன் என்னிடம் என்ன கேட்டான்? பிறந்த நாளைக்கு ஒரு துணி. அது கூட ஏன் என்னால் வாங்க முடியவில்லை. தூக்கி ஏறிய வேண்டும். அவன் ஆசைப்பட்ட படி எல்லாவற்றையும் தூக்கி ஏறிய போகிறேன். பழைய சிந்தனைகளை தூக்கி எரிய போகிறேன்.மனதை மாற்றிக் கொண்டாள் .

“வாங்க சாப்பிடலாம்.. “ மெதுவாக தோள் தட்டிஎழுப்பினாள்  இவர்கள் வீட்டிலேயே உணவை முடித்துக் கொண்டான்.

“மாலையில், தயங்கியபடியே,

“அம்மா! இன்னிக்கு உதிய  நீங்க  படுக்க வச்சுக்கறீங்களா?”அர்த்தம் புரிந்த அன்னைக்கு அத்தனை மகிழ்ச்சி. ஆனால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. முக்கியமாக வெற்றியிடம்.

“தம்பி!இன்னிக்கு ஒரு நாள் இங்கையே இருங்களேன். உங்களுக்கு பிறந்த நாள். ராத்திரிக்கு நானே சமைச்சு போடணும் போல இருக்கு”

“சரிங்க அத்தை “

அவர்களுக்கு தனிமை கொடுத்து மற்றவர்கள் ஒதுங்கிக் கொண்டார்கள். விஜயனுக்கும் விஷயம் புரிந்தது.

தலை நிறைய பூவுடன் புதுபொலிவுடன் வந்து நிற்கும் வித்யா.  தியா! தியா! என்று அவன் கொஞ்சினான்.  அவனின் பழைய வித்யாதான். அவனின் காதலி. புரிந்தது. அவள் ஆசை பட்ட  படியே அவனின் கழுத்து செயின் அவன் மேல் பட்டு அவள் உதட்டில்,முகத்தில், கழுத்தில் எல்லா  இடங்களிலும் கொஞ்சி உறவாடியது. கரி சட்டி சொல்லி சொல்லி கொஞ்சினாள். ஆசை தீர கடித்தாள் .

“ஏண்டி! நான் அவ்ளோ கெஞ்சியும் எனக்கு ஷர்ட் வாங்கி தர முடியாதுன்னு சொன்ன?”

“ஒனக்கு எதுக்குடா சட்டை ?” உதட்டில் கடித்து அர்த்தத்தை புரிய வைத்தாள் .

இங்கே ரவியும் மனைவிக்கு காதலையும் காமத்தையும் புரிய வைத்துக் கொண்டிருந்தான். என்னதான் அவளை பாடுபடுத்தினாலும் ஏனோ மலரை அவ்வளவு எளிதில்  அவனால் மசிய வைக்க முடியவில்லை.நாட்கள் நகர்ந்தாலும் அவன் விடுவதாக இல்லை. அவளுக்கே அவன் மீது ஈடுபாடு வர ஆரம்பித்தது.

“வெற்றி எனக்கு அவரோட வாழனுன்னு ஆசையா இருக்குடா”

“நல்ல விஷயம் தானே? அவருகிட்ட சொல்ல வேண்டியதை எங்கிட்ட சொல்லற?”

“இல்ல வெற்றி….ஏதோ சொன்னாள் “

மகிழ்ச்சியுடன் கணவனிடம் இன்று தனது காதலைச் சொல்ல வேண்டும் காத்திருந்தாள்.

வீட்டுக்கு வந்தவன் முகம் சரி இல்லை.

“உன்னோட புருஷன் எப்படி இறந்தான்? அவன் பெரு என்ன?”

வக்கீல் மூலம் விஷயம் தெரிந்திருந்தாலும் இவளிடம் கேட்டான்.

அவள் எதையும் மறைக்க வில்லை. அதற்கான அவசியமும் இல்லை.

“ஓ !பிளான்  பண்ணி இங்க வந்து என்ன மயக்கி இருக்க?”

இவளுக்கு எதுவும் புரியவில்லை.

“உன்னோட புருஷன் என்னோட அப்பாவையும் அண்ணனையும் வண்டி ஏத்தி கொல்லுவான் . நீ குழந்தையை காப்பாத்தற மாதிரி வந்து நடிச்சு என்ன கல்யாணம் பண்ணி மொத்த சொத்தையும் அபகரிக்க பாக்கறியா?” கோபத்தில் தாறு மாறாக வந்து வார்த்தைகள்.

“இனிமே ஒரு நிமிஷம் கூட நீ இங்க இருக்க கூடாது. போடி வெளில”

இரண்டு நாட்கள் சென்றன. மீனுவுக்கு அன்னை இல்லாமல் ஜுரம் வந்து விட்டது ரவியால் சமாளிக்க முடியவில்லை. போனில் அழைத்தான். மலரும் வீராப்பு பார்க்கவில்லை. ஓடி வந்தாள் . குழந்தையை அள்ளி அணைத்து முத்தமிட்டாள்.

“நானும்  அம்மா இல்லாத புள்ள தாண்டி” சொல்லி விட்டு  முகம் திருப்பிக் கொண்டான்.

ஓடி வந்து அவனுக்கு முகமெங்கும் முத்தமிட்டாள்.

“நான் சத்தியமா உங்கள ஏமாத்தல . அவருதான் அந்தத் விபத்துக்கு காரணம்னு எனக்கு தெரியவே தெரியாது. ப்ளீஸ் என்ன நம்புங்க”

“நான் அவரு கூட ஒரு நாள் கூட சநதோஷமா வாழ்ந்ததே இல்ல. அவருக்காக நான் உங்கள ஏமாத்தல. ப்ளீஸ். என்ன நீங்க அடிங்க திட்டுங்க என்ன வேண்ணா  பண்ணுங்க. ஆனா மீனுவை விட்டுட்டு போக சொல்லாதீங்க. அழுகையினூடே  சொன்னாள் .

“ஓ ! மீனு மட்டும் தான் வேணும். நான் வேண்டாம்”

“யாரு சொன்னா ?உங்க கூட சேர்ந்து வாழனுன்னு எனக்கு எவ்ளோ ஆசை தெரியுமா? புருஷன்னா உங்க பேரு  மனசுல பதிஞ்சு போச்சு.

அந்தாளு யார் யாருகிட்டயோ போயிட்டு எங்கிட்டயும்  வருவான். எனக்கு ஏதாவது நோய்  இருந்துச்சுன்னா? அதான் போய்  ஒரு புல்  செக் அப் பண்ணிட்டு வந்தேன். டாக்டர் எனக்கு ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டாங்க. ரிப்போர்ட் பார்த்துட்டு அவ்ளோ சந்தோஷத்தோட உங்ககிட்ட சொல்ல வந்தேன்.  ஆனா நீங்க?

“என்ன சொல்ல வந்த?”

“உங்கள காதலிக்கறேன்னு”

“சொல்லு”

என்ன? என்ன சொல்லணும்?

“டேய் மக்கு புருஷா உன்ன காதலிக்கறேன்னு”

அதையே அவளும் திருப்பி சொன்னாள் .

“என்ன பார்த்தா மக்குன்னு சொன்ன?” சொன்ன உதடுகளுக்கு தண்டனை கொடுத்துக் கொண்டிருக்கிறான் தன் மெல்லிய முத்தங்களால். பூ கொடுத்தவன் பூ போன்ற முத்தங்களை வாரிக் கொடுக்கத்  தான் வேணும்.

அவர்களின் காதலும்  முத்தங்களும் தொடரும்…

கதை?

சுபம் …….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!