Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Kottathile oru Thanimai pura

kottathile Oru Thanimai Pura

உள்ளே வந்த மாட்டு வண்டி அதற்குரிய இடத்தில் நிற்கவும், அடுத்த நொடி அதிலிருந்து கை இல்லாத பனியனும், வேலைக்கு தோதாக தூக்கி மடக்கி கட்டியிருந்த வேட்டியும், வெயிலுக்கு ஏற்ப தலையில் கட்டிய துண்டுடன் குதித்து இறங்கியவன்,

ஏலேய், பாண்டியா வண்டியில இருக்குற அரிசி மூட்டைய எல்லாம் இறக்கி நம்ம குடோன்ல வச்சிடு என்று தனதருகில் நின்றிருந்தவனுக்கு கட்டளையிட்டவன்.

தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்து தேகம் எங்கும் வழிந்தோடிய வியர்வை துளிகளை துடைத்துக் கொண்டே,

உள் நுழைந்தவனின் கண்ணில் பட்டனர் முற்றத்தில் நின்றுக் கொண்டிருந்த மொத்த குடும்பமும்.



Advertisement

எதுக்கு இந்நேரத்துல எல்லாம் இப்புடி கூடியிருக்காங்க என்று யோசித்தவன்,
பிச்சையைப் பார்க்க,

அவரின் முக பாவத்தை கண்டவனிற்கு புரிந்திற்று ஏதோ வில்லங்கம் என்று.

விருட்டென்று பிச்சையின் அருகில் சென்றவன்,

Advertisement

‘அப்பத்தா’ என விளிக்க,

Advertisement

அவனின் குரலைக் கேட்டவர், சேலையின் முக்காடை ஒரு கண் தெரியும் அளவிற்கு மட்டும் லேசாக இறக்கி யாருக்கும் தெரியாமல் அவனை நோக்கி கண்ணடித்தவர்,

மீண்டும் முகத்தை மூடிக் கொள்ள, அவரின் செய்கையில் விளைந்த புன்னகையை கட்டுப்படுத்தியவன்,

தமயா………….. என்னாச்சு??????

Advertisement

அண்ணே!!!!!!!!! என அவள் தயங்க

சொல்லுத்தா………….. அவள் தயக்கத்தை உணர்ந்தவன் போல் அவளை ஊக்கப்படுத்தினான்.

மதினி கிட்ட இருந்து வக்கீல் நோட்டிஸ் வந்திருக்குன்னே!!! என்றவள் அதை நீட்ட…….!

அதை எந்த வித அலட்டலும் இன்றி வாங்கியவன், சரி அதுக்கு என்ன இப்ப??? என்க,

அவனின் கேள்வியில் அனைவரும் அவனை அதிர்ந்துப் பார்த்தனர். !!!!!!!!

லக்ஷ்மி  “எய்யா ! அவ உனக்கு விடுதலைப் பத்திரம் அனுப்பியிருக்காய்யா!!!!!!!!

அத தான் ம்மா நானும் கேட்கிறேன்,
அதனால என்ன இப்போ என்று சற்று அழுத்தமாகவே கேட்க,

யாரும் ஏதும் பேசவில்லை………..
பின்னே, அமைதியாக பேசுகின்றான் என்ற காரணத்திற்காக அவனின் விஷயத்தில் யாரும் ஏதும் கேள்வி கேட்டிட முடியுமா………!!!!!!

போங்க….., போய் எல்லாரும் அவங்கவங்க வேலையைப் பாருங்க, இல்ல வேற ஏதும் கேட்க பாக்கியிருக்கா???? என்றவனின் குரலில்

” ஏதேனும் கேட்கும் அளவிற்கு தைரியம் இருக்கிறதா என்ற மிரட்டல் தொனி இருக்க”,

அவன் கூறியதன் அர்தத்தை உள் வாங்கியவர்கள் இதற்கு மேலும் கேட்டு அவனிடம் மூக்கறுப்பட தயராக இல்லை,எனவே ஏதும் பேசாது சென்றுவிட்டனர்.

அனைவரும் உள்ள சென்ற நொடி தன் முகத்திலிருந்த முக்காடை இறக்கிய பிச்சை,

ஏலேய், எவ்ளோ நேரம் தாம்ப்ல நானும் வராத கண்ணீர துடைக்கிற மாதிரி நடிக்கிறது……

அப்புடி செஞ்சும் அந்த பாண்டவ பூமிக்காரங்க கண்ணு மொத்தமும் எம்மேல தான்ல இருக்கு, இங்கிட்டு அங்கிட்டு நகரல,

இன்னும் கொஞ்சம் நேரம் இப்புடி முக்காடு போட்டு இருந்திருந்தேனா மூச்சடச்சி செத்திருப்பேன்ல!!!!!
கொலைக்காரப் பாவிகளா…ஆஆஆ…..,!!!!!!!!

உங்கப்பன்காரன் விட்ட இன்னைக்கே எனக்கு சங்கு ஊதிருப்பான்ல, அந்த ஆந்தைக் கண்ண வச்சிக்கிட்டு அப்புடியே முறச்சிக்கிட்டே நிக்கிறான்ல….., அந்த அரிசி மூட்டை…………….,பய…,

அய்யோ…….ஒஒஒஒ!!!! அப்பா நீங்க இங்கனதா இருக்கீங்களா.. இன்னும் போகலையா….என்று அவன் அலற!!!!!

அவனின் குரலில் பதறிய பிச்சையம்மாள் சடுதியில் முந்தாணையை எடுத்து முகத்தில் போட்டுக் கொண்டவர்,

அய்யோ.. ஓஓ…!!  ராசா உன் வாழ்க்கையை நானே கெடுத்துப்புட்டேனேய்யா…ஆஆ….
ஓஓஓஓஓ……….. என ஒப்பாரி வைக்க,

ஹா ஹா ஹா ஹா ….., அப்பத்தா முடியல என அவன் வயிற்றைப் பிடித்துக் கொண்டு சிரிக்க ஆரம்பிக்க,

அவனின் சிரிப்பில் லேசாக சேலையை விலக்கி பார்த்தவர் அங்கு யாரும் இல்லாது கண்டு பொய் கோபம் கொண்டார்.

ஏலேய்! கிறுக்குப் பயலே என்னையவே ஏமாத்துறீயா…….
உன்ன என்றவர் அவனை துரத்த ஆரம்பித்தார்.

அவர் கைகளில் சிக்காமல் ஓடியவன்,வீட்டிலிருந்து சற்று மறைவான இடத்திற்கு வந்ததும்….,

தனது ஓட்டத்தினை நிறுத்தியவன்,
பிச்சையை நோக்கி…,

கிழவிவி…இஇஇஇ………, என்றழைக்க,

பிச்சையும் பதிலுக்கு  ” கிராண்டு சன்னு………….., என்று பதில் அளித்தார்.

ஹேய்ய்ய்…… .. என்ற கத்திக் கொண்டு ஒரே தாவலில் பிச்சையை நெருக்கியவன் அலேக்காக அவரை தூக்கியவன்,

“ஆத்தா நான் பாசாயிட்டேன்” என்ற ரேஞ்சில் ” “கிழவி எனக்கு டிவோர்ஸ் பேப்பர்ஸ் வந்துடுச்சு” என்றவாரே அவரை ஒரு சுழற்று சுழற்ற,

அடேய்……..,  டேய்……….., தலை சுத்துது விடுல!!!! விடுல…. விடுல..,

அவரின் கத்தலில் கீழே இறக்கி விட்டவன், பிச்சையின் முகத்திற்கு நேரே நோட்டீஸை ஆட்டி சிரிக்க,

என் ராசா!!!!!! நீ ஆசைப்பட்டது எல்லாம் நடக்கும்ல என அவனை நெட்டி முறித்தவர் லெட்டரை கையில் வாங்கி கொண்டார்.

அப்பத்தா நா ரொம்ப சந்தோஷமா இருக்கேன் என்றவன், முத்து படத்தில் தலைவர் செய்வது போல் துண்டை கழுத்தில் இருபுறமும் போட்டுப் பிடித்துக் கொண்டவன்,

லலலலலலலலா….ஆஆஆஆ………….லலலலலலலலா…ஆஆஆஆ………….என்றவாரே சுற்ற,

பிச்சையும் தன் பங்கிற்கு சேலை முந்தானையை பிடித்துக் கொண்டு அவனை பின்பற்றினார்.

அப்போதுதான், மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு விட்டு வீட்டிற்கு ஓட்டி வந்த மாரியின் கண்களில் இவையனைத்தும் விழ,

ஆஆஆஆஆ……………..என வாயை பிளந்துக் கொண்டு நின்று விட்டான்.

இக்காட்சியை பார்த்த கருப்பனுக்கு என்ன தோன்றியதோ……….,அவர்களின் சந்தோஷத்தில் தானும் உற்சாகம் அடைந்தவனாக,

ம்ம்ம்ம்ம்மா…ஆஆஆ……….என கத்தி குரல் எழுப்பி தனது பங்கேற்பையும் உறுதி படுத்தியது.

கருப்பனின் சத்தத்தில் நிகழ் உலகம் வந்தவர்கள், திரும்பி பார்க்க மாரியின் தோற்றத்தை கண்ட இருவருக்கும் சிரிப்பு பீறிட்டு எழ,

அவன் சிரிப்பை அடக்கியபடி வேறு திசையில் பார்த்தான்.

சில வருடங்களுக்கு பிறகு அவன் முகம் சந்தோஷத்தில் மின்ன, மாரியின் கண்கள் அவன் முகத்தை விட்டு அகலவில்லை.

எத்தன வரூஷம் ஆச்சு நம்ம சின்னய்யா இப்புடி சந்தோஷமா இருந்து என எண்ணியவன் அவனையை பார்க்க,

மாரியின் இமைக்காத பார்வையில் லஜ்ஜையுற்றவன், ” அப்பத்தா நான் முன்னப் போறேன் நீ பொறவு வா” என்றவன் சிவந்த  தனது முகத்தை யாருக்கும் காட்டாது சென்றுவிட்டான்.

அவன் சென்ற திசையை பார்த்துக் கொண்டிருந்தவனின் மீது ஏதோ விழ,

ஷ்ஷ்ஷ்ஷ்……ஆஆஆ……, என அலறியவன் பிச்சையை பார்க்க அங்கிருந்த தேங்காய் மட்டியை விட்டு எறிந்தார்.

அவன் பிச்சையை முறைத்துப் பார்க்க….,

அவனின் முறைப்பை புறம் தள்ளியவர்,

எதுக்குல சடங்கு சுத்துன பொண்ண முறைப் பையன் வெறிச்சு வெறிச்சு பாக்குற மாரி எம்ம பேரன பார்க்குற????

அவர் சொன்ன உதாரணத்தை  நினைத்துப் பார்த்தவனின் முகம் அஷ்டகோணலாக மாறியது.

ச்ச்ச்சீசீசீ…………., ஏன் ஆத்தா உனக்கு உதாரணம் சொல்ல வேற ஏதும் கிடைக்கலையா,

உதாரணம் சொன்ன அனுபவிக்கணும் அதை கற்பனை பண்ணி பாக்க கூடாதுல கூறுகெட்டவனே,

ஏன் ஆத்தா ஏதும் விஷோஷமான செய்தியா சின்னய்யா முகம் ஜொலிக்குது????

கண்ணு வைக்காதல கருவப் பயலே, எம்ம பேரனுக்கு இப்ப தாம்ல நல்ல காலம் வந்திருக்கு,

அவன் பொண்டாட்டி அந்த கிறுக்கி விடுதலைப் பத்திரம் அனுப்பியிருக்கால, அதான் பய சந்தோஷமா இருக்கான்.

பிச்சையின் பதிலில் மாரி திகைத்துப் போய் அவரை ஏறிட,

அவனின் திகைப்பை கண்டும் காணதவாராக பிச்சை உள்ளே சென்றுவிட்டார்.

*******************

சென்னையில் அமைந்துள்ள புகழ் பெற்ற நிலா தொலைக்காட்சி சேனல் மற்றும் நியூஸ் பேப்பர்ஸ் என்ற பெயர்ப் பலகையை தாங்கிய அடுக்குமாடி கட்டிடத்தில்,

மேனேஜர் ரூமின் உள்ளே ஜானிற்கு எதிரே அமர்ந்திருந்த மூவரின் முகம் யோசனையை தத்தெடுத்திருந்தது.

மூவரும் மேனேஜர் ஜானின் முகத்தையே உற்றுநோக்க, இதற்கு மேல் அமைதியாக இருந்தால் நல்லதிற்கில்லை என்றுணர்ந்த ஜான் பேச்சை ஆரம்பிக்க, அவரின் ஒவ்வொரு பேச்சிற்கும் உள்ளுக்குள்  கவுண்டர் கொடுக்க விக்கியும் தயாராகி விட்டான்.

ஜான், ” யு  நோ! உங்களுக்கு தெரியுமா, நீங்க இந்த மீடியாக்கு கிடச்ச முத்துக்கள் மாதிரி, 

விக்கி,”  என்ன ஆஆ……..??? முத்தா போன வாரம் தானட “நீங்க எல்லாம் வெத்து வேட்டுன்னு” சொன்ன!!!! என தனது முதல் கவுண்டரை துவங்கிட,

 ஜான், ‘ அந்த சிப்பிக்குள்ள முத்து ஒளிச்சிருக்கிற மாதிரி உங்க கிட்டயும் திறமைகள் நிறைய மறச்சிருக்கு,

அப்ப போன மாசம் நாய் பிடிக்க கூட லாயக்கு இல்லைன்னு சொன்னியே அத எந்த கணக்குல சேக்குறது.அவன் மனசாட்சி அடுத்த கவுண்டரை இறக்கியது.

உளியால கல்ல செதுக்குனாதா நம்மளுக்கு சிற்பம் கிடைக்கும், அதே உங்க திறமைகள வெளிக்கொண்டு வர  ஒரு சின்ன உளிய இருந்து உங்கள நான் திட்டியிருக்கேன்.என்ற ஜானின் பேச்சிற்கு,

ஏதுதுதூ…….!!!!!! நீ உளியா…ஆஆஆ???? என அதிர்ந்த விக்கி, புல்டவுசர் மாறி வந்து  இடிச்சேன்னு சொல்லு நம்பலாம்!!!!!அடுத்த கவுண்டரை அள்ளி வீசினான்.

லாஸ்ட் வீக் நீங்க பண்ண ப்ரோக்ராம்மால நமக்கு நல்ல ப்பிராப்பிட்( profit),

டி.ஆர்.பி ய (Trb) நல்லா ஏறிடுச்சு இப்போதைக்கு நம்ம சேனல் தான் லீட்ல இருக்கு,

எப்புடி இல்லாமா இருக்கும்….., எப்புடி டா இல்லாமா இருக்கும் அதுக்கு நாயா போயா அலச்சு திரிச்சு கன்டெண்ட்(content) எடுத்தவங்க நாங்க,

ஆனா பேரு மட்டும் உனக்கா ‘வாடா என் பம்பரக் கட்ட மண்டையா…..” என மனதுக்குள் பொறுமினான்.

உங்களால…., நம்ம கம்பெனிக்கு எவ்வளவு பிராப்பிட்டு தெரியுமா…. என்றவரை,

ஜான் போதும் என இடைவெட்டினாள் தேவான்ஷி. எதுக்கு எங்கள வரச் சொன்னிங்க,

அத முதல்ல சொல்லுங்க.., தேவையில்லாமா டைம் வேஸ்ட் பண்ணாதீங்க…., என முகத்தில அடித்தாற் போல் கூற

அவளின் கூற்றில் அதுவரை அவர்களை பசப்பு செய்ய வேண்டி பேசிக் கொண்டிருந்த ஜானின் முகம் விழுந்து விட்டது.

அதனை கண்ட விக்கி, உனக்கெல்லாம்  இவ தான்டா கரக்ட்டு, உன்னோட பசப்பு வேலை எல்லாம் இவகிட்ட எடுபடாது….,

நல்ல நோஸ் கட்டு வாங்கு……, என மனதிற்குள் குதுகலித்தவன், நடப்பதை வேடிக்கைப் பார்க்கலானான்.

மேலும் அவள் ஏதோ பேச போக, ஷ்ஷ்ஷ்……….., தேவா அமைதியா இரு என அவளை அடக்கிய பவ்யா,

நீங்க சொல்லுங்க ஜான் என்க,

அவர் சொன்ன செய்தியை கேட்ட மூவரும் அடுத்த நொடி,

நோ…….,ஓஓஓஓஓஓஓஓ, என்று அந்த அறையே அதிரும்படி கத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!