Skip to content
Post Views: 1,515
” அம்மா தாயே! ஜோ… குத்தாதே! கல்யாணம் பண்ணி உன்னை வச்சிக்கிறதை தான் சொன்னேன். வடை தானே, தடையே இல்லாம மடை திறந்த வடை, கடையில் இருந்து வரும், சரியா….” அவள் கிள்ளியது முரளி கண்ணிலா பட வேண்டும். பரிமாறி கொண்டிருந்தவன் கண்டவுடன் வந்து விட்டான் அருகே.
” தாய்க்கு பின் தாரம்னு சும்மாவா சொன்னாங்க பெரியவங்க. சின்ன வயசுல அம்மாட்ட அடி. அடுத்து புல்லா பொண்டாட்டிகிட்ட அடி.” முரளி சொன்னதில் சிரிப்பு எட்டி பார்க்க.
Advertisement
” ஏன் ராசா? சிரிக்கிறதுக்கு கூட பயப்படுற? அடி வெளுக்குமோ? அவ்ளோ பயமா? ” என்றதில் வெடித்து சிரிக்க ஆரம்பிக்க, இன்னும் உற்சாகமாய் அவர்களின் கொண்டாட்டம் களை கட்ட தொடங்கியது.
Advertisement
விழா முடித்து கிளம்பி வர வேண்டிய பரபரப்பில் அன்றைய பொழுது கழிந்து விட்டது. மறுநாளோ திருமண வேளையில் இழுத்து கொள்ள லயாவிடம் பேசவே முடியாது தவித்தான்.
Advertisement
“காந்தக் கண்ணழகா….
டக்குன்னுதான் தட்டி தூக்கும்….
Advertisement
முத்து பல் அழகா….
முத்தம் ஒன்னு தாடா…”
தன் அறையில் முதுகு காட்டி கொண்டு, லேப்டாப்பில் வேலை செய்து கொண்டே எப்போதும் போல லயா பாடி கொண்டிருக்க, மெதுவே கதவை தட்டும் சத்தம் அவள் காதுக்கு கேட்கவே இல்லை.
” தரவா… ” என்ற கணீர் குரலில் திரு திருவென முழிக்க ஆரம்பித்தவள் சட்டென பின் திரும்பி பார்க்க மாறா நின்று இருந்தான். அவனை அங்கே அவள் எதிர்பார்க்கவே இல்லை. தரவா என்கிறானே, எதை தர போகிறான் முத்தமா? என ஒரு நொடி திகைத்தவள்,
வா… வாங்க.. எ…என்ன தர…? டைப் மெஷின் இல்லாமலேயே, வாயாலே வார்த்தைகள் டைப் அடித்தன தடுமாறி.
வந்த சிரிப்பை தன் மீசைக்குள் மறைத்தவன் “” பத்திரிகை தர வா… னு கூப்பிட்டேன் உன்னை. ” ஒவ்வொரு வார்த்தையும் நிறுத்தி நிதானமாக உச்சரித்தவன், அவளோடு அவள் முகத்தில் தோன்றிய சிவப்பையும் சேர்ந்தே ரசித்தான்.
“இப்போவா…”
” ம்ம்ம். ரெடியாகி வா.. கீழே வெயிட் பண்றேன். ” சொன்னவன் அடுத்த கணம் நிற்காமல் படி இறங்கி விட்டான்.
அறையின் உள்ளே கூட அவன் வரவில்லை. ஆனால் அவளை என்னன்னவோ செய்ய வைத்தன அவனின் ரசனை பார்வை. ஏதோ ஒன்று தன்னிடம் சொல்லி கொண்டே இருப்பதை போலவே அவளுக்கு தோன்றியது. வானவில்லை பார்க்கும் சிறு பிள்ளையின் ரசனையும், சிலை வடித்து முடித்த பின், அதன் அழகை ரசிக்கும் சிற்பியின் ஆத்மார்த்த பார்வையும் ஒருங்கே இருந்தது.
அவள் பத்தே நிமிடத்தில் சேலை மாற்றி கிளம்பி கீழே வர அவனிடமோ ஆச்சரிய பார்வை. “செம்ம ஸ்பீட்..” முணுமுணுக்க அவள் காதில் விழுந்தும் அவன் புறம் திரும்பவே இல்லை. இளஞ்சிவப்பு நிற சேலையில் அவனின் அழகான ராட்சசி இன்னுமே மனதை கொள்ளை கொள்ள அவன் பார்வையிலோ இன்னுமே ரசனை கூடியது.
“நூறடிப் பளிங்கை ஆறடி ஆக்கிச்
சிற்பிகள் செதுக்கிய உருவமடி…
இதுவரை மண்ணில் பிறந்த
பெண்ணில் நீதான் நீதான்
அழகியடி இத்தனை அழகும்
மொத்தம் சேர்ந்து என்னை
வதைப்பது கொடுமையடி..,”
பாடல் வேறு தொலைக்காட்சியில் ஓடி கொண்டிருக்க இவனுக்கும் அதுவே பொருந்தி இம்சை கொடுத்தது.
தாய் தந்தை பத்திரிக்கை கொடுக்க காலை நேரமே கிளம்பி இருக்க சிவா கீழே இருந்தான். அவனை தேட ஆளில்லை. ” சிவா அண்ணா எங்கே ?”
” நம்மளை வர சொல்லிட்டு அவன் இப்போ தான் கிளம்பி போனான். “
” டீ குடிக்கிறீங்களா?” கேட்டபடியே அவள் சமயலறை நோக்கி திரும்ப
” “அவன் போட்டு கொடுத்துட்டான்மா .., நம்ம கிளம்பலாம் வா., ” என்பதாய் வெளியே செல்ல. அவள் மனமோ ” அடப்பாவி., நம்ம ரெண்டு பேரு மட்டும் தனியா வீட்டுல இருக்கோம்., வெளியே ஓடுறதிலே குறியா இருக்காரே? ஏதாவது பேசலாம் தானே .., ” என நினைத்தது. அவள் அறையில் தடுமாறி நின்றதில், தனியே இருக்க தயங்குகிறாளோ என்றே அவன் வெளியே அழைத்து வந்தது.
காரில் ஏறி அமர்ந்தவுடன் மௌனம் மட்டுமே ஆட்சி செய்தது., ” என் அக்காவும், அம்மாவும் மட்டுமே வந்த என் காரில், சாரியில், என் லயா என் கூட. வாவ் என் லைப் எவ்ளோ அழகா போகுது. ” மானசீகமாய் அவளோடு பேசி கொண்டு அவன் வர, அவனை ஒருமுறை திரும்பி பார்த்து விட்டு, அவள் கரங்கள் தானாய் பாடலை போட சென்றது.
” முத்தே முத்தம்மா முத்தம் ஒன்னு தரலாமா…” பாடல் ஒலிக்க ஆரம்பிக்க அவளுக்கோ ” அச்சோ .., ,திருப்பி முத்தமா ” என்றிருந்தது. மாற்றி வேறு சேனல் தேடி வைத்தாள். அவன் கடை கண் பார்வை அவள் மீது இருந்தாலும் பேசாமல் தான் இருந்தான். மீண்டும் என்ன செய்வாளோ என தெரியாது சுவாரசியமாய் அவள் செய்வதை மட்டுமே பார்த்திருந்தான். உரிமையாய் தன் காரில் அவள் செய்வதை ரசிப்பதே அவன் வேலையாய் இருக்க.
” முத்தம் போதாதே சத்தம் போடாதே
ரத்தம் சூடானதே நாணமே நாணுதே..”
” அடேய், திருப்பியுமா., ” கன்னம் சிவக்க, அவளின் முகம் போன போக்கில் வெடித்து சிரிக்க ஆரம்பித்தவனோ ” பாட்டை மட்டும் ரசிக்கனும், மைண்ட் ஏன் எங்கேயோ ஓடுது ? ஜஸ்ட் சில்..,” என்றான் சிலாகித்து சிரித்தபடி .
” இ ..இல்லை…” என்ன கூறுவதென்று அவள் தடுமாற ” என்கிட்டே உனக்கு எல்லா உரிமையும் இருக்கு. ரிலாக்ஸ், எதுக்கு தயக்கம், நீ நீயா மட்டும் தான் எனக்கு வேணும். பிடிக்கும். ” அவன் முகத்தையே விழி இமைக்காமல் பார்த்தப்படி இருக்க, விழுந்த இடத்திலே மீண்டும் சறுக்கினான்.
” லயா, உன் கண்ணுக்குள்ள விழுந்தவனை திருப்பியும் இழுக்காதே, திரும்புடி… ” அவனுள் சொல்ல தோன்றினாலும் சொல்ல முடியவில்லை. அந்த உணர்வில் முழ்க பிடித்தது. மூழ்கியே இருக்க தோன்றியது. ஆனால் அதற்கான நேரம் இதுவல்லவே. மெல்ல செருமியவன்
” லயா, உனக்கும் பாட்டு பிடிக்குமா? “
” பாட்டும் பிடிக்கும், பாடும் போது மெய் மறந்து ரசிக்கிற ரசனையும் பிடிக்கும். …”
பொதுவாய் பேசியபடி பயணம் முழுதும் தொடர ராஜாவின் கல்லூரி உள்ளே கார் நுழைந்தது. மூவரின் பள்ளி நண்பர்கள், கல்லூரி தோழர்கள் அனைவரையும் அங்கே வர சொல்லி பத்திரிக்கை கொடுத்து விட முடிவு செய்திருந்தனர். கார் பார்க்கிங்கை அடைந்து நிற்கும் வரை தோன்றாத எண்ணம் தயக்கம் வர, மெல்லிய பெருமூச்சு எழுந்தது.
எத்தனை கலாட்டாக்கள், கொண்டாட்டம் நடந்த இடமோ இன்றோ அந்நியமாய் தோன்றியது. எதிரில் பார்க்க அவனோடு கல்லூரி படித்த நட்புகளும் நின்றிந்தனர். நடந்த நிகழ்ச்சிகளை மனதில் வலம் வர சற்றே இறுக்கம் முகத்தில் தெரிய தொடங்கியது.
” மாறா., ஜஸ்ட் ரிலாக்ஸ், வாங்க .., “
” உனக்கும் எல்லாம் தெரியும் தானே., “
” தப்பு செய்யாத நீங்க தள்ளி நிற்க வேண்டிய அவசியமே இல்லை. என் அண்ணன்ங்க மட்டுமில்ல. உங்களுக்காக நிறைய பேர் ரொம்ப வருசமா வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. கம்., “
மௌனமே மொழியாய் இருக்க ” இப்ப கீழே இறங்குறீங்களா இல்லையா ..,” அவன் கையை பிடித்தவள் தன்னோடு இழுக்க.
ஆழ்ந்த மூச்சை இழுத்து விட்டவனோ, தன்னை சாந்தப்படுத்தி கொண்டு அவளையும், பிடித்த கரத்தையும் விழியால் வருடி ” வரலைன்னா இழுத்துட்டு போவியா.., எங்கே இழு.., ” என்பதாய் அவளை பார்க்க. ” ப்ளீஸ் வாங்க… ” கெஞ்சலில் இறங்க அவனிதழ்கள் சிரித்தது.
நட்பில் மட்டும் மான ரோசம் பார்த்தால் அதன் உயிர் நிலைக்குமா., கடந்து வந்த காலங்கள் சோகத்தை சுமந்திருந்தாலும் சுகமான நினைவுகள் மெல்லிய சுவாசம் விட்டு தானே நம்முள் உயிர்த்திருக்கும். இறங்குவதற்கு யோசித்தவன் தன்னை சூழ்ந்த நட்பின் அன்பில் புத்துயிர் பெற்றான்.
பெண்கள் பலருக்கும் திருமணம் ஆகி குழந்தையோடு வந்திருந்தனர். ஆண்கள் பலரும் வெளியூரில் வேலை செய்வதும், தன்னை காண மட்டுமே இங்கு வந்ததும் அறிந்து சிலிர்த்தான். அவனிடம் யாரும் பழைய நிகழ்வை பற்றி பேசவே இல்லை. சந்தோசம் மட்டுமே அங்கே சூழ பத்திரிக்கை வைத்து பேசி முடிய கிளம்பி வந்தனர்.
error: Content is protected !!