Skip to content
Post Views: 1,895
꧁☆☬ லயம் – 17 ☬☆꧂
அனைவரின் ஆரவாரத்தோடும், ஆசிர்வாதத்தோடும், சூரியனுக்கு உகந்த நாளான ஞாயிறு விடியலில் தேவர்களும் வணங்கும் பிரம்மமுகூர்த்ததில், சந்திரனும் சூரியனும் ஒன்றாய் வானில் கைகோர்க்கும் இனிய வேளையில், லயத்தில் மாறன் இணைய, ஆயுள் முழுதும் கைகோர்க்க, தன் இதய சிம்மாசனத்தின் ராணியை, மங்கள நாண் பூட்டி மனையாலாய் ஏற்று கொண்டான்.
Advertisement
தாய் மாமன் சடங்கை ஜானகியின் கணவர் சடகோபன் செய்ய, மகன் திருமணம் முடிந்ததில் சந்தோச பூத்துவல் தமயந்தி, ஜானகி முகத்தில். மாணிக்கத்திற்கு மீண்டும் ஒரு மகள் வீடு வரும் உவகையில் தலை கால் புரியாமல் ஆர்ப்பரித்து கொண்டிருந்தார். அடுத்தடுத்து சடங்கு, சம்பிராதாயம், மறு வீடு செல்லல் என நேரம் பிற்பகல் கடந்து விட்டது.
ஆரஞ்சும், கோல்டு கலரும் மிக்ஸ் செய்த பட்டில், குங்கும பூ கலர் பார்டர், ஆரஞ்சு பிளவுஸ் அணிந்து அவனை கொல்லாமல் கொன்று கொண்டிருந்தாள் அன்று காலை முதலே. அவன் அருகில் இருந்தும் தொட முடியா நிலவாய் அழகாய் அவள்.
Advertisement
Advertisement
அவர்களின் நண்பர்கள் அனைவரும் படை எடுத்து வந்து விட்டனர். பழைய குதூகலம் மாறனிடமும் மீண்டிருக்க உற்சாகம் கரைபுரண்டது.
Advertisement
மதியம் சற்றே ஓய்வு எடுக்க சொல்லி அவளை அறைக்கு அனுப்ப பின்னோடு வந்து விட்டான் அவனும். மச்சான் துணை இருக்க மலையையே இழுக்கும் போது மங்கையை அணுக முடியாதா?
“லயா!!!!! “அவள் படுத்திருக்க, காதில் மெல்லிய சப்தம் கிசுகிசுப்பாய் கேட்டது.
“மாறா! இன்னைக்காவது தூங்க விடுங்க, கனவுல வந்து தொல்லை பண்றதே வேலையா போச்சு. “
” தூங்க விடவா, அடிப்பாவி இன்னைக்கு தான் தூங்கவே கூடாது. இதுல சுகமா தூங்கிட்டு கனவுனு வேற சொல்றியா ” மெதுவே அவள் நெற்றியில் தொடங்கி விரலால் வலம் வர கன்னம் சிவக்க தொடங்கியது.
“தொட்டாசிணுங்கி மாதிரி சும்மா தொட்டாலே ரெட் ஆனா, நான் எப்படி ரெய்டு வர…. இம்சைடி நீ ” அவள் முகம் அருகே தலை வைத்து, மூக்கோடு உரச கொஞ்சம் நெளிந்தாள்.
கனவென்று நினைத்திருக்க நனவில் நடந்ததை நங்கை அறிந்து எழு முன் கன்னத்தில் முத்தம் மட்டும் வைத்து ஓடி விட்டான். கன்னத்தின் அழுத்தத்தில் உறக்கம் கலைந்தவள் எழுந்து பார்க்க, வாசலில் அவன் தலை மறைந்தது.
கன்னத்தின் ஈரம் கள்வனை காட்டி கொடுக்க, ” கனவு இல்லையா, ரொம்ப படுத்துறடா நீ ” சிணுங்கியவளின் செம்மை கன்னமும், கண்களும் அடுத்து உறக்கத்தை தழுவ முடியுமா? சுக நினைவில் சோம்பல் மறைய, மதி மயங்க, மதியும் வந்து விட்டது.
மதி வானில் வலம் வர, அவன் மதி மயக்கியவள் மெல்ல நடை பயின்று வந்தாள். அவன் தேர்வு செய்த மாடலில் அவள் கைவண்ணம் மிளிர, நெக் டிசைன் மட்டும் கழுத்தோடு ஒட்டி இருந்தது. ரெட் கலரில் ஓரங்கள் முழுதும் வருமாறு டிசைன் செய்திருந்தாள்.
வெள்ளையும், சிவப்பும் அள்ளி தெளிக்க, ஆடையில் முத்து சுடர் விட, அவன் வாங்கி தந்த மாணிக்க நகைகள் நெஞ்சோடு தாளமிசைக்க, கண்கள் ஜொலிக்க, கற்றை கூந்தலில் ஒற்றை பூ வைத்து, இடை தொடும் மாராப்பு இடையில் நழுவுமோ என சற்றே பயத்தில் கரங்கள், மென்மையாய் அதை பிடித்திருக்க, தேவதை ஒன்று பல்லக்கில் வராமல், பஞ்சு பாதங்கள், பிஞ்சாய் நோகுமோ என மெல்ல மெல்ல அடி வைக்க லெஹாங்காவில் நடை பயின்று வந்தாள்.
சிறிய நெற்றியில் சின்னதாய் செந்தூரம் புதிதாய் இடம் பெற்று அலங்கரித்தது. புன்னகையும், பூரிப்பும் ஒருங்கே மிளிர, விரிந்த சிரிப்பில் அவன் அருகே வந்து நிற்க மாறன் மனதோ மன்மதனாய் மாறி விட்டது.
இத்தனை நாள் தள்ளி நின்றவன் உரிமையாய் அவள் தோளில் கை போட்டு கையை இறுக பற்றினான். போட்டோ சூட் உபயத்தில் அவள் செவ்வானமாய் சிவந்திருக்க வானின் வெள்ளி நிலா கூட அவளை மறைவாய் எட்டி பார்த்தது.
ரோஹித், ஹர்ஷித் இருவரும் அவள் கன்னத்தில் முத்தம் கொடுக்க அதற்கும் செஞ்சாந்தாய் சிவந்தாள். “ஏய் நான் கொடுத்தா தான் சிவக்கும்னு பார்த்தா யாரும் தொட்டா கூட சிவக்குதே. அவ்ளோ சென்சிடிவ் ஸ்கின்னா உனக்கு, அச்சோ… இது தெரியாம டைம் வேஸ்ட் பண்ணிட்டேனே… நான் லூசு தான் ” என மாறன் புலம்ப, வெக்க சிரிப்பு கண்ணில் பூத்தது.
” மச்சி, உனக்கு அழகா, உயரமா, சிவப்பா, ஒரு தங்கச்சி இருந்தா சொல்லுடா… ” ராஜா மகேஷ் தோளில் கை வைத்து தூணோடு சாய்ந்து கொண்டு கேட்க,
” அதுக்கென்ன மச்சி, என் தங்கச்சி சூப்பரா இருப்பாங்க “
” எங்கேடா இருக்காங்க. போட்டோ காட்டு, பார்ப்போம் ” ஆர்வத்தை அடக்க மாட்டாமல் இவன் கேட்க தூணின் பின்னோடு நின்றிருந்த ரோஜாவிற்கோ வந்த கடுப்பில், இடுப்பில் கை வைத்து கொண்டு முறைத்த படி நின்றாள்.
” பின்னாடி தான் நிக்குறா மச்சி.. எப்படி இருக்கானு நீயே பாத்து சொல்லு” நக்கலை கூட சிரிக்காமல் சொன்னதை நம்பி பின்னே பார்க்க ரோஜாவோ வெட்டவா, குத்தவா என முறைத்தாள்.
” ஜோ குட்டி… நீ என்னடா இங்கே வந்த…? “
” உங்களுக்கு பொண்ணு பார்த்து கொடுக்கலாம்னு தான் வந்தேன். “
” வாடா செல்லம்… சேர்ந்து பார்ப்போம்.. ” அவள் கைபிடித்து வேறு பக்கத்தில் நிறுத்த வந்த கடுப்பில் ஓங்கி காலில் மிதித்தாள் யாரும் அறியாமல்.
” ஜோ!!! என் தம்பி சிவாக்கு தான் பொண்ணு தேடுறேன்…நீ ஏன்டா டென்ஷன் ஆகுற? “
“நீங்க ஒன்னும் பார்க்க தேவையில்லை. ஆல்ரெடி அவரே அங்க ரொம்ப நேரமா கடலை வறுத்து, சலிச்சு எடுத்துட்டு இருக்காரு. அநேகமா நமக்கு முன்னவே கல்யாணம் கூட நடந்தா நடந்துரும்.
அதனால் மக்கு மகாராஜா ஒழுங்கா கிளம்பி என் பின்னாடி வாங்க. பொண்ணு தேடுறேன், பன்னு தேடுறேன்னு சொன்னிங்க, அப்புறம் பார்க்க கண்ணு இருக்காது. “
“” செல்ல குட்டி, டோன்ட் ஆங்கிரி, வா நான் உனக்கு ஜாங்கிரி தரேன். ” கூஜா தூக்கும் ராஜாக்கு தாஜா பண்ணவா தெரியாது.
” அங்க என் அண்ணன் பொண்டாட்டிக்கு ட்ரெஸ், நகைன்னு விதவிதமாய் போட்டு ரசிச்சுட்டு இருக்கார். இங்க பெரிய கார்மெண்ட்ஸ் ஓனர்னு பேரு. ஒன்னுத்துக்கும் இல்லை. ஜாங்கிரி வாங்கி தருவாராம். அதை எனக்கே போய் சாப்பிட தெரியாதா? போய்யா… “
” அவனுக்கு ட்ரெஸ், டிசைன்னா போட்டா பிடிக்கும். எனக்கு போட்டாவே பிடிக்காது. “
“எது போட்டா பிடிக்காதா? யோவ்… ” கையில்
ரெண்டு அடி போட்டதும் தான் அனர்த்தம் புரிந்தது.
” அச்சோ.. ஓவரா டிசைன் இருந்தா பிடிக்காதுன்னு சொல்ல வந்தேன்… எதையும் தப்பாவே யோசிப்பியா? “
” பேசுறத ஒழுங்கா பேசுனா, ஒழுங்கா புரியும்… அதையே பண்ண தெரியல, இவரு தொம்பிக்கு பொண்ணு பார்க்க கிளம்புறாராம். “
” ப்ப்பா… என்ன குத்திட்டே இருக்க. சிரிம்மா… நம்ம கல்யாணத்துக்கு இதை விட கிராண்டா உனக்கு டிசைன் பண்ணி தர சொல்றேன். ” கோபமாய் போனவள் பின்னேயே போய் சில பல அடி, கடி வாங்கி சமரசம் செய்தான்.
ரிசெப்சன் அலங்காரம் கலைந்து மெல்லிய ரக பட்டு புடவை உடுத்தி தயாராகி கொண்டிருந்தாள் லயா. “அத்தை!!!!! நானு…. நானு…. ” ஒருவர் மாற்றி ஒருவர் அவளுக்கு பவுடர் அடிக்க ஹெல்ப் செய்து, கிளிப் எடுத்து கொடுத்து, பூவை வைக்க உதவி அதகளம் செய்து கொண்டுருந்தனர். வர போகும் அத்தை பொண்ணுக்கு பொடுசுகள் அச்சாரம் போட, மாமன்காரனோ பூவோடும், முரளியோடும் மல்லு கட்டிகொண்டிருந்தான்.
” மாம்ஸ், இதெல்லாம் வேணாம்.. எடுங்க, மல்லி பூவும், கொஞ்சம் ரோஜா மட்டும் போதும். என்கிட்ட கொடுங்க, நான் பார்த்துகிறேன்”
” உன்னை யாருடா இப்போ இங்கே வர சொன்னது. “
“நான் பார்த்துகிறேன், நீங்க போய் உங்க பசங்கள பார்த்துக்கோங்க.. “
“எதே என் பசங்கள… அடேய் ஒரே நாள்ல இப்படி மாறிட்டியே… “
” அச்சோ.. மாம்ஸ் கடுப்பை கிளப்பாதீங்க.. அவனுங்க தான் மேக்கப் போடுறேன்னு அவளை வச்சி செய்றாங்க… ப்ளீஸ் போய் அவளை அனுப்பி விடுங்க.. “
” ஹ்ம்ம்…. உன் கவலை உனக்கு… போறேண்டா… போறேன்… ” புலம்பிய படி கீழே இறங்க,
“நல்லவேளை வந்திங்க, யாருகிட்டயும் போக மாட்டேன்னு ஒரே அடம், உங்க வாலுங்களை தூக்கிட்டு போங்க. கேள்வி கேட்டே படுத்தி எடுக்கிறாங்க.” மாலா அவர்களின் பேச்சுக்கு பதில் சொல்ல முடியாது ஓய்ந்து போய் அவனிடம் புலம்ப.
” எம்புள்ளங்க கேள்வி கேட்டது ஒரு குத்தமா? வாடா செல்லம் நம்ம போவோம்… “
” ப்ப்பா… மாமாக்கு பாப்பா எப்போ வரும்? எங்கே போச்சு? ” மகன்களின் கேள்வி மண்டையை தட்ட,
” ஆத்தி இப்பவே கண்ணை கட்டுதே…” முணங்கியவனோ
” மால்ஸ் சீக்கிரம் வா.. என்னால ரொம்ப நேரம் வெயிட் பண்ண முடியாது … ” அறைக்கு வெளியே கத்தி சொல்லி விட்டு, தன் சேட்டை குட்டிகளை தூக்கி கொண்டு அறைக்குள் சென்றடைந்தான்.
லயாவிற்கோ சிரிப்பு பொங்கியது. கரங்களால் வாயை மூடி கொண்டு மெல்லிய குரலில் ” மொத நீங்க போங்கண்ணி… “
” சுபா குட்டி நீயும் சேட்டை பண்ணாதே, அவனுங்கள சமாளிக்க அவரால் முடியாது ” பூவை வைத்து அலங்காரம் முடிக்க மனம் திருப்தியாய் உணர்ந்தது.
” அம்மா அப்பா அழுதாங்கன்னு பீல் பண்ணாதடா… நாளைக்கு காலையில் போய் பார்த்துக்கலாம். வேலைக்கு விட்டுட்டு இருக்க மாதிரி நினைச்சிக்கோ. வீக் டேஸ் அங்க வந்துருங்க….
நானும் அத்தையை போய் பார்த்துகிறேன். என் பெரியம்மா ஒரு வாரம் அங்கே தான் இருப்பாங்க. கவலைப்படமா நல்லபடியா வாழ்க்கையை தொடங்குங்க. ” மாலாவின் பேச்சிற்கு பின் சற்றே மனம் நிம்மதியானது.
திடமாய் தான் இருந்தாலும் சிவாவும் சற்று கண் கலங்கி விட்டான். ராஜாவோ தானும் வருவதாய் நிற்க, அவனிடம் அங்கே பார்த்து கொள்ள சொல்லிவிட்டு கிளம்பி வந்து விட்டனர். தன் வீட்டில் தான் மகன் வாழ்வு தொடங்க வேண்டுமென சென்னைக்கு கிளம்பி வந்து இருந்தனர்.
பால் செம்போடு மேல் தளம் வாயில் வரை வந்து மாலா விட்டு செல்ல, தயக்கம் வந்தது. தன்னவனோடு தனியே என மனம் பதட்டம் கொள்ள ஹாலில் அமர்ந்து லேப்டாப்பில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தான். காதில் போன் வேறு. அவன் அருகே சென்று அமர விழி உயர்த்தி பார்த்தான். மெல்லிய புன்னகை மட்டும் இதழில் தழுவ, கண்கள் அவளின் அசைவுகளில் லயித்து இருந்தது.
பதட்டத்தில் வளையலை முன் பின் நகர்த்தி சுற்றுப்புறத்தை நோட்டம் விட்டு கொண்டிருந்தாள். ஒவ்வொரு இடத்திலும் அவன் ரசனை மிளிரும் வகையில் அழகான பொருட்கள் இடம் பெற்றிருந்தன. ஹாலை ஒட்டி இரு அறைகள் இருந்தன. அதற்கடுத்த கிச்சன் அறை இருந்தது. கடைசியில் ஒரு அறை இருக்க அது பூட்டப்பட்டிருந்தது.
ஒரு வேலை அலங்காரம் செய்ததால் அடைத்துள்ளனரோ என எண்ணி அமைதியாக பார்த்து இருந்தாள். அவள் இல்லத்தை நோட்டம் விட அவனோ இல்லாளை நோட்டம் விட்டான். பேசி முடித்தவன் சென்று கதவை தாள் போட கண்களோ பதட்டம் கொண்டது.
“நாளைக்கு சுத்தி காட்டுறேன்., இப்போ போகலாம்.,” என்றவனோடு பின்னேயே வந்தவள் முடிவில் கண்டது மேற் கூரை முழுதும் கண்ணாடியில் வேயப்பட்டு, அறை சுவற்றில் முழுதும் பனி படலங்கள், அடர்ந்த மரங்கள், ஆர்ப்பரிக்கும் அருவி, அமைதியான கடல் நடுவே சூரியனின் உதயம் என கதவினை தவிர்த்து நான்கு புறமும் வால் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
நடுவே வட்ட வடிவ கட்டில் மட்டும் நடுநாயமாக இருக்க, அதில் ரோஜாவின் இதழ்களும், மல்லிகை மொட்டுகளும் தவிர்த்து வேறொரு பொருளும் அங்கில்லை. அவள் பார்வையால் அறையை வருடியபடி இருக்க, ” இது தான் என் வெவரிட் ரூம். பிடிச்சிருக்கா., ” என்றவன் அவளை கட்டில் அமர்த்தி, லைட்டை அணைத்தான்.
அகன்ற வானம் எங்கிலும் நட்சத்திர கூட்டம் தெரிந்திருக்க ஒற்றை அரசியாய் பவுர்ணமி நிலவு ஒய்யார நடை போட்டு பவனி வந்தாள். அன்று தங்க நிறத்தில் ஜொலிக்கும் மதியை அண்ணாந்து பார்த்து கொண்டிருந்தவளை படுக்கையில் தள்ளியவனோ” இப்போ பாரு, இன்னும் அழகா தெரியும்., “.
அதுவரை இருந்த அவளின் பதட்டம் மறைந்து ரசனை தலை தூக்கியது. “மாறா!!!! ஜஸ்ட் வாவ்.., ரசிச்சு ரசிச்சு பண்ணிருக்கீங்க., இந்த மாதிரி நிலவை ரசிச்சு பார்த்துட்டே தூங்குனா எவ்ளோ அழகா இருக்கும்., செம்ம .., ஐ லவ் இட்.., ” மெலிதாய் சிரிப்போடு அவளிடம் பேச ஆரம்பித்தான்.,
பேச்சுக்கள் எந்த நேரத்தில் மாறியது என்றே தெரியாமல் அழகாய் ஒரு கூடல். வானத்தில் முத்தமிடும் விண்மீன்களாய் சிறு சிறு முத்தங்கள் அவள் மேனியெங்கும் விரவ ஆரம்பித்தன. இருளை மறைக்கும் நிலவாய் அவள் மனதை மறைத்த தயக்கமும் எங்கோ விலகியது. பூங்காற்றும் அறியாமல் பூவை திறந்து, அந்த பூக்கூட அறியாமல் தேனை ருசிக்க ஆரம்பித்தனர். அவர்களின் அன்பு அரும்பாகி, தயக்கம் விடுத்து மொட்டாகி, முகை நிலையை கடந்து, பூவாகி, மலர்ந்து மலராகி, செம்மலாய் வாடி களைத்து, உறக்கம் தழுவ, நிலவும் நாணத்தில் மறைந்து, சூரியன் உயிர்தெழுந்தான். லயத்தினில் தொலைந்த மாறனின் காதல் அதன் எல்லைக்கோட்டையும் தாண்டி வெற்றி கொடியையும் நிலை நாட்டியது.
error: Content is protected !!