Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

இதோ இதோ என் பல்லவி

Itho Itho En Pallavi 17 1

இதோ.. இதோ.. என் பல்லவி

அத்தியாயம் – 17



Advertisement

   விக்ரமும்  ஆபிதா பானுவும்  சிறிது  நேரம் பேசிவிட்டு இருவரும் தூங்கி  இருந்தனர்..

Advertisement

Advertisement

ஆபிதாபானு  கட்டிலில் தூங்கிக்கொண்டு இருக்க.. விக்ரம்  ஆபிதாவின்  கை பிடித்தப்படியே  சேரில் அமர்ந்து கட்டிலில்  தலை வைத்தபடியே தூங்கி கொண்டு இருந்தான்..

நர்ஸ் வந்து கதவை தட்டும்  சத்தம் கேட்டு  தான் இருவரும் முழித்தனர், விக்ரம்  சென்று  கதவை  திறக்க. “என்ன  சார் உங்க வொய்பு கண்முழிச்சவுடனே  நல்லா  தூங்கிட்டீங்க போல”  என்றாள்..

Advertisement

விக்ரம் நர்ஸை பார்த்து சிரித்தவன்..”டாக்டர் எப்போ  வருவாங்க”  என்றான்..

“இன்னும் கொஞ்ச நேரத்துல  வருவாங்க சார்” என்றவள். ஆபிதா பானுவை  மெல்ல  எழுந்து  உட்கார சொல்லி விட்டு, சில டெஸ்ட் பண்ணி  பார்த்தவள். ” ஒரு  ஊசி  மட்டும் போடணும் சார் நரம்புல, அத மெடிக்கல்லுல  வாங்கிட்டு  வர்ரீங்களா”  என்றாள் விக்ரம்மை பார்த்து..

“சரி”  என்றவன், மெடிக்கல் சென்று  அந்த மருந்தை வாங்கி வந்து நர்சிடம்  தர..

” சார்  இங்கே வாங்க ”  என்றவள். “மேம்மை  நல்லா பிடிச்சுகோங்க என்றாள்.

“எங்க  பிடிக்கனும்”  என்றான் விக்ரம்.

“சார்  மேம்  கழுத்துல இந்த  ஊசி  போடனும்”  என்றாள்  நர்ஸ்..

” என்னது  கழுத்துலயா!  என்றவன் வேற  எந்த இடத்திலும்  போட  முடியாத? இந்த இன்சங்சன” என்றான்.

“இல்ல  சார் அவங்க கோமால  இருந்து வந்து  இருக்காங்க அதனால இந்த ஊசியை  கழுத்துல  தான் போடனும்  அதுவும்  நரம்புல  தான் போடனும். நீங்க  கொஞ்சம் ஹெல்ப் பண்ணுங்க, மேம் ஆடாம தலையை  மட்டும் நல்லா  பிடிச்சுக்கோங்க, நான்  நரம்புல  ஊசி  போடனும்”   என்றவள்.

“மேம்  ரொம்ப  வலிக்கும்  மேம், சார்ர  பிடிச்சுக்கோங்க”  என்று ஊசி போட தயாராக.

ஆபிதாவுக்கோ  ஊசி கழுத்துலயா  என்று  பயந்தவள். விக்ரமை பார்க்க..

தன்னிடம்  “வா” என்றவன். அவளை  தன் வயிற்றோடு அணைத்து பிடித்துக் கொண்டவன்.

ஆபிதாவின் தலையை மட்டும் சாய்ந்து  வைத்து கொள்ள..

நர்ஸ் முதலில் பஞ்சை வைத்து  ஊசி போடும்  இடத்தை  சுத்தம் பண்ணியவள், “மேம் ஆடாதீங்க”  என்று பேசிக்கொண்டே  ஊசியை போட…

ஆபிதா வலி தாங்க  முடியாமல் விக்ரமை  வயிற்றோடு  அணைத்து கொண்டு உம்.. உம்.. என்று வலி தாங்க முடியாமல் அழ..

ஊசி போட்டு முடித்தவள், ‘முடிஞ்சுருச்சு மேம்”  ஊசி போட்ட இடத்தை  தேய்க்க  கூடாது  சார்  என்று  சொல்லி  சென்றாள்..

ஆபிதாவுக்கு  ஊசி போட்ட இடம் இன்னும் வலிக்க. அவள் முணங்கும் சத்தம் கேட்டவன்..

“சரியாகிரும்  பானு  கொஞ்சம்  நேரம் வலிக்கும் அப்பறம் சரியாகிரும்” என்றவன் அவளின் முதுகை தட்டி கொண்டு இருந்தான்..

“வலிக்குது”  என்றவள்  விக்ரமை  அணைத்தபடியே  இருந்தவள்..

சிறிது  நேரத்தில் ஆபிதா தூங்கி இருக்க..

விக்ரம் இவளிடம் பேசிக்கோண்டே   பார்க்க இவனை அணைத்தவாரே  ஆபிதா தூங்கி இருக்க.

அவளை கட்டிலில் படுக்க வைத்தவன் ,. “ஊசி போட்ட  இடம் வலிக்கும் போலவே என்றவன்.

ஆபிதா நீங்க ஊசி போட்டவுடனே தூங்கற பராவயில்லையா.” என்றான்..

“நல்லது தான் சார் தூங்குனா”  என்றவள், ஆபிதா மேம் முழிச்சா, சாப்பிட  கொஞ்சமா  லிக்விட முதலில்  கொடுங்க  என்றாள்..

“சரி” என்ற விக்ரம். அவள் தூங்கி எழுவதற்குள்  நாம குளித்து ரெடியாக  வேண்டியது தான் என்றவன்.  குளித்து வந்தவன். ஐயோ!  ஆபிதா கண்ணு முழிச்சதை  சொல்ல மறந்துட்டேனே என்றவன் அனைவருக்கும்  போன் பண்ணி   சொன்னவன். சுந்தரிடம் சில நாட்களாக  போனில் பேசாமல் இருத்தான்.. தந்தை என்ன நினைப்பார், சூர்யா என்னை தேடுவானே என்று நினைத்தவன்.

சுந்தருக்கு போனில் அழைக்க. போனை எடுத்த சுந்தர்  “விக்ரம் எப்படி இருக்க பிரச்சனை ஒன்னும்  இல்லை ஆர்  யூ ஆல்ரைட்”  என்றார்.

 ” யா!  டாடி  ஐ யம் குட், இன்னும் டூ  டெஸ்சுல  லண்டன் வந்திருவேன்” என்றான்..

 “இல்ல விக்ரம் சூர்யா ரொம்ப  அடம்  பண்ணுறான்,  நீ  எங்க இருங்கேன்னு சொல்லு நான் வர்றேன், அட்ரஸ்சை அனுப்பி வை” என்று  போனை வைத்தார்.. விக்ரம் தந்தைக்கு  அவன் இருக்கும் இடத்தின் அட்ரஸை அனுப்பினான்..

ஆபிதாவை  செக் பண்ணி பார்க்க டாக்டர் வந்தார். விக்ரமை பார்த்த டாக்டர் “என்ன விக்ரம் எப்படியோ ஆபிதா கூடாவே இருந்து, ஆபிதாவை கண்முழிக்க வச்சுட்டீங்க” என்றார்..

“எல்லாம்  உங்களால   தான் டாக்டர்”  என்றான் விக்ரம்..

“இல்ல விக்ரம்  நாங்க மெடிசன்  கொடுத்தாலும், நீங்க  ரெண்டு  நாளா உங்க வொய்ப விட்டு நகராம பாத்து கிட்டது தான்”   என்றார்.

 தூங்கி கொண்டு இருந்த ஆபிதா டாக்டர் சத்தம் கேட்டு   மெல்ல எழுந்து கொள்ள..

“ஆர்  யூ  ஓகே ஆபிதா பானு” என்றார் டாக்டர்.

 “ஐ  எம் ஓகே  டாக்டர்”  என்றாள்..

ஆபிதாவை  செக் பண்ணி பார்த்தவர். நர்ஸ்சிடம்  “இன்னும் இரண்டு ஊசி   ஆபிதாவுக்கு நைட்டும், நாளை மார்னிங்கும் போடுங்க, டிரிப்ஸ் மட்டும் போடுங்க பிளட் வேணாம்” என்றார்..

பானுவிடம் ” ஓகே வா  ஆபிதா வேற ஏதாவது தொந்தரவு இருக்கா” என்றார்..

“இல்லை” என்று டாக்டரிடம்  சொல்லியவள். “தாங்யூ சார் என்னை காப்பாத்தியதற்கு” என்றாள்..

“எனக்கு எதற்கு நன்றி சொல்லுறீங்க. நான் என் வேலையை செய்தேன் அவ்வளவு தான்.. இதோ இருக்காரு பாருங்க விக்ரம் உங்க ஹஸ்பண்ட் அவருக்கு சொல்லுங்க” என்றார்..

ஆபிதா விக்ரமை பார்க்க..

“யூ  ஹவ்  ஒன்டர்  புல் ஹஸ்பண்ட் ஆபிதா  பானு.. என் சர்வீஸ்சுல  இப்படி ஒரு ஆள்லை நான் பாக்கல. உங்க ஹஸ்பண்ட் டூ டேச உங்க பக்கத்துல  இருந்து, உங்க காதில் இருந்து  வரும் இரத்ததை  துடைச்சுட்டே  இருந்தாரு.. ஐ. சி. யூ இருந்து  இரண்டு நாளா வேறும் தண்ணி மட்டும் குடிச்சுக்கிட்டு. எத்தனை பேர் இப்படி பண்ணுவாங்க சொல்லுங்க. அதுவும்  உங்க தலை பக்கம் உட்கார்ந்து  உங்க காது கிட்ட வந்து பேசிட்டே இருந்தாரு. நாங்க தான்  அவருக்கு ஏதாவது ஆகிருமோன்னு பயந்துட்டோம். இரண்டு நாளா  சேருலே  உட்கார்ந்துட்டு  உங்களை கவனிச்சுக்கிட்டே இருந்தார். அவரால எழுந்த   காலை  நகத்த  முடியல. நாங்க தான்  எங்க  ஹாஸ்பெட்டல  உள்ள  பிசியோ  தொரபிஸ்ட கூப்பிட்டு  அவருக்கு  காலுக்கு  மஜாஸ்  பண்ணிவிட்டோம் அப்பறமா தான் நடந்தாரு.. அவர் அவர பத்தி கூட  கேர் பண்ணல. உங்கள மட்டும் தான்  நல்லா  பாத்துக்கிட்டார். வெரி  கிரேட் மேன் யூ ”  என்று அணைத்துக்கொண்டவர்..

ஆபிதாவை  பானுவை  பார்த்து டாக்டர் “யூ  சோ லக்கி ஆபிதா பானு இப்படி ஒர் ஹஸ்பண்ட் கிடைச்சுருக்கு  டேக் கேர்”  என்று சொல்லி  சென்று  விட்டார்..

விக்ரம் “தாங்யூ  சார்”  என்று டாக்டரிடம் பேசி விட்டு வந்தான்.

ஆபிதா விக்ரமை பார்த்து படுத்து இருக்க.

அவள் ஏதோ யோசிப்பது போல் தெரிய..

அவளை எழுந்து உட்கார வைத்தவன். “சாப்பிடுறீயா” என்றான்..

“உம்” என்று தலையாட்ட..

அவளை ரெஸ்ட் ரூம் அழைத்து சென்றவன். அவளை முகம் கழுவி, பிரஸ்பண்ண வைத்தவன்..

“ஒரு நிமிசம் பானு”  என்று நர்சை அழைத்து வந்தவன். அவளுக்காக அவன் வாங்கி வைத்து இருந்த நீளமான குர்தி போல இருந்த   உடையை நர்சிடம் தந்து ஆபிதாவுக்கு உடை மாற்றிவிட சொல்ல..

“சரி” என்ற நர்ஸ் ஆபிதாவுக்கு உடை மாற்றி விட்டு  சென்றாள்.

பானுவை வந்து பார்த்தவன். “இப்பதான் நல்ல இருக்கு. வா சாப்பிடலாம்”    என்று அவளுக்காக வாங்கி வைத்திருந்த  ஓட்ஸ் கஞ்சியை  ஸ்புனில்  எடுத்து   ஊட்டி விட.. அவனிடம் எதுவும் பேசாமல், அவன் குடுத்ததை  உண்டவள்.

விக்ரம் மார்த்திரையை நீட்ட அதையும் வாங்கி விழுங்கியவள் சாய்ந்து அமர்ந்து கொள்ள..

விக்ரம் பானுவுக்கு தண்ணீர்  குடிக்க குடுத்து விட்டு. அவளின் வாயை துடைத்து விட்டவன். “என்ன   கேட்கனும்  பானு என்கிட்ட கேளு,  ஏன்  என் முகத்தையே  பாத்துட்டு  இருக்க”  என்றான்..

“அது  டாக்டர் சொன்னத நெனச்சுட்டு  இருந்தேன்”..

” அவர் என்ன சொன்னாரு? எல்லாரையும்  மாதிரிதான்  நானும், என் வொய்புக்கு  ஏதாவதுண்ணா நல்லா பாத்துக்கனும் தானே”..

“இல்ல  இரண்டு நாளா நீங்க, என் பக்கத்திலே உட்கார்ந்து இருந்தீங்களாம், ஒன்னும் சாப்பிடாம”  என்றாள்..

“அதுவா  உன்ன அந்த மாதிரி  நெலமையில  பாத்துட்டு, நான் எப்படி சாப்பிட முடியும், தூங்க முடியுமா சொல்லு, உயிர் போய், உயிர் வந்த மாதிரி எனக்கு இப்போ. நீ கண் முழிக்குற  வர. என் உயிர்  என் கிட்ட இல்ல பானு.என்  மையின்ட்  முழுக்க  நீதான், நீ எப்படியாவது  என்கிட்ட வரனும்முன்னு. உன்கிட்ட பேசிட்டு இருந்தேன்”என்றான்.

ஆபிதா விக்ரமை பார்த்து இருந்தவள்.”அவ்வளவு லவ்வா  உங்க பல்லவி மேல” என்றாள்..

அவளை  பார்த்து சிரித்தவன்.

“என்னை  விட  என்  பல்லவிக்கு  தான்  என்  மேல லவ்  அதிகம். நான் எல்லாம் அவள் முன்னால ஒன்னும் இல்ல” என்றான்..

“அவ தான் உங்களை மறந்துட்டு இப்படி யாருன்னே தெரியாம இருக்காளே, இப்படி உங்க அன்பை பிரிஞ்சும், வெளி காட்டாம”  என்று கண்கலங்கியவளை…

“ஏய் ஏன்டா, இப்படி பேசுற. உனக்கு எல்லாம் ஞாபகம் வரும். உன்ன வருத்திக்காத பானு” என்றான்..

“என்னால  முடியலைங்க, நீங்க எனக்கு பண்ணுறத பாத்த. உங்களுக்கு எவ்வளவு  அன்பு இருந்தா இப்படி என்னை பாத்துட்டு இருக்கீங்க. ஆனா எனக்கு ஒன்னும் ஞாபகம் வரல. உங்க அன்பை புரிஞ்சுங்க முடியுது. அதை என்னால வெளிபடுத்த முடியல. ஏன் இப்படி எனக்கு நடக்கனும்” என்று புலம்பியவளை..

“பானுமா  அமைதியா இரு” என்று அவளின் தலைவருடி விட..

” எனக்கு பழயது  ஞாபகம் வரும் தான்னுங்க”..

” கண்டிப்பா வரும்” என்றான்..

“அப்படி வரலன்னா கூட பராவயில்லை, இந்த  பானுவை லவ் பண்ணிட்டு போறேன்” என்றான்..

“உங்க பல்லவி மாதிரி நான் பேசுறேன்னா”என்றாள்..

“இல்லை” என்றவன். “இரண்டு பேருக்கும் சாரி. நீ பல்லவியா இருக்கும்  போது வேற மாதிரி பேசுவா.. இப்போ இந்த பானுவா  பேசுறப்போ  இரண்டு பிள்ளைகளுக்கு அம்மா மாதிரி ரொம்ப மெச்சுடா  பேசுற, எனக்கு  என்  பல்லவியை விட, இந்த பானுவை தான் ரொம்ப பிடிச்சுருக்கு” என்றான்.

“பொய் சொல்லதீங்க, பல்லவிக்கு தெரிஞ்சா கோபப்பட போறாங்க”  என்று சிரிக்க..

“என்  பல்லவி கிட்டே நான் சொல்லுவேன். இந்த பானுவை எனக்கு பிடிக்கும் முன்னு” என்று சொல்லி பானுவின் நெத்தில முத்தமிட்டு அணைத்து கொண்டான்..

“அப்பா,!அம்மா!” என்று சிவாக்குட்டியும்  ஆஷிக்கும் கதவை திறந்து கொண்டு  ஓடி வர. விக்ரம் பானுவிடமிருந்து விலகிகொண்டான்..

ஆஷிக் பானுவிடம் சென்று “ஆபிமா, ஆபிமா  என்று பானு கழுத்தோடு  சேர்த்து அணைத்து கொள்ள.. சிவாக்குட்டி ஆபிதாவை பார்த்து சிரித்தவள். விக்ரமனின் மேல் தாவிக்கொண்டவள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!