Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 18 1

꧁☆☬  லயம் – 18 ☬☆꧂

மெல்லிய பாட்டொலி காதுகளில் கேட்க சற்றே கண் திறந்து பார்த்தான். பக்கத்தில் பைங்கிளி இல்லை. கண்கள் அவளை தேட பாத்ரூமில் இருந்து சத்தம் வந்தது. நேரத்தை பார்க்க ஐந்தை காட்டியது. ” மிஞ்சி போனா ரெண்டு மணி நேரம் தூங்கியிருப்போம். அதுக்குள்ள எந்திரிச்சி குளிக்க போயிட்டாளே…,” பெருமிதமாய் மனைவியை நினைக்க அணங்கவள் வெளி வந்தாள் தலையில் துண்டோடு, அவனை துண்டாடும் நிலையோடும்.



Advertisement

பனியில் குளித்த ரோஜாவை போல பட்டொளி வீச, சிறு நீர்  திவலைகள் நெற்றியில் இருந்து வழிந்து, அவள் மூக்கை கடந்து இதழ்தனை அடைய தன்னிலும் இன்று அது முந்தி கொண்டதே என சட்டென ஒரு பொறாமை உணர்வு மனதில் உண்டானது. சேலையில் பெண்கள் அழகென்றால், இடை மூடாமல், அரைகுறையாக சொருகி கொண்டு, வேகமாய் வெளியே வந்தவளை பார்த்ததும் நேற்றைய தாபத்தின் மீதம் கண்ணில் கனன்றது.

துண்டை உதறி துவட்டி கொண்டிருந்தவள், அவனை ஒரு முறை திரும்பி பார்த்தாள். கள்ளன் கண்ணை மூடி உறங்குவதை போல காட்சி தெரிய , செவ்விதழில் அங்கோர் சிரிப்பு எட்டி பார்த்தது. தனக்கானவன், தன்னை நேசிக்கும் அழகன், சிறு பிள்ளை முகமாய்  சிருங்காரம் களைந்த கண்ணனாய், களைப்பு முகத்தில் தெரிந்தாலும், களிப்பும் சேர்ந்தே தெரிய, நேற்றைய நிகழ்வை எண்ணி ஒரு வெட்க முகில், இதழில் தழுவ, பெண்மையில் வெம்மை பூசியது.

Advertisement

Advertisement

பொட்டோடு, குங்குமமும் நெற்றியை அலங்கரிக்க, கொண்டவன் எழுமுன் தன்னை சீர்த்திருத்தி கொண்டு, பூஜை அறை நோக்கி நகர்ந்தாள். வாடிக்கையாய் விளக்கேற்றி கும்பிடும் பழக்கம் ஆதலால், அவள் கைகளும் தன்னை போல அனைத்தையும் சுத்தம் செய்ய ஆரம்பித்தது. இதழ்களோ என்றும் போல பாடலை பாட

“கனிந்த உன் வேணுகானம்

Advertisement

காற்றில் வருகுதே கனிந்த உன்

வேணுகானம் காற்றில் வருகுதே

கண்கள் சொருகி ஒருவிதமாய்

வருகுதே கண்கள் சொருகி

ஒருவிதமாய் வருகுதே…,”

காற்றில் அலைந்த பாடல் ஓசைகள் காவியனின் காதினில் பட்டு, அமைதியாய் அவன் மனம் ரசிக்க தொடங்கியது. பாடலோடு ஆரம்பிக்கும் அவன் காலை பொழுதுகள், அன்றோ மனைவியின் கானத்தோடு தொடங்கியது. உருகி உருகி கரைந்த அவள் பாடலில் இவனோ உறக்கம் தொலைத்து, உருகாமல் கரைந்தான்.

அவளுக்கும்  பாடலை ரசிக்க பிடிக்கும் என்று தான் அறிவான். ஆனால் இத்தனை அழகாய் பாடுவாள் என்பதை அவன் அறியான். ” வாட் எ பிளேசன்ட் மார்னிங்., லயா செல்லம்.,” அவளில் கரைந்தவன் குளித்து முடித்து சட்டென கிளம்பி அவள் முன் சென்று நின்றாள். கண்கள் மூடி பாடலில் தன்னை தொலைத்தவளோ கண் திறந்து பார்க்க, புன்னகை அரசன் இம்சையாய் நின்றிருந்தான்.

சட்டென நாணம் தலை தூக்க, கண்கள் நிலம் நோக்க, மனமோ அவனை நோக்கியது. அதற்குள் வந்துவிட்டானே., சன்ன குரலில் தான் பாடினேன்., உறக்கம் கொள்ளாது ஓடி வந்து விட்டானோ என மனம் பதற அவனை பார்க்க, குறு முகில் சிரிப்பில் கொள்ளை கொண்டான்.

” குட் மார்னிங், லயா !!!!, ரொம்பா அழகா பாடுற .., கொஞ்சம் சவுண்டா பாடுனா இன்னும் ரசிக்கலாம். ” அவன் பாராட்டுதல் மனதை வசம் செய்ய,

” குட் மார்னிங், உங்களை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு தான் மெதுவா பாடுனேன்., அதுக்கே எந்திரிச்சி வந்துட்டிங்க., “

” நீ மூச்சு விட்டா கூட எனக்கு கேட்கும்.., பக்கத்துல இல்லைனா தேட மாட்டேனா., எப்போவோ எந்திரிச்சிட்டேன்., “

அவன் முகத்தை கூட நிமிர்ந்து பார்க்காமல் ” கீழே போலாமா., ” மெதுவே உரைக்க.

” இப்போ மணி என்ன தெரியுமா., நைட் நம்ம வந்ததே பன்னெண்டு மணிக்கு தான். எல்லாரும் ரெஸ்ட் எடுத்துட்டு இருப்பாங்க., “

” டீ போடவா .., ” கிச்சன் சென்றவள் பார்வையில் கெட்டில் மட்டும் தெரிந்தது. ” காலையிலே க்ரீன் டி தானே குடிப்பான்.., ” என மற்றவற்றை  தேட, அவள் தேடியதோடு தேடுபவனும் சேர்ந்தே பின் வந்து நின்றான். எடுத்து தருகிறேன் பேர்வழி என்று இடை நடுவே கைவிட்டு செல்ப்பில் உள்ளதே எட்டி எடுத்து தந்தான். டீசர்ட் போட்டு இருந்ததால் அவன் கரங்களின் ரோம கற்றைகள் அவள் இடையை உரசி செல்ல கூச்சம் பிடுங்கி திணறடித்தது. அவளை உரசியபடி நின்றிருந்தவன் அனல் மூச்சில் தேகம் எங்கும் சிலிர்க்கும் உணர்வு. அவள் வடிகட்டாமல் டீயை போட, அவனோ அவளை வடிகட்டி கொண்டிந்தான் தன் பார்வையாலே.

” மாறா!!! …, பிளீஸ் ” தவிப்பாய் கேட்கும் அவள் குரலில் சிரிப்பை அடக்கியவனோ,

” நீ மட்டும் நைட் புல்லா தூங்காம என்னை பார்த்துட்டே இருந்தே, நான் எதுவும் சொன்னேனா., அமைதியா தானே இருந்தேன். என் கண்ணு மேல மட்டும் குறியா இருந்ததே உன் சைட் எல்லாம்., ரொம்ப பிடிக்குமா..,”

” ஹ்ம்ம்., ” நாணத்துடன் தலையை ஆட்ட.,

” நான் உன்னை பார்த்ததா ஞாபகம் இல்லை. எப்போவாவது  மீட் பண்ணிருக்கோமா., “

” நிறைய தடவை உங்களை பார்த்திருக்கேன்., பட் நீங்க கண்டுக்கவே மாட்டிங்க.., ராஜா அண்ணா கூட சிரிச்சு பேசிட்டு சுத்துவிங்க., “

” அப்பவும் மிஸ் பண்ணிட்டேனா ..,நான் நிஜமாவே முட்டாள் தான்ல  “

” என் மாறா ரொம்பஆஆ .. நல்ல பையன்” கண் சிமிட்டி சிரித்தவள் ” ஆனால் அது தான் உங்கட்ட எனக்கு ரொம்ப பிடிச்சது. தப்பா ஒரு பார்வை கூட இருக்காது.

உங்களுக்கு தெரியுமா.,? நான் ஏஜ் அட்டன் பண்ணப்போ நீங்க தான் மாலை எடுத்து மாமா கையில் கொடுத்தீங்க.., அண்ணன் கூட சிரிச்சி பேசிட்டே மாலையோடு நின்ன முகம், சிரிக்கிற உங்க கண்ணு எனக்கு இன்னும் நல்லா ஞாபகம் இருக்கு., அவ்ளோ கியூட்டா ஒரு சிரிப்பு., அப்போ உங்க கண்ணும் சேர்ந்தே சிரிச்சது., இந்த அண்ணா கண்ணு அழகா இருக்குனு சொல்லி எங்க அத்தைகிட்ட கூட சொன்னேன்., “

“எதே நான் உனக்கு அண்ணனா? “

” செவென்த் படிக்கிற பொண்ணுக்கு பார்க்குறவங்களை எல்லாம், அண்ணனை மாறி தான் நினைக்க தோணும். அப்போ தெரியாம சொல்லிட்டேன்., அப்புறம் அத்தை தான் அவரு உனக்கு அண்ணன் இல்லை. மாமா முறைனு சொன்னாங்க., எப்போ உங்களை பார்த்தாலும் உங்க கண்ணு மட்டும் தான் எனக்கு தெரியும்., கொஞ்ச வருசமா நானும் அதை மிஸ் பண்ணேன்., நேத்து தான் அந்த கண்ணுல ரொம்ப வருசத்துக்கு அப்புறம் அதே சிரிப்பை பார்த்தேன்., ரசிச்சிட்டு இருந்ததுல தூக்கம் வரவே இல்லை. எவ்ளோ நேரம் தான் தூங்காம பார்த்துட்டே இருக்கனு எந்திரிச்சி வந்தா பின்னாடியே நீங்களும் வரீங்க., “

” என்னம்மா பண்ண., நமக்கு பிடிச்ச பொண்ணு எவ்ளோ நேரமா, பார்த்து ரசிச்சுட்டு இருக்குனு மனசு புல்லா சந்தோசம்., எங்க என்னை பார்த்தா நெர்வஸ் ஆகி, திரும்பி படுத்துருவியோன்னு பயம்., ஒன்னும் பண்ணாம நல்லவனா இருக்குறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா., உனக்காக இருந்தேன்..,”

அவன் பேச்சில் எதுவோ ஒன்று அவள் மனதில் நெகிழ்ந்தது. காமம் மட்டுமே தன்னில் தேடாது, காதலை தேடும் அவன் அன்புள்ளம் அவளுக்கும்  தெரிந்தது, புரிந்தது. லயாவின் மாறனை இன்னும் இன்னுமே பிடித்தது.

” மேடம் அதுக்கு தான் என்னை பார்க்காமா கூட நிச்சயம் வரை வந்திங்களா..,”

” அதும் ஒரு காரணம் தான். பட் மெயின் ரீசன் அத்தை தான். என்கிட்டே அவங்க கேட்ட முதல் கேள்வியே என் பையனுக்கு பாட்டுனா உயிர்., நீ அவன் உயிரா இருப்ப, என் கூடவே வந்துருறியான்னு கேட்டாங்க, நானும் வந்திட்டேன். ” கண் சிமிட்டி ஆழ்ந்த வார்த்தையில் அவன் வசம் சொன்னவள், இன்னுமே  ஆழ்ந்து அவனுள் சென்றுவிட்டாள். கண்களில் அங்கு மலர்ந்து சிரிக்கும் சிவந்த ரோஜாக்கள் பட, விரிந்த இதழ்களை கண்டதும் இதழிலும் விரிந்த புன்னகை. ஒன்றை கிள்ளி அவள் கரத்தில் கொடுத்தவனோ

” இங்கே இருக்குற ரோஸ் எல்லாம் இனி வேஸ்ட் ஆகாது. டெய்லி பார்த்து பார்த்து தண்ணி விடுவேன்.., அழகா இருக்கும்., வைக்க யாரும் இல்லையே, அம்மா வைக்க மாட்டாங்க.., மால்ஸ் வந்தா வைப்பா. இப்போ பசங்க எடுத்து எறிஞ்சிறாங்கனு வைக்கவே மாட்டா..இனி நல்லா யூஸ் ஆகும் ” அவன் வார்த்தையில் மறைந்துள்ள  பொருளை, உணர்ந்ததும் நாணத்தில் ரோஜாவை விட இவள் இன்னும் சிவந்தாள்.

டீயை குடித்தபின் மாடியேறி சென்று இவர்கள் தங்களுக்குள் வளவளத்து கொண்டு சிரித்து பேசி கொண்டிருக்க பெற்றவர் பார்த்து பூரிப்பில் ஆழ்ந்தனர். அவன் சந்தோசம் அவனோடு சேர்ந்து விட்டது  என்றதில் வாழ்நாள் இன்பம் அனைத்தும் ஒருங்கே கைசேர்ந்தது போல உவகை கொண்டனர்.

” மா., மாமா.., ” கத்தல் சத்தம் காதை கிழித்தது. எழுந்ததும் வெளி வர சோபாவில் அமர்ந்து பேசி கொண்டிருந்தவன் கண்ணில் பட ஓட்டம் எடுத்தனர் அவனை நோக்கி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!