Skip to content
Post Views: 1,718
” பாப்பா எங்கே., ” அவர்கள் கேள்வியில் அவனுக்கே சிரிப்போடு வெட்கம் வந்தது. லயாவோ வெட்கத்தை மறைக்க, சமையலை கவனிக்க என ஓடி விட்டாள்.
” ரெடிமேடா செய்யிற சப்பாத்தியை கேக்குற மாதிரி டக்குனு கேட்டா, அடுப்புல வச்சு சூடு பண்ணியாடா கொடுக்க முடியும்., உங்க மாமன் என்ன பண்ணுவான்., இருங்குடா கொஞ்ச நாள் கழிச்சு வரும்.., “முரளியின் கிண்டலில் அனைவருக்கும் சிரிப்பு வந்தது.
Advertisement
“ப்ப்பாஆ.., உனக்கு தெரியாது. மாமா தரும்., ” பொடுசுகள் விடாமல் தங்கள் கேள்வியை கேக்க.,
” நேத்து நைட்ல இருந்து படுத்துறீங்கடா.,முடியல என்னால,.. ” மாலாவிற்கும் எப்படி புரிய வைப்பதென தெரியவில்லை.
Advertisement
Advertisement
” எங்க கல்யாணத்துல இவனுங்க காணோமாம், எப்படி எங்களை விட்டுட்டு நீங்க மேரேஜ் பண்ணுவிங்கனு சண்டை போடுவாங்க, என் அறிவு தங்கங்கள்…, இவனுங்கள பெத்துட்டா நான் கட்டிக்க முடியும்..,” சிரிப்புடன் சொல்லியபடியே ” உன்கிட்ட இப்போ தான் ஆரம்பிச்சிருக்காங்க ., இனி பாரு.., அனுபவி, ராஜா., அனுபவி.., ” இன்னுமே நக்கல் செய்ய.
“சேம்ப் உன் கூட விளையாட பாப்பாக்கு தெரியனும்ல. கையை பிடிக்க தெரியனும்ல, ஸ்கூல் போயிருக்கா., நெஸ்ட் இயர் லீவுல வருவா.., அப்போ விளையாடலாம்., இப்போ நம்ம போய் விளையாடுவோம்.., ” எதோ பேசி சமாதானம் செய்து அவர்கட்கு விளையாட்டு காட்டி கொண்டிருக்க.
Advertisement
குட்டி குட்டி மினி தோசை சுட்டும், கூம்பு வடிவ, ஓவல் சேப், ஸ்டார், கேட் என விதவிதமாக தோசையை சுட்டு, தட்டில் வைத்து கொண்டு சாப்பிட வைத்து, பேசி லயாவும் அவர்கட்கு சமமாய் விளையாட, அவர்களின் பாப்பா மறந்து போய் விட்டது. மாமனும் அத்தையும் மாயம் செய்து மறக்க வைத்தனர். அதன் பின் விருந்து, கோயில் என நாட்கள் காற்றில் கரைய, இவர்களும் கரைந்தே கரை சேராமல், காதல் அலையோடு உறவாடி கொண்டிருந்தனர்.
****
கதையின் ராஜாவை பார்த்து விட்டோம். பெயரின் ராஜாவை இனி பார்ப்போமா.? {ரோஜா, ராஜா தான் நாயகர்களா என உங்கள் மனம் கேட்கும் வரை எழுதிவிட்டேன்., சோ இப்போ குட்டியா சொல்லி அவங்களை பத்தி முடிச்சுடுறேன். }
லயா மாறன் திருமணத்திற்கு என ராஜா ஓட்டத்தை தொடங்க, இவர்களின் திருமணத்திற்கு என அவன் தொடர, நேரமும், காலமும், களம் மாறி மாறி பறந்து சென்றது. ஒரே வீட்டில் அடுத்தடுத்த திருமணம் என்றால் சும்மாவா பொழுது கழியும்.,
“எங்கள் வீட்டில்
எல்லா நாளும் கார்த்திகை…,
எங்கள் நிலவில்
என்றும் இல்லை தேய்பிறை…,
கிளி கூட்டம்
போல் எங்கள் கூட்டமே…,
இது ஆனந்த பூந்தோட்டம்
அன்பின் ஆலயம்…, “
நித்தமும் ஒரு கொண்டாட்டம்,, குழந்தைகளோடு திண்டாட்டம், பணியோடு தேனோட்டம், காதலர்களோடு வண்டாட்டம் என நொடி பொழுதில் இரு மாதமும் கழிந்து விட்டது.
குறித்த நாளில் ராஜா, ரோஜாவின் திருமணமும் நல்லபடியாய் நடந்தது. கரும் பச்சை நிற சேலை, ஆரி ஒர்க் செய்யப்பட்ட சிவப்பு சேலையில் அவன் குட்டச்சி, அவனோடு கூட்டாச்சி நடத்த கரம் கோர்த்து விட்டாள். ஒற்றை மகனின் திருமணம் என ஊரையே அழைத்து இருந்தார் நடேசன்., ரோஜாவும் முதல் பெண்., ஒற்றை பெண் என அவளின் தந்தையும் நிறைவாக சீர் செய்து, மணமேடையில் நிறைவாய் நின்றிருந்தார்.
பெண் கேட்டு வருகையில் நடேசன் கூறிய ” எனக்கு பணக்காரி தேவையில்லை., குணத்துல கோடிஸ்வரியாய் இருக்கிற உங்க பொண்ணை மட்டும் கொடுங்க.., அதுவே போதும்.., வேறொன்றும் தேவையில்லை ” என கூறியிருக்க மனதை பார்க்கும் மனிதர் வீட்டில் தன் பெண் நிறைவாய் வாழ்வாளென எந்த சுணக்கமும் காட்டாது திருமண வேலையை அன்றே தொடக்கி விட்டார் முழு மூச்சில்.
பெண்ணும் கண் எதிரே இருக்க போகிறாள், அழகான, நிறைவான, படித்த மாப்பிள்ளை, அவரின் சொந்தங்கள் கூட சத்தம் காட்டாது சம்மதம் சொல்லிருக்க, மகளின் மனதை, மணம் செய்பவன் மனதை மட்டுமே அவரும் பார்த்தார். தோழியே ஒற்றை நாத்தி.., அவளும் தன் விட்டு பெண் போல ஒட்டி உறவாடுபவள்., பின் என்ன யோசனை., இதோ சீரும் சிறப்புமாய் ரோஜா மாமனார் வீட்டில் தன் வலது கால் எடுத்து வைத்து விட்டாள்.
மஹாராணியின் சேவகன் ஆனான் பட்டத்து ராஜா. எல்லையில்லா அன்பில், இல்லையென சொல்லா வண்ணம் அனைத்தும் கொடுத்தான், அணைந்தும் கொடுத்தான்.
இதழ் வழி காதல் சொல்லாதவர்கள் இதழ் வழியே காதலை உணர்த்தினர். வாய் ஓயாமல் பேசுபவள் ஊமையானாள் அவன் வழி சென்று. கலந்து, களைந்து, கலைத்து, களைத்து, கனிந்து, தனிந்து, தணிந்து, தவித்து, துடித்து, சிரித்து, சிணுங்கி, சிவந்து, துவண்டு, மொழியற்று பாடம் படித்து கன்னியவள் கன்னி கழிந்தாள்.
ராஜாவின் திருமணம் முடிந்து, ஒரு வாரம் கடந்த நிலையில் வேலை பளுவில் துவண்டு சரிந்தாள் லயா. தங்கையாய் அண்ணன் திருமணம். ராஜா இல்லாமல் அலுவல் பணியும் சேர்ந்து கொள்ள உறங்க கூட நேரம் கிடைத்திடவில்லை. எப்போதும் பின் தூங்கி, முன் எழுவது போல அந்த ஞாயிறும் எழுந்தாள் இல்லை. அவள் பாட்டின் ஓசையின்றி பேரமைதி வீட்டை சூழ, இவனுக்கோ பரிதவித்தது. சோர்வில் சோர்ந்து போய் பிறை நிலவாய் சுருண்டு போய் கிடந்தாள் அன்று.
உறக்கம் கலைந்தாலும் கலையவே இல்லை. இவனோ சோம்பி கீழே தாயிடம் தஞ்சமடைந்தான். ” ம்ம்மா… லயா தூங்கி தூங்கி வழியிறா, என்னனு பாரு. “
” டயர்டா இருப்பா. விடேன்டா… “
” அவ டெய்லி காலையில் விளக்கேத்தி பாடுவா. இன்னைக்கு கேக்கமா எனக்கு ரொம்ப டல்லா இருக்கு… “
” டெய்லி சாமி கும்பிட்டாளா?… ” ஏதோ ஒன்று புரிவது போல தோன்றியது. நேரம் கடத்தாமல் மேலே ஓடினார். அவர் சந்தேகம் உறுதியானது. அவர்களின் வாரிசு அவள் பொன் மடியில் தவழ வயிற்றில் ஜனித்து இருந்தது. கண்களில் கண்ணீர் நெகிழ்வாய் அனைவருக்கும். ஒரு நாள் அவள் பாடலை கேட்காமல் வருத்தப்பட்டவன் சிறு குழந்தையின் சிணுங்கும் சத்தம் ஜென்மம் முழுதும் கேட்கும் ஆவலில் தன்னையே மறந்தான். முத்தத்தால் மொத்தமாய் அவளை குளிப்பாட்டி திக்கு முக்காட வைத்தான்.
ஹனிமூன் சென்ற மாமனுக்கோ அங்கேயே தலை கால் புரியாத சந்தோசம், தன் நட்பின் அடுத்த வாரிசு, தங்கையின் செல்ல உறவு என தன் மகிழ்ச்சியை இல்லாளோடு இன்னுமே கழித்தான். சுருண்டு படுக்கும் தங்கையின் நிலையை கண்டு வீட்டில் இருந்தே, அனைத்தையும் பார்த்து கொள்ள சொல்லி ஒய்வு கொடுக்க, அவளின் வாந்தி முடிய இவளுக்கு வாந்தி தொடங்கியது. பெரியவர்கள் மாறி மாறி இருவரையும் பார்த்து கொள்ள நேரங்கள் ஓடியது.
தனக்கென ஓருயிர் உலகில் ஜனிக்கும் போது அதன் வருகையின் சுமைகள் கூட சுகமாய் தெரியும்., சிறு சிறு கஷ்டங்கள் கூட சிகரமாய் மனதில் பதியும். குழந்தை வளர வளர அவளோடு சேர்ந்தும் அவனும் தந்தையாய் வளர்ந்தான். தாய்மை மட்டுமே காதல் தம்பதியை அப்பா அம்மா எனும் சிம்மாசனத்தில் பயத்தோடு ஏறி அமர செய்யும். சற்றே பயம் இருந்தாலும் மனம் அதை எண்ணியே பின்னாட்களில் சிரிக்கும்.
தாய்மை பூரிப்பில் இன்னுமே ஜொலித்தாள். மாறனோ ரசிகனாய் கொண்டாடி தீர்க்க அவன் ரசனையை ரசித்து ரசித்து, ருசித்து திகட்டி இப்போதெல்லாம் சமயலறை வாசலை கூட அவனை தொட விடுவதில்லை.
” ஏன் மச்சான்., உங்க அம்மா, அக்காவுக்கு மட்டும் விழுந்து விழுந்து வேலை பார்த்து கொடுத்த, என் தங்கச்சி மட்டும் தக்காளி தொக்கா? ஒரு வெங்காயம் தக்காளி கூட கட் பண்ணி தரமாட்டுற., போ மச்சான் , நீ ரொம்ப பண்ணுற., ” முரளி கோபித்து கொள்ள,
” நான் வரேன்னு சொன்னா அவ தான் உள்ளேயே விடமாட்டேங்குறா., நீங்க தான் பஞ்சாயத்து பண்ணி பைசல் பண்ணி கொடுங்க மாம்ஸ்., “
” ஏன்டா சுபி குட்டி தடா போட்ட .., “
” தக்காளி கட் பண்ணி தரேன்னு பாதியை என் வாயில ஜூஸ் பண்ணுறாரு., இவரை விட்டேன் நான் செத்தேன்.., ” மனதில் எண்ணியவளோ
” அது ஒண்ணுமில்ல அண்ணா., எனக்கு தனியா வேகமா சமைச்சு பழக்கம்., இவரு நடுவுல வந்தா டைம் எடுக்கும்., அதுவுமில்லாம நான் எங்க அண்ணன், அத்தைகிட்ட இவரு கண்ணுல கண்ணீர் வராம பத்திரமா பாத்துக்கிறேன்னு சத்தியம் பண்ணி இருக்கேன்., வெங்காயம் வெட்டி கூட என் புருஷன் கண்ணுல வரலாமா.., தப்பில்லையா.., சோ…, அவர்க்கு தடா…, ” இவனோ நமுட்டு சிரிப்பு சிரிக்க, கையில் இருந்த கரண்டியை தூக்கி காட்டி வந்தா அடி கொன்றுவேன் என அங்கிருந்தே சைகை செய்தாள்.
” நீயும் என்னமோ சொல்லுற…, நானும் நம்புறேன்.,” சப்தமாய் லயாவிடம் சொல்லிவிட்டு, இவனிடம் குரல் தாழ்த்தி,
” கையை காலை வச்சிட்டு சும்மா இருக்காம சேட்டை பண்ணா என்னைக்கும் நாட் அலோவ் தான் மச்சான். பாப்பா வந்தா பின்னே விட்ருவாங்க .., கவலைப்படாதே.., “
” சீனியர் சொல்லும் போது ஜூனியர் கேட்கிறதில் தப்பில்ல மாம்ஸ் .., ” அவரையே இவன் கிண்டல் செய்ய முரளிக்கும் சிரிப்பு வந்தது.
இதோ நாளை லயாவின் வளைகாப்பு. தமயந்தி விசேஷ வேலைகளை செய்ய, குழந்தைகள் முரளி வசம் ஒப்படைத்து விட்டு, மாலா தேவையான பொருட்களை பர்ச்சேஸ் செய்ய சென்றிருந்தாள். மதிய உணவிற்கு இப்போதெல்லாம் வீடு வந்து விடுகிறான் மாறன். சின்சியர் சிகாமணி பணியில் மட்டுமல்ல, கணவனாகவும் தான் வேலை செய்கிறான் இப்போது.
error: Content is protected !!