Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 5 1

꧁☆☬  லயம் – 5 ☬☆꧂

விடிகாலையில் விழித்தெழும் வழக்கம் ராஜாவிற்கு. ஐந்து மணிக்குள் டீயை குடித்து முடித்து விட்டு, சிறிது நேரம் பேப்பர், பெற்றோரோடு உரையாடல் என நேரம் கடத்தி கொண்டிருப்பான். ஆறு மணிக்கு ஜாகிங் செல்பவன் ஒன்பது மணிக்குள் ரெடியாகி கம்பனிக்கு கிளம்பி சென்று விடுவான். இரவில் தான் அடுத்து அவன் தரிசனம் கிடைக்கும். அதனால் காலை நேரம் தான் வீட்டின் முக்கிய தகவல்கள் அவனுக்கு பரிமாறப்படும். தேவையானவை பேசப்படும். பின் குடும்பத்தை கவனிக்க அவனுக்கு, அவன் அலுவலக சூழலில் நேரமே அமைவதில்லை.



Advertisement

வாடிக்கையாய்  ஹாலில் அமர்ந்து கையில் டீ கோப்பை வைத்து கொண்டு பேப்பர் பார்த்து கொண்டிருந்த மகனிடம் ” ராஜா, ஊருக்கு போகனும். உன் ரூம் பீரோ மேல இருக்கிற பெரிய ட்ராலிய எடுத்து கொடேன்.”

Advertisement

“இப்போவே வேணுமா, அப்புறம் எடுத்து தரவா? எப்போ போக போறமா?

Advertisement

” வர்ற சண்டே  ஊருக்கு போக போறேன். பத்து நாள் அங்க தங்கிட்டு வர போறேன். எக்ஸ்ட்ரா லக்கேஜ் வேற நிறைய வருது. “

Advertisement

“அத்தை வீட்டு கல்யாணம் தானே. அவ்ளோ நாள் போய் இருக்க போறியா. “

“ஆமாம், நாங்க  மட்டும் இங்க ஒத்தையா கிடந்து அல்லாடனும். அங்க ஊருல ஆளும் பேருமா இருந்து பொழுது போகும். உங்க சித்தியும் வந்தே ஆகனும்னு சொல்றா. “

“ ம்ம்ம்ம். சரிம்மா…”

கையில் இருந்த போனை கீழே, சோபாவிலேயே வைத்து விட்டு அறைக்கு சென்றான். 7அடி உயர பீரோ மேலே இருந்ததை எட்டி எடுத்தான். எத்தனை வருடங்கள் அது தூசியை சுமந்து கொண்டு அழுக்கை காத்த, பூதமாய் இருந்ததோ தெரியவில்லை. சட்டென இழுத்ததில் பெட்டியோடு சேர்ந்து தூசியும் அவன் கையோடு வர, அதன் இலவச இணைப்பாய் என்றோ அவன் கோபத்தில் தூக்கி போட்ட பந்தும் அவன் தலையில் பொட்டென தட்டி தொப்பென்று கீழே உருண்டு ஓடியது.

பந்தை காத்த பூதம் கையில் இருந்திட அதனை அவன் சட்டை செய்யவில்லை. ஏதோ மேலிருந்து விழுந்திருக்கும் என எண்ணி பெட்டியை கர்மசிரத்தையாய் கிளின் செய்து பெட்டின் மீது வைத்தான். வாஷ் ரூம் சென்று கைகளை சுத்தப்படுத்தி வந்தவன் கண்களில் அப்போது தான் பந்து தென்பட்டது. நாளே எட்டில் வேகமாய் சென்று அதை எடுத்தவன் இதழ்களோ ” மச்சி….. ” என புன்னகையால் மலர்ந்து விரிய, அவன் நினைவுகளோ பறந்தன.

” அழுவாதே! நான் இருக்கேன். வா! ” தன் முன் நீட்டிய மற்றொரு பிஞ்சு கரங்களை உற்று பார்த்தது இரு அழுகை விழிகள். முதல் நாள் பள்ளிக்கு வந்து, விட்டு விட்டு பிரியும் தாயை எண்ணி கத்தி கத்தி அழுது கொண்டிருக்க, கண்ணீர் தான் ஆறாய் ஓடியது குட்டி ராஜாவிற்கு. வீட்டின் ஒற்றை பிள்ளையென கையில் வளர்த்து கொஞ்சி திரிந்த பெற்றோர் எங்கோ ஒரு இடத்தில் தனித்து விட்டு செல்ல மனதின் பயம் கண்ணீரை கொண்டு வந்திருந்தது. ஆசிரியர் கூறிய அன்பு மொழிகள் எதுவும் காதில் ஏற வில்லை. இவன் அழுகையை  பார்த்து மற்றோரும் அழ, ஒதுங்கி இருந்த அழுகை மீண்டும் இரு கரம்  கொண்டு அவனை அணைத்தது.

“ நம்ம பால் வச்சி விளையாடுவோம் வா…” தன் பிஞ்சு விரல் கொண்டு துடைத்தபடி அவனை நோக்கி நட்பு கரம் நீட்டிய இளாவை இறுக பிடித்து கொண்டவன் மனம் சட்டென அவனை தன் உறவாய் எண்ணிவிட்டது.

அன்று பிணைந்த கரங்களை  பள்ளி படிப்பை முடித்து வெளி வரும் வரை விடவே இல்லை.

“தம்பி ….. ராஜா…. போன் அடிச்சிட்டு இருக்கு பாரு. ரூம்ல இன்னும் என்னடா பண்ற ” போன் வந்தாலே பறந்து வந்து எடுக்கும் மகன் பதிலே கூறாமல் மௌனம் சாதிக்க, அவரே மெதுவே நடந்து ரூமில் வந்தும், ராஜா அமைதியாய் இருக்க

” என்னப்பா… கையில பால் வச்சிட்டு என்ன யோசனை உனக்கு? ” அவனின் தோளை தட்டிய பின்பே சுயம் பெற்றான்.

” ம்மா.. இது மச்சியோட பால். “

” சரிடா, அதுல தூசி இருக்கு பாரு, போய் கிளீன் பண்ணு “

” ம்ம்ம் அவனையும் சேர்த்து இதை வச்சே கிளீன் பண்றேன்.  ”  முடிவெடுத்து ” செல்லம், உன்னை எப்படி நான் மறந்தேன்… ” செல்லமாய் பந்திற்கு அழுந்த முத்தம் பதித்தவன் அந்த கணமே அதை ஒரு கவரில் போட்டு கொண்டு இளாவின் வீட்டுக்கு பறந்தான்.

ஜாகிங் செல்வதற்காக கிளம்பி வந்தவர்கள் முன் சென்று ராஜா நிற்க, கேள்வியாய் மாணிக்கம் அவன் முகத்தை பார்த்தவுடன் ” குட் மார்னிங் மாமா! இன்னைக்கு நீங்க மட்டும் போங்க. இவனை நான் இழுத்துட்டு போக போறேன்.”

“ஏன்டா இந்த நேரம் மட்டும் தான் என் புள்ள என்கூட இருக்கான். இதுக்கும் வேட்டு வைக்க வந்துட்டியா நீ, ஆமா இன்னொருத்தன் எங்க, அவனை காணோம்? ” மகனது சந்தோசம் அவன் நட்புகளிடம் மட்டுமே என்பதை அறியாதவரா அவர். இளா மீண்டும் மாறினால் சரி என்ற மனநிலை இப்போதெல்லாம் அதிகம் அவர்க்கு தோன்றியது. முன் போல் முறுக்கி கொள்ளாமல் இலகுவாய் அவர் பேச முற்பட்டார்.

” அவன் வேற ஊருல இருக்கான் மாமா. லீவ்ல வர்றேன்னு சொல்லிருக்கான். இப்போ நாங்க வுடு ஜூட்…” இளாவின் கையை இறுக பற்ற வர அவனோ ராஜாவின் கையை தட்டி விட்டான் வேறு ஒன்றும் கூறாமல்.

“ டேய், உன்கிட்ட ஒரு ஹெல்பா தான் கேக்குறேன். அதுவும் எனக்கில்லை, குட்டி பசங்களுக்கு. பிரண்டா தான் நினைக்கல. அட்லீஸ்ட் இதையாவது பண்ணு வாடா… ” கிட்டத்தட்ட இழுத்து கொண்டு தான் ஓடினான் எதிர்புறம் சாலையில் இருந்த புட்பால் கிரௌண்ட்க்கு.

அவர்கள் எப்போதும் பிராக்டிஸ் செய்யும் அதே கிரௌண்ட்டில் விடலை பையன்கள் விளையாடி கொண்டிருக்க அவர்களை நோக்கி சென்றவன்.

” தம்பிகளா! நான் சொன்ன சேம்பியன் இவன் தான். என்ன டவுட் வேணா கேளுங்க. அண்ணாத்தே அடிச்சு சொல்லி கொடுப்பாரு. ”  இளாவை முன்னிறுத்தி ராஜா ஒதுங்கி கொண்டான்.

கற்று கொடுக்க வந்திருக்கும் ஆசானிடம் ஆர்வமாக அவர்கள் கேள்வியை கேட்டு கொண்டிருக்க, மறுப்பேதும் கூறாமல் இலகுவாய் பதில் சொல்லும் இளாவை நோக்கி கண் அடித்த படி சென்றவனோ,

” டேய் மேட்ச் விளையாடி காட்டுனா தான் இன்னும் புரியும். ஆடி காட்டுடா. ” கையோட கொண்டு சென்ற பந்தினை அவன் மீது தூக்கி போட லாவகமாய் அதை கேட்ச் பிடித்தவன் பார்வையால் அதை வருட, தான் கையொப்பம் இட்டு, ராஜாவிடம் கொடுத்த தன் பந்து என்பதை அறிந்ததும் மனதில் அவனே அறியாது ஒரு இளக்கம் உருவாகியது.

ஆடிய காலும், பாடிய வாயும் சும்மா இருக்குமா? தொடும் வரை தான் ஒதுக்கம். தொட்டு விட்டால் நினைவுகள் மனதோடு உறவாடி, மூளையின் மறந்த, மறக்க நினைத்த அழகிய நினைவுகளை தட்டி எழுப்பி நிகழ்வுகளை கண் முன்னே கொண்டு வர, இமைகளில் உவகை எட்டி பார்த்தது.

தன்னோடு உறவாடி, மகிழ்ச்சியை கொட்டி கொடுக்கும் காதலியை கையில் ஏந்தியவன் மனநிலையில் தான் அவனும் அக்கணம் நின்றிருந்தான்.

” அண்ணா !, ஆடுன்னா, சொல்லி கொடுண்ணா…” என அடுத்தடுத்து குரல்கள் செவியினை தாக்க, தடுப்பினை தாண்டி பாய துடிக்கும் அணை நீராய், காளையவன் கால்களில் பந்து விளையாடி தொடங்கியது அதிரடியாய். அவனின் ஆட்டத்தை ரசிக்க தொடங்கியவன் மனமோ கடந்த கால இனிமை தருணங்களை மீண்டும் அசைப்போட  தொடங்கியது.

தோளில் கரம் போட்டு சுற்றி திரியும் இளாவை யாருக்கும் விட்டு கொடுக்கவே மாட்டான். பேசு, பழகு, ஆனால் நண்பன் உரிமை எனக்கு மட்டும் தான் என்பது ராஜாவின் ராஜாங்கம். ” ஒன் சன், ஒன் மூன், ஒன் பிரண்ட்…, இளா மட்டும் தான் ” என்பது ராஜாவின் குணம்.

பார்க்கும் அனைவரும் தோழமை. பாரபட்சம் காட்டாமல் நட்பை இரு கரம் கொண்டு விரிக்கும் குணம் இளாவிற்கு. யாரிடமும் கோபம் கொள்ளாமல் சிரித்து பேசி விளையாடும் குணத்தால் பள்ளி படிப்பிலேயே நண்பர் படையோடு சுற்றி திரியும் இளா.

டீன் ஏஜ் பருவத்தின் அழகில் இருவரும் கை கோர்த்து, கடந்து செல்லும் பெண்களை எல்லாம் ரசனையாய் பார்ப்பர். அழகை மட்டுமே  வர்ணிக்க, ரசிக்க, அவர்கள் பேச்சில் விரசம் என்றும்  எட்டி பார்த்ததில்லை. இளாவோ, ராஜாவோ பெண்களை மதித்து நடப்பர்.

பெண் நண்பிகளும் இளாவிற்கு உண்டு. கண்களை தாண்டி கயமை இருக்காததால் படிப்பு பற்றி சந்தேகம் கேட்க, நட்பு பாராட்ட என உயர்கல்வி படிக்கும் போதே அவனோடு பெண்கள் இருப்பர்.  எதையும் மறைக்க மாட்டான், வீட்டிற்கும் கூட்டி செல்வான்.

விளையாட்டில் மட்டுமல்ல, படிப்பிலும் முதன்மை தான். பழகுவதற்கு இனிமையானவன், குறும்பு பேச்சில் ரசனையானவன் ஆகையால் நண்பர்கள் வட்டம் ஏராளம்.

நண்பர்கள் என்று எந்நேரமும் சுற்றி கொண்டிருக்கும் மகனை மாணிக்கம் அவ்வப்போது கண்டிப்பதும் உண்டு. எடுத்து செல்லும் சாப்பாட்டை கூட கொடுத்து விட்டு பட்டினி இருக்கும் மகனை திட்டுவதும் உண்டு.

அளவோடு இரு, அனைத்தையும் கொடுக்காதே என சொல்வதை கூட கேட்காமல், யார் என்ன கேட்டாலும், விரும்பினாலும் அள்ளி கொடுத்து விட்டு வந்து விடுவான். உதவி என்று கேட்டு விட்டால் நேரம் காலம் பார்க்காமல் வேறு ஓடி செல்வான்.

பையன் மேல் அளவு கடந்த பாசம் வைத்திருக்கும் தமயந்தியும்  இந்த வயதில் நட்பு பாராட்டாமல் என்ன செய்வான்,  நம்மட்ட  என்ன சொத்துக்கா பஞ்சம், இல்லாதவங்களுக்கு தானே கொடுக்கிறான் என மகனிற்கு தான் பரிந்து பேசுவார். பள்ளி படிப்பு வரை வேறு எந்த பிரச்சனையும் வரவில்லை. கல்லூரி பருவத்தில் தான் அதன் வடிவம் மாறுபட ஆரம்பித்தது.

மாறுபட்ட குணங்கள் இருந்த போதிலும் நட்பு என்னும் வானத்தில் சிறகில்லா பறவையாய் பறந்து மகிழ்ந்த இருவரும் கல்லூரியில் கால் வைக்கும் போது தான், இளா தாயை பின்பற்றி ஆடிட்டிங் சூஸ் செய்ய, ராஜா தந்தை தொழிலை ஏற்க டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிக்க வேண்டி இருந்ததால் பிரிய நேர்ந்தது.

பள்ளி நட்புகள் கூட அவனோடு தான் இங்கும் தொடர்ந்து வேறு பிரிவுகளில் படித்து கொண்டிருக்க, ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு கேங்கோடு சுற்றி கொண்டு இருப்பான். முதல் வருடம் முழுவதும் இணைந்தே சுற்றினர். வகுப்பில் பாடம் பயிலும் போது தான் பிரிந்திரிப்பர். பின் இரண்டாம் வருடத்தில் தான் சுகுமாரன் இடைஞ்சல் கொடுக்க ஆரம்பித்தான்.

சீனியர்! உரக்க கத்தியப்படி மூச்சு வாங்க ஓடி வந்தவன் ஒன்றும் சொல்லாமல் இளாவை இறுக்கி அணைத்தான். அவனின் புன்னகை முகமும், சந்தோசத்தை வெளிப்படுத்திய விதத்திலும் முகம் மலர்ந்தவன் ” லவ் சக்ஸஸ் ஆயிருச்சா ” என்க.

” யெஸ். அவ எனக்கு ஓகே சொல்லிட்டா. தேங்க்ஸ் சீனியர். உங்களால தான் எல்லாம். ” என்றான் மகிழ்வுடன்.

” என்னடா பண்ண ? “

” ஹ்ம்ம். சாருக்கு காதல் தோல்வியாம். ரெண்டு நாள் முன்னாடி நைட் ஷ்யாம் பார்க்குறதுகாக ஹாஸ்டல் போயிருந்தேன். அவன் ரூம் மேட் தான் இவன். சோகத்துல கையை அறுத்துட்டு கட்டில்ல கிடந்தான். ஹாஸ்பிடல் கூட்டி போய் காப்பாத்தினோம். ” என்றவன் தொடர்ந்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!