Skip to content
Post Views: 1,563
” நேத்து அந்த பொண்ணுகிட்ட பேசி இவன் லவ்வ பத்தி அவளுக்கு புரிய வைச்சேன். அதான் இன்னைக்கு துள்ளிட்டு ஓடி வர்றான். லவ் சொல்லி புரிய வைக்க முடியாதவன் எல்லாம் ஏன்டா லவ் பண்றீங்க. அவகிட்ட போய் பேசுனா முடிஞ்சி போச்சு. இதுக்கு சாகுறேன், வேகுறேன்னுட்டு.” இளா அதட்டல் போட்டாலும் அந்த கணத்தின் ரத்த கரங்கள் அவன் கண் முன் இன்னும் தோன்றியது.
உண்மை காதலை ஆதரிப்பான் தான் ஆயினும் தற்கொலை முயற்சி செய்யும் முட்டாள் தனத்திற்கு கண்டிப்பாய் அவனிடம் வசவு வாங்குவது உறுதி என்பது தெரிந்ததால் யாரும் நடுவில் வாயை திறக்கவில்லை.
Advertisement
“டேய் மச்சான்! “என்ற குரலில் திரும்பி பார்க்க கௌதம் அவன் சகாக்களோடு இவர்களை நோக்கி வந்து கொண்டிருந்தான்.
“என்னடா இவன் நம்மள தேடி வர்றான். நம்ம ரைட்ல போனா, இவன் லெப்ட்ல போவான். சம்பந்தமே இல்லாம சனியன் சடையில பூ வச்சுட்டு நம்மள தேடி வருது. ” இளாவை பார்த்து சுகுமாரன் சொல்ல
Advertisement
Advertisement
“டேய் மெதுவா பேசுடா. அவனுக்கு கேக்க போகுது.” இளா அவனை அதட்ட
“கேட்டுட்டா மட்டும், அவனுக்கு முடியும் இல்லை. மூளையும் இல்லை. விடுறா விட்றா.”
Advertisement
” மச்சான், மெக் டிபார்ட்மென்ட் பையன் நம்ம பொண்ணு மேல கையை வச்சிட்டான். டெய்லி வல்கரா வேற பேசுறானாம். நாங்க சொன்னா கேக்க மாட்றான். உன் பாஷையில் பேசி புரிய வை. அவன் கேம்பஸ்ல ரெண்டு அடி போட்டா தான் மத்தவங்க ஒழுங்கா இருப்பாங்க. வாடா ” கௌதம் நட்பாக பழகா விட்டாலும் தன் பெண்களிடம் முறை தவறி நடக்க முற்பட்டதால் அவனோடு சென்று அடித்து, பிரின்சிபால் முன் சென்று திட்டு வாங்கிய கதையும் அடிக்கடி நடக்கும்.
அன்று விளையாட்டு மைதானம் களை கட்டி கொண்டிருந்தது. கால் பந்தாட்டம் அனல் பறக்க நடக்க, ஒருவனை வீழ்த்த ஒட்டு மொத்த எதிரணியும் முயற்சி மேற்கொள்ள, யாராலும் அவனை அடக்கவும் முடியவில்லை. அவனிடம் இருந்து அதை பறிக்கவும் முடியவில்லை. ஓடி ஓடி களைத்து, மூச்சு வாங்க, அவன் முன்னும் பின்னும் அனைவரும் ஓட, அவனோ ஜாலியாக சுற்றி சுற்றி விளையாட்டு காட்டி கொண்டிருந்தான்.
உச்ச கட்ட பரபரப்பிலும் முகத்தின் முன்புறுவல் மாறாது, அலை பாயும் கேசம் காற்றில் ஆட, அங்குமிங்கும் அவன் கண்கள் போகும் திசை வழியே கன்னியர் பலரின் விழிகளும் அவனையே சுற்றி வந்தது. அவன் அடர்ந்த நீண்ட இமை முடிகள் அழகா, காந்தம் போல கவரும் விழி அழகா என அவ்வப்போது அனைவருக்கும் சந்தேகம் கூட எழும்.
ஆனால் இருப்பது வயது காந்த கண்ணழகன் பார்வையோ, பாவையை காணாது, பாலையே காண்பது தான் இங்கு பருவ சிட்டுக்களின் மனக்குறையே. அவன் அணி வெற்றி வாகை சூடியதாக அறிவிக்கப்பட, வெற்றி கோப்பையை கையில் வாங்கியவுடன் அவன் நண்பர்கள் அனைவரும் எழுப்பிய ஓசையால் அரங்கமே அதிர்ந்தது. கல்லூரி மாணவர்கள் சத்தம் காதை செவிடாக்க, அதற்கு வேட்டு வைக்க ஒருவன் ஓடி வந்தான். நண்பர்களின் விஜய பந்தாட்டத்தில் அவனை தான் அனைவரும் தூக்கி போட்டு விளையாட, சந்தோஷத்தில் திக்கு முக்காடி லாவகமாய் அவர்கள் கையிலிருந்து கீழே குதித்தான்.
ஆறடி உயரத்தில், பரந்து விரிந்த தோள்கள், நீண்ட கைகள், எதையும் ரசனையாய் நோக்கும் விழிகள், அடிக்கடி சிகை கோதும் அவன் மேனரிசம், எது அழகென்று தனித்து கூறவோ, பிரித்து உணரவோ முடியாது. அவனையே கூறி கொண்டிருந்தால் கதை தொடர முடியாது. இனி கதையோடு அவனையும் ரசியுங்கள்.
” டேய் மச்சி….! உற்சாகமாய் ஒலித்த குரலில் திரும்பி பார்க்க சிவா, சுகுமாரன் அவனை நோக்கி ஓடி வந்தனர். இருவரும் இரண்டு ஆண்டுகளாக அவனோடு இணை பிரியாமல் சுற்றி கொண்டிருக்கும் வகுப்பு தோழர்கள்.
ராஜாவின் தோளில் கை போட்டப்படி பேசி கொண்டு வந்தவனை, முறைத்து கொண்டே தன் பக்கம் சுகுமார் இழுக்க, ராஜாவிற்கோ பற்றி எரிந்தது.
முதல் வருடத்தில் இருந்தே இளாவின் பொருட்டு ராஜாவிற்கும், சுகுமாரனுக்கும் ஏழாம் பொருத்தம் தான். அடிக்கடி ஏழரையை கூட்டி வம்பு சண்டை போடுவதும் சுகுமாரனுக்கு வழக்கமாகி விட்டது. நண்பன் என்றாலும் வேறு டிபார்ட்மென்ட் ஆள் என ராஜாவை எந்நேரமும் முறைத்து கொண்டே சுற்றுவது தான் சுகுமார்க்கு வேலை.
பதினைந்து வருட அவர்களின் நட்பை இரண்டே வருடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக அவர்களே அறியாமல் தள்ளி நிறுத்தி பிளவை ஏற்படுத்தி விட்டான். கேம்பஸ் உள்ளே ராஜாவை வரக்கூடாது என தகராறு செய்து கொண்டே இருப்பதால் அவனும் வருவதை நிறுத்தி கொண்டான். கல்லூரிக்கு வெளியில் தான் நட்பு உயிர் பெற்று உறவாடி கொண்டிருந்தது.
” டேய் எத்தனை தடவை சொல்றேன். என்கூட இருக்கும் போது அவனை இழுக்காதன்னு?..” ராஜா கோபமாய் கத்த,
” ஹான், அவன் என் டிபார்ட்மென்ட் ஆளு. வின் பண்ண உடனே பின்னாடியே வந்திருவியே…,” சுகுமாரன் நக்கலாய் பதிலை சொல்ல ,
“டேய் மூணு வயசுல இருந்து அவன் கூடவே இருக்குற நீயும் நானும் ஒண்ணாடா. அவன் என் குளோஸ் பிரண்ட். உனக்கு என்னடா? இன்னொரு தடவை என்கிட்ட வாலாட்டுன கையை உடைச்சு கையில கொடுத்துருவேன்…” இவனும் எகிற
” ஹோய் …, நீ கையை உடைக்குற வரைக்கும் என் கை என்ன பூ பறிச்சுட்டு இருக்குமா? பேசுறதுக்கு வாய் இருக்காது. உடைச்சு விட்ருவேன். ஏன்டா தெரியாம தான் கேக்குறேன். அடுத்த காலேஜ் பையன் நீ. பக்கத்து பீல்டிங்ல இருந்து நீ வந்துட்டு இங்கே நாட்டாமை பண்ணிட்டு இருக்கியா, இடத்தை காலி பண்ணிட்டு கிளம்பி போய்கிட்டே இரு. நாங்க சீனியர் இப்போ. பசங்கள கூப்பிட்டேன். அள்ளு தெறிக்கும் பார்க்குறியா? “
கொண்டாட்டமாய் ஆட்டம் போட்ட கூட்டம் இவர்கள் சண்டையை பார்த்து முழி பிதுங்கி நிற்க யார் தடுத்தும் கேக்கவே இல்லை இருவரும். வாய் சண்டை கை ஓங்கும் அளவிற்கு சென்று விட்டது.
” டேய்! விடுங்கடா ….சும்மாவே இருக்க மாட்டிங்களா ….” என இளா கத்திய பின்பு , சப்தம் காட்டாமல் இருவரும் இருந்தனர்.
ராஜாவின் போன் ஓசையெழுப்பி அவனை நிகழ் காலத்திற்கு அழைத்து வந்தது. தாயிடம் இருந்து இன்னும் ஏன் வரவில்லை என்ற செய்தியில் மணியை பார்க்க அது ஏழரையை காட்டியது. ” ஐயோ., இவ்ளோ லேட்டாச்சு .., இன்னைக்கு மீட்டிங் வேற இருக்கு, சீக்கிரம் ஓடனும்., ” சுற்றி பார்க்க அவன் பார்வையிலோ இளா சந்தோசமாய் விளையாடி கொண்டிருந்தான். அவனை நோக்கி சென்றவனோ
” தானை தலைவனே! சேனை தலைவனே! ராஜாவின் நண்பனே! கிளம்புங்கள் உங்கள் பணியும் எந்தன் அணியும் நம்மை தேடி கொண்டிருக்கும். இருவரும் போகவில்லையென்றால் நம் படை தோற்றுவிடும். போவோமா இள வேந்தே! ” கரங்களை நெஞ்சில் வைத்து தலையை இடை வரை குனிந்து இவன் கேட்ட தோரணையில் சிறுவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, பாலை கொண்டு அவன் தலையில் அடிப்பது போல சென்றவன், அடிக்காமல் கையில் தூக்கி போட்டு முறைத்து விட்டு சென்றான். நாளைக்கு வருவதாய் அவர்களிடம் சொல்லிவிட்டு வெளியே வர,
” டேய் இதை யாரு தூக்கிட்டு வர்றது?…” . கண்ணாலே பாலை காட்ட
” நீ தான், நீ ராஜா இல்லடா என் கூஜா ” என்பதாய் கண்ணாலே இளா நக்கலாய் பார்த்தவன் நடக்க ஆரம்பிக்க,
எட்டி நடை போட்டு சென்று தன் வண்டியை எடுத்து கொண்டு, காற்றை விட வேகமாய் அவன் முன் வந்து பிரேக்கிட்டு நிறுத்தி,
” என்னை ராபிடோ பைக் டிரைவர்னு நினைச்சிக்கோ, சர்வீஸ் சார்ஜ் கூட வேணாம். உனக்கு மட்டும் எப்பவும் பிரீ, ஏறுடா! ” அவன் கூறியதை சட்டை செய்யாமல் வேறேங்கோ வீம்பாய் பார்த்து கொண்டிருக்க,
“கன்னி பொண்ணை கடத்தி தூக்கிட்டு போற வயசுல, காஞ்ச மாடு உன்கிட்ட பம்மிட்டு நிற்குறேன்னு திமிரா! ஏறுவியா, மாட்டியா, இல்லை கடத்தி தான் கொண்டு போகனுமா? லேட்டானா உங்க அம்மா திட்டுவாங்க, வாடா…,”
வேண்டா வெறுப்பாய் வண்டியில் அமர்ந்தவன் போல முகம் கடினம் காட்டினாலும் அவன் விழிகளோ பொய்யை உரைக்காமல் மெய்யினை ராஜாவுக்கு உணர்த்திவிட்டது கண்ணாடியின் வழியே. மீண்டும் பேசினால் முறுக்கி கொள்வான் என அமைதியாய் வீட்டின் முன் வந்து வண்டியை நிறுத்த, இறங்கியவனோ திரும்பி பார்க்காமல் உள்ளே சென்று விட்டான்.
error: Content is protected !!