Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

லயம் மாறா காதல்

Layam Maaraa Kaathal 7 2

போனை எடுத்தவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க, “பாப்பா… , பேசுடி.” வினாடி நேர அமைதிக்கு பின்.

” பாப்பா ஒன்னும் பேசாது. அது கோபமா இருக்கு., “



Advertisement

“கோபமா இருக்குற மூஞ்சிய ராத்திரி பார்க்குறேன். இப்போ எங்க இருக்கானு சொல்லு., தம்பிட்ட சாப்பாட்டை கொடுத்து விடுறேன்., “

” ஏன் நீங்க கொடுத்து விட்ட தான் நான் சாப்பிட முடியுமா ?,,எனக்கும் வாயிருக்கு, எடுத்து திங்க கையிருக்கு, பெண்லைன்ல ஆர்டர் போட்டு வந்தத, அப்போவே சாப்பிட்டுட்டேன்.”

Advertisement

Advertisement

” பெண்லைன்ல போட்டியா., என்னடா இவை ஏதோ புதுசா சொல்லுறா., ” மகனிடம் சந்தேகம் கேட்க போன் அவன் கை மாறியது.

“அறிவு கெட்டவளே ! எதுல ஆர்டர் போட்ட .., ஒழுங்கா சொல்லு “

Advertisement

” உனக்கு அறிவில்லனா நான் என்னடா பண்றது. ஆண் லைன்ல வந்து கொடுத்தா அது ஆன்லைன். அதுவே பொண்ணு வந்து கொடுத்தா அது பெண்லைன்டா என் டுபுக்கு.”

“கிறுக்கு பிடிச்சவ பேசுறதை கேட்டு மண்டை காயுதே., ஏம்மா ! இவளை பெத்த ..,” தலையில் தட்டியபடி முனகியவன், ” என்னடி தின்னு தொலைச்ச..,”

” ஜோமைடோல டொமேடோ ரைஸ் வாங்கினேன் என் பொட்டேட்டோ.”

”  எகத்தாளம் பேசிட்டு இருந்தேன்னு வை, ராத்திரி தூங்கும் போது தூக்கிட்டு போய் தண்ணி தொட்டிக்குள்ள முக்கிருவேன்., ” காண்டாகி கத்த,

” என் வெயிட்க்கு உன்னால் தூக்கிட்டு போக முடியாது., இன்னும் நீ வளரனும்., வேற யோசி., இப்போ போனை வை., எனக்கு வேலையிருக்கு.,” கட் செய்து விட்டு திரும்ப சுபா நின்றிருந்தாள்.

” இன்னைக்கு மஹாராணி என்ன பண்ணீங்க.,? ” சுபாவின் கேள்வியில் முகத்தை சுருக்கியவள்

“காலையில எந்திரிச்சி ஒழுங்கா சாப்பாடு கிடைக்காம அலையுறேன்., நான் மஹாராணியா., அது சரி.,” என்றால் சிரித்து கொண்டே.,

” தம்பி கூட சண்டையா…,?, இன்னைக்கு என்னடி  ..,?”

” பத்தாவது படிச்சுக்கிட்டு பெரிய லாடு லபக்கு தாஸ் மாறி பேசிட்டு இருக்கான்., ஆர்ட்ஸ் குரூப்பு கேவலமாம், அய்யா சயின்ஸ் தான் படிப்பாராம்., “

“அவனுக்கு பிடிச்சதை படிக்கட்டுமே., இதுல என்னடி..,”

” ஏய் ! அவனுக்கு சயின்ஸ் வராதுடி., பிலோ செவென்ட்டி தான் எடுப்பான்.,  இவனை எப்படி அதுல சேர்க்க., ஆனால் மேத்ஸ் சென்டம் வாங்குவான், அதான் பிசினஸ் மேத்ஸ் எடுடானு சொன்னா கேக்கவே மாட்டேங்குறான்.,   “

” நீ சொல்றதும் கரெக்ட் தான்., “

“அதான் அவனுக்கு புரிய வைக்க காலையில கொஞ்சூண்டு விளையாடினேன்., எங்கம்மா கடுப்பாகி சோறும் இல்ல., ஒண்ணுமில்லனு பத்தி விட்ருச்சு .,”

என்னவென புருவம் உயர்த்தி அவள் முகத்தை மட்டும் பார்க்க.,

” அது என்னன்ன என்றவள் காலை செய்த அக்குறும்பை சொல்ல ஆரம்பித்தாள்.  ” வட்டையை தூக்கு. அதுல கார்போ ஹைடைரேட் நிறைய அள்ளி போடு. கொஞ்சமா சோடியம் குளோரிடை போட்டு, லாக்ட்டிக் ஆசிட்டை கலக்கி ஊத்தி கொடும்மானு தான் சொன்னேன்.”

” என்னடி கேக்குறன்னு அப்பவே முறைச்சாங்க. வாயை மூடிட்டு சும்மா இருக்காம, ஒரு சயிட்டிஸ்ட்டை பெத்து வச்சிருக்கனு பெருமையா பீத்திக்க தெரியுது. அவன்கிட்ட கேளுன்னு சொல்ல., அவனுக்கும் புரியல., ” என்றவள் ஒரு கணம் நிறுத்தி.

” சோத்துல உப்பை போட்டு தயிரை ஊத்தி கொடுக்கிறத தான் சயின்ஸ்ல சொன்னேன்., இதே புரியலை., எப்படி போய் மத்தத படிப்பேன்னு கேட்டதுக்கு எங்கம்மாவும் சேர்த்து மொத்திருச்சு., கோபத்துல சாப்பிடாம  கிளம்பி வந்துட்டேன்., அதுக்கு தான் விசாரணை கமிஷன் நடத்திட்டு இருக்காங்க., ” என்றாள் சிரிக்காமல் .

” எவ்ளோ அறிவு., உன் அறிவுக்கு நீயெல்லாம் இங்கேயே இருக்க கூடாது., சந்திர மண்டலத்துக்கோ., செவ்வாய்க்கோ., எங்கேயாவது ஓடி போயிரு., ”  சுபா அவள் கன்னம் வழித்து திருஷ்டி எடுக்க, ராஜாவோ சிரிப்பை அடக்கி கொண்டு நின்றிருந்தான் ரோஜாவின் பின்புறம்.,

சுபாவின் அறையில் அமர்ந்து இவள் வேலை செய்து கொண்டிருக்க, இளா  நேற்று சொல்லியவற்றில் இருந்த சந்தேகங்களை பற்றி கேட்கவே இருவரும் இணைந்து வந்தது. இணைப்பில் வந்தவரிடம் பேசி கொண்டு சுபாக்கு பின்னே ராஜாவும் வர இந்த கூத்தை எல்லாம் அவனும் கேட்டுவிட்டான்.

” வேலைக்கு வந்துட்டு என்ன எல்லாம் லூட்டி அடிச்சுட்டு இருக்க., ரொம்பா நல்ல்லஆஆ இருக்கு., ” ராஜா கிண்டலில்

” அச்சோ சார் ! பக்கி அவரும் வந்திருக்காருனு சொன்னியா., ஏண்டி என்னை மாட்டிவிட்ட.,” மெதுவே முனங்கியவள் ” சாரி சார்.., சும்மா., ” அவளின் திருட்டு முழியில் மேலும் சிரிப்பு வந்தாலும் அதை முகத்தில் காட்டாமல் வந்த விஷயத்தை பற்றி பேச ஆரம்பிக்க அதன் பின் சைலன்ட்  மோடில் போட்டு வைத்த போன் போல கப் சிப்பென ஒலியே எழுப்பாமல், அமைதியாக நல்ல பிள்ளையாய் வேலை மட்டும் பார்த்தாள்.

புதிதாய் வந்த ஆர்டர் பத்தி பேசி கொண்டிருந்த சுபாவிற்கு வேறொரு வேலை உள்ளதென வெளியே சென்று விட இருவர் மட்டுமே தனித்து இருந்தனர். சுபா இருக்கும் போது தெரியாத ஓன்று அவள் சென்ற பின்பே ரோஜாவிற்கு தோன்றியது. இதற்கு முன்பும் அவனோடு பேசி இருக்கிறாள். ஆனால் இன்றோ மனதில் ஒரு பதட்டம் தானாய் வந்து விட,  மறைத்து கொண்டு தான் வேலை பார்த்தாள்.

” குட்டச்சி, பயங்கர வாயாடியா இருக்காளே. நமக்கு நல்லா பொழுது போகும். அவனால் முடியாது, ஆனால் என்னால உன்னை தூக்கிட்டு போக முடியும் …”  எண்ணியபடியே அவளை ரசிக்க ஆரம்பித்தான். மாநிறம்  தான், ஆனால் லட்சணமான முக அமைப்பு. குண்டு கண்கள், சற்றே நீண்ட நாசி, புன்னகை சிந்தும்  மலர்ந்த இதழ்கள், புசு புசு கன்னம், இடை வரை நீண்ட முடியை இறுக்கி பின்னி இருந்தாள். உயரத்திற்கேற்ற எடையில் கச்சித உடலமைப்பு, வாயிலிருக்கும் கொழுப்பு கிஞ்சித்தும் அவள் உடலில் இல்லை. தன் நெஞ்சை தொடும் உயரம் மட்டுமே தான் அவளிடம் உள்ள ஒரே குறை, ஹீல்ஸ் வைத்த செருப்பு போட்டால் அதுவும் குறையாய் ஒன்றும் தெரியாது என்று மனதை சமாதானம் வேறு தன் போக்கில் செய்ய ஆரம்பிக்கும் நேரம் தான் மூளை விழித்து கொண்டது.

” அடேய், நீ பார்க்குறத மட்டும் அவ பாத்தா, அடுத்து நீ பார்க்கவே முடியாத மாதிரி பண்ணிருவா, பாத்து இருந்துக்கோ, பீ கேர் புல் ” அவன் அவனுக்கே சொல்லி கொண்டு காதல் பார்வையை மாற்றி கொண்டு கடமை பார்வையை பார்க்க ஆரம்பித்தான்.

பேசி முடித்தவன் கிளம்பும் சமயம் ஞாபகம் வர  ” உங்கட்டயாவது அந்த ஆடிட்டர் பேசுவாரா? யாரு கிட்டயும் பேச மாட்டாரு, அமைதினு சொல்ராங்க,  “

” என்கிட்ட அது நடக்குமா? அவரு பேசலைனா என்ன, நான் பேசிட்டே இருப்பேன், அவரு கேட்டுட்டே இருப்பாரு, ரொம்ப நல்ல மனுஷன் ”  நல்ல பிள்ளையாய் பதிலை சொல்ல.

” நான் கேட்டுட்டே எல்லாம் இருக்க மாட்டேன். பதில் வேற மாதிரி இருக்கும், நல்லவன் இல்லை…உனக்கு ஓகே தானே  ” ராஜாவின் கேள்வியில் புரியாமல் முழித்தவளை கண்டு, புன்சிரிப்புடன் வெளியே செல்ல அம்மையார் தான் வாய் மூடி நின்று இருந்தார்.

” வேற மாதிரி பேசுவாரா? சப்புன்னு அடிப்பாரோ? இல்லை குப்புன்னு குத்துவாரோ? இல்லை கடிப்பாரா? ஆத்தி இந்த மனுஷன போய் நல்லவன்னு நினைச்சிட்டோமே. பயபுள்ள என்னமோ ஒரு மார்க்கமா வேற பார்த்த மாதிரி இருக்கே. ஒன்னும் புரியலையே. அவரை நோட்டம் விட்டு இனிமே நோட் பண்ணுவோம், நம்ம மேல இருக்குறது நாட்டமா? இல்லை காட்டமானு தெரிஞ்சுரும்.”  மன்னன் மனம் சற்றே மங்கைக்கு புரிய ஆரம்பிக்க, புரியாதவை எல்லாம் இனி புரியுமோ? புரிய வில்லையென்றால் புரிய வைப்போம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!