Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

Meendum Orumurai-15

பாகம்-15

முதல் நாள் திருமணம் பற்றி பேசியதிலிருந்து குருவுடன் பேசுவதை மொத்தமாக தவிர்த்து விட்டு இருந்தாள் வேலினி. பேருந்தில் வந்து பேச முயற்சிப்பவனிடம் கண்டு கொள்வதே இல்லை.

அவன் பின்பு எப்போதும் போல அவள் பிணிருக்கையில் அமர்ந்து விட இவளும் முன்னிருக்கையில் அமர்ந்து அவனை திரும்பி கூட பார்க்காது அவன் பேச்சுக்கு காது கொடுக்காது சென்று விடுவாள். முதலில் அவள் அவள் அப்படி செய்வதாலும் பேச முயற்சி செய்வதன் ஒரு கட்டத்திற்கு மேல் அவளை இப்போது அமைதியாக விடுவதை நல்லது என்று அவனும் அமைதியாகிவிட்டான்.

அவன் தன்னை பார்க்க வரவில்லை, பேச முயற்சிக்கவில்லை என்று வருத்தமாக இருந்தாலும், இதுவும் நல்லது தான் என்று தோன்றியது. ஏனெனில் அவளை பொறுத்தவரை அவள் நிச்சயமாக ஒரு வருடத்தில் இறந்து விடுவாள்.



Advertisement

அப்படி அவள் இறந்த போகும்போது குரு தன் மீது இந்த அளவுக்கு காதல் வைத்திருந்தால், பெரிதாக பாதிக்கப்படுவான். அவன் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டும் என்றால் தன் மீது வெறுப்பு வளர வேண்டும் என்பதை மட்டும் அவள் எண்ணிக் கொண்டாள். அதனால் அவனுக்கு எதிராக எதையும் செய்யவில்லை.

மாறாக அவனுடன் பேசுவதை மொத்தமாக தவிர்த்தாள். திருமணம் முடிந்தாலும் அவனிடம் இருந்து தள்ளியே இருக்க வேண்டும் என்று முடிவுக்கு வந்திருந்தாள்.

திருக்கார்த்திகை அன்று சிறப்பாக அவர்கள் திருமணம் நடந்து முடிந்தது அவள் கண்களை பார்த்துக் கொண்டுதான் தாலி கட்டினான். குங்குமம் வைத்தான் மெட்டி அணிவித்த போது கூட அவள் மீதுதான் பார்வை பதித்திருந்தான்.

Advertisement

அவனின் ஒவ்வொரு செயலும் அவளுடையதாக அவளுக்காக மட்டுமே இருப்பதை உணர்த்திக் கொண்டே இருந்தான். ஆனால் அவள் எந்த இடத்திலும் இளகவில்லை. அவர்களுக்கு திருமணம் முடிந்து கிட்டத்தட்ட ஐந்து மாதங்கள் ஆகிவிட்டது. இன்னும் அவளாக இந்த இடைவெளி நிரப்ப முயற்சிக்கவே இல்லை.

Advertisement

அவன் மட்டும்தான் அந்த இடைவெளியை மதிக்காது அவளுடன் ஒட்டிக்கொண்டு திரிவான். அவளை ஏதாவது சீண்டி விட்டுவிடுவான், அவளும் சற்று என்று கோபப்படுவாள்.

அதற்காகவே அவளுக்கு வேதாள குட்டி என்று பெயர் வைத்தான். ஆனால் உண்மையில் வேதாளம் போல் அவள் பின் இவன் தான் சுற்றிக் கொண்டிருப்பான்.

வேலினி அமைதியாக திருமணத்திற்கு சம்மதித்தற்கு இன்னொரு முக்கிய காரணம் தன் பெற்றவர்களுக்கு தன் திருமணம் குறித்து ஆசைகள் நிறைய இருக்கலாம். அதனை நிறைவேற்றிக் கொள்ள தான் தடையாக இருக்கக் கூடாது என்பதும் தான்.

Advertisement

அதே சமயத்தில் குருவிற்கு தான் இறந்த பிறகு புதிதாக ஒரு வாழ்க்கையும் கிடைக்க வேண்டும். அதற்கும் எந்த தடையும் இருக்கக் கூடாது என்று தான் அவனுடன் எந்த காலத்திலும் திருமணம் முடிந்த பின்பும் கூட இணைந்து வாழ வேண்டும் என்று அவள் எண்ணவே இல்லை.

எந்த காரணத்திற்காகவும் தங்களுக்குள் இருக்கும் இடைவெளி குறைந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள். அவன் எத்தனை தான் தன்னைத் தொற்றிக் கொண்டு தெரிந்தாலும் மனதால் அவனை விட்டு விலகி இருப்பதாக அவளே எண்ணிக் கொண்டாள்.

ஆனால் உண்மையில் அவனுடன் மனதால் இணைந்த பிறகு தான் திருமணம் நடந்திருக்கிறது என்பது அவளுக்கு விளங்கவில்லை. திருமணத்தின்போது அவள் மனதில் இருந்த உறுதியெல்லாம் அவன் பார்வையிலேயே காணாமல் போய்விட்டது என்பதை அவளால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஐந்து மாத காலங்களாக அவள் விலகி இருப்பதாக நினைக்க, அவன் தான் அவளை விட்டு பிடித்துக் கொண்டிருக்கிறான் என்பது அவளுக்கு சுத்தமாக தெரியாமல் போனதுதான் விந்தை.

திருமணத்திற்குப் பிறகு பவானி இருவருக்கும் இடையே இருந்த இடைவெளியை புரிந்து கொண்டவர் அவன் நிறுவனத்திற்கு அருகிலேயே ஒரு இல்லத்தை வாடகைக்கு எடுத்து இருவரையும் கொஞ்ச காலம் அங்கே இருங்கள் என்று அனுப்பி வைத்து விட்டார்.

இருவரும் அந்த தனி வீட்டில் தான் இருந்தனர். அங்கு எந்த விதத்திலும் அவனிடம் உரிமை எடுக்க அவள் தயாராக இல்லை. அதனை ஒவ்வொரு செயலிலும் அவள் எடுத்து காட்டிக்கொண்டு இருக்க, ஆனால் இவனோ அவளே தன் உரிமை தான் என்று அணைத்து பிடித்துக் கொண்டு கொஞ்சிக் கொண்டு திரிந்தான்.

ஆனால் எந்த விதத்திலும் மனதால் அவனை தான் நெருங்கவில்லை என்பதை மட்டும் மனதோடு கூறிக் கொண்டே இருப்பாள் அவள். இன்று அதற்கு நேர்மாறாக, அவன் எப்படி தன்னிடம் கூறாமல் இப்படி செய்யலாம் என்று உரிமை கோபமாக அவனிடம் சண்டையிட்டு கொண்டிருந்தாள் அவள் அறியாமலே.

அன்று காலை வேலினி கல்லூரிக்கு கிளம்பி கொண்டிருந்த சமயத்தில் ஒரு அழைப்பு வந்தது அந்த அழைப்பை ஏற்று பேசியவள் வெகு பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தாள்.

அந்த அழைப்பு அவளுடன் பணிபுரியும் ஒரு ஆசிரியரிடம் இருந்து வந்திருந்தது. அந்த ஆசிரியர் இன்று வேறொரு கல்லூரிக்கும் பரீட்சைக்கான கண்காணிப்பு பணிக்கு செல்லவிருந்தார்.

ஆனால் அவரால் கடைசி நொடியில் உடல்நிலை குறைவால் செல்ல முடியாமல் போக, அவளால் போக முடியுமா என்று கேட்க அவளும் கல்லூரியில் ஒரு வார்த்தை தகவல் சொல்லிவிட்டு, சரி என்று அந்த உதவியை செய்ய பரபரப்பாக கிளம்பிக் கொண்டிருந்தாள்.

அவனும் அப்படி தான் பரபரப்பாக கிளம்பி கொண்டிருந்தான். பொதுவாக இப்படி எங்கு சென்றாலும் தன் கணவனிடம் சொல்லும் பழக்கம் அவளுக்கு இருக்கவில்லை. இன்றும் அதே போல் அவனிடம் அதைப் பற்றி கூறாமல் அவள் கிளம்பியும் சென்றிருந்தாள்‌.

அந்த கல்லூரிக்கு சென்று, தான் அந்த இன்னொரு ஆசிரியருக்கு பதிலாக வந்திருப்பதாக தெரிவித்துவிட்டு, பணிக்கு தேவையான பொருட்களை பெற்றுக் கொண்டு, பரீட்சை நடக்கும் அந்த வகுப்பிற்குள் நுழைந்தாள்‌.

ஒவ்வொரு மாணவர்களின் நுழைவு சீட்டையும் வரிசையாக சரிபார்த்து உள்ளே அனுப்பிக்கொண்டிருந்த சமயத்தில் தான் அவன் நின்றான். அந்த அவன், அவன் தான். வேறு யார் அவள் கணவன்.

அவனை அங்கு பார்க்கவும் அவளுக்கு அதிர்ச்சியாக இருந்தது. இவன் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறான் என்று பார்த்து அப்படியே நின்று விட்டாள்‌. அவனோ வகுப்பில் தன் இருக்கை எங்கு இருக்கிறது என்று எட்டி பார்த்துக் கொண்டே, முன்னே நிற்பவளை கவனிக்காமல் தன் நுழைவு சீட்டை காட்டிய படி நின்றிருந்தான்.

ரொம்ப நேரமாக அவன் காட்டிக் கொண்டிருக்க, எதுவும் செய்யாமல் அப்படியே நிற்கும் அந்த கைகளை பார்த்து, “என்ன இந்த கைய எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே?” என்று நிமிர்ந்து பார்த்தவனுக்கு அதிர்ச்சி‌.

தன் மனைவி அவன் முன் நிற்பது கண்களுக்கு தெரிய “அச்சச்சோ” என்று ஒரு நொடி அவனுக்கு உள்ளே திகிலாகி விட்டது.

குருவிற்கு பின்னால், “சிக்கிட்டியே பரட்டை” என்று குரல் கேட்டது, வேற யாரும் அல்ல, அது குருவின் நண்பன் ஒருவன் தான். அவனுக்கு வேலினியையும் நன்றாகவே தெரியும். இவளுக்கும் தான்.

இருவரையும் பார்த்து அவள் குழப்பமாக, “ரெண்டு பேரும் இங்க என்ன பண்றீங்க?” என்று கேட்க, அவர்கள் ஏதோ கூற வரும்போது அங்கிருந்து ஒரு நபர் வந்து, “மேம் எதாவது பிரச்சனையா ஏன் இரண்டு பேரும் வெளிய நிக்கிறாங்க ரொம்ப நேரமா?” என்று கேட்டார்.

உடனே குரு, “ஒன்னும் இல்ல சார். மேம், ஜஸ்ட் செக் தான் பண்ணிட்டு இருக்காங்க. ஹால் டிக்கெட் நம்பர் சரியா தெரியல அதான் கேட்டுட்டு இருந்தாங்க, என் நம்பர் என்னன்னு”, என்று அவன் கூற, “ஓகே உள்ள போய் உட்காருங்க”, என்று அவர் உள்ளே அனுப்பி வைத்தார்.

உடனே இவள் அந்த நபரிடம் ஒரு நிமிடம் பேச வேண்டும் என்று தனியாக அழைத்து ஐந்து நிமிடம் பேசினாள். பின்னர் அந்த வகுப்பிற்கு அவள் செல்லவில்லை. வேறு ஒரு ஆசிரியர் அங்கு வந்து விட, இவள் இன்னொரு வகுப்புக்கு சென்று இருந்தாள்.

பரீட்சை எழுத அமர்ந்த குரு, “அச்சோ….இந்த வேதாள குட்டி மறுபடியும் முருங்கை மரம் ஏறிடுவாளே….. ஐயோ சமாளிக்கணுமே”, என்று மனதில் நினைத்துக் கொண்டான்.

உண்மையில் அவன் வேதாள குட்டி முருங்கை மரம் தான் ஏறி இருந்தாள். “மாஸ்டர் டிகிரி படிக்கிறேன்னு என்கிட்ட சொல்லவே இல்லை. அதுவும் இன்னைக்கி அரியர் எக்ஸாம் எழுத வந்திருக்காரு. இப்படின்னு எனக்கு தெரியுமா? அந்த ஸார் வேற, ஏன் இந்த கிளாஸ் போக மாட்டறீங்கன்னு கேட்கிறார். அவர்கிட்ட என்ன பதில் சொல்றது. வந்திருக்கிறது என் புருஷன். அவன் என்கிட்ட சொல்லாம எக்ஸாம் எழுத வந்துட்டான்னா?

ஆனாலும் அப்படித்தான் சொல்ல வேண்டி இருந்துச்சு. எனக்கு அவர் எக்ஸாம் எழுதிறது தெரியும். இருந்தாலும் திடீர்னு டியூட்டி போட்டாங்கன்னு வந்துட்டேன்னு எப்படியோ சொல்லி சமாளிச்சுட்டேன்.

நல்ல வேலையா நான் லேட்டா வந்ததால ஹால் போங்க அப்புறம் சைன் பண்ணிக்கலாம்னு சொல்லிட்டாங்க. இல்லன்னா என்ன ஆகும்”, என்று அவள் எண்ணிக்கொண்டு அவனை இன்னும் பலமாக திட்டிக்கொண்டு தன் கடமையை செய்து கொண்டு இருந்தாள்.

அவள் வேலையை பார்க்க ஆரம்பித்து ஐந்து நிமிடத்தில் மீண்டும் அழைத்து அவளிடம் என்ன என்ற விசாரித்து, வந்திருப்பது அவள் கணவன் என்றும் அவன் இங்கு பரிட்சை எழுதுவது அவளுக்கு தெரிந்தாலும், திடீரென்று இந்த பணியை மாற்றிவிட்டதால் அவளால் இது குறித்து சொல்ல முடியவில்லை.

இப்படி தெளிவாக விளக்கம் அளித்த பின்னே தான் அவளை தன் கடமையை ஆற்ற அனுப்பி வைத்தனர். அனைத்தையும் சமாளித்து கடைசியாக அந்த பணியை சிறப்பாக முடித்துக் கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த சமயத்தில்தான் இவனும் அதே பேருந்தில் ஏறி அவளிடம் கலாட்டா செய்து கொண்டிருந்தது.

இவளுக்கு கோபம் எல்லாம் அவர்களுக்கு அளித்த விளக்கத்தினால் வந்தது அல்ல. கணவன் முதுகலை படிப்பு படித்திருக்கிறான். அது குறித்து தன்னிடம் தெரியப்படுத்தக் கூட இல்லை என்பது மட்டும்தான் பெரும் கோபமாக இருந்தது. அதாவது அவள் அவனிடம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று நினைத்த உரிமை கோபமாக இருந்தது.

சீண்டி கலாட்டா செய்து அவளை கோபத்தின் உச்சிக்கு ஆழ்த்திய பின்னே வீட்டிற்கு அழைத்து வந்திருந்தான். வந்ததும் அவளை கட்டிப்பிடித்து சமாதானம் செய்ய முயற்சிக்க, ஆனால் அவளோ அவனை ஒரே தள்ளாக தள்ளிவிட்டு, “என்ன நினைச்சுட்டு இருக்கீங்க? ஒரு விஷயத்தையும் என்கிட்ட சொல்ல மாட்டீங்க.

இவ்ளோ பெரிய முக்கியமான விஷயம் எம்.இ. படிச்சுட்டு இருக்கீங்க அதைப்பத்தி ஒரு வார்த்தை சொல்லாம இப்ப வந்து என்னை கட்டிப்பிடித்து சமாதானம் பண்ணா எல்லாம் சரியா போயிடுமா? தயவு செஞ்சு என் பக்கத்தில் வராத குரு”, என்று அவள் கோபமாக கத்தி விட்டு செல்ல, இவனோ “இவளுக்கு எப்ப பாரு இதான் வேலை. ஒரு சில சமயம் மரியாதையா வாங்க போங்கன்னு சொல்லுவா. சில் சமயம் போடா வாடா னுவா” என்று கூறிக்கொண்டு அவளிடம் பின்னையே சுற்றிக்கொண்டு கெஞ்சிக் கொண்டிருந்தான். குரு முதுகலை படிக்க வேண்டும் என்று ஏற்கனவே திட்டமிட்டு இருந்தான் தான்.

ஆனால் தன் கனவு நிறுவனத்தை முதலில் தொடங்கி விட்டதால், தன் முதுகலை படிப்பை சற்று தள்ளி வைத்திருந்தான். எப்போது வேலினி முதுகலை படிப்புக்கு பதிவு செய்தாலோ, அப்போதே இவனும் செய்து விட்டான். அவளுடன் தான் இவளும் படித்தான். கடைசி வருடம் பரீட்சையின் போது, வேறு வேலை விசயத்தால் தேர்வை எழுத முடியாமல் போனது. அந்த பரிட்சைகளை எழுதவே இப்போது கல்லூரிக்கு வந்திருந்தான். அங்கு தான் அழகாக தன் மனைவியிடம் மாட்டிக் கொண்டான்.

அவளின் உரிமை கோபம் அவனுக்கு நன்றாக புலப்பட்டது. அவளை எண்ணி சிரித்துக்கொண்டவன், அவளை எப்படியோ கெஞ்சியும் சமாதானம் செய்ய முடியாமல் போக, ஒரு வழியாக அவளின் மாமியார் பவானி அவர்களை அழைத்தார் தங்களை பார்க்க வேண்டும் என்று அவரை பார்க்க கேட்டு நின்றான். இவளும் சரி என்று கிளம்ப, இருவரும் மாமியார் வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.

பவானி மகனுக்கு வீடு பார்த்து வைத்த பின், கோயில் குளம் என்று சுற்றிக் கொண்டிருந்தார். இப்போதுதான் ஒரு வாரமாக வீடு திரும்பி இருக்க, எனவே அவரை பார்க்க என்று இருவரும் வந்திருந்தனர்.

அங்கு சென்றதும் முதல் வேலையாக குரு செய்த செயல் குறித்து பவானியிடம் இவள் புகார் வாசிக்க, அவரோ தனக்கும் அது தெரியும் என்று கூறினார். உடனே இவள் அவரிடமும் செல்லமாக கோபித்துக் கொள்ள, அவளுக்கு இன்பதிர்ச்சி கொடுக்கவே தாங்கள் மறைத்து வைத்ததாக கூறி சமாதானம் செய்ய ஒரு வழியாக கோபத்தை விட்டு சமாதானம் அடைந்திருந்தாள் வேலினி.

அதன் பிறகு மகன் மருமகள் இருவரையும் நன்றாக கவனித்து உணவு பரிமாறி நேரம் செலவழித்தார். வெகு நாட்களுக்கு பிறகு சந்திக்கும் தாயை கண்டு குருவிற்கு, மகிழ்ச்சியாக இருந்தது அவருடன் வாயு ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தான். இருவரையும் வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். வேலினி.

சிறிது நேரத்தில் தாயிடம் பேசுவதை நிறுத்திவிட்டு வேலினியுடன் வம்பு இழுக்க ஆரம்பிக்க, இவளும் அவனுக்கு சரிசமமாக பதில் அளித்துக் கொண்டிருந்தாள்.‌ இதுவரின் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு கண்டு பவானிக்கு மன நிறைவாக இருந்தது.

அவர் நிச்சயமாக இருவரும் நல்ல தம்பதிகளாக வாழ தொடங்கி விடுவர் என்றும் முழுதாக நம்பினார். மகனின் முகத்தில் இருந்த மகிழ்ச்சியும் பிரகாசமும் அவருக்கு இன்னும் மகிழ்ச்சியை அளித்தது‌.

பவானிக்கு என்றுமே வேலினியின் ஜாதகத்தில் இருக்கும் கண்டம் பெரிதாக தெரிந்ததே இல்லை. அவரின் திருமணத்தின் போது மாப்பிள்ளைக்கு தீர்க்காயுசு இருப்பதா இருப்பதாக கூறிதான் நான் திருமணம் செய்து வைத்தனர். ஜாதகம் பார்த்து அனைவரும் ஒரே போல், வெகு காலம் சுமங்கலியாக பெண் வாழ்வாள் என்று கூறியது அவர் நினைவில் இன்றும் இருக்கிறது. ஆனால் என்ன நேர்ந்தது இளம் விதவையாகத்தான் அவர் நின்றார்.

அப்படி இருக்கையில் வேலினியின் ஜாதகத்தில் கூறப்படும் விஷயம் மட்டும் உண்மையாக விடுமா என்ன? என்றுதான் அவர் எண்ணம். அதன் மீது நம்பிக்கை எல்லாம் அவருக்கு பெரிதாக இருக்கவில்லை. உண்மையில் அவர் தன் எண்ணங்களை நம்பினார். நாம் சரியாக எண்ணி ஒரு விஷயத்தை துணிந்து செய்தால் அனைத்தும் சரியாக நடக்கும் என்பது அவருடைய எண்ணம். அதே விஷயத்தை தன் மகனின் திருமணத்திலும் கடைபிடித்தார்.

தன் அன்பு மகனின் முகத்தில் இருக்கும் இந்த மகிழ்ச்சிக்கு இணையாக எது இருந்திடப் போகிறது. இந்த மகிழ்ச்சியை எல்லாம் துறந்து வெறும் ஜாதகம் கண்டம் என அனைத்தையும் தூக்கிப் பிடித்துக் கொண்டு என்ன செய்ய போகிறேன் நான்” என்று மனதில் நினைத்துக் கொண்டார்.

அதே மகிழ்ச்சியோடு அனைவரும் உறங்க செல்ல, அன்றைய பொழுது அவர்களுக்கு அங்கேயே முடிந்திருந்தது. மறுநாள் காலை அங்கிருந்தே நிறுவனத்திற்கும் கல்லூரிக்கும் இருவரும் புறப்பட்டு சென்றனர்.

வருவாள்…

மகாஆனந்த் ✨

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!