Skip to content
Post Views: 6,623
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் -1
Advertisement
பெங்களூர் காலை 5.30 மணி அலாரம் அடிக்க . அக்கா அத ஆப் பண்ணு. ஆப் பண்ணு என்று கௌசி குரல் குடுக்க.
Advertisement
அவளின் அக்கா நந்தினி ஸ்ரீ
Advertisement
ஏய் எந்திரிடி அம்மா திட்ட போறாங்க.
நீ. ஆப் பண்ணிட்டு போ . நான் 10 நிமிசம் கழிச்சு வரேன்.
Advertisement
நீ அம்மா கிட்ட திட்டு வாங்க போற என்று நந்தினி ஸ்ரீ சொல்லி செல்ல. கீழே வந்தவளிடம்.
அவளின் அம்மா கௌசி எந்திரிக்கலையா?
மா வருவா சின்ன பொண்ணுதான.
ஆம் சின்ன பொண்ணு 3 வது வருசம் காலேஜ் படிக்குற. சின்ன பொண்ணா நீ போய் வாசல் கூட்டு. அவள கோலம் போட வர சொல்லுறேன் .மேலே வந்தவர் ஏய் ஏந்திரிடி.
அம்மா எழுந்துட்டேன் என்று பாத்ரூம் சென்றாள் கௌசி.
கௌசி என்ற கௌசல்யா ஸ்ரீ. அவளின் அம்மா கமலம். அப்பா. இராஜா செல்வம் ஈ .பி .யில் வேலை பார்க்கிறார். அண்ணன் சிவா ஹைதராபாத்தில் வேலை செய்கிறான். அக்கா நந்தினிஸ்ரீ கடைசி வருடம் காலேஜ் படிக்கிறாள்.
கமலம் பெண் பிள்ளைகளை கண்டிப்போடு வளப்பார். இரு பெண் பிள்ளைகளை வீட்டு வேலையை பழக்க படுத்தி இருக்கிறார். நந்து வீட்டை பெருக்க. கௌசி சமையல் பாத்திரங்களை கழுவி வைக்க வேண்டும்.
இரு பிள்ளைகளும் வேலைகளை பகிர்ந்து செய்வர்.
பெரியவள் அவளே தலைவாரி கொள்வாள். சிறியவளோ அம்மா , கமலம் ,லோட்டஸ் வாம்மா தலை வாரி விட வாம்மா என்று ஹாலில் இருந்து கத்தி கொண்டு இருக்க. கமலம் சமையல் அறையில் இருந்து வந்தார்.
ஏன்டி கத்துற.
காலேஜுக்கு லேட்டாச்சு மா. கிளம்பனும் .
கிளம்பு.
எனக்கு தலை வாரி விடுங்க.
கமலம் ஏன்டி நந்துவ பாத்தியா அவளே தலை பின்னிகிற . நீ ஏன்டி . இரு வரேன் என்றவர். கிச்சன் சென்று ஸ்டவ்வை சிம்மில் வைத்து விட்டு வர.
கௌசி தலை விரித்து விட்டு அமர்ந்து இருந்தாள் .
கமலம் வந்து கௌசிக்கு தலை பின்னி விட்டு கொண்டே சொன்னது எல்லாம் நியாபகம் இருக்குல.
இருக்குமா என்றாள் கௌசி.
நீ காலேஜ் போகுறப்போ ரோட்டில் ஏதாவது பையன் உன்னை பார்த்தாலோ, பேசினாலோ, கேலி பண்ணாலோ, நீ ரோட்ட பாத்து போய் கிட்டே இருக்கனும் தெரியுதா.
சரிம்மா என்றாள் கௌசி.
சும்மா அவன் என்னை கேலி பண்ணான். நான் திட்டினேன் என்று வம்பு இழுத்துட்டு வந்தா.
மம்மி நான் போய் அப்படி பண்ணுவேனா . நீங்க என்ன சொல்லுறீங்கலோ. அது தான்.
கமலம் தன் பெண் பிள்ளைகளிடம் தோழி போல் பழகுவார். ஆனால் சிறு கண்டிப்பு உண்டு.
நந்துவும் கௌசியும் முதல் நாள் காலேஜ் போகும் போது ஏதாவது காதல் கீதல் என்று அந்த பையன் பிடிச்சுருக்கு அப்படி ஏதாவது இழுத்துட்டு வந்தீங்கா. கொன்னு போட்டு விடுவேன். பாத்து நடந்துகோங்க இரண்டு பேரும். அதை மீறி ஒரு பையன் பிடிச்சிருக்கு. அவனை தான் நான் கல்யாணம் பண்ணுவேன் என்று சொன்னா. நீ உன் வாழ்க்கை பார்ன்னு வீட்டை விட்டு அனுப்பிடுவேன் . உன் வாழ்க்கை உன் கையில் என்று . உங்களுக்கு நல்ல படிப்பு , நல்ல வாழ்க்கை அமைத்து நாங்க கொடுப்போம் புரியுதா.
உங்க வேலை படிக்குறது. அத மட்டும் காலேஜில் பண்ணுங்க . வாழ்க்கையில் எல்லாம் வரும் . நாம நல்ல படியா கடந்து போக வேண்டும் என்று புத்தி மதி சொல்லி கொடுத்து வளத்தார்.
நந்தினி ஸ்ரீ ஏய் வாடி கௌசி டைம் ஆச்சு என்று வாசலில் இருந்து கூப்பிட.
வரேன், வரேன் மம்மி , பாய் டாடி. என்று சொல்லி செல்ல.
இராஜா செல்வன் கமலத்திடம் ஏன் கமலம். பிள்ளைகளை காலையில் இருந்து திட்டி கிட்டே இருக்க.
அவங்க நல்லதற்க்கு தானே திட்டுறேன். நம்ம பொம்பல பிள்ளைய வச்சு இருக்கோம். இரண்டு பேரு அழகா இருக்காங்க. அதில் அந்த சின்ன குட்டி ரொம்ப அழகா இருக்க. இப்போவே இரண்டு மூணு பேரு அவள கல்யாணம் பண்ண கேட்டாங்க. நான் அவ சின்ன பொண்ணு , பெரிய பொண்ணு இருக்குன்னு சொல்லி வச்சு இருக்கேன். இந்த வயச கடந்து தானே நாமலும் வந்து இருக்கோம். நமக்கு தெரியும் தானே . இந்த காலத்து என்னென்னோவோ நடக்குது. நம்ம சாக்கிரதையாக இருக்கணும்.
********
குருவம்மாள் வீடு பழைய காலத்து வீடு. காலையிலே சமையலறையில் அனைவரையும் திட்டிக் கொண்டே சமையலை முடித்தார்.
சத்தம் கேட்டு வந்த சுந்தர். சித்தி என்ன காலையில் சத்தம்.
உனக்கு கல்யாணமாகி இரண்டு குழந்தை இருக்கு. தென்றலுக்கும் கல்யாணம் ஆகிருச்சு. இந்த கடைசி பையன மட்டும் எல்லோரும் அம்போன்னு விட்டா என்ன அர்த்தம். அவனுக்கு காலா காலத்துல கல்யாணம் பண்ண வேண்டாம வயது 31 ஆக போகுது.
ஏன் சித்தி அவன் கல்யாணம் வேண்டாமுன்னா நாங்க என்ன பண்ண. எந்த பொண்ண பாத்தாலும் புடிக்கலன்னு சொல்லுறான். என்ன பண்ண சொல்லுறீங்க.
அவன் அப்படித்தான் சொல்லுவான். நாம தான் நல்ல படியே பேசி பொண்ண பாத்து முடிச்சு வைக்கணும்.
சுந்தர் என்னால முடியாது. நீங்களாச்சு உங்க மகனாச்சு என்று அவன் ரூம்பிற்க்கு மேலே சென்று விட்டான்.
பழனி ஜானகி தம்பதிகளுக்கு பிறந்த பிள்ளைகள் மூன்று பேர். சுந்தர், தென்றல் , கோடிஸ்வரன்.
சுந்தருக்கு திருமண முடிந்து 2 பிள்ளைகள். தென்றலுக்கு 3 வருடம் முன் தான் கல்யாணம் முடிந்தது. இன்னும் குழந்தையில்லை கடைசியில் கோடிஸ்வரன்.
கோடிஸ்வரன் பிறந்தவுடன் ஜானகி இறந்து விட. பழனி ஜானகியின் தங்கை குருவம்மாளை மணந்து கொண்டார்.
சுந்தரும், தென்றலும் குருவம்மாளை சித்தி என்று அழைக்க. கோடிஸ்வரன் குருவம்மாளை அம்மா என்றே அழைப்பான்.
குருவம்மாளுக்கு குழந்தை இல்லை. தன் அக்கா ஜானகியின் 3 பிள்ளைகளை தன் பிள்ளைகள் போலவே வளத்தார்.
பழனிக்கு சுகர் அதிகமாகி பாதத்தை எடுத்து விட்டதால் ரூமில் இருந்து சத்தம் கொடுத்தார் .
சத்தம் கேட்டு வந்த குருவம்மாள். பழனியின் ரூம் செல்ல.
பழனி என்ன காலையில சத்தம் போட்டு கிட்டு இருக்க.
குருவம்மாள் பழனியிடம் என் கவலை எனக்கு . நீங்க உடம்பு முடியலன்னு இந்த ரூம்புகுள்ளே இருக்கீங்க. என் பையனுக்கு ஒரு கல்யாணம் நடக்க மாட்டிங்குது எனக்கு அது தான் கவலை.
பழனி கவலை பட்டா கல்யாணம் நடந்துருமா. உன் பையனுக்கு போன் போட்டு வர சொல்லு.
சரி என்ற குருவம்மாள் கோடிஸ்வரனுக்கு போனில் அழைக்க. அவன் அவனின் காம்புலக்ஸ் மாடியில் உள்ள அவன் அறையில் தூங்கி கொண்டு இருக்க.
யாரு அது காலையில் போன் பண்ணுறது என்று போனை பார்க்க . அம்மா என்று வர போனை அட்டன் பண்ணியவன் என்ன அம்மா காலையில் 7.30 போன் போட்டு எழுப்புறீங்க.
குருவம்மாள் “அய்யா கோடி . அப்பா. உன்கிட்ட பேசனுமாம் ” என்று பழனியிடம் போனை நீண்ட .
சொல்லுங்க நைனா என்றான்.
பழனி கோடியை ” ஈஸ்வரா வீட்டுக்கு வாப்பா உன்க்கிட்ட பேசனும் என்று கூப்பிட.
கோடிஸ்வரன் எனக்கு வேலை இருக்கு. சாயங்காலம் இல்ல நாளைக்கு வர்ரேன் என்று போனை வைத்து விட்டான்.
கோடிஸ்வரன் பி.யூ சி இரண்டாம் வருடம் படிக்கும் போதே படிப்பை நிறுத்தி விட்டு தந்தைக்கு உதவி செய்து கொண்டு இருந்தான்.
பழனி படி, படி என்று எவ்வளவு சொல்லியும் போக மாட்டேன் என்று நின்று விட்டான். பழனி வாங்கி வைத்திருந்த காலியாக இருந்த இடத்தில் பெரிய காம்புலக்ஸ் கட்டி கடைகளை வாடகைக்கு விட்டும். அவன் ஒரு எலக்ட்டாரனிக் கடை வைத்துள்ளான். அது மட்டும் இல்லை கீழே உள்ள காலியான இடத்தில் வீடு கட்ட தேவையான அத்தனை பொருள்களும் கிடைக்கும். அந்த சாம்ராஜ் பேட்டையில் உள்ள பெரிய கடை கோடியின் கடை தான்.
பழனி, பழனியின் அம்மா அந்த காலத்தில் இருந்து துப்புறவு பணி செய்து வந்தவர்கள். பழனி பார்க்கும் இடங்களை எல்லாம் வாங்கி, வாங்கி வீடு கட்டி வாடகைக்கு விடுவார்கள். அவர்களை சுற்றி நிறைய வீடுகளை கட்டி இருந்தனர் . வாடகையே லட்ச கணக்கில் வருகிறது. முதலில் வாடகை வசூல் பண்ணவே கோடிக்கு சரியாக இருக்கும். இப்பொழுதுதான் கோடி வாடகை வசூல் பண்ண தனியா ஆள் வைத்து இருக்கான்.
பழனிக்கு தன் பிள்ளைகளை நன்றாக படிக்க வைத்து கவர்மென்ட்டு வேலைக்கு அனுப்பனும் என்று ஆசை பட்டு. சுந்தர் படித்து ஒரு கல்லூரில் லக்சர்ராக பணி செய்ய. அவர் மகள் தென்றல் பேங்கில் வேலை செய்கிறாள்.
கோடி மட்டும் படிக்காமல் போக. பழனிக்கும் கோடிக்கும் எப்பொழுதும் சண்டை தான்.
கோடிக்கோ என்ன பேச போறார். கல்யாணம் பண்ணிக்கோ என்பார்.
நான் என்ன கல்யாணம் வேண்டாமுன்னா சொன்னேன். எனக்கு அவர்கள் பார்க்கும் பொண்ணை பிடிக்கல. பிடிக்குற மாதிரி பார்க்க வேண்டியது தானே. அத விட்டுட்டு. எப்பொழுதும் கோடிஸ்வரன் தூங்க 12 இல்ல 1 மணி ஆகும் . காலையில் 9 , மணிக்கு தான் எழுந்துப்பான்.10 மணிக்கு கடை திறப்பான்.
இன்று குருவம்மாள் போன் போட்டு சீக்கிரம் எழுப்பி விட. தூக்கம் கலைந்து விட. நவம்பர் மாதம் என்பதால். பெங்களுரில் மழை சாரலாக பெய்து கொண்டு இருந்தது. குளிர்ந்த காற்றை சுவாசித்த கோடீஸ்வரன் அவன் நிற்கும் எதிர் திசையில் ஒரு பஸ் ஸ்டாப் இருக்க .சிலர் நின்று கொண்டு இருந்தனர். சற்று தூரத்தில் இரு பெண்கள் குடை பிடித்து நடந்து வருவது தெரிந்தது.
இவ்விரு பெண்களும் உடை ஓரே மாதிரியாக அணிந்து இருந்தனர். ஒரு பெண் லாங் ஸ்கட் மஞ்சள் நிறத்திலும் , சட்டை வெள்ளை கலர் . இன்னொரு பெண் காபி கலர் லாங் ஸ்கட் டூம் வெள்ளை நிற சட்டை அணிந்து நடந்து வர.
கோடி அவனின் காம்புலக்ஸ் மாடி அறையின் பால்கனியில் இருந்து பார்த்து கொண்டு இருந்தான். இவ்விறு பெண்கள் ஒரே மாதிரி உடை அணிந்து குடை பிடித்து நடந்து வருவதை பார்க்க அழகாக இருந்தது.
காற்று சற்று வேகமாக வீச. மஞ்சள் கலர் உடையணிந்த பெண்ணின் குடை காற்றில் வேகத்தில் பறக்க அதை அந்த பெண் பிடிக்க ஓட. அந்த குடை எங்கோ பறந்து போய் விட்டது. குடை தவற விட்ட கௌசி தலையில் கைவைத்து குடை போச்சே அம்மா கேட்ட என்ன சொல்ல என்று தலையில் கைவைத்து நிற்க.
அதை பார்த்த அவளின் அக்கா நந்தினிஸ்ரீ குடை பறந்து போச்ச என்று சொல்லி சிரிக்க.
கௌசி நந்துவின் குடையை பிடுங்க வர . நந்தினி பஸ் ஸ்டாப் ஓடி விட்டாள்.
காற்று பலமான வீச . கௌசியின் மீது மெல்லிய சாரல் அவள் மேல் விழ அதை கைகல் இரண்டை விரித்து அதை அனுபவித்தவள். கண்களை மூடி மூச்சை உள்ளே இழுத்து ஒரு சுற்று சுற்றினாள் . அவளின் லாங் ஸ்கட் குடை போல அழகாக விரிந்தது. அந்நேரம் ஒரு சிறு மின்னல் வெட்ட அவளுக்கு பயம் கலந்த சந்தோஷம். சிரித்துக் கொண்டே வந்தாள். அந்த ரோட்டில் பள்ளம் , பள்ளமாக இருக்க. மழை நீரு தேங்கி இருந்தது. கௌசி குதித்து குதித்து வந்தாள். அதை பார்த்த அவளின் அக்கா நந்தினிஸ்ரீ , ஸ்ரீ வேகமா வாடி பஸ் வந்துடிச்சு என்று கூற வேகமாக வந்த கௌசி பஸ்சில் ஏறி கல்லூரி சென்று விட்டனர்.
அனைத்தையும் பால்கனியில் இருந்து கோடீஸ்வரன் பார்த்து கொண்டு இருந்தான். ஒரு மின்னல் அவன் மனதில் வெட்டியது போல , பித்து பிடித்தவன் போல் பால்கனியில் ரொம்ப நேரம் நின்று இருந்தான்.
அவன் கண்ட காட்சி அழகாக இருத்தது. ஏதோ கனவு போல இருந்தது. கௌசியின் முகம் கூட அவனுக்கு சரியாக தெரியவில்லை. ஆனால் அவள் அவளின் கையை விரித்து சுற்றியது. அவளின் ஸ்கட் விரிந்தது. மின்னல் வெட்டியதும். இதை அனைத்தையும் பார்த்தவன். என்னடா இது காலையிலே நல்ல தரிசனம் என்று முகத்தில் புன்னகையோடு கட்டிலில் விழுந்தான்.
நாளை அந்த பெண்ணை எப்படியாவது பக்கத்தில் இருந்து பார்க்கணும் என்று மனது சொல்ல. இன்னொரு மனமோ டேய் அது காலேஜ் படிக்கிற பொண்ணு உனக்கு கழுத வயசு ஆகுது இது தேவையா?
அட போடா நான் போய் அந்த பொண்ணை பார்ப்பேன்.குளித்து விட்டு கடையை திறக்க கிளம்பினான்.
கோடியின் முகம் இன்று மலர்ச்சியாக இருக்க . அவனிடம் வேலை செய்பவன் நஞ்சுண்டா என்ற கன்னட பையன் கோடியை பார்த்து என்ன அண்ணா கல்யாணம் முடிவுயாகிருச்சா என்று கேட்க.
கோடியோ ஏன்டா முடிவு ஆனா உன் கிட்ட சொல்ல மாட்டேனா.
இல்லண்ணா உன் முகம் இன்னிக்கு ரொம்ப ப்பிரைட்டா இருக்கு. அதான் அண்ணியை பாத்துடாங்களான்னு கேட்டேன்.
நீ வேற வேலையை பாருடா என்று அவனை அனுப்பியவன்.
என் மூஞ்சு அப்படியா இருக்கு என்று போனை எடுத்து. பல செல்பி களை எடுத்தவன் அதை பார்க்க . ஆமாம் இன்னைக்கு கொஞ்சம் அழகா தான் இருக்கேன்.
கோடி 6 அடிக்கு மேல் உயரம். அவனின் தோற்றம் கோபகாரன் போல முகம். கருப்பாக தான் இருப்பான். சிரிக்க தெரியாத மனிதன் போல எப்பொழுதும் உர் என்ற முகம். அதிகம் பேச மாட்டான் . கோபம் வந்தால். திட்டி தீர்த்து விடுவான். அவன் யாரிடம் பேசினாலும் ஒரு அதிகாரம் இருக்கும்.
அன்று வேலைகளை முடித்தவன். இரவில் காலை 7 மணிக்கு அலாரம் வைத்து தூங்கி விட.
அலாரம் சத்தம் கேட்டு எழுந்தவன். வேகமாக குளித்து ரெடியாகி பஸ் ஸ்டாப் பக்கத்தில் உள்ள கடையில் வாசலின் நின்று நேற்று பார்த்த பெண்ணைத் தேட.
சரியாக 8 ஆக ,10 நிமிடம் முன் நந்தினிஸ்ரீயும், கௌசல்யாஸ்ரீயும் தூரத்தில் வர.
கோடி இவர்கள் வருவதை பார்த்தவன் . இரு பெண்களில் யார் அந்த பெண் என்று தெரியவில்லை.
முதலில் நந்தினியை பார்க்க அவள் வட்ட முகம் இல்லாமல் நீண்ட முகமாக இல்லாமல் ஓவல் வடிவம் முகம் போல .சின்ன மூக்கு. மூக்குத்தி அணிந்து இருத்தாள். சுருட்டை முடி . 5 அடி உயரத்தில் அழகாக இருந்தாள்.
கௌசியை பார்க்க வட்ட முகம், பெரிய மூக்கு, மூக்குத்தி குத்த வில்லை , பால் நிறத்தில். 5 1/2 அடி உயரத்தில், நீண்ட முடி , காதில் பெரிய வலயம் போட்டு இருந்தாள்.
இரு பெண்களையும் பார்த்தவன் இரண்டு பேரும் அழகாக இருக்க. யார் நான் பார்த்த ரசித்த பெண் என்று கண்மூடி நேற்று பார்த்ததை நினைவு படுத்த. அந்த பெண் நேற்று சுற்றும் போது. அவள் அணிந்து இருந்த காலேஜ் பேக் ரெட் கலராக இருக்க. அதை வைத்து கௌசியை அடையாளம் கண்டு கொண்டான்.
இப்பொழுது கௌசியை மட்டும் தான் பார்த்துக் கொண்டு இருந்தான். என்ன அழகுடா என்றே பார்த்திருந்தான். நந்தினியை கௌசியின் தங்கை என்று நினைந்தான்.
கௌசியையும் , நந்தினியை பக்கத்தில் வைத்து பார்த்தால். கௌசி அக்கா போல் தெரிந்தாள்.
நந்தினி அமைதியாக பஸ் ஸ்டாப்பில் நிற்க. கௌசி அங்கே உள்ளவர்களிடம் அனைவரிடமும் பேசி கொண்டு இருந்தாள். ஒரு ஸ்கூல் பையனிடம் என்னடா எஃசாம் எப்படி பண்ண . நல்லா பண்ணேன் அக்கா என்றான். அங்கே பூ விக்கும் அக்காவிடம் கூட பேசிக் கொண்டு இருந்தாள்.
கோடியோ என்ன இவள் இப்படி பேசுறாளே . ரொம்ப வாய் பேசுவாள் போல இருக்கே கோடி.நீ பேச காசு கேட்ப. ஆனால் இவள் வாயெல்லாம் பல்லா இருக்கு. நல்லா தான் இருக்க , அழகா சிரிக்குற. அவளின் காலேஜ் பஸ் வர ஏறி சென்று விட்டாள். உனக்கு செட் ஆகா மாட்டா நீ கிழம்பு தம்பி என்று சொல்லி சென்றான்.
error: Content is protected !!