Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 15 2

தென்றலுக்கு  9  மாதம்  முடியும்  தருவாயில்  வசீ  இந்தியா  வந்து  இறங்கினான். வசீ வந்த இரண்டாம்  நாள்  வளைகாப்புக்கு ஏற்பாடு ஆனது.

நாளை  தென்றலுக்கு  வளைகாப்பு  என்று  இருக்க. கௌசியை  நீ வா , வளைகாப்புக்கு என்று  யாரும்  கூப்பிட வில்லை .



Advertisement

ஏன் குருவம்மாள்  சம்பந்தி  முறைப்படி  கமலத்தை வளைகாப்புவிற்கு  வாருங்கள்  என்று  அழைக்க  வேண்டும்.ஆனால் அழைக்க வில்லை.

கௌசிக்கு ஏன் என்று தெரியவில்லை .கமலம் ஊரில்  ஒரு திருமணம்  என்று  இன்று கிளம்பினார்.

Advertisement

 கமலம்  மகளிடம் பார்த்து  கவனம் மனசு  ஏனோ எனக்கு  சரியாபடல  மகளை கவனம் சொல்லி சென்றார்.

Advertisement

கோடீஸ்வரன்  தென்றல்  வளைகாப்பிற்கு  தங்க வளையல் வாங்கி இருந்தான் . அதை கௌசியிடம்  காண்பிக்க  ஆசையாக  பார்த்தவள் நல்லா  இருக்கு என்றாள்.

Advertisement

ஏதோ ஞாபகம் வந்தவளாக. ஆமாம்  என்னை அன்னைக்கு இடுப்புல  அளவு  எடுத்தாங்கல  என்ன  அது , அது எங்கே என்றாள்.

கோடி  சிரித்து  கொண்டே  பீரோவை திறந்து ஒரு பாக்சை அவளிடம்  தர.

அதை திறந்த பார்த்தவள். என்ன இது  இவ்வளவு பெருச இருக்கு செயினா என்றாள்.  அதில் இருக்கும் முத்துக்கள் அதன் வேலைப்பாடுகள் அழகாய்  இருந்தது.

கோடி இது செயின் இல்ல. என்றவன். அதை வாங்கி அவள் இடுப்பில் மாட்டிவிட.

கௌசிக்கு வெட்கமாக  இருந்தது .

மாட்டி விட்டவன் அந்த இடத்தில் முத்தம்  வைக்க.

கௌசி கோடியிடம் உருகி நின்றாள். போதுமா என்றவன் இதை நீ கலட்ட கூடாது .  எவ்வளவு வேணுமோ  பெருசு பண்ணிக்கலாம் எஃஸ்ட  கொக்கி இருக்கு என்றவன் விலக. கௌசி அவனை விடவில்லை.

 கோடி  ஏய்  சும்மா இரு டி  என்றான் . அவளோ நான் சும்மா தான் இருந்தேன்  நீங்க தானே இத மாட்டி விட்டீங்க என்று அவளின் இடுப்பு செயினை காட்ட.

அவ்வளவு   தான் மாட்டுனடி  அப்பறம் அங்க வழிக்குது ,இங்க வழிக்குது  சொன்னா என்றான் அவளை தூங்கிபடியா .

சொன்னா என்ன கோடி மாமா இருக்காரே அத சரி பண்ண என்றவன் அவனிடம் நெருக்க.

அழகான கூடல் இருவருக்கும் .

கோடியை அனைத்து  கொண்டே கௌசி  கேட்டாள். ஏன்  உங்க வீட்ல  இருந்து  யாரும்  என்னை  தென்றல்  அண்ணி வளைகாப்புக்கு  கூப்பிடலை.

கோடிஸ்வரன்  என்க்கிட்ட  சொன்னா  போதாதா  கௌசி  என்றான்.

இல்ல  ஒரு வார்த்தை இத்தன மணிக்கு வளைகாப்பு வான்னு. யாரும்  என்று சொல்ல.

நீயும் நானும்  ஒன்னு  உன்கிட்ட  சொன்னா  என்ன?  என்க்கிட்ட  சொன்னா என்ன.நம்ம  வீட்டு  விசேசம் ,தேவையில்லாமல்  பேசாத என்றான்.

என்ன தேவையில்லாமல்  பேசுனேன். உங்க  அம்மா போன்  பண்ணி  வான்னு சொல்ல கூடாத. தென்றல்  அண்ணி  கூட என்ன ஒரு  வார்த்தை  வா   கௌசியின்னு  சொல்ல  கூடாதா.

இப்போ  என்னடி  உனக்கு  பிரிச்சனை  உன்னை வந்து எல்லோரும்  வெத்தல  பாக்கு  வச்சு . நீ  வாம்மான்னு  அழைக்கனுமா.

நான் அப்படி  சொல்லலை.

இப்ப  என்ன  நான்  கூப்புடுறேன். என்  அக்கா  வளைகாப்புக்கு வாங்க  கௌசி  மேடம்  போதுமா  என்றான்.

கௌசிக்கு  கோடி பண்ணின  பாவனையில்  சிரிப்பு வர.

கோடிஸ்வரன்  கௌசியின்  இடுப்பை  பிடித்து  கிள்ளி விட. அவனை அணைத்து கொண்டு மேலும்  சிரித்தாள்.

கௌசியின்  தலை கோதிய  கோடி. குருவம்மாள்  சொல்லியதை  சொன்னான்  ஒரு  வீட்டில்  இரண்டு  பேரு  மாசமா  இருந்தா ,இரண்டு  பேரும் , நேருக்கு  நேர்  பார்த்துக்க    கூடுதாம். அப்படி  பார்த்தால் ரெண்டு பேர் குழந்தைக்கு ஆகாதாம்.   நீங்க ரெண்டு பேரும்  என்  கண் மாதிரி. இரண்டு  பிள்ளைகளும்  நம்ம  வீட்டு  வாரிசு  சரியா என்றான்.

 இருவரும் காலையில் எழுந்து கிழம்பி  கொண்டு இருக்க .  ஏதோ கருப்ப கலர்  பறவை  கோடியின் வீட்டினுள் சுற்ற .கௌசி அதை பார்த்தவள் கதவை திறந்து வைத்து போ , போ என்று விரட்ட. அந்த பறவைக்கு வழி தெரியாமல் கௌசியின் தலையில் தட்டி  விட பயந்து போனால்  கௌசி. மீண்டும் பறந்த பறவை   பேனில்  அடிபட்டு  கீழே விழ.

கௌசி அருகில் வந்து  என்னாச்சு பறவைக்கு என்று பார்க்க. அந்த பறவை பார்த்தவள் பயந்து போனால் அந்த பறவை வௌவாள்  குட்டி ,

கொடிஸ்வரன் வந்தவன் அந்த பறவை தூக்கி வெளியில் விட அது  மெல்ல பறந்து போனது.

 கௌசியிடம் கை கழுவி வந்தவன்.  பறவைக்கு ஒன்னும் ஆகல என்றவன்  போய் கிளம்பு என்றவன்  தெரியாமல் சோபாவில் கோடியின் கால் இடித்து விட.

கௌசி பயந்து போய் கணவன் அருகில்  வந்தவள்  கோடியின்  காலை தேய்த்து  விட . வழி கொஞ்சம் குறைந்தது.

கௌசியின் கலக்கிய முகத்தை பார்த்தவன்.  என்னடி மூஞ்சு டல்லா இருக்கு .

எனக்கு ஏனோ மனசு சரி இல்ல அத நாளா  நான் வளைகாப்புக்கு வரல என்றாள்  கௌசி.

 தேவையில்லாமல்  பயப்படுற  போய்  கிளம்பு டைம் ஆச்சு என்றவன்.

அவள்   கிளம்பி வரவும் இருவரும் வளைகாப்புக்கு  நடக்கும். மண்டபத்துக்கு  சென்றனர்.

மண்டப  வாசலிலே   குருவம்மாள், சுந்தர் ,மண்மொழி என்று  அணைவரும்  இருக்க.

மணிமொழி  கௌசியிடம் வந்து எப்படி இருக்க கௌசி என்றவள்  அணைத்து  கொண்டாள். எத்தனை மாசம்?

5 முடிய போகுது அக்கா என்றாள்.

வா உள்ள போலாம் என்க.

குருவம்மாள் மணிமொழியிடம்  ஒரு  வேலையை  சொல்லி  உள்ளே அனுப்பியவர்  கௌசியை  என்னோடு வா என்று  அழைத்து  இந்த    ரூம்புல   இரு.

தென்றல்  முன்னாடி  வந்துறாத.அப்பறம்  அவ  குழந்தைக்கு ஏதாவது  ஆகிறும்.நான்  வந்த  கூப்பிட்டு தான்  வரனும்  என்க.

தலையை  ஆட்டி  உள்ளே செல்ல. அங்கே  இவளை போல  சில  கர்ப்பிணி  பெண்கள் அமர்ந்து இருக்க. இவளையும்  சேர்த்து மொத்தம்  7 பேரு இருந்தனர்.

கௌசி அவர்களிடம் பேச்சு   குடுக்க. அவர்கள்  குருவம்மாள் விட்டு பக்கம்  உள்ளவர்கள் ,சிலர்  உறவினர் . எதற்கு இங்கே இருக்கீங்க என்று கேட்க.

குருவம்மாளிள்  வீட்டு பழக்கம் படி. வளைகாப்பு பண்ணும் பொழுது.  ஒரு 5 இல்ல 7 பேர் கர்ப்பிணி பெண்களை  அழைத்து   அவங்களுக்கு  வளையல் போட்டு, சாப்பாடு  போட்ட.  வளைகாப்பு  பண்ணுற  பொண்ணுக்கு  நல்ல படிய குழந்தை பிறக்குமாம் என்றாள் ஒரு கர்ப்பிணி பெண்.

கௌசிக்கு  அதுக்குதான். நம்மல  இங்க  உங்கார  வச்சு இருக்காங்க.

  அவளுக்கு தென்றலின் வளைகாப்பை பார்க்க  ஆசையாக  இருந்தது. ஜன்னல் இடைவெளியில்  பார்த்து கொண்டு இருந்தாள். சரியாக தெரிய வில்லை.

அங்கே தென்றலுக்கு  வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது மணிமொழி  வெள்ளி வளையல் போட, குருவம்மாள் மகளுக்கு தங்க வளையல் , வசீ தென்றலுக்கு  வைரம் பதித்த தங்க வளையல் போட. கோடி கௌசியை  தேடினான்.

குருவம்மாள் அந்த ரூம்புல  இருக்க என்றவர். அவ  இங்கே வர கூடாது என்றார்.

சரி என்ற கோடி மனைவியிடம் சென்றான்.

கௌசி கோடியிடம்  வளைகாப்பு முடிஞ்சத  என்றாள்.

ம்ம் என்றவன். உள்ளே பார்க்க இவளை போல  நிறைய கர்ப்பிணி பெண்களை பார்த்தவன்  என்ன என்று கேட்க.

குருவம்மாள் சொல்லியதை சொல்ல.

கோடிக்கு கௌசியை  ஒதுக்கி வைத்தது போல் தெரிய.  அவளின் கை பிடித்து  சாரி கௌசி உன்ன இப்படி உங்கார  வைக்க போறாங்கன்னு  தெரிஞ்சு இருந்த  உன்ன வீட்டில  விட்டு வந்து இருப்பேன்.

கௌசியின்   கலங்கிய கண்களை மறைத்து கொண்டு பராவயில்லை நம்ம அண்ணி நல்லதுக்கு தானே .

கோடி எது நல்லது என்று பல்லை கடித்தவன்.  விசேசம்  நல்ல படியாக நடக்கனும் என்று நினைத்து அமைதியாக இருந்தான்.கௌசியிடம் தென்றலுக்கு வாங்கிய வளையலை  கேட்க.

கௌசி அவளின் பேக்கில்  இருந்து . வளையலை  எடுத்து அண்ணி  நல்ல இருக்கணும் , நல்ல படியா குழந்தை  பிறக்கனும் என்று மனதில் வேண்டிய படியே கோடியிடம்  வளையலை கொடுக்க.

அவள்  வேண்டியதை பார்த்தவன். உன் சார்பில் நான் போடுறேன் என்றவன். நான் வந்து சாப்பிட்டு நாமா  கிளம்பலாம் என்றான்.

தென்றலுக்கு  வளைகாப்பு முடிய.

7 கர்ப்பிணி பெண்களும் ஒன்றாக  உங்கார வைத்து வளையல் போட கௌசிக்கு மட்டும் மணிமொழி தனியா கல்பதித்த கண்ணாடி வளையலை  கை நிறைய அணிவித்தாள். எல்லோருக்கு மங்கள பொருள்   வழக்கபட்டது.

  மண்டபத்தின் மேலே  உள்ள  இடத்தில்  முதலில் 7  கர்ப்பிணி  பெண்களுக்கு  உணவு பரிமாற. கௌசி ஒரு நிமிசம்  ரெஸ்ட் ரூம்  சென்று வருவதாக  சொல்லி விட்டு செல்ல.

கௌசி ரெஸ்ட்  ரூம்  சென்று வரும்  போது .

கௌசியை  பிடித்து  கொண்டான் வசீ.

முதலில்  வசீயை  கௌசிக்கு  ஞாபகம்   வரவில்லை.. பின்பு யோசித்து, டாக்டர்  சார் என்றாள்.

வசீ  அவளை ஏளன பார்வை பார்க்க .

அவனை முறைத்து அவள்  கிளம்ப.

வசீ கௌசியின் கைபிடித்து முறுக்கி இருந்தான்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!