Skip to content
Post Views: 2,649
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் -15
Advertisement
3 ஆண்டுகளுக்கு முன். இராஜாசெல்வத்தின் நண்பனின் ஒரே மகள் திருமணத்துக்கு கௌசியின் மொத்த குடும்பம் வந்து இருந்தது.
Advertisement
மாப்பிள்ளை டாக்டர் என்பதால்.அவனோடு படித்த டாக்டர் அனைவரும் வந்து இருந்தனர்.அதில் வசீயும் ஒருவன்.
Advertisement
கௌசி பச்சை நிறம் பாவாடை , சிவப்பு நிற தாவனியில் ,மண்டப நுழைவாயில் கல்யாணத்துக்கு வருவோர்க்கு பன்னீர் தெளித்து கொண்டு இருந்தாள். அவளோடு இன்னும் சில குட்டி பெண்கள் பாவாடை தாவணியில் இருக்க. திருமணத்துக்கு வருவோர்களுக்கு இவர்களை பார்க்கவே அழகாய் இருந்தது.
Advertisement
வசீகரன் பாரினில் படிப்பை முடித்து அங்கே இரண்டு வருஷம் வேலை செய்யும் கான்ட் டிராக்ட் மூலம் படித்து வேலையும் கிடைத்து விட.
வசீகரன் அவனின் திருமணம் முடிக்க . ஒரு மாத லீவில் இந்தியா வந்துள்ளான்.
ஒரு வாரமாக நிறைய பெண்களை பெண்பார்க்க, எந்த பொண்ணையும் வசீக்கு பிடிக்கவில்லை.
வசீ அவனின் நண்பனின் கல்யாணத்துக்கு வந்திருந்தான். பழய நண்பர்களை பார்த்தவன்.பேசிக்கொண்டே கௌசியை கடந்து விட. தன்மேல் சில்லென்று பன்னீர் விழ .
திரும்பி பார்க்க.
கௌசி செதுக்கி வைத்த சிற்பம் போல் நின்று இருக்க. வெளிநாட்டில் இருந்து வந்தவனுக்கு கௌசியை பார்த்து அழகே இவள் தானா.நான் தேடியவள் இவள் தானா என்று மனதில் நினைத்தவன் .அவளை பார்த்து கொண்டே அருகில் வர.
கௌசி வசீக்கு சந்தனத்தை நீட்டினாள்.
அதை கையில் எடுத்தவன். நெத்திக்கு பதில் கண்ணீல் பூசி விட. ஐயோ எரியுது என்றவன். கண்ணை தேய்க்க.
அதை பார்த்த கௌசி அவளின் கைகுட்டையை வைத்து வசீக்கு கண்ணை துடைத்து விட. அது இன்னும், கண்ணீல் உள் சென்று எரிச்சல் தர.
வசீயின் கண்ணீல் இருந்து கண்ணீர் வருவதை பார்த்தவள்.பக்கத்தில் இருந்த வாட்டர் பாட்டிலை எடுத்து.வசீகரனின் கண்ணீல் ஊற்றி துடைத்து விட.
கொஞ்சம் எரிச்சல் மட்டும் குறைந்து இருக்க. வசீக்கு இன்னும் கண்ணை திறக்க முடியவில்லை.
அதை பார்த்தவள். வாங்க சார் என்று வசீகரனை கைபிடித்து தண்ணீ பைப் இருக்கும். இடத்துக்கு அவனை அழைத்து வந்தவள் . தண்ணீரை கை நிறைய பிடித்த அவன் கண்ணீல் ஊற்ற கொஞ்சம் குறைவது போல இருந்தது.
வசீ லைட்டாக கண்ணை திறந்து பார்த்தவன். மீண்டும் கண்ணை மூட. அவன் கஷ்ட படுவதை பார்த்தவள். அவளின் தாவணியை எடுத்து வசீயின் முகத்தை துடைத்து விட்டவள். தாவணியை கொஞ்சம் மடித்து அதில் அவளின் வாய்யை வைத்து ஊதி தாவணி துணியை சுடு பண்ணி .வசீயின் கண்ணீல் வைக்க. அவனுக்கு அந்த வெப்பம் இதமாக இருந்தது.
கண் விளித்து அவள் செய்வதை பார்த்தவன். தான் டாக்டர் என்பதை மறந்து .அவன் தனக்கு வைத்தியம் பார்ப்பதை பார்த்தவன். கௌசியை வச்ச கண் மூடாமல் அவளை பார்த்தான். முதல் பார்வையில் கௌசியை விரும்பி விட்டான். இவள் தான் என் வாழ்க்கை என்று.
கௌசி அப்பாடா சரியா போச்சா. என்ன சார் நீங்க சந்தனத்தை நெத்தியில வைக்கனும் இப்படி கண்ணுல வச்சு பயப்பட வச்சுடீங்களே.
வசீகரன் கௌசியின் கை பிடித்து தாங்யூ என்றான்.
பரவாயில்லை சார் என்றவள் கிளம்ப.
ஒரு நிமிசம் என்றவன் . உன் பேர் என்ன என்றான்.
அவளோ கௌசல்யா ஸ்ரீ என்றாள்.
நான் என்றவன் அவனை பற்றி அனைத்தையும் கௌசியிடம் சொல்ல.
ஓஓ.. அப்படியா! நீங்க டாக்டர்ரா சூப்பர் சார்.
நீ… என்ன பண்ணுற. ஐ.. மீன்.. என்ன படிக்குற என்றான்.
கௌசி நான் பஸ்ட் இயர் லா என்றாள்.
வசீக்கு பார்க்க பெரிய பொண்ணு மாதிரி தெரியுற. ஆன பஸ்ட் இயர்ருன்னு சொல்லுற என்றவன். அவளையே பார்த்து நிற்க.
அவள் அவனுக்கு பாய் சொல்லிவிட்டு . அவளின் வேலையை பார்க்க சென்று விட்டாள்.
வசீ முடிவே பண்ணி விட்டான். எப்படியாவது பேசி இவளை திருமணம் பண்ணி தன்னோடு அழைத்து செல்ல.
அவனின் நண்பன் திருமணம் முடிந்தவுடன் கௌசியை பத்தி கேட்க.
வசீயின் நண்பனுக்கு ஒன்னும் தெரியவில்லை. கௌசியின் தந்தை இராஜாசெல்வத்தை பற்றி மட்டும் தெரிந்து இருக்க .
இராஜாசெல்வத்தை அழைத்து தன் நண்பனை அறிமுகம் படுத்தியவன். உங்க கிட்ட பேசனுமாம் என்றான்.
இராஜாசெல்வம் வசீயை பார்த்து சிரித்தவர். சொல்லுங்க தம்பி என்ன விசயம் என்றார்.
வசீ தன்னை பற்றி அனைத்தையும் சொன்னவன்.தனக்கு திருமணத்துக்காக வீட்டில் பெண் பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள் என்றவன். சுத்தி வழைக்காமல் நேராக விசயத்துக்கு வந்தவன். உங்க பொண்ணை எனக்கு பிடிச்சுருக்கு என்றவன்.
எனக்கு கல்யாணம் பண்ணி தாங்க என்றான்.
அவரோ யாரை சொல்லுறீங்க தம்பி என்றார்.
அதோ என்றவன் .தூரத்தில் குழந்தைகளோடு விளையாடி கொண்டிருந்த கௌசியை காண்பித்து கூற.
சாரி தம்பி அவ என் சின்ன பொண்ணு . எனக்கு இன்னும் ஒரு பொண்ணு இருக்கு. என்மூத்த பொண்ண பத்தி சொல்லுறீங்கன்னு நினச்சேன். சாரி இப்போ என் பொண்ணுக்கு கல்யாணம் பண்ணுற மாதிரி ஐடியா இல்ல . நீங்க வேற பொண்ண பாருங்க என்று கிளம்ப.
வசீ இராஜாசெல்வத்தை விட வில்லை சார் நான் பெரிய டாக்டர்.
பாரினில் வேலை செய்கிறேன். உங்க பொண்ண எனக்கு கல்யாணம் பண்ணி குடுத்த பாரின்ல படிக்க வைக்கிறேன்.இன்னும் அவரை ஒத்துக்க வைக்க அதிகபடியாக வசீகரன் பேச.
இராஜாசெல்வம் முடியாது என்று ஒரே வார்த்தையில் சொல்லி கிளம்பி விட்டார்.
வசீக்கு கோபம் பெரிய இவரு , உங்களுக்கு டாக்டர் மாப்பிள்ளை வந்து பொண்ணு கேட்ட கொடுக்க முடியாதோ என்றவன்.
கௌசியின் மேல் பார்வை போக இவள விட முடியாது என்று நினைத்தவன். அவளை பின் தொடர.
ஐயோ பாவம் அவள் வசீயை திரும்பி கூட பார்க்கவே இல்லை.
அதில் இன்னும் கோபம் கொண்டவன். அவள் படிக்கும் காலேஜுக்கு சென்று கேட் அருகில் நின்று கௌசியிடம் பேச.
அவளோ சாரி டாக்டர் சார்.எனக்கு படிக்கனும் நல்ல ஜாப் போகனும் .அதுக்கு அப்பறம் தான் கல்யாணம் சாரி என்று கிளம்ப.
வசீ சொன்ன கேளு கௌசி உன்ன எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு . நான் உன்ன பாரினில் படிக்க வைக்குறேன் என்றான்.
அவளோ என்னை படிக்க வைக்க. எங்க அப்பா ,அம்மா இருக்காங்க. நீங்க யாரு சார் இனிமே என்க்கிட்ட பேசாதீங்க என்று சென்று விட்டாள் .
வசீ எப்படி சொல்லி புரியவைக்க என்றவன். தினமும் அவளிடம் பேச முயற்சி பண்ண.
கௌசி தன் அப்பாவிடம் சொல்ல.
இராஜாசெல்வத்திற்கு என்ன செய்ய என்று நினைத்தவர். அவருக்கு தெரிந்த ஒரு போலிஸ் காரரிடம் சென்று நடந்ததை சொன்னவர். வசீகரனை கொஞ்சம் மிரட்டி விட்டா மட்டும் போதும் கேஸ் எதுவும் வேணாம் என்றவர். அவன் என் பொண்ண பாக்க வர கூடாது அவ்வளவு தான் என்றார்.
அவரோ சரிங்க சார் எனக்கு எவ்வளவு உதவி பண்ணி இருக்கீங்க. நான் வீடு கட்டும் போது இத கூட செய்ய மாட்டேன்
என்றவர் வசீயின் வீட்டிற்கு சென்று இனிமே காலேஜ் பக்கம் போன. உள்ள தூக்கி வச்சுருவேன் பாரினும் போக முடியாது பாத்து இருந்துக்கோ என்றவர்.
வசீயின் அம்மா, அப்பாவை பார்த்து.கேவளமாக பேசி சென்றார். இந்த மாதிரி பையனுக்கு உங்களால கல்யாணம் பண்ணி வைக்க முடியல என்று.
வசீ அவமானமாக இருந்தது.
வசீயின் அம்மா தென்றலை கல்யாணம் பண்ண முடிவு பண்ண.
வேற வழியின்றி தென்றலை கல்யாணம் பண்ணி பாரின் சென்று விட்டான.
தென்றல் தன் அப்பா அம்மாவை நன்றாக பார்த்து கொள்ள அவளை ஏற்று கொண்டு வாழ்ந்தான்.
ஒரு நாள் தென்றல் என் தம்பிக்கு கல்யாணம் என்று கௌசியின் போட்டோவை அனுப்பி வைக்க.அன்று முடிவு எடுத்தான்.கௌசியை சும்மா விட கூடாது என்று.
*****
கௌசிக்கு 5 மாதம் முடியும் தருவாயில் இருக்க கோடியை பாடாது பாடு படுத்தி எடுத்தாள். இது வேண்டும் ,அதுவேண்டும் என்று வாங்கி வர சொல்வாள் . உண்பதற்கு .ஆனால் அவளால் உண்ண முடியாது. இரண்டு வாய் உண்டு வைத்து விட்டு போதும் என்பாள்.
கோடியும் அவள் கேட்டதை எல்லாம் செய்வான். கௌசிக்கு 45 நாளில் இருந்தே கௌசிக்கு வாமிட் அதிகமாக இருக்க . எது சாப்பிட்டாலும் வாமிட் எடுப்பாள்.மறுபடியும் சாப்பிடுவாள் , வாமிட் எடுப்பாள் . கோடிக்கு பார்க்க பாவாமாக இருக்கும்.
சில சமயம் பாத்ரூம் வாசலில் கண்மூடி அமர்ந்து இருப்பாள். கோடி வந்து இங்கே என்ன உங்காத்து இருக்க என்றால்.
வாமிட் வருது , ஆன வல்ல என்றவள். கோடியை தன் தலையை பிடித்து விட சொல்லுவாள்.
ஒரு நாள் நல்ல இருப்பாள் . சில நாள் எழவே முடியாது . காலேஜுக்கு அவளால் சரியாக போக முடிய வில்லை. முக்கியமான நாள் மட்டும் காலேஜுக்கு சென்று வந்தாள்.
கோடி வீட்டை சுத்தம் பண்ண ஒருவர் ,வெளியில் வீட்டு வாசல் கூட்டுவது செடிகளுக்கு தண்ணி ஊற்ற என இருவரை வேலைக்கு வைத்து இருந்தான்.
வீட்டில் சமையல் எப்பொழுதும் கௌசிதான். சில சமயம் சமையல் செய்யும் போதே மயக்கம் வருவது போல வரும் . அந்த நேரத்தில் சமயல் அறையில் படுத்து இருப்பாள்.
கோடி வந்து பார்த்து ஏன் இங்கே படுத்து இருக்க என்று கேட்டால்..
எல்லாம் உங்களாள தான் என்றவள்.சில சமயம் அழுவாள். என்னால முடியல உங்க பிள்ளை என்னை பாடாபடுத்துது என்பாள்.
கௌசியை கர்பகாலம் அவளை படுத்தி எடுத்தது.
கோடி கௌசியின் தலை கோதி விட்டு ,முடியலன்ன விடு சமைக்காத என்பான்.
அவளோ அவனுக்கு சமைத்து விட்டே போய் படுத்துக்குவாள்.
பின்பு கோடி அவளுக்கு உணவை ஊட்டி விடுவான்.
கோடியை பார்த்த கௌசி என்ன உங்கல நான் டார்ச்சர் பண்ணுறேனா, இம்ச பண்ணுறேனா .நீங்க ரொம்ப நல்லவரா இருக்கீங்க என்று கூட பேசி சிரிப்பாள் கௌசி.
கோடி உனக்கு முடியல. அதுதான் என்க்கிட்ட தானே கேக்குற .என் பொண்டாட்டி , பிள்ளைக்காக என்ன வேன செய்வேன் என்று அணைத்து கொள்வான்.
கௌசிக்கு அவன் அணைப்பிலே இருக்க வேண்டும் என்று தோன்றும். சில சமயம் கோடி சார் என்பாள் . என்ன வென கேட்க அக் பண்ணி தூங்கனும் வாங்க என்பான்.
அவனோ சிரித்து கொண்டே அவளிடம் வருவான். தூங்கு என்றவன் அவளை அணைத்து தலையை வரடி விட. தூங்கிருவாள். தூங்கிவிட்டாள் என்று எழுந்தாள் எங்கே போறீங்க என்றவள். மீண்டும் அணைத்து கொண்டு தூங்குவாள்.
சில சமயம் கோபமாக பேசுவாள். பேசிவிட்டு தெரியாம பேசிட்டே என்று கோடியை கொஞ்சுவாள்.
கோடிக்கு கௌசியை பார்ப்பதே வேலையாகி போனது.
இருவரும் இது பெண் பிள்ளையா, ஆண்பிள்ளையா என்று சண்டை வரும். கௌசி எனக்கு குட்டி கோடி சார் வேணும் என்பாள்.
கோடியோ நோ எனக்கு கௌசி குட்டி தான் உன்ன மாதிரி வேணும் என்பான். இருவரும் பாப்போமா என்பார்கள்.
கௌசி நான் உங்க மேல அதிகமாக பாசம் வச்சு இருந்தேனா ,எனக்கு ஆம்புள பையன் பிறக்கும் உங்கள போல.
அப்படி இல்ல பொம்பள பிள்ள பிறந்த நீங்க தான் என் மேல அதிகமாக பாசம் வச்சு இருக்கீங்க ஓகே வா என்பாள் கோடியிடம்.
அவனும் பாப்போம் எனக்கு குட்டி கௌசி வேணும் என்று அவளை சீண்டுவான். அவளோ முறைத்து விட்டு பாப்போம் என்பாள்.
தென்றலுக்கு 9 மாதம் முடியும் தருவாயில் வசீ இந்தியா வந்து இறங்கினான். வசீ வந்த இரண்டாம் நாள் வளைகாப்புக்கு ஏற்பாடு ஆனது.
நாளை தென்றலுக்கு வளைகாப்பு என்று இருக்க. கௌசியை நீ வா , வளைகாப்புக்கு என்று யாரும் கூப்பிட வில்லை .
ஏன் குருவம்மாள் சம்பந்தி முறைப்படி கமலத்தை வளைகாப்புவிற்கு வாருங்கள் என்று அழைக்க வேண்டும்.ஆனால் அழைக்க வில்லை.
கௌசிக்கு ஏன் என்று தெரியவில்லை .கமலம் ஊரில் ஒரு திருமணம் என்று இன்று கிளம்பினார்.
கமலம் மகளிடம் பார்த்து கவனம் மனசு ஏனோ எனக்கு சரியாபடல மகளை கவனம் சொல்லி சென்றார்.
கோடீஸ்வரன் தென்றல் வளைகாப்பிற்கு தங்க வளையல் வாங்கி இருந்தான் . அதை கௌசியிடம் காண்பிக்க ஆசையாக பார்த்தவள் நல்லா இருக்கு என்றாள்.
ஏதோ ஞாபகம் வந்தவளாக. ஆமாம் என்னை அன்னைக்கு இடுப்புல அளவு எடுத்தாங்கல என்ன அது , அது எங்கே என்றாள்.
கோடி சிரித்து கொண்டே பீரோவை திறந்து ஒரு பாக்சை அவளிடம் தர.
அதை திறந்த பார்த்தவள். என்ன இது இவ்வளவு பெருச இருக்கு செயினா என்றாள். அதில் இருக்கும் முத்துக்கள் அதன் வேலைப்பாடுகள் அழகாய் இருந்தது.
கோடி இது செயின் இல்ல. என்றவன். அதை வாங்கி அவள் இடுப்பில் மாட்டிவிட.
கௌசிக்கு வெட்கமாக இருந்தது .
மாட்டி விட்டவன் அந்த இடத்தில் முத்தம் வைக்க.
கௌசி கோடியிடம் உருகி நின்றாள். போதுமா என்றவன் இதை நீ கலட்ட கூடாது . எவ்வளவு வேணுமோ பெருசு பண்ணிக்கலாம் எஃஸ்ட கொக்கி இருக்கு என்றவன் விலக. கௌசி அவனை விடவில்லை.
கோடி ஏய் சும்மா இரு டி என்றான் . அவளோ நான் சும்மா தான் இருந்தேன் நீங்க தானே இத மாட்டி விட்டீங்க என்று அவளின் இடுப்பு செயினை காட்ட.
அவ்வளவு தான் மாட்டுனடி அப்பறம் அங்க வழிக்குது ,இங்க வழிக்குது சொன்னா என்றான் அவளை தூங்கிபடியா .
சொன்னா என்ன கோடி மாமா இருக்காரே அத சரி பண்ண என்றவன் அவனிடம் நெருக்க.
அழகான கூடல் இருவருக்கும் .
கோடியை அனைத்து கொண்டே கௌசி கேட்டாள். ஏன் உங்க வீட்ல இருந்து யாரும் என்னை தென்றல் அண்ணி வளைகாப்புக்கு கூப்பிடலை.
கோடிஸ்வரன் என்க்கிட்ட சொன்னா போதாதா கௌசி என்றான்.
இல்ல ஒரு வார்த்தை இத்தன மணிக்கு வளைகாப்பு வான்னு. யாரும் என்று சொல்ல.
நீயும் நானும் ஒன்னு உன்கிட்ட சொன்னா என்ன? என்க்கிட்ட சொன்னா என்ன.நம்ம வீட்டு விசேசம் ,தேவையில்லாமல் பேசாத என்றான்.
என்ன தேவையில்லாமல் பேசுனேன். உங்க அம்மா போன் பண்ணி வான்னு சொல்ல கூடாத. தென்றல் அண்ணி கூட என்ன ஒரு வார்த்தை வா கௌசியின்னு சொல்ல கூடாதா.
இப்போ என்னடி உனக்கு பிரிச்சனை உன்னை வந்து எல்லோரும் வெத்தல பாக்கு வச்சு . நீ வாம்மான்னு அழைக்கனுமா.
நான் அப்படி சொல்லலை.
இப்ப என்ன நான் கூப்புடுறேன். என் அக்கா வளைகாப்புக்கு வாங்க கௌசி மேடம் போதுமா என்றான்.
கௌசிக்கு கோடி பண்ணின பாவனையில் சிரிப்பு வர.
கோடிஸ்வரன் கௌசியின் இடுப்பை பிடித்து கிள்ளி விட. அவனை அணைத்து கொண்டு மேலும் சிரித்தாள்.
கௌசியின் தலை கோதிய கோடி. குருவம்மாள் சொல்லியதை சொன்னான் ஒரு வீட்டில் இரண்டு பேரு மாசமா இருந்தா ,இரண்டு பேரும் , நேருக்கு நேர் பார்த்துக்க கூடுதாம். அப்படி பார்த்தால் ரெண்டு பேர் குழந்தைக்கு ஆகாதாம். நீங்க ரெண்டு பேரும் என் கண் மாதிரி. இரண்டு பிள்ளைகளும் நம்ம வீட்டு வாரிசு சரியா என்றான்.
இருவரும் காலையில் எழுந்து கிழம்பி கொண்டு இருக்க . ஏதோ கருப்ப கலர் பறவை கோடியின் வீட்டினுள் சுற்ற .கௌசி அதை பார்த்தவள் கதவை திறந்து வைத்து போ , போ என்று விரட்ட. அந்த பறவைக்கு வழி தெரியாமல் கௌசியின் தலையில் தட்டி விட பயந்து போனால் கௌசி. மீண்டும் பறந்த பறவை பேனில் அடிபட்டு கீழே விழ.
கௌசி அருகில் வந்து என்னாச்சு பறவைக்கு என்று பார்க்க. அந்த பறவை பார்த்தவள் பயந்து போனால் அந்த பறவை வௌவாள் குட்டி ,
கொடிஸ்வரன் வந்தவன் அந்த பறவை தூக்கி வெளியில் விட அது மெல்ல பறந்து போனது.
கௌசியிடம் கை கழுவி வந்தவன். பறவைக்கு ஒன்னும் ஆகல என்றவன் போய் கிளம்பு என்றவன் தெரியாமல் சோபாவில் கோடியின் கால் இடித்து விட.
கௌசி பயந்து போய் கணவன் அருகில் வந்தவள் கோடியின் காலை தேய்த்து விட . வழி கொஞ்சம் குறைந்தது.
கௌசியின் கலக்கிய முகத்தை பார்த்தவன். என்னடி மூஞ்சு டல்லா இருக்கு .
எனக்கு ஏனோ மனசு சரி இல்ல அத நாளா நான் வளைகாப்புக்கு வரல என்றாள் கௌசி.
தேவையில்லாமல் பயப்படுற போய் கிளம்பு டைம் ஆச்சு என்றவன்.
அவள் கிளம்பி வரவும் இருவரும் வளைகாப்புக்கு நடக்கும். மண்டபத்துக்கு சென்றனர்.
மண்டப வாசலிலே குருவம்மாள், சுந்தர் ,மண்மொழி என்று அணைவரும் இருக்க.
மணிமொழி கௌசியிடம் வந்து எப்படி இருக்க கௌசி என்றவள் அணைத்து கொண்டாள். எத்தனை மாசம்?
5 முடிய போகுது அக்கா என்றாள்.
வா உள்ள போலாம் என்க.
குருவம்மாள் மணிமொழியிடம் ஒரு வேலையை சொல்லி உள்ளே அனுப்பியவர் கௌசியை என்னோடு வா என்று அழைத்து இந்த ரூம்புல இரு.
தென்றல் முன்னாடி வந்துறாத.அப்பறம் அவ குழந்தைக்கு ஏதாவது ஆகிறும்.நான் வந்த கூப்பிட்டு தான் வரனும் என்க.
தலையை ஆட்டி உள்ளே செல்ல. அங்கே இவளை போல சில கர்ப்பிணி பெண்கள் அமர்ந்து இருக்க. இவளையும் சேர்த்து மொத்தம் 7 பேரு இருந்தனர்.
கௌசி அவர்களிடம் பேச்சு குடுக்க. அவர்கள் குருவம்மாள் விட்டு பக்கம் உள்ளவர்கள் ,சிலர் உறவினர் . எதற்கு இங்கே இருக்கீங்க என்று கேட்க.
குருவம்மாளிள் வீட்டு பழக்கம் படி. வளைகாப்பு பண்ணும் பொழுது. ஒரு 5 இல்ல 7 பேர் கர்ப்பிணி பெண்களை அழைத்து அவங்களுக்கு வளையல் போட்டு, சாப்பாடு போட்ட. வளைகாப்பு பண்ணுற பொண்ணுக்கு நல்ல படிய குழந்தை பிறக்குமாம் என்றாள் ஒரு கர்ப்பிணி பெண்.
கௌசிக்கு அதுக்குதான். நம்மல இங்க உங்கார வச்சு இருக்காங்க.
அவளுக்கு தென்றலின் வளைகாப்பை பார்க்க ஆசையாக இருந்தது. ஜன்னல் இடைவெளியில் பார்த்து கொண்டு இருந்தாள். சரியாக தெரிய வில்லை.
அங்கே தென்றலுக்கு வளைகாப்பு நடந்து கொண்டிருந்தது மணிமொழி வெள்ளி வளையல் போட, குருவம்மாள் மகளுக்கு தங்க வளையல் , வசீ தென்றலுக்கு வைரம் பதித்த தங்க வளையல் போட. கோடி கௌசியை தேடினான்.
குருவம்மாள் அந்த ரூம்புல இருக்க என்றவர். அவ இங்கே வர கூடாது என்றார்.
சரி என்ற கோடி மனைவியிடம் சென்றான்.
கௌசி கோடியிடம் வளைகாப்பு முடிஞ்சத என்றாள்.
ம்ம் என்றவன். உள்ளே பார்க்க இவளை போல நிறைய கர்ப்பிணி பெண்களை பார்த்தவன் என்ன என்று கேட்க.
குருவம்மாள் சொல்லியதை சொல்ல.
கோடிக்கு கௌசியை ஒதுக்கி வைத்தது போல் தெரிய. அவளின் கை பிடித்து சாரி கௌசி உன்ன இப்படி உங்கார வைக்க போறாங்கன்னு தெரிஞ்சு இருந்த உன்ன வீட்டில விட்டு வந்து இருப்பேன்.
கௌசியின் கலங்கிய கண்களை மறைத்து கொண்டு பராவயில்லை நம்ம அண்ணி நல்லதுக்கு தானே .
கோடி எது நல்லது என்று பல்லை கடித்தவன். விசேசம் நல்ல படியாக நடக்கனும் என்று நினைத்து அமைதியாக இருந்தான்.கௌசியிடம் தென்றலுக்கு வாங்கிய வளையலை கேட்க.
கௌசி அவளின் பேக்கில் இருந்து . வளையலை எடுத்து அண்ணி நல்ல இருக்கணும் , நல்ல படியா குழந்தை பிறக்கனும் என்று மனதில் வேண்டிய படியே கோடியிடம் வளையலை கொடுக்க.
அவள் வேண்டியதை பார்த்தவன். உன் சார்பில் நான் போடுறேன் என்றவன். நான் வந்து சாப்பிட்டு நாமா கிளம்பலாம் என்றான்.
தென்றலுக்கு வளைகாப்பு முடிய.
7 கர்ப்பிணி பெண்களும் ஒன்றாக உங்கார வைத்து வளையல் போட கௌசிக்கு மட்டும் மணிமொழி தனியா கல்பதித்த கண்ணாடி வளையலை கை நிறைய அணிவித்தாள். எல்லோருக்கு மங்கள பொருள் வழக்கபட்டது.
மண்டபத்தின் மேலே உள்ள இடத்தில் முதலில் 7 கர்ப்பிணி பெண்களுக்கு உணவு பரிமாற. கௌசி ஒரு நிமிசம் ரெஸ்ட் ரூம் சென்று வருவதாக சொல்லி விட்டு செல்ல.
கௌசி ரெஸ்ட் ரூம் சென்று வரும் போது .
கௌசியை பிடித்து கொண்டான் வசீ.
முதலில் வசீயை கௌசிக்கு ஞாபகம் வரவில்லை.. பின்பு யோசித்து, டாக்டர் சார் என்றாள்.
வசீ அவளை ஏளன பார்வை பார்க்க .
அவனை முறைத்து அவள் கிளம்ப.
வசீ கௌசியின் கைபிடித்து முறுக்கி இருந்தான்….
error: Content is protected !!