Skip to content
Post Views: 2,756
மின்னல் ஒரு கோடி
அத்தியாயம் – 17
Advertisement
கோடிஸ்வரன் வீட்டு வாசலில் 10 ,20 பேர் நின்று இருக்க. காலையில் என்ன விசயமா வந்து இருக்கீங்க என்றான் கோடி. இப்பொழுது கோடிஸ்வரன் அந்த ஏரியாவில் எம் ,எல் ,யே வாக இரண்டு வருடமாக இருக்கீறான்.
Advertisement
அவனிடம் உதவி கேட்டு தான் அனைவரும் வந்து இருக்க. அனைவரிடம் என்னவென்று கேட்டு நாளைக்குள் நடந்து விடும் என்று சொல்லி அனுப்பி விட்டான்.
Advertisement
கோடிஸ்வரனிடம் இரண்டு பேர் எப்பொழதும் உடன் இருப்பர். அவர்களிடம் எல்லாவற்றையும் சொன்னவன். நாளைக்குள் எல்லா பிரிச்சனையும் முடிந்து இருக்கனும் என்றவன். நிமிர்ந்து கௌசியின் வீட்டை பார்க்க . அந்த வீடு ஆட்கள் இல்லாமல்.தூசி அடைந்து போய் இருக்க .மாதம் ஒரு முறை இருவர் வந்து வீட்டை சுத்தம் பண்ணி செல்வார்.
Advertisement
கோடி கௌசியை பார்த்து 4 வருடம் ஆகிறது.அவனுக்கு என்ன குழந்தை பிறந்தது என்று கூட இன்னும் தெரிய வில்லை ,5 நிமிடம்,கௌசியின் வீட்டை பார்த்தவன் .பின்பு அவன் அன்றாட வேலையை பார்க்க சென்றான்.
கோடிக்கு கௌசியின் நினைப்பு வராமல் இருக்க. நிறைய வேலைகளை வைத்து செய்து கொண்டான்.
தன் மனைவி இன்றோ, நாளையோ தன்னை தேடி வருவாள் என்று நினைத்து இருந்தான். நாட்களாகி பின்பு வருடமாகி ஓடியது.
அன்று கௌசல்யா ஸ்ரீ மண்டபம் விட்டு சென்ற பின் .சிறிது நேரத்தில் தென்றலுக்கு பிரசவ வலி வந்து .ஹாஸ்பெட்டலில் சேர்க்க பட்டாள் தென்றலுக்கு கொஞ்ச நேரத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தென்றலின் குழந்தை பார்ப்பதற்க்கு வசீயை போலவே இருந்தான .மொத்தக் குடும்பம் அங்கே தான் இருந்தது. மிகவும் சந்தோஷமாக அனைவரும் இருந்தனர்.
குழந்தை பிறந்து இரண்டு நாளாகியும் ,குழந்தை பாத்ரூம் போகாமல் இருக்க.குழந்தைக்கு இயற்கையாக இருக்க வேண்டிய பாத்ரூம் வரம் இடத்தில் துவாரம் இல்லாமல் இருக்க.
மொத்த குடும்பம் அதிர்ச்சி அடைந்தது. அதை கண்டு பிடித்து குழுந்தைக்கு. சிகிச்சை ஆரம்பிக்க.குழந்தை நீல கலரில்,ஆக ஆரம்பிக்க.குழத்தையின் இதயத் துடிப்பும் ,குறைந்து கொண்டே போக. குழந்தைக்கு ஆப்ரேஷன் பண்ணாலும் பிழைக்க வாய்ப்பு இல்லை என்று சேயர்க்கை சுவாசம் பொறுத்தி இருக்க. குழந்தை இக்குபெட்டரில் வைத்து இருந்தனர். ஒரு கட்டத்துக்கு மேல் ஒன்னும் பண்ண முடியாது என்று .
குழந்தை ஐ,சி.யூவில் இருந்தது. குழந்தையை எடுத்து வந்து குடுங்க. யாரும் குழந்தையை வாங்க வில்லை .
இரண்டு வாரமாக குழந்தையை நினைத்து அழுது , அழுது ஓய்ந்து போகியிருந்தனர்.
கோடிஸ்வரன் இரண்டு கையை விரித்து குழந்தையை வாங்கி கொண்டான். இன்னும் சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விடும் என்று சொல்லி கொடுக்க..
மொத்த குடும்பம் அழது கொண்டு இருந்தது.
அனைவரையும் சுந்தரும், கோடியும் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். ஹாஸ்பெட்டலின் வரண்டாவில் அமர்ந்து இருந்தான்கோடி . தன் கையில் இரண்டே வாராங்களான குழந்தை , தென்றலின் ஆண் வாரிசு.
தென்றல் கோடியின் தோளில் சாய்ந்து இருந்தாள்.
தென்றல் கண்ணீல் கண்ணீர் கூட வத்தி போகிற்ரு.நான் என்ன பண்ணேன் எனக்கு ஏன் இப்படி ஒரு குழந்தை.இந்த குழந்தை என்ன பண்ணியது. இதற்கு எனக்கு குழந்தை பாக்கியம் இல்லாமலே இருந்துருக்கலாமே என்றாள் மனதில்.
கோடிஸ்வரன் ஒரு கையில் தென்றலை பிடித்து இருக்க, மறுகையில் குழந்தை மனதில் சொல்ல முடியாத வலி.நெஞ்சு வலிப்பது போல் இருந்த்து. கோடிக்கு கத்தி அழ தோன, அழமுடிய வில்லை.
வசீயும் குழந்தையின் பக்கத்தில் தான் இருந்தான் . நான் டாக்டராக இருந்தும்.தன் மகனை காப்பாற்ற முடிய வில்லையே என்று வேதனையில் அமர்ந்து இருந்தான். ஒரு வேள கௌசிக்கு பண்ணியதற்க்கு பதில் தனக்கு தண்டனை கிடைத்து விட்டதோ என்று எண்ணினான். ஒரு முறை அனைத்தையும் நினைத்து பார்த்தான் .நான் தானே கௌசியை விரும்பினேன்.நான் தானே அவளை சுற்றி வந்தேன். என்னை கல்யாணம் பண்ண தொல்லை பண்ணேன்.அவள் ஏதும் செய்ய வில்லை .அவள் தனக்கு கிடைக்காமல் போனதற்க்கு . அவளுக்கு இன்று நான் குடுத்த தண்டனை பெரியது என்று நினைத்து வருந்த, வருந்தி என்ன ப்பிரியோஷனம் .
குழந்தை மூச்சு விட சிரம பட்டு சிறிது நேரத்தில் இறந்து விட.
தென்றல் தம்பியின் தோளில் சாய்த்து கொண்டு அழுதாள் .என் பிள்ளை, என் பிள்ளை என்று .
வசீகரன் தென்றலை அணைத்து கொண்டு அழும் மனைவியை ஆறுதல் படுத்த.
கோடிஸ்வரன் தன் மருமகனை மார்போடு அனைத்து கொண்டான். அவன் உள்ளம் அழுதது.கண்ணீல் நீர் .எங்க வீட்டுக்கு வந்த உன்னை பாத்துக்க முடியலடா கண்ணா என்றான் குழந்தையிடம . நீ இன்னும் ஒரு பிறவி எடுத்து நல்ல படியாக ,எந்த குறையும் இன்றி பிறந்து வாழ வேண்டும்மட கண்ணா என்றவன்.குழந்தையின் நெத்தியில் முத்தமிட்டு , சுந்தரிடம் கண் காண்பித்து,அவனே குழந்தையை எடுத்து சென்று விட்டான். அவர்களின் தோட்டத்தில் அந்த பிஞ்சு குழந்தையை புதைத்து விட்டு வந்தான்.
குழந்தை இறந்து இரண்டு வாரங்களில் வசீ தென்றலை அழைத்து கொண்டு பாரின் கிளம்ப.
தென்றலை வழி அனுப்பி வைக்க கோடிஸ்வரன் வந்து இருந்தான்.
தென்றல் தம்பியிடம் பேசிவிட்டு.தன் மாமியாரிடம் பேசிக்கொண்டு இருக்க.
வசீகரன் கோடியிடம் உங்க கிட்ட தனியா பேசனும் என்று தனியே அழைத்து வந்தவன்.
கௌசியின் போனை கோடிஸ்வரனிடம் கொடுத்து மன்னிச்சுரு கோடி என்றான்.
அவனோ இவன் சொல்லும் முன். வசீயின் மீது தான் தப்பு என்று. கோடியின் நண்பன் பார்த்திபன் வசீயை பத்தி சொல்லி இருக்க.
கௌசியின் போனை வாங்கி. அவன் பையில் வைத்தவன் .என் பொண்டாட்டியை பத்தி எனக்கு தெரியும். நீ தென்றலை ஒழுங்கு பாத்துக்கோ என்றவன்.நீ என்னிடம் பேச கூட உனக்கு தகுதியில்லை என்று சென்று விட்டான்.
தென்றலுக்கு இப்போது பெண் குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது.
தென்றல் கோடியிடம் கௌசியை போய் பார் , கூட்டிட்டுவா என்று சொல்ல.
என்னை தேடி கௌசி வருவ என்றானே தவிற வேற ஏதும் பேசவில்லை.
குருவம்மாள் கூட ஒருமுறை,அந்த பொண்ண போய் கூட்டிட்டு வந்து வாழு டா என்றார்.
எந்த பொண்ணை என்றான் குருவம்மாளிடம் கோடி.
குருவம்மாள் கோடி உன் வாழ்க்கை என்று இழுக்க.
அது போயி ரொம்ப வருஷமாச்சும்மா.என் வாழ்க்கையின்னு நீங்க நினச்சு இருந்தா.என் பொண்டாட்டி இன்னைக்கு என் கூட இருந்து இருப்பாள். நம்ம யாரும் அவளை நம்மல, அவள அடிச்ச, கஷ்டபடுத்தி மன்னிப்பு கேக்க வச்சு அவள துரத்தி விட்டாச்சு. ஒரு தப்பும் செய்யாதவளை என்று கூற.
குருவம்மாள் மீண்டும் அவ மாப்பிள்ளையை அடிச்சது தப்பு.
ஒரு பொண்ணு கிட்ட தப்பா நடந்து கிட்ட யாரா இருந்தாலும் அடிக்க தான் செய்வாங்க என்றவன். வசீயை பத்தி அனைத்தையும் சொல்ல.
குருவம்மாள் அப்படியா என்றவர். எனக்கு மாப்பிள்ளை பத்தி தெரியாது கோடி , அவரை நான் நம்பினேன் என்றார்.
இதை பத்தி தென்றலிடம் சொல்லாதிங்க என்றவன்.அவள எல்லோரும் சேர்ந்து கஷ்ட படுத்திட்டோம் அம்மா. அவளே என்னை தேடி வரட்டும். நான் அவளை தேடி போய் கஷ்ட படுத்த விரும்பல என்றுவிட்டான்.
கோடிஸ்வரன் தனது வேலைகளை முடித்து வீட்டுக்கு வர.
கௌசியின் வீட்டு வாசலில் . சிறிது நேரம் நின்றவன்.பின்பு அவன் வீட்டுக்கு சென்று விட்டான். கோடிஸ்வரன் காலையில் ஏதோ சத்தம் கேட்டு வெளியில் வர.கௌசியின் வீட்டு வாசலில் கயிறு, கட்டை, பெயின்ட் என்று அனைத்தும் இறங்க.
வெளியில் வந்தவன். அவர்களிடம் என்ன? எல்லாம் வந்து இறங்குது என்று கேட்க. அங்கே உள்ளவர்களுக்கு ஒன்னும் தெரியவில்லை. இறக்க சொன்னாங்க சார் வேரெதுவும் தெரியாது. இந்த வீட்டுக்கு பெயின்ட் அடிக்க சொன்னாங்க என்றான் ஒருவன். அதோ அவருதான் பெயின்டிங் கான்டிரக்ட் எடுத்தவர் வரார் பாருங்க.
கோடீஸ்வரன் அவரிடம் சென்று என்னவென்று விசாரிங்க.
இந்த வீட்டில் இருக்குற பையனுக்கு கல்யாணமாம் சார். இன்னும் 2 வாரத்துல குள்ள, வீடு் முழுவதும் பெயின்ட் அடிக்க சொல்லியிருக்காங்க என்று கூற.
கோடி சிவாவுக்கு கல்யாணமா என்று நினைத்தவன்.எல்லோரும் வருவாங்கல என்றவன்.மனதில் சந்தோஷ பட கௌசி வரும் நாட்களை எதிர் பார்த்தான்.
கௌசியின் வீட்டு பெயின்டிங் வேலைகள் மட ,மடவென முடிந்தது.
தினமும் காலையும், மாலையும் கோடி ,கௌசியின் வீட்டை பார்த்து சொல்வான். யாரவது வந்து இருக்கீறார்களா என்று.
கோடிஸ்வரன் விடியற்காலையில் நன்றாக தூக்கி கொண்டு இருக்க.காரின் சத்தம், கமலத்தின் சத்தம் கேட்க கௌசியின் வீட்டை பார்த்தான் கோடி.
இராஜா செல்வம் காரில் இருந்து பேக்குகளை எடுத்து உள்ளே சென்று வைத்து கொண்டு இருந்தார்.
கீழே வந்து பார்க்க. இராஜாசெல்வம் உள்ளே சென்று விட்டார்.
கோடி யார் வந்து இருப்பார் , கௌசி வந்து இருப்பாளா என்று நினைத்தவன். கௌசியின் வீட்டு வாசலிலே வந்து நின்று பார்க்க. கமலத்தின் குரல் கேட்டது ,பின்பு ஒரு குழந்தையின் சத்தம் கேட்க.
அது என் குழந்தைதான். ஆணா,பெண்ணா என்று பார்க்க ஆசையாக இருக்க.
கௌசியின் வீட்டுக்கு செல்ல கால்கள் வர வில்லை. உள்ளே சென்று பார்த்தால் கமலம் யார் நீ? எங்கே வந்த . ஏன் இவ்வளவு நாள் வரல , எங்க போன என்று கேட்டால் என்ன செய்வது என்று வாசலிலே நிற்க.
கோடிஸ்வரனின் மகன் வெளியே ஓடி வந்து பந்தை எடுத்து உள்ளே செல்ல.
கோடி எனக்கு பையன் பிறந்து இருக்கான். ஆனால் அவனை பிறந்தவுடன் பாக்க முடியல. இப்போ கூட சரியா முகம் கூட தெரியல. என்ன மனிதன் நான். என் பிள்ளையை உரிமையா பாக்க கூட முடியாத பாவி ஆகிட்டேன் என்று புலம்பிய படியே அவனின் வீட்டின் வாச படியில் அமர்ந்து விட.
சிறிது நேரத்தில் கமலத்தின் சத்தம் வாசலில் கேட்க.
கோடி எழுந்து நின்று அவன் வீட்டில் இருந்து பார்க்க.
கமலம் அவரின் பேரனுக்கு இட்லி ஊட்டி கொண்டே பேச. கமலம்மா பேட்டு பால் விளையாட போறேன். செல்வம் அப்பாவை கூப்பிடு என்று சொல்ல. டேய் முதல்ல சாப்பிடு அப்பறம் விளையாடலாம் என்றவர் ஊட்டி முடித்து . கொஞ்சம் நேரம் கழித்து விளையாடலாம் என்று உள்ளே செல்ல.
குழந்தை கமலத்திடம் கோபம் கொண்டு வாசலில் நின்று இருக்க.
கமலம் டேய் உள்ளே வாடா .
போ மா .பேட் பால் விளையாடனும் என்று இராஜா செல்வத்தை அழைக்க.
இராஜாசெல்வம் சிரித்து கொண்டேன் பேரனிடம் வாடா கண்ணா நாமா விளையாடலாம் என்று இருவரும் விளையாட.
இராஜாசெல்வம் பால் போட, குழந்தை பேட் ஆடிக்கொண்டு இருந்தான். ஒரு பந்தை வேகமாக அடித்து விட்டான் குழந்தை. அது கோடிஸ்வரனின் வீட்டில் சென்று விழ. நீ இரு தாத்தா நான் போய் எடுத்து வரேன் என்று கோடியின் வீட்டு வாசலில் வந்து நிற்க.கேட் திறந்தே இருக்க. பாலை தேடிக்கொண்டே இருந்தான் குழந்தை.
கோடி பந்தை எடுத்து கொண்டு தன் மகனை பார்க்க.
யாரோ உயரமான ஒருவர் பந்தை வைத்திருப்பதை பார்த்த. துருவ கோடிஸ்வரன், கோடியை பார்த்து நைனா என்று கூப்பிட.
தன் மகன் தன்னை நைனா என்றவுடன்.குழுந்தையை தூக்கி அணைத்து ஆசை தீர முத்தம் மிட்டு. என்னை தெரியுமா என்றான் குழந்தையிடம்.
குழந்தை ம்ம் என்று தலையாட்ட.
நான் யாரு உனக்கு என்று கேட்க.
நீங்க என் நைனா மம்மி சொல்லி இருக்காங்க.
கோடிஸ்வரன் ஏற்கனவே கௌசியிடம் சொல்லி இருந்தான். என் பிள்ளை ,என்னை நைனா என்று தான் கூப்பிட வேண்டும் என்று.
கௌசிக்கு அந்த நைனா என்பது ஓல்டாக தெரிய வேண்டாம் என்றாள்.
கோடிஸ்வரன் அந்த நைனா என்ற வார்த்தை ஓல்டா இருந்தாலும். என் நைனாவை கூப்பிடம் போது. எனக்கு பீல் இருக்கும்.அதே மாதிரி என் பிள்ளை ,என்னை நைனாயின்னு தான் கூப்பிடனும் என்று சொல்லி இருந்தான்.
கோடிஸ்வரன் தன் மகனிடம். உன் பேர் என்னடா?
என் பேரு துருவ கோடிஸ்வரன் என்றது குழந்தை.
மீண்டும் துருவாவை அணைத்தவன். அம்மா எங்கேடா.
அம்மானா கமலம் அம்மாவா என்று குழந்தை கேட்க.
இல்லடா கௌசி அம்மா.
கௌசி அம்மா இல்ல, மம்மி என்றது குழந்தை.
சரி மம்மி எங்கே ?
கௌசி மம்மி கோர்ட்டுக்கு போகியிருக்காங்க. சிவா மாமா கல்யாணத்துக்கு வருவாங்க.
இருவரும் பேசி கொண்டதை பார்த்த இராஜா செல்வம் எப்படி இருக்கீங்க மாப்பிள்ளை என்றார்.
நான் நல்ல இருக்கேன் மாமா என்றான்.
துருவா செல்வம் தாத்தா, எங்க நைனா பாத்தீயா எவ்வளவு ஹைட்டா இருக்காரு என்று சொல்லி கோடியின் கழுத்தை கட்டி கொள்ள.
கோடிவரன் தன் மகனை அணைத்து கொண்டே இராஜாசெல்வத்திடம் சிவாவுக்கு எப்போ கல்யாணம் .
இன்னும் 1 வாரம் இருக்கு மாப்பிள்ளை .சிவா வந்தவுடனே உங்களுக்கு பத்திரிக்கை கொடுக்க வாரேன். என் நண்பனோட மக தான் கல்யாண பொண்ணு.
கமலம் வீட்டினுள் இருந்தே துருவ குட்டி என்று அழைக்க.
இதோ பாட்டி என்றவன்.கோடியிடம் நான் வரேன் நைனா. கமலம் அம்மா கூப்பிடுறாங்க என்று கோடியிடம் இருந்து கீழே இறங்கி ஓடிவிட.
கோடி தன் கையை விட்டு ஓடிய குழந்தையை பார்த்து இருந்தான்.
இராஜா செல்வம். கௌசி எங்களை அம்மா ,அப்பான்னு கூப்பிடறத பார்த்த துருவா எங்களை அம்மா ,அப்பான்னு கூப்பிடுவான். நீங்க ஒன்னும் தப்ப எடுத்துக்காதீங்க என்று
கிளம்பி விட்டார்.
வீட்டின் உள்ளே வந்த துருவா கமலத்திடம் .கமலம்மா நான் என் நைனாவை பார்த்தேன். எவ்வளவு பெருசா இருக்காரு என் நைனா தெரியுமா என்று கையை உயர்த்தி காட்டியவன். எங்க நைனா பிக் நைனா என்று சொல்லி். நீ மம்மிக்கு போன் போடு மம்மிட்ட பேசனும்.
கமலம் அவ வேலையா இருப்பாடா. அவளே கூப்பிடுவா. நீ கொஞ்சம் நேரம் தூங்கு என்றவர் ரூம் அழைத்து சென்றார்.
இரண்டு நாள் கழித்து சிவாவும், இராஜாசெல்வமும் கோடிக்கு காம்புளக்ஸுக்கு வந்து சிவாவின் திருமணத்திற்க்கு கோடிஸ்வரனை கல்யாண பத்திரிக்கை வைத்து அழைக்க.
கோடிஸ்வரன் கண்டிப்ப வரேன் என்றானே தவிற கௌசியை பத்தி ஒரு வார்த்தை பேச வில்லை.
கோடிஸ்வரனின் கண்கள் கௌசி வீட்டை பார்த்து . மனைவியை தேடியது. எங்கே இருக்காள், இன்னும் காணலயே என்று தேடிக்கொண்டு இருக்க. துருவாவை காலை, மாலை பார்த்து கொஞ்சிவிட்டு போவான்.
கமலத்துக்கு கோடியின் மீது கோபம் .தன் மகளை அப்படியேவிட்டு விட்டாரே என்று . இப்போ கூட வந்து . தன் மகளை பத்தி தன்னிடம் ஒரு வார்த்தை கேக்காமல். மகனை மட்டும் தூக்கி கொஞ்சம் கோடியின் மீது கோபம். கோடியின் அக்கா என்று ஒரு அழைப்பு போதும் கமலம் அனைத்தையும் விட்டு பேசிவிடுவார்.
கோடிக்கு தான் பேசி .அவர் பேசவில்லை என்றால். என்ன செய்வது என்று அமைதியாகி விட.
சிவாவின் கல்யாண நாள் வந்தது.
கோடிஸ்வரன் யாரோ போல் தான் கல்யாணத்துக்கு வந்து இருந்தான்.
கல்யாணத்தில் கூட்டம் அதிகமாக இருக்க. கோடி மண்டபத்தின் நடுவில் சென்று அமர்ந்து கொண்டான்.
மண்டப நுழைவாயில் இராஜா செல்வம் கோடியை பார்த்து மருமகனை கட்டி அணைத்து. முதல் வரிசையில் அமருமாறு சொல்லி இருந்தார்.இவனோ நடுவில் போய் அமர்ந்து இருந்தான்.
கல்யாண கூட்டத்தில் கோடியின் கண்கள் மனைவியை தேட.
கௌசி நேற்று நள்ளிரவு தான் வீடு வந்து இருந்தாள்.
கமலம் துருவாவை இடுப்பில் வைத்து கொண்டே கல்யாண வேலைகளை பார்த்துக்கொண்டு் இருந்தார்.
துருவா கமலத்தின் இடுப்பை வீட்டு இறங்க வில்லை.கல்யாண கூட்டத்தை பார்த்து.
கோடியின் கண்கள் கௌசியை தேடிக்கொண்டு இருந்தது.
கௌசி மணமகள் அறையின் இருந்தாள். ஐயர் கல்யாண பொண்ணை அழைச்சுட்டு வாங்க என்று சொல்ல. நந்துவும், கௌசியும் கல்யாண பொண்ணை கைபிடித்து அழைத்து வர.
அப்பொழுது தான் கோடி கௌசியை பார்த்தான்.
இளம் சிவப்பு நிற புடவை கட்டி இருந்தாள். கௌசி நல்ல உயரமான பெண் .இன்று அவள் கன்னம் எல்லாம் வத்தி போய் ஒல்லியாக இருந்தாள்.பாதி முடி காணாமல் போய் இருந்தது.புதுசாக ஒரு கம்பீரம் வந்து இருந்தது. அவள் நடையில் வித்தியாசம் தெரிந்தது. நந்தினியும் கௌசியின் அருகில் இருந்தாள். நந்து பார்ப்பதற்க்கு கொஞ்சம் குண்டாக ,முகத்தில் அத்தனை சந்தோஷம்.
கௌசியின் முகத்தில் ஒரு இருக்கம் போல் இருந்தது.
மணமேடை வந்தவுடன், கல்யாண பொண்ணை சிவா அருகே அமர வைத்து.கௌசி கமலத்தை பார்க்க துருவா கௌசியிடம் தாவி இருந்தான்.
கோடிஸ்வரன் தன் மனைவியையும் மகனையும் பார்த்து இருந்தான்.
கௌசியின் கண்கள் முதல் வரிசையை பார்க்க அங்கே கோடி இல்லை என்று மனம் வருந்துவதை பார்த்தவன்.
இவள் தான் என்னை முதல் வரிசையில் அமர சொல்லி இருப்பாளோ என்று இராஜாசெல்வம் சொல்லியது நியாபகம் வர.
கௌசியின் கண்கள் தன்னை தேடுவதும் பின்பு வருத்தம் கொள்வதை பார்த்தவன். கல்யாணம் முடிந்தவுடன் கிளம்பினான்….
error: Content is protected !!