Skip to content
Post Views: 5,492
அந்த பாழடைந்த வீடு தான் ஜான்வியின் அம்மாச்சி வீடு என்று ஜான்வி தயங்கியபடி சொன்னதைத் கேட்ட கனகுவுக்கும் கொஞ்சம் அதிர்ச்சி தான்!
அவரும் கிட்டே வந்து ஜான்வியின் முகத்தையே உற்றுப் பார்த்தவர் ஜகதுவைப் போல அவருமே கண் கலங்கினார்!
“பாருடி, கனகு, இவ நம்ம ஜானுவோட பேத்தி! அது தான் இவளைப் பார்த்தவுடனே நமக்கு இவ்வளவு பாசம் வந்திருக்குப்போல, இவள இன்னும் நல்லா பாரேன், அப்படியே நம்ம ஜானகி ஜாடை தான்! அதான் எனக்கு இவளை ஜானகின்னு கூப்பிட தோணிருக்குப் போல!”
பாட்டிகள் இருவரும் அவளை அப்படியே அணைத்துக் கொண்டனர் ஆளுக்கொரு புறமாக!
Advertisement
“ஹேய், நீ எங்க பேத்திடி முதல்ல, அப்புறம் தான் பேரனுக்கு பொண்டாட்டியா வரது, இல்லைன்றதும்!”
ஜான்விக்கு ஒரே ஆச்சரியம்!
“என் பாட்டியும் நீங்களும் ப்ரன்ட்ஸா?”
Advertisement
“ம்ம். என்ன இப்படி சொல்லிட்ட? நீங்க மூணு பேரும் எங்களுக்கு நினைவு தெரிஞ்ச நாள்ல இருந்து தோழிகள் தான்!
Advertisement
அந்த காலத்துல எங்கள பள்ளிக்கூடத்துல கூட முப்பெரும் தேவிகள் தான்னு கூப்பிடுவாங்க!” என்றார் ஜகது பெருமையாக!
“எங்களுக்கு புகுந்தவீடும் ஒரே ஊரில் அமைஞ்சுடுச்சு! நாங்க மூணு பேரும் நல்லா படிச்சு ஒரு வேலைக்குப் போகணும், அப்புறம் தான் கல்யாணம் பண்ணனும்னு எல்லாம் பேசிப்போம் அந்த காலத்திலேயே!
ஜானுவுக்கு டாக்டர் ஆகணும்னு ஆசை! எனக்கு டீச்சர் ஆகணும்னு ஆசை! கனகுவுக்கு கருப்பு கோட் போட்டுக்கிட்டு வக்கீல் ஆகனுன்னு ஆசை!
Advertisement
நாங்க சினிமா எல்லாம் பார்த்துட்டு வந்து அதே மாதிரி எல்லாம் நடிச்சு காண்பிப்போம்!
ஆனா எங்க வீட்டு ஆளுங்க, நாங்க பெரிய மனுசி ஆனவுடன் எங்க படிப்பை நிறுத்திட்டாங்க. அடுத்த வருசமே எனக்கும் ஜானகியும் இந்த ஊரிலேயே மாப்பிள்ளை அமைஞ்சுது!
நாங்க ரெண்டு பேரும் இந்த ஊரில் வாழ்க்கை பட்டதாலேயே, கனகுவும் அவளுக்கு பார்த்த மாப்பிள்ளை யார் என்னன்னு கூட கேக்காம அவரை கல்யாணம் செய்துகிட்டு இந்த ஊருக்கே அவளும் வந்திட்டா!
உன் அம்மாச்சி வாழப் போன இடமும் ஒரு பெரிய பண்ணை வீடு தான்! பெரிய விவசாயக் குடும்பம்!
ரொம்ப ஜாதி கட்டுப்பாடு உண்டு அவங்க வீட்டில்!
அதிலும் ஜானுவோட மாமியார் அந்த சூர்யத்தம்மாள் கிழவி ரொம்ப ஜாதி பார்க்கும்!
அது சூர்யத்தம்மா இல்ல, சூனியத்தம்மா என்று கனகு கூட கிண்டல் பண்ணுவாள்”.
கல்யாணம் ஆனப் புதிதில் தோழிகள் இருவரையும் வீட்டிற்கு அழைத்து வந்தார் ஜானகி!
அவர்களை வாசலிலேயே மடக்கி விசாரணை நடத்திய சூரியத்தம்மா, யார் இன்னார் என்று விசாரித்து, அதில் ஜகது இன்னொரு பண்ணை வீட்டு மருமகள் என்று அறிந்து உள்ளே போக சொன்னவர், கனகுவின் தெருப் பெயரைக் கேட்டவுடன் அவரை நிறுத்தி விட்டு, உள்ளே ஜானகிக்கு குரல் கொடுத்து அவரை வெளியே வரச்சொல்லி பேச சொன்னார்.
கனகுவுக்கு ரொம்ப அவமானமாக போய் விட்டது!
அதில் இருந்து அவர் ஜானகியின் வீட்டுக்கு போவதில்லை! அவர் வர மறுத்ததால் ஜகதுவும் போக வில்லை!
இருவரும் வராததை அறிந்து கொண்ட ஜானகிக்கு அவள் மாமியார் மேல் கடும் கோபம் வந்தது.!
அவள் கணவனிடம் முறையிட்டாள்.
அவர் அதுக்கு மேல, ஞான சம்பந்தம்னு பேரு தான்! அவருக்கும் ஞானத்துக்கும் அவருக்கும் கொஞ்சம் கூட சம்பந்தம் இல்லை! அவரும் அவர் அம்மா மாதிரியே பேசியதால் ரொம்பவே மனம் நொந்து போனார் ஜானகி!
ஒரு நாள் ஜகதுவையும் கனகுவையும் கோவிலுக்கு செல்லும் வழியில் கண்டவர் கதறி தீர்த்து விட்டார்!
“என்னை மட்டும் கழற்றி விட்டுடீங்க இல்ல?” என்று அவர் அழுகையுடன் கேட்க, மற்ற இருவரும் கொஞ்சம் திகைத்துப் போய் அவரை சமாதானம் செய்தனர்.
அன்று முதல் அவர்கள் மீட்டிங் அந்த கோவில் குளக்கரையில் தான்!
நாள் தவறாது சந்தித்து பேசி அவர்கள் நட்பை வளர்த்தனர்!
மூவரில் ஜானகிக்கு கொஞ்சம் பாட வரும். ஸ்கூல் விழாக்கள் எல்லாவற்றிலும் அவரைத் தான் பாட சொல்வார்கள்!
நவராத்திரி கொலுவிலும் அவரைப் பாட சொல்லி கேட்பார்கள்.
அவர்கள் வீட்டு கொலுவுக்கு கனகுவை அழைக்க விட மாட்டார்கள் என்று இந்த குளக்கரையில் வைத்து தான் ஜானகி அவருக்கு பாடிக் காண்பிப்பார்!
அதில் அவருக்கு ரொம்ப பிடித்த பாடல் “குறையொன்றுமில்லை மறை மூர்த்தி கண்ணா”.
கனகுவுக்கும் ஜகதுவுக்கும் அந்த பாடல் ரொம்ப பிடிக்கும்!
கனகு அவித்து கொண்டு வரும் சோளக்கதிர், பனங்கிழங்கு, குச்சிக்கிழங்கை சாப்பிட்டபடி பாட்டு கச்சேரியும் நடக்கும் அவர்கள் மீட்டிங்கில்!
எல்லாம் அந்த சூனியக்கார கிழவி மதியம் தூங்கி எழும் முன்னர்!
அப்போது எல்லாம் ஜானகி சொல்வார், “நான் தான் படிக்கல! என் பிள்ளைகளை நல்லா படிக்க வைக்கணும்! குறிப்பா என் பொண்ணை டாக்டர் ஆக்கணும்!”
“படிச்சா தான் பகுத்தறிவு வளரும்! மனுஷங்கள்ள பேதம் பாக்காத புத்தி வரும்! குறைஞ்ச பட்சம் மனுசனை மனுசனா நடத்துற அறிவாச்சும் வளரும்!
ஜானகி சொல்லிக் கொண்டே போவார்!
தன் தோழிப் பற்றிய நினைவில் இருந்து மீண்டனர் கனகுவும் ஜகதுவும்!
“அன்னிக்கு நீ கொலுவில் அந்த பாட்டையே பாடினப்போ கொஞ்சம் எனக்கும் சந்தேகம் வந்துச்சு ஜானும்மா!
ஆனா நீ யாரோ மெட்ராஸ் பொண்ணு! உனக்கும் எங்க ஜானகிக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போவுதுன்னு நினைச்சேன்” என்றார் கனகு!
“நீ சொல்லு ஜானகி, உன் அம்மா இப்ப உயிரோட இல்லைன்னு சொன்ன ஞாபகம், இங்க வேலைக்கு வந்த புதுசுல! அப்படீன்னா விஜி இப்ப உயிரோட இல்லையா?” வருத்தத்துடன் கேட்டார்கள் பாட்டிகள் இருவரும்!
“ம். இல்லை! கொரானாவின் போது இறந்து விட்டாங்க! யாருமே இல்லை அப்ப! நல்ல வேளையா என் பப்பா வந்தார். இல்லன்னா என் நிலைமை!” இன்று கூட அந்த நாளை நினைத்தால் ஜான்விக்கு அழுகையாக வரும்!
அவள் அழத் தொடங்க, “அழாத ஜானும்மா, உன் அம்மாவோட ஆன்மா, எப்போதும் உன் கூடவே இருக்கும்! அது தான் உன்னை எங்ககிட்ட கொண்டு வந்து சேர்த்துருக்கு!” ஜகது அவளை ஆறுதலாக கட்டிக்கொள்ள அவள் மெல்ல அவர் மடியில் மீண்டும் படுத்துக் கொண்டாள்!
அவள் தலைமாட்டில் உட்கார்ந்து கொண்டு அவள் தலையை கோதி விட்டார் கனகு!
“சொல்லும்மா, உன் அம்மா யாருக்கும் தெரியாமல் படிக்கும் போதே ரிஜிஸ்தர் கல்யாணம் பண்ணிக் கொண்டது, அது தெரிந்த பின் ஏற்பட்ட பிரச்சினைகள் மட்டும் தான் எங்களுக்கு தெரியும்!
மத்தபடி அவ எங்க போனா, எப்படி இருந்தா ஒரு விவரமும் எங்களுக்கு தெரியாது! நீ பிறந்தது கூட தெரியாது! கொஞ்ச நாள்ல ஜானுவோட குடும்பம் இங்க இருந்து வேற ஊர் போய்ட்டாங்க!
அதுக்கப்புறம் பத்து வருஷம் முன்னால ஒரு நாள் நான் ஜானுவ திருப்பதில வச்சுப் பார்த்தேன்!
இப்ப பெங்களூரில் இருப்பதா சொன்னா! போன் நம்பர் கேட்டேன். அவளுக்கு சொல்ல தெரியல, அதுக்குள்ள உன் மாமா பசங்க கூப்பிட்டு போய்ட்டாங்க அவளை!” என்றார் ஜகது வருத்தமாக!
“நீ சொல்லு ஜானும்மா, உன் அம்மா எப்படி இறந்தா? ஏன் உன் அப்பா அம்மா பிரிஞ்சாங்க?” கேட்டார் கனகு.
ஜான்வி அவள் அம்மாவைப் பற்றி சொல்ல தொடங்கினாள்.
அவள் அம்மா தன் தன் பிறந்த வீட்டைப் பற்றி சொல்லியதையும், அவள் கல்யாணத்திற்கு பிறகு நடந்ததையும்!
—————–
“அத்தைக்கு பாய் சொல்லுங்க! பாய்..” என்றபடி அந்த குழந்தையைக் கன்னத்தைக் கிள்ளி கொஞ்சினாள் விஜயதேவி!
அப்போது தான் ப்ளஸ் டூ எழுதி இருந்தாள்!
படிப்பில் நல்ல சூட்டிகை! அவள் அண்ணன் சரவணனும் அப்படி தான்! இருவருமே படிப்பில் கெட்டி!
அதில் அவர்கள் அப்பாவைக் கொண்டு ஞான சூன்யமாக பிறக்காமல், அம்மாவைக் கொண்டு பிறந்து இருந்தார்கள்!
படிப்பு கொடுத்த தெளிவு, சிந்திக்க வைத்தது!
ஏன் என்று கேள்வி கேட்க வைத்தது!
மனிதரில் எல்லோரும் சமம் என்று நினைக்க வைத்தது!
இது அந்த வீட்டில் பிறந்த குழந்தைகளுக்கு வந்தது ஆச்சரியம் தான்!
காரணம் அம்மா ஜானுவின் சிந்தனை!
“யாருக்கு யாருடி அத்தை?” பின்னாலிருந்து கடூரமான கிழட்டுக் குரல்! சூர்யத்தம்மா தான்!
“ஏன், இந்த செல்வம் அண்ணன் குழந்தைக்கு தான்” வேகமான பதில்! விஜியிடமிருந்து!
செல்வம் அந்த வீட்டின் பண்ணையாள் காத்தானின் மகன். ஐ டி ஐ படித்து விட்டு அருகில் இருந்த ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைப் பார்க்கிறான். அவனின் குழந்தைக்கு அன்று பிறந்த நாள்! சாக்லேட் கொடுத்தான் அவன்!
“செல்வம் உனக்கு அண்ணனா? என்ன இது புதுசா உறவுமுறை சொல்லி கூப்பிடறது? செல்வம்னு கூப்பிடு போதும்! காத்தான போய் இப்படி தான் அங்கிள்னு கூப்பிடுற! இதல்லாம் சரியில்ல ஆமா சொல்லிப்புட்டேன்” கிழவி விஷமாக பேசியது!
“அவங்க என்னை விட வயசுல பெரியவங்க, நான் அப்படிதான் கூப்பிடுவேன்! உன் நாட்டாமை எல்லாம் உன் புள்ளையோட நிறுத்திக்கோ, என் கிட்ட வேணாம்!” சூடாக பதில் விஜியிடமிருந்து!
“சின்னம்மா, நீங்க எங்கள பேர் சொல்லியே கூப்பிடுங்க, வீணா பிரச்சினை வேண்டாம்” செல்வம் விஜியிடம் கெஞ்சி விட்டு குழந்தையைத் தூக்கிக் கொண்டு போய் விட்டான்!
இதை மாடியில் இருந்து பார்த்துக் கொண்டு இருந்த சரவணன், முதல்ல இந்த மக்களுக்கு படிப்பைக் கொடுக்கணும்!
அப்ப தான் ஏன் மறுக்கப் படுகிறோம்? என்ற புத்தி இவர்களுக்கும், ஏன் மறுக்க வேண்டும் என்ற புத்தி மேட்டுக்குடியில் இருப்பவர்களுக்கும் வரும்!
அவனும் தான் இந்த கிழவியைக் கேட்டிருக்கிறான்!
“ஏன்னா.. அவங்க அங்க தான் வைக்கணும், இப்படி தான் நடத்தனும்” என்றாள் கிழவி!
“அது தான் ஏன்ன்னு கேக்குறேன்?”
“ஏன்ன்னு இப்படி என்கிட்ட கேள்வியெல்லாம் கேக்காத, என் அப்பா அம்மா சொன்னாங்க, நானும் அதுப்படி நடக்கிறேன். இதோ என் பிள்ளைக்கு அப்படி தான் சொல்லியிருக்கேன்!”
“அப்ப உனக்கா புத்தி இல்ல? நீ யோசிக்க மாட்ட, உன்னை யாராச்சும் இப்படி இன்சல்ட் பண்ணினா, கோபம் வரும்ல! அது மாதிரி தானே அவங்களுக்கு வரும்?”
“அதெல்லாம் எனக்கு தெரியாது! வீணா என்கிட்ட விதண்டாவாதம் பண்ணாத! நான் இப்படி தான் இருப்பேன், கடைசி வரை!”
இது புரையோடி போய் விட்ட புத்தி!
இனி நம்மால் ஒன்றும் திருத்த முடியாது! நம்மால் முடிந்தது இதை அடுத்த தலைமுறைக்கு கடத்தாமல் இருப்பது ஒன்று மட்டுமே!
கடவுளே, நானோ இல்லை விஜியோ கண்டிப்பாக காதல் கல்யாணம் செய்து இந்த கிழவி மூஞ்சியில் கரியைப் பூச வேண்டும்!
மனதிற்குள் சங்கல்ப்பம் செய்து கொண்டான் சரவணன்!
விஜிக்கு மெரிட்டில் டாக்டர் சீட் கிடைத்தது!
சாமான்யத்தில் அவளைப் படிக்க விடவில்லை கிழவி!
“இந்த படிப்புக்கே உம்பொண்ணு நம்மளை இப்படி எதிர்த்து பேசுறா! இன்னும் டாக்டருக்குப் படிக்க வச்ச, அவ்வளவுதான்! மகாராணிய கையில பிடிக்க முடியாது அப்புறம்!
சீக்கிரம் ஒரு மாப்பிள்ளையைப் பார்த்து கல்யாணம் செய்வானா, படிக்க மெட்ராஸ்க்கு வயசுப் பிள்ளை அனுப்ப போறானாம்!”
ஆனால் சரவணன், அதுக்கு ஒரு வழி பண்ணியிருந்தான்.
அந்த ஊர் தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு தாராளமாக நன்கொடை கொடுத்து, அந்த பகுதியில் ப்ளஸ் டூவில் அதிக மார்க் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா ஒன்றை ஏற்பாடு செய்து, அதற்கு கலெக்டரை முக்கிய விருந்தினராக அழைக்க செய்து விட்டான்!
ஊரின் பெருந்தனக்காரர் என்ற முறையில் ஞான சம்பந்ததிற்கும் அழைப்பு!
விழாவில் எல்லோரும் நல்ல மார்க் எடுத்த மாணவர்களை பாராட்டிப் பேசினர்!
குறிப்பாக மாணவிகளை!
அதில் இருந்த விஜியைப் பற்றியும் அனைவரும் மிகவும் பாராட்ட, ஞான சம்பந்தத்திற்கே கொஞ்சம் பெருமையாக தான் இருந்தது!
குறிப்பாக, விழாவில் பேசிய ஒருவர், அவரிமிருந்து தான் இவ்வளவு புத்திசாலித்தனமும் ஞானமும் அவளுக்கு வந்திருக்க வேண்டும் என்று கொடுத்த காசிற்கு மேல் கூவ, ஞான சம்பந்தத்தைக் கையில் பிடிக்க முடியவில்லை அன்று!
அதையே தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டான் சரவணன்!
கலெக்டர் முன்னிலையில் விஜியை தனக்கு டாக்டராக ஆம்பிசன் என்றெல்லாம் சொல்ல வைத்து சபையில் வைத்து ஞான சம்பந்தத்தை ஒப்புக்கொள்ள வைத்து விட்டான்!
இப்படியாக மருத்துவக் கல்லூரியில் சேர்ந்த விஜி, அங்கே படிப்புடன் தன் காதலையும் வளர்த்து வந்தாள்!
கூடப் படிக்கும் வட இந்திய மாணவனான ஜக்தீசை!
தன் காதலைப் பற்றி ஒரு நாள் அண்ணனிடமும் சொல்லியே விட்டாள்.
அவனும் ஒரு நாள் ஜக்தீசைப் பார்த்து பேசி விட்டு திருப்தியாக மெல்ல அம்மாவிடம் போய் காதில் போட்டு விட்டான்.
சரவணனுக்கு நம்பிக்கை இருப்பது ஒன்றே ஜானுவுக்கும் போதும் என்று இருந்து விட, “படித்து முடிக்கட்டும். பின் நாமே ஒரு நெருக்கடியை உன் அப்பாவிற்கு ஏற்படுத்தி ஒத்துக்க வைப்போம். சபையில் வைத்து அந்த ஆளை மடக்க வேணும். இல்லை என்றால் இந்த கிழவி வேப்பில்லை அடித்து நாம என்ன பேசி வைத்திருந்தாலும் மாற்றி விடும்! அதனால பொறுமையா இருக்க சொல்லு அவளை” என்று சொன்னார் ஜானு!
இவர்கள் இப்படி ப்ளான் செய்து இருக்க சூரியத்தம்மாவும் இவர்களுக்கு தெரியாமலே ஒரு விஜிக்கு பெண் கொடுத்து பெண் எடுக்கும் வகையில் ஒரு வரனை, பெற்ற அம்மாவுக்கே தெரியாமல் தன் மகனுடன் போய் உறுதி செய்து விட்டு வந்திருந்தது, இவர்கள் ஸ்டைலிலேயே!
அதாவது சொந்த ஜாதிக்கார்கள் கூடியிருந்த ஒரு பெரிய சபையில் வைத்து!
பாவம் இதை அம்மாவும் பிள்ளையும் அறியவில்லை!
கடைசி வருடப் படிப்பில் இருந்தாள் விஜி.
தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்திருந்தாள் விஜி.
திடீரென்று வீட்டிற்கு திமுதிமுவென்று வந்து விட்ட உறவுக் கூட்டத்தைப் பார்த்து கொஞ்சம் அதிர்ந்தும் குழம்பியும் பார்த்தனர் அம்மாவும் பிள்ளைகளும்.
“என்னடி மச மசன்னு நிக்குற? சம்பந்தம் கலக்குற வயசு ஆகியும் இன்னும் கொஞ்சம் கூட பொறுப்பு இல்ல பாருடா உன் பொண்டாட்டிக்கு!”
“பாரு சம்பந்தி வீட்டு ஆளுங்க வந்திட்டாங்க, அவங்களுக்கு குடிக்க எதாச்சும் கொடுக்கணும் நினைக்காம மலங்க மலங்க முழிச்சிட்டு இருக்கா பாரு! போ. வந்தவங்களுக்கு காப்பி போட சொல்லு.” ஜானுவை உள்ளே அனுப்பினார் கிழவி!
“அப்பா என்னப்பா நடக்குது இங்க, யாரு இவங்க எல்லாம்?” சரவணன் கேட்க,
“உனக்கும் ஜானுவுக்கும் ஒரே வீட்டில் சம்பந்தம் பேசியாச்சு! தட்டு மாத்த தான் வந்திருக்காங்க! பொண்ணு கொடுத்து பொண்ணு எடுக்க போறோம்!”
“அப்பா என்ன சொல்றீங்க? அது எப்படி நீங்க மட்டும் முடிவு பண்ணலாம்? எங்கள கேக்காம?”
“உங்கள எதுக்கு கேக்கணும்?”
“ஏன்னா வாழப் போறது நாங்க தானே? எங்க கிட்ட கேக்க வேணாமா? குறைஞ்ச பட்சம் பொண்ணு, மாப்பிள்ளைய பாக்கவாவது வேண்டாமா?”
“எதுக்கு பாக்கணும்? அதெல்லாம் உனக்கும் விஜிக்கும் பொருத்தமா தான் இருப்பாங்க! மாப்பிள்ளை கூட சித்தா டாக்டர் தான்! நம்ம விஜிக்கு ஏத்த மாதிரி!”
“அவர் பொருத்தமாவே இருக்கட்டும், ஆனா அவ என்ன நினைக்கிறான்னு முதல்ல அவ விருப்பத்தைக் கேளுங்க”
“அவளை என்னத்துக்கு கேக்கனும்ங்கிறேன்?” பின்னால் இருந்து கிழவி!
நடப்பதை எல்லாம் பார்த்து ஜானு அதிர்ச்சியில் இருக்க, விஜி அப்பாவிடம் வந்து மெல்ல, ஆனால் தெளிவான குரலில் சொன்னாள்.
“அப்பா, என்னால நீங்க பார்த்திருக்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் செய்ய முடியாது! நீங்க என்ன பண்ணினாலும்! என்னைக் கொன்னே போட்டாலும் கூட!”
“உன்னை ஏன் கொல்லப் போறேன், உன்னை இப்படி படிக்க வச்சு வாயை வளர்த்து விட்டாள்ல உங்கம்மா அவளைத் தான் கொல்லப் போறேன்” என்றவர் கோபத்துடன் அங்கிருந்த அரிவாள்மனையை எடுத்து ஜானுவை வெட்ட முயல,
அப்பாவைத் தள்ளி விட்ட விஜி அவரை கடுமையாக முறைத்து விட்டு, “அப்பா, என்ன பண்றீங்க நீங்க? நான் ஒருத்தர காதலிக்கிறேன், அவரைத் தவிர வேறு யாரையும் என்னால நினைச்சுக் கூட பார்க்க முடியாது, அதனால தான் சொல்றேன், வந்தவங்கள நீங்களே பேசி அனுப்பிடுங்க!”
“அது ஒரு நாளும் முடியாது, நான் வாக்கு கொடுத்துட்டேன்! என்ன ஆனாலும் சரி இந்த ரெண்டு கல்யாணம் நடந்தே தீரும்!”
“அப்பா ப்ளீஸ், அவளை விட்டுடுங்க, நான் வேணுமின்னா நீங்க பார்த்து இருக்கிற பொண்ணு எப்படி இருந்தாலும் சரி, கல்யாணம் பண்ணிக்கிறேன், அவளை விட்டுங்க” கெஞ்சினான் சரவணன்.
“இந்த முட்டாள் மூர்க்கனுக்கு பிள்ளையாய் பிறந்ததைத் தவிர வேறு என்ன குறை என் பிள்ளைகளுக்கு?” ஜானுவுக்கு தாங்க முடியவில்லை!
“அண்ணா, நீ ஏன் அண்ணா இதுக்கு ஒத்துக்குற? இவர போய் வந்தவங்கள எல்லோரையும் அனுப்ப சொல்லு” விஜி கத்தினாள்.
“நீ சும்மாயிரும்மா, அப்பா ப்ளீஸ் அப்பா, போய் பேசுங்க, பொண்ணுக்கு இப்ப கல்யாண திசை வரல அப்படி இப்படின்னு எதாச்சும் சொல்லி அனுப்புங்க!”
“அதெல்லாம் முடியவே முடியாது! இப்ப இவ மட்டும் கல்யாணப் பொண்ணா வந்து சபையில உட்காரல, உன் அம்மாவை நீங்க உயிரோடப் பார்க்க முடியாது!
அப்படியே வச்சு கொளுத்தி விட்டுடுவேன் கொளுத்தி!” பேய் மாதிரி கத்தினார் ஞான சம்பந்தம்!
“விஜி எனக்கு என்ன ஆனாலும் பரவாயில்ல, நீ இதுக்கு ஒத்துக்காத” ஜானுவும் கத்தினாள்.
“அப்பா, ப்ளீஸ் அம்மாவை ஒண்ணும் செஞ்சுடாதீங்க, நான் நீங்க சொன்ன மாதிரியே செய்றேன்!” கண்ணீருடன் ரெடி ஆனாள் விஜி!
ஒன்றுமே செய்ய மாட்டாமல் சுருண்டு உட்கார்ந்து விட்டாள் ஜானு!
“அப்படி சொல்லுடீன்னே, மயிலே மயிலேன்னா ரெக்கையை போடுமா, இப்படி தான் பிடுங்கணும்!” சூனியக்காரக் கிழவி கொக்கரித்தது!
கூடவே “டேய் இவளை வீட்டை விட்டு எங்கயும் போக விடாம பார்த்துக்கோ!” என்ற ஆர்டர் வேறு மகனுக்கு!
கனத்த மனதுடன் அந்த நிச்சயதார்த்தத்தில் கலந்து கொண்டனர் அண்ணன் தங்கை இருவரும்!
எதையோ சாதித்து விட்ட கர்வத்தில், இறுமாப்பில் இருந்த சூழ்ச்சிக் காரி சூர்யத்தம்ம்மாவின் தலையிலும் அவர் மகன் ஞான சூன்யத்தின் தலையிலும் அடுத்த இரண்டு நாட்களில் இடி விழுந்தது!
மறு நாள் மாலை!
அவர்கள் வீட்டிற்கு போலிஸ் வந்தது!
“என்ன என்ன?” என்று பரபரத்த ஞான சம்பந்ததிற்கு கிடைத்த பதில்!
“தன் மனைவியை நீங்கள் அடைத்து வைத்து சித்தரவதை செய்வதாக எங்களுக்கு ஒரு கம்ப்ளைண்ட் வந்திருக்கு! அதான் விசாரிக்க வந்தோம்!”
“யாரோட மனைவி, யார் கம்ப்ளெயின்ட் பண்ணினா?” அதிர்ச்சியுடன் கேட்டார் ஞானம்.
சரவணன் ஜானு உட்பட எல்லோருக்கும் குழப்பம்!
“டாக்டர் ஜகதீஸ் என்கிறவர் கமிஷனர் ஆபிஸ் மூலம் கம்ப்ளைண்ட் கொடுத்திருக்கார்!
அவர் மனைவி விஜயதேவியை நீங்க உங்க வீட்டுல அடைச்சு வச்சு கொடுமை படுத்திட்டு இருக்கிறதா!”
போலிஸ் இன்ஸ்பெக்டர் சொன்னார். “கூப்புடுங்க விஜயதேவியை!”
error: Content is protected !!