Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 18 1

மின்னல்  ஒரு  கோடி

அத்தியாயம் – 18   Pre  Final
   கௌசியின்  கண்கள்  கணவனை  தேடியது .ஒரு வேளை கோடி  சார்  வரலையா  என்றவள்.கல்யாணம்  முடிந்தவுடன்  நந்தினியை  பாத்துக்கோ  என்றவள்.மண்டபம் முழுவதும் கோடீஸ்வரனை  தேட. அவன்  எங்கேயும்  இல்லை என்று நினைத்தவள்.  கௌசி  மணமகன்  அறைக்கு வந்து
துருவாவிடம் தன்  மொபைலை  கொடுத்தவள் சிங்சான்  பாரு என்று சொல்லி ரெஸ்ட்  ரூம் நோக்கி  சென்றாள்.அப்படி  ஒரு அழுகை. கோடி சார் ,கோடி மாமா  சாரி  என் மேல  கோபமா.என்னை  மன்னிச்சிருங்க  ,சாரி  நான் உங்களை  விட்டு  போனது  தப்பு  தான்  என்று  10  நிமிடம்  அழ .பாத் ரூம் கதவு  தட்ட பட்டது.
யாரு என்று  கௌசி  கேட்க.
 நான் தான் நந்தினி என்றாள்.
 இரு வரேன் என்றவள்.   முகத்தை  நன்றாக  கழுவி, துடைத்து விட்டு  வர.
நந்தினி தங்கை முகத்தை வைத்தே  கண்டுபிடித்து விட்டாள்,அழுதீயா.
இல்லையே.
ஏய்  உன்  மூஞ்சே சொல்லுதுடி  சிவந்து  போய்.
கௌசிக்கு மீண்டும் கண் கலங்க.அக்காவை  அணைத்து  கொண்டவள். கோடி சார் கல்யாணத்துக்கு  வரல என்று அழ.
ஏய்  லூசு அவர்  வந்தார்டி .நீ  தான்  அவரை  பார்க்கல.
வந்தாரா,எப்போ.
அப்பா சொன்னாருடி  ,கோடி மாப்பிள்ளை வந்தாருன்னு, நீ பாக்கலையா.
கௌசி  இல்லையே. நான் அவர பாக்கல  என்றவள். கோடி சார் வந்துட்டு என்னை  பாக்காம  போய்ட்டாரா என்று மீண்டும்  அழ.
 ஏய் பைத்தியகாரி , எதுக்கெடுத்தாலும்  அழாத.இங்கே தான்  இருப்பாரு. இல்லா  ஏதாவது வேலை  வந்து  இருக்கும்.போய்  இருப்பார்.கன்னத்த தொட  ,வா  பேமிலி  போட்டோ  எடுக்க  போகலாம்.
எனக்கு கோடி சார் இருத்தா தான் பேமிலி.அவரே  இல்ல .நான் பேமிலி  போட்டோவுக்கு வரல . நீ  போய்  உன் பேமிலியோட  போட்டோ எடுத்துக்கோ  என்று  சொல்ல.
நந்தினி  கௌசியிடம்  ஏன்டி இப்படி பேசுற .
கௌசி நான் உண்மையை  தான் சொல்லுறேன்.
துருவா கௌசியிடம் மம்மி பசிக்குது  என்று சொல்ல.
வாடா  நம்ம  சாப்பிட போலாம்  என்றவள். நந்தினியிடம்  நீ போய் மேடையில் இரு .சிவாவுக்கு  எல்பு பண்ணு.நான் வர்ரேன் என்றவள் சாப்பிடும்  இடம் நோக்கி செல்ல.
 கௌசியின் சொந்தம் ,பந்தம்  நிறைந்து இருந்தது.  கௌசியின் அத்தை பையன்  ஒருவன்  என்ன  கல்யாண  வீட்டு  காரங்க  சீக்கீரம்  சாப்பிட   வர்ரீங்க என்று கேலி பேச.
 என் மகனுக்கு பசிக்குது  அதான்  வந்தேன் என்றவள்.உங்கார  இடம் தேட.கடைசி  வரிசையில்  இரண்டு  இடம் காலியாக  இருக்க கௌசி போய் அமர்ந்து கொண்டாள்.
எல்லோருக்கும்  உணவு  பரிமாற. அப்பொழுது  ஒரு முதிய  தம்பதியர் சாப்பிட வர. கௌசி  எழுந்து கொண்டு .அவர்களை  அமர  சொல்ல.அவர்கள் பராவயில்லைமா.நீ சாப்பிடு  நாங்க  அடுத்த  பந்தியில  சாப்பிடுறோம்.
கௌசி அவர்களை அமர  வைத்து விட்டு வேற இடம் தேட. இரண்டு  வரிசை தள்ளி   ஒரு இடம்  மட்டும்  கடைசியில் காலியாக  இருக்க. இலையில்  உணவு  பரி மாற பட்டு இருந்த்து.அங்கே  சென்றவள்  ஒருவர்  வெள்ளை, வேட்டி சட்டை அணிந்து அமர்ந்து  இருக்க.அவர் பக்கத்தில் சென்று அமர்ந்து கொண்டாள்.
 பக்கத்தில்  உள்ளவரின்  முகத்தை பார்க்காதவள். அவனின்  உடையை மட்டும் பார்த்துவிட்டு யாரோ  பொண்ணு  விட்டு  காரங்களா இருக்கும் என்று நினைத்து மகனுக்கு  உணவை  ஊட்ட.
துருவா  மம்மி நைனா என்றான்.
என்ன நைனா ? சாப்பிடு  அப்பறம்  உங்க நைனாவை  பார்க்க போலாம் என்றவள் மகனுக்கு ஊட்டி விட.
மம்மி நைனா  என்று குழந்தை  பக்கத்தில்  அமர்ந்து இருந்த  கோடியிடம்   தாவ.
அப்பொழுது தான் கௌசி பக்கத்தில்  உள்ள நபரை பார்க்க.அவள்  கணவன்  கோடிஸ்வரன்  அவளை பார்த்து சிரிக்க.
கௌசிக்கு ஆச்சரியம் ! தன் கணவனா இது .கோடி  ஆளே மாறி  இருந்தான். கொஞ்சம்  குண்டாக, லைட்டாக  தொப்பை கூட இருந்தது. வெள்ளை வேஸ்டி சட்டை ,பெரிய  மீசை ,கழுத்திலும்  கையில் நிறைய நகைகள் என்று  வேற கோடியாக  தெரிய.
கௌசி 5 நிமிடம்  தன் கணவனை  மேலும், கீழும்  பார்த்து .பின்பு  கண் கலங்க . கோடி தலையை ஆட்டி  வேண்டாம்  என்றான்.
அவளுக்கோ ,கோடியை  பார்த்ததில்  சந்தோஷம் ,அழுகை எல்லாம்  சேர்ந்து  ஒன்றாக வர.
தாங்கள் இருக்கும்  இடத்தை  சுட்டி காண்பித்தவன்.கௌசியின் கண்களை  கோடி  துடைத்து விட.
கோடியின் கையை பிடித்துக்கொண்டாள்  கௌசி.துருவா நைனா  பசிக்குது  என்று  சொல்ல.கோடிஸ்வரன்  துருவாவுக்கு ஊட்ட. கௌசியும்  மகனுக்கு ஊட்டி  கொண்டு இருந்தாள்.
கோடியும், கௌசியும்  இருவரும்  ஒன்றாக இருவரின்  முகத்தை பார்த்துக்கொண்டு  மகனுக்கு  ஊட்ட .துருவா போதும்  உணவு என்று சொல்ல.
கோடி மகனுக்கு தண்ணீர்  கொடுத்து விட்டு  மகனை  பக்கத்தில்  அமர  வைத்து விட்டு. கௌசிக்கு  ஒரு வாய் இனிப்பு  ஊட்டி விட.
கணவன்  கொடுத்ததை  ஆசையாக  வாங்கி  உண்டவள்.கோடியின் தோளில்  சாய்ந்து கொண்டு முகத்தை  மறைத்து  கொண்டு அழ.
கௌசியின்  தலையை தடவி  கொடுத்த கோடி..துருவா இருக்கான்  பாரு  பயப்படுவான் அழாத   சாப்பிடு என்று சொல்ல.
இருவரும்  சாப்பிட்டு முடித்து வெளியில்  வந்தனர்  .துருவா  கோடியிடம்  இருந்தான் . மகனின் நெத்தியில்  முத்தமிட்டவன்  நைனாவுக்கு ஒரு வேலை  இருக்கு போய்யிட்டு  வரேன்  என்று  கௌசியிடம் துருவாவை  கொடுத்து விட்டு  கிளம்ப.
 கௌசி கோடியின்  கையை பிடித்து  கொண்டு  ஒரு போட்டோ  என்றவள்.கோடியை  அழைத்து கொண்டு் மணமேடை வர .அங்கே மணமேடையின்  அருகில்  அனைவரும் இருந்தனர்.
முதலில் சிவாவுக்கு  கோடி வாங்கி வந்த  செயினை  கழுத்தில் போட்டு வாழ்த்துக்கள் சொல்லி .
 மணமக்கள் உடன்  சேர்ந்து போட்டோ  எடுத்து பின்பு  கௌசியின்  மொத்த  பேமிலியுடன்  போட்டோ  எடுக்க  என்று சில  புகைபடங்கள் எடுத்துகொண்டு .கோடிஸ்வரன்  போதும்  கௌசி  என்று    மணமேடையில் இருந்து கீழே  வந்து  அனைவரிடமும்  சொல்லி விட்டு   வெளியில் வந்தான்.
கௌசி  துருவாவை  இடுப்பில்  வைத்து கொண்டே  கோடியின் பின்னே  வர.
கோடி நீ போ கௌசி. நான்  போறேன்   என்று வெளியில் வந்தான்.
கணவன் பின்னோடு வந்தாள்  கௌசி . கோடி  மீண்டும் போ என்க.
கண்ணில்  நீருடன்  நின்ற  மனைவியை என்னம்மா என்றான்.
அவளுக்கு  கோடியை  விட்டு  இனி ஒரு   நிமிசம்  கூட  இருக்க  முடியாது  என்று நினைத்தவள்.
 நானும்  உங்க  கூட  வர்ரேன் என்று  அழுதவளை.
  பக்கத்தில்  யாரும்  இல்லை என்று  பார்த்துக் கொண்டவன். கௌசியை  தோள் அணைத்து  நான்  எங்கே போக போறேன்.
இங்கே  தான்  இருப்பேன் .உன்  அண்ணன்  கல்யாணம்  நடந்து  இருக்கு .உனக்கு இங்க  வேலை இருக்குமுல்ல என்றவன்.சாயங்காலம் வர்ரேன்  என்று பைக்கை சார்ட் பண்ண.
துருவா நான் வர்ரேன் நைனா  என்றவன் . கோடியின்  பைக்கில் முன்னே  ஏறிக்கொள்ள.
கௌசி  குனிந்து  கொண்டாள்.
கோடி  ஹலோ கௌசி  மேடம்  நிமிர்ந்து  பாருங்க  என்றான்.
அவளோ கோடியை பார்க்க மாட்டேன்  என்று குனிந்து  கொண்டு  நிற்க.
என்ன கௌசி என்றான் கோடி.
அவளோ  நானும்  வர்ரேன்  உங்க கூட என்றவள்.என்னை மறுபடியும்  விட்டு  போயிறாதீங்க  என்றவள் குனிந்து கொண்டே அழ.
ஏறு என்றவன்  கௌசியை  அழைத்து  கொண்டு  சென்றுவிட்டான்.
துருவா  நைனா எங்கே  போறோமென்று  கேட்க. கோடிஸ்வரன்  பெருமாள் கோவிலுக்கு அழைத்து வந்தான்.
 கௌசி என்ன கோவில் என்று கேட்க.
பெருமாள்  கோவில் என்று  சொல்லி அழைத்து வந்தான். கோயில் பார்ப்பதற்க்கு  மிக அழகாக  இருந்தது.சின்னது  இல்லாமல்  ,பெரிய  அளவில்  இல்லாமல்.மிக அழகாக  இருந்தது.
இவர்கள்  கோயில் உள்ளே நுழைந்தவுடனே . அங்கே  உள்ள  அனைவரும்  வந்து கோடிஸ்வரனை   வர வேற்க.
கௌசி  இவர்  இந்த  கோயிலுக்கு  நிறைய  பணம்  குடுத்து உதவி  பண்ணி  இருப்பாரோ , என்று நினைத்தவள். கோடியுடன்  சேர்ந்து நடக்க.
 மூல ஸ்தானத்திற்கு வந்தவர்கள்  பெருமாளை  பார்த்து நிற்க. அந்த பெருமாள்  அச்சு  அசல் திருப்பதி் மூல ஸ்தானத்தில் உள்ள  பெருமாளை  போலவே இருந்தது.
 கௌசி  கோடியிடம் , திருப்பதியில் உள்ள பெருமாள்  மாதிரியே  இருக்கு  இல்ல  என்றவள்.
 கௌசி கடவுளை  பார்த்து  நிமிர்ந்து  நிற்க.கோவிலின்  தலை  வாசலை பார்த்தவள்.அங்கே  உபயம்  கோடிஸ்வரன், கௌசல்யா ஸ்ரீ என்று  பெரிய  எழுத்துக்கள்  எழுதி இருக்க. அதை பார்த்தவள். கோடியிடம்  காண்பித்து .நீங்க  தான்  இந்த  கோவிலை கட்டுனதா என்றாள்.
ஆமாம்  என்றவன் .சாமியை  பாரு என்றான்.
 இருவரும் பெருமாளை  வணங்கி நிற்க. தீபாரதனை  காண்பித்து ஐயர் கற்பூரதட்டை  நீட்ட இருவரம்   கடவுளை  வணங்கி் நின்றனர்..
கோடிஸ்வரன்  கௌசியிடம்  கழுத்தில் தாலி போட்டு இருக்கீயா என்று கேட்க.
இல்லை  என்றாள்.
கோடிஸ்வரன்  ஐயரிடம்  அம்பாள்  பாதத்தில்  . அவன்  ஏற்கனவே குடுத்து வைத்து இருந்த  ஒரு சிறிய  பாக்ஸை  எடுத்து வர சொல்ல.
ஐயர்  மூல  ஸ்தானத்தில்  அம்பாள்  பாதத்தில் இருந்த பாக்ஸை  எடுத்து வந்து  கோடியிடம்  கொடுத்தார்.
கௌசி என்ன பாக்ஸ் என்று பார்க்க. அது   ஒரு  சிறிய  பெட்டி போல  இருந்தது.
கோடி அதை  மூன்று  கடவு எண்ணை  நகட்டி  பெட்டியை திறந்தவன். உள்ளே  இருந்தது . கௌசியின் தாலி. செயினை எடுத்தவன் கௌசியை பார்க்க.
அவளுக்கோ  இது தன்னை விட்டு  போனா நாள்  ஞாபகம் வர. கண்கள் கலங்கியது.
 கோடிஸ்வரன்  தாலி செயினை  மறுபடியும்   ஐயர் இடம் சாமி  பாதத்தில் வைத்து  பூஜை  செய்து எடுத்து வந்து கொடுக்கல்  என்று சொல்ல. ஐயர் சுவாமி பாதத்தில் வைத்து பூஜை செய்து எடுத்து வந்து . கோடியின்  கையில் கொடுக்க.
  கோடிஸ்வரன்  கௌசியை  சாமியை பார்  என்றவன். பெருமாளை   பார்த்து  வேண்டி  கொண்டே   தாலி செயினை கௌசியின் கழுத்தில் போட்டான்.
 கௌசியும்   கோடியும்  இறைவனை   பார்த்து நிற்க , ஐயர்  இருவருக்கும்  சாமியின் கழுத்தில் இருந்த  பூ  மாலையை எடுத்து வந்து  மாத்திக்கோங்க  என்று தர .
இருவரும்  மாலை  மாத்தி்கொண்டனர். கோடிஸ்வரன் கௌசியின்  கை பிடித்து  அழைத்து  கொண்டு   கோவில் உள்ள  தூணின் பக்கத்தில் அமர  வைத்து. அவனும்  அமர்ந்து  கொள்ள. சிறிது நேரம்  கழித்து.
போலாமா என்றான் கோடி.
கௌசி  தலையை  ஆட்டி  போலாம் என்றாள்.
இருவரின் மாலையை கழட்டி  .ஒரு பெரிய கவரில்  வைத்து  கொண்டவன். கௌசியிடம்  கோடி நீ மண்டபம் போறீயா  இல்லை  என் கூட  என்று கேட்க.
கௌசியின்  போன் ஒலித்தது.நந்து  போன்  பண்ணி  நாங்க  பொண்ணு  வீட்டுக்கு  போறோம் .நீ எங்கே  இருக்க.
 நான் கோடி சார் கூட.
 சரி அவர் கூடவே இரு. சாயங்காலம்  அம்மா  வீட்டுக்கு  வா .மறுவீடு வேலை இருக்கு  என்று போனை வைக்க.
கௌசியிடம்  யார் போன்ல என்றான் கோடி.
நந்து என்றவள் . எல்லோரும்  பொண்ணு வீட்டுக்கு போயிட்டாங்கலாம். என்னை சாயங்காலம்  வர சொன்னா என்றாள்  கோடியின் கை பிடித்து.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!