Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 18 2

கோடீஸ்வரன்  அப்போ  நம்ம  வீட்டுக்கு போலாமா  என்றான்.

கௌசி தலையை ஆட்ட.



Advertisement

பைக்  கோடியின்  வீட்டிற்கு சென்றது.

துருவா கோடிஸ்வரன்   பைகில்  வரும் போதே  தூங்கி  இருக்க.

கோடிஸ்வரன்  மகனை தூக்கி  கொண்டு  ரூம்பில்  படுக்க வைத்து விட்டு வர.

Advertisement

Advertisement

கௌசி வாசலில் நிற்று   இருந்தாள். அவளுக்கு  உள்ளே வர கால் வர வில்லை. அன்று தென்றலுக்கு  குழந்தை  பிறந்து இருந்ததை   தெரிந்து குழந்தையை  பார்க்க வர. குருவம்மாள்  அன்று  தன்னை தாலியை பிடிங்கி  கொண்டு  போ வெளியே என்று தள்ளியதை  நினைத்து  பார்த்தவள் . அன்று நடந்ததை  நினைத்து பார்த்தவள்.தன் காதுகளை  மூடிய படி  நின்று  இருக்க.

கோடிஸ்வரன் அதை பார்த்தவன் வா கௌசி என்றான்.

Advertisement

அவளோ வீட்டையே  உத்து  பார்த்துக்கொண்டே நிற்க.

வாடி  என்றவன். கௌசியின்  இடுப்பை  பிடித்து  தூங்கி  இருந்தவன் கதவை சாத்தி. ஒன்னும் பேசதே , நினைக்காதே, நான் உன்  புருஷன், நீ என் பொண்டாட்டி அத மட்டும் நெனச்சுக்கோ என்று கட்டளையிட்டவன். சோபாவில் கௌசியை  தூக்கிய  படியே  அமர்ந்தான். என்னடி  இப்படி  மெலிந்து  போயிருக்க என்றவன். கௌசியின்  கன்னத்தை தடவ.

கௌசி  இல்லையே என்றாள்.

எனக்கு தெரியாத  உன்  வைட்டு  என்றவன். கௌசியின்   இடுப்பில் கை வைத்து .அவன்  மாட்டி விட்ட  இடுப்பு  செயினை தேட. அது  இருக்க  வேண்டிய  இடத்தில்  அம்சமாக  இருக்க.இதை கழட்டலை நீ என்றான்.

இல்லை  என்றவள்.நீங்க  தானே  இதை எப்போதும்  கழட்டாதே  சொன்னீங்க  என்று கோடியின் கன்னத்தில் முத்தம் வைத்து அணைத்து கொண்டு சாரி என்றாள்.

கோடி  எதுவும்  பேசாதே என்றவன்.கௌசியை அணைத்து கொண்டே இருந்தவன். துருவா  என்னை மாதிரியே  இருக்கானுல என்றவன். கௌசியின்  வயிறை தடவி  நார்மல் டெலிவரியா இல்லை   ஆப்ரேசனா என்றான்.

கௌசி நார்மல் டெலிவரி  தான்.

துருவா உனக்கு ரொம்ப கஷ்டம்  குடுத்தானா.

 இல்லை என்றவள் நீங்களும் ,என் பிள்ளையும்  எப்பையும்  என்னை  கஷ்ட  படுத்த  மாட்டீங்க  என்றவள். நீங்க ஏன்  என்னை தேடி வரல  என்று  கோபமாக  கோடியிடம்  கேட்க .

 உனக்கு  தெரியாத  கௌசி , தென்றல்  பையன்  இறந்துட்டான்.ஹாஸ்பெட்டல் அங்கே ,இங்கே என்று  அழைஞ்சுட்டு  இருந்தோம் . எல்லாம்  முடிச்சுட்டு  உன்ன  கூப்பிட  வரலாம் என்று  இருந்தேன்.   அம்மாவை நீங்க  போலிசில்  கம்புலைன்ட் கொடுத்து விட்டது    கோபம்.அம்மாவை  போலிஸ்  ஸ்டேஷனுல  வச்சு  பார்த்ததுல இருந்து  ஏதோ  நடந்து இருக்குன்னு  தெரியும். என்னன்னு  தெரியல. என் கையில உன் தாலி செயின் இருந்தது.  எல்லாம் அம்மாவால தான் தெரியும். உன் பாக்க வர  முடியலயே என்று என் மேல  கோபம். உன்ன இப்படி ஒரு நிலைமைல  இருக்க வச்சுட்டேனே என்று என்மேலே., எனக்கு  கோபம். நீ என்னை தேடி வருவன்னு  நினைச்சேன்.

 அவளோ  நான் என்று  ஏதோ சொல்ல வர .

 இப்போ  வேண்டாம் கௌசி பழச மறந்துரு . உன் மேல எந்த  தப்பும் இல்லன்னு எனக்கு தெரியும். யாரையும் பத்தி நாம இனி பேச வேண்டாம். உன்ன பாத்ததுல  ரொம்ப  சந்தோஷமா  இருக்கேன்டா  பேபிமா  என்றவன் அவளை கொஞ்சியவன்.

கௌசி  கோடியை பார்த்து.  உங்க   பார்த்த என் பொண்டாட்டி  ஊருக்கு  போயிட்டான்னு  சாலியா  இருந்த மாதிரி  தெரியுது  என்றவன். அவனின் தொப்பையை தடவ.

ஏய் கூசுதுடி என்றவன். அதுவா  நைட்டு  லேட்டா  சாப்பிட்டு தூங்குவேனா அதான்.

 நீ  வந்துட்டல .  இனிமே  உன் புருஷனை  நீ பாத்துக்கோ  என்றவன். கௌசியின்  நெத்தியில்  முட்டி  பாத்துக்குவீயா என்று கேட்க.

கௌசி  உம் என்று தலையாட்டி , ஆன எனக்கு வேலை  மைசூரில் உள்ள கோர்ட்டுல  என்றவள். நான்  இங்கே இருக்க முடியாதே . என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே  இராஜாசெல்வம் கௌசிக்கு  போன்  போட அப்பா  சொல்லுங்க என்றாள்.

கௌசிமா நீ  எங்கே இருக்கடா.

 நான் எங்க வீட்டுல  இருக்கேன் பா.

சரிமா என்றவர். நம்ம வீட்டு வெளியே   மண்டபத்துல இருந்து சாப்பாடு கொண்டு வந்து  இருக்காங்க நீ எல்லாத்தையும் உள்ள வைக்க சொல்லுடா என்றவர் . இன்னும் 1 மணி  நேரத்துல  வந்துருவோம்.

சரிப்பா என்றவள். கோடியிடம் இராஜாசெல்வம் சொன்னதை சொல்லியவள் வெளியே கிளம்ப.

உங்க அப்பாவுக்கு மூக்கு  வேற்த்துருச்சு போல. என் பொண்டாட்டியை  கொஞ்ச நேரம் கொஞ்சவிட  மாட்டாங்க  என்றவன்  எங்கடி போற இரு என்று  கௌசியை  இழுக்க .

  போங்க  கோடி சார் வெளியே ஆள்  இருக்காங்க என்று கிளம்ப.   கோடியோ கௌசியை விடாமல் பிடித்து இருக்க.

கோடிசார் ப்பிலிஸ்  என்றவள் . கோடியின் இடுப்பை கில்லி விட்டு வெளியில் வர.

கோடிஸ்வரன்  தப்பிச்சுட்டா என்றவன்  வெளியில் வந்து பார்க்க.  கௌசி எல்லா உணவையும்  உள்ளே  வையுங்கள் என்று சொல்லி கொண்டு இருந்தவள்.கோடியை பார்த்து கண்ணடிக்க.

கோடிஸ்வரன்   என் கையில் மாட்டுவல அப்போ இருக்கு உனக்கு என்றவன்.நமட்டு  சிரிப்பு சிரிக்க. 4 வருடம்  பட்ட  கஷ்டம் எங்கே போனது என்றே தெரியாமல்  போனது கோடிக்கு.

கௌசியை பார்த்து  துருவா கூட இருக்கேன் என்று அவன் வீடு சென்று விட்டான்.

கமலம் வீட்டுக்கு பொண்ணும்  மாப்பிள்ளையும் வர. கௌசி தான் இருவருக்கும்  ஆரத்தி எடுத்தாள். கௌசியின் வீட்டார்  கௌசியின் முகத்தையே பார்க்க. அவள் முகத்தில் அத்தனை பொழிவு.

 சந்தோஷம், அனைவரிடம் சிரித்து பேச.

கமலம் கௌசியின் முகத்தை வைத்தே  கோடியிடம் பேசி விட்டாள் போல என்று நினைத்தவர் . பேரனை கேட்க அவங்க  அப்பா கூட இருக்கான் என்றாள்.

சிவாவும்  , நந்தினியும் கௌசியை  தனியே அழைத்து வந்து. இருவரும்  தங்கையை அணைத்துக்கொண்டனர். எப்பையும் இப்படியே இரு ,சிரிச்ச முகமா என்று சொல்லி  சென்றனர்.

கௌசி  கமலத்தை தேடி போனால்   அம்மா  என் வீட்டு காரருக்கும் ,என் பிள்ளைக்கும்  சாப்பாடு  எடுத்து  குடு.

ஏன்டி    நம்ம வீட்டுல வந்து சாப்பிட  சொல்லு . இல்லன்னா நீ எடுத்துட்டு  போ.

கௌசி   நீங்க  என் புருஷன்  கிட்ட  பேசலயாம். அதான்  கோடி சார்க்கு  இங்கே வர்ரது  கஷ்டமா  இருக்காம்.

நான்  ஏன்டி அவர்  கிட்ட  பேசனும்.நான் பேச மாட்டேன் என்றவர். தன் மகள்   கஷ்ட  பட்டதுக்கு அவரும்  ஒரு காரணம்  என்று  நினைத்தவர். நீ உன்  புருஷன  பார்த்தவுடன் ,பேசி  சேர்ந்துட்ட  நானும்  உடனே  அவர் கிட்ட  பேசனுமா ,என்னால  முடியாது. நீ  அவர பிரிஞ்சி  எவ்வளவு  கஷ்ட பட்டேன்னு எனக்கு தெரியும். என்ன  தேவை இல்லாமல்  பேசவைக்காத.

இனிமே  உன் புருஷன் கூட  சேர்ந்து  வாழுற  வழிய பாரு  என்று  கண்களை  துடைத்துவிட்டு  போக.

கௌசி  கமலத்தை  அணைத்துக்கொண்டு  ,ஒரு அம்மாவா  உன்னுடைய மனசு  எனக்கு   தெரியுது.கோடி சாரையும்  பத்தி கொஞ்சம்  நினைமா  .அவருக்கும்  அக்கா , அம்மா  என  எல்லோரும்  முக்கியம் தானே.

நான்  கோடி  தம்பியை  ஒன்னும்  சொல்லல, என்ன  நடந்தாலும்,அவர் உன்ன  தேடி  வந்து இருக்கனும் 4 வருஷ  வாழ்க்கை  போச்சே. உங்க ரெண்டு பேருக்கும்.அதை  திருப்பி வாழ முடியுமா.

நீ என்  பொண்ணு  உன் வாழ்க்கை  எனக்கு   ரொம்ப முக்கியம் என்று திரும்ப.

கோடிஸ்வரன்  நின்று   இருந்தான். தன் மகனை  தூக்கிய  படியே துருவா கமலத்தை பார்த்து கமல அம்மா என்று தாவ.

கமலம்   துருவாவை தூக்கியவர் . கொடியை  பார்த்து வாங்க தம்பி என்று கீழே சென்று விட்டார்.

கௌசி  அம்மா என்ன நெனச்சு வருத்தபடுறாங்க .

 கோடிஸ்வரன்   சாரியாகிறும்  கௌசி  நான் பேசுறேன் என்றவன். கீழே  போலாமா  என்றான்.  இராஜாசெல்வம் மகளை தேடி வந்தார்.

கௌசி  இன்ஸ்பெக்டர் ,  வந்து இருக்கார்  வா என்று அழைக்க.

கௌசியும் கோடியும். கீழே வர.

  இன்ஸ்பெக்டர்  கௌசியை  பார்த்து  சல்யூட்  அடிக்க. கௌசி தலை அசைத்து அதை ஏற்றவள்.

என்ன விசயம்.

மேல்  ஒரு  சையின் என்று  கேஸ் பைலை  நீண்ட .

கௌசி அதை வாங்கி படித்து சைன்  பண்ணி பைலை கொடுத்தாள்.

மேம் நாளைக்கு  முக்கியமான  ஜட்சுமென்ட்.

உம் தெரியும் என்றவள்.

 கௌசி  கோடிஸ்வரனை  இன்ஸ்பெக்டரிடம்  என் ஹஸ்பென்ட் என்று அறிமுகம் படுத்த.

வணக்கம் சார் என்று கோடியிடம் சொன்னவர்.

கௌசியிடம்   வர்ரேன் மேம் என்று மீண்டும் சல்யூட் அடித்து விட்டு கிளம்ப.

கோடிஸ்வரன்   கௌசியிடம்  ஒரு வக்கீலுக்கு  இவ்வளவு  மரியாதையா  என்று கேட்க.

  கௌசி நான் வக்கீல் தான் .ஆன ஜட்சும் கூட .  நாளைக்கு முக்கியமான கேஸ் கோர்ட்டுக்கு வருது என்று சொல்ல.

கோடி நீ   ஜட்சா என்று மறுபடியும் கேட்க.

கௌசி ஆமாம் என்று தலையாட்ட.

ஏய் கௌசி என்று தூக்கி சுத்தி இருந்தான். என் பொண்டாட்டி ஜட்சு என்றவன்  . சூப்பர் கௌசி எனக்கு எவ்வளவு  பெருமையா இருக்கு தெரியுமா….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!