Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 2

மின்னல்  ஒரு  கோடி

 அத்தியாயம்  – 2



Advertisement

  கோடி   தினமும்  காலையில்  கௌசியை  பார்ப்பதை  வேலையாக  வைத்துக்கொண்டான்.

Advertisement

Advertisement

 அவனை  அந்த  ஏரியாவில்  எல்லோருக்கும்  தெரியும்  என்பதால்  தினமும்  வேறு , வேறு  இடத்தில்  இருந்து பார்த்துக்கொண்டு  இருந்தான். அவளின்  வீடு  எங்கே என்று  தெரியவில்லை.  கௌசியை  ஒரு  நாள் பார்க்க  வில்லை என்றால். அந்த  நாள்  நன்றாக  இல்லை  என்று  நினைக்கும்  அளவிற்க்கு. அவளை  நினைத்து இருந்தான்.

 குருவம்மாள்   தினமும் அவனுக்கு  திருமணத்துக்கு  பெண்ணின்  புகைப்படத்தை  அனுப்பி  வைக்க.

Advertisement

 எனக்கு   பிடிக்கல  என்று  ஒரே  வார்த்தையில்  சொல்லிவிடுவான்.

 குருவம்மாள்   நேரில்  வந்து  விட்டார். ஏன்  கோடி  இப்படி  பண்ணுற .  வீட்டுக்கும்  வர  மாட்டேங்குற, கல்யாணமும்  பண்ண  மாட்டிங்குற .

 பண்ணிக்கிறேன்மா . கொஞ்சம் பொறுக்க  சொல்லுறேன் .

 நீயும்  பாக்குற  பொண்ணை  எல்லாம் பிடிக்கலன்னு  சொல்லுற  என்ன தம்பி  நினைக்குற  சொல்லு  என்று  புலம்ப.

 கோடி  ஒரு 6 மாதம்  கழிச்சி  சொல்லுறேன்  அம்மா. நீங்க வீட்டுக்கு  போங்க .

 ஏன்  கோடி   வீட்டுக்கு   வரமாட்டேங்கற.

 உங்களுக்கு  தெரிஞ்சும்  ஏன்மா  கேட்குறீங்க.

 குருவம்மாள்   கோடியிடம்  உங்க  அப்பாவ  பத்தி  தெரியுமுல்ல  சாமி உன்  நல்லதுக்காக  தான் ஏதாவது  சொல்லி  இருப்பார். அத  மனசுல எல்லாம்  வச்சுக்காதே. வா சாமி  வீட்டுக்கு  என்று  அழைக்க.

 அம்மா  எனக்கு  தெரியும் நைனாவை   பத்தி. நீ  கிளம்பு  என்றவன்  ஆட்டோவை அழைக்க.

 இந்த  சாமி  நாட்டு  கோழி  கொழம்பு  வச்சேன்  சாப்பிடு  என்று  மகனுக்கு  கொடுத்து விட்டு  சென்றார்.

 குருவம்மாள்  பார்ப்பதற்கு   கொஞ்சம்   தூள்  படத்தில்  வரும்  சொர்ணாக்கா  மாதிரி  இருப்பார்.மனதில் சிறு  குழந்தை போல  குணம்  கொண்டவர்.

 கோடிக்கு  அவனின்  நண்பன்  பார்த்திபன்  போனில்  அழைக்க.

 போனை  எடுத்தவன்,  “என்ன  பார்த்தி  எப்படி  இருக்க.”?

 நான்  நல்லா இருக்கேன்  கோடி . எங்க  ஏரியாவில்   ஒரு  வீடு  விலைக்கு  வருது  வாங்கிறீயா.

 இல்ல  பார்த்தி  வேண்டாம்.  இருக்குறதே  பார்க்க  முடியல.  இத  வேற  வாங்கி  போட்டு  யாரு  மெய்ன்டேன்   பண்ணுறது.

 பார்த்திபன்  பழைய  வீடு தான்  கோடி.  இடிச்சுட்டு   புதுச  வீடு   கட்டலாம்.

 அவனுக்கும்  ஒரு  நல்ல  வீடு  கட்ட வேண்டும்  என்று  நினைத்து  கொண்டு  இருந்தான்.  திருமணம்  முடிந்த  பிறகு.அவன்  வீட்டில்  அவனால்  இருக்க  முடியாது.

 கொஞ்சம்   பெரியாதாக  கட்டவேண்டும்  என்று  மனதில்  நினைத்தான்.   நாளை பார்க்க   வர்ரேன்  என்றான்.

 சரிடா  நல்ல  இடம்  பார்த்து  பண்ணிக்கலாம்  என்றவன்.

 அடுத்த  நாள்  அந்த  இடத்தை  பார்த்து   பிடித்து  விட. அந்த  இடத்தை  வாங்கி  விட்டான்

  வீட்டை  இடிக்கும்  வேலைகள்  நடந்து  கொண்டு  இருந்தது.

 கோடியின்  வாழ்க்கையில்  எந்த  நல்லது  நடந்தாலோ . இல்லை  அவன்   மன  வருத்தப்   பட்டாலோ . திருப்பதிக்கு   செல்லும்   பழக்கம் உள்ளவன். அதை  போல்  வீட்டு  வேலை  துடங்கும்  முன்  திருப்பதிக்கு  சென்று   வெங்கடேச   பெருமாளை   வணங்கி  விட்டு  வந்தான்.  எல்லாம்   நல்ல  படியா   நடக்க  வேண்டும்   என்று.

 வீட்டை  இடிக்கும்  முன் . கரண்டை  கட்  பண்ணி  வெளியில்  கரண்டை  கொடுக்கும்  வேலைகள்   நடந்து  கொண்டு  இருக்க  வீடு  எப்பொழுதும்  திறந்து  இருந்தது.  அந்த  ஏரியாவில்  உள்ள    சின்ன   பிள்ளைகள்  கோடியின்   வீட்டில்   விளையாடிக்   கொண்டு   இருந்தனர்.

  கோடி  வேலைகள்  எப்படி   நடக்கிறது  என்று  பார்க்க  வந்தான் . கோடி  போன்  பேசிய  படியே   வீட்டினுள்   சென்றான்.  அவனுக்கு  கொலுசின்  ஒலி கேட்க. திரும்பி   பார்த்தால்  யாரும் மில்லை  மறுபடியும்  கொலுசு  ஒலி   கேட்க. போனை  ஆப்   பண்ணி  விட்டு  பார்க்க . ஒரு  சிறிய  பையன்  வந்து  யாரையோ  தேட.

 கோடி  அவனை  பார்த்து  என்னட  பண்ணுறீங்க   இங்க  என்று  கேட்க.

  ஐஸ்  பை  ஆடுறோம்  அங்கிள்  என்று  யாரையோ  தேட.

 கோடியின்   கால்  அடியில்  யாரோ  சுரண்டு  வது  போல  இருக்க.

 கீழே  குனிந்து  பார்க்க . அவனின்  மின்னல்  அவனின்   கால்  பக்கத்தில் இருத்தாள்.  அந்த  பையன்  போயிட்டானா? என்று கேட்க.

 கோடி  குனிந்து  பேசுவதை  பார்த்த  சிறுவன் .  கோடியின்  அருகில்  வந்து  அக்கா  ஔட் , அக்கா  ஔட்  என்று  கத்த.

  இல்லை  நான்  நாட்  அவுட் . நான்  அவுட்  இல்லை  என்று  கௌசி  சொல்ல.

கோடியிடம்  அந்த  சிறுவன்  அங்கிள்   அக்கா  அவுட்  தானே  என்று  கேட்க.

  கோடி  கௌசியை பார்க்க. அவுட்  இல்லை  என்று  அவனை  பார்த்து  கண்  அடித்து  சொல்ல.

 அவனோ  ஆ   வென்று  பார்த்து  இருந்தான்.

 கௌசி  கோடியிடம்  ” கோடி  சார்  நான்  அவுட்  இல்லை ”  சொல்லுங்க  என்று  சொல்ல.

 அங்கே  வேலை  பார்க்கும் ஒருவர் வந்து  எல்லோரும்  வெளியே  போய்  விளையாடுங்க  என்று  சொல்ல.

 அனைவரும்  செல்ல.

 கோடி  கௌசியிடம்  என்னை  உனக்கு  தெரியுமா?  என்று  கேட்க.

 ஓ  தெரியுமே  உங்க  கடையில  தான்.  நாங்க   எங்க வீடு  ஆல்ட்ரனேசன்  பண்ண  பொருள்  வாங்குனோம்.

 கௌசி  கோடியிடம்  நீங்க  தான்  இங்கே  வீடு  கட்ட  போறீங்களா  சார்.

ஆமாம்  என்றான்  கோடி. நீ.. உன் பேர்  என்ன.

 என் பேர்  கௌசல்யா ஸ்ரீ  சார். அதோ  என்று  அவன் நிற்கும் எதிர்  வீட்டை  காட்டி  அது  எங்க  வீடு  தான்   ஏதாவது   எல்பு  வேணுமுண்ணா   கேளுங்க   என்று   சொல்லி விட்டு.  அவளின்  விட்டு  கேட்டை  திறந்து  சென்றாள்.

 கோடி  அவளையே  பார்த்து   சின்ன  பெண்  போல  முட்டி  வரை  ஸ்கட், ஒரு டிசர்ட்டும் அணிந்து   இருந்தாள். நம்ம  எதுத்த  வீடா  இவள். பேரு  கௌசல் ஸ்ரீ , கோடிஸ்வரன்  அழகா இருக்குல.  அவளுக்கு  என்னை  தெரிஞ்சு  இருக்கு . அது  கூட  எனக்கு  தெரியல.  நல்ல வேலை  அண்ணான்னு   சொல்லாமல்  போனாலே. இப்படி சின்ன  பிள்ளைங்க   கூட  விளையாடுற. இவ  காலேஜ்  படிக்குறாலா  இல்லையா  என்று  அவள்  வீட்டையே  பார்த்து  நிற்க.

 ஹாய்  கோடி  என்று  பார்த்திபன்  வந்தான்.  என்னட  எதிர்  வீட்டை  பார்த்துட்டு  இருக்க.

 அதுவா என்றவன். எதிர்  வீட்டில்  யார்  இருக்கா? பார்த்தா  நம்ம  ஆளுங்க  மாதிரி தெரியலயே.

 அவங்க  மதுரையில்  இருந்து  வந்து   இருக்காங்க 5  வருஷம் ஆச்சு . பழைய  வீட்டை  வாங்கி  ஆல்ட்ரனேசன்  பண்ணி இருக்காங்க. நல்ல  குடும்பம் . அவங்க  உண்டு  அவங்க  வேலை  உண்டுன்னு  இருப்பாங்க.

 இப்போ உன் வீட்டுல  இருந்து போச்சே  அந்த  நெட்ட  பொண்ணு.  நம்ம ஏரியாவுல  இருக்கும்  எல்லா   பசங்களும் அவ  கிட்ட  ப்பிரபோஸ்  பண்ணாங்க. அந்த  பொண்ணு  யாரையும்  பார்க்காது. பேசாதுங்க  ரொம்ப  நல்ல  பொண்ணுங்க.

 அந்த  பொண்ண  ஒரு  டாக்டர்  கூட  பெண்  கேட்டு  வந்தாங்க.

 அவங்க  வீட்டுல  படிக்கணும்  சொல்லி  அனுப்பிட்டாங்க.

 டாக்டர்  பையனுக்கு  கௌசியை  பிடிச்சு  போய்  கல்யாணம்  பண்ணிக்கீறேன்னு  ரொம்ப  தொந்தரவு  பண்ணான். இவ  இருக்காளே  அவன்  கிட்ட  என்ன  சொன்னாளோ.

 வெளிநாட்டுகே  போய்ட்டான் என்று  சொல்லி  சிரித்து  விட்டு.  எதுவும்   தேவைன  கூப்பிடு  கோடி  என்று பார்த்திபன்   சென்றான்.

 என்னது   டாக்டர்  மாப்பிள்ளையே  வேண்டாம்  சொல்லிட்டாள. இவ  நம்மள  எல்லாம்  பார்ப்பாளா.  அப்பவே  எங்க நைனா  சொன்னாரு  படி , படியின்னு கேட்டியா. இப்போ  சான்சே  இல்ல. பக்கத்தில்   வச்சுகிட்டு  இவள  என்ன  செய்ய  என்று  புலம்பியவன். ஏதாவது  செய்  கோடி  என்று  மனதில்  நினைத்தான்.

 கோடிஸ்வரன்   வீட்டின்   வேலை  மட , மடவென  நடந்து  கொண்டு  இருந்தது.

கோடி  கௌசியை  பார்ப்பதை கொஞ்சம்   குறைத்து  கொண்டான். ஒரு  வேளை  அவள்  தனக்கு  கிடைக்கா  விட்டாள்  என்ன  செய்வது  என்று  நினைத்து.

 கோடிக்கும்   வீடு  கட்டும்  தொடக்கத்தில்  இருந்து  நல்ல  முறையான  பேச்சு வார்த்தை  கமலத்திடம் இருந்தது. வீடு  கட்டும் முன்  கோடி  கமலத்தின்  வீட்டு முன்  கல், செங்கல்  வைத்து  கொள்ள  அனுமதி  கேட்க .

கமலம்   தாரலாம வச்சுக்கோ   தம்பி என்றார்.  அவனும்   கமலத்தை அக்காவென்று  அழைக்க . கமலம்  தம்பி  என்று  பேசி  பழகினார்கள்.

   கோடி  வேலை  செய்பவர்களுக்கு  தினமும்  குடிக்க   தண்ணீர்  கொண்டு  வருவதை  பார்த்த  கமலம்  கோடியிடம் எங்க வீட்டில்   நல்ல தண்ணீர்  தினமும்  வரும்  தம்பி  நான்   தண்ணீர்   பிடிச்சு தரேன் . நீங்க  குடம்  மட்டும்  கொடுக்க  போதும்  என்று சொல்லி. தினமும்  குடிக்க  இரண்டு  குடம் தண்ணீர்  பிடித்து  வைத்து  விடுவார்.

கோடி  கட்டும்  வீட்டிற்கு  தினமும்  தண்ணீர்  விட  வருவான்.

 கௌசியின்   வீட்டில்  ஆட்கள்  நடமாட்டம்   அதிகமாக   இருக்க  என்வென்று  தெரியவில்லை  என்று  நினைத்து . தண்ணீர் விட்டு  கொண்டு  இருந்தான்.

 கௌசியின். வீட்டு  முன்  முகூர்த்த  கால்  நட்டினார்கள்  திருமணத்துக்காக.  பார்த்தவனுக்கு  பூமி  தலை  கீழ்  சுத்துவது  போல்  இருக்க .

கௌசிக்கு தான்  திருமணம்  என்று  கோடி  நினைக்க.

கமலம்  கோடியை  பார்த்து  தம்பி  கீழ  வாங்க  என்று அழைக்க. கீழே வந்தான்.

 கமலம்  கோடியிடம்  தம்பி  எங்க  பெரிய  பொண்ணுக்கு  கல்யாணம்  உங்க  வீடு  எங்கன்னு  தெரியல. தப்ப  நினைக்காதிங்க   வீட்டுக்கு  வாங்க  பத்திரிக்கை  தரேன்  என்று அழைக்க .

 பரவா  இல்லை என்றவன் .

வாங்க  தம்பி என்று  அழைத்து  வீட்டினுள்  அமர  வைத்து. கௌசி  தம்பிக்கு  காப்பி  கொண்டு  வா. என்று  சத்தம்  கொடுக்க.  இதோ  மா  என்று    சத்தம்  கொடுத்தவள்.  கிச்சனில்  வேலை  பார்த்து   கொண்டு  இருந்தாள்.

  கமலம் , இராஜ  செல்வனை  அழைத்து  கல்யாண  பத்திரிக்கையை  கொடுத்தார்.

 அதை கனத்த  மனதுடன் வாங்கியவன்.  சரிக்கா  நான்  கிளம்புறேன்  என்று  கிளம்ப.

கமலம்   இருங்க  தம்பி  காபி  சாப்பிட்டு  போங்க  என்று  ,கௌசி  என்று  குரல்  குடுக்க  .

இதோ  மா  என்று  கௌசி  காப்பியும்,  இனிப்பும்  ,காரமும்  சேர்த்து  கொண்டு  வந்து  கொடுக்க.

 அவனால்  நிற்க  கூட  முடியவில்லை .

உங்காருங்க  கோடி  சார் என்று  சிரித்த   முகத்தோடு  கௌசி  சொல்ல.

 சோபாவில்  அமர்ந்து  விட்டான்  கோடி.

சிவா  கோடியை  பார்த்து  யார்  என்று  கேட்க.

அண்ணா  அவங்க   கோடி  சார்  எதிர்ல  வீடு   கட்டுறாங்கல, இவங்க  தான் .

சிவா  ஓ  அப்படியா  என்று  கோடியை  பார்த்து  சிரிக்க.

 கோடியும்  அவனை  பார்த்து சிரித்தான். கமலத்திடம்  வரேன்  க்கா   என்றவன்  கிளம்ப.

கோடி   சார்   கல்யாணத்துக்கு   கண்டிப்பா  வரணும்  என்று  கௌசி  சொல்ல.

அவளைப்  பார்த்து  சிரிக்க   முயற்சி  பண்ண  அவனால்  முடியவில்லை.

தலையை  மட்டும்  ஆட்டியவன்  அவளை  கண்ணில்   நிறப்பி கொண்டு  கிளம்பிவிட்டான்.நேராக  வந்தது  அவன்  காம்புலக்ஸ்  அறைக்கு  தான் . பத்திரிக்கையை  தூக்கி  எறிந்தவன்.  தலையில்  கைவைத்து  அமர்ந்து  விட்டான்.  ஏன் இப்படி  ,எனக்கு மட்டும் ,நான் முதல்  முதலில்  ஆசை பட்டது   இவளை  தான். அதுவும் நடக்கபோகுறது  இல்ல. என்ன  வாழ்க்கை  டா. இங்கே இருந்தால் பைத்தியம்  பிடித்து  விடும் என்றவன். அவனின்  நண்பனின் காரை  வர  சொல்லி  திருப்பதிக்கு  சென்று  விட்டான்.

 பல  முறை  பெருமாளை  தரிசித்தவன் .5 நாள்  கழித்து  பெங்களூர்  வந்தான். அவன்  அறைக்கு வந்தவன்.  பால்கனிக்கு  சென்று  ஏன்  என்  கண்ணில்  அவளை  காட்டினாய்  கடவுளே  என்றவன்  நீண்ட  நாள் கழித்து  நன்றாக  தூக்கி எழுத்தான். காலையில்  எழுந்தவன்  பால்கனிக்கு வந்து  நிற்க . அவள்  இனிமேல்  வர  மாட்டாள்   என்று  நினைத்தவன். ஒரு    முறை  கடைசியாக  பஸ்  ஸ்டாப்  செல்லலாம்   என்று  நினைத்து. பஸ்  ஸ்டாபில் உள்ள   சேரில்  வந்து  அமர்ந்து  கொண்டான்.

இனிமேல்  அவள்  வரமாட்டாள்  என்னை  யார்  பார்த்தால்  என்ன  என்று  நினைத்து. பஸ்  ஸ்டாப்பில் அமர்ந்து  கொண்டான்.

 சிறிது  நேரம்  அவள்  வரும்  வழியை பார்த்தவன் . கௌசி வருவது போல  தெரிய . தன்  கண்ணை  மூடி  அமர்ந்து  விட்டான். எங்கே  பார்த்தாலும்   இவளே தான்.  ஏன்டி  என்  கண்ணுல  பட்டு  தொலச்ச.ஏதோ  தன்னை  விட்டு  அனைத்தும் போனது  போல  உணர்ந்தவன். பஸ் ஸ்டாப்பில்  உள்ள சேரில்  தலை  சாய்த்து  அமர்ந்து  விட்டான்.

 பஸ்  ஸ்டாப்பில்  பூ  விக்கும் அம்மா  என்னம்மா  கல்யாணம்  நல்ல படிய  முடிஞ்சதா என்று  கௌசியிடம்  கேட்க.

 கௌசி  எல்லாம்  முடிஞ்சது  அக்கா  என்றாள்.

கோடி , கௌசியின்  குரல்  கேட்டு நிமிர்ந்து  பார்க்க. அவனின்  மின்னல்  சோக மாக நின்று இருந்தாள்.

பூ  விக்கும்  அக்கா   கௌசியிடம்  ஏன்  கண்ணு  முகம்  வாடியிருக்கு  அக்கா  கல்யாணம்  பண்ணி  போய்ட்டாலேயின்னு  கஷ்டபடுறியா என்று  கேட்க.

ஆமாம் என்றாள் கௌசி.  தினமும்  என்  கூடவே  வருவால . இப்போ  தனியா  காலேஜ்  வர  கஷ்டமா  இருக்கு  என்று  பூ விக்கும்  அம்மாவிடம்  கௌசி  பேச.

கோடியோ  என்ன  அக்காவா. அக்காவுக்கு  கல்யாணம்மா  இவளுக்கு  இல்லையா .அப்போ  இவ  தங்கச்சியா. அந்த பொண்ணு தான்  அக்காவா. அட  கடவுளே  இது  தெரியாம  5  நாள்  பீல்  பண்ணிட்டியே  கோடி  என்றவன்.

 இனிமேல்  காத்து  இருக்கிறது  தப்பு.  எவ்வளவு  சீக்கிரம்  சொல்ல  முடியுமோ  சொல்லி  கமல அக்கா கிட்ட  பொண்ணு  கேட்க  வேண்டும் என்று  நினைத்து  நல்ல மண  நிலையில்  கிளம்ப.

பஸ்  ஸ்டாப்பின்  பக்கத்தில் ஒரு  பாரின்  கார் வந்து  நிற்க.  அதில் இருந்து  ஒருவன்  இறங்க  கௌசி   மாமா  என்று  அவனிடம்  செல்ல. வா  என்றவன்   காரின்  முன்  கதவை  திறந்து ஏறு என்று சொல்ல. கௌசி  காரில் ஏறி சென்றாள்.

 கோடி  எங்க  இருந்து வாரீங்கடா.இப்பத்தான்  கொஞ்சம்  நிம்மதிய  மூச்சு  விட்டேன்  என்று புலம்ப.

சென்ற  கார்  ஒரு  நிமிடத்தில்.  கார்  கிரீச்  என்று  சத்தத்தோடு  நிற்க. அதில்  இருந்து  கோபமாக  இறக்கினாள்   கௌசி. காரின்  இருந்தவன்  கௌசியின்  கை  பிடிக்க  பளார்  என்று அறைந்து  இருந்தாள்.

கௌசி  பதில் சொல்லுடி .

 என்ன  சொல்லனும் . நான்  வேணும்முன்னா  வைட் பண்ண முடிச்ச  எனக்காக வைட்பண்ணுங்க.  இல்லன்னா  உங்க அம்மா சொல்லுற மாதிரி  வேற  பொண்ண   பார்த்து கல்யாணம்  பண்ணிங்கோ .  எனக்கு முதல்ல படிப்பு , அடுத்தது வேலை பாய் என்று சொல்லி அவள் கல்லூரி பஸ்சில்  ஏறி சென்று விட்டாள்.

 கோடி , கௌசி   அவனை  அறைந்தவுடனே  இவர்கள்  அருகில் வர.  அவள்  பேசியது அனைத்தையும்  கேட்டவன்.

 காரின்  அருகில்  கோபமாக  நின்றவனிடம்  என்ன   பிரச்சனை என்று   கோடி  கேட்க.

 நீங்க யாரு சார் அதை கேட்க.

 நான் கௌசியின்   எதிர் வீடு. இப்பதான்  அவள்  அக்காவுக்கு  கல்யாணம் ஆச்சு  என்னவென்று கேட்க.

 என் பேரு கதிர் பாரின்ல  வேலை செய்றேன் . கௌசி  என் மாமா  பொண்ணு  அவள  எனக்கு  கல்யாணம் பண்ண  ஆசை. மாமா கிட்ட  கேட்ட  படிப்பு  முடிஞ்சதும்  பாக்கலாம்  சொல்லுறாரு. இவள கேட்ட  அடிச்சுட்டு  போற.

 கோடி  என்ன அவசரம்  கதிர் . கௌசி  அக்காவுக்கு  இப்போ தான்  கல்யாணமாச்சு  நீங்க வைட்  பண்ண  வேண்டியது  தானே.

 நீங்க வேற சார். எங்க அம்மா  எனக்கு  பொண்ணு  பாத்துட்டு  இருக்காங்க. கௌசி  வேண்டாமுன்னு  சொன்னா  வேற  பொண்ணா  பார்த்து  கல்யாணம் பண்ணி  வைச்சிருவாங்க  என்று  புலம்பிய  படியே  காரை  எடுத்து  சென்றான்.

 கோடி  , கௌசியை   எப்படி  கரெக்ட் பண்ணுறதுன்னு சொல்லுங்க….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!