Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

நிலா – 12.1

ரகு சுப்பிரமணியம் தனக்கு எதிரே அமர்ந்திருக்கும் அர்ஜுனை விழி எடுக்காமல் பார்த்தான். இவன் வந்து மூன்று மணி நேரங்கள் ஆகியது. மௌனமாகவே அமர்ந்திருந்தான் வார்த்தை ஒன்று கூட பேச பிடிக்காமல்.

ரகு நேரத்தை பார்த்தான், விடியற்காலை மூன்றை நெருங்கிவிட்டது. இரவு பன்னிரெண்டுக்கு வந்து வீட்டின் அழைப்பு மணியை அழுத்தியிருந்தான்.

“என்ன அர்ஜுன்?”

“உன்கிட்ட பேசணும்டா” என்றதோடு உதடுகளை பூட்டிவைத்துவிட்டான் அர்ஜுன்.



Advertisement

இவனும் தண்ணீர் ஒன்றை எடுத்து வைத்து பக்கத்திலே அமர்ந்திருந்தான். வக்கீல் ஆயிற்றே பொறுமை அதிகமாகவே இருந்தது. அர்ஜுனோ இங்கு வந்தது யோசிக்க மட்டும் தான் என்பது போல் அமர்ந்திருந்தான்.

“மூணு மணி நேரம் தூங்குனா தான் என்னால அடுத்த வேலைய செய்ய முடியும். யோசிக்கிறதா இருந்தா வெளிய போ” என்றான் நாளைக்கு தேவையான கோப்பைகளை எடுத்து வைத்து. படுக்க போனவன் கையை பிடித்து அருகில் அமர்த்திக்கொண்டான் அர்ஜுன்.

“பேசணும்டா ரகு” தீவிரமான முகபாவனையுடன்.

Advertisement

“தெரியும் நீ கடைசில இங்க தான் வந்து நிற்பனு” அர்ஜுன் கையை விலக்கி விட்டு எழுந்த ரகு, சில காகிதங்களை எடுத்து வந்து போட்டான் நண்பன் முன்.

Advertisement

“இது உன்னோட வைப் சம்மந்தப்பட்ட டீடைல்ஸ். அந்த பொண்ணோட ஸ்டேட்மென்ட், அவங்க அப்பா ஸ்டேட்மென்ட் வரை எல்லாமே இருக்கு” வரிசையாக சுட்டி காட்டினான்.

“அந்த பொண்ணுக்கு ரெண்டு வயசு இருக்குறப்போ அவங்க அம்மா இறந்துட்டாங்க. அப்பா இரும்பு பட்டறைல வேலை பாத்தவர். வைப் வைத்தியத்துக்கு ஏகப்பட்ட கடன்.

அதுல இருந்து வெளிய வரவே அந்த குடும்பம் பல வருஷம் போராடிருக்கு. அவ்ளோ கஷ்டத்துலையும் அவர் ஒரு ரூபா எங்கையும் கை வச்சது இல்ல. ரொம்ப நேர்மையான மனுஷன். அதே குணம் தான் பொண்ணுக்கும்”

Advertisement

எதற்காக இதனை ரகு கூற வருகிறான் என்பது புரிந்தது அர்ஜுனுக்கு, “இது தேவையில்லை, அவ மேல நம்பிக்கை இருக்கு”

ரகு, “திடீர்னு அறிவு வந்துடுச்சோ. அன்னைக்கு டிவோர்ஸ் வேணும்னு வந்து நின்னப்போ எங்க போச்சு இந்த அறிவு?”

அர்ஜுன் ஏதோ பேச வர அவனை தடுத்தவன், “உன் சந்தேகத்தை பூர்த்தி பண்ண வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கு. கேட்டுக்கோ”

அழுத்தமாக அர்ஜுனை தடுத்தவன், “நல்ல பிரைட் ஸ்டுடென்ட் உன் வைப். படிச்சது எல்லாம் ஸ்காலர்ஷிப்ல தான். உன் ஹாஸ்பிடல்ல ஜாயிண்ட் பண்ணி மூணு வருஷம் ஆகுது. ரெண்டு வருஷம் முன்னாடி தான் அவங்க அப்பா ஓனர் அவருக்கு வாட்ச்மேன் வேலை குடுத்து அவங்க வீட்டை அவர் பேர்ல எழுதி வச்சு லோன் வாங்கி குடுத்துருக்கார். அதுவும் அவரா செய்யல”

ஒரு கடிதத்தை அவன் முன் வைத்தான், “இலக்கியா அப்பாக்கு டி.பி வந்துடுச்சு. அதுனால வேலை சரியில்லைன்னு அவங்க மேனேஜர் அவரை வேலை விட்டு அனுப்ப சொல்லி எம்.டிக்கு போட்ட லெட்டர்.

இந்த லெட்டர் வரவும் அவர்கிட்ட சொல்ல முடியாம அவர் ஓனர் இந்த பொண்ணுகிட்ட பேசிருக்காங்க. இத்தனை வருஷம் வேலை பாத்ததுக்கு மூணு லட்சம் பணம் குடுக்குறோம், உன் அப்பாவை வீட்டுல இருக்க சொல்லிடுங்கனு.

இந்த பொண்ணு தான் அவர்கிட்ட பேசி வேலை வாங்கி குடுத்து, அந்த மூணு லட்சத்தை வச்சிட்டு மேல அவங்க அப்பா மட்டும் தங்கிகிற மாதிரி ஒரு ஹால் டாய்லட் வச்சு வீடு கட்டி கேட்ருக்கு. மிச்ச பணத்தை லோன் போட சொல்லி. ரெஸ்ட் யு க்நோ”

ஒரு சில நொடிகள் இடைவேளை விட்டு, “இதை எல்லாம் ஏன் உன்கிட்ட சொல்றேன்னு பாக்குறியா? காசு இருக்க உங்களுக்கு வசதியா வாழணும்ங்கிற ஒரு வழி தான். பணம் இல்லாதவங்களுக்கு அதை சம்பாதிக்க பல வழி இருக்கு. அந்த பொண்ணு அப்பா ஸ்டேட்மென்ட் பாரு”

அதனை மட்டும் எடுத்து அர்ஜுன் கையில் கொடுத்தான். அர்ஜுன் எடுத்து பார்த்தான், வங்கியில் வைப்பு தொகையாக ஒன்றரை லட்சம் இருந்தது. அதே போல் இலக்கியாவின் கணக்கை பார்க்க, ஆயிரம் கூட இல்லை.

“அவ அப்பா சம்பளம் வந்ததும் பத்திரமா ஒரு ரூபாய் எடுக்காம அந்த பொண்ணு ரெண்டு வருசமா சேர்த்து வச்சிட்டு வருது. வீட்டு லோன் போக வீட்டு செலவு எல்லாம் அவளோட பணம் தான். தனக்காகன்னு அவ யோசிச்சது போலவே தெரியல”

“நான் விசாரிச்ச வரை ஒரு குறை சொல்ல முடியாது. தேவைக்கு மீறி உங்க ஹாஸ்பிடல்ல சரி, அபார்ட்மெண்ட்ல சரி யார்கிட்டயும் அனாவசிய பேச்சு கூட இல்ல.

அவ இதெல்லாம் பணத்துக்காக தான் பண்றதா நீ நினைச்சா உன் எண்ணத்தை மாத்திக்கோ” என்றான் ரகு நல்ல நண்பனாய்.

அர்ஜுன் நெற்றியை நீவியபடியே, “அதெல்லாம் நான் நினைக்கலடா, பணத்தை பத்தி நினைக்காத மனுஷங்களே இருக்க மாட்டாங்க. ஏன் நாங்க எதை நோக்கி ஓடல? என் பிரச்சனையே அவ நர்ஸ், நான் டாக்டர் தான்” கூறினான்.

தலையை ஆட்டி, “ம்ம்ஹ்ம் நீ வாழ்க்கையை வாழ மாட்ட. கெளம்பு இங்க இருந்து” என்றான் தீவிரமாய்,

உடனே, “அப்றம் டிவோர்ஸ் வாங்கலாம்னு நினைச்சிடாத. நீ எந்த லாயர் கிட்ட போனாலும் எவனும் உனக்காக வந்து நிக்க மாட்டான்”

“இப்போ என் பிரச்னை அதுவே இல்ல ஓகே?” எழுந்து நின்ற அர்ஜுனுக்கு இன்னும் இலக்கியா கூறிய வார்த்தைகள் காதில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

“சூசைட் பண்ணனும் போல இருக்காம் அவளுக்கு. ஏதாவது சைகார்டிஸ்ட் இருந்தா சொல்லுன்னு என்கிட்டயே கேக்குறா ரகு. அதுலயும் கடைசியா வந்துச்சு பாரு அந்த ஒரு சொட்டு கண்ணீர்…

ச்சை யார்ரா இவ? எதுக்கு என் லைப்ல வந்தா? என் வேலைய நான் பாத்துட்டு நிம்மதியா தானே இருந்தேன்? என்னைக்கு இவ வந்தாளோ அன்னைல இருந்து நான் ஓடிட்டு இருக்கேன்”

இயலாமையில் துவங்கியவன் வார்த்தை இறுதியில் ஆத்திரத்தில் வந்து முடிந்தது. ஆனால் கோவ வார்த்தைகள் பின்னால் நிஜமான கோவம் துளியும் இல்லை. வேதனை மட்டுமே இருந்தது, அவளது வேதனையை துடைத்து எறிய முடியாத வருத்தம் மட்டுமே மேவி இருந்தது.

“பக்கத்துல போகவும் முடியாம தூரமா தள்ளியும் நிக்க முடியாம தான் நாலு மாசம் விட்டு ஓடுனேன். வந்த ரெண்டே நாள். மறுபடியும் எனக்கு தூக்கம் போச்சு. சூசைட் பண்ற அளவு அப்டி என்னடா அவ வாழ்க்கைல நடந்துபோச்சு? பைத்தியக்காரி”

நடு இரவில் அவள் பேசியதை மறக்க முடியாமல் தான் இங்கு ரகுவை தேடி அர்ஜுன் வந்து நிற்பது. தெரியவில்லை என செய்வதென.

“எதுக்கு இப்டி பேசுறாங்க?”

அர்ஜுன், “மேடம் லோன்லியா பீல் பன்றாளாம். பீலிங்ஸ் ஷேர் பண்ண கூட யாரும் இல்லையாம்”

ரகு, “அப்போ சைகார்டிஸ்ட்கிட்ட போக வேண்டியது உன் வைப் இல்ல, நீ தான்” என்றான் ரகு சிறிதும் அசராமல்.

பதிலுக்கு அர்ஜுன் முறைக்க, “முறைச்சா பேச்சை மாத்திடுவேன்னு நினைக்கிறியா? தெளிவா தான் சொல்றேன். ஒரு பொண்ணு, அதுவும் உன்ன நம்பி வந்த உன் மனைவி இந்த அளவு யோசிக்கிறாங்கன்னா தப்பு யார் மேல இருக்குனு யோசி அர்ஜுன்” அதே யோசனை தானே அவனிடம் அவனே கடந்த மூன்று மணி நேரங்களாக.

“பொதுவா பொண்ணுங்க அவ்ளோ சீக்கிரம் யாருக்கும் கழுத்த நீட்டிட மாட்டாங்க. என்ன பொறுத்த வரை இலக்கியா இப்டி பண்ணிருக்குற காரணம் கண்டிப்பா உன் ஹாஸ்பிடல் மேல உள்ள அக்கறையா என்னனு தெரியல பட் இப்போ நீ சொல்றதை வச்சு பாத்தா. ஷி லைக்ஸ் யூ. ரொம்ப நாளாவே”

ரகு கூறியதில் அர்ஜுனின் அடிமட்டம் ஆட்டம் கண்டது உண்மையே. அவன் அவளிடம் உணர்ந்த அதே விஷயம் உண்மையாக இருக்க கூடாதென்று வேண்டிய முட்டாள்தனமான கோரிக்கை, இன்று நண்பன் மூலம் கேட்கும் பொழுது அதிர தான் வைத்தது.

“கனவு கன்னி, அதுல இருந்து வர்ற பேர், இது எல்லாம் எவ்ளோ நாள் நிலைக்கும்னு நினைக்கிற? அவுட்லுக் டிசிவ்ஸ் அண்ட் மனி இஸ் மேஜிக் (வெளித்தோற்றம் பொய்யானது, அப்றம் பணம் வெறும் மேஜிக்).

ரெண்டுமே ரொம்ப நாள் நிலைக்காது அர்ஜுன். லவ் பண்றத விட லவ் பண்ணப்படுறது வரம்டா.

நீ தேடுற வாழ்க்கைல அது கிடைக்குமா தெரியல. உனக்கு அமைஞ்சிருக்க வாழ்க்கைல நீ எதிர் பாக்குற பெருமை, புகழ் கிடைக்காம இருக்கலாம். அதுக்கெல்லாம் மேல நிம்மதி கிடைக்கும். காசை சம்பாதிக்க துணை தேடாம, மனசுக்கு துணை தேடுடா” என்றதோடு சென்று உறங்கிவிட்டான் ரகு.

அவனுக்கு நாளை பார்க்க வேண்டிய வேலைகள் ஓராயிரம். அர்ஜூனுக்கும் அதே போல் தான். ஆனால் இப்பொழுது அவனது எண்ணமெல்லாம் அவனது நர்ஸ் பெண் தான்.

மூளையை குடைந்து ஒவ்வொரு செல்லிலும் இம்சிக்கிறாள். காலை ரகு எழும்வரை அர்ஜுன் அங்கேயே தான் இருந்தான். ரகு தேநீரை ஒப்படைத்த பிறகு தான் அதனை குடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினான்.

செல்பவனை பிடித்து, “என்ன முடிவு பண்ணிருக்க?”

ரகு கேட்க, “உடனே முடிவெடுக்க முடியாது. அவளை பர்ஸ்ட் நார்மல் ஆக்கணும்” பதில் கொடுத்து வீடு நோக்கி பயணித்தான்.

செல்லும் வழியிலேயே ஒரு நோயாளி அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்திருந்தது.

“ஆக்சிடென்ட் கேஸ் அர்ஜுன். பொண்ணு ப்ரெக்னென்ட். எய்ட்த் மந்த தான் ஆகுது ஆனா தலைல பலமான அடி. ஒன் ஹவர்ல ரிப்போர்ட்ஸ் எல்லாம் ரெடி பண்ணி வைக்க சொல்றேன்”

அன்னை பானுவிடம் இருந்து வந்த தகவலில் முக்கால் மணி நேரத்தில் மருத்துவமனையில் இருந்தான்.

இலக்கியா முன்னே சென்று தன்னுடைய கைகளை சுத்தம் செய்து அர்ஜுனுக்கு தேவையான பொருட்களை எடுத்து வைத்துக்கொண்டிருக்கும் பொழுது நோயாளியின் அறிக்கைகளை எடுத்து வந்த மூத்த செவிலியர் இலக்கியாவின் உடையை பார்த்து,

“என்ன இலக்கியா இது? போ டிரஸ் மாத்திட்டுவா”

“இல்ல மேம், எமெர்ஜென்சி கேஸ்னு கால் வந்துச்சு. நான் வெளிய இருந்தேன். அதான்…”

“அப்போ பிரச்சனை இல்ல, ஹால்ஃப் டே லீவ் போட்டுட்டு வந்து ஜாயின் பண்ணிக்கோ. இன்னைக்கு நீ இப்டி வருவ, நாளைக்கு உன்ன பாத்து இன்னொருத்தர் ரூல்ஸ் பிரேக் பண்ணுவாங்க. வாட் டூ யு திங்க் அஸ் யுவர்செல்வ்ஸ்? இந்த ஹாஸ்பிடல் ஓனரா? அர்ஜுன் சார் வர முன்ன வெளிய போ”

இரவு முழுதும் வேலை பார்த்து கண்கள் சிவப்பேறி அவரது அசதி தெரிந்தது. அடுத்த பகுதி வேலைக்கு வருபவர்கள் வரவே இன்னும் ஒரு மணி நேரம் மேல் ஆகும்.

இந்த அறுவை சிகிச்சையையும் விட்டு செல்ல முடியாத கோவம் அந்த ஐம்பது வயதை தொட்ட செவிலியருக்கு.

“இல்ல மேம் அர்ஜுன் சார் என்னை…”

“நீ இல்லாம இங்க எதுவும் ஓடாதுனு நினைக்கிறதை நிறுத்து இலக்கியா. நீ இங்க வந்து ரெண்டு மூணு வருஷம் தான் ஆகுது. அதுக்கு முன்னாடி வரைக்கும் எத்தனையோ ஆபரேஷன்ஸ் நடந்துருக்கு, எல்லாத்துக்கும் உன்கிட்டயா நாங்க வந்து நின்னோம்? சும்மா நீ இல்லாம இங்க எதுவுமே இல்லனு பேசாத”

அவரது வார்த்தைகள் இலக்கியாவின் மனதை அதிகம் தாக்கியிருக்க கன்னத்தில் கண்ணீர் தாரை தாரையாக வழிந்தது.

“சாரி மேம், பட் ப்ளீஸ் இந்த ஒரு தடவை எக்ஸ்யூஸ் பண்ணுங்க” இத்தனைக்கும் காரணம் அவளது உடை தான்.

செவிலியருக்கான உடையை அணியாமல் வீட்டிலிருந்த பொழுது உடுத்தியிருந்த புடவையோடு வந்திருந்தாள். அந்த புடவையும் அவள் வழக்கமாக அணியும் மங்கிய நிறமுள்ள புடவை தான். அதற்கே இவ்வளவு பேச்சு விழுந்தது.

“ஒன்னு பண்ணும்மா… உன் அப்பாவை ஒரு ஹாஸ்பிடல் கட்ட சொல்லி, அங்க இந்த மாதிரி ரூல்ஸ் போடு. நான் அங்க வேலைக்கு சேர்ந்து முதலாளி அம்மாக்கு பெர்மிஷன் தர்றேன்”

இதன் இடையே உள்ளே வந்த சில மருத்துவர்களும், செவிலியர்களும் இருவரையும் பார்த்தவண்ணம் தான் இருந்தனர். அப்பொழுது அந்த கர்பிணி பெண்ணை ஆபரேஷன் தியேட்டர் உள்ளே அழைத்து வந்திருக்க, “உன்ன பேபிசிட் பண்ண எனக்கு நேரம் இல்ல இலக்கியா. வெளிய போ” அ

வர் கத்தியதில் தூக்கி வாரி போட்டது பெண்ணின் உடல். அவள் வெளியே செல்ல கதவை திறந்த பொழுது உள்ளே வந்த அர்ஜுன், “எங்க போற” என்றான் அவள் முகத்தை ஆராய்ந்தவாறே.

“இல்ல சார்…” அவளை பேச விடாமல், ” உள்ள வா” அழைத்தவன் அவள் முன்னே நின்றான்.

அவன் எண்ணம் புரிந்து அவனுக்கான உடையை நீட்ட, “என்னாச்சு?” கேட்டான் மெதுவான குரலில்.

ஒன்றும் பேசாமல் அவன் பின்னே சென்று முடிச்சுகளை போட்டவள், அவன் கையில் கையுறளைகளை கொடுத்து இன்ட்ராஓக்யூலர் லென்ஸ் கண்ணாடியையும் அனுவித்துவிடாமல் கையிலே ஒப்படைக்க பார்த்தாள்.

“என்ன பாரு” அழைத்தான்.

இலக்கியா தலையை உயர்த்தாமல் நிற்க, பிரதாப்பிடம், “நீங்க அனஸ்தீசியா போடுங்க டாக்டர் நான் வர்றேன்” என்றான்.

அவனது அனுமதி கிடைக்கவும் மற்ற கூட்டம் அவர்கள் வேலையை உடனே பரபரப்பாக செய்ய துவங்கினர். எவர் பார்வையும் தங்கள் மீதில்லை என்பதை உறுதி செய்துவிட்டு மீண்டும் இலக்கியாவை அழைத்தான்.

பெண்ணவள் திரும்பவே இல்லை. அவளது விசும்பல் சத்தம் மட்டும் மெதுவாக கேட்க, “இப்ப என்ன பாக்க போறியா இல்லையாடி?” அவனது அதட்டலில் கண்ணீரை துடைத்து விழி உயர்த்தினாள்.

மூக்கின் நுனி சிவந்து போயிருந்தது அவளது விழிகளை போல. “யார் என்ன சொன்னா?”

“யூனிபார்ம் போடாம வந்துட்டேன்னு கவிதா மேம் திட்டுனாங்க”

“ரொம்ப ஹார்ஷா பேசுனாங்களா?”

தலையை ஆட்டினாள், “நான் கெளம்பவா சார்?”

அவனோ அவளை விடும் எண்ணத்திலே இல்லை, “முகத்தை வாஷ் பண்ணிட்டு வா”

“இல்ல அவங்க…”

“போனு சொல்றேன்” அழுத்தமாக கூறி குறைக்கவும் அவன் கூறியதை செய்து வந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!