Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Minnal Oru Kodi

Minnal Oru Kodi 3

மின்னல்  ஒரு  கோடி

 அத்தியாயம்  –  3



Advertisement

   கோடி  வீட்டை  கட்டி  முடித்தவுடன் கல்யாணத்தை  பத்தி  கமலத்திடம்  பேச  வேண்டும்  என்று  நினைக்க. தன்னை  வேண்டாம்  என்று  சொல்லிவிட்டால்   என்ன   செய்வது  என்ற  யோசனையும்  வந்தது.

Advertisement

Advertisement

 நல்ல படியாக   வீட்டை கட்டி  முடித்து  கிரகபிரவேஷத்திற்கு. அனைவரையும்   அழைத்து  இருந்தான் . கமலத்தையும்  அழைத்து  இருக்க. கமலமும்  வந்து விட்டு  சென்றார்.

 கௌசி  வரவில்லை  எல்லோரும்  வந்து சென்றாலும். கௌசி  வரவில்லை  என்று  வருத்தப்பட்டான். தன்னவள்  வரவேண்டும்  வீட்டிற்கு  என்று  நினைத்து இருக்க  ஏமாற்றம்.எங்கே  போனாள், யாரிடம் கேட்பது.

Advertisement

கௌசியோ  ஸ்போட்ஸ்  விளையாட  வெளியூர்  2  நாட்கள்  சென்றதினாள்  வீட்டில் இல்லை. இது   கோடிக்கு  தெரியாது.

 கிரகபிரவேஷத்திற்கு   வந்த  அனைவரும்  இரவு  உணவு  முடித்து  சென்று  கொண்டு  இருந்தனர். கோடிஸ்வரனின்  உறவுகள் எல்லாம்  குருவம்மாள்  வீட்டிற்கு  சென்றனர்.

 கோடி எவ்வளவு  செலவு பண்ணி வீட்டை கட்டி விசேஷம் வைத்திருக்கேன். கௌசி வரவில்லை.எங்கே அவள்  ,வீட்டில் இருப்பது போலவும்  தெரியவில்லை. 2 நாளா காலேஜுக்கு  போகலை. கமலத்திடம்  கேட்க  முடியவில்லை. வீட்டில்  சொந்த  பந்தம்  இருக்க  அமைதியாக  இருந்து கொண்டான்.

 கோடிஸ்வரன்  வீடு கட்டிய தெருவில்  உள்ள அனைவரையும்  காலையில் இருந்து  இரவு  வரை   உணவு  என் வீட்டில் தான் அனைவருக்கும் என்று  பத்திரிக்கை  வைக்கும்  போதே சொல்லி  இருக்க அனைவரும்  வந்து உணவு உண்டு சென்றனர்.

  கோடிஸ்வரன்    கமலத்திடமும் , இராஜா செல்வத்திடமும்  பலமுறை சாப்பிட  அழைக்க.  அவர்களுக்கு  மூன்று  வேளை  உணவு   உபச்சாரம்  அமோகமாக  இருந்தது.

 நேரம்  ஆக ,ஆக  கோடியின்  முகத்தில்  கடின  தன்மை  வந்து அமர்ந்து  கொண்டது.  மலர்ச்சி  இல்லை  யார்  என்ன  சொன்னாலும்   தலையை  ஆட்டி சரி என்றான்.

 கோடி  காலையில் இருந்து  சாப்பிடவில்லை . பால்  அருந்தியது மட்டுமே. தன்  வீட்டில்  முதல்  முறை  கௌசியுடன்  சேர்ந்து  சாப்பிட  வேண்டும்  என்று  நினைத்து  இருந்தான்.

விசேஷத்திற்கு  வந்தவர்கள் அனைவரும்  சென்று  இருக்க. மணி இரவு 10  ஆகியது. கோடியின்  வீட்டில்   சில  நண்பர்கள்  மட்டும்  இருக்க.

இராஜா செல்வன்  ,  கௌசியை  பஸ்  ஸ்டாப்பில் இருந்து  அழைத்து  கொண்டு  வந்து  இருந்தார்.

 கௌசி  ஸ்போட்ஸ்   விளையாடி  விட்டு  சாட்ஸ்சும்,  டி.சர்ட்டும்   அணிந்து  இருந்தாள். கோடியின்  வீட்டில்  லைட்டுகள்  அழகாய்  மின்னி  கொண்டு  இருந்தன. ஐ சூப்பரா  இருக்குல  என்றவள்.

 கோடி  வாழைமரம்  கட்டி , பந்தல்  கௌசியின்  வீட்டையும்  சேர்த்து  போட்டு   இருந்தான்.

 கோடி  வெளியில்  வண்டியின்  சத்தம்  கேட்டு  வந்து  பார்க்க.

 அவனின்  மின்னல்  சாட்ஸ்சும், டிசர்ட்டுன்  நின்று  இவனின்  வீட்டை   ரசித்து  கொண்டு  இருந்தாள் . அவளை  பார்த்தவன் அவளிடம்  வேகமாக  வர, ஏன்டி  எங்க  போன, என்று  மனம்  கேட்க.

 கௌசியோ   கோடியை  பார்த்து  வாழ்த்துக்கள்  சார்  வீடு  ரொம்ப  சூப்பரா  இருக்கு  என்று  கோடிக்கு  கை கொடுத்து  வாழ்த்தினாள்.

கமலம்  கௌசியிடம்  ஏன்டி  லேட்டு?  ” அம்மா  ப்பிரைஸ்  கொடுக்க  லேட்டு  ஆகிருச்சும்மா”. உள்ள  வாங்க  என்று  இராஜாசெல்வம்  செல்ல.

 சாப்பிட  வா  கௌசி  என்றான்  கோடி.

  கமலம்   ரொம்ப   நேரம்  ஆகிருச்சு  தம்பி  சாப்பாடு  இருக்கா? என்று  கேட்க.

 அதெல்லாம்  இன்னும்  இருக்கு. கொஞ்சம்  பேரு  இன்னும் சாப்பிடாமா  இருக்காங்க.

கோடியோ  ” வா  கௌசி  சாப்பிட்டு  போ” என்க.

கௌசி   கமலத்திடம்  நீங்க  சாப்பிட்டீங்களா  அம்மா  என்று  கேட்க.

நானும்  அப்பாவும்  தம்பி  வீட்டுலதான்  சாப்பிட்டோம்.

நீ   போ  தம்பி  கூப்பிடுதுல  என்று  சொல்ல.  அவளின்  உடையை  பார்த்தவர்  வீட்டுக்கு  வந்து  டிரஸ்  மாத்திட்டு  போ  என்று  கமலம்  சொல்ல.

அவனுக்கோ  ,அவள்  அவளின் வீட்டுக்கு  போனால்  திரும்பி  வருவாளோ  இல்லையோ  என்று  நினைத்தவன்.  பாரவாயில்லை  அக்கா  கீழ  தான  சாப்பாடு  இருக்கு   வந்து  சாப்பிட்டு  போகட்டும்  என்றவன். எல்லோரும்   கிளம்பிட்டாங்க. என்று  சொல்ல.

கௌசியை  நீ   போய்  சாப்பிட்டு  வா . நான்  இங்கே  இருக்கேன்  என்றார்  கமலம். பக்கத்து  விட்டு  பெண்மணி  கமலத்திடம்  வந்து  பேசிக்  கொண்டு  இருக்க.

 கமலம்  கௌசியிடம்  நல்லா   சாப்பிட்டு  வா . தம்பி  வீடு  தான்  என்று சொல்லி  அனுப்பினார்.

 கௌசி  சிறு  பிள்ளை  போல்  ரொம்ப  அழகா  இருக்கு  சார்  உங்க  வீடு  என்று  சொல்ல.

 கோடி  மனதில்  நம்ம   வீடு  என்று  சொல்லி  கொண்டான்.

 அவள்  சாப்பிடும்  இடம்  நோக்கி  சொல்ல.கோடி  முதலில்  வீட்டை  பாரு  கௌசி  என்று அழைத்து  சென்றான்.

 அவளோ  சூ  போட்டு  இருக்க. இருங்க  சார்  என்றவள்  நின்று  கொண்டே  சூவை  கழட்ட , அவள்  சூவை   கழட்டும்  போது  கீழே  விழ  தடுமாற  அவளை  மெதுவாக  பிடித்து  நிறுத்தியவன்.  மெதுவாக  கௌசி  என்றான்.

சூவை  கழட்டியவள்.  கோடியுடன்  சேர்ந்து  வீட்டின்  உள்நுளைந்தாள்.  கோடியின் நண்பர்கள்  சிலர் அங்கே இருக்க. இது யாருடா,  சாட்ஸ்  போட்ட  மகாலட்சுமியா?  என்று  ஒரு  நண்பன், டேய் கோடி  முகத்தை பாத்தியா ,இவ்வளவு  நேரம்  உம்மனா மூஞ்சி மாதிரி , முகத்தை  வச்சு இருந்தான். இப்ப  பாரு  என்ன  மகிழ்ச்சி.

இன்னொரு  நண்பன் டேய் அவன் ஏதாவது  பொண்ணுங்க கிட்ட  பேசி  நாம  பாத்து  இருக்கோமா?

இங்கே  பாருடா  அவங்க  வீட்டு வாசல்ல  நின்னு அந்த  பொண்ண கூப்பிட்டு  வந்து  இருக்கான். டேய் பொண்ணு  சூப்பரா இருக்கு  என்று  கோடியை  பார்த்து  மெதுவாக  சிரிக்க.

 கோடி   அதை  பார்த்து முறைத்தவன். கெஸ்டா  கவனிங்கடா  என்று  சொல்ல.

 கெஸ்டா  , இல்லா ,  ஓனர் அம்மாவா  என்று  கேலி  பேச.

கௌசி  வீட்டை பார்த்து  கொண்டு  இருக்க.  இவர்கள் பேசியது  அவளுக்கு  கேட்கவில்லை.

கௌசி  . கோடியிடம்  ஹேன்  வாஸ் பண்ணனும்  சார்  என்று  கேட்க.

 வாஷ்  பேஷனை  காண்பித்தான். அவள்  சென்று  கை  கழுவி  வந்தாள்.

 கௌசியை  ஹோமம்   பண்ணிய  இடத்துக்கு  அழைத்து  சென்றவன். அவளுக்கு  குங்குமமும்,  சந்தனமும   கொடுத்தான்.

கௌசி  கோடியிடம் இருந்து , வாங்கி  நெற்றியில்  வைத்து  கொண்டாள்.

 வீட்டை சுற்றி  பார்க்கிறியா  என்று கோடி  கேட்க.

சரி  சார். என்றவள் அவனுடன் வீட்டை  சுற்றி  பார்த்தவள்.ரொம்ப  அழகா  இருக்கு  சார் என்றாள்.

 வா கௌசி சாப்பிடலாம் என்று கீழே  அழைத்துச்  செல்ல.

 அவனின்  நண்பர்கள்  எல்லோரும்  அவனை  பார்த்து கேலி  சிரிப்பு  சிரிக்க.

 அதை  பார்த்த  கௌசி  கோடியிடம்  அருகில்  நெருக்கி  வந்து. ஏன் அந்த  அண்ணா  எல்லாம்  உங்களை  பார்த்து  சிரிக்குறாங்க.

அது  உன்ன  மாதிரி  பிரண்ட் . அவனுகளுக்கு  இல்லையாம். அதனால்.

ஓ  என்றவள்.

 கோடி  நண்பர்களை  பார்த்து கெஸ்ட்டுக்கு  சாப்பாடு  எடுத்து  வைங்கடா என்று  சொல்ல.

அவனின்  நண்பன் மஞ்சுநாதன் வந்து   வாங்க  சிஸ்டர்   என்று  சாப்பிடும் இடத்துக்கு அழைத்து  சென்றான்.

 கௌசியின்  முன் அனைத்து  பாத்திரத்தையும் எடுத்து வைக்க.

என்ன   உணவு  இருக்கு  என்று  பார்க்க. இட்லி , தோசை  , சப்பாத்தி,  என  அனைத்தும்  இருக்க. ஒரு பாத்திரம். மட்டும். மூடி இருக்க அதை  திறந்து பார்க்க. அதில்  மதியம்  சாப்பிட்ட  பிரியாணி  மீதம்  இருக்க.

  மஞ்சுநாதனிடம்  அண்ணா  பிரியாணி  வைங்க  என்று  கௌசி  சாப்பிட.

 மஞ்சுநாதன் . கோடியை பார்த்து  நீயும்  சாப்பிடு  காலையில   இருந்து  ஒன்னும்  சாப்பிடல.

 கோடீஸ்வரன்   நான்   அப்பறம். சாப்பிடுறேன்.

 கோடியை  பார்த்த  கௌசி நீங்க  இன்னும்  சாப்பிடலையா .என்ன  சார்  உங்க  வீட்டு  விசேஷம்  இன்னுமா  சாப்பிடல   உட்காருக்க  சார்  என்று  சொல்ல.

கௌசியின்   பக்கத்தில்  ஒரு  சேரைவிட்டு  அமர்ந்தான்.

கௌசி   கோடிக்கு  சாப்பாடு  போடுங்க   என்று  அவனின்   நண்பனிடம்   சொல்ல.  கோடி  இட்லி  வைடா  என்று  சொன்னான்.

டேய்  உனக்கு  பிரியாணி   தானே   ரொம்ப   பிடிக்குமுல .  பிரியாணி  சாப்பிடு  என்று  சொல்ல . வேண்டாம்  என்றவன்.

இல்லடா  ரொம்ப  நேரம் ஆச்சு . காலையில்  இருந்து  ஒன்னும்  சாப்பிட.

நீ  இட்லி  மட்டும் வை.

கௌசி   கோடியிடம். சார்  பிரியாணி  சூப்பரா  இருக்கு   கொஞ்சம்  சாப்பிட்டு  பாருங்க .

  நீ  சாப்பிடு  கௌசி .

 சார் மட்டன்  கீரேவி . நல்ல  இருக்கு  இட்லிக்கு  மட்டன்  கீரேவி  சூப்பரா  இருக்கும் . சாப்பிடுங்க  என்று  சொல்ல  சரி  என்றான்.

கோடியின்  நண்பன்  மஞ்சுநாத் அவனிடம்  கோடி  உனக்கு  ஏத்த  ஜோடி  தான்  உன்ன மாதிரியே அந்த  பொண்ணு  நல்ல  நான்வெஜ்  சாப்பிடுது  சாடி  கேத்த  மூடி.

 கோடி  நண்பர்கள்  உணவை  இருவர் பக்கத்தில் வைத்து விட்டு  சாப்பிடுங்க என்று  வீட்டின்  உள்ளே  சென்றனர்.

கோடி  எங்க போன கௌசி. நானா   மைசூர்ல  ஒரு  மேச் .

என்ன மேச் .

நான்  வாலிபால்   டீம்ல இருக்கேன் சார்   அதான் .

வின் பண்ணியா.

இல்ல சார் . தோத்துட்டோம்.

ஓகே  கௌசி. நெக்ஸ்டு  டைம். நல்ல பண்ணுங்க .

ஓகே  சார்  தாங்யூ.

கோடியை   கௌசி  பக்கத்தில்  அழைக்க .

 என்ன  வென்றான்.  பிரியாணியை  கை நிறைய  எடுத்தவன்   கோடியின்  வாய் அருகே  கொண்டு  செல்ல.

என்ன  கௌசி .

அட  ஒரு வாய்  சாப்பிடுங்க சார்  என்று  கோடிக்கு  ஊட்டி விட. நல்ல  இருக்குல.

 ஏன்  கௌசி  நான்  தான்  வேண்டாம்  சொன்னேன்ல என்று பிரியாணியை  சாப்பிட்டு  கொண்டே  கேட்க.

 அட  போங்க  சார்.  கொஞ்ச   நாள்  களிச்சு   நம்ம   வீட்டு  விசேஷத்துல  நம்ம   பிரியாணி சாப்பிடல  அப்படியின்னு  தோண கூடாதுல . யாரவது  வந்து  தம்பி  உங்க  வீடு  கிரபிரவேஷத்துல  சாப்பிட்ட  பிரியாணி சூப்பர் சொன்ன. நீங்க  அப்போ  நான் சாப்பிடல  அப்படின்னு  சொல்லனுமா . இப்போ  எல்லாம்    சாப்பிட்டாச்சு . எப்படி  நம்ம ஐடியா. என்று  சிரிக்க.

 கோடி    அவளுடன்  சேர்ந்து தான்  சாப்பிட  ஆசை  பட்டான். இப்போது அவனின்  மின்னல் அவனுக்கு  ஊட்டி  விட்டது. போதும்டா   மனசும்,   வயிறும்   நிறைஞ்சு  இருக்கு.  உனக்கும் கொஞ்சம்  நல்ல நேரம் இருக்கு போல.

 இருவரும்  பேசி   கொண்டேன்  சாப்பிட்டு  முடிக்க. சார்  தாங்யூ   என்று சொல்லி   கௌசி  கிளம்ப.

ஒரு நிமிசம்  கௌசி  என்றவன். மஞ்சுநாத்  என்று அவனின் நண்பனை அழைத்து . அந்த  சுவிட்  பாக்ஸ்  எடுத்துட்டு வா என்க.

கௌசி  வேண்டாம் சார்.

எல்லோருக்கும்  தான்  குடுத்தேன். நீயும்  வாங்கிக்கோ  என்று  அவளிடம்  கொடுக்க.

வாங்கி  கொண்டவள். பாய்  சார். குட் நைட்  என்று  சொல்லி  செல்ல.

குட்  நைட்  தான்  இன்னைக்கு  நீ  வந்ததால. குட் நைட் தான்  என்று மனதில் சொல்லி சிரிக்க.

 கோடியின்  நண்பர்  அனைவரும்  அவனை  பார்த்து  நிற்க.நீயாடா இது. அவ்வளவு  லவ்வாடா  அந்த  பொண்ணு  மேல . ரொம்ப  நல்ல  பொண்ணா  தெரியுதுடா. படிச்ச  பொண்ணு  மாதிரி  இருக்கு.

கோடி  காலேஜ் பைனல்  இயர்  படிக்குற.

 அப்போ  படிப்பு  முடிச்சவுடன் கல்யாணமா  என்று  கேட்க.நீங்க  வேற  சும்மா  இருங்கடா.நானே  இன்னும்  ப்பிரபோஸ்  பண்ணல.

 அட  பாவி  ப்பிரபோஸ்  பண்ணாமலா   இன்னும்  இருக்க. வேகமா சொல்லுடா. வேற  யாராவது  முந்திக்க  போறாங்க.

கோடி  நண்பர்களிடம்  உங்களுக்கு  காம்புலக்‌ஸ் மாடியில்  பார்ட்டிக்கு எல்லாம்  ஏற்பாடு  பண்ணி  இருக்கேன்  கிளம்புங்க  என்று  சொல்ல  அனைவரும்  காம்புலக்ஸ்  சென்றனர்.

 அவனின்  வீட்டில்  உள்ள  ஒரு  அறையில்  சென்று  நிம்மதியா  தூங்கிவிட்டான்.

 காலையில்  வேகமாக  முழித்தவன்  குளித்து  விட்டு கௌசியை  பார்த்து  அவனின்  விருப்பத்தை  சொல்ல  பஸ்  ஸ்டாப்  செல்ல.

 இவன்  போய்  5  நிமிடம்  கழித்து  வந்தாள்  கௌசி. கௌசி  இன்று  புடவையில் வர . கோடி  நேத்து  வீட்டுக்கு  வர  வேண்டிய  காஸ்ட்யூம்முல  இன்னைக்கு  வர.

காலேஜில் இன்று   கல்சுரல்  புரோகிராம்  நடந்து  கொண்டு  இருக்க. கௌசி புடவை அணித்து வர.

கோடிக்கு  இப்படியே  அவளை  கூப்பிட்டு  போய்  கழுத்தில்  தாலி  கட்டினால்  என்ன  என்று  அவளை  ரசித்து பார்த்து கொண்டே  இருக்க.

 கௌசி  பஸ் வருத என்று  ரோட்டையே  பார்த்து நிற்க.  அப்பொழுது  கௌசியின்  பக்கத்தில்  ஒரு  பைக்  வந்து  நிற்க. அதில்  இருந்து  ஒருவன்  பூங்கொத்தோடு  இறக்கி  கௌசிக்கு ஐ , லவ், யூ  கௌசி என்று  பூங்கொத்தை  நீட்ட.

அவளோ  எத்தனை வாட்டி  சொல்லுறது  கமல். எனக்கு  உங்க  மேல  லவ்  வரல. சாரி நீங்க  கிளம்பலாம்.

 அப்போ  யார்மேல  லவ் வரும்.

நான்  தான் ஏற்கனவே  உங்க  கிட்ட  சொல்லி இருக்கேன்ல. என் அத்தை  பையன நான்  லவ் பண்ணுறேன்னு . உங்களுக்கு  ஒரு வாட்டி  சொன்ன  புரியாதா  என்று  கௌசி  திட்ட.

கமல்  கௌசியிடம்  நீ  பொய்  சொல்லுற. நீ யாரையும்  விரும்பல  எனக்கு  தெரியும்.

ஹலோ  கமல்  உங்கல எனக்கு  புடிக்கல  அவ்வளவு தான். உங்க  வேலையை  பாருங்க  என்று  சொல்லியவள். என்ன பஸ்சை  காணும் . என்று  ரோட்டில்  காலேஜ்  பஸ்  வருகிறதா  என்று பார்க்க.

 கோடியோ  எங்கே  இருந்துதான்  வர்ரீங்கடா . நான்  இன்னைக்கு தான் அவ கிட்ட  என்  லவ் பத்தி  சொல்லலாம் நெனச்சு வந்த.நல்ல வர்ரீங்கடா  என்  வாழ்க்கையில்  விளையாட.  என்று  புலம்பிய படியே  பைக்கை  ஸ்டாட் பண்ணி  வீட்டிற்கு  செல்ல.

கோடியை   பார்த்த  கௌசி  மாமா  கோடி மாமா என்று  அழைக்க.

 கோடியோ  சடன்  பிரேக்  போட்டு  என்ன  மாமாவா?  என்னையா  மாமான்னு  கூப்பிட்ட.

என்ன  கௌசி என்று  கோடி பஸ் ஸ்டாப்  பக்கத்தில்  வர.

 கௌசி .  கமல்   இடம்  இவர் என் கோடி  மாமா  இவரைத்  தான்  நான்  கல்யாணம்  பண்ண போறேன். கோடி  மாமா  வண்டி  எடுங்க . காலேஜ்ல  என்னை  டிராப்   பண்ணுங்க  என்று  கோடியுடன் கிளம்பி விட்டாள்.

கமலோ  அவன் கொண்டு  வந்த  பூங்கொத்தை  தூக்கி எறிந்துவிட்டு  சென்றான்.

கௌசி  கோடியிடம்  சாரி  சார்.

யார் அது  கௌசி.

அவனா  என்  பிரண்டோட  அண்ணன்  பேரு  கமல். மனசுல பெரிய  கமலஹாசன்னு  நெனப்பு.இரண்டு  வருஷமா  என்னை லவ் பண்ணு , பண்ணு  என்று  டார்சர் பண்ணுறான். ஆனா  நல்ல  பையன். அது  தான் அவன  ரொம்ப  திட்டல. சாரி  கோடி  சார்.உங்கள  மாமா  கூப்பிட்டேன்  மன்னிச்சுருங்க..

பரவாயில்லை  கௌசி  என்  மேல  நம்பிக்கை  வச்சு தானே  எல்பு  கேட்ட.

சார்  அடுத்த  பஸ்  ஸ்டாபில்  என்னை  இறக்கி  விடுங்க. எங்க  காலேஜ்  பஸ்  வரும்.  நான்  போய்கிறேன்

கோடியோ  எனக்கு  அந்த பக்கமா  ஒரு  வேலை இருக்கு . உன்ன   காலேஜில்  இறக்கி விடுறேன் என்று  அவளை  அவளின்  காலேஜில்  இறக்கி விட.

கௌசி  கோடியை  பார்த்து  நன்றி  கூற.

அழகாய்  ஒரு  புன்னகை  கொடுத்தவன்  பாய்  என்று  சொல்ல.

சார்  என்றவள்  உங்க கிட்ட  ஒன்னு  கேக்கனும்.

சொல்லு என்றான்  கோடி.

 அது  நீங்க  என்கிட்ட  நல்லா  சிரிச்ச  மாதிரி  பேசுறீங்க. நான்  உங்க  கடையில   வச்சு  உங்களை  பாத்து   இருக்கேன். நீங்க என்று …

சும்மா  சொல்லு  கௌசி என்றான்.

 நீங்க  கடையில  எல்லார்கிட்டையும்  கோபமா  பேசுறீங்க,  உங்க  முகம்  உர்ருன்னு  இருக்கும். சிரிக்கவே மாட்டீங்க. ஆன  என்கிட்ட  நல்லா  சிரிச்சு பேசுறீங்க.

அது  வேலை வாங்குற இடம்  கௌசி. கொஞ்சம்  அதிகாரம்  பண்ணாதான்  வேலை  செய்வானுங்க. நான்  உன்கிட்ட  பேசுன மாதிரி  பேசுன  வேலை  நடங்காது.

ஓ  என்றவள் கிளம்ப.

ஒரு  நிமிசம்  என்ற  கோடி . நான்  எனக்கு  பிடிச்ச  வங்க  கிட்ட  தான்  சிரிச்சு  பேசுவேன். நான்  முதலும் கடைசியும்  சிரிச்சு  பேசுற  பொண்ணுங்க  இரண்டு  பேரு  ஒன்னு  நீ, இன்னொரு  பொண்ணு   நமக்கு  பிறக்கப்  போற  பொண்ணு. வரட்டா  என்று சொல்லி  செல்ல.

 இவளோ  சரி  என்று  சொல்லி  நடந்து செல்ல. என்ன  சொன்னாரு  இரண்டு  பேரு  நீ, அப்பறம்  நமக்கு  பிறக்க போற  பொண்ணா. அப்படின்னா ஆ என்று  கோடியை  திரும்பி  பாக்க.

அவனோ  அவளை  இறக்கி விட்ட இடத்திலே நிற்க.

அவளோ  ஆத்தி என்று காலேஜுக்கு சென்றாள்.

 அவளைப்  பார்த்து  சிரித்தவன். எப்படியோ  சொல்லியாச்சு  என்று  அவனின்  காம்புலக்ஸ்சுக்கு  கிளம்பினான்…..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!